Tag: சுப்ரபாரதி மணியன்

  • மனதில் நிறைந்த மக்கள் திலகம் 100 : தொகுப்பு : காவிரிமைந்தன்

    சாமான்ய மனிதர்களின் கட்டுரைகள் : சுப்ரபாரதிமணீயன்

     

    எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி இந்த 288 பக்க நூலில் எம்.ஜி.ஆர் பற்றிய பல சாமான்ய மனிதர்களின் கட்டுரைகளைத்தொகுத்திருக்கிறார் காவிரிமைந்தன். இதில் எழுதியுள்ளவர்களில் எம்.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் மனதினை எம்.ஜி.ஆர் பல விதங்களில் பாதித்திருக்கிறார். அந்த பாதிப்புகளை எண்ணங்களின் வடிவில் வடித்திருக்கிறார் காவிரிமைந்தன் . எம்.ஜி.ஆர் பற்றி விதவிதமான அனுபவங்கள்.. செய்திகள்… கட்சியின் தலைவராக இருந்த அனுபவங்கள், ஏழைப்பங்காளியாக இருந்து அவர் செய்த வள்ளல் தன்மை, பதவிகளை அவர் பயன்படுத்திக்கொண்டு ஏழைகளுக்குச் செய்த சேவைகள் , திரைப்படத்துறையில் நடந்த பல சுவையான சம்பவங்கள் என்று வகை வகையாய் இருக்கின்றன இக்கட்டுரைகள். எதிர்மறையான விசயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன

    ஒரு தொகுப்பாளரின் பொறுப்பும் கடமையும் கொண்டு இதை அவர் வெளியிட்டிருக்கிறார்.. ஒரு நேர் பேச்சில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாததை வைத்து ஒரு வாசகி எழுதிய கட்டுரையை அவர் நிராகரித்தது பற்றிச் சொன்னது ஆச்சர்யம் தந்தது. அக்கட்டுரையின் முடிவில் அவரின் அபிராயத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம. ஆனால் அது நிச்சயிக்கப்படாத விசயம் என்பதால் அதை வெளியிட அவர் மறுத்தது அவரின் பொறுப்புணர்வைக்காட்டியது. இந்தப்பொறுப்புணர்வை இத்தொகுப்பின் எல்லாப் பக்கங்களிலும் காண முடிவது இத்தொகுப்பின் வெற்றி. எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகனாக இருப்பதன் பயனாய் இன்றுவரை நேர்மறை எண்ணங்களுடன்.. ஏதோ ஒரு வகையில் சமுதாயத்திற்கும் பயனுள்ள மனிதனாக என்னை நானே செப்பனிட்டுக் கொண்டு வருகிறேன் என்பதில் மகிழ்ச்சியே என்பதை இத்தொகுப்பிலும் கண்டிருக்கிறார்.

    வல்லமை.காம் மின் இதழ் சேகரித்துத் தந்தக் கட்டுரைகளின் தொகுப்பு என்பது இன்னொரு விசேடம்

    எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளின் சுரங்கமாக இத்தொகுப்பு விளங்குகிறது.

    ( வெளியீடு : தமிழ் நதிப்பதிப்பகம், சென்னை ரூ 150 )

    Share
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

    தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

    திருப்பூர் மாவட்டம்

    * டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம்., பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது

    தலைமை : எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்

    ” நாவல் அனுபவம் “ என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் ராகவன் தம்பி, கோவை இரா .முருகவேள் ஆகியோர் பேசினர் .

    நாவலாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும், வழக்கறிஞருமான கோவை இரா.முருகவேள் உரையில்…

    “வனங்களில் அணை கட்டியும், சுரங்கம் அமைத்தும் இயற்கை வளங்களைச் சுரண்டியது மத்திய, மாநில அரசுகள்தான். பழங்குடியினர் இருக்கும் இடங்களில்தான் வன விலங்குகள் பாதுகாப்பாக இருக்கின்றன. வன உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பு பழங்குடியினருக்குப் பல அநீதிகள் நடந்திருக்கின்றன. ‘ரிசர்வ் ஃபாரஸ்ட்’ என்ற பெயரில் அவர்கள் வசிக்கும் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டிருக்கின்றனர். காய்ந்த சுள்ளிகளை வனத்துக்குள் செல்லும் பழங்குடியினர்களை வனத்துறையினர் விரட்டி அடிக்கின்றனர். காடுகளைவிட்டுப் பழங்குடியினர் வெளியேற்றம் என்பது, கடந்த 20 ஆண்டுகளாத்தான் அதிகம் நடந்துவருகிறது. கோவை மாவட்டம் பவானி சாகர் அணைக்குப் போகும் வழியில் தெங்குமரஹட்டா என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி 20 கி.மீ சுற்றளவுக்கு காடுகள்தான் இருக்கும். 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் சில கிராமங்கள் இருந்தன. ஆனால், ரிசர்வ் ஃபாரஸ்ட் என்ற காரணங்களுக்காக 1980-க்குப் பிறகு அங்கிருந்த பழங்குடியினர் கிராமங்கள் காலி செய்யப்பட்டன. ஒரு கிராமம்கூட அங்கு இல்லை. அதேபோல முதுமலை புலிகள் சரணாலயத்தின் பகுதியில் இருந்த பழங்குடியினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இப்போது வறுமையில் வாடுகின்றனர். கண்ணகி கோயில் அருகே குமுளி வனப்பகுதியில் முதுவர் என்ற பழங்குடியினர் கிராமம் இருந்தது. அந்தக் கிராமம் இப்போது இல்லை. பழங்குடியினர்களை அவ்வப்போது துரத்திவிட்டு மறு குடியமர்வு செய்கின்றனர். ஏராளமான பழங்குடியினர் கடந்த சில ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து பல இடங்களில் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். வன உரிமைச் சட்டத்தில் பழங்குடியினருக்காக ஏராளமான உரிமைகள் உள்ளன. அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

    சுப்ரபாரதிமணியனின் தலைமை உரையில்….

    விவசாயம் புறக்கணிக்கப்பட்டு திருப்பூர் போன்ற நகரங்கள் விரிவாகிக் கொண்டே இருக்கின்றன.வெற்று சம்மதங்கள் அபாயகரமானவை.தொழிலுக்கு குந்தகம் வந்து விடக்கூடாது என்ற கூட்டு எண்ணம் வியாபார நியதிகளுக்கும் கூட ஒத்து வராது என்று குற்றம் பேசும் விமர்சனப் பார்வை தொடர்கிறது.

    தொழிலாளி, முதலாளி, தொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருமே அன்னிய செலவாணியை குறிக்கோளா வைத்துச் சமரசமாக இயங்கும் ஊரின் அசலானத் தன்மை தெரிகிறது.. .. ..உலகச் சந்தையை முன் வைத்து பின்னலாடை உற்பத்தி அதன் தொழிலாளிகளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பதைக் காட்டுகிறது. சேரிகள் வளர்ந்து கொண்டே இருக்கிறது . பின்னலாடையிலே சுமங்கலித்திட்டக் கொடுமை வந்து விட்டது..இடம் பெயர்ந்து வந்த வேற்று மாநிலத் தொழிலாளர்கள்… பாரீசின் சொகுசுத்தனம், ஆப்ரிக்காவின் வறுமை இரண்டும் இங்கு சேர்ந்திருக்கிறது. வட மாநில பெண்களின் உழைப்புச் சுரண்டல், வார இறுதிகளில் அவர்கள் விபச்சாரத்துக்கு பயன்படுகிற நிலை போன்றவை தொடர்கின்றன “ என்றார்.

    படைப்பு அனுபவம் என்ற தலைப்பில் ஊத்துக்குளி நடேசன் அவர் எழுதிய “ இந்தியா எங்கே செல்கிறது “ என்ற நூல் எழுதியது பற்றி அவரும், காட்டாறு இதழ் பற்றி இராவணன் அவர்களும் உரையாற்றினர்.

    * நூல் அறிமுகம்..: .நூல் – அறிமுகம் பிஆர் நடராஜன் எழுதிய “ சுதந்திரப்ப்போரில் திருப்பூர் தியாகிகள் “ பற்றி ஜி.. இரவி ( திருப்பூர் மாவட்ட இளைஞர் பெருமன்றம் ) செய்து விரிவான உரை நிகழ்த்தினார் *

    பெண் படைப்பு குறித்து கோவை பேரா. செல்வி. பேரா. கலைவாணி ஆகியோர் உரைகள் நிகழ்த்தினர் *: மாற்றுக்கலாச்சாரம் எது உரை நிகழ்த்தினார் துருவன் பாலா., ( அவர் மாற்றுகல்வி, , மாற்று உணவு பற்றி விரிவாய் பேசினார் ) தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்டம் தலைவர் சண்முகம், பொருளாளர் பழனிசாமி. தமிழ் பண்பாட்டு மையம் யோகி செந்தில், பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி மருத்துவர் முத்துசாமி, , சசிகலா., விபி பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.

    மற்றும் கவிஞர் ஜோதி, துருவன் பாலா, ஆ, அருணாசலம் பாடல்கள், கவிதைகள் வாசிப்பும் நடந்தது. பங்கேற்பாளர்கள் கருத்துரைகள் வழங்கினர். தொழிற்சங்கத்தலைவர்கள், இலக்கிய வாசகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

    பிஆர்நடராஜன்நன்றி கூறினார்…

    Share
  • திருப்பூர் இலக்கிய விருது — 2016

    திருப்பூர் இலக்கிய விருது — 2016

    (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

    2014-15 ஆண்டில் வெளிவந்த நூல்களில் ஒரு பிரதியை மட்டும் கீழ்காணும் முகவரிக்கு அனுப்புங்கள்.

    முகவரி:
    94, எம் ஜி புதூர் 3ம் வீதி ,
    ஓசோ இல்லம்,
    பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி,
    திருப்பூர் 641 604 ( 221 221 0 )

    மின்னஞ்சல்: Srisuganthi2014@gmail.com

    கடைசி தேதி : 1/5/2016

     

     

    கடந்த ஆண்டில் பரிசு பெற்றோர் விவரம்:
    திருப்பூர் இலக்கிய விருது — 2015

    (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

    பரிசு பெற்றோர்:
    1. நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்
    2. கட்டுரை : சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்
    3. சிறுகதை : முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன்
    4. கவிதை : எல்லாளக்காவியம் – இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
    5. சிறுவர் நூல் : சொட்டுத்தண்ணீர் – இலங்கை ஓ.கெ.குணநாதன்
    6. மொழிபெயர்ப்பு : விஜயலட்சுமி சுந்தர்ராஜன் – இந்தி மொழிபெயர்ப்புகள்

    அயலகப்பரிசுகள் பெற்றப் படைப்பாளிகள்:
    1. ஜெயந்தி சங்கர் (ஜெயந்தி சங்கர் நாவல்கள்)
    2. மாதங்கி (சிறுகதைத் தொகுப்பு )
    3. சிங்கை டாக்டர் லட்சுமி (ஆய்வு நூல்)
    4. நடேசன் (சிறுகதைத் தொகுப்பு)

    Share
  • எழுத்தாளர்கள் சந்திப்பு

    சுப்ரபாரதி மணியன்
    நவம்பர் 21,22 : திருப்பூர் ( அலகுமலை, பசுமைப்பூங்கா )

    ஒருங்கிணைப்பு:
    இலக்கிய அமர்வுகள் : இளஞ்சேரல்
    குறும்பட, ஆவணப்பட அமர்வுகள்: அமுதன்
    சுற்றுச்சூழல் அமர்வுகள் : சேவ் அலோசியஸ்

    இரு தின உணவு, சனி இரவு தங்கல் ( 40 பேருக்கு மட்டும்)
    விபரங்களுக்கு: கா. ஜோதி ( 90255 26279)
    பதிவுக்கு ; subrabharathi@gmail .com ல் மின்னஞ்சல் அனுப்பவும்
    நுழைவுக்கட்டணம் : ரூ 100 மட்டும்

    Share
  • அரிமா விருதுகள் 2015 : ரூ 25,000 பரிசு குறும்பட விருது

    கடந்த 3 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம்.

    சக்தி விருது
    கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை இரு பிரதிகள் அனுப்பலாம்.
    கடைசி தேதி:30-10-2015.
    ==============================================================================
    அனுப்ப வேண்டிய முகவரி:
    தலைவர்:
    திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
    34,ஸ்டேட் பாங்க் காலனி,
    காந்தி நகர், திருப்பூர்.641 603
    தொடர்புக்கு : 9443559215.,

    Share
  • கோவை இலக்கியச் சந்திப்பு 48

    சுப்ரபாரதி மணியன்

    அ.முத்துலிங்கம் குறித்த இரு நூல்கள் வெளியீடு

    —————————————-

    30/11/14 ஞாயிறு காலை 10 மணி : நரசிம்ம நாயுடு மேல்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவையில்

    சுப்ரபாரதிமணியன் தொகுத்த அ.முத்துலிங்கம் குறித்த இரு நூல்கள் வெளியீடு நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் 2 நூல்களை வெளியிட ஈரோடு சந்திரு, கோவை நித்திலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    சுப்ரபாரதிமணியன் : “ எல்லோருக்கும் இது வாய்க்காது. முத்துலிங்கத்திற்கு கிடைத்திருக்கும் இந்த ரச வாத வித்தை தமிழுக்கு பெரிய கொடை.

    இலங்கைக்காரர் என்றால் ஈழ தேசிய இனச் சிக்கல் சம்பந்தமாக விசயங்கள் இல்லாமல் இருக்க முடியாது. இதில் உள்ள பல கட்டுரைகளில் இலங்கை இனக் கலவரச் சம்பந்தங்கள் உள்ளன.அகதிகளின் அவலம் இருக்கிறது. தனி ஈழம் தாகம் தென்படுகிறது. இவற்றியெல்லாம் ஒரு எழுத்தாளன் பதிவு செய்யும் பக்குவம் தெரிகிறது. அரசியல் சார்ந்தோர் அவற்றை சொல்வதைக் காட்டிலும் எழுத்து ரசனையில் நல்ல பதிவாகி விடுகிறது. வேலை சூழலில் பல துரோகங்கள், சாப்பாடு தூக்கி மனிதர்களுடனான உறவும் சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்க நியமனம் போது ஒரு சாவோடு அதை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.. நிலத்தில் கிடைக்கும் வைரம் பெண்களின் கண்களில் மின்னுகிறது. மேசன் சங்கத்து அனுபவங்கள் போல நண்பர்களின் கட்டாயத்தால் சில இடங்களில் உறுப்பினராக இருக்க வேண்டியிருக்கிறது. சூடான் விருந்தில் வாயின் உட்சபட்ச பயன்பாடு சொல்லப்படுகிறது. பெசவரின் பூங்கொத்துப் பெண்கள் சுவராஸ்யமானவர்கள். பாக்கிஸ்தானின் ஜகஜாலக்கில்லாடி கள்ளன்கள் கலை உச்சத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது அமுலில் இருக்கும் மின்வெட்டைக் கவனிக்கிற போது எங்கோ மின் திருட்டு நடந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. சோமாலியா அனுபவங்கள் பற்றி சொல்லும் போது இந்த மின் திருட்டு பற்றி எழுதுகிறார்.புத்தாண்டு கொண்டாட்டங்கள், குதிரைப்பயணம், சைக்கிள் ஓட்டுதல், விமான நிலையத்தில் செருப்பு கழற்றும் சடங்குகள், முடித்திருத்தும் அனுபவங்கள், ஞாபக மறதி என்று சுவாரஸ்யமான நிறைய விசயங்கள். இவற்றில் நீங்கள் ஏதாவது உண்மையைக் கண்டு பிடித்தால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். அது தற்செயலானது என்று முத்துலிங்கம் தரும் வாக்குமூலத்தைப் புறம் தள்ளி விட்டு அவரை முன்னிலைப் படுத்திதான் இந்த நாவலைத் தொடர முடிவதற்குக் காரணமாக தன்னிலையாகச் சொல்லப்படுவதை முக்கிய காரணமாகக் கொள்ளலாம். படைப்பாளன் ரொம்பவும் தன்னை மறைத்துக் கொள்ளவும் முடியாது. மறைத்துக் கொண்டாலும் அவன் வெளிப்படும் தருணங்களைச் சுலபமாகக் கண்டு கொள்ளலாம். இதிலும் முத்துலிங்கம் அவர்களைச் சுலபமாகக் கண்டு கொள்ள முடிகிறது. இதில் வருகிற இந்தியப் பெண்களோ, ஆப்பிரிக்கப் பெண்களோ, நைரோபிப் பெண்ணோ அனுதாபத்துடனும் எந்த வகையிலும் கிண்டலுக்கு ஆளாகாமலும் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான எள்ளல் தொனி ஒரு பிசகு அதிகமாகிப்போனாலும் கொச்சையாகிவிடும். அது எங்கும் நிகழவில்லை.” பெண் படைக்கப்படுவது ஆயுள் முழுவதும் உறிஞ்சப்படுவதற்கு. அவளுக்கு ஓய்வு நாள் என்பது இன்னும் குறிப்பிடப்படவில்லை” என்று ஒரு இடத்தில் எழுதுகிறார். பல இடங்களில் இது போன்ற சித்தரிப்புகள், வார்த்தைகள் பெண்ணகளை மேன்மைப்படுத்துகின்றன.இப்போது அவரின் உற்சாகமான எழுத்திற்கு இடைஞ்சலாக ஞாபக மறதி வந்திருக்கலாம். முதுமையில் ஒவ்வொவொரு நாளும் உயிர் தப்புவதுதான் நாட்களைக் கடத்துவது என்றாகி விடுவதை இறுதியில் குறிப்பிடுகிறார்.எழுத்தாளர்களுக்கோ, இந்த நாட்களைக் கடத்துவது என்பது இல்லாமல் ஆயுள் போதாமைதான் கணக்கில் வரும். .கலை இலக்கிய விசயங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடலின் உபாதை மீறி இயங்க இயங்க படைப்பூக்கம் ஒரு உந்து சக்தியாக கூடவே இருந்து கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது “ என்றார்.

    1. அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் (நற்றிணை பதிப்பகம்,சென்னை ரூ90 ) அ. முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள்
    2. தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை – அ.முத்துலிங்கம் பேட்டிகள் , கவின்கலை பதிப்பகம் சென்னை ரூ120)
    *********************************************************************************

    1.அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்

    தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்
    அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு
    ( எஸ்.இராமகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன்,உமாசக்தி, வெங்கட்சாமிநாதன், ஜெயமோகன், பராசக்தி சுந்தரலிங்கம், தமிழ்மகன், நாஞ்சில்நாடன், பாவண்ணன், மு.இராமநாதன், இல.சைலபதி, மதுமிதா, காயத்ரி சித்தார்த், எஸ். செந்தில்குமார் ஆகியோரின் கட்டுரைகள் ) (ரூ 90,( நற்றிணை பதிப்பகம், சென்னை 28482818, 9486177208 )

    2. தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை

    ஜெயமோகன், மதுமிதா, கடற்கரய், காலம், கிருஷ்ணா டாவின்சி,ராம்பிரஷன், மதுரபாரதி ஆகியோர் முத்துலிங்கத்திடம் எடுத்த நேர்காணல்கள்
    (அ.முத்துலிங்கம் பேட்டிகள் , கவின்கலை பதிப்பகம் சென்னை ரூ120)

    Share
  • பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு – ரூ 50,000 பரிசு

    சுப்ரபாரதி மணியன்

    கடந்த 3 ஆண்டுகளில் வந்த சிறந்த நூல்களை அனுப்பலாம். கவிதை, சிறுகதை நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு,ஆய்வு, நாடகம் அன்று அனைத்துப்பிரிவு ( பெண் எழுத்தாளர்களின் சிறந்த )
    நூல்களையும் அனுப்பலாம்.

    ரூ50,000 பரிசு வழங்கப்படும்.

    3 பிரதிகள் அனுப்ப வேண்டும்.

    கடைசி தேதி : 15-4-2014

    முகவரி:

    அரிமா மு ஜீவானந்தம் இலக்கியப்பரிசு
    பாலாஜி ரோடுலைன்ஸ்,
    51/38, சரவணா தெரு,
    அவினாசி சாலை,
    திருப்பூர் 641 602

    Share
  • இறந்தவர்களின் நினைவுகளூடே ஒரு பயணம்

    இறந்தவர்களின் நினைவுகளூடே ஒரு பயணம்:

     

    காப்ரியேல் கார்சியா மார்க்கேசின் “ தனிமையின் நூறு ஆண்டுகள் நூலை முன்  வைத்து..

     

                                      சுப்ரபாரதிமணியன்

    “ மனிதர்கள் முதல் வகுப்பில் பயணம் செய்யும் போது இலக்கியம் சரக்காகப் போகும் இந்த உலகம் நாசமாகப் போகட்டும் “  புயேந்தியா வம்சத்தின் ஆறாவது தலைமுறையைச் சார்ந்த ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்கிறது. 100 வருடங்களாக அலைந்து திரிகிறவன் நடப்பியலை எழுதி வைக்கிறான்.  அது லத்தீன் மொழிப் புத்தகமாக இருக்கிறது.  கடைசித்தலைமுறை வெளியிலிருந்து வந்தவன் குடும்பத்தின் வரலாற்றை எழுதியிருப்பதைச் சொல்கிறான். திரைப்படம் என்ற தொழில் நுட்பத்தைக் கூட யதார்த்தம் அற்ற கற்பிதங்கள் நிறைந்ததாக கண்டு நிராகரிக்கிற அவர்களின் இலக்கியம் குறித்த  வாக்குமூலம் முக்கியமானதே.

      மகோந்தா எனும் சிற்றூரின் வரலாற்றுக் கதை இந்தநாவல்.. நான்கு மலைகளுக்கு நடுவில் அமைந்த ஊர். புயேந்தியா என்பவரின் தலைமையிலான  ஒரு குடும்பம்.. வெளியுலகத்துடன் தொடர்பேதுமின்றி வாழும் வாழ்க்கை விரிகிறது. தனிமை படுத்தப்பட்ட உலகம் .  அந்த ஊருக்கு அவ்வப்போது வந்து போகும் நாடோடிகள், புதிய விசயங்களைக் கொண்டு வருகிறார்கள்.. . புயெந்தியாவுக்கு புதியவை மீது  ஆர்வம் அதிகம்.  அவருக்கு பனிக்கட்டி தொலைனோக்கிக் கருவிகள் அறிமுகமாகின்றன. புதியவை பற்றி தங்கள் தனிமைமீறி ஈடுபாடுகொள்பவர்களாக அவரின் குடும்பத்தினர் அமைகின்றனர்..மெல்ல. பிற ஊர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. ஊர்கள் சேர்ந்து நாடாகிறது. .  மகோந்தோவில் உள் நாட்டுக்கலவரங்களும்  தொடர்ந்த மரணங்களும்  நிகழ்கின்றன..ஆட்சி மாற்றங்கள்… அக்குடும்பத்தினைச் சார்ந்த மூர்க்கமான ஒருவர் ஒருவர் சர்வாதிகாரியாகிறார்.  மரண தண்டனையில் சாகிறார்.. அடுத்து வரும் மேயர் ஒருவரும்  கொல்லப்படுகிறார். அவருக்குப் பின் கலகம் முடிவுக்கு வருகிறது; சமாதான உடன்பாடுக்குப் போகிறார்கள். தவிர்க்க இயலாத, தவிர்க்க முடியாத வகையில் வரலாற்றின் தொடர்ச்சியாக வாழும் ஆர்லினோ மக்கள் இதில் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    புயேஃதியா குடும்பத்தின்  ஆறு தலைமுறைகளின் வாழ்வும் வீழ்ச்சியும் மகோந்தா என்ற புனைவு  நகரக் கட்டமைப்போடு விவரிக்கப்பட்டிருக்கிறது. லத்தின் அமெரிக்காவின் கலாச்சார அம்சங்கள் நாவலின் எடுத்துரைப்பில் பின்னிப் பிணைந்துள்ளன. காலம் ஒரு வட்டமாய் சுழன்று பழைய அம்சங்களை நிர்மூலமாக்கி நிற்கிறது.

     இதில் வரும் குறீயீட்டு அம்சங்கள்  நாவலை இன்னொரு படிம நிலைக்குக் கொண்டு செல்கிறது. தங்க மீனகள் துள்ளி விளையாடுகின்றன. தனிமைப்படுத்தப்பட்ட இரண்டாவது  ஆர்லினோ போர் வாழ்க்கையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு  தாத்தாவுடன் இணைந்து  தங்க மீன்களை உருவாக்குவதில் மூழ்கிப்போகிறான். ஒரு நிலைமைக்கு மேல் போர் என்பது தேவையில்லை. உயிரிழப்புகள் சகித்துக் கொள்ள முடியாததாய் போய் விடுகிறது. தனிமையும் தாத்தாவும் தங்க மீன்களை உருவாக்கப் பயன்படுகிறது.  புதிய உலகத்தின் குறியீடுகளாக புகைவண்டிப் பாதைகள் அமைகின்றன.  புதிய மாற்றங்களுக்கு வழி சொல்கின்றன.  மகோந்தா  நவீன நகரமாக  உருப்பெருகிறது. நவீனம் நரகத்திற்கு  பாதையை இட்டுச் செல்கிறது.  நகரத்திற்கு வெளியே ஒரு வாழைப்பழத்தோட்டம்  நிறுவப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அங்கு  வேலை செய்கிறார்கள்  கொத்தடிமைகளாக நடத்தப்படுவதை எதிர்த்து ஐந்தாம் தலைமுறையினர்  போராடுகிறார்கள்.  பழத்தோட்டத் தொழிலாளர்களை விருந்திற்கு அழைத்து  பீரங்கியால் சுட்டு வீழ்த்துகிறார்கள். புகை வண்டியில் பிணங்களைப் போட்டு கடலில் எறிகிறார்கள்.  மகோந்தா தொத்து வியாதி நகரமாகிறது. மறதி என்ற வியாதி எல்லோரையும் தொத்திக் கொள்கிறது. யாரையும் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. யாரும் நகரத்தை விட்டு வெளியே போக முடிவதில்லை.  வாழைமரங்கள் இரத்தக்கறைகளுடன் அடித்துச் செல்லப்படுகின்றன.  தேடித்தேடி கொலை செய்யப்படுகிறார்கள்.செகுண்டோ தன் தாத்தாவின் சுரங்கத்தில் ஒளிந்து கொள்கிறான். தாத்தாவுடன் சேர்ந்து தங்க மீன்களை உருவாக்குகிறான்.சைக்களோப்பிடியா  மிமி உருவாக்கமும்   முக்கிய நிகழ்வாகிறது. முதலில் சித்திரங்கள் மூலம் சொல்லப்பட்டது. பின்னர் கதைகள் சம்பவங்கள் மூலம் சொல்லிக் கொடுக்கும் நிலை வருகிறது.  மொழி தெரியாததால் தங்களை வெளிப்படுத்த முடியாத நிலை  கடந்து போகிறது.பியந்தியா குடும்பத்தினருக்கு வழிகாட்டிகள் இல்லை.  அடுத்த சந்ததிக்கு மிமியின் அறிவு பயன்படப்போகிறது.

    பூர்வீக இந்தியர்களுக்கும் கறுப்பு அடிமைகளுக்குமான தொடர்பும் லத்தின் அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு முந்திய உள்நாட்டுக் கலவரங்களும்ம் தொடர்ந்து காட்டப்பட்டிருகின்றன.அமெரிக்கர்களின் வருகை நவீன ஏகாதிபத்தின் ஆதிக்கமாக அமைகிறது.  வாழைத்தோட்ட உற்பத்திமுறைகளும் அந்த தொழிலாளர்களின் கொடூர கொலைகளும் கொலம்பியாவின் சரித்திர நிகழ்வுகளிலிருந்து எடுக்கப்பட்டவை.வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆதிக்கமும் சர்க்கரை, காபி, பெட்ரோலியம் போன்றவற்றில் அவர்களின் ஆதிக்கத்தையும் குறிப்பவை. வாழைத்தோட்ட தொழிலாளர்களின் கொலைகள் கொலம்பிய அரசுப் படைகளுக்கும்  பழக்கம்பனிதொழிலாளர்களுக்குமிடையிலான 1928 ம் ஆண்டின் நிகழ்வுகளை மையமாகக் கொண்டிருக்கிறது.  இந்த நாவலின் காலநிகழ்வுகள் புதிய ஏற்பாடு சார்ந்த சொர்க்க பூமியாகத் திகழ்ந்த காலம்,     பின்            அந்த சொர்க்கம் மறதி நோயால் மூழ்கடிக்கப்படுகிறது.  புயந்தியா வம்சத்தைச் சார்ந்த கலப்பு இந்திய வேலைக்கார்களால்  அந்த நோய் கொண்டு வரப்படுகிறது. அந்த இந்தியர்கள்  அமெரிக்காவின் இந்திய மக்களின் பிரதிநிதிகளாக அமைக்கிறார்கள். மறதி வியாதி அரசியல் சமூக சரித்திரங்களையும், மொழியின் சிறப்பையும், யதார்த்தத்தின் முந்திய நிகழ்வுகளையும்  நிராகரிக்கிற குறியீடாக அமைகிறது.

    அரசியல் தளத்தில் ஆக்கிரமிப்புகளும், போர்களும் வன்முறையும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.ஆர்லினோ கர்னல் வெளியேற அர்காடியோ வெற்றி பெருகிறான். போரில் 17 மகன்கள் செத்துப் போகிறார்கள். சமூகத்தில்  நடப்பவை  வெளித்தொடர்பு மூலம் கொண்டு வரப்படுகின்றன,சரித்திரம் திரும்பவும் நிகழ்த்தப்படுகிறது, மனிதர்கள் திரும்பத்திருமப் ஒரே மாதிரியானவர்களாய்  வந்து போகிறார்கள். ஒரே தோற்றம் கொண்டவர்களாய் இருக்கிறார்கள். பவுதீக ஒற்றுமைகள், நினைவுகளுடன் கூடவே  பலரின் பெயர் ஒரே மாதிரியாகவும் , முன்னோர்களின் பெயர்களைக் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது. காலமும் சில சமயம் உறைந்து போகிறது. ( காற்றைப்பார். சூரியனின் ரீங்காரத்தை கேள். நேற்றையும், முந்திய நாளையும் போல் இன்றைக்கும்  திங்கட்கிழமைதான் “ பக்கம் 86 )சிறுமி ரெமேதியோ குழந்தைப் பருவப் பழக்கங்களைத் தாண்டும் முன்பே  பூப்படைந்திருந்தாள் 88 ) சிதைந்து போனவர்கள் தங்களின் மனவுறுதியை இழந்து முற்றிலும் சிதைந்து போய் சுவற்று மண்ணைத் தின்கிறார்கள்   எது யதார்த்தம், எது கறபனை என்பதை கண்டு கொள்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

    இந்த நாவலில் காணப்படுபவர்களில் உடல் பலத்துடன் மூர்க்கத்தனத்துடன்  பலர் இருக்கிறார்கள்.புயெந்தியாவின்  முதல் மகன், உடல் பலத்துடன் இருப்பவன். . சிந்தனை இரண்டாம் பட்சம்தான். அறிவைத் தேடிப் போகிறவர்களாகவும் தனிமைப்படுத்திக் கொண்டவர்களாகவும் பலர் இருக்கிறார்கள் உதாரணமாக அவரின் இரண்டாவது மகன், சமூக நிகழ்வுகளில் அக்கறை கொண்டவனாகவும்  விசித்திரமானவனாகவும் இருக்கிறான்.பெண்கள் நாலைந்து வகையினராக இருக்கின்றனர். முக்கியமாக உருசுலா இகுவாரா. மற்றவர்கள் தனிமையில்  ஞாபகச்சக்தி இழந்தவர்களாக இருக்கும் போது இவள் அபாரமான ஞாபகச் சக்தி கொண்டவளாக இருக்கிறாள். குடும்பத்தின் நூறு வருடங்களுக்கு வழி காட்டிக் கொண்டு செல்பவளாக இருக்கிறாள்.

     புயெந்தியாக்களின் வாழ்க்கை நிகழ்வுகளில் சாவு., திருமணம், காதல், எல்லாம் விரிவாய் இடம் பெறுகிறது, மாற்றங்களின் அடையாளமாக வாழைத்தோட்டங்கள் காட்டப்பட்டிருகின்றன.அமெரிக்க

    முதலாளித்துவம் சுரண்டலை ஆரம்பிக்கிறது..  சுரண்டலுக்கும் அடக்கு முறைக்கும் வாழைத்தோட்டத்தில் வேலை செய்வோர் ஆளாகிறார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கொல்லப்பட்டு அவர்களின் . உடல்கள் கடலுக்குள் வீசப்படுகின்றன.பிணக்குவியலிலிருந்து தப்பித்து வரும் ஜோஸ் ஆர்கடியோ செகுண்டோ மகோந்தாவிற்குச் திரும்பிச் செல்கிற போது அந்நகரம் படுகொலைகள் பற்றிய எந்த நினைவும் இல்லாமல் அவ்வாறு எதுவும் நிகழவில்லை என்ற அரசாங்கத்தின் பிரச்சாரத்தில் அமிழ்ந்து போய் இருப்பதைக் காண்கிறான்.  ஐந்தாண்டுகள் நிற்காத மழைபெய்து . மகோந்தோ உருக்குலைகிறது. வன்முறையும், மக்களுக்கு பயனில்லாத முன்னேற்றமும்  மக்களை அலைக்கழிக்கிறது. புயெந்தியாவின் குடும்பத்தின் சீரழிவு ஊரின் சீரழிவின் ஒரு பகுதியாகக் காட்டப்படுகிறது.

    தனிமைப்பட்டுப்போகிறது. அக்குடும்பத்தில் எஞ்சிய ஒருவர் பழைய சுவடிகளை ஆராய்கிறபோது   நடந்தவை முன்பே எழுதப்பட்டிருப்பது தெரிகிறது. புயேந்தியா வம்சத்தின் முதல் நபர் ஹோசே அர்க்காதியோ முதற் கொண்டு  கடைசியாகத் தென்படும் அவுரேலியானோ வரை பெரும்பான்மையான கதாபாத்திரங்கள்  தனிமைக்குள் உழன்று வாழ்க்கையை முடித்துக் கொள்கிறவர்கள் தான். பல கதாபாத்திரங்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.  ஒரு குறிப்பிட்ட கால அளவை நிகழ்வுகள் கொள்ளாமல் தாறுமாறாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

    . கற்பனையின் உச்சமும்  யதார்த்தமும் கலந்து  உருவாகும் புனைக்கதை காவியத்தன்மை பெருகிறது.. நம்பகத்தன்மையும், நடக்க சாத்தியங்கள் கொண்ட விசயங்களும் புனைவுக்கதையை வெற்றியாக்கும்.  நடப்பு கதை சொல்லலில் மிகையானதாகவும் அறிவுக்குப் பொருந்தாத நிகழ்வுகளையும் சேர்த்து வழங்குவது ஒரு வகை எழுத்தாக உருவான கால கட்டத்தின் உச்சமான வெளிப்பாடாக இது விரிகிறது. யதார்த்தம் பழங்கதைகள்,   மரபானத் தொன்மக்கதைகளின் இயைந்த தன்மையில்  புது வெளிப்பாட்டு முறையாக அமைக்கப்பட்டிருக்கிறது. 1940களில் அமெரிக்க மனநிலையை வெளிப்படுத்தவும் யதேச்சையான வெளிபாட்டு முறையாக கால் கொள்ள ஆரம்பித்து மாய யதார்த்தமாக உருக்கொண்டது இந்நாவலில் பரிணமித்துள்ளது. பின்நவீனத்துவ நவீனவாதிகளும் பின் காலனிய எழுத்தாளர்களும் சரித்திரத்தை மறு உருவாக்கம் செய்ய மாய யதார்த்த எழுத்து பயன்பட்டிருக்கிறது.

    நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில்  மார்கெஸ் உருவாக்கியுள்ள முறை சிறப்பு மிக்கது. நினைவோடை உத்தி சார்ந்து இயங்குவது விலகுவதும் மாயத்தன்மையை இணைப்பதும் லாவகமாகச் செய்யப்பட்டிருக்கிறது. இதில், சமூக, அரசியல், பண்பாட்டுக் கூறுகளை இணைந்து கொள்கின்றன..  அவருடைய ஆரம்ப புதினங்கள்   இதற்கான அடிப்படையாக அமைந்துள்ளன. யதார்த்த வாழ்க்கையினூடே கற்பனைச் சித்திரங்கள் உயிரோட்டமாய் கொலம்பியாவின்  கறைபடிந்த வரலாற்றையும் அரசியல் சூழல்களையும்  கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை  நினைவுகளை அடுக்கிச் செல்வதன் மூலம் வரலாறு கட்டமைக்கப்படுகிறது. நினைவுகளும் சரித்திரக் குறிப்புகளும் நாவலை  ஆக்கிரமிக்கின்றன. நினைவிழந்து மனிதர்கள் வாழ்கிற போது நினைவுகளை கட்டமைப்பது இழையாக எங்கும் படர்ந்திருக்கிறது. விளிம்பு நிலை மக்களின் மீதான சுரண்டல் முதலாளித்துவத்தின் மனித உரிமை மீறல் அம்சங்களையும் வன்முறையையும் தொடர்ந்து காட்டிக்கொண்டிருக்கிறது. இது மகோந்தாவின் பூர்வக்குடிகளூக்கும் அதிகார பலம் கொண்ட இராணுவத்திற்குமான போராட்டமாக அமைகிறது.

    இந்த நாவலில் அறிமுகமாகும் மகந்தோ  நகரம் முன்பே  அவரின் முதல்  நாவலான லீப் ஸ்ட்ராமில் இடம் பெறுகிறது. மகந்தோ   என்றால் வாழை என்று பொருள். வாழைப்பயிர் செய்யும் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை நடத்தும் முறையும், அதுமூடப்பட்ட பின்பு நடக்கும் சிரமங்கள் அந்த மக்களை மிகவும் பாதித்திருக்கிறது. 1928ல் நடைபெற்ற யுனைடெட் ப்ரூட் வேலை நிறுத்தம் அவரின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்ததாகும்.முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் அவர்களின் கோரிக்கைகளைமுன் நிறுத்தி  ஒரு இரவில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடிய போது  அவர்கள் மேல் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது.  நூற்றுக்கணக்ககான விவசாயிகள் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போய் விட்டனர்.  அப்படி ஒரு கலவரம் நடக்கவேயில்லை என்று அரசு மறுத்தது. வரலாற்று நூல்களில்  அந்தச் சம்பவம் நடைபெறவே இல்லை என்றபடி இல்லாமல் போனது.  அவரின் தாத்தா, பாட்டி,, அத்தைகளோடு வளர்ந்த வீட்டுச்சூழலையும் அவர்களையும்    இந்நாவலில் கொண்டு வந்திருக்கிறார். காப்ரியேல் அவரது தகப்பனாருக்கு பதினோறாவது குழந்தை.  அவரின் பெற்றோர்  அவரை தாத்தா, பாட்டியிடம் விட்டு விட்டு  வேறு நகரத்திற்குச் சென்று விட்டனர். பாட்டியின் வளர்ப்பின் போது பாட்டியின் தொன்மக்கதைகள் அவரை  மிகவும் பாதித்தன.அங்கிருந்த ஊழல் அரசியலை எதிர்த்துக் குரல் கொடுத்த ஜார்ஜ் எலீசர் கெய்டன் முந்திய பல படுகொலைகள் பற்றி விசாரணை செய்ய தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.  மிதவாதக்கட்சியில் பிளவு ஏற்படுத்தும் அளவு வளர்ந்தார்.  ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பழமைவாதிகளின் அச்சுறுத்தல் மீறி மதவாதிகள் ஆட்சிக்கு வருகிறார்கள். கெய்டன் கொலை செய்த பின் நடந்த தொடர்ந்த வன்முறை,  மூவாயிரம் பேர் இறந்திருக்கிறார்கள்.  இரண்டு கட்சிகளும் கொரில்லா படைகளைத் தயார் செய்து குழப்பம் விளைவித்தனர். பத்து லட்சம்  விவசாயிகள் வெனிசூலாவுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.  மிதவாதிகள்  கொல்லப்பட்டனர்.  கொலம்பியா துண்டாடப்பட்ட காலத்தில் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்ட வன்முறையும் காப்ரியலை மிகவும் பாதித்து அவரின் படைப்புகளில் அதன் தாக்கத்தை உண்டு பண்ணியது.

    சாவு, பிறப்பு, சுயபிரக்ஞையற்ற வாழ்வு, துன்பங்கள், சடங்குகளின் ஆதிக்கம்,புதிய பெயர்களிலும் புதிய சடங்குளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது, தங்களின் பூர்வ அடையாளங்களைக் கண்டு கொள்வது என்று  நகர்கிறது. காலம்  முடிந்து போனதிற்கும் ., நிகழ் காலத்திற்குமாக அலைக்கழிகிறது,அடிமைத்தனத்தின் கோரமும், காலனிய ஆதிக்க வன்முறையும் அலைக்கழிப்பும் மாந்திரீக அம்சங்களோடு சொல்லப்படும் போது யதார்த்தத்தை மீறிய வலிமை சேர்கிறது. தமிழ்க் கலாச்சார சூழலில் பல அம்சங்களைப் பொருத்திப் பார்க்கவும் இயல்பாக அமைந்திருக்கிறது, இன்றைய இந்தியச் சூழலின் அரசியல் கலாச்சார பொருளாதார அம்சங்களை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவலின் பல அம்சங்கள் கோடிடுவது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழிபெயர்ப்பு வெகு சிரத்தையுடன் செய்யப்பட்டிருப்பதை ஆங்கில மொழிபெயர்ப்பின் சிக்கல் சொற்றொடர்களை ஒப்பிட்டு கண்டு கொள்ள முடியும் வறக்காப்பி முதல் பாஷாணம் வரையிலான பல சொற்களின் பிரயோகங்கள் மொழிபெயர்ப்பின் இயல்புத்தன்மையை வளப்படுத்துகிறது. உதிரி உதிரியாக மார்க்கேஷின்  படைப்புகள் தமிழில் கிடைத்து வந்த சூழலில்  ஒரு முழு நாவல் வெளியிடப்பட்டிருப்பது மொழிபெயர்ப்பின் மூலம் தமிழ்வாசகன் சென்றடையும் அதிக பட்ச வாசிப்பு சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது.

    ( தனிமையின் நூறு ஆண்டுகள் : காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் நாவல்,  பக்கங்கள் 406 ;ரூ 350 : வெளியிடு : காலச்சுவடு , நாகர்கோவில் )

     

    சுப்ரபாரதிமணியன்.,

    8/2635 பாண்டியன் நகர்.,

    திருப்பூர் 641 602.

    9486101003

    Share