Category: காணொலி

  • சின்னான் என்கிற செங்குதக் கொண்டைக்குருவி

    சின்னான் என்கிற செங்குதக் கொண்டைக்குருவி

    சின்னான் (செம்புழைக் கொண்டைக்குருவி; Red-vented Bulbul, Pycnonotus cafer), மரங்களில் அடையும் பறவைகளுள் ஒன்றாகும். இது கொண்டைக்குருவி, கொண்டைக்கிளாறு போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    செம்மீசைக் கொண்டைக்குருவி, செங்குதக் கொண்டைக்குருவி என இரு வகைகள் உண்டு. இவற்றுள் செங்குதக் கொண்டைக்குருவி என்று அழைக்கப்படும் சின்னானின் கொண்டை சற்றே சிறியது. இதைச் சமவெளிகளிலும் வீடுகளுக்கு அருகிலும் சிறு குன்றங்களிலும் காணலாம். இவ்விருவகைக் குருவிகளுக்கும் கொண்டை கருத்து, உடல் கபில நிறத்தில் இருக்கும்; வாலடி இரத்தச் சிவப்பாக இருக்கும். உற்சாகமான குரலில் பரபரப்புடன் இவை கூவும். செங்குதக் கொண்டைக்குருவியை நம் வீட்டருகே அடிக்கடி காண்கிறேன். இன்று காலையில் நம் வீட்டுக் கொய்யா மரத்தில் அமர்ந்த சின்னான் பாடுவதைக் கேளுங்கள்.

    முகப்புப் படத்துக்கும் விவரங்களுக்கும் நன்றி: விக்கிப்பீடியா

    Photo By J.M.Garg – சொந்த முயற்சி, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=2994302

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முத்தைத்தரு பாடல் – சுதா மாதவன் குரலில்

    முத்தைத்தரு பாடல் – சுதா மாதவன் குரலில்

    அருணகிரிநாதர் அருளிய ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ பாடலைச் சுதா மாதவன் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என்முகம் பாரய்யா, சண்முகனே!

    என்முகம் பாரய்யா, சண்முகனே!

    என்முகம் பாரய்யா, சண்முகனே – தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வுபெற்ற திருமதி சுப்புலட்சுமி மோகன் அவர்களின் உருக்கமான பாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21 | வேதா கோபாலன்

    குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21 | வேதா கோபாலன்

    திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி இன்று குருப்பெயர்ச்சி.. உங்க ராசிக்கான பலன்களைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கற்பூரத்தின் இன்னொரு பயன்

    கற்பூரத்தின் இன்னொரு பயன்

    அண்ணாகண்ணன்

    தீபாவளி இனிப்புகள், பலகாரங்களை எறும்பு வராமல் காப்பது, அவ்வளவு எளிதில்லை. அப்படியே எறும்பு வந்துவிட்டால், அவற்றை அப்புறப்படுத்துவது, ஒரு பெரிய வேலை. இந்நிலையில், எறும்புகள், பூச்சிகள் வராமல் உணவுப் பொருள்களைக் காப்பதற்குக் கற்பூரம் பயன்படும் என இன்று தெரிந்துகொண்டேன். இது குறித்து என் மனைவி ஹேமமாலினி உடன் ஒரு நேர்காணல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இலண்டனில் காலை நடை

    இலண்டனில் காலை நடை

    அண்ணாகண்ணன்

    இலண்டனில் வசிக்கும் என் தங்கை ஜனனி, எனது வேண்டுகோளை ஏற்று, தனது நடைப் பயிற்சியின்போது எடுத்த காட்சிகளை அனுப்பியிருக்கிறார். இலையுதிர்காலத்து வசீகரமும் இலண்டனின் வனப்பும் பசுமையும் பச்சைக் கிளிகளின் பாடலும் நமக்கு மகிழ்வையும் மனத்துக்கு அமைதியையும் அளிக்கின்றன. பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குருப்பெயர்ச்சி பலன்கள் – 2020-21 | வேதா கோபாலன்

    குருப்பெயர்ச்சி பலன்கள் – 2020-21 | வேதா கோபாலன்

    வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி, இன்று இரவு 10 மணியளவில் குருப்பெயர்ச்சி நடைபெற்றது. குரு பகவான், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ந்தார். ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன், 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை உரிய பரிகாரங்களுடன் கணித்து வழங்கியுள்ளார். உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கேதார கௌரி விரதத்தின் தாத்பர்யம்

    சந்திப்பு : அரவிந்த் பாலாஜி

    கண்டியூர் இராமன் அவர்கள், தஞ்சைக்கு அருகில் உள்ள கண்டியூரில் ஆஞ்சநேயருக்குக் கோவில் எழுப்பி, தினசரி பூஜைகள் செய்து வருகிறார். இந்த அமர்வில் கேதார கௌரி விரதத்தின் தாத்பர்யம் குறித்து நமக்கு விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உற்சாக தீபாவளி வாழ்த்துகள்

    உற்சாக தீபாவளி வாழ்த்துகள்

    அண்ணாகண்ணன்

    இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நைஜீரியா எனப் பல நாடுகளில் வாழும் வல்லமை அன்பர்களின் தீபாவளி வாழ்த்துகளைப் பெற்று, இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். பன்முகம் கொண்ட இந்த உற்சாக தீபாவளி வாழ்த்துகளைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தீபாவளி மருந்து (லேகியம்) செய்வது எப்படி?

    தீபாவளி மருந்து (லேகியம்) செய்வது எப்படி?

    தீபாவளியை முன்னிட்டு நாம் உண்ணும் இனிப்புகள், பலகாரங்கள், உணவுகள் அனைத்தையும் செரித்து, அஜீரணம் ஏற்படாமல் காத்து, நம்மைத் துடிப்புடன் செயல்பட வைப்பது தீபாவளி மருந்து. மரபுவழியாக ஒவ்வொரு குடும்பத்திலும் இது இன்றிமையாத இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தத் தீபாவளி மருந்தைச் செய்வது எப்படி? பெங்களூருவிலிருந்து வைஷ்ணவி அஜய், நமக்காகச் செய்து காட்டுகிறார். பார்த்துப் பயன் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உண்மை என்ன: தமிழ்நாடு வடிவத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடம் உள்ளதா?

    உண்மை என்ன: தமிழ்நாடு வடிவத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடம் உள்ளதா?

    அண்ணாகண்ணன்

    தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடங்கள், தமிழ்நாடு என்ற எழுத்துகளின் வடிவத்தில் உள்ளதாக இன்று ஒரு படத்தைப் பார்த்தேன். அது உண்மையா? இதோ ஓர் அலசல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • விரலழுத்த மருத்துவம் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    விரலழுத்த மருத்துவம் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    விரலழுத்த மருத்துவம் (Reflexology) என்பது 3,000 ஆண்டுகளுக்கு முன்னர், எகிப்து நாட்டு மருத்துவ முறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது என மருத்துவர் ஒருவரின் கல்லறையில் காணப்படும் சித்திரங்களிலிருந்து அறிய முடிகிறது. வாய்வழியாக அதைப் பரப்பியிருக்க வேண்டும். இந்தியாவிலும் சீனாவிலும் புத்தருடைய பாதங்களில் இம்முறை வைத்தியம் காணப்படுகிறது.

    மருத்துவர்கள் மட்டுமில்லாமல் இதை யார் வேண்டுமானாலும் எளிதாகக் கற்கலாம், நோயாளிகளுக்கு மட்டும்தான் இம்முறை பயன்படும் என்பதில்லை, உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க, பிறருக்கும் உதவி செய்ய முடியும் என்று டாக்டர் வில்லியம் பிட்ஸ்ஜெரால்டு (Dr.William Fitzgerald) என்பவர் 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார்.

    கை அல்லது கால் விரல் ஒன்றின் நுனியை இரு விரல்களால் அழுத்தினால், அதனுடன் தொடர்புள்ள வேறொரு பாகத்தில் சில விநாடிகள் சொரணை போய்விடும் – மயக்க மருந்து கொடுத்தாற்போல்.

    இதே உத்தியைப் பயன்படுத்தி, உடலில் எந்தப் பாகத்தில் சிக்கல் இருக்கிறது என்று கண்டறியலாம். அதே போல், அந்தச் சிக்கலை ஒரு குறிப்பிட்ட பாகத்தில் அழுத்துவதன் மூலம் சரி செய்யலாம். எந்தெந்தப் பாகத்தில் விரல்களால் அழுத்தினால் எந்தெந்தச் சிக்கல்களைச் சரி செய்யலாம் என்பதை இந்த அமர்வில் நிர்மலா ராகவன் விளக்குகிறார். அத்துடன் படுப்பதற்கான நிலைகள், சவாசனம் செய்யும் முறை, நீண்ட நேர விமானப் பயணத்தில் தூங்குவதற்கான வழிமுறை ஆகியவற்றையும் எடுத்துரைக்கிறார். விரலழுத்த மருத்துவத்தை மற்றவர்களுக்குச் செய்த பிறகு நமக்கு அது தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

    பயனுள்ள இந்த நேர்காணலைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நீலவால் பஞ்சுருட்டான்

    நீலவால் பஞ்சுருட்டான்

    இன்று காலை இந்தப் பறவையைப் பார்த்தேன். கூரிய அலகுடன் தலையைத் திருப்பிக்கொண்டே இருந்தது. முதலில் மீன்கொத்தியைப் போன்று இருந்தது. பிறகுதான் தெரிந்தது, இதன் பெயர், நீலவால் பஞ்சுருட்டான். இது, ஒருவகைப் ஈப்பிடிப்பான் பறவை. குளம் குட்டை போன்றவற்றின் கரைகளில் காணப்படும். நான் பார்த்தபோது இது, மூங்கில் கழியில் அமர்ந்திருந்தது.

    படத்திற்கு நன்றி – By A.Savin (Wikimedia Commons · WikiPhotoSpace) – சொந்த முயற்சி, FAL, https://commons.wikimedia.org/w/index.php?curid=89642206

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ‘வாழ்நாள் சாதனையாளர்’ சுபாஷிணி திருமலை

    ‘வாழ்நாள் சாதனையாளர்’ சுபாஷிணி திருமலை

    அண்ணாகண்ணன்

    எழுத்தாளர் சுபாஷிணி திருமலை அவர்களுக்குத் திருவள்ளுவர் நற்பணி மன்றம், வாழ்நாள் சாதனையாளர் விருதினை 08.11.2020 அன்று வழங்குகிறது. வல்லமை மின்னிதழில் நூற்றுக்கும் மேலான படைப்புகளை வழங்கிய, 14 நூல்களை இயற்றிய சுபாஷிணி அவர்களுடனான என் அனுபவங்கள், நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நலவாழ்வுக்கு யோக முத்திரைகள் – 2

    நலவாழ்வுக்கு யோக முத்திரைகள் – 2

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    சக்தி வாய்ந்த யோக முத்திரைகளின் இரண்டாம் பாகம் இங்கே. உடலின் ஒவ்வோர் உறுப்புகளுக்கும் உரிய தனித் தனி முத்திரைகளைப் பார்த்து வருகிறோம். இந்த அமர்வில், இதய நலனுக்கான முத்திரைகள், வயிறு, செரிமானம், வயிற்றின் உள் உறுப்புகள் அனைத்திற்குமான முத்திரைகள், மலச்சிக்கலைப் போக்கும் முத்திரை உள்ளிட்ட பலவற்றையும் நிர்மலா ராகவன் விவரித்துள்ளார்.

    பணம் வருவதற்கான முத்திரையைத் தொடர்ந்து, நினைத்தது நடப்பதற்கான முத்திரையையும் போட்டியில் வெல்வதற்கான முத்திரையையும் செய்து காட்டியுள்ளார். பூமியிலிருந்து சக்தியைப் பெறுவதற்கான முத்திரை, கால்கள் வலிமை பெறுவதற்கான முத்திரை, தியான முத்திரை, உடலைத் தளர்த்தும் முத்திரை, மன அமைதி தரும் முத்திரை, மன்னிப்புக் கேட்பதற்கான முத்திரை ஆகியவற்றையும் விளக்கியுள்ளார்.

    நெற்றியில் பொட்டுவைப்பதற்குப் பின்னுள்ள காரணத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். அசைவ உணவு உண்ணும்போது எட்ட முடியாத தியான நிலைகளைச் சைவ உணவு உண்ணும்போது எட்ட முடிந்ததை உதாரணத்துடன் கூறியுள்ளார். மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் தலைவலி, வயிற்றுவலியைப் போக்குவதற்கான மருந்தையும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நேர்காணலைப் பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share