இந்த ஆண்டின் கோலாகலக் கணுப் பொங்கல் கொண்டாட்டம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

இந்த ஆண்டின் கோலாகலக் கணுப் பொங்கல் கொண்டாட்டம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சி. ஜெயபாரதன், கனடா
பொங்கல் வைப்போம்
அறுவடைப்
பொங்கல் வைப்போம்
நறுமணப்
பொங்கல் வைப்போம்
வீட்டு வாசலில்
மாட்டுப்
பொங்கல் வைப்போம்
முன் வாசலில்
கோலமிட்டு, பெண்டிர்
கும்மி அடித்து
தோரணப் பந்தலிட்டு
சீராய்ப்
பால் பொங்கல் வைப்போம் !
புத்தாடை அணிந்து
பூரிப்பாய்
பொங்கல் வைப்போம்.
பொழுது புலர்ந்ததும்
வெய்யோன் விழித்ததும்
வெண் பொங்கல் வைப்போம்.
கூட்டாகத் தமிழர்
கொண்டாடும் அறுவடைத் திருவிழா
கோலகல மாகப்
பொங்கலோ பொங்கல் என்று
மங்கையர் பாடிக்
கோலடித்து
பொங்கல் வைப்போம்.
தைப் பொங்கல் வைப்போம்.

‘மாடு மேய்க்கும் கண்ணே’ பாடலை நாகி நாராயணன் குரலில் கேட்டுக்கொண்டே மாட்டுப் பொங்கல் கோலங்களின் அணிவகுப்பை அனுபவிக்க வாருங்கள்.
படப்பதிவு – இயேகாம்பரம்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பொங்கல் பண்டிகை அன்று, தமிழக வீதிகளை அலங்கரித்த விதவிதமான, வண்ணமயமான, தூள்கிளப்பிய கோலங்களின் அணிவகுப்பு இதோ. கண்டு மகிழுங்கள்.
வல்லமை அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

நிர்மலா ராகவன்
நமக்குப் பலரைத் தெரிந்திருக்கலாம். அவர்களில் எத்தனைப் பேர் நம்மைப் புரிந்துகொள்கிறார்கள்?
நாம்தான் அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்கிறோமா?
அனேகமாக எல்லா மனிதர்களும் தம்மை ஒத்தவர்களை மட்டும்தான் ஏற்பார்கள். மற்றவர்களெல்லாம் முட்டாள், அல்லது அசடு என்று நம்புவார்கள்.
மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்துவிடுவார்களோ என்று அஞ்சி, முந்திக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.
சில நிமிடங்களோ, வாரங்களோ மட்டுமே ஒருவருடன் பழகினால் அவரைப் புரிந்துகொள்ள முடியுமா?
புரிந்துகொள்ள முடியாததால்தான் ஏளனம்.
கதை
என் சக ஆசிரியை ரொஜிதா (ROZITA) பதின்ம வயது மாணவர்களை, `இந்தக் குரங்குகள்’ என்றுதான் குறிப்பிடுவாள்.
பொறுக்க முடியாது, ஒருமுறை, “உன் குழந்தைகளை `குரங்கு’ என்று சொல்வாயோ?” என்று கேட்டுவிட்டேன்.
“சேச்சே!” என்றாள், சிரித்தபடி.
அவளைப்போல், `நான்’, `எனது’ என்றே யோசித்தால், `நம்’ என்பது புரியாமல் போய்விடும்.
பிறர் நிலையில் நம்மைப் பொருத்திக்கொள்வது
பிறரைக் குறை கூறுவதற்கு முன், நமக்கு வாய்த்த நல்வாழ்க்கை அவர்களுக்கும் அமைந்திருக்குமா என்று சற்று யோசித்தால் அவர்களது நடத்தைக்குக் காரணம் புரியும்.
பதின்ம வயதிற்கே உரிய குணம் எல்லாவற்றிற்கும் சிரிப்பது.
வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வந்த மாணவர்கள், வீட்டில் அன்பு கிடைக்காதபோது, தம்மையொத்த பிற மாணவர்களுடன் பழக நேர்ந்தால் அவர்களுக்குக் கூடுதலான மகிழ்ச்சி.
ரொஜிதாவுக்கு அது புரியவில்லை.
கதை
ஒரு மாணவன் எதற்கும் அடங்கவில்லை.
அவன் தாயைச் சந்தித்தபோது, “கொஞ்சங்கூட மரியாதை இல்லாமல் பேசுகிறான்,” என்று புகார் செய்தேன்.
அவள் பெருமூச்சுடன், “வீட்டிலும் அப்படித்தான்!” என்றாள்.
எங்கு, எப்போது தவறு நேர்ந்திருக்கும்?
இத்தகைய பெற்றொர், சிறு குழந்தைகளைத் திட்டக் கூடாது, அவர்கள் மனம் நோக எதையும் செய்யவும் கூடாது, அவமானம் அடைந்துவிடுவார்கள் என்று நம்பி வளர்க்கிறார்கள்.
நினைவு தெரிந்த நாளிலிருந்து தான்தோன்றித்தனமாக எதையும் செய்து பழகியவன், திடீரென்று பதின்ம வயதில் கண்டிப்பை ஏற்பானா?
இன்னொரு கதை
வகுப்பில் கீழ்ப்படியாமல், படிப்பிலும் கவனம் செலுத்தாது இருந்த மாணவர்களுள் ஆதாமும் ஒருவன். ஆனால் பரீட்சையில் பௌதிகப் பாடத்திலிருந்த, கஷ்டமான கணக்குகளைச் சரியாகப் போட்டிருந்தான்.
எனக்குச் சந்தேகம் வந்தது. “என்னெதிரில் இப்போது போட்டுக் காண்பி!” என்றேன்.
சற்றும் யோசியாது, சில வினாடிகளிலேயே முடித்தான்.
மகா புத்திசாலி. ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறான் என்று புரிந்தது.
வகுப்பு முடிந்ததும் என்னுடைய அறையில், சில நண்பர்களுடன் வந்து, என்னைச் சந்திக்குமாறு ஆதாமிடம் கூறினேன்.
எடுத்த எடுப்பிலேயே, “உன் அப்பா உங்களுடன் இருக்கிறாரா?” என்று கேட்டேன்.
“அப்பப்போ,” என்றான், அடக்கிய குரலில்.
“உன் நண்பர்கள் எதிரில் இதைப் பற்றிப் பேசலாமா?” என்று கேட்டுக்கொண்டேன்.
`அதனால் என்ன! நாங்கள் பார்க்காததா!’ என்பதுபோல் அவர்கள் கையை மேலும் கீழும் ஆட்டினார்கள், அலட்சியமாக.
தந்தை வேறு பெண் துணைகளுடன் இருக்கும்போது ஆண்குழந்தைகள்தாம் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
தாயின் தனிமையை, வருத்தத்தை நம்மால் போக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி வேறு.
இவனைப்போல் எத்தனை மாணவர்களைப் பார்த்திருப்பேன்!
அவர்களிடம், “உன் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே இருக்கும் பிரச்னை இது. நீ வீணாகக் குழம்பாமல், உன் எதிர்காலத்தைப் பற்றி யோசி,” என்று பலவாறாக எடுத்துக் கூறுவேன்.
அதற்குப் பின், நான் `எள்’ என்றால் எண்ணெய்தான்!
ஆசிரியர்களும் பிறரைப் புரிந்துகொள்ளும் தன்மையும்
பயிற்சிக் காலத்தில், ஆசிரியர்கள் உளவியல், சமூக இயல் ஆகியவற்றையும் கற்கிறார்கள்.
உதாரணம்: வசதி நிறைந்த குடும்பத்திலிருந்து வந்த மாணவன், சுய முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டு, நல்ல விதமாக நடப்பான்.
படிப்பறிவற்ற பெற்றோர்களின் குழந்தைகளுக்கு எவ்வாறு கல்வியில் நாட்டம் பிறக்கும்? அதற்காக, அவர்களைத் துச்சமாக நினைத்துவிடலாமா?
பரீட்சையில் தேர்ச்சி பெறும் அளவுக்கு இவை புரிந்தால் போதும் என்ற மனப்பான்மை பெரும்பாலான, எதிர்கால ஆசிரியர்களுக்கு. ஆகையால், செயலில் கொண்டுவர முனைவதில்லை. அவர்களுடைய பின்னணி, கல்விக்கூடங்கள் ஆகியவையும் குறுக்கே வர, கற்றது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகப் போய்விடுகிறது.
அப்படியிருக்க, மாணவர்களை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?
தத்தம் கண்ணோட்டத்திலிருந்து பிறரை எடைபோடுவது அநேகமாக தவறான முடிவாகத்தான் இருக்கும்.
கதை
“அந்தப் பெண்ணை விரும்பி மணந்தானா! அவன் எவ்வளவு புத்திசாலி! அவளோ, மக்காக இருக்கிறாளே!”
கல்வித் திறனிலும், உத்தியோகத்திலும் உயர்ந்தவன் அவன்.
`நான் நிறையப் படித்து, பெரிய உத்தியோகத்திலும் அமர்ந்து, சாதித்துக்கொண்டே இருக்கவேண்டும்!’ என்ற கொள்கை கொண்ட பெண்கள் தனக்குச் சரிப்படாது என்று அவனுக்குத் தோன்றியது. அவர்களால் தனது பெரிய குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா என்ற கேள்வி எழ, குடும்பப் பாங்கான பெண்ணை மணந்தான்.
மணவாழ்க்கையும் சுமுகமாக இருந்தது.
அவனுக்குத் தன் மனம் புரிந்திருந்தது. அதனால் பிறரையும் புரிந்துகொள்ள முடிந்தது.
ஏன் சிலரைப் பிடித்துப் போகிறது?
`அவர் என்னைப் புரிந்துகொள்கிறார்!’ என்ற உணர்வு எழும்போது நிறைவாக இருக்கும்.
அப்படிப்பட்டவர் குறைகளே இல்லாதவர் என்று அர்த்தமில்லை. ஆனால், குறைநிறைகளுடன் தன்னை ஏற்றுக்கொண்டவர். அதனால், பிறருடைய குறைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்கும் முதிர்ச்சியை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களைப்போல் அல்லாதவர்கள் அவர்கள் மனத்தை நோகடித்தாலும், ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று புரியும். `பழிக்குப் பழி’ என்று வீம்பு இருக்காது.
எப்படிப் புரிந்துகொள்வது?
பொதுவாக, பிறர் பேசும்போது, தான் எங்கு, எப்படி குறுக்கிடலாம் என்று காத்திருப்பதுதான் பலருக்கு வழக்கம். இது இயற்கை.
அப்படியின்றி, ஒருவர் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டால், ஓரளவு புரிந்துகொள்ள முடியும். சிலரது புன்னகைக்குப் பின்னால் வருத்தம் இருக்கலாம். அன்பு கோபமாக வெளிப்படலாம்.
பலபேர் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், ஒருவர் மட்டும் மற்றவரது முகபாவம், பயன்படுத்தும் வார்த்தைகள் போன்றவற்றை மௌனமாகக் கவனித்துக்கொண்டிருப்பார். இவர் பிறரைப் புரிந்துகொள்ளும் அறிவாளி.
அது புரியாது, `கர்வி,’ அல்லது, `பழகத் தெரியாதவன்’ என்று பட்டம் சூட்டிவிடுவார்கள்.
தம்பதியருக்கு ஒரே மனமா?
புதிதாக மணமானவர்கள் முதலில் பேசிக்கொள்வது: `நமக்குள் ரகசியமே இருக்கக் கூடாது. அப்போதுதான் நாம் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்”.
இரண்டுமே தவறான எதிர்பார்ப்புகள்.
`நான் திருமணத்திற்கு முன்பே பலருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன்!’ என்று அவர்களுள் ஒருவர் கூறினாலும், மற்றவரின் பொறாமையையும், `இப்போது மட்டும் ஒழுக்கமாக இருந்துவிடுவாயோ?’ என்ற சந்தேகத்தையும்தான் தூண்டிவிடுகிறார்.
நம்மைப் பற்றி நாமே எவ்வளவுதான் விளக்கினாலும், பிறர் நம்மைப் புரிந்துகொள்ள முடியாது.
பிறர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று யோசித்தே நடப்பதால், பலரும் உண்மையாக நடப்பதுமில்லை.
கதை
நீண்ட காலம் தாம்பத்தியத்தில் ஈடுபட்டிருந்த முதியவர்களைக் கண்டு, அதிசயப்பட்டுக் கேட்டார்கள்: “உங்களுக்குள் சண்டையே வந்தது கிடையாதா? அப்படி ஒரு புரிந்துணர்வா!”
அதற்கான பதில்: “என்னிடம் மட்டும் குறையே கிடையாதா, என்ன! கணவருடைய (மனைவியின்) குறைகளைப் பெரிதுபடுத்துவானேன்! ஏதாவது கெட்டுப் போயிருந்தால், அதைச் சரிசெய்து, பயன்படுத்தும் தலைமுறை எங்களுடையது!”

முனைவர் ச.சுப்பிரமணியன்
முன்னுரை
முதல் மரியாதை’ படத்தைப் பற்றிக் கவிஞர் வைரமுத்து கூறுகையில் ‘தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்தற்குள் நடந்துபோன திருப்தி எனக்கு’ என்று நந்தவனத்தில் நடைபயின்று அனுபவித்த இன்பத்தை உவமமாக்கிப் பார்த்துக் களித்த படத்தைப் பொருளாக்குவார். நான் அந்த நந்தவனத்தையே பொருளாக்குகிறேன். வைரமுத்துக்கு நந்தவனமாக இருந்தது கவிஞர் அந்தோணிசாமிக்குச் சோலையாகியிருக்கிறது. நந்தவனம் வடநூல் வழக்கு. சோலை தமிழ்வழக்கு. பழமுதிர்ச்சோலை, திருமாலிருஞ்சோலை, திருவளர்சோலை, என்பன போல! படத்தின் பன்முகச் சுவையை அனுபவித்த வைரமுத்து பல்வகை தருக்கள நிரம்பிய சோலை நிழலின் குளிர்சசியோடு ஒப்பிட்டார். கவிதைப் பூக்கள் பூத்திருக்கும் இந்தச் சோலைக்கு இதற்கு முந்தைய கட்டுரையின் பொருளான கவிதை ஊருணியைத்தான் உவமமாக்க வேண்டியிருக்கும். ‘கவிதை ஊருணி’ என்னும் நூல் தணிக்கையாளர் திரு தணடபாணி அவர்களால் எழுதப்பட்டது எனின், தமிழக்கவிதைகளால் நிரம்பியிருக்கும் இந்த நூல் ஆங்கிலப் பேராசிரியர் ஒருவரால் எழுதப்பட்டதாகும். சுவையுணர்விலும் திறனாய்விலும் எந்த நிலையிலும் சமரசம் செய்துகொள்வதை விரும்பாத நான் இந்த நூலின் கவிதைகளால் கவரப்பட்ட பாங்கினை இந்தக் கட்டுரை வழியாகச் சுருக்கமாக பந்தி வைக்க முயல்கிறேன்!.
தமிழ் இலக்கியமும் பிறதுறை அன்பர்களும்
இலக்கியப் புலமை என்பது வேறு இலக்கிய ஆர்வம் என்பது வேறு. இவையிரண்டும் வேறுபட்டனவேயன்றி முரண்பட்டவை அல்ல. ஒரு மொழியில் புலமை என்பது அம்மொழிச் செவ்விலக்கியங்களில் ஆழங்கால்படுவதும் இலக்கணத்தில் மீயுயர் புலமை பெறுவதுமாகும். வாகீச கலாநிதி, அறிஞர் மு.வ. முதலியோர் இந்த நிரலில் வருவர். இலக்கிய ஆர்வம் காரணமாகத் தமிழின் பல்வகை இலக்கியங்களைத் தாமே கற்று அவற்றின் நுண்ணியம் தேர்ந்து சுவைத்துப் பிறருக்கும் பரிமாறுபவர்கள் சிலர். சிலம்புச் செல்வர், கலைஞர், ஜீவா கண்ணதாசன், வாலி முதலியோர் ,இந்த நிரலில் அடங்குவர். இவர்களுடைய தமிழார்வமும் உணர்ச்சியும் புலமையினும் சிறந்தது. இந்தக் குழுவில் பிறதுறை அன்பர்களும் பிறமொழிப் பேராசிரியர்களும் சில நேர்வுகளில் ஒளிர்வதுண்டு. தூத்துக்குடி பேராசிரியர் அ.சீனிவாசராகவன், மதுரை எஸ்.இராமகிருஷ்ணன் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் கா. செல்லப்பன் முதலியோர் .இதில் வருவர். கா.நமசிவாய முதலியார், ஆய்வறிஞர் வையாபுரிபிள்ளை, பல்கலைச்செல்வர் ;தெ.பொமீ முதலிய அறிஞர்கள் வழக்கறிஞராய் இருந்து தமிழ்வளர்த்த செம்மல்கள். அந்த நிரலில் வந்திருப்பவர்தான் நல்லாசிரியர் திரு. அந்தோணிசாமி அவர்கள். ஆங்கிலத்தில் முதுகலைப் படடம் பெற்று அத்துறை ஆசிரியராகப் பணியாற்றித் தமிழில் கவிதை யாக்கும் அளவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
படைப்பாளரும் படைப்பும்
ஆங்கிலத்தில் ஒன்றும் தெரியாமல் முற்றும் கற்றவர்போல் போலித் தகுதியைத் தாமே கற்பித்துக் கொள்பவர் ஒருபுறம் தமிழில் பட்டம் பெற்றிருந்தும் ‘எனக்கு ‘ஆங்கிலத்தைப்போல் தமிழ் வராது’ என்று தம்மையே ஏமாற்றிக் கொள்ளும் இரண்டுங்கெட்டான்கள் இன்னொரு புறம்! சுருங்கச் சொன்னால் ஆங்கிலத்தை அறிந்தாலேயே ஆண்டவனை அறிந்தது போன்ற மயக்கம் நிலவுகிற ஒரு போலிச் சமுதாயக் கட்டமைப்பு இது. இந்தக் கட்டமைப்பில் ஆங்கிலத்தை முறையாகக் கற்று அத்துறையில் கல்விப் பணியாற்றிவரும் ஆசிரியர் ஒருவர் தமிழைப் படிப்பது என்பது முதல் நிலை! அதில் உரைநடை இலக்கியங்களைப் படைப்பது இரண்டாவது நிலை! கவிதைகளைப் படித்துப் புரிநது கொள்வது மூன்றாவது நிலை! அதில் கவிதை படைப்பது நான்காவது நிலை! ஆங்கில ஆசிரியர் திரு அந்தோணிசாமி அந்த நிலையை அடைந்திருக்கிறார்! நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்! சமுதாயத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டுன் என்ற அவர்தம் துடிப்பைத் தாமறிந்துணர்ந்த ஆங்கிலத்தில் வெளிப்படுத்தாமல் தாய்மொழி தமிழில் வெளிப்படுத்தயிருப்பதே ‘கவிதைச் சோலை’ பிறரை ஈரக்கின்ற தலையாய காரணியாக அமைந்துவிடுகிறது.
சான்றோர்களை மதிக்கின்ற மரபு!
பணிவும் இன்சொல்லும் தனிமனிதனுக்கே பெருமை தருவதெனின் கவிஞனுக்குச் சொல்ல வேண்டியதில்லை. நல்ல மனிதனாக இல்லாத எவனும் நல்ல கவிஞனாக ஒளிர இயலாது.. கள்ளமில்லாத வெள்ளை உள்ளமே கண்ணதாசனின கவிதை மூலதனம். முரண்பட்ட தத்துவங்களோடு அவர் உறவு வைத்துக் கொண்டாடினார். எந்தச் சூழலில் எந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தாரோ அந்த நேரத்தில் அந்தக் கொள்கைக்கு நம்பிக்கையானவராக அவர் இருந்தார். அந்த உள்ளம் தன்னல மறுப்புக்கு வழிகாட்டும். காட்டவே அனைவரையும் மதிக்கச் சொல்லும். கவிஞர் அந்தோணிசாமி தன்னைச் சூழ்ந்திருப்பவர்களையும் தன் சமுதாய முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட தலைவர்களையும் பாடி மகிழ்கிறார். சுருங்கச் சொன்னால் பாடாண் திணை பாடாத கவிஞனை நாம் எளிதில் எடைபோட்டு விடலாம்.
அந்தோணிசாமி பார்வையில் பெரியார்
பெரியாரின் போராட்டக்களம் உலகளவில் சற்று வேறுபட்டது. மககளால் பல்லாயிரம் ஆண்டுகளாக ஒப்புக்கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டு வந்த வேர் பிடித்த மரபுகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த பெருமை அவருக்கு உண்டு. அந்த விசாரணைக் கூண்டில் குற்றம் சாட்டப்பட்டவற்றுள் சாதியமும் ஒன்று
“சாதிவெறி பரப்பியதால் சாதித்த கூட்டத்தில்
சாதியத்தை வேரறுத்துச சமதர்மம் படைத்திடவே
பாதித்த மக்களிடம் பாசமுடன பகுத்தறிவைப
வதத்தால் வளர்த்தாரே இறுதிவரை பெரியாரே!
என்று பாடுகிறார். பெரியாரின் எல்லாக் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எலலாக் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகக் கருத்துக்களைக் கூறிய மகான் இது வரை பிறக்கவில்லை. ஒருவன் தான் தனிப்பட்ட முறையிலும் சமுதாய அளவில் பிறருடைய பார்வையில் மதிக்கப்படுவதற்கும் முன்னேற்றமடைவதற்கும் காரணமாயிருந்தவரை அடையாளம் காண்பதும் அவரை வணங்குவதும் மானுட இயல்பு. இங்கே இராமனைப் பாடிய கம்பரும் கவிஞர்தான். சிவனைப் பாடிய சேக்கிழாரும் புலவர்தாம். இருவர் கொள்கைகளையும் ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு எறறுக் கொள்ளப்படாததால் அவர்கள் குறையுடையவர்கள் என்றோ கறைபடிந்தவர்கள் என்நோ தரமதிப்பீடு செய்யும் தகுதி நம்மில் யாருக்கும் இல்லை. பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் பரவியிருந்திருக்காவிட்டால் கைம்மைத் துன்பததைப் போக்கியிருக்க முடியாது. பெண்கள் தங்களைப் புரிந்து கொண்டிருக்க முடியாது. மனித நேயத்தின் மாண்பினை நாம் உணர்நதிருக்க முடியாது. இநத அளவிலே அந்தோணிசாமி பெரியாரைப் பாடுகிறார். பாராட்டுகிறார்.
கவிதை மதிப்பீடு
ஒரு கவிதை நூலையோ அந்த நூலில் உள்ள கவிதைகளின் தரத்தையோ அதனை எழுதிய ஆசிரியரையோ மதிப்பிடுகிறபோது அந்த நூல் முழுமையும் அருமையான கவிதைகளால் நிரம்பியிருக்க வேண்டும என்பதில்லை. எலலாக் கவிதைகளும் கவிதை மூலங்களான கற்பனை உணர்ச்சி, கருத்து வடிவம் என எல்லாக் கூறுகளிலும் செப்பம் உடையதாக இருக்க வேண்டும் என்பதில்லை. கவிஞனும் ஒரே கொள்கை சார்ந்தவனாக முரண்பாடே இல்லாதவனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும என்பதுமில்லை.காரணம் அது கவிதை. அது ஒரு பரப்புரை சாதனமன்று. அதனைப் பரப்புரையாகப் பயன்படுத்திக் கொள்வது படைப்பாளனின் தனித்திறன். கவித்துவம் நம்மை அசைத்துப் பார்த்தால் அதனைக் கவனிப்போம்! நமக்கு அறிவுரை மட்டும் கூறுவதாக இருந்தால் பழைய ஔவையாரின் ஆத்திசூடிக்குள் போய்விட மாட்டோமா? கவிதையின் ஏதாவது ஒரு கூறு நம்மை அசைத்துப் பாரத்தால் அது போதும் நமக்கு! வைக்கப்படுகிற பந்தியில் ;உட்கார்ந்து எழுந்திருப்பவரும் இருக்கிறார்கள். இலையை மார்கழி மாதத்து வானமாக்கி வழித்தெடுப்பவர்களும் இருக்கிறார்கள். அது இலைகளின் உள்ளடக்கத்தைப் பொருத்தது.
கடுகும் வேம்பும் நிறைந்த கவிதைச் சோலை
முனைப்புடைய கவிஞர் என்பாரைக் காசு நெருங்கலாம். கவிதை நெருங்காது. இரக்கம், அன்பு, மனிதநேயம், ஒப்புரவறிதல் என்னும் மனிதகுல விழுமியங்களே சாதாரண மனிதன் ஒருவனை பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. வள்ளலாரும் பாரதியும் இதற்குச் சரியான எடுத்துக்காட்டு. அவர்கள் இருவரும் மாபெரும் அருளாளர்களாயிருந்து கவிஞராய் பரிணமித்தவர்கள். அவர்கள் தேமா புளிமா கவிஞர்கள் அல்லர்! உலகியலில் நகலுக்கு; இருக்கிற மதிப்பு அசலுக்கு இருப்பதில்லை. கவர்ச்சிக்கு இருக்கிற செல்வாக்கு அடக்கத்திற்கு இல்லை
“கண்கவரும் வண்ணவண்ண விளக்கெரிய
கண்ணாடிக் கதவுகளால் கவர்ந்திழுக்க
சொன்னவிலை கொடுத்துவார்க்கும் கடைகளிலே
சொக்கிப்போய் பொருள் வாங்கும் நண்பர்களே”
என்று போலித்தனத்திற்கு மயங்கிச் செல்வாரைப் பாசத்துடன் அழைத்துப் பேசுகிற கவிஞர் என்ன சொல்கிறார்?
வீடு தேடி வருவதாலே விலை குறைத்து
விற்கத்தான் வேண்டுமென ஏதிர்பார்த்தல்
பாடுபடும் எளியோரின் வாழ்வினையே
பாதிக்கும் என்றுணர மறுப்பதேனோ?
“அஞ்ஞானத்தைத் தேடிச் சென்று அறியாமையை வாங்கிவருகிறீர்கள். வெளிசசத்துக்குள் சென்று ;இருளில் மறைகிறீர்கள்1 வீடு தேடிவரும் ஞானத்தைப் புறக்கணிக்கிறீர்கள்.” என்கிறார். பழ வணிகர்கள், பூவிற்கும தாய்மார்கள், வேர்க்கடலை விற்றுப் பிழைக்கும் முதியவர்கள் ஆகிய இவர்களிடம் பேரம் பேசுவதும் ஒருவகை சுரண்டல்தானே!
கவிதைச் சோலையில் கற்பனை மணம்
இயற்கையைப் பேணுவோம் என்று எல்லாரும் முழங்குகிறார்கள். விழித்துக் கொண்டே இருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துகிறார்கள். அவர்களும் தூங்கிக் கொண்டே நடக்கிறார்கள். இது ‘தினசரி மூன்று காட்சிகள்’ என்பது போல நடந்து கொண்டேதான் இருக்கிறது ஆற்றுநீரைச் சுரண்டுவது பற்றி அந்தோணி எழுதுகிறார்
‘ஆறுகளின் முதுகெலும்பு தண்ணீர’
இத்தகைய அழகியல் சார்ந்த வளமான கற்பனை ஆங்கில ஆசிரியர் ஒருவருக்கு வந்திருக்கிறது. முதுகெலும்பு உள்ளவனைப் பார்த்து முதுகெலும்பு இல்லாதவன் என்று சொல்லும் உலக வழக்கை நோக்கியவர்க்கு இந்தக் கற்பனையின் அழகு இன்னும் அழகு பெறும். கண் அழுவது உண்டு. காற்றுமா அழும்? அந்தோணிசாமிக்கு நீரில்லாத ஆறு நிற்க முடியாமல் படுத்துக்கிடப்பதன் காரணமாக முதுகெலும்பு இல்லாத ஆறு கற்பனை வந்திருக்கிறது! பெருவெள்ளக் கோலமே ஆறு ‘நின்ற கோலம்!’
“மணல்அள்ளித் துகிலுரித்த போதெல்லாம் செயலற்று
மண்ணாக இருந்து விட்டு
அனலிடை அகப்பட்டுத் துடிக்கின்ற புழுவாக
அவனியிலே தவிப்ப தேனோ?”
என்று அதே பாட்டில் அவருடைய மற்றொரு கற்பனைப் பதிவைக் காணலாம். இந்த இடத்தில் மரபு சார்ந்த கற்பனையைத் தன் பார்வையில் பதிவு செய்திருக்கிறார். ஆற்றினைப் பெண்ணாகக் கருதி பாடுவது தமிழ்க்கவிதை மரபு! கண்ணகியின் துன்பத்தைக் கண்ட வையை ஆறு.
“வையை என்ற பொய்யாக் குலக்கொடி
தையற் குறுவது தானறிந்தனள் போல்
புண்ணிய நறுமலர் ஆடைபோர்த்த
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
புனல்யாறு அன்றிது பூம்புனல் ஆறு”
சென்றதாக அடிகள் பாடியிருக்கிறார். அடிகள் போர்த்திய ஆடையை இங்கே பல முதலாளிகள் அவிழ்க்கிறார்கள். பண்பாடு குறைவான செயல் மட்டுமன்று பாதகமான செயலும் கூட!. அந்தப் பாதகத்தை இவர் பாட்டிலே பதிவு செய்திருக்கிறார்.
கவிதைச் சோலையில் கட்டுமானச் சிறப்பு
யாப்பு என்பது கற்பு, காப்பு, கலைப்பு என்பன போன்றதொரு தொழிற்பெயர். கவிதையில் யாப்பு என்பது அதன் புறக்கட்டுமானத்தைக் குறிப்பது. படைப்பாளன் தான் எடுத்துக் கொண்ட அல்லது அவன் உள்ளத்தில் தோன்றிய பாடுபொருளுக்குத் தக்கவாறும் தன் மனநிலைக்கும் தக்கவாறும் அமைத்துக் கொள்கிற வெளிப்பாட்டு உத்தி. இந்தச் சிறிய கவிதை நூலில் காணப்படும் ஒரு சில கவிதைக் கட்டுமானத்தை ஆராய்வதாக இப்பகுதி அமைகிறது.
“நான்விட்டுத் தரமாட்டேன் என்று சொல்லும்
நட்பினரும் அதுபோலே நினைப்ப தாலே
நானிலத்தில் குழப்பங்கங்கள் முற்றிப் போக
நாள்தோறும் துன்பங்கள் தொடரும்போது
நான் நினைக்கும் அத்தனையும் சரியே என்று
நாள்தோறும் வாதிடுதல் சரியா சொல்வீர்?
நானுணர்ந்தேன் என்தவற்றை! நாளும் வெற்றி
நனிபெறவே தடைகளின்றி முயல்வோம் நாமே!”
என்பது போன்ற எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் படைப்பாளின் ஆற்றொழுக்கான நடைக்கும் கவிதை படைப்பதில் அவருக்கிருக்கும் ஆர்வத்திற்கும் சான்றாகத் திகழ்கிறது!. தமிழ்க்கவிதைப் படைப்புலகில் மிகவும் நீர்த்துப்போன யாப்பு இது! இந்த யாப்பினைத் தக்க முறையில் தன் கவிதைப் பயிற்சிக்குப் பயன்படுததிக் கொண்டிருக்கிறார் பாவலர்!.
சினத்தைத் தூண்டும் சொற்களையே
சிறிதும் சொல்ல வேண்டாமே
மனத்துள் சினத்தை அடக்குவதால்
மனத்தில் அழுத்தம் உயர்கிறதே!
குணத்தை யாரும் ஒப்பிட்டே
குறையாய்க் கூற வேணடாமே!
பணத்தைச் சிறுகச் சேர்ப்பதுபோல்
பண்பை வளர்க்க முயல்வோமே!
என்னும் பாட்டு அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் பல வடிவங்களில் ஒன்று. மா மா காய் என்று அரையடிக்கான இலக்கணத்தைப் பெற்று அமைகின்ற இநதப் பாட்டின் சந்தம் மகாகவிக்குப் பிடித்தமான சந்தங்களுள் ஒன்று. இதனை
“மொய்க்கும கவலை பகைபோக்கி
முன்னோன் அருளைத் துணையாக்கி
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி
உடலை இரும்புக் கிணையாக்கிப்
பொய்க்கும் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே
மெயக்கும் கிருத யுகத்தினையே
கொணர்வேன தெய்வ விதியிஃதே!
என்னும் பாடலால் அறியலாம். ‘விநாயகர் நான்மணி மாலையில்’ அமைந்துள்ள நான்கு வடிவஙகளில் ஒன்றினை இந்த யாப்பிற்கு அவர் அளித்திருக்கிறார். இனி இந்த அறுசீர்களை இதே வாய்பாட்டில் பன்னிரு சீர்களாக அமைத்துக் கொண்டு அமைப்பதே பிள்ளைத் தமிழ். இதனை
பேரா தரிக்கும் அடியவர் தம்
பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும்
பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா!!
சேரா நிருதர் குல கலகா,
சேவற் கொடியாய்த் திருச்செந்தூர்த்
தேவா, தேவர் சிறைமீட்ட
செல்வா என்று உன் திருமுகத்தைப்
பாரா மகிழ்ந்து முலைத் தாயார்
பரவிப் புகழ்ந்து விருப்புடன் அப்பா
வா வா என்று உன்னைப் போற்றப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்
வாரா திருக்க வழக்குண்டோ?
வடிவேல் முருகா வருகவே
வளரும் களபக் குரும்பை முலை
வள்ளிக் கணவா வருகவே!!
என்னும் பகழிக்கூத்தர் எழுதிய திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமழின் வழியும் ஏனைய பிள்ளைத் தமிழ் நூல்களின் வழியும் உணர்க. இது பிள்ளைத் தமிழில் பெருவழக்கு இனி இந்த கட்டுமானத்தின் முதலடியிலும மூன்றாம் அடியிலும் தனிச்சொல் பெய்து சந்த இனிமையைக் கூட்டி அதனைச சிந்தாக்கும் முயற்சியும் நடந்தேறியிருக்கிறது.
“அஞ்சி நடுங்கி வாழ்வதுவும் — பிறர்
அடிமையாக உழல்வதுவும்
கெஞ்சித் திரிவதும் வாழ்வாமோ? பிறர்
கேட்டில் மகிழ்வது அறமாமோ?”
என்று கவிஞர் கடவூர் மணிமாறன் பாடியிருக்கிறார். ஆற்றல் மிக்க கவிஞர் வல்லாளர வைரமுத்து
“மாயக் கனவுகள் தின்பவரை – உயிர்
மயங்கிக் கிடக்கும் தோழர்களை
தீயைத் தின்னும் இளைஞர்களாய் – கவி
செய்யாதொழிந்தால் ஏது பயன்?”
என்று பாடியிருக்கிறார். பிறரும் பாடியிருக்கிறார்கள். விரிப்பின் பெருகும்.
“குறுக்கிட்டுப் பேசுவதால் இருவ ருக்கும்
குறைவான புரிதலுடன் மனவ ருத்தம்
பொறுமையாய் இறுதிவரைக் கேட்ப தாலே
பொன்னான நட்புகளைத் தொடர லாமே!”
என்பதை யொத்த பாடல்களால் தனக்குக கலித்தாழிசையும் கைவந்ததே என்பதைக் காட்டியிருக்கிறார் அந்தோணிசாமி.
“பொருதடக்கை வாளெங்கே? மணிமார் பெங்கே?
போர்முகத்தல் எவர்வரினும் புறங்கொடாத
பருவயிரத் தோளெங்கே எங்கே என்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின்! காண்மின்!
என்பது கலிங்கத்துப் பரணி! எனவே எளிய சொற்களில் இனிய சந்தங்களக் கொண்ட பாடல்களை இயற்றுவதிலும் யாப்பிலக்கண நெறி பற்றி எழுதுவதிலும் அந்தோணிசாமி அவர்களின முயற்சி பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.. இவர்தம் கவிதைகளில் இழையும் தொடைவிகற்பங்களைப் பற்றி ஆராய்ந்து சொல்லலாம். அது கட்டுரையின் அளவை விஞ்சக்கூடும். யாப்பமைக் கவிதைகளில் காணப்படும் ஒரு சில பிழைகள் கவிதை வல்லாளர்களுக்கும் ஏற்படக்கூடியனவே என்பதாலும் எதிர்காலத்தில் மிக எளிதாக தவிர்க்கப்படலாம் என்பதாலும் அவை கருத்திற் கொள்ளப்படவில்லை.
ஆன்றோரை மதிக்கும் அந்தோணிசாமி
பண்பாட்டு விழுமியங்களின் அருமையறியா யாரும் மரபுக்கவிதை எழுதுவதாகச் சொல்லிக் கொள்வது அருவெறுப்பாக உள்ளது. வள்ளுவனுக்கு என்ன தெரியும்? கபிலர் பாடல்களில் கற்பனை உண்டா? கதை சொன்னதைத் தவிர கம்பன் வேறு என்ன செயதான்? பாரதிக்கு யாப்பிலக்கணம் தெரியுமா? பாரதிதாசனுக்கு எந்தப் பல்கலைக்கழகமாவது டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறதா?’ என்று சான்றோர்களை எள்ளி நகையாடும் ஒரு கூட்டம் தமிழகத்து உயர்கல்வி நிலையங்களிலேயே இடம் பெற்றுள்ளது. இது என் நேரடி அனுபவம். என் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஒரு முறை என்னிடம் சொன்னார். ‘திருக்குறளில்; ‘கூறியது கூறல்’ என்ற குற்றம் அதிகமாக இருககிறது’ என்று. நான் திருப்பிக் கேட்டேன். ‘அப்படியானால் குறைவாக இருக்கலாமா? என்று. அதாவது திருக்குறளில் குறை காணும் அளவிற்குத் தன்னை தன் முனைப்பை வெளிப்படுத்திக் கொள்ளும் பேராசரியர் (?) ஒருவர் எப்படி மரபாளுநராக பணியாற்ற முடியும்?
அந்தோணிசாமி அவர்கள் அந்த வகையில் பண்பின் கொள்கலமாகத் திகழ்வதைக் காணமுடிகிறது. ஆங்கிலப பேராசிரியர் ஷெல்லியைப் பாராட்டலாம். பைரனைப் புகழலாம். சேக்ஸ்பியரைச் சிலாகிக்கலாம். வால்ட் விட்மனை வாயாரப் புகழலாம். ராபர்ட் பிராஸ்ட் கவிதைகளை மெச்சலாம். அவர் முடியரசனைப் பாராட்டுகிறார். பாரதியைப் பேசுகிறார்!.சுரதாவின் உவமங்களில் இவர் சொக்கிக் கிடந்ததை இவருடைய கவிதைகளில் காணப்படும் மயக்கமே உணர்த்துகிறது. அதிலிருந்து இன்னும் எழவில்லை இவர்!
“இல்லத்தில் பாராட்டைத் தொடங்கிடுவோம்!
இளையோரை முதியோரைப் புகழ்ந்திவோம்1
நல்ல செயல் செய்தவுடன சிறிதெனினும்
நற்பண்பாய்ப் பாராட்டி ஊக்குவிப்போம்!
என்று உளவியல் கற்ற இந்த ஆசிரியர் பின்னும் தொடர்கிறார்! விடுதலைக் கவிஞர் நாமக்கல்லாரை நாவினிக்கப் போற்றுகிறார்! நகைச்சுவைப் புயல் சின்ன அண்ணாமலையை நினைவு கூர்ந்து பாடுகிறார். நான் சின்ன அண்ணாமலை அவர்களைச் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களோடு கண்டவன். அந்த நகைச்சுவை இமயத்தை அந்தோணிசாமி பாடியிருக்கிறார். எனக்குத் தெரிந்து சின்ன அண்ணாமலையின் படத்தைக்கூடத் திறக்காத தமிழகத்தில் அவரைக் கவிதையின் பாடுபொருளாக்கிய பெருமை அந்தோணிசாமிக்கு உண்டு. அவருக்கு மட்டுமே உண்டு!
நிறைவுரை
‘படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! என்ற பகுதியில் எழுபத்தாறு வயதான நான் எழுதிவரும் கட்டுரைகள் முழுமையும் என் நலன் நோக்கியதே! எனது தனிமைக்கு இந்தப் பிள்ளைகள் எழுதும் கவிதைகள் துணையாகின்றன. இவர்களில் பெரும்பாலோரை நான் நேரில் சந்தித்தது கூட கிடையாது. சிலர் அலைப்பேசியில் தொடர்பு கொள்வர். அவ்வளவதான்! தம்பி அந்தோணிசாமி ஆங்கிலமொழியிலக்கியத்தில் மேனிலைக் கல்வி ஆசிரியர் அவர் கொஞ்சம் முயன்றிருந்தால் ஒரு சிறிய நூலை ஆங்கிலத்திலேயே வெளியிட்டிருக்க இயலும். அவர் தமிழில் பாடியிருக்கிறார். சொந்தச் செலவில் பதிப்பித்தும் இருக்கிறார். பாராட்ட வேணடாமா? சமுதாய நோக்கு, கற்பனை, வடிவம், உணர்ச்சி என்னும் கவிதைக்கான பல கூறுகளையும் கலந்த கலவையாகப் படைத்துக் காட்டியிருக்கும் இந்த நூலில் சொத்தைக் கருத்துக்கள இல்லை!. தூங்க வைக்கும் வடிவம் இல்லை!. தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுவது எளிமை! எளிமை! எளிமை! எளிமையுடையவர் பேறு பெற்றார். அந்தோணிசாமி கவிதைகள் உட்பட!
நல்லாசிரியர் ம.அந்தோணிசாமி M.A.,M.A.,M.Ed.,M.Phil.,
(தொடரும்)

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
ஆஸ்திரேலியா
தையெங்கள் வாழ்வில் தலையாய மாதம்
தைபிறந்த பின்னால் வழிபிறக்கு மென்போம்
பொங்கலெனும் பரிசைச் சுமந்துவரும் மாதம்
தையெனவே எண்ணித் தான்மகிழ்ந்து நிற்போம்
தைதொடங்கி விட்டால் தைரியமும் பெருகும்
தைப்பொங்கல் வாழ்வில் தனித்திருப்பம் அளிக்கும்
உள்ளமதில் உவகை ஊற்றெடுத்து நிற்கும்
உழைப்பதனை மனமும் ஏற்றுவிடத் துடிக்கும்
பொங்கலெனும் வார்த்தை பூரிப்பைக் காட்டும்
மங்கலமாய் பொங்கி மகிழ்கவென உணர்த்தும்
சொந்தமெலாம் சேர்ந்து நிற்கவெனச் சொல்லும்
சூழ்ந்திருந்து சுவையாய்ச் சுவைக்கும்படி வைக்கும்
முற்றத்தில் கோலமிட்டு விளக்கேற்ற வைக்கும்
மூத்தோரின் கால்தொட்டுப் பணியும்படி வுரைக்கும்
அத்தையொடு மாமாவின் ஆசியையும் பெற்று
அனைத்துமே பொங்கென்று அதுவுரைத்து நிற்கும்
புதுப்பானை எடுத்துப் பொங்கலிடச் செய்யும்
பொங்கிவரும் பால்பார்க்கச் சுற்றிநிற்கச் சொல்லும்
பருப்போடு பச்சரிசி பானையிட வைக்கும்
பக்குவமாய்ச் சர்க்கரையும் சேர்த்துவிடச் செய்யும்
பொங்கிவரும் பால்பார்த்துப் பூரிப்பு அடைவோம்
மங்கலங்கள் வாழ்வென்றும் நிறைகவென நினைப்போம்
சங்கடங்கள் சாம்பலாய் ஆகவென எண்ணி
சகலருமே இறைவனிடன் தான்வேண்டி நிற்போம்
அறமுடைய அரசாட்சி அமைந்துவிட வேண்டும்
ஆன்மீகம் அகமதிலே அமர்ந்துவிட வேண்டும்
அறநினைப்பு அகமதிலே எழுந்துவிட வேண்டும்
அனைத்துக்கும் பொங்கல் வழிசமைக்க வேண்டும்
மாநிலத்தை வதைத்தெடுக்கும் மாநோயகல வேண்டும்
மனமார அனைவருமே அதைநினைக்க வேண்டும்
மனவமைதி மனமகிழ்வு மனநிறைவு பெருக
மனமுருகி அனைவருமே வேண்டிடுவோம் வாரீர்
பாலாக இருப்போம் சர்க்கரையாய் இருப்போம்
பக்குவமாய் யாவருக்கும் சுவைகொடுத்து நிற்போம்
தேனாக இருப்போம் சேர்கவென அணைப்போம்
தினமுமே பொங்கலாய் ஆக்கிடுவோம் வாரீர்

அமெரிக்காவின் தமிழ் அநிதம் அமைப்பும் வல்லமை மின்னிதழும் மேலும் 14 அமைப்புகளும் இணைந்து, 2021 டிசம்பரில் பன்னாட்டு மாநாடு ஒன்றை நடத்தின. கல்வியியலில் இணையத்தின் ஆளுமை என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த இணையவழி மாநாட்டில், இரண்டு நாள்கள் பேராளர்கள் பலரும் தங்கள் கட்டுரைகளை வழங்கினர். இதன் நிறைவு விழாவில் நான் வழங்கிய வாழ்த்துரை இங்கே.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

திறமைக்கு வயது ஒரு தடையில்லை. இதோ, ஆண்டாளின் சிற்றஞ் சிறுகாலே பாடலை, தமது 67ஆவது வயதில் கணீரென்று பாடுகிறார், நாகி நாராயணன். கேட்டு மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, நாகி நாராயணன் இயற்றி, இசையமைத்துப் பாடிய ‘நாராயணா ஸ்ரீமன் நாராயணா’. ராகம் கல்யாணி.
வைகுண்டஏகாதசி, வைகுந்தஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, வைகுந்த ஏகாதசி
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நாம் கொண்டாடும் ஆண்டாள் அருளிய ‘சிற்றஞ் சிறுகாலே’ பாசுரத்தைச் செல்வி வி.ஸ்ரீநிகாவின் மழலைக் குரலில் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கோவையின் ஒரு கிராமத்துச் சாலையைப் பாருங்கள். வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா வளாகத்திற்குச் சென்றுவிட்டு, கோயம்புத்தூருக்கு இரவு நேரத்தில் திரும்பினோம். நாங்கள் வந்த கிராமத்துச் சாலையைப் பார்த்து, இப்படி ஒரு சாலையா? என வியந்தேன். இதன் தரத்தை நீங்களும் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

நாளும் பொழுதும் செல்பேசியே கதி எனக் கிடக்கின்றனர் இளையோர். அதிலிருந்து கண்ணை அகற்றாமல் அதிலேயே மூழ்கி வருகின்றனர். இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த மொபைல் போதையிலிருந்து குழந்தைகளை, சிறுவர்களை, வளரிளம் பருவத்தினரை மீட்பது எப்படி? நிர்மலா ராகவனின் அற்புதமான யோசனைகளைப் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

புவனேஸ்வரி. மூ
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை- 641006.
முன்னுரை
குருகுலக் கல்வி எனும் பண்பாடுச்சூழல் பல்வேறு சூழ்நிலைத் தாக்கங்களுக்குப் பின், கல்விநிலையம் எனும் நிறுவனங்களாய் மாறி மாணவர்களை ஒரு தொகைமைக்குள் அடக்கிச் சென்றது. அதனை பழக்கப்படுத்திக் கொள்ள தமிழ்ச் சமூகம் பாடுபட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில் மாபெரும் புரட்சிக்கு நம்மை இடர்ப்படுத்தியிருக்கிறது கொரானா எனும் நோய்க்கிருமி. இணையவழி அனைத்தையும் கற்கலாம் என்ற நிலை மாறி இணையவழி மட்டுமே கற்க வேண்டும் என்னும் கட்டாயத்திற்கு உள்ளாக்கியுள்ளது இந்நோய்க்கிருமி. இணையவழிக் கல்விச்சூழல் குறித்த எனது பார்வைகளை இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறேன்.
கற்றல் முறை
இணையம் என்பது இன்று எல்லோரிடமும் கைக்குள் அடக்கமாகும் கைப்பேசியிலே அடங்கும் தொழில்நுட்பம்தான். இருப்பினும் கற்றலில் ஆசிரியர் மாணவர்களுக்கு இடையேயான நல்லுறவை அது வளர்க்கவில்லை. கல்வி கற்றுக்கொடுத்தல் என்பது, ஒரு ஆசிரியர் தாம் கற்ற கல்வியை அப்படியே மாணவர்க்குப் போதித்து அவனை இன்னொரு ஆசிரியனாய் உருவாக்கும் முயற்சியன்று. பல்வேறு சிந்தனைவாதிகளை, திறமையாளர்களைப் பண்படுத்தி ஊக்குவிப்பது, பாதை வகுப்பது எனப் பல்வேறு நிலைகளில் அமைகிறது. அவ்வாறு இருக்க, மாணவர்களும் ஆசிரியரும் இணையவழியில் தொடர்பில் உள்ளபோதும் தொடர்பில்லாதவர்களாகவே அறியப்படுகிறார்கள். நேரே கற்பிக்கும்போது ஆசிரியர்களுடைய முகக்குறிகளும் சொல்லமைப்புகளும் அதனை மேலும் தெளிவுபடுத்துதல் என்னும் பல்வேறு பயன்பாடுகளால் மாணவர்களால் பாடத்தைத் தொடர்புப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், இணையவழியில் அத்தகைய பரப்பினைக் கொண்டுசெல்ல முடிவதில்லை. இம்முறை நீடிப்பின், அறிவாற்றல் குறைபாடுடைய ஒரு சமூகத்தை உருவாக்கிவிடுவோமோ என்ற அச்சம் ஓர் ஆசிரியராய் எனக்கு உள்ளது.
கல்வி நிலையங்கள்
கல்வி நிலையங்கள் என்பதைக் காட்டிலும் நிறுவனங்கள் என்பது சாலப்பொருந்தும் என எண்ணுகிறேன். ஏனெனில், நிறுவனம் ஒரு கொள்கையின் அடிப்படையில் செயல்படும். ஆதலால், பெரும்பாலான நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் மட்டுமே தனது முழு ஈடுபாட்டையும் செலுத்துகின்றன. சில நிறுவனங்கள் குறைவான ஊதியம், தேவைக்குக் குறைவான ஆசிரியர்கள் எனத் தனது பணஇழப்பை ஈடுகட்ட அரசாங்கத்திற்கு நாம் செலுத்தும் வரி போல ஆசிரியரது சம்பளத்தைக் குறைவாக வழங்கி, பெரும் வணிகமாய் மாற்றி வருகிறது. ஆசிரியர்களைத் தேடி மாணவர்கள் சென்ற காலம் போய், இன்று மாணவர்கள் நலன்கருதி ஆளில்லா, அரவமில்லாக் கல்வி நிலையங்களில் நான்கு திசைச்சுவர்களிலும் தன் ஏக்கத்தைச் செலுத்திக் கல்வி போதித்து வருகின்றனர்.
மாணவர்களின் நிலை
மாணவர்களின் நிலை குறித்து அறியவேண்டின் அதனை இருவகைப்படுத்த வேண்டுதற்பாலது. இணையவழிக்கல்வி நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு என வெவ்வேறுபாற்பட்டவையாக அமைகின்றன.
நகர்ப்புற மாணவர் நிலை
நகர்ப்புற மாணவர்கள் பெரும்பாலானோர் இணையவசதி உள்ளவர்களாக இருக்கின்றனர். இங்கு அரசுப் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவு. ஆகவே, இவர்கள் பொருளாதாரச் சூழ்நிலையில் கிராமப்புற மாணவர்களைக் காட்டிலும் சற்று வசதிகூடிய சூழ்நிலையிலேயே இருக்கின்றனர். ஆதலால், இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பழக்கப்படுவதில் அவர்களுக்குப் பெரிய சிக்கல் இல்லை. இருப்பினும், இன்றைய சூழல் இவர்களையும் பின்னடையச் செய்துள்ளது என்பது இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் வரலாறு காணாத மாணவர் சேர்க்கையை வைத்து அறிந்துகொள்ளலாம்.
கிராமப்புற மாணவர் நிலை
கிராமப்புற மக்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளையே நாடிச் செல்கின்றனர். அறிவுப் பின்னணியில் கைதேர்ந்தவர்களாக இருப்பினும் சமூகப் பின்னணியால் இடர்ப்படுகின்றனர். சில கிராமங்களில் போதுமான இணைய வசதி இல்லை. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் கல்விநிலையில் முன்னேற்றம் கண்டுவரும் பழங்குடிகளுக்கு இவை இன்னும் சிரமத்தைத் தருகின்றன. இன்னும் சரிவரப் போக்குவரத்து இல்லாத எத்தனையோ கிராமங்கள் நம் தமிழகத்திலும் இந்தியாவிலும் இருக்கின்றன. அந்தச் சூழ்நிலையில் கடுமையான உழைப்பின்வழி கல்வி கற்றுவரும் மாணவர்களிடையே இணையக்கல்வி முழுமையாகச் சென்றடையவில்லை என்பது மறுக்க இயலா உண்மை.
ஆசிரியர் நிலை
இருதலைக்கொள்ளிகளாய் மாறியிருக்கிறார்கள் ஆசிரியர்கள். கல்லூரிப் பேராசிரியர்களைக் காட்டிலும் பள்ளிக்கல்வி ஆசிரியர்கள் மிகுந்த சிக்கல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். மடிக்கணினியின்றி, பெரும்பாலும் கைப்பேசி வழியாகவே பாடம் புகட்டும் இவர்களுக்கு மாணவர்களைச் சமாளிப்பதில் இன்னும் சிக்கல். இணையவழிக்கல்வி, மாணவர்களுக்கு மட்டும் புதிதல்ல. ஆசிரியருக்கும்தான் என்பது யாருக்குப் புரியும்? எவ்வளவு தெளிவாகப் பாடம் எடுத்தாலும் தொழில்நுட்பம் மாணவர்களிடையே தொய்வை ஏற்படுத்துகிறது. இதன் காரணம் பல மணிநேரங்கள் கைப்பேசியில் செலவிடுவது. மாணவர்களிடையே கைப்பேசிப் பயன்பாட்டைக் குறைக்க ஆசிரியர்கள் எத்தனையோ ஆலோசனைகளை வழங்கிய காலம்போய் இவர்களாலேயே ஊக்குவிக்கும் காலமும் வந்துவிட்டது. இதுதான் சமூக மாற்றமோ.
முடிவுரை
இணையம் உலகையே தன்வயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அறிவியல் முன்னேற்றமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் தேவைதான். இருப்பினும் அது மனித மூளையைப் பாழ்படுத்தி நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் வல்லமை பொருந்தியதாய் மாறிவிடக் கூடாது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இணையத்தின் இசைவுக்குத் தக்க நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோமோ என்பது கவலை அளிக்கிறது. இவ்வாற்றல் மிக்க தொழில்நுட்பக் கல்விமுறைகள், மனிதமூளையை சிதைப்பதோடு சிந்திக்க விடாமலும் செய்கின்றன. உதாரணமாகச் சொல்லப்போனால் நாம் சமூகத்தில் எத்தனையோ விடயங்களைத் தேடிப் பெற்றிருக்கிறோம். அவை நமக்கு வாழ்க்கைக் கல்வியை மட்டுமல்ல, வாழவும் கற்றுக் கொடுத்திருக்கிறது. இன்று நம் தேடல் என்பது கூகுளோடு நின்றுவிடுகிறது. அதனாலே, நாம் சிந்தனை செய்யா உயிரினங்களோடு ஒன்றிவாழும் சூழலுக்கு நகர்ந்து விடுவோமோ எனச் சிந்திக்கத் தோன்றுகிறது.

திருச்சி புலவர் இராமமூர்த்தி
நாளும் பெரும் காதல் நயப்பு உறும் வேட்கை யாலே,
கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம்
ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்;
மூளும் பெருகு அன்பு எனும் மூர்த்தியார்; மூர்த்தியார்தாம்.
வரலாறு
செல்வத்தாலும் பல்துறைத் தொழில்களாலும் சிறந்த, மாட மாளிகைகள் நிறைந்த பழம்புகழ் மேவியது பாண்டிநாடு.மங்கையர் பண்பாடும் வாய்களில் இன்சொல் நிறையும்; கடலில் முத்துக்கள் நிறையும். அங்கே மலையச் சந்தனம் கமழும் தென்றல் வீசும்; தெய்வத்தமிழ்த் துதிகள் காற்றில் தவழும்; தாமரை மேல் வாழும் திருமகள் பாடும் யாழ்போன்ற மொழியும் இன்னிசை பாடும் வண்டும் நிறைந்த நகரம் மதுராபுரி யாகும்.
அம்மூதூரில் நூல்கள் பாயும் இடம் சங்கமாகும்; எருமைகள் சொரியும் பால் பாயும் குளங்களில் தாமரைத் தேனும் , மீன்களும் பாயும்; அங்கே சங்குகள் கரையேறும்; அங்கே மங்கையர் மார்பிலும், முகத் தாமரையிலும் முத்துக்கள் வரிசை காட்டும்; மூவுலகங்களிலும் சிறந்த அந்நகரில் நூல்களின் பொருள் தரும் திரு ஆலவாயில், பிறவியறுக்கும் தமிழ்ச் சங்கம் இருந்தது. வணிகர் மரபு செய்த தவத்தால், பற்றுக்களை நீக்கி ஓரடியார்வாழ்ந்தார். அவரைச் சேக்கிழார் பாடுகிறார்,
பாடல்
நாளும் பெரும் காதல் நயப்பு உறும் வேட்கை யாலே,
கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம்
ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்;
மூளும் பெருகு அன்பு எனும் மூர்த்தியார்; மூர்த்தியார்தாம்.
அதன் பொருள்: நாடோறும் பெரிய காதல் கூர்ந்து பொருந்த வரும் ஆசைபெருகி வேட்கையாகி விளைந்ததனாலே சுற்றமும் துணையும் முதலாகிய கெடுதலில்லாத பதங்கள் எல்லாம் ஆளும் பெருமானாகிய சிவனது திருவடித் தாமரைகளேயல்லாது வேறில்லாதவர்; மூண்டு பெருகும் அன்பு என்றதனையே தமது உருவமாகக்கொண்டவர்; அவர்தாம் மூர்த்தியார் என்ற பெயர் பூண்டவர்.
விளக்கம்
பெருங்காதல் நயப்பு உறும் வேட்கை என்ற தொடர் காட்டும் பொருள். விடாத விருப்பின் மிகுதி பெருங்காதலாக உருப்பட்டது; அது முறுகவே, நயப்பு என்னும் ஆசையாகியது; அது மேலிட வேட்கையாக விளைந்தது என்க. மனத்துள் அன்பு பெருகிப் படிப்படியாக வளர்ந்து கூர்தரும் வகையினை இத்தொடரில் கூறினார்.
கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம்
ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்
கேள் – உயிர்ச்சார்பு. துணை – உயிர்ச்சார்பும் பொருட்சார்பும். கேடில் பதங்கள் – பதமுத்திப்போகங்கள். ஏனையவற்றை நோக்க இவை காலத்தால் நீடித்தனவாதலின் கேடில் என்றுபசரித்தார். இப்பொருளைச் சிங்கமுகாசுரன் எடுத்துச் சூரபதுமனுக்கு இனிது விளக்குகின்ற திறம் கந்தபுராணத்தினுட் கூறப்பட்டது காண்க.
“அழிவில் மெய்வரம் பெற்றனம் என்றனையதற்கு,
மொழி தரும்பொருள் கேண்மதி முச்சகந் தன்னுட்,
கெழிய மன்னுயிர் போற்சில வைகலிற்கெடாது,
கழிபெ ரும்பக லிருந்திடும் பான்மையேகண்டாய்
என்பது அப்பாடல்.
இறைவன் தாளில் பெறும் அபரமுத்திப் பெரும் போகம் ஒன்றேஎன்றும் அழியாததாகும் என்பது உண்மை நூல்களின் துணிபு.
அல்லது இல்லார் என்ற தொடரில் உறுதிப் பொருள் தர எதிர்மறை முகத்தாற் கூறினார். “ஈச னேநீ யல்ல தில்லை யிங்கும் அங்கும் என்பதும்” என்ற திருவாசகம் காண்க.
கேளும் துணையும் என்றவற்றால் ஆன்மாக்கள் இம்மையில் தமக்குப் பற்றுக் கோடாக எண்ணிக்கொள்வனவும், கேடில் பதங்கள் என்றதனால் மறுமையிற் பற்றுக் கோடாகக் கொள்வனவும் குறிக்கப்பட்டன. இம்மைத்துணை முதல் மறுமைப்பயன் வரையுள்ள எல்லாம் என்பது.
துணை – “துணையென்று நான்றொழப் பட்டவொண் சுடரை” என்ற நம்பிகள் தேவாரங்காண்க.
ஆளும் பெருமான் என்பது, “அம்மையி னும் துணை அஞ்செ ழுத்துமே” என்று ஆளுடையபிள்ளையார் அருளியபடி உயிர்களுக்குப் பந்தமும் வீடும் தந்து ஆட்கொள்ளும் சிவபெருமான் என்பதாம்.
“இம்மை வானவர்\ செல்வம் விளைத்திடும்;
அம்மை யேற்பிற வித்துயிர் நீத்திடும்;
எம்மையாளும் இடைமரு தன்கழல்,
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே”
என்ற அப்பர்சுவாமிகள் தேவாரமுஞ் சிந்திக்க.
மூளும் பெருகு அன்பு என்னும் மூர்த்தியார் என்ற தொடர், அன்பு மூண்டு பெருகிய அதுவே உருவாகி நின்ற என்பது. மூர்த்தி – உடல் – திருமேனி (வடிவம் என்பர்). மூர்த்திக்குள் இருந்து அதனை இயக்குபவர் மூர்த்திமான். ஆசனம் – மூர்த்தி- மூர்த்திமான் என்ற ஆகம பூசை முறையும் காண்க. மூர்த்தம் என்பதும் இது. மூர்த்தியார் மூர்த்தியை உடையவர்.
மூர்த்தியார் தாம் மூர்த்தியார்- என்க. மூர்த்தியார் பின்வந்தது பெயர். இவ்வாறு அடுக்கி மொழிந்து சிறப்பிப்பது ஆசிரியரது மரபு!
இப்பாடலில் இறையன்பையே தம் உருவமாகக் கொண்ட மூர்த்தியாரின் சிவத்தசாந்தின்சிறப்புகூறப்படுகிறது.