பெண்குயில், அவ்வளவு எளிதில் காட்சி கொடுக்காது. நம்மைக் கண்டாலே பறந்து ஓடிவிடும். அதிர்ஷ்டவசமாக, என் ஜன்னலை ஒட்டியுள்ள கருவேப்பிலை மரக்கிளையில் மிக அருகில் வந்தமர்ந்தது. ஓசைப்படாமல் ரகசியமாக இதைப் படம் பிடித்தேன். இதன் பேரழகை நுணுக்கமாக நீங்கள் ரசிக்கலாம்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.