நாமென்ன செய்யலாம் பூமிக்கு?

சி. ஜெயபாரதன்

சூடேறிப் போச்சு
பூகோளம் !
ஊழ் வினையோ, சதியோ,
இயற்கை நியதியோ ?
நாமென்ன செய்யலாம் இப்போ
பூமிக்கு ?
வீடேறிச் சீர்கேடு
விரட்டுது !
நாடெங்கும் நாசம்
நாள் தோறும்
நேரும் !
நாமென்ன செய்யலாம்
நாட்டுக்கு ?

காட்டுத் தீயும்,
பேய்மழை வெள்ளமும்
ஓயாது ஒழியாது
தாக்கும்
பேரழிவுக் காட்சி !
நாமென்ன செய்யலாம்
நாட்டுக்கு ?
நாடெங்கும் கூக்குரல்
மாந்தர்
எல்லாம் இழந்து இடமின்றி
எங்கெங்கோ
ஓடிப்
புலம் பெயர்வார் !
நாமென்ன செய்யலாம்
நாட்டுக்கு ?

பருவக் காலம் தவணை
மாறிப் போச்சு !
பயிரெல்லாம் கருகிப்
பதராகப் போச்சு !
நாமென்ன செய்யலாம்
பூமிக்கு ?
உயிரினம் யாவும் நோய்
நொடியில்
சாகாமல் சாகுது !
நாமென்ன செய்யலாம்
நாட்டுக்கு ?

ஊருக்கு ஊர்
ஓர் உதவிப் படை தேவை.
முன்னுதவி செய்ய
முந்திடும்
தன்னார்வப் படை.
ஊர்ச் செல்வீகர்
உடன்பாடு, பங்கீடு, உழைப்பு
தேவை.
நாமிதைச் செய்யலாம்
நாட்டுக்கு.

பெட்ரோல் கார் ஓட்டு.
ஜெட் எஞ்சின் விமானத்தில் போ.
பிரயாணத்தை குறை.
டீசல் எஞ்சின்
விவசாய அறுவடை செய்யட்டும்.
கரி வாயுவை
வடிகட்டி,
கரியை நீக்கு !
நாமிதைச் செய்யலாம்
பூமிக்கு.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *