Category: காணொலி

  • மகாலட்சுமி அஷ்டகம் கேளுங்கள்

    மகாலட்சுமி அஷ்டகம் கேளுங்கள்

    தீபாவளித் திருநாளை லட்சுமி பூஜை என்றும் அழைப்பார்கள். இந்நன்னாளில் திருமகளை வணங்கி வழிபடுவதன் மூலம் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெறலாம். சக்தி வாய்ந்த மகாலட்சுமி அஷ்டகம் ஸ்தோத்திரத்தை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரும் மூவரசம்பட்டு சகோதரிகளுள் ஒருவரான மாதங்கியும் அடுத்தடுத்துப் பாடக் கேளுங்கள். உங்கள் இல்லத்தில் மகாலட்சுமி தங்கி, நிலைபெற்று, எல்லாச் செல்வங்களையும் வாரி வழங்கட்டும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அரிசி பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி?

    அரிசி பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி?

    அசத்தல் சுவையில் ஆளையே தூக்கும் அரிசி பொட்டுக்கடலை முறுக்கு செய்வது எப்படி? ஹேமமாலினி வழங்கும் செய்முறை இதோ. தீபாவளி நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குலாப் ஜாமூன் செய்வது எப்படி?

    குலாப் ஜாமூன் செய்வது எப்படி?

    மிக எளிதாக, குலாப் ஜாமூன் செய்வது எப்படி? ஹேமமாலினி வழங்கும் செய்முறை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குயிலும் காக்கையும் – அதிசயக் காட்சி

    குயிலும் காக்கையும் – அதிசயக் காட்சி

    காக்கைக் கூட்டில் குயில் முட்டையிடுவது தெரிந்ததே. அப்போது காக்கை, குயிலை விரட்டும். அதன் பிறகு எப்போது காக்கையைக் கண்டாலும் குயில் பறந்தோடி ஒளியும். இன்று ஓர் ஆச்சரியம். முதலில் குயிலைக் காக்கை விரட்டுகிறது. பிறகு குயில், துணிச்சலுடன் காக்கையை வெருட்டுகிறது. ‘என் உணவை நீ எடுக்கிறாயா?’ என்ற உரிமையில் குயில் தன் வாயை அகலத் திறந்து, காக்கையின் அருகில் சென்று மிரட்டுகிறது. ஒரு வாய் உணவுடன் காக்கை பறந்தோடிப் போகிறது. இந்த அதிசயக் காட்சியைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அ.மாதவையாவின் கடைசிக் கோரிக்கை | டேவிட் பிரபாகர் உரை

    அ.மாதவையாவின் கடைசிக் கோரிக்கை | டேவிட் பிரபாகர் உரை

    அ.மாதவையா இலக்கிய அரங்கம் என்ற நிகழ்ச்சியை, சாகித்திய அகாதெமியும் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து, 2022 அக்டோபர் 18 அன்று சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் நடத்தின. இந்த நிகழ்ச்சியில், சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் டேவிட் பிரபாகர் வழங்கிய வாழ்த்துரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் | கல்யாணராமன் உரை

    அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் | கல்யாணராமன் உரை

    அ.மாதவையா இலக்கிய அரங்கம் என்ற நிகழ்ச்சியை, சாகித்திய அகாதெமியும் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து, 2022 அக்டோபர் 18 அன்று சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் நடத்தின. இந்த நிகழ்ச்சியில், மாநிலக் கல்லூரியின் முதல்வர் இரா.கல்யாணராமன், அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் – ஓர் இலக்கிய ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார். இவர் பேசி முடித்தவுடன் அடுத்துப் பேசிய கவிஞர் வைகைச்செல்வி, ‘மழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது’ எனக் குறிப்பிட்டார். இந்த இலக்கிய மழையில் நனையுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மெரினா கடற்கரையில் டிரோன் கேமரா

    மெரினா கடற்கரையில் டிரோன் கேமரா

    சென்னை, மெரினா கடற்கரையை டிரோன் கேமரா மூலம் காவல் துறையினர் கண்காணிக்கிறார்கள். தமிழகக் காவல் துறையின் சிறந்த முன்னெடுப்பை இங்கே பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அ.மாதவையா சிறுகதைகள் | மாலன் உரை

    அ.மாதவையா சிறுகதைகள் | மாலன் உரை

    அ.மாதவையா இலக்கிய அரங்கம் என்ற நிகழ்ச்சியை, சாகித்திய அகாதெமியும் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து, 2022 அக்டோபர் 18 அன்று சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் நடத்தின. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய எழுத்தாளர் மாலன், அ.மாதவையா சிறுகதைகள் என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அரிய காட்சி: ஒருவாய் தோசைக்காக!

    அரிய காட்சி: ஒருவாய் தோசைக்காக!

    ஒருவாய் தோசைக்காகத்தான் இவ்வளவும். பெரிய துண்டினைப் பெண்குயில் லபக் என விழுங்க, அதைத் தவிட்டுக் குருவி ஆவலுடன் பார்க்க, ஆண்குயில் மேலிருந்து அதன் மீது குதித்து விரட்ட, இன்னும் பல ருசிகர காட்சிகள் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • டாக்டர் டி.வி.கோபாலகிருஷ்ணன் – 90

    டாக்டர் டி.வி.கோபாலகிருஷ்ணன் – 90

    பத்மபூஷண் விருது பெற்ற சங்கீத கலாநிதி டாக்டர் டி.வி.கோபாலகிருஷ்ணன் அவர்களின் 90ஆவது பிறந்த நாள் விழா இன்று மாலை நடைபெற்றது. தாம்பரம் மியூசிக் கிளப்பின் 25ஆவது ஆண்டுப் பெருவிழாவும் இணைந்து நடந்தது. சென்னை, தாம்பரம், ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி அரங்கில் இசைவாணர்கள் ஏராளமானோர் கூடினர். திருவையாறு பாணியில் இசை ஆராதனை நடத்தினர். அதிலிருந்து ஒரு பகுதி இங்கே.

    படப்பதிவு – கிருஷ்ணன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • போத்தீஸ் நகைக்குத் தேசிய விருது

    போத்தீஸ் நகைக்குத் தேசிய விருது

    2022ஆம் ஆண்டுக்கான, மணப்பெண் தங்க நகைப் பிரிவில், சிறந்த நகைக்கான தேசிய விருதினைப் போத்தீஸ் சுவர்ண மகால் பெற்றுள்ளது. இதை முன்னிட்டு, போத்தீஸ் நிர்வாக இயக்குநர் ரமேஷ், செய்தியாளர்களைச் சந்தித்தார். ஒருவரால் மூன்று கிலோ எடையுள்ள நகையை அணிய முடியுமா என்பதற்கு அவர் அளித்த பதிலைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேளூர் சென்னகேசவப் பெருமாள் கோவில்

    பேளூர் சென்னகேசவப் பெருமாள் கோவில்

    பேளூர் சென்னகேசவப் பெருமாள் கோவில், சிற்ப எழிலும் நேர்த்தியும் துல்லியமும் கொண்ட அரிய கலைக் கருவூலம். இத்தனை நுணுக்கமும் வேலைப்பாடும் கைத்திறனும் சாத்தியம்தானா என உலகே வியக்கின்ற உன்னதம். இந்தத் திருக்கோவிலின் உள்ளே ஓர் உலா. வெ.சுப்பிரமணியன் வர்ணனையுடன் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாக்யம்தான் லக்ஷ்மி வாருமம்மா!

    பாக்யம்தான் லக்ஷ்மி வாருமம்மா!

    ‘பாக்யாத லக்ஷ்மி பாரம்மா’ என்ற புகழ்பெற்ற கன்னடப் பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு இதோ. சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம், அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தின் நவராத்திரி விழாவில் பாடப்பெற்றது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து

    ‘சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து’ என்ற இனிய பாடல் இதோ. கண்ணதாசன் இயற்றி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த பாடல். 1964இல் வெளியான ‘புதிய பறவை’ திரைப்படத்தில் இடம்பெற்றது. காலத்தை வென்ற இந்தப் பாடலை, மெல்லிசைப் பாடகி ஜானகி பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காளத்திகிரி அருவி | கர்நாடகச் சுற்றுலா

    காளத்திகிரி அருவி | கர்நாடகச் சுற்றுலா

    கர்நாடக மாநிலம், சிக்மகளூர் அருகில் உள்ள காளத்திகிரி அருவியைக் காண வாருங்கள். வழிபாட்டுத் தலமாகவும் பரிகாரத் தலமாகவும் அமைந்துள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார், வெ.சுப்பிரமணியன்.

    A visit to Kallathigiri Falls, also known as the Kalhatti Falls or Kalhattigiri Falls, near Chikmagalur in Karnataka. Experience the Incredible India. A video by V.Subramanian.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share