Blog

  • புற்றுநோய்க்கு இதோ மருந்து | இரண்டே மாதத்தில் குணம் தெரியும்

    புற்றுநோய்க்கு இதோ மருந்து | இரண்டே மாதத்தில் குணம் தெரியும்

    சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் சங்கர நாராயணன், தம் அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவக் குறிப்புகளை வழங்கி வருகிறார். இன்றைய நம் உரையாடலில், புற்றுநோயைத் தீர்க்கும் வீரியம் உள்ள மருந்தினைப் பரிந்துரைத்துள்ளார். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தம் மனைவிக்கு இந்த மருந்தினைக் கொடுத்துள்ளார். இரண்டே மாதத்தில் மனைவியின் புற்றுநோய்க் கட்டி கரைந்து மறைந்துள்ளது. தமது அனுபவங்களை பலரும் பயன் பெறுவதற்காக, நம்முடன் பகிர்ந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் போராடுகின்ற ஒவ்வொருவரும் இதை முயன்று பாருங்கள். உங்களுக்கு எத்தகைய குணம் கிடைத்தது என்று எழுதுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சூடான சாக்லேட் பானம் | உலக சாக்லேட் தினம்

    சூடான சாக்லேட் பானம் | உலக சாக்லேட் தினம்

    இன்று உலக சாக்லேட் தினம். அண்மையில் கொடைக்கானல் சென்றபோது, அங்கே லிஸ்க் சாக்லேட்டல் என்ற சாக்லேட் தொழிற்சாலைக்குச் சென்றோம். அங்கே சூடான சாக்லேட் பானத்தை அருந்தினோம். இதை அவர்கள் தயாரிப்பது எப்படி? இந்த சாக்லேட் தினத்தில் இதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அடுக்குமாடிகளில் வாஸ்து அமைப்பது எப்படி?

    இன்று அனைத்து அடுக்குமாடிகளுமே வாஸ்து முறையில் கட்டப்பட்டவை (Vastu compliant) என அறிவிக்கிறார்கள். அடுக்குமாடிகளில் வாஸ்து அமைப்பது எப்படி? இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? 100 சதம் வாஸ்து என்பது நடைமுறைச் சாத்தியமா? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பதில் அளிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னியோங்கு 7 & 8 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    சென்னியோங்கு 7 & 8 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். இதன் ஏழாம், எட்டாம் பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள். இந்த நாள் இனிய நாள். இக்கணம் பொற்கணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணனுக்குப் பாராட்டு

    அண்ணாகண்ணனுக்குப் பாராட்டு

    அண்ணாகண்ணனின் படப்பதிவு, யூட்யூப், காட்சி ஊடகப் பணிகளைப் பாராட்டி, குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தில் சால்வை அணிவித்துக் கெளரவித்தார்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கனடா வரவேற்கும் 6 வகை வல்லுனர்கள்

    கனடா வரவேற்கும் 6 வகை வல்லுனர்கள்

    கனடாவின் நிரந்தர வசிப்புரிமைக்கு விண்ணப்பிக்க, புதிதாக ஆறு வகை வல்லுனர்களைக் கனடா வரவேற்கிறது. இவை என்னென்ன துறைகள்? யார் யார் விண்ணப்பிக்கலாம்? இதற்கான தகுதிகள், நடைமுறைகள் என்னென்ன? இது குறித்து, கேனெக்ஸ்ட் குடியேற்ற நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மணிப்பூர் கலவரம் | ரூபி ஆர்.மனோகரன் கண்டன உரை

    மணிப்பூர் கலவரம் | ரூபி ஆர்.மனோகரன் கண்டன உரை

    மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன் நிகழ்த்திய கண்டன உரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மணிப்பூர் கலவரம் | வன்னி அரசு கண்டன உரை

    மணிப்பூர் கலவரம் | வன்னி அரசு கண்டன உரை

    மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு நிகழ்த்திய கண்டன உரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மணிப்பூர் கலவரம் | தாம்பரம் யாக்கூப் கண்டன உரை

    மணிப்பூர் கலவரம் | தாம்பரம் யாக்கூப் கண்டன உரை

    மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் நிகழ்த்திய கண்டன உரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மணிப்பூர் கலவரம் | தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கண்டன உரை

    மணிப்பூர் கலவரம் | தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கண்டன உரை

    மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நிகழ்த்திய கண்டன உரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மணிப்பூர் கலவரம் | ஆயர் பவுன் சங்கீதா கண்டன உரை

    மணிப்பூர் கலவரம் | ஆயர் பவுன் சங்கீதா கண்டன உரை

    மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஆயர், அருட்சகோதரி பவுன் சங்கீதா கண்டன உரை நிகழ்த்தினார். பெரும் தலைவருக்கு உரிய உடல்மொழியுடன் இவரது பேச்சு அமைந்திருந்தது. இவரது ஆவேசப் பேச்சு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • H1B விசா உள்ளவர்களுக்கு ஜாக்பாட்

    H1B விசா உள்ளவர்களுக்கு ஜாக்பாட்

    அமெரிக்காவில் எச்1பி (H1B) விசா உள்ளவர்களுக்கு, கனடா சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகள் எந்த நிறுவனத்திலும் பணியாற்றலாம் என்ற சுதந்திரமான பணி அனுமதியை வழங்குகின்றது. அமெரிக்கக் குடியுரிமைக்காக நீண்ட காலமாகக் காத்திருக்கும் திறமைசாலிகளைத் தன் பக்கம் இழுக்கின்றது. எச்1பி (H1B) விசா உள்ளவர்களின் துணைவரும் கனடாவில் பணியாற்றலாம் என்பது அடுத்த அதிரடி. இது குறித்து, கேனெக்ஸ்ட் குடியேற்ற நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(458)

    குறளின் கதிர்களாய்…(458)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(458)

    அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்
    வகையறியார் வல்லதூஉ மில்.

    -திருக்குறள் -713(அவையறிதல்)

    புதுக் கவிதையில்…

    அவையின் தன்மையை
    அறியாமல் அங்கு
    சொல்லுதலை மேற்கொள்பவர்
    சொல்லின் வகையினை
    அறியாதவர்,
    அதோடு
    அவர் கற்றுத்தேர்ந்த கல்வியும்
    அவர்க்கில்லை…!

    குறும்பாவில்…

    பேசும் அவையின் இயல்பறியாமல்
    பேசத் தொடங்குபவர் சொல்லின் வகையறியாதவர்,
    அவர்கற்ற கல்வியும் அவர்க்கில்லை…!

    மரபுக் கவிதையில்…

    அவையின் இயல்பை அறியாமல்
    அங்கே பேசத் தொடங்குபவர்
    அவையில் சொல்லும் சொல்வகையை
    அறவே அறியா இயல்பினராம்,
    இவையோ டவரும் இவ்வுலகில்
    இயல்பாய்க் கற்றுத் தேர்ந்திட்ட
    தவறாக் கல்வி தானதுவும்
    தனக்கா யிலையென் றாகிடுமே…!

    லிமரைக்கூ…

    அறியாமல் அவையின் எல்லை
    அங்கு பேசுவோர் அறியார் சொல்வகையே,
    கற்ற கல்வியுமவர்க் கில்லை…!

    கிராமிய பாணியில்…

    பேசணும் பேசணும்
    நல்லா அறிஞ்சி பேசணும்,
    பேசுற சபய
    அறிஞ்சி பேசணும்..

    சபயோட தன்மய அறியாம
    அங்க பேசுறவருக்கு
    சொல்லுற சொல்லோட
    வகயே தெரியாது,
    அவுரு படிச்சறிஞ்ச
    படிப்பும்
    அவுருக்கில்ல..

    அதால
    பேசணும் பேசணும்
    நல்லா அறிஞ்சி பேசணும்,
    பேசுற சபய
    அறிஞ்சி பேசணும்…!

    Share
  • குரு பிரம்மா குரு விஷ்ணு

    குரு பிரம்மா குரு விஷ்ணு

    இந்தக் குரு பூர்ணிமா நன்னாளில், ‘குரு பிரம்மா குரு விஷ்ணு’ என்ற குருவந்தனப் பாடலை வைஜெயந்தி குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 14

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 14

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா

    Share