Tag: மகளிர் தினம்

  • யார் அந்த முயல் குட்டி | மரகதம் கண்டன உரை

    மே 17 இயக்கத்தின் சார்பில் மகளிர் நாள் பொதுக்கூட்டம், 01.04.2023 அன்று சென்னை, தாம்பரத்தில் நடைபெற்றது. இதில், ‘பெண்களைத் திசைதிருப்பும் பார்வைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்’ என்ற தலைப்பில் மரகதம் ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இப்படியா பெண்களைக் காட்டுவது? – அபிராமி உரை

    இப்படியா பெண்களைக் காட்டுவது? – அபிராமி உரை

    மே 17 இயக்கத்தின் சார்பில் மகளிர் நாள் பொதுக்கூட்டம், 01.04.2023 அன்று சென்னை, தாம்பரத்தில் நடைபெற்றது. இதில், காட்சி ஊடகங்களில் பெண்களைக் காட்சிப்படுத்தும் விதம் என்ற தலைப்பில் திரைப்பட உதவி இயக்குநர் அபிராமி ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பனையோலை கிலுகிலுப்பை

    பனையோலை கிலுகிலுப்பை

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் பனையோலைக் கலைப்பொருள்களைச் செய்து விற்று வருகிறார், செல்வி. கைவினைப் பொருள்களை அடுத்தடுத்துச் செய்துகொண்டிருந்த அவருடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெண்கள் பெறவேண்டிய நிதியறிவு

    பெண்கள் பெறவேண்டிய நிதியறிவு

    சகலகலாவல்லியாகச் சகல துறைகளிலும் வாகை சூடுவோர் பெண்கள். நிதி விஷயங்களிலும் அவர்கள் போதிய கவனம் செலுத்தினால், பெரும் வல்லமை பெற முடியும். பெண்கள் பெறவேண்டிய நிதியறிவு குறித்து, அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்களுக்குத் தெரிந்த பெண்களுடன் பகிருங்கள். மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • களிமண் பொம்மைக் கலைஞர் திலகா நேர்காணல்

    களிமண் பொம்மைக் கலைஞர் திலகா நேர்காணல்

    காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெரு, பொம்மைகளுக்குப் புகழ்பெற்றது. இங்கே வசிக்கும் திலகா, விதவிதமான களிமண் பொம்மைகளை அழகுற உருவாக்கி வருகிறார். இவரது கைவண்ணத்தில் களிமண் பொம்மைகள் எப்படி உருவாகின்றன என்பதை இந்தப் பதிவில் பாருங்கள். இந்த மகளிர் தினத்தில் இதை வெளியிடுவதில் மகிழ்கிறோம். பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உலகம் அளந்து பார்க்காத ஆழம், பெண்மை!

    -விவேக்பாரதி

    பெண்மை என்பதோர் ஆயுதம் – நம்
    பெருமை அளந்திடும் சீதனம்
    பெண்மை என்பதோர் பூவனம் – அது
    பேண வேண்டிய தோர்வளம்!
    பெண்மை காப்பதே நம்கடன் – அப்
    பேறு வாய்ப்பதே தெய்வதம்
    பெண்மை வாழ்கெனப் பாடுவோம் – எந்தப்
    பெண்ணைக் கண்டாலும் போற்றுவோம்!

    ஆணின் பலமெலாம் ஊனிடம் – பெரும்
    ஆன்ம பலமெலாம் பெண்ணிடம்
    காண வேண்டிய கீர்த்திகள் – நம்
    காரி கைவசம் பூர்த்திகள்
    பேணும் நல்லறம் பெண்ணிடம் – பல
    போரும் அமைதியும் பெண்ணிடம்
    தூணைப் போலதைக் காத்துதான் – எதிர்
    தோன்றும் போதெலாம் வாழ்த்துவோம்!

    வானின் மாமழை தாய்க்குணம் – அலை
    வண்ணக் கடலும் காதல்மனம்
    சேனை ஆயிரம் ரௌத்திரம் – பல
    செழுமை பெண்கொளும் பூரணம்!
    ஞானம் அவர்சொலும் போதனை – அவர்
    நாமம் தேன்வரும் கீர்த்தனை
    தானு ணர்ந்திதை ஏத்துவோம் – பெருந்
    தண்மை பெண்களைப் போற்றுவோம்!!

    Share