அருமையான சுவையும் சத்தும் நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்குப் பொரியல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முன்கூட்டியே சேமிக்கத் தொடங்குவது அவசியம். அவர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றங்களுக்கும் இலக்குகளுக்கும் நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது. தரமான கல்வி, திறன்கூட்டும் பயிற்சிகள், போட்டித் தேர்வுகள், வெளிநாட்டு மேற்படிப்பு, திருமணம் போன்ற பலவற்றுக்கும் திட்டமிடுவது நல்லது. ஆனால், இதை எங்கே தொடங்குவது? குழந்தைகளுக்கான முதலீட்டுத் திட்டங்கள், வாய்ப்புகள் என்னென்ன உள்ளன? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.
‘ஆதிமூலமே ஆதிமூலமே’ என்ற பாடலுக்கு முகுந்த இராமானுஜ தாசர் குழுவினரின் ஆடல், பாடல், பஜனை. தஞ்சை வீதிகளில் நின்று வேடிக்கை பார்த்தோரையும் தன்வசம் ஈர்த்து நடனம் ஆடவைத்த பக்தி நர்த்தனம். கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
‘இப்படிப்பட்டவனை யசோதா எப்படிப் பெற்றாயோ!’ என்ற இனிய பாடலுக்கு முகுந்த இராமானுஜ தாசர் குழுவினரின் ஆடல், பாடல், பஜனை இதோ. தஞ்சை வீதிகளில் நடைபெற்ற இயல்பான, சுவையான, எதிர்பாராத நிகழ்வுகள், புதுச் சுவை கூட்டியுள்ளன. கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. வழக்கமாக, தாங்கள் தேர்ச்சி பெற வேண்டும், நல்ல மதிப்பெண் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கடவுளை வேண்டுவோர் ஏராளம். இங்கே தங்கள் பதிவு எண்களைக் கோவில் சுவர்களில் மாணவர்கள் எழுதி வைத்துள்ளனர். இடம் – குன்றத்தூர் முருகன் கோவில்.
கனடாவில் கல்வி கற்பது, அண்மைக் காலமாகப் பல மடங்கு அதிகரித்து வருகிறது. காரணம், படித்து முடித்ததும் அங்கேயே வேலை பார்க்கலாம், விரைவில் குடியுரிமை பெறலாம் என்ற நல்வாய்ப்பு. ஆனால், கனடாவில் படிப்பது எப்படி? நமக்கு ஏற்ற கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி? அங்கே படிக்க எவ்வளவு செலவாகும்? பகுதி நேரமாக வேலை பார்த்துச் சம்பாதிப்பது எப்படி? விரிவாகப் பதில் அளிக்கிறார்,கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
தமிழீழத்தின் தேசியப் பறவையான செம்போத்து என்கிற செம்பகம், அடிக்கடி விரும்பி வருகின்ற இடமாக நம் இல்லம் மாறிவிட்டது. இதோ நம் வீட்டுச் சாம்பார் சாதத்தைச் சுவைத்து மகிழ்கிறார்.
எழுத்தாளர் ஜெயமோகன், அண்மையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இக்காலப் பெற்றோர்களின் பரிதாப நிலை, அவர்களை ஆட்டிப் படைக்கும் குழந்தைகளின் நிலை பற்றிக் கடுமையாக எழுதியிருந்தார். குழந்தைகளை மனவளர்ச்சி குன்றிய எஜமானர்கள் என்றும் பெற்றோர்களை அடிமைச் சேவகர்கள் என்றும் சாடியிருந்தார். இப்படியான காட்சிகளை நாமும்கூடப் பல இடங்களில் பார்த்திருப்போம். குழந்தைகளை இப்படியே விட்டுவிட முடியுமா? அவர்களின் இடத்தை அவர்களுக்கு உணர்த்துவது எப்படி? குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி? தம் அனுபவங்களின் வாயிலாக நிர்மலா ராகவன் முக்கியமான ஆலோசனைகளையும் தீர்வுகளையும் வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.