ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா
Blog
-

குறளின் கதிர்களாய்…(430)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(430)
இன்பத்து ளின்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுத லிலன்.-திருக்குறள் -629 (இடுக்கண் அழியாமை)
புதுக் கவிதையில்…
இன்பம் வாழ்வில் வருகையில்
அதை
ஈடுபாட்டுடன் மனத்தால் விரும்பி
ஏற்காதவன்,
துன்பம் வரும்போது
அந்தத்
துன்பத்தால்
துவண்டு போவதில்லை…!குறும்பாவில்…
இன்பம் வருகையில் விரும்பிதை
ஏற்காதவன், வந்திடும் துன்பம் கண்டு
மனமது தளர்ந்தே துன்புறான்…!மரபுக் கவிதையில்…
வந்திடு மின்பம் வாழ்வினிலே
வகையினில் பலவாய் வருவதுண்டு,
சிந்தையி லதனைக் கொண்டேதான்
சிறப்பென விரும்பி ஏற்காதோன்,
மந்தையாய்த் துன்பம் வந்திடினும்
மனதினி லதனைக் கொள்ளாமல்
தந்திடு மிடரில் தளராதே
தாங்கியே கொள்வான் சமநிலையே…!லிமரைக்கூ…
வந்தால் வாழ்வில் இன்பம்,
விரும்பியதனை ஏற்காதோன், வருந்தி நிற்பதில்லை
வந்தாலும் வரைபோல் துன்பம்…!கிராமிய பாணியில்…
இருக்கணும் இருக்கணும்
தளராம இருக்கணும்,
துன்பத்தக் கண்டு
தளராம இருக்கணும்..ஒலக வாழ்க்கயில
இன்பம் வரும்போது
அத ரெம்ப
விரும்பி ஏத்துக்காம
அதப் பெருசா
எடுத்துக்காதவங் கிட்ட
எவுளவு துன்பம் வந்தாலும்
அவன் தளந்து
வருத்தப்பட்டு நிக்கமாட்டான்..அதால
இருக்கணும் இருக்கணும்
தளராம இருக்கணும்,
துன்பத்தக் கண்டு
தளராம இருக்கணும்…! -

திருப்பாவை – 3 | ஓங்கி உலகளந்த
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘ஓங்கி உலகளந்த’ எனத் தொடங்கும் மூன்றாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.
ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள்
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘வையத்து வாழ்வீர்காள்’ எனத் தொடங்கும் இரண்டாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.
ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா
திருப்பாவைக்கு என ஒரு மெட்டு உருவாகிவிட்டது. பெரும்பாலோர் அந்த மெட்டிலேயே பாடுகிறார்கள். ஆனால், இப்படியும் பாடலாம் எனக் காட்டுகிறார், பாலாஜி இராமானுஜ தாசர். இவரது குரலில் வையத்து வாழ்வீர்காள் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

திருப்பாவை – 1 | மார்கழித் திங்கள் | கிருஷ்ணகுமார் குரலில்
மார்கழிக்கு அழகு சேர்க்கிறது, ஆண்டாளின் திருப்பாவை. இதோ முதல் பாடலாம் மார்கழித் திங்களை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.
ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

அறிஞர் அண்ணா உரை | அரங்கசாமி நினைவு மன்றம்
காஞ்சிபுரம் அரங்கசாமி நினைவு மன்ற விழாவில் (தி.மு.க. கிளை தொடக்க விழா) அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

கணினியில் கலைச் சொல்லாக்கம் | அண்ணாகண்ணன் உரை
தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் ஆட்சிமொழிப் பயிற்சி (62ஆம் அணி), 2022 டிசம்பர் 14 அன்று சென்னையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் தொடங்கியது. இதன் ஓர் அமர்வாக, ‘கணினியில் கலைச் சொல்லாக்கம்’ என்ற தலைப்பில் முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

பாமா கோபாலன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம்
குமுதம் இதழில் பணியாற்றிய மூத்த எழுத்தாளர், இதழாளர் பாமா கோபாலன், அண்மையில் அமெரிக்கா சென்றபோது காலமானார். அவருடன் நெருங்கிப் பழகிய ஓவியர் ஸ்யாம், தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

அறிஞர் அண்ணா | விடுதலைத் திருநாள் சிறப்புரை
1967 ஆகஸ்டு 15, விடுதலைத் திருநாள் அன்று, சென்னை வானொலியில் முதலமைச்சர் அண்ணா ஆற்றிய சிறப்புரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

சிதம்பரனை, திகம்பரனை | இசைப்பாடல்
மதுரை ஜி.எஸ்.மணி இயற்றிய ‘சிதம்பரனை, திகம்பரனை’ என்ற இனிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

Rajiv Bada Banega
Rajiv Bada Banega! A nostalgia talk by G.N.S. Raghavan, senior journalist & writer on Jawaharlal Nehru, Rajiv Gandhi & Sanjay Gandhi.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

உலகளாவிய அரசு | மூதறிஞர் ராஜாஜி ஆங்கில உரை
உலகளாவிய அரசு என்ற தலைப்பிலான மூதறிஞர் ராஜாஜியின் உரை.
Voice of Chakravarti Rajagopalachari, popularly known as Rajaji or C.R. Released by ‘The Rajaji – Ninetythree Souvenir Committee’; disc donated by T.V.Sundaram Iyengar & Sons Private Limited, Madurai. Rajaji speaks on World Government.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

குறளின் கதிர்களாய்…(429)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(429)
ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்.-திருக்குறள் -620 (ஆள்வினையுடைமை)
புதுக் கவிதையில்…
தலைவிதி என்று
தயங்கி நிற்காமல்
தளராமல் முழு முயற்சியுடன்
தொடர்ந்து செயலாற்றுவோர்,
விதியையும் புறம்கண்டு
வெற்றி காண்பர்…!குறும்பாவில்…
விதியையும் புறமுதுகு காட்டச்செய்து
வெற்றியே பெறுவர், சோர்வேதும் கொள்ளாமல்
விடாது முயற்சி செய்பவரே…!மரபுக் கவிதையில்…
பாரில் மாந்தர் செய்கின்ற
பணிகள் பலதி லதன்பயனை
நேரில் பெறவே விட்டிடாமல்
நிகழும் தடையை விதியென்பர்,
போரி லிதையும் புறங்கண்டே
போற்றும் வகையில் வென்றிடுவர்
பேரில் சோர்வாம் தடைநீக்கிப்
பெரிதும் முயன்றே செய்பவரே…!லிமரைக்கூ…
செயலில் கொளாமல் தளர்ச்சி
தொடர்ந்தே முயல்வோர் விதியையும் வென்றே
பெறுவர் வாழ்வில் வளர்ச்சி…!கிராமிய பாணியில்…
செய்யணும் செய்யணும்
மொயற்சி செய்யணும்,
சோம்பல்படாம தொடந்து
மொயற்சி செய்யணும்..செய்யிற செயலுல
சோம்பல்பட்டு நிக்காம
தீவிரமா தொடந்து
மொயற்சி செய்யிறவன்
தலவிதியயும் தோக்கடிச்சி
வாழ்க்கயில
வெற்றியே பெறுவானே..அதால
செய்யணும் செய்யணும்
மொயற்சி செய்யணும்,
சோம்பல்படாம தொடந்து
மொயற்சி செய்யணும்…!










