H1B விசா உள்ளவர்களுக்கு ஜாக்பாட்
அமெரிக்காவில் எச்1பி (H1B) விசா உள்ளவர்களுக்கு, கனடா சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகள் எந்த நிறுவனத்திலும் பணியாற்றலாம் என்ற சுதந்திரமான பணி அனுமதியை வழங்குகின்றது. அமெரிக்கக் குடியுரிமைக்காக நீண்ட காலமாகக் காத்திருக்கும் திறமைசாலிகளைத் தன் பக்கம் இழுக்கின்றது. எச்1பி (H1B) விசா உள்ளவர்களின் துணைவரும் கனடாவில் பணியாற்றலாம் என்பது அடுத்த அதிரடி. இது குறித்து, கேனெக்ஸ்ட் குடியேற்ற நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)