Month: November 2021

  • இங்கிலாந்தில் வாண வேடிக்கை

    இங்கிலாந்தில் வாண வேடிக்கை

    இங்கிலாந்தின் பிளாக்பூல் நகரம், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வண்ணமயமாய் ஜொலிக்கும். வண்ண விளக்குகளும் வாண வேடிக்கைகளும் இரவைப் பகலாக்கும். இந்த ஆண்டு இந்த விழாக் காலத்தை நீட்டித்திருக்கிறார்கள். 2022 ஜனவரி வரை இந்தக் கோலாகல வைபவம் தொடரும். இது முற்றிலும் இலவசம். எவரும் கண்டுகளிக்கலாம். இதோ இந்த 2021ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி. படப்பதிவு, நவ்யா.

    Blackpool Illuminations is the No. 1 free light show in the world; This has been a major part of Blackpool’s attraction since 1879 when they were described as ‘Artificial Sunshine’. Blackpool Illumination 2021 is a little different this year. The annual Illuminations display is to be extended by two months to provide an invaluable boost to the resort’s tourism season after COVID-19. The 2021 Blackpool Illuminations will shine throughout Christmas and New Year. They’ll burst into light and colour from September to January 2022!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாமென்ன செய்யலாம் பூமிக்கு?

    நாமென்ன செய்யலாம் பூமிக்கு?

    சி. ஜெயபாரதன்

    சூடேறிப் போச்சு
    பூகோளம் !
    ஊழ் வினையோ, சதியோ,
    இயற்கை நியதியோ ?
    நாமென்ன செய்யலாம் இப்போ
    பூமிக்கு ?
    வீடேறிச் சீர்கேடு
    விரட்டுது !
    நாடெங்கும் நாசம்
    நாள் தோறும்
    நேரும் !
    நாமென்ன செய்யலாம்
    நாட்டுக்கு ?

    காட்டுத் தீயும்,
    பேய்மழை வெள்ளமும்
    ஓயாது ஒழியாது
    தாக்கும்
    பேரழிவுக் காட்சி !
    நாமென்ன செய்யலாம்
    நாட்டுக்கு ?
    நாடெங்கும் கூக்குரல்
    மாந்தர்
    எல்லாம் இழந்து இடமின்றி
    எங்கெங்கோ
    ஓடிப்
    புலம் பெயர்வார் !
    நாமென்ன செய்யலாம்
    நாட்டுக்கு ?

    பருவக் காலம் தவணை
    மாறிப் போச்சு !
    பயிரெல்லாம் கருகிப்
    பதராகப் போச்சு !
    நாமென்ன செய்யலாம்
    பூமிக்கு ?
    உயிரினம் யாவும் நோய்
    நொடியில்
    சாகாமல் சாகுது !
    நாமென்ன செய்யலாம்
    நாட்டுக்கு ?

    ஊருக்கு ஊர்
    ஓர் உதவிப் படை தேவை.
    முன்னுதவி செய்ய
    முந்திடும்
    தன்னார்வப் படை.
    ஊர்ச் செல்வீகர்
    உடன்பாடு, பங்கீடு, உழைப்பு
    தேவை.
    நாமிதைச் செய்யலாம்
    நாட்டுக்கு.

    பெட்ரோல் கார் ஓட்டு.
    ஜெட் எஞ்சின் விமானத்தில் போ.
    பிரயாணத்தை குறை.
    டீசல் எஞ்சின்
    விவசாய அறுவடை செய்யட்டும்.
    கரி வாயுவை
    வடிகட்டி,
    கரியை நீக்கு !
    நாமிதைச் செய்யலாம்
    பூமிக்கு.

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(374)

    குறளின் கதிர்களாய்…(374)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(374)

    கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டி
    னாற்று பவர்க ணிழுக்கு.

    – திருக்குறள் – 893(பெரியாரைப் பிழையாமை)

    புதுக் கவிதையில்

    தானழிய
    ஒருவன் எண்ணினால்,
    பகை மன்னர்களை
    அழிக்கவல்ல
    ஆற்றல் மிக்க
    பெரியோர்களிடத்து
    அறநூற்களை மீறித்
    தவறுகளைச்
    செய்தாலே போதும்…!

    குறும்பாவில்

    ஒருவன் தானழிய எண்ணிடில்,
    பகையரசர்களை அழிக்கவல்ல பெரியோர்களுக்கு அறநெறி
    தவறி தீங்குசெய்தால் போதுமே…!

    மரபுக் கவிதையில்

    பகையா யுள்ள மன்னவரை
    பதமா யழித்து ஒழித்திடவே
    வகைய தறிந்ந பெரியோராம்
    வல்ல வர்கள் துன்புறவே
    மிகையாய் அறநூல் நெறிதவறி
    மெய்யாய்த் தீங்கு செய்தாலே,
    பகைவ ரிலாமல் அவனேதான்
    பட்டே அழிவான் பாரினிலே…!

    லிமரைக்கூ

    தானே அழிவான் ஆங்கு,
    பகையழிக்கும் திறன்மிகுந்த பெரியோர்க்குச் செய்தால்
    அறமிலா தொருவன் தீங்கு…!

    கிராமிய பாணியில்

    செய்யாத செய்யாத
    தீங்கு செய்யாத,
    பண்பில ஒசந்த பெரியவங்களுக்குத்
    தீங்கு செய்யாத..

    தானே ஒருவன்
    அழியணுண்ணு நெனச்சா
    வேற ஒண்ணும்
    செய்ய வேண்டாம்,
    பகயாளி ராசாவயெல்லாம்
    அழிய வைக்கிற
    அறிவும் தெறமயுமுள்ள
    பெரியவங்களுக்கு அவன்
    மொறயில்லாமத்
    தீங்கு செய்தாலே போதும்..

    அதால
    செய்யாத செய்யாத
    தீங்கு செய்யாத,
    பண்பில ஒசந்த பெரியவங்களுக்குத்
    தீங்கு செய்யாத…!

    Share