படக்கவிதைப் போட்டி – 221

அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (21.07.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

Share

Comments

2 responses to “படக்கவிதைப் போட்டி – 221”

  1. Selvabharathi

    படக்கவிதைப் போட்டி 221

    அடடே! வயது முதிர்வு கொண்டதனால் வீதி…
    இளமையில் நீ தந்த அன்பும் அடைகளமும் முதுமையில் நீ பெறுவாய் என நினைத்தாயோ…
    வீதி வரை வந்தும் இன்னமும் பிடைபட வில்லையா! மடையனே!
    சுயநலமே சூழ் கொண்டு வாழும் நிலையில் பெற்றவராயினும் அந்நியரே…
    முதுமை உணர்த்தும் உனக்கு ரூபாயின் மதிப்பை ஊட்டி வளர்த்ததால் வந்த வினை என்று…
    நீயும் இந்த பஞ்சு மெத்தை போலதான்…
    உழைப்பை சுரண்டிவிட்டு..
    உதவாத போது வீதி வரத்தான் வேண்டும்…

  2. Shenbaga jagatheesan

    நிதானமாய்…

    வாழ்க்கை யென்பது சக்கரம்தான்
    வந்து போகும் மேல்கீழாய்,
    வாழ்ந்து வந்தவன் உச்சத்தில்
    வந்து விடுகிறான் துச்சமாய்,
    பாழ்படும் பகட்டு வாழ்வதுவும்
    பஞ்சு மெத்தையும் பன்றிநாய்க்கே,
    வாழ்ந்திடு கொஞ்சம் நிதானமாயே
    வராது பெரிதாய் அடியதுவே…!

    செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *