சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை, சிட்லப்பாக்கம் பகுதியில் நடைபெறும் பிரமாண்டக் கால்வாய் அமைக்கும் பணிகள் – ஒரு பார்வை.
மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன் நிகழ்த்திய கண்டன உரை இதோ.
மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு நிகழ்த்திய கண்டன உரை இதோ.
மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் நிகழ்த்திய கண்டன உரை இதோ.
மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நிகழ்த்திய கண்டன உரை இதோ.
டாக்டர் ஆர்.சந்திரசேகர், இந்தியக் கடற்படையில் பணியாற்றியவர், முனைவர், பேராசிரியர், தலைமை ஆசிரியர், எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகத் திறமை படைத்தவர். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் ஜூன் மாதக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நகைச்சுவையின் சிறப்பு என்ற தலைப்பில் இவர் வழங்கிய நயமான உரை இதோ.
மனைவியிடம் கேட்கக் கூடாத கேள்வி எது தெரியுமா? தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் சொல்கேளான் ஏ.வி.கிரி ஆற்றிய உரை இதோ. ஒரு காலத்தில் திக்குவாயாக இருந்தவர், எப்படிச் சரளமாய்ப் பேசுகிறார், பாருங்கள்.
பேச்சரங்கில் ஒரு புதிய நட்சத்திரமாகத் தோன்றியிருக்கிறார், சிரிப்பொலி பழ.சிதம்பரம். இவருடைய குரலும் தோற்றமும் வெள்ளந்தியான பேச்சும் இவருக்குத் தனித்துவத்தை அளிக்கின்றன. தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் இவர் ஆற்றிய நகைச்சுவை உரை இதோ.
சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் அட்சய திருதியை திருநாளை முன்னிட்டு ரூ.1 லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். வையகத்தில் வளமும் செல்வமும் செழித்து ஓங்குக!
தமிழக அரசின் சார்பில் சென்னை, தாம்பரத்தில் மாபெரும் சிறுதானிய உணவுப் பெருவிழா 11.03.2023 அன்று நடைபெற்றது. இதில் வரகு, கம்பு, குதிரைவாலி, சோளம், தினை, சாமை, கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களைப் படக்காட்சிகளாக விளக்கினார்கள். இவற்றை உணவுப் பொருள்களாகவும் உடனுக்குடன் சமைத்து அளித்தார்கள். பற்பல கடைகளும் அரங்குகளும் நிகழ்வுக்கு வலுச் சேர்த்தன.
2023ஆம் ஆண்டினைச் சர்வதேச சிறுதானிய ஆண்டாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சீரிய விழா குறித்து ஒரு சிறப்புப் பார்வை.
தமிழக அரசின் சார்பில் சென்னை, தாம்பரத்தில் மாபெரும் சிறுதானிய உணவுத் திருவிழா 11.03.2023 அன்று நடைபெற்றது. இதில் அங்கன்வாடி சார்பில், ஊட்டச்சத்து நிறைந்த 60 சிறுதானிய உணவுகளைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். சத்தும் சுவையும் நிறைந்த, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய, புதுமையான இந்த உணவுகளைச் செய்வது எப்படி? இதோ அவர்களே விளக்குகிறார்கள்.
தாம்பரம் ரெயில்வே மேம்பாலத்தில் நின்றிருந்த விளக்குக் கம்பம், இன்று மதியம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இந்தச் சிக்கலைச் சமயோஜிதமாக மக்கள் எப்படிச் சமாளித்தார்கள் என்று பாருங்கள்.