நீர்க்காக்கை, ஓர் அரிய பறவை. இதனால் தரையில் நடக்கவும் தண்ணீருக்கு அடியில் நீந்தவும் பறக்கவும் முடியும். நீரிலும் நிலத்திலும் வானிலும் இயங்கும் வாகனங்களுக்கு இதுவே தூண்டுதலாக இருக்கலாம். இதோ இங்கே இந்த நீர்க்காக்கை, தண்ணீருக்கு அடியில் நீந்துவதையும் பிறகு சிறகடித்துப் பறப்பதையும் பாருங்கள்.
Indian cormorant can walk, swim underwater and fly, a 3-in-1 bird. Here you can see this Little Cormorant is swimming underwater and flying. This might be an inspiration to ambitious cars that can travel on land, water and air.
அடையாறு நதி உடைப்பு சரி செய்யப்பட்டதால், நிலைமை கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. வீடுகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம் வடிந்து வருகிறது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.
நுங்கும் நுரையுமாக, சுழிப்பும் அலையுமாக, கழிவும் கசடுமாக, சிரிப்பும் சீற்றமுமாக, துடிப்பும் துள்ளலுமாக கரைமீறிப் பாய்கிறது அடையாறு. ஒரே நேரத்தில் மேலே கனமழை, கீழே பெருவெள்ளம் என்ற காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா? ஆஹா என்று எழுந்து அதிர நடக்கும் அடையாற்றின் பேரழகு இங்கே.
அடையாறு நதியில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேரளவு நீர், ஊருக்குள் பாய்கின்றது. தாம்பரத்தில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாள் முழுவதும் தண்ணீர் வடியவில்லை. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.
அடையாறு நதியில் வெள்ளப் பெருக்கு, கரை உடைப்பு, கனமழை என ஒரே நேரத்தில் பலமுனைத் தாக்குதலால் தாம்பரம் தத்தளிக்கிறது. வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். சாதாரணப் பயணமே சாகசப் பயணமாய் ஆகிவிட்டது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.
தாம்பரம் அருகில் அடையாறு நதியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை அப்பகுதி மக்கள் தற்காலிகமாக அடைத்துள்ளனர். ஆனாலும், அபாயம் முழுமையாக நீங்கியதாகக் கொள்ள முடியாது. இதற்கு வலிமையான கரையமைத்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அவசர அவசியம். மக்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.
இங்கிலாந்தின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பர்மிங்காம் மாநகரில் ஓர் உலா.
படப்பதிவு – நவ்யா
Birmingham is a city and metropolitan borough in the West Midlands, England. It is the second-largest city, urban area and metropolitan area in England and the United Kingdom. Birmingham is commonly referred to as the “second city of the United Kingdom”. Located in the West Midlands county and region in England, approximately 100 miles (160 km) from Central London, Birmingham, as one of the United Kingdom’s major cities, is considered to be the social, cultural, financial, and commercial centre of the Midlands (Wiki).
வருமான வரியைச் சேமிப்பது எப்படி? அதிகபட்ச பலன்களைப் பெறுவது எப்படி? வரிசேமிப்பின் மூலம் இன்னொரு வருவாயை ஈட்டுவது எப்படி? பழைய வரிவிதிப்பு முறையா? புதிய வரிவிதிப்பு முறையா? யாருக்கு எது சிறந்தது? இதோ முழு விவரங்கள். அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார்.
பெண்குயில், அவ்வளவு எளிதில் காட்சி கொடுக்காது. நம்மைக் கண்டாலே பறந்து ஓடிவிடும். அதிர்ஷ்டவசமாக, என் ஜன்னலை ஒட்டியுள்ள கருவேப்பிலை மரக்கிளையில் மிக அருகில் வந்தமர்ந்தது. ஓசைப்படாமல் ரகசியமாக இதைப் படம் பிடித்தேன். இதன் பேரழகை நுணுக்கமாக நீங்கள் ரசிக்கலாம்.