இந்த வார ராசி பலன் (மே, 26 முதல் ஜூன் 1 வரை)

0

வார பலன்கள் 

 

–    ஜோதிடர் சகாதேவன்

 vaniyal-300x225

1.மேஷம் : பொதுவாக அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான வாரம். ஆஹா! ஓஹோ! என வெற்றிகள் கிடைக்காவிட்டாலும் மனநிறைவோடு இருக்கலாம். பெண்களுக்கும் மாணவர்களுக்கும் உற்சாகம் மேலிடும். வியாபாரிகளுக்கு சுமாரான வாரம். அரசியலில் இருப்போர்க்கு முன் ஜாக்கிரதை தேவை. கலைத்துறையினர் திறமையை வெளிப்படுத்தலாம்.

2. ரிஷபம் : ஓடி ஓடி உழைத்து பணம் சேர்ப்பீர்கள். ஆரோகியம் கைகூடும். அடுத்த படிக்கு ஏற உதவிக்கரம் நீண்டு வரும். மொத்தத்தில் எல்லாம் சாதகமாக அமையும். பெண்களுக்குப் புதிய பொருள் கிடைக்கும். சுற்றி வளைத்து சுப காரியம் சுபமாய் முடியும். மாணவர்கள் எதை விதைக்கிறார்களோ அதை அறுவடைசெய்வார்கள். பணிபுரிவோர்க்கு உயர்வு கிட்டும். வியாபாரிகளுக்கு துணிச்சல் பிறக்கும். கலைத்துறையினருக்கு  வெற்றி கிடைக்கும்.

3. மிதுனம்: சுபமான செய்தியோடு வருமானமும் வந்தால் மகிழ்ச்சிக்கு குறைவு ஏது. எனவே உங்களிடம் சுறுசுறுப்பு மிஞ்சி நிற்கும். பெண்களுக்கு நல்ல உறவு நீடிக்கும். மாணவர்கள் சாகச விளையாட்டுக்களை தவிர்ப்பது நல்லது. பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சி குறையாது. அரசியலில் இருப்போர் எதையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகளும் வருவாயும் அதிகரிக்கும்.

4. கடகம்: எண்ணி துணிந்த செயல்களில் தாமதம் காட்டாதீர்கள். பணவரவு உள்ளதே என்று பிறருக்கு பொறுப்பாக நிற்காதீர். உடல் நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு சுப நிகழ்ச்சிகள் உண்டு. மாணவர்கள் எதையும் தள்ளிப்போடாமல் காலத்தே செய்யவேண்டும். பணிபுரிவோர் எல்லோருடனும் சுமூகமாய் கலந்து பழகுவர். தொழில் புரிவோர் கவனமாய் இருத்தல் வேண்டும். அரசியலில் இருப்போர்க்கு நிதானம் தேவை. கலைத்துறையினருக்கு போதுமான வருமானம் கிடைக்கும்.

5. சிம்மம்: சரியாக திட்டமிட்டிருப்போர்க்கு எல்லாம் சிறப்பாக நிறைவேறும் நேரம்.ஆரோகியத்தில் அக்கறை கொள்வீர்கள். சுற்றுலா விரும்புவீர்கள். பெண்களுக்கு நிதானம் தேவை. மாணவர்கள் கூடுதல் கவனமுடன் செயல்படவேண்டும். பணியில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம் பிரகாசிக்கும். வியாபாரிகளுக்கு வருமானம் கூடும். அரசியலில் இருப்போர்க்கு கவனம் தேவை. கலைத்துறையினருக்கு சுமூக மனப்பான்மை  தேவை.

6.   கன்னி: அதிர்ஷ்டம் உங்களை தேடி வருகிறது. சொன்னபடி செயல்புரிவீர்கள். கடன் தொல்லை நீங்கும். பெண்களுக்கு சங்கடங்கள் வந்தாலும் சட்டென மறந்து பட்டென அன்பு காட்டுவீர்கள். மாணவர்க்கு கவனம் தேவை. பணிபுரிவோர் திறமைகள் மேம்படும். அரசியலில் இருப்போர்க்கு நீண்ட நாள் ஆதங்கம் தீரும். கலைத்துறையினருக்கு சூழல் சிறப்பாக இருந்தாலும் தடாலடியாக செயல்களைச் செய்ய வேண்டாம்.

7. துலாம்: ஆரோக்கியமும் குடும்பத்தில் ஏற்றமும் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சமுதாயத்தில் மரியாதை உயரும். கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். பெண்களுக்கு சமாதானம் ஏற்படும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிபுரிவோர்க்கு வருவாய் கூடும். மேலதிகாரிகளின் நற்சான்றிதழ் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு முதலீட்டில் கவனம் தேவை. அரசியலில் இருப்போர் பார்த்து நடந்து கொள்ள வேண்டும். கலைத்துறையினர் தடைகளை கண்டு கவலைப்படாமல் தன்னம்பிக்கையோடு இருத்தல் வேண்டும்.

8.  விருச்சிகம்: கடவுள் கருணையால் உங்கள் இல்லத்தில் துன்பம் விலகி இன்பம் பெருகும். நல்ல மனிதர்களின் தொடர்பும் வருவாயும் கிட்டும். பெண்கள் புதிய பொருள் வாங்க விரும்புவர். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்துவார். பணிபுரிவோர் கவனமாய் இருத்தல் நலம்.  தொழில் புரிவோர்க்கு  சுமாரான வாரம். அரசியலில் இருப்போர்க்கும் அனுகூலம் கிட்டும். கலைத்துறையினர் போட்டி மேலிட்டாலும் சமாளித்து வெற்றி பெறுவர்.

9.தனுசு: சின்னச் சின்ன சங்கடங்களைப் பொருட்படுத்தாமல் இருந்தால் வாரம் முழுவதுமே உற்சாகம் மேலிட வலம் வரலாம். உங்களின் ஆரோக்கியம், தன்னம்பிக்கையை மேம்படுத்தி சமூகத்தில் நற்பெயரை எடுப்பீர்கள்.  பெண்களுக்கு பொருள் வாங்க ஆசை தான். மாணவர்களுக்கு படிக்கப் படிக்க இனிக்கும் தான். பணிபுரிவோர் கவனமாய் இருக்க. வீண் விவாதம் தேவையில்லை. அரசியலில் இருப்போர்க்கு எந்தப் பகையும் தேவையில்லை. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கிறது.

10. மகரம்: கடினமாக உழைத்தாலும் உழைப்புக்கேற்ற பலன் உண்டு. சிலருக்கு அசையா சொத்தும் பலருக்கு வாகன விருத்தியும் அமையும். எனவே வருமானம் சிறப்பாக இருக்கும் எனலாம். பெண்களுக்கு ஆரோகியத்தில் கவனமும் மாணவர்களுக்கு படிப்பில் சிரத்தையும் தேவை. பணிபுரிவோர் மலை போன்ற வேலையையும் போராடி முடிப்பார். அரசியலில் இருப்போர்க்கு எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கிறது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.

11.  கும்பம்: தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். முன்னோர்களின் அசையாத சொத்துக்களின் பிரச்னை தீரும். பிரயாண அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. செலவு செய்தாலும் ஆரோகியத்தைப் பார்த்துக் கொள்வீர். பெண்களுக்கு சிக்கனம் தேவை.மாணவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். பணிபுரிவோர் எப்போதும் போல் இருப்பர். அரசியலில் இருப்போர்க்கு பதவி கிடைக்கும். ஆனால் பணிவு தேவை. கலைத்துறையினர் தனித்துவம் காட்டினால் மகத்துவம் பெறுவர்.

12. மீனம்: பிரச்சனைகள் குறைந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவீர். நல்ல செயல்களை செய்து மகிழ்வீர். எனினும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு ஆரோகியத்தில் அக்கறை வேண்டும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். பணிபுரிவோர்க்கு சமாதானம் கிடைக்கும். தொழில் புரிவோர்க்கு திருப்தி கிட்டும். அரசியலில் இருப்போர்க்கு வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய பாதை கிடைக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *