கிரேசி மோகன்
பெருமாள் திருப்புகழ்
கிரேசி மோகன்
”ராகம்(ராகத்வேஷம்) கடந்த ரமணன்போல் கண்ணனும்
தேகம் மறந்தூதும் தெய்வீக, -ராகம்
புலன்கடந்த ஆன்மக் கலனேற்றி ஆன்றோர்
குலம்சேர்க்கும் ஆதிவரா கம்’’….கிரேசி மோகன்….
கிரேசி மோகன்
அருணாசலத்தை நினைத்தாலே முக்தி, அதுபோல் திருவல்லிக்கேணியை நினைத்தாலே பக்தி….பார்த்தசாரதி பெருமாளுக்கு முத்தங்கி சேவை, என்று அல்லிக்கேணி பக்தை சொன்னாள்….போக முடியவில்லை அட்லீஸ்ட் நினைத்துப் பார்க்கலாமே நீலமேகன் ஜொலிப்பதை….
”கத்துங் கடல்வண்ணன் , கீதை உரைத்தவன்
பத்தங்கம் பூண்ட பரந்தாமன், -முத்தங்கி
மேனி அணிந்தவன் மின்னும் திருவல்லிக்
கேணி நினைப்போர்க்கும் காப்பு’’….கிரேசி மோகன்….
பத்தங்கம் -பத்து அவதாரம்….
கிரேசி மோகன்
குழந்தைகள் நாளின்று கோபாலக் கண்ணன்,
வழிந்தொழுகும் வாரிதியில் வெண்ணை ,-பிழிந்து,
எடுக்கின்றான் மத்தால், எது(டு)கைக்கு மோனை
கொடுக்கின்றான் கீதைக் களி …கிரேசி மோகன்….