Category: செய்திகள்

  • வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்…

    சித்ரா பவுர்ணமி சிறப்பு தினத்தில்ஐஸ்வர்யம் அருளும் 1,116 கலசங்களுடன்பிரமாண்ட ஸ்ரீசத்யநாராயண பூஜை, ஹோமத்துடன் ஸ்ரீமகேஸ்வர பூஜை

    நாள்: 09.05.2017 செவ்வாய், 10.05.2017 புதன்

    வேலூர் மாவட்டம் வாலாஜா நகரத்தில் சோளிங்கர் செல்லும் சாலையில் அனந்தலை மதுராவில் அமைந்திருக்கிறது ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்.

    யக்ஞ பூமியாய் திகழும் இந்த புனித பீடத்தில் இதுவரை பல்லாயிரக்கணக்கான ஹோமங்கள் நடந்துள்ளன. இந்த ஹோமங்களில் கலந்து கொண்டு ஏராளமானோர் நினைத்த காரியம் கைகூடப் பெற்றனர். இதனால், பலனும் நிம்மதியும் அடைந்துள்ளனர்.

    வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்கு ஒரு முறை நேரில் வந்து தரிசித்துச் செல்கிற பக்தர்கள், மீண்டும் மீண்டும் இங்கு நடக்கிற வைபவங்களில் கலந்து கொள்ள வருவதே இதற்கு சாட்சி!

    வருகிற மே மாதம் 9 (செவ்வாய்) மற்றும் 10 (புதன்) ஆகிய இரு தினங்களில் பிரத்தியேகமான 1,116 கலசங்கள் வைத்து பிரமாண்டமான ஸ்ரீசத்யநாராயண ஹோமம் பூஜை மற்றும் ஸ்வாமிகளின் குருவான பெற்றோர்களுக்கு மகேஸ்வர பூஜையும் நடக்க இருக்கிறது.

    சித்ரா பவுர்ணமி காலத்தில் நடக்க உள்ள இந்த ஸ்ரீசத்யநாராயண வழிபாட்டிலும் மகேஸ்வர பூஜையிலும் கலந்து கொண்டால், குரு அருளுடன் அனைத்து ஐஸ்வர்யங்கள் உட்பட எல்லா நலன்களும் பெறலாம் என்று ஆன்மிக நூல்கள் சொல்கின்றன. பூஜையும் ஹோமங்களும் பூர்த்தி ஆன பின் இந்தக் கலசங்கள் அனைத்தும் பக்தர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்ற கொள்கையின் அடிப்படையில் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் – கயிலைமாமணி டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் இதை ஏற்பாடு செய்திருக்கிறார்.

    இரு நாள் வைபவங்களில் முதல் நாளான மே 9-ஆம் தேதி காலை ஸ்ரீகணபதி ஹோமம், ஸ்ரீநவக்கிரக ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும், அன்றைய தினம் மாலை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ள 1,116 கலசங்களுக்கு சிறப்பு பூஜையும் நடக்க உள்ளது.

    மறுநாள் 10-ஆம் தேதி காலையில் ஸ்ரீசத்யநாராயண பூஜையும் ஹோமமும்,மதியம் ஸ்வாமிகளின் குருவும் பெற்றோர்களும் ஆன தந்தை ஸ்ரீமான் K.B. ஸ்ரீநிவாசன், தாய் ஸ்ரீமதி கோமளவல்லி அவர்களின் திருவுருவ சிலைகளுக்குமகாஅபிஷேகமும் மகேஸ்வர பூஜையும் மாலையில் ஸ்ரீசத்யநாராயண ஹோமத்தின் மகாபூர்ணாஹுதியும் நடைபெறும். அதன் பின், யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசத்தின் புனிதநீர், ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரத்தியேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீசத்யநாராயணர் விக்கிரகத்துக்கு திரளான பக்தர்களின் முன்னிலையில் 16 திரவியங்களை கொண்டு திருமஞ்சனமும் செய்யப்படும்.அன்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதீஸ்வரர் மகான்கள், 468 சித்தர்கள், ஸ்ரீ காயத்ரி தேவி, மற்றும் ஸ்ரீ மகாமேருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.இதனை தொடர்ந்து கோபூஜையுடன் 5 விதமான திரவியங்கள்கொண்டு ஸ்ரீ அன்னபூரணி தேவிக்கு மகா அபிஷேகம் நடைபெற்று அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.
    .

    இரண்டு நாட்கள் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட இந்த 1,116 கலசங்களும் வருகின்ற பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்தக் கலசத்தில் அரிசி, தேங்காய், வஸ்திரம், ஜாக்கெட் பிட், வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாய் நாணயம் போன்றவை இருக்கும்.

    கலசத்தில் வைக்கப்பட்டிருக்கும் அரிசியில் சிறிது எடுத்து, உங்கள் இல்லத்தில் சமையலுக்கு சேகரித்து வைத்திருக்கும் அரிசியோடு சேர்க்கவும். இதில் மேலும் சிறிதை எடுத்துக் கொண்டு அதோடு, உங்களது சக்திக்கு ஏற்றவாறு ஒரு கிலோவோ அல்லது அதற்கு மேலோ சேர்த்து தகுதி உள்ளவர்களுக்கு தானம் செய்து விடவும்.அல்லது தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் அன்னதானத்திற்கு அளித்து அன்னபூரணியின்அருளைபெறலாம். இத்தகைய கைங்கர்யத்தால் உங்கள் இல்லத்தில் உணவுப் பஞ்சம் வரவே வராது.

    இந்தக் கலசத்தை பூஜையறையில் நிரந்தரமாக வைத்து வணங்கி வந்தால் குடும்பத்தில் அந்நியோன்னியம், பணியில் எதிர்பார்க்கின்ற நல்மாற்றம், திருமணம் போன்ற சுப வைபவங்கள், குடும்பத்தில் ஒற்றுமை, தொழிலில் அபிவிருத்தி போன்றவை உட்பட அனைத்தும் கிடைக்கும்.

    வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர், கயிலைமணி டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் இந்த வைபவத்துக்குத் தலைமையேற்று நடத்தி வைக்க… எண்ணற்ற மடாதிபதிகள், ஆதீனங்கள்,சாதுக்கள் மற்றும்சிவனடியார்கள்முக்கயஸ்தர்கள்கலந்துகொண்டுசிறப்பிக்க உள்ளார்கள். அன்று நடைபெறும் ஸ்ரீ மகா பெரியவா புகழ் பி.சுவாமிநாதன் அவர்களின் ஆன்மீக உரையை கேட்டு பயன்பெற பக்தகோடிகள் அனைவரையும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் குருவருளும் ஸ்ரீதன்வந்திரி பகவானின் திருவருளும் பெற அன்புடன் அழைத்து மகிழும்,

    தன்வந்திரி குடும்பத்தினர்.

    Share
  • உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவும் ஆத்திரேலியா எழுத்தாளர் ம. செயராம சர்மாவுக்குப் பாராட்டுவிழாவும்!

    aje

          புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் புதுச்சேரி நீட இராசப்பையர் தெருவில் அமைந்துள்ள, செகா கலைக்கூடத்தில்   14.04.2017, வெள்ளிக் கிழமை, மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை தொல்காப்பியத் தொடர்பொழிவு நடைபெற்றது.

          வில்லிசைவேந்தர் இ. பட்டாபிராமன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். முனைவர் ப. பத்மநாபன்   வரவேற்புரையாற்றினார்.  முனைவர் மு.இளங்கோவன் அறிமுகவுரைற்றினார். முனைவர் சிவ. மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் தெ. முருகசாமி தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.  தொல்காப்பியத்துள் குறிப்பிடப்படும் இலக்கணச் செய்திகள் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்ளிட்ட நூல்களில் பொதிந்து கிடக்கும் தன்மையை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

          ஆத்திரேலியாவிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் ம. செயராம சர்மாவின் எழுத்துப்பணியைப் பாராட்டும் வகையில், மரபுப் பாமணி என்ற விருதளித்து இந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டது. மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்துவரும் ஏம்பலம் செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு திரு. சர்மா அவர்களுக்கு விருதளித்துப் பாராட்டினார். ஆத்திரேலியாவில் தமிழும் தமிழர்களும் தொடர்பான அரியதோர் கருத்துரையச் செயராம சர்மா வழங்கினார். திரு. தூ. சடகோபன், தனித்தமிழ்ப்பாவலர் தமிழியக்கன், திருவாசகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமிழறிஞர்களைச் சிறப்பித்தனர்.

          முனைவர் இரா. கோவலன் நன்றியுரை வழங்கினார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    Share
  • புதுவைப் பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!

    மு. இளங்கோவன்

    amu

    புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், புகழ்பெற்ற ஆய்வாளருமான முனைவர் அ. அறிவுநம்பி இன்று (09.04.2017) மாரடைப்பால் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். காரைக்குடியில் பிறந்த பேராசிரியர் அ. அறிவுநம்பி, காரைக்குடி அழகப்பர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராக இணைந்து, பேராசிரியர், துறைத்தலைவர், புலமுதன்மையர் பொறுப்புகளை வகித்தவர். பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கல்விப்பயணமாகப் பலநாடுகளுக்குச் சென்று வந்தவர்.

    இன்னும் இரண்டு மாதங்களில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அ.அறிவுநம்பி இன்று திடுமென இயற்கை எய்தியமை தமிழகத்துக் கல்வியாளர்களைப் பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

    நாளை 10.04.2017 (திங்கள்) மாலை 4.30 மணிக்குப் புதுச்சேரி, இலாசுப்பேட்டையில் உள்ள கலைவாணி நகர் இல்லத்திலிருந்து உடல் நல்லடக்கம் செய்ய எடுத்துச்செல்லப்பட உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக வந்து பேராசிரியர் அ. அறிவுநம்பிக்கு அஞ்சலி செலுத்தியவாறு உள்ளனர்.

    Share
  • திருப்பூரில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையீடு!

    ama

    தமிழிசைக்குத் தம் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலண்டன், குவைத்து, இலங்கை உள்ளிட்ட அயல்நாடுகளில் திரையிடப்பட்டதுடன் புதுச்சேரி, சென்னை, பாளையங்கோட்டை, திருவண்ணாமலை, கோபி, குடந்தை, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருவையாறு, கடலூர் உள்ளிட்ட தமிழகத்துப் பேரூர்களில் திரையிடப்பட்டு, தமிழிசை ஆர்வலர்களின் பாராட்டினைப் பெற்றுள்ளது. அந்த வரிசையில் அண்மையில் திருப்பூரில் திரு. கே.பி.கே. செல்வராஜ் அவர்களின் பெருமுயற்சியால் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. திருப்பூரிலும் அருகில் உள்ள ஊர்களிலும் வாழும் தமிழார்வலர்கள் ஐம்பதின்மர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரையிடலுக்குப் பெருமை சேர்த்தனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க வளாகத்தில் மாலை 7 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் உரையாற்றினார். ஆவணப்படத்தை உருவாக்கிய முனைவர் மு.இளங்கோவன், ஆவணப்படம் உருவான வரலாற்றையும் தமிழ் இலக்கிய உலகிற்கு இப்படத்தின் தேவையையும் நினைவுகூர்ந்தார். திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், தொழிலதிபரும், தமிழ் வள்ளலுமான திரு. கே.பி.கே. செல்வராஜ் அவர்கள் ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. இராஜா. எம். சண்முகம் அவர்கள் முதல் படியைப் பெற்றுக்கொண்டார். ஏற்றுமதியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. விஜயகுமார், முத்தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. பாலசுப்பிரமணியன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு திரையிடல் தொடங்கியது.

    நிகழ்ச்சியின் நிறைவில் திரு. இராஜா. எம். சண்முகம் அவர்கள் ஆவணப்படத்தைப் பார்த்துத் தாம் அடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆவணப்படத்தின் சிறப்பினை எடுத்துக்கூறி, ஆவணப்படம் தமிழர்களின் பார்வைக்குக் கொண்டுசெல்ல வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.  திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி. கே. செல்வராஜ் அவர்கள் அமெரிக்காவின் பெட்னா விழாவில் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியதை நினைவூட்டித் தொடர்ந்து இந்த ஆவணப்படத்தைத் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டுவதற்குரிய வழிமுறைகளை விளக்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்த திரு. ஈஸ்வரன் அவர்கள் ஆவணப்படத்தில் வெளிப்பட்டு நிற்கும் கலைநுட்பத்தையும், தமிழிசைச் சிறப்பையும் எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியின் நிறைவாகப் பெரும்புலவரும், குடந்தை ப. சுந்தரேசனாருடன் பழகியவரும், சைவ இலக்கியச் செம்மலுமாகிய சொக்கலிங்கனார் அவர்கள் ஆவணப்படத்தில் மூழ்கித் திளைத்த தம் தமிழ் இசை ஈடுபாட்டை விளக்கி, குடந்தை ப.சுந்தரேசனாருடன் தாம் பழகிய நாளினை நினைவூட்டி அரியதோர் உரை நிகழ்த்தினார். தமிழறிஞர்களின் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் ஊக்க மொழிகளும் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திருப்பூரில் மீண்டும் திரையிடலுக்கு வழி செய்துள்ளது.

    Share
  • 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

    பவள சங்கரி

    அன்பு நண்பர்களுக்கு,

    வணக்கம். வருகிற சூன் திங்கள் 9,10,11 (2017) ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். இம்மாநாடு வெற்றி பெறத் தமிழ் எழுத்தாளர்கள் தங்களது பங்களிப்பையும் அளித்திட இருகரம் குவித்து வேண்டுகிறோம். மாநாட்டில் கருத்தரங்கம், சொல்லரங்கம், பட்டிமன்றம், நாட்டிய நாடக நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடும் கலந்துரையாடல் போன்ற மிகச் சிறப்பான நிகழ்வுகளும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மாநாட்டில் கட்டுரை படைக்க விரும்புவோருக்கான விதிமுறைகள் அழைப்பிதழில் தெளிவாக உள்ளன.

    மாநாடு நிகழுமிடம்:
    முத்தமிழ்ப் பேரவை டி.என். இராஜரத்தினம் கலையரங்கம்,
    ராஜா அண்ணாமலைபுரம், (அடையாறு பாலம் அருகில்)
    சென்னை – 600028

    atm

    al

    azhai-u.tha_.e.maa01_Page_03

    azhai-u.tha_.e.maa01_Page_04

    azhai-u.tha_.e.maa01_Page_05

    all

    azhai-u.tha_.e.maa01_Page_06-new

    azhai-u.tha_.e.maa01_Page_07-new

    azhai-u.tha_.e.maa01_Page_08-new

    azhai-u.tha_.e.maa01_Page_09-new

    azhai-u.tha_.e.maa01_Page_10

    azhai-u.tha_.e.maa01_Page_11

    atm 5

    பொருண்மைகள்

    மாநாட்டு ஆய்வுக் கட்டுரைத் தலைப்புகள்

    1. புலம் பெயர்ச்சியின் காரணங்களும் புதிய இட வாழ்வியல் நிகழ்வுகளும்
    2. மின் மற்றும் அச்சு ஊடகங்கள் நல்ல தமிழைப் பயன்படுத்த ஆற்றும் பணிகள்.
    3. பயிலாதாரையும் எளிதாய்ச் சென்றடையும் பழமொழிகளின் ஆழ் அகலங்கள்
    4. தமிழ் சார்ந்த அயலக வணிகமும் கடல்சார் வணிகமும்
    5. இன்றைய நவநாகரிக உலகில் தமிழுக்குரிய இடம்
    6. மின்தமிழ்ப் பயன்பாடுகளும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும்
    7. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ் மொழியின் பங்களிப்பு
    8. புலம்பெயர் தமிழர்களின் கவின்கலை பண்பாட்டு வளர்ச்சி
    9. புலம்பெயர் இலக்கியமும் மொழிபெயர்ப்புகளும்
    10. புலம்பெயர் இலக்கியங்கள் அந்தந்த நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கம்

    மாநாட்டு மலருக்கான கட்டுரைத் தலைப்புகள்

    1. பொருளியல் கோட்பாடுகளும் திருக்குறளும்
    2. திருக்குறள் கோட்பாடுகளும் நாட்டு நிர்மாணமும்
    3. கணினிப் பயன்பாட்டில் தமிழும் இணையத்தளமும்
    4. ஊடகவியலில் தமிழுக்கான உணர்வும் ஊக்கமும்
    5. அந்தந்த நாட்டுத் தமிழ் கவிதையின் புதிய போக்குகள்
    6. அந்தந்த நாட்டுச் சிறுகதையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள்
    7. அந்தந்த நாட்டுத் தமிழ் நாவல்களில் புதிய அணுகுமுறைகள்
    8. மொழிபெயர்ப்பு நோக்கில் தமிழ் படைப்புகள்
    9. பிற மொழிகளில் சங்க இலக்கியங்கள்
    10. தொல்காப்பியரும் மேல்நாட்டு இலக்கியக் கோட்பாடுகளும்
    11. அந்தந்த நாட்டுச் சிறுவர் இலக்கியங்களில் மொழியின் பயன்பாடு
    12. பிறமொழி இலக்கிய இலக்கணங்களில் தமிழின் செல்வாக்கு
    13. அந்தந்த நாட்டுத் தமிழ் இதழ்களில் தமிழ் நடையின் புதிய போக்கு
    14. அகராதிக் கலையில் ஐரோப்பியர்களின் பங்கு
    15. அந்தந்த நாட்டுத் தமிழ் படைப்புகளில் பெண்ணியம் ஒரு பார்வை
    16. அறநூல்கள் வழி அறியும் அறக்கோட்பாடுகள்
    17. அந்தந்த நாட்டுப் படைப்பிலக்கியங்களில் விளிம்புநிலை மாந்தர்கள்
    18. துறைதோறும் கலைச் சொல்லாக்கத்தின் வளர்ச்சி
    19. பூஜாங் பள்ளத்தாக்கு முதல் கம்போடியா வரை தமிழர் நாகரிகம்
    20. அயலக வாணிபத்தால் வளர்ந்த தமிழும் பண்பாடும்
    21. தமிழ் இலக்கியங்களில் புலம்பெயர்தல் நேற்றும் இன்றும்
    22. தொலைந்துபோன கதைசொல்லிகளும் தமிழ் மரபும்
    23. பேச்சுத் தமிழில் வலம் வரும் அழகிய ஊர்வலம்
    24. வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ்

    நன்றி.
    அன்புடன்
    பவள சங்கரி
    துணைச் செயலாளர்
    2ஆம்  உலகத் தமிழ் எழுத்தாளர்  மாநாடு

    Share
  • கம்பன் திருவிழா 2017

    Presentation1

    காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்

    நாள்: 7- 4 – 2017, மகநாள், வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி

    இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி

    தலைவர்:  பேராசிரியர் தி. இராசகோபாலன்

    இறைவணக்கம்:திருமதி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி

    மலர் வணக்கம் : திருமதி ராதா ஜானகிராமன்

    கம்பன் அடிப்பொடி அஞ்சலி

    வரவேற்புரை: திரு கம்பன் அடிசூடி

    தொடக்கவுரை: பேராசிரியர் ந. விஜயசுந்தரி

    கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் எழுதி வானதி பதிப்பகம் வெளியிடும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் கைகேயி படைத்த கம்பன் வெளியீடு : திரு. நாஞ்சில் நாடன்

    அமெரிக்கன் கல்லூரி மேனாள் துணை முதல்வரும், கணினித் துறை இயக்குநருமான முனைவர் ப. பாண்டியராஜா அவர்களுக்கு அவர்தம் கம்பராமாயணம் தொடரடைவு (www. tamilconcordance.in) பணிகளைப் பாராட்டி கம்பன் கழகம் பணிவுடன் அளிக்கும் காரைக்குடி தெ. இலக்குவன் நினைவைப் போற்றி அவர்தம் குடும்பத்தார் நிறுவியுள்ள கம்பன் அடிப்பொடி விருது வழங்கிப் பாராட்டு : சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன்

    கம்பனின் இராம வண்ணம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் திரு. பி. ராஜாராம்

    மாணக்கர்களுக்குப் பரிசளிப்பு: திருமதி வள்ளி முத்தையா

    தலைமை உரை : பேராசிரியர் தி. இராசகோபாலன்

     

    காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்

    நாள்: 8 – 4 – 2017, பூர நாள், சனிக்கிழமை, மாலை 5.30 மணி

    இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி

    தனிப்பேருரை

    கம்பனின் கருத்து வண்ணம்: சிந்தனைச் சிற்பி திரு. பழ. கருப்பையா

    கவியரங்கம்

    தலைவர்:கவிச்சுடர் கவிதைப் பித்தன்

    தலைப்பு: கம்பனின் கவி வண்ணத்தில்

    பொருள்                     கவிவாணர்

    அன்பு                 திரு. அ.கி. வரதராஜன்

    அறம்                திரு கிருங்கை சேதுபதி

    தோழமை            திரு. தஞ்சை இனியன்

    தொண்டு             திரு. வீ.கே. கஸ்தூரிநாதன்

    காதல்                திரு. வீ.ம. இளங்கோவன்

    வீரம்                 திரு வல்லம் தாஜ்பால்

     

    காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்

    நாள்: 9 – 4 – 2017, உத்தர நாள், ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணி

    இடம்: வள்ளல் அழகப்பர் அவர்தம் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் பாரம்பரியமான நூற்றாண்டு கடந்த செட்டிநாட்டு இல்லம் கோட்டையூர்

    செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பிலான உலகத் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் – தொடக்கவிழா

    தலைமை: திரு. இராஜாமணி முத்துக்கணேசன்

    வரவேற்புரை: திரு கம்பன் அடிசூடி

    தொடக்கவுரை: செட்டிநாட்டு இளவல் செட்டிநாடு குழும நிர்வாக இயக்குநர் திரு எம்.ஏ. எம் ஆர். முத்தையா

    சிங்கப்பூர் கவிஞர் திரு. அ.கி. வரதராஜன் எழுதிய வானதி பதிப்பகம் வெளியீடான அரிய மாமனிதர் அழகப்பர்கவிதைநூல் வெளியீடு: கவிதாயினி வள்ளி முத்தையா

    முதற்பிரதியினைப்  பெற்றுத் தலைமைஉரை நமது செட்டிநாடு இதழ்ப் புரவலர் செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநர் திரு. இராஜாமணி முத்துகணேசன்

    ஏற்புரை: கவிஞர் திரு. அ.கி . வரதராஜன்

    மையக் கருத்துரையும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ ஆய்வுக்கோவை வெளியீடும்திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன்

    முதற்பிரதியினைப் பெற்று வாழ்த்துரை: திரு.அரு.வே. மாணிக்கவேலு

    முற்பல் 11 மணி முதல் உணவு இடைவேளை வரை பேராளர்கள் ஐந்து அமர்வுகளாக வெவ்வேறு இடங்களில் தத்தம் கட்டுரைகளை அறிமுகப்படுத்திச் சுருக்கத்தினை மட்டும் வாசித்தளிப்பர்.

     

    காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்

    நாள்: 9 – 4 – 2017, உத்தர நாள், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3.00  மணி

    இடம்: வள்ளல் அழகப்பர் அவர்தம் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் பாரம்பரியமான நூற்றாண்டு கடந்த செட்டிநாட்டு இல்லம் கோட்டையூர்

    செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பிலான உலகத் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் – நிறைவு விழா

    இறைவணக்கம்

    வரவேற்புரை பேராசிரியர்: மா. சிதம்பரம்

    தலைமையுரையும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பரிசு வழங்குதலும்: தகைமிகு தஞ்சாவூர் மூத்த இளவரசர் திரு. பாபாஜி ராஜாசாகிப் போன்ஸ்லே

    நிறைவுரை: கவிஞர் திரு. சொ. சொ. மீ. சுந்தரம்

    நன்றியுரை: பேராசிரியர் செ. செந்தமிழ்ப்பாவை

     

    (கருத்தரங்கிற்கு வரும் கட்டுரையாளர்களுக்கும், நோக்கர்களுக்கும் மதியஉணவு ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது)

     

    காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்

    நாள்: 9 – 4 – 2017, உத்திர நாள், ஞாயிற்றுக் கிழமை, மாலை 5.30 மணி

    இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி

    பட்டிமண்டபம்

    நடுவர்: சொல் வேந்தர் திரு. சுகி.சிவம்

    தலைப்பு: இராமனுக்கு மிகுதியும் இக்கட்டான சூழலை உண்டாக்கியவர் யார்?

    கைகேயியே!

    பேராசிரியர் து. ருக்மணி,

    செல்வி நா. ஹேமலதா,

    பேரா சுமதிஸ்ரீ

    சுக்ரீவனே!

    பேராசிரியர் புனிதா ஏகாம்பரம்,

    திரு.த.க. தமிழ்பாரதன்,

    பேரா. தமிழ்திருமால்

    வீடணனே!

    தமிழாகரர் பழ. முத்தப்பன்,

    திரு. சு. சதீஸ்குமார்,

    பேரா. மா.சிதம்பரம்

     

    காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்

    நாள்: 10 – 4 – 2017, அத்தத் திரு நாள், திங்கட் கிழமை, மாலை 5.00 மணி

    இடம்: நாட்டரசன் கோட்டை, கம்பன் அருட்கோவில்

    தலைவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

    கம்பன் அருட்கோயில் வழிபாடு

    மலர் வணக்கம் திரு. ஜி.எஸ். வி. பைரவ குருக்கள்

    கம்பன் அருட்கவி ஐந்து

    அமிர்தவர்ஷினி இசைப்பள்ளி ஆசிரிய மாணாக்கர்

    இயக்கம்: திரு. த. வெற்றிச்செல்வன்

    இறைவணக்கம்

    வரவேற்புரை: திரு. கண. சுந்தர்

    தலைவர் உரை: ‘‘கம்பனின் ஆற்றல் வண்ணம்’’ திரு. வி. யோகேஷ்குமார்

    ‘‘கம்பனின் பாத்திர வண்ணம்’’ திரு. இரா. மாது

    நன்றியுரை: பேரா. மு.பழனியப்பன்

    வாழிய செந்தமிழ்.

    Share
  • ஈரோடு மாநகராட்சியில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் வார்டுதோறும் வாசகர்வட்டம்

                              த. ஸ்டாலின் குணசேகரன்

                                      தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை.

    _______________________________________________________

    ஈரோடு

    27.03.2017

    ஈரோடு மாநகராட்சியில்

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில்

    வார்டுதோறும் வாசகர்வட்டம்

    மக்கள் சிந்தனைப் பேரவை தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளாகின்றன. பேரவை தொடங்கப்பட்டதிலிருந்தே கல்வி, வாசிப்பு, சமூகச்சிந்தனை, சமூகசேவை ஆகியவற்றில் முழுகவனம் செலுத்திபல செயல்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    ஈரோடு புத்தகத் திருவிழாவை கடந்த 12 ஆண்டுகளாக மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தி வருகிறது. வாசிப்பை வலியுறுத்தி 12,500 கல்லூரி மாணவர்களின் மராத்தான் ஓட்டம், ‘ ஈரோடு வாசிக்கிறது ’ என்ற தலைப்பில் 15,000 மாணவர்கள் ஒரே இடத்தில் ஒருமணி நேரம் புத்தகவாசிப்பு, 20,000 மாணவர்கள் தங்கள் இல்லங்களில் ஒரு நூலகத்தைத் தொடங்க உறுதியேற்பு போன்ற வாசிப்பை வலியுறுத்தும் பல நிகழ்வுகளை பேரவை நடத்தியுள்ளது.

    அடுத்தகட்டமாக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘ வார்டுக்கு ஒரு வாசகர்வட்டம் ’ என்ற வகையில் தொடங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வாசகர்வட்டம் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 20 வாசகர்களும் அதிகபட்சம் 50 வாசகர்களும் இருக்கவேண்டும், மாதமொரு வாசகர்வட்டக் கூட்டம் நடைபெற்று மாதம் முழுவதும் உறுப்பினர்கள் வாசித்தவை குறித்து அதில் கலந்துரையாடுதல் போன்ற பல விதிமுறைகள் பேரவையால் வகுக்கப்பட்டுள்ளன.

    தங்களது வார்டுகளில் வாசகர்வட்டம் தொடங்க எண்ணுவோர் அதற்கான படிவத்தைப் பெற A- 47, சம்பத் நகர், ஈரோடு – 638 011 என்ற முகவரியில் இயங்கும் மக்கள் சிந்தனைப் பேரவை அலுவலகத்தை அணுகி அதற்கான படிவங்களையும் ஆலோசனைகளையும் பெறலாம் என்று பேரவையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

    கூடுதல் விபரங்கள் www.makkalsinthanaiperavai.org என்ற இணையதளத்தில் உள்ளன. 0424 – 2269186, 88831 24443 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

    Share
  • அகில உலக ஆன்மீக மாநாடு – மலேசியா

    பவள சங்கரி

    17424710_10208579031979839_4494339864334405030_n

    17457310_10208579030419800_3512317497006398219_n

    ஆன்மீகம் பேசும்போது ஆன்மா ஒளி பெறுவதால் அளவிலா ஆனந்தமும், ஓர் ஆழ்ந்த அமைதியும் பேச்சில் கூட வெளிப்படும் போல.. தாவரத்தின் வளர்ச்சிக்கு நீர், காற்று, ஒளி தேவை. நீர், காற்று, உணவு, சூரிய ஒளியுடன் வளரும் நம் ஜீவ உடல். நம் ஆத்மாவின் வளர்ச்சிக்கு நாம் அளிக்க வேண்டிய சக்தி எது?
    17458378_10208578885096167_6645825901139891819_n
    17425066_10208579034659906_5768972564292457908_n
    17499475_1471401082871622_6766319080233469152_n
    17342995_1471401689538228_4721280761605275778_n
    பவானி, சத்தியத்தின் சக்திநிலைச் சங்கம் , மெய்ஞ்ஞான தியான மையத்தின் தலைவர் கவாலியர் முனைவர் மதிவாணன் அவர்கள்  சார்பில் ஸ்ரீலஸ்ரீ வாலைச்சித்தர் சுவாமிகள் மலேசிய நாட்டிலிருந்து வந்திருந்து, ஜூன் 9,10,11 ஆகிய நாட்களில் மலேசியா, கோலாலம்பூர், பத்துமலை, சுப்பிரமணியர் திருக்கோவிலில் நடைபெறும் அகில உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கும் பொருட்டும் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஆசி வழங்கினார்கள். இத்தகையதொரு அற்புதமான மேடையில் எனக்கும் ஒரு இடம் கிடைத்தது இறையருள் என்றே கொள்ளமுடிகிறது!. ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவோர் கிழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
    98940 64755, 99440 77789.
    Share
  • ஆண்கள் திருமணத்தடை நீங்க ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கந்தர்வராஜ ஹோமம் நடைபெற்றது..

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று (19.03.2017) காலை 10.00 மணிக்கு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வராஜ ஹோமம் நடைபெற்றது

    amu

    இந்த யாகத்தில் குலதெய்வ தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கலந்து கொண்டவர்கள். பிரார்த்தனை செய்தனர்

    amu1

    முன்னதாக கோபூஜை, கலச பூஜை, மஹா கணபதி பூஜை, நவகிரக பூஜை பார்வதி பரமேஸ்வர்ர் பூஜையுடன் ஸ்ரீ விநாயகர் தன்வந்திரி ஸ்ரீ முனீஸ்வரர் ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசர் மற்றும் தன்வந்திரி பகவானுக்கும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது, இந்த ஹோமத்தில் கலந்த கொண்ட ஆண்களுக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது

    .இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • இசைக்கவியின் மார்ச் மாத நிகழ்வுகள்!

    தத்வாலோகா – குரு கேஸ் கம்பெனி
    இணைந்து வழங்கும்
    கேள்விக்கென்ன பதில்?
    தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
    வழங்குபவர் : இசைக்கவி ரமணன்
    (கடோபநிடதம் குறித்த விளக்கம் தொடர்கிறது)
    நாள்/தேதி : சனிக்கிழமை, மார்ச் 18, 2017
    மாலை : 6.00 – 7.30
    தத்வாலோகா அரங்கம்
    (78, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18)
    அனைவரும் வருக!

     

    ar

    arm

     

    arm1

     

    arm2

     

    Share
  • National Science Day Invitation

    T.Stalin Gunasekaran,
    President,
    Makkal Sinthanai Peravai,
    A – 47, Sampath Nagar,
    Erode – 638011.
    Ph No : 0424 – 2269186.

    am

    am1

    Share
  • மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 468 சித்தர்களுக்கு சிவ பஞ்சாட்சர ஹோமத்துடன் சிறப்பு பூஜை

    கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 24/02/2017 வெள்ளிக்கிழமை அன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு 468 சித்தர்கள் பூஜையுடன் சிவ பஞ்சாட்சர ஹோமம் நடைபெற உள்ளது.

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 320 ஜீவ சமாதிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சித்தர்களை தரிசித்து அப்புண்ணிய பூமியின் புனித ம்ருத்தியை கொண்டு 15 நாட்கள் ருத்ர ஹோமம் செய்து சிவ யந்திரத்துடன் 468 சித்தர்களை சிவலிங்க ரூபமாக பிரதிஷ்டை செய்து பிரதி அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷ காலங்களில் யாகங்கள், பூஜைகளை சிறப்பாக செய்து வருகிறார்.

    மேலும் மரகதலிங்கம், வள்ளலார், மகா அவதார பாபா, சீரடி பாபா, ஸ்ரீ ராகவேந்திரர், ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், புத்தர், குருநானக், குழந்தையானந்தா சுவாமிகள், ஸ்ரீ வீரபிரம்மேந்திரர், சேஷாத்ரி சுவாமிகள் போன்ற மகான்களையும் பிரதிஷ்டை செய்து சித்தர் முறையில் பூஜித்து வருகிறார்.

    வருகிற மஹா சிவராத்திரி 24.02.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் உலக மக்கள் நலன் பெறவும் இயற்கை வளம் பெறவும் சிவ பஞ்சாட்சர ஹோமமும், ருத்ராபிஷேகமும், ருத்ர பாராயணமும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு விவாஹ பிராப்தம், சந்தான பாக்கியம், நல்ல நட்புகள், வறுமை நீங்கி வளமை, குரல் வளம், இனிய சரீரம், நல்விளைச்சல், தொழில், வணிகம், வியாபாரம் பெருகும் மற்றும் பலவிதமான சாபங்களும் தோஷங்களும் அகலும். இது மோட்சம் கிடைக்க வழிவகை செய்யும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

    Share