Tag: தாம்பரம்

  • நாகேஸ்வரி அம்மன் வீதி உலா | தாம்பரம்

    நாகேஸ்வரி அம்மன் வீதி உலா | தாம்பரம்

    ஆடித் திருவிழாவை முன்னிட்டு, சென்னை தாம்பரம் முத்துரங்கம் பூங்காவில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு நாகேஸ்வரி அம்மன், தாம்பரம் சந்தைக் கடைத்தெருவில் வீதி உலா வரும் காட்சி.

    நாகேஸ்வரி அம்மன் தேருக்கு முன்னால், வாத்தியக் குழுவினர், நடந்துகொண்டே வாசித்தனர். அம்மன் வருகையை மங்கல இசையால், மக்களுக்கு அறிவித்தனர். நாகஸ்வரமும் மேளமும் இழையும் இந்த இன்னிசையைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வெறுங்கையால் பிளீச்சிங் பவுடர் தூவும் பணியாளர்

    வெறுங்கையால் பிளீச்சிங் பவுடர் தூவும் பணியாளர்

    முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு, இன்று காலை தாம்பரத்தில் நம் தெருவுக்கு வந்த தூய்மைப் பணியாளர், கொரோனா தடுப்புப் பணிக்காக, வெறும் கையால் பிளீச்சிங் பவுடர் தூவுவதைப் பார்த்தேன். இதைக் கருவிகள் வழியாக அல்லது ஒரு டப்பாவில் எடுத்து, பவுடர் டப்பா மாதிரி அமுக்கித் தூவலாமே. கை படாமலே தூவ, வேறு நிறைய வழிகள் உண்டே. கையுறைகள் அணியலாமே. அரசு உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். இதன்வழியே பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாம்பரத்தில் தண்ணீர் வடிகின்றது!

    தாம்பரத்தில் தண்ணீர் வடிகின்றது!

    அண்ணாகண்ணன்

    நிவர் புயல் தாக்கத்தால் மேற்குத் தாம்பரத்தில் பல பகுதிகளில் நேற்று வெள்ளம் சூழ்ந்திருந்தது. ஆயினும் படிப்படியாக இப்போது குறைந்து வருகின்றது. ஆயினும் குப்பைகளும் பாம்புகளும் இறந்த உயிரினங்களின் சடலங்களும் ஆங்காங்கே சூழ்ந்துள்ளன. மரங்களும் மரக்கிளைகளும் விழுந்து கிடக்கின்றன. தேங்கியுள்ள நீரிலிருந்து குபுகுபுவென குமிழ்கள் வெளிவருகின்றன. இதோ, களத்திலிருந்து நேரடிக் காட்சிகள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share