Tag: சி.ஜெயபாரதன்

  • காதல் நாற்பது (22)

    கொடுமை இழைக்கும் இவ்வுலகம்!

    elizabeth-browning1-150x150
    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    ஒருவரை ஒருவர் நெருங்கி

    நெருக்கமாய் நம்மிரு ஆத்மாக்கள்

    நேருக்கு நேர், மௌனமாய்

    நெஞ்சுறுதி யோடு

    நிமிர்ந்து நிற்கும் போது,

    என்ன கொடுமை எல்லாம்

    கசப்பாய் எமக்கு இழைக்குமோ

    இவ்வுலகம் ?

     

    வளைவுத் திருப்பங்களில் தீப்பற்றி

    முறிந்து போகும்

    விரிந்திடும் எமது இறக்கைகள் !

    எம்மைத் திருப்தி யுடன்

    இங்கே நீண்ட காலம் வாழ விடுமா ?

    சிந்திப்பாய் !

    மென்மேல் ஏறிடும் தேவதைகள்

    நம்மேல் வலுவாய்த் தூவிடும்

    உன்னத மாகப்

    பொன்னிசைப் பாடல் சிமிழை,

    ஆழ்ந்த நமது

    அருமை மௌனத் திடையே !

     

    என்னினியவனே,

    தகுதி யற்ற மனிதரின்

    முரண்பட்ட மன முடக்கம்

    விரட்டித்

    தூய நம் ஆன்மாக்களைத்

    துண்டிக்கும் இந்த

    மண்ணில் வசிக்க வேண்டும் நாம் !

    காரிருள் வெளிக்குள்ளே

    ஒரே ஒரு நாள்

    காதலித்து நிற்க எனக்கு நீ

    ஓரிடத்தை அனுமதி

    மரிப்பு நேரச் சுழியிட்டு !

     

    ********************

    Poem -22

    Sonnets from the Potuguese

    By: Elizabeth Browning

     

    When our two souls stand up erect and strong,

    Face to face, silent, drawing nigh and nigher,

    Until the lengthening wings break into fire

    At either curved point,–what bitter wrong

    Can the earth do to us, that we should not long

    Be here contented? Think. In mounting higher,

    The angels would press on us and aspire

    To drop some golden orb of perfect song

    Into our deep, dear silence. Let us stay

    Rather on earth, Beloved,–where the unfit

    Contrarious moods of men recoil away

    And isolate pure spirits, and permit

    A place to stand and love in for a day,

    With darkness and the death-hour rounding it.

    **********

     

    Share
  • 2015 ஆண்டில் இந்தியா அமைக்கப் போகும் இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை ​​ கருவி ஏற்பாடு

     

    jay

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DraGujBk2Ns

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ehczW4KxWeU

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GAq6ecjeGZA

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=apv5p-bpBH0

    http://www.noaa.gov/features/03_protecting/tsunami5.html

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    முடுக்கி விட்ட பம்பரக் கோளம்! கடற்தளம்

    உடுக்க டித்துப் போடுமே தாளம்! சுனாமி

    அடுத்த டுத்துச் சீறிடும் நாகம்! உயிர்களை

    எடுத்துச் செல்லும் மீறிடும் வேகம்!

    பொறிநுணுக்கத்தில் முன்னேறிய இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், இயற்கை அன்னையின் மிகக் கொடிய சுனாமி இன்னலின் பாதிப்புக்கு நாம் உட்பட்டுள்ளோம் .   2015 இல் அமைக்கப் போகும் நமது புதிய அபாய எச்சரிப்புச் சாதனமானது, இந்திய அரசுடன் இணைந்து விருத்தி செய்யப்பட்டு, சுனாமி தாக்குதலால் உயிரிழப்பு  நேராமல் எதிர்காலத்தில் தடுக்கும்.

    ஸொஃபியா  ஸாலினியஸ் [RegPoint European Company Chief Executive] [அக்டோபர் 10, 2014]

    கடந்த ஆறு மாத காலங்களாக நாங்கள் எதிர்ப்பட்ட பொறிநுணுக்கச் சவால்களைக் கடந்து வெளி வந்துள்ளோம்.    தற்போது கிடைத்துள்ள ஹைதிராபாத் பொறிநுணுக்க நிறுவக உதவி யோடு, பல நூறு உயிர்களைப் பாதுகாக்கப் போகும் ஓர் உன்னத சாதனத்தை மேலும் துல்லிய நுணுக்கக் கருவியாக்கப் போகிறோம்.

    சித்தார்த்த தாஸ்  [Director, RegPoint Indian Operations, UK]  [அக்டோபர் 10, 2014]

    Wave watchdog

    2015 ஆண்டில் இந்தியா இயக்கப் போகும் புதிய சுனாமி எச்சரிப்பு ஏற்பாடு

    இந்தியா 2015 ஆண்டு ஆரம்ப மாதங்களில் சுனாமி அபாயத்தைத் தடுக்க முற்போக்கான ஓர் எச்சரிக்கை  ஏற்பாடைத் தென்னிந்தியாவில் ஹைதிராபாத் நகரில் அமைக்கப் போகிறது.   அந்த நூதன சாதனக் கருவியை விருத்தி செய்யும் ஐரோப்பிய நிறுவகம் : ரெஜ்பாயின்ட் [RegPoint] என்பது.  அதைச் செய்து முடிக்க அதிபர் சித்தார்த்த தாஸ் நியமிக்கப் பட்டிருக்கிறார்.   அந்த சுனாமி எச்சரிக்கைச் சாதனம் அபாய முன்னறிப்பை குறிப்பிட்ட கடல் அரங்கத்தின் அத்தனை மொபைல் ஃபோன்களுக்கும் விரைவில் அனுப்பும் தகுதி பெற்றது.   அந்த முன்னறிவிப்பு சுனாமி வரும் கால நேரம், கடற்கரைப் பகுதிகளைக் குறிப்பிடுவதோடு பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய  விதி முறைகளையும் எடுத்துக் கூறும்.  2004 டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமிப் பேரலை அடிப்பில் சுமார் 230,000 பேர் தெற்காசிய இந்து மாக்கடல்  கடற்கரை ஓரங்களில் உயிரிழந்தனர்.   ஏறக்குறைய 2 மில்லியன் நபர்கள் இடப் பெயர்ச்சி செய்ய நேர்ந்தது.  சுனாமி நேர்ந்து பத்து வருடங்கள் கடந்த பின்னும் உயிரிழப்புகளைத் தடுக்கக் கூடிய ஓர் உன்னத நவீன எச்சரிக்கை ஏற்பாடு இன்னும் முறையாக இந்து மாக்கடல் கரையோர நாடுகளில்  அமைப்பாக வில்லை என்பது வருந்தத் தக்கது.   பசிபிக் கடற்கரை நாடுகளுக்குப் பாதுகாப்பு முன்னறிவிப்பு செய்ய ஹவாயி தீவில் ஏற்பாடு உள்ளது போல் இந்து மாக்கடல் நாடுகளுக்கு செம்மையான ஏற்பாடு எதுவும் முழுதாக இல்லை.   இந்திய தேசீய கடற் தகவல் பணி மையம் [INCOIS : Indian National Centre for Ocean Information Service] சுனாமி முன்னறிவிப்புத் தேவையை உணர்ந்து, பிரிட்டன் ரெஜ்பாயின்ட் நிறுவகத்தோடு பணிசெய்து ஓர் புதிய எச்சரிக்கை ஏற்பாட்டை அமைக்க இப்போது முன்வந்துள்ளது.

     Early warning system

    ‘சுனாமி எச்சரிக்கை அனுப்பச் சீரான, விரைவான ஒலிபரப்புச் சாதனத் துணை ஏற்பாடுகள், பயிற்சி முறைபாடுகள் நாடெங்கும் நிலவப்படாமல், ஏராளமான நிதியைச் செலவழித்து நவ நாகரீகக் கருவிகளும், புதுவித அதிர்வு உளவு அறிவிப்புகளும் நிறுவகம் செய்வதில் ஏது பயனுமில்லை! அவ்வித ஏற்பாடுகளை நாட்டில் அமைத்துக் கண்காணிப்பது மாபெரும் நெறிமுறைப் பணியாகும். சுனாமி வருகையை அறிவிக்கும் சமயத்தில், கடற்கரைப் பகுதியில் திரியும் ஒவ்வொரு தனி மனிதன் காதிலும் பலமாகத் தெளிவாக ஒலிக்க வேண்டும். அதுதான் மெய்யாக மிகவும் கடினமானது. ‘

    ‘இந்து மாக்கடல் அரங்கு அனைத்திலும் சுனாமி எச்சரிக்கை செய்ய சுமார் 30 நிலநடுக்க வரைமானிகளும் [Seismographs], 10 அலை உயர அளப்புக் கருவிகளும் [Tidal Gauges], 6 சுனாமி உளவுச் சமிக்கை அனுப்பும் ஆழ்கடல் மிதப்பிகளும் [Deep-Ocean Assessment & Reporting of Tsunami (DART) Buoys] தேவைப்படும். இந்து மாக்கடல் எச்சரிக்கை அறிவிப்பு ஏற்பாடுகளை நிறுவ, 2005 ஆண்டு நாணய மதிப்பில் சுமார் 20 மில்லியன் டாலர் செலவாகலாம். அந்தச் சாதனங்களைக் கட்டி முடிக்க ஓராண்டு ஆகும். ‘

    பிரதம விஞ்ஞானி பிலிப்ஸ் மெக்ஃபாடன் [இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பாளர், பூதளவியல் கூடம், ஆஸ்திரேலியா]

    Tsunami Monitoring centre

    ‘இந்து மாக்கடலில் சுனாமி தாக்கிய போது (டிசம்பர் 26, 2004), கடற்பகுதி அரங்குகளில் மாந்தர் கேட்டதும் கண்டதும் இயற்கை விட்ட ஒரே ஓர் எச்சரிக்கை, அனைவரையும் நோக்கிப் பூத வடிவில் ஏறிவந்தப் பேரலை ஒன்றுதான்! ‘

    பிபிசி தகவல் நிருபர்

    ‘125 கோடி ரூபாய்ச் செலவில் பாரதம் அமைக்கப் போகும் முற்போக்கான சுனாமி எச்சரிக்கை ஏற்பாடு, மற்ற தென் கிழக்காசிய நாடுகளுக்குச் சிறிதளவு பயனே அளிக்கும் என்று அறியப்படுகிறது! 75 தளங்களில் ஊன்றப் போகும் பூதள அதிர்ச்சி உளவிகள், மூன்று அல்லது நான்கு மையங்களுக்கு அனுப்பப்பட்டு, 10-15 நிமிடங்களில் தகவல் அறிவிக்கும் தகுதி உடையவை. அவற்றின் மூலம் அதிர்வு மையத்தை [Epicenter] அறிவது அதிக நேரம் ஆகாது. அத்தள உளவிகள் அணு ஆயுதச் சோதனையும் உணர்த்தும் தன்மை உடையதால், பாரதம் அந்த ஏற்பாட்டின் சமிக்கைகளைப் பிற தென்னாசிய நாடுகளுக்குப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை! 28 இந்து மாக்கடல் கரையோர நாடுகளில் பாரதம், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகியவை மட்டுமே தனித்தனியான எச்சரிக்கை ஏற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றன. ஆழ்கடல் உளவுத் தகவல் ஏற்பாடு [Deep-Ocean Assessment & Reporting System (DART)] அமைப்பில் நாடுகளின் பங்கீட்டு அளவு இன்னும் முடிவாக வில்லை. ‘

    டாக்டர் ஹார்ஷ் குப்தா, முந்தைய செயலாளர் [Dept of Ocean Development]

    Australian Warning System

    நாகபட்டினத்தில் மெதுவான ஓராண்டு முன்னேற்றம்

    2004  ஆண்டில் பாரதத்தில் சுனாமி விளைத்த பேரளவுச் சேதங்கள், தென் கிழக்குக் கடற்கரையில் உள்ள 38 மீன்பிடிப்புக் கிராமங்களைப் பாதித்தன. சுமார் 17,500 குடும்பங்களின் வாழ்வும், வசதியும், வீடும், வேலையும் சுனாமின் வெறித் தாக்கலில் நிரந்தரமாய்ப் பறிபோயின! நாகபட்டினத்தில் மட்டும் 6065 பேர் உயிரிழந்தனர்! இந்தியாவின் சுனாமி மரணத் தொகையில் மிகையாக [மொத்தத்தில் மூன்றில் இரு பாகம்] நாகையில்தான் நேர்ந்துள்ளது! கட்டப்பட்டுப் பூர்த்தியான வீடுகள் இதுவரை: 1850. ஆனால் இன்னும் 14,000 வீடுகளில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக் கின்றன. அப்பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடியலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பாதிக்கப் பட்டவர் மறுவாழ்வுச் சீரமைப்புப் பொறுப்புக்கு நிதித் தொகைத் தனியார் [NGO] கைவசம் கொடுக்கப்பட்டு உள்ளது. பராமரிப்புப் பணிகள் நடத்தும் பொறுப்பு மீனவரின் தலைமை நாட்டாமைக்காரர் மேற்பார்வைச் சார்ந்தது. அந்தப் பழைய முறையில் முன்னேற்றம் சீராகச் செல்லாது, பல வேலைகள் இன்னும் ஆரம்ப நிலையில் ஆமை வேகத்தில்தான் நகர்ந்து வருகின்றன. ஆதலால் பாதிக்கப் பட்டவர் பலர் இன்னும் தற்காலிகக் கூடாரங்களில் வாழ்ந்து வருவது வருந்தத் தக்கது!

    Flow Chart

    வீடுகள் கட்ட நிலங்களை அரசாங்கம் பணம் கொடுத்து வாங்குவதில்தான் பல மாதங்கள் தேவையாகித் தாமதம் உண்டாகிறது! அறநெறி நிலைப்பகங்கள் [Charity Organizations] முன்வந்து கட்டும் வீடுகளும், நில ஆக்கிரமிப்புக்கு நீண்ட காலம் எடுப்பதால், தாமதப் படுகின்றன! நான்கு கிராமங்களில் அறிநெறி நிலைப்பகம் கட்டும் 535 வீடுகளின் நிலங்களை வாங்கவே பல மாதங்கள் ஆனதாய் அறியப் படுகிறது. தென்னிந்திய மீனவர் கூட்டுறவுக் குழுவின் [South Indian Federation of Fishermen Society] திட்ட அதிகாரி, சேவியர் ஜோஸஃப் தன் குழுவினரைப் பற்றிக் கூறுகிறார்: தரங்கம்பாடியில் 1500 வீடுகள், மீனவர் கூட்டுறவு முறையில் கட்டுமான மாகி வருகின்றன! அங்கே சுனாமியால் 291 பேர் உயிரிழந்தார். மீனவர் அனைவரும் ஒன்று கூடிப் ‘பணிப்பங்கீடு முனைப்பாடில் ‘ [Participatory Approach] முற்பட்டுச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். புதிய மீன் வாங்கும் வாகனத்தில் தன் பங்கை ஏற்றி விட்டு 22 வயது வீரன் என்பவர் சொல்கிறார்: ‘சுனாமிக்கு முன்னதாக இருந்ததை விடச் சீராகவே வாழ்ந்து வருகிறேன். புதிய படகு கிடைத்துள்ளது! ஆனால் குடி யிருக்க வீடுதான் இல்லை எனக்கு. ‘

    N OAA System

    தமிழக அரசின் சுனாமிப் பாதிப்பு நிவாரணப் பணிகள்

    தமிழக அரசு டிசம்பர் 26, 2005 இல் வெளியிட்ட ‘சுனாமியின் மேலேறி ‘ [Tiding over Tsunami] என்னும் கைச்சுவடியில், கடந்த 12 மாதங்களில் சுனாமி தாக்கிய பகுதிகளில் தமிழ் நாட்டரசு செய்த நிவாரணப் பணிகளைப் பின்வரும் பத்திகளில் காணலாம்:

    1. சுனாமி நிவாரணப் பணிகளுக்கு ஒதிக்கியுள்ள நிதித் தொகை 1138 கோடி ரூபாயில் 12 மாதச் செலவு 880 கோடி ரூபாய். அத்தொகையில் ஆக்கிய பணிகள் பின்வருமாறு:
    2. வீடுகளை இழந்தோருக்குத் தற்காலீகக் கூடாரங்கள் 32,378 அமைப்புக்கு மட்டும் செலவு: 32 கோடி ரூ.
    3. நிரந்தர வீடுகள் கட்ட 26 கோடி ரூபாய்ச் செலவில் 1210 ஏக்கர் நிலங்கள் கைவசம் செய்யப் பட்டன. தேவையான 45,892 இல்லங்களின் எண்ணிக்கையில் இதுவரை கட்டி முடித்தவை: 5135 வீடுகள். அதாவது தமிழ் நாட்டில் சுமார் 10% குடும்பங்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன! இன்னும் 90% குடும்பங்கள் நிரந்தர வீடுகள் இன்றி தவித்துக் கொண்டு வருகின்றன! இந்த வீதத்தில் எல்லாருக்கும் வீடு கிடைக்க ஐந்தாண்டுகள் கூட நீடிக்கலாம்!
    4. இடிந்த 3957 வீடுகள் பழுதுகள் நீக்கமாகிச் செப்பனிடப் பட்டன. இன்னும் 3713 வீடுகள் பராமரிப்புப் பணிகளில் திறம்பட்டு வருகின்றன.
    5. கடல்நீர் சீரழித்த 8560 ஹெக்டா ஏக்கர் வயல் நிலங்களைச் சீர்ப்படுத்த 4.10 கோடி ரூபாய் செலவு செய்யப் பட்டது. மேலும் 670 ஹெக்டா ஏக்கர் தோட்டப் பயிர் நிலங்களும் 67 லட்சம் ரூபாய்ச் செலவில் சீரமைக்கப் படும்.
    6. பாதிக்கப் பட்ட மீனவருக்கு மறுவாழ்வு தரும் வகையில் சேதமடைந்த வல்லங்கள், கட்டுமரங்கள், மீன் வலைகள், மோட்டார் படகுகள் ஆகியவற்றின் பழுதுகள் செப்பனிட 143 கோடி ரூபாய்ச் செலவானது.

    GPS System

    1. பாதிக்கப் பட்ட பகுதிகளில் சாலை அமைப்பு, குடிநீர் வசதி, தெரு விளக்கு சீரமைப்பு, பாலங்கள் செப்பணிடல், (தொலைபேசி வடம், கம்பம் சீரமைப்பு) ஆகியவற்றுக்கு 88 கோடி 40 லட்சம் ரூபாய்ச் செலவு.
    2. நாகப்பட்டின மாவட்டத்தில் உள்ள அக்கரைப் பேட்டையில் 10 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்படும் மேல்பாலம் முடிவுறும் தறுவாயில் உள்ளது.
    3. கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடி, கீழமணக்குடி ஆகிய இரண்டையும் இணைக்கும் தற்காலிகப் பாலம் 1 கோடி 40 லட்சம் ரூபாய்ச் செலவில் முடிந்து, மாநில முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா 2005 டிசம்பர் 26 இல் திறந்து வைத்தார்.
    4. சுனாமி பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளில் இதுவரை 121 பள்ளிகள் அமைக்கப் பட்டுள்ளன. பள்ளி மாணவர் நலனைப் பேணும் பல்வேறு திட்டங்களுக்கு 14 கோடி, 40 லட்சம் வழங்கப் பட்டது. 100 மேற்பட்ட பள்ளிகள் பராமரிக்கப் பட்டுப் புதிய பள்ளிக்கூடங்கள் கட்டப் பட்டன. சுமார் 37000 மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு இணைச் சீருடைகள் அளிக்க மொத்தம் 2 கோடி 91 லட்சம் செலவானது. நிதி அடிப்படையில் நடக்கும் பள்ளிகளில் முதல்-பனிரெண்டு வகுப்பு மாணவர்கள் 5264 பேருக்கு இலவச நூல்கள், மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப் பட்டன.
    5. சுனாமி தாக்கிய பகுதிகளில் அனாதிக் குழந்தைகளுக்காக கடலூர், நாகப்பட்டினம், கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப் பட்டன.

    Tsunami zone

    தென் கிழக்காசிய நாடுகளில் நிவாரணப் பணிகள்

    2004 டிசம்பர் 26 இல் தாக்கிய சுனாமியில் தென் கிழக்காசிய நாடுகள் இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, அந்தமான், நிகோபார், மால்தீவ் தீவுகள் ஆகிய அனைத்துப் பகுதிகளில் மாண்டவர் மொத்தம் 216,000 பேர் என்று தற்போது கருதப் படுகிறது. 500 சுனாமி பாதித்த அரங்குகளில் வாழும் சுமார் 350,000 பேருக்கு 13 மில்லியன் டாலர் நிதி செலவழித்து ஆரோக்கிய, சமூக மனோவியல் உதவி, மருத்துவம், நோய்த் தடுப்பு, கல்வி, கூடார அமைப்பு, குடிநீர் வசதி, உணவளிப்பு, அனாதைப் பிள்ளைகள் இல்லம் ஆகிய பொதுப் பணிகளுக்குச் செலவானது என்று அறியப் படுகிறது. பொதுவாக உதவிகள் செய்யப் பட்ட அனாதைக் குழந்தைகள் அகில நாட்டு ஊழியரின் உளவுக்கும், உரையாடலுக்கும் ஆட்பட்டுச் சோதிக்கப் பட்டனர்.

    கடந்த ஆறு மாதங்களாக அபாய மீட்சிப் பணிகளை விட்டு, நீண்ட காலப் பணிகளுக்குத் திட்டங்கள் உருவாகி வடிவம் பெற்றன. நிரந்தர வீடுகள், பள்ளிக் கூடங்கள், மருத்துவச் சாலைகள், சுகாதார முறைகள், ஊதிய வசதிகள், மறுவாழ்வு மீட்சி உதவிகள் போன்றவை விருத்தி செய்யப் பட்டன. தமிழ் நாட்டில் அனாதைச் சிறுவருக்குக் காப்பகங்கள் அமைக்கப் பட்டன! சென்ற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நாகபட்டின மாவட்டத்தில் உள்ள 10 கிராமங்களில் 36 குழந்தைகளின் காப்பு முறைகள் சமூகச் சிறப்பாளரால் உளவுக்கு ஆளாகிச் சோதனைக் குட்பட்டனர்! போன ஆறு மாதங்களில் நான்கு நாட்டைச் சேர்ந்த காப்பகங்களின் 8 முதல் 18 வயதுள்ள 330 சிறுவர், சிறுமிகள் கேள்விக்குள்ளாகி உளவு செய்யப் பட்டனர்.

    Tsunami Instruction

    ஆழ்கடல் உளவுத் தகவல் சுனாமி அறிவிப்பு (DART)

    சுனாமியால் பாதிப்பான தென் கிழக்காசிய கடற்கரை நாடுகளில் எல்லாம், சுனாமி எச்சரிக்கைச் சங்குகள் அமைப்பாகி, மக்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனவா என்பது விளக்கமாகத் தெரிய வில்லை. சுனாமி எச்சரிக்கை ஏற்பாடுகளுக்கு இருவித அமைப்பாடுகள் மிக்க அவசியம். கடற்தட்டில் நில அதிர்ச்சி உண்டாகி, தற்போது இயங்கி வரும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை ஏற்பாடுகள் தூண்டி, தென்னாசிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் அபாயச் சங்குகள் அலறி மக்களை மேட்டுத் தளங்களுக்கு அனுப்புவது அல்லது ஏற்றிக் கொண்டு போவது அவசியம். அந்த ஏற்பாடுகளை அனைத்து தென்னாசிய நாடுகளும் முறையாக அமைப்பதற்கு வேண்டிய நிதி வசதிகள் ஏராளமாய்க் கைவசம் உள்ளன. சமீபத்தில் தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அத்தகைய ஏற்பாடுகளை அமைத்துப் போலி அபாயப் பயிற்சிகள் மக்களுக்கு அளிக்கப் பட்டன! அதுபோல் பாரதத்தில் சுனாமி தாக்கிய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் அபாயச் சங்குகள் அமைக்கப் பட்டதும், போலி அபாயப் பயிற்சிகள் நடத்தியதும் செய்திகள் மூலம் வெளியிடப் படவில்லை!

    அடுத்த முக்கியமானது, இந்து மாக்கடல் கடற்தட்டு அதிர்வு உணரும் உளவியும், அது அனுப்பும் சமிக்கையை ஏற்று மைய அரங்குகளுக்கு ஊட்டும் துணைக்கோள் ஏவுதலும் ஆகும். பசிஃபிக் கடல் அரங்குகளில் உள்ளது போல், இந்து மாக்கடல் அரங்கிலும் தொடர்ந்து பணி செய்யும் ஓர் நிரந்தர அமைப்பு அவசியம்! இந்து மாக்கடலில் 27 கடற்கரை நாடுகளுக்கு அவ்விதச் சுனாமி அபாய உளவுச் சாதனக் கூட்டு ஏற்பாடுகள் அவசியம். தாய்லாந்து, பாரதம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் தனித்தனி வழியில் கடற்தளப் பூவதிர்ச்சியை உளவு செய்யப் போகின்றன! ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளும் எச்சரிக்கை ஏற்பாடை மட்டும் விருத்தி செய்ய முயற்சி செய்கின்றன. தாய்லாந்து ஹவாயி, ஜப்பான் ஆகிய இரு நாடுகள் அனுப்பும் சமிக்கையை வாங்கி, சுனாமி அபாய அறிவிப்பு மையத்தை நிர்மாணம் செய்துள்ளது. தற்போது தாய்லாந்தில் 76 ஊதுசங்குக் கம்பங்கள் கடற்பகுதிகளில் நிறுவி, போலிப் பயிற்சி முறைகளையும் மக்களுக்குக் கற்றுத் தந்து வருகிறது.

    Warning Posters

    இந்தியா சுனாமி அறிவிப்புக்கு 11 கடலலை மானிகளை [Tide Gauges] அமைத்து, அவற்றின் சமிக்கையும், பூகம்ப அதிர்வு சமிக்கையும் உளவு செய்ய மையம் ஒன்றை நிறுவி, அபாய எச்சரிக்கை அனுப்பும் ஆற்றல் கொண்டுள்ளது. ஆனால் எத்தனை [75 ?] கடற்தளங்களில் ஊதுசங்குக் கம்பங்கள் நிறுத்தப் பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை! இன்னும் 2 வருடத்தில் பாரதத்தின் முழு எச்சரிக்கை ஏற்பாடுகளும் இயங்கி வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஜெர்மன் பொறியியல் நிபுணர் உதவியுடன் இந்தோனேசியா 125 மில்லியன் டாலர் செலவழித்துத் தனது அறிவிப்பு ஏற்பாடுகளைத் தயாரிக்கப் போவதாய் அறியப் படுகிறது.

    இந்து மாக்கடலில் எழும் சுனாமி எச்சரிக்கை ஏற்பாடுகள் முழு மூச்சில் பணிபுரிவதற்கு முன்பாக, இடைநிலை அமைப்பாக ஜப்பான், ஹாவாயி ஆகிய இரண்டு நாடுகளும் அனைத்து தெற்காசிய நாடுகளுக்கு எச்சரிக்கைத் தூண்டு சமிக்கையை அறிவிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளன! அந்த ஏற்பாட்டிற்குத் தற்போது 25 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக் கின்றன. கடற்தள நில அதிர்வுச் சமிக்கை கிடைத்தவுடன், அதைத் தம்தம் கடற்கரை பகுதிகளுக்கு அனுப்பும் பொறுப்பு, ஒவ்வொரு நாட்டையும் சார்ந்தது! ஐக்கிய நாடுகள் பேரவை [United Nations (UNESCO)] தெற்காசிய நாடுகளுக்குச் சுனாமி பாதிப்புகள், எச்சரிக்கை, பாதுகாப்புகள், பயிற்சிகள் ஆகியவற்றில் அனுபவம் பெறுவதற்கு உதவி செய்யப் போவதாய் முடிவு எடுத்துள்ளது.

    Tsunami warning buoy

    [தொடரும்]

    தகவல்:

    1. Chennai Online News Service [Dec. 8, 2005]
    2. Relief Website [www.reliefweb.int/rw…./openDocument] (Dec.14, 2005)
    3. The Slow Process of Rebuilding Lives By: Indrani Sen [www.Newstoday.com/news/nationworld] (Dec 26, 2005)
    4. Tsunami Adalats get 1.88 lakhs Complaints By: G. Jagannath [www.newstodaynet.com] (Dec 24, 2005)
    5. Buzz of Relief in Worst-hit Nagapattinam By Ganesh Nadar [www.rediff.com/cms] (Jan 5, 2005)
    6. Nagapattinam Pays Homage to Tsunami Dead, Press Trust of India (Dec 26, 2005)
    7. Shri Dasanudas Charies Activities- Tsunami Relief Efforts (Dec 30, 2004)
    8. Tsunami Anniversary: Indians Remember Those Lost with Prayers & Vigil, DPA New Delhi [www.taipeitimes.com/News/World (Dec 27, 2005)
    9. Tributes Mark Tsunami Anniversary in Tamil Nadu, Managing Tsunami – Lessons of Dec 26, 2004 [http://ww1.mid-day.com/news/nation/2005/december]

    10 Tsunami Relief Works – Tsunami Relief & Rehabilitation in Progress, Order of Ramakrishna [www.sriramakrishanamath.org/news/tsunami.shtml]

    11 Rebuilding The Lives & Livelihoods, Indian Tsunami Response- SEEDS Press Release, Reuters Alertnet.

    12 Tamil Nadu Chief Minister Releases Booklet on Tsunami Relief, ‘Tiding over Tsunami ‘ [Dec 26, 2005]

    13 Managing Tsunami Workshop – Lessons of December 26, 2004 Organised By: M.S. Swaminathan Research Foundation, Chennai (Dec 26, 200).

    14 Indian Ocean Tsunami Warning System -BBC News [http://news.bbc.co.uk/go/] (Dec 23, 2005)

    15 India Unlikely to Share Seismic Data By: Kalyan Ray, Deccan Herald (Dec 25, 2005)

    16 Indian Ocean Tsunami Warning Group Meeting, Indian National Centre for Ocean Information Service (INCOIS), Hydrabad, India.

    17 Deep Ocean Assessment & Reporting of Tsunami System (DART System)

    18 UNICEF Releases Tsunami Relief Update, India Info News (Dec 22, 2005)

    19.  http://nationmultimedia.com/national/Tsunami-warning-system-finally-ready-after-8-years-30196748.html  [December 25, 2012]

    20. http://ngm.nationalgeographic.com/2012/02/tsunami/folger-text  [February 2012]

    21.  http://timesofindia.indiatimes.com/india/Andaman-tsunami-warning-system-can-alert-in-3-minutes-Scientist/articleshow/20551705.cms [June 12, 2013]

    22.  http://en.wikipedia.org/wiki/Indian_Ocean_Tsunami_Warning_System   [September 6, 2014]

    23.  http://wcatwc.arh.noaa.gov/?page=history  [October 9, 2014]

    ****

    jayabarathans@gmail.com [S. Jayabarathan]  (October 11, 2014)]

    Share
  • ஜெர்மன் விண்வெளி ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரெளன்

    சி. ஜெயபாரதன்.

     

    ஜெர்மன் விண்வெளி ராக்கெட் மேதை 
    வெர்னர் ஃபான் பிரெளன்

    (1912 -1977)

    சிஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    “நமது சூரியன் நமது காலக்ஸியில் உள்ள 10 பில்லியன் விண்மீன்களில் ஒன்று.  நமது காலாக்ஸி பிரபஞ்சத்தில் பெருகிச் செல்லும் பில்லியன் கணக்கான காலக்ஸிகளில் ஒன்று.  நாம் மட்டும்தான் பிரமாண்டமான அந்த அரங்கில் வாழ்ந்து வரும் உயிர்ப் பிறவிகள் என்று எண்ணுவ‌து உச்சத்தின் அனுமானம்.”

    வெர்னர் ஃபான் பிரௌன்.

    “ஒரு விண்வெளிக் கப்பலில் அனுப்புவதற்கு ஏற்ற சிறந்த மின்கணனிக் கருவி மனிதன்தான்.  திறமை குன்றிய அவன் மட்டுமே பெருமளவில் உற்பத்தி செய்யத் தகுதி பெற்றவன்.”

    வெர்னர் ஃபான் பிரௌன்.

    விண்வெளி யுகம் பிறந்தது

    அண்டவெளி யுகமும், அணுசக்தி யுகமும் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில், போர் அழிவியல் விஞ்ஞானத்தால் [Science of Destruction] விளைந்த சரித்திரப் புகழ் பெற்ற இரண்டு புரட்சி விந்தைகள்! புது யுகம் தோற்றுவித்த அற்புதச் சாதனைகள், அமெரிக்க அணுகுண்டு ஆராய்ச்சில் பிறந்த அணுசக்தி, ஆக்க சக்தியாக மாறி உலகெங்கும் மின்சக்தி உற்பத்திப் பெருகி வருகிறது. அடுத்து ஜெர்மனி கட்டளை ஏவுபாணங்களாக [Guided Missiles] எறிந்த V-2 ராக்கெட்டுகள் அண்ட கோள யாத்திரைக்கு அடிகோலி விண்வெளிப் படையெடுப்பு [Space  Exploration] விருத்தியாகி வருகிறது. 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி ரஷ்யா அண்ட வெளியில் முதன் முதலாகப் பூமியைச் சுற்றிவரும் செயற்கைக் கிரகம், ஸ்புட்னிக்-1 [Sputnik 1] விண்சிமிழை ஏவி, அண்டவெளிப் புரட்சியை ஆரம்பித்து வைத்தது. 1958 ஜனவரி 31 இல் அமெரிக்காவின் முதல் செயற்கைச் சிமிழ், தேர்வுக்கோள் ‍‍‍‍1 [Explorer 1] ஏவப்பட்டு அண்டவெளிப் போட்டி இரு நாடுகளுக்குள் எழுந்தது.


    விண்வெளி ஒற்றுக் கோள்களை ஏவியும் [Spy Satellites], சந்திர மண்டலப் பயணப் போட்டிகளை உண்டாக்கியும், அகிலவெளி நிலையங்களை [Space Stations] மிதக்கவிட்டு அடுத்தடுத்துச் செப்பனிட்டும், அண்டவெளிப் படையெடுப்பு ஐம்பது ஆண்டுகளாய் உலகைக் கலக்கி அடித்து வருகிறது. பிரமாண்டமான புவிஈர்ப்புச் சக்தியை மீறி செயற்கைக் கோள்களும், விண்வெளிக் கப்பல்களும், அண்டவெளி நிலையங்களும் வானில் ஏவி அடுக்க‌ப்பட்டு, பூமியைப் பவனி வரத் தூக்கிச் சென்ற அசுர ராக்கெட் எஞ்சின்களை ஆக்கிய நவீன எஞ்சினியர், ராக்கெட் விஞ்ஞானிகளில் ஒப்பற்றவர், வெர்னர் ஃபான் பிரெளன் [Wernher Von Braun]. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் பேரழிவு உண்டாக்கிய ஜெர்மன் V-2 ராக்கெட்டுகளை, கட்டளை ஏவுபாணங்களாய் [Guided Missiles] ஏவிய வெர்னர் ஃபான் பிரெளன்தான் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஜெர்மன் ராக்கெட் விஞ்ஞானி.  யுத்தத்திற்கு முன்பு, அவர் ஹிட்லர் ஆணைக்குப் பணிந்து பணியாற்றிய‌ ஒரு ஜெர்மன் எஞ்சினியர்! யுத்தத்திற்குப் பின்பு அவர் அமெரிக்காவிடம் சரண் புகுந்து பணி செய்த‌ ஓர் அமெரிக்க எஞ்சினியர்!

    விண்வெளி யாத்திரைக்கு விதையிட்ட மேதைகள்

    கி.மு.4000 ஆண்டில் பாபிலோனியன் சுவடுகளில் எழுதப்பட்ட அண்டவெளிப் பயணம் பற்றிய சான்றுக் கதைகள் பல இன்றும் காணக் கிடக்கின்றன. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க எழுத்தாளி லூசியன் [Luciஅன்] நிலவுப் பயணம் பற்றி ஒரு புனைப் படைப்பை எழுதியுள்ளார். ஜெர்மன் வானியல் வல்லுநர் [Astronomer] ஜொஹானஸ் கெப்ளர்  [Johannes Kepler 1540-1650] சந்திரப் பயணம் பற்றி ஒரு விஞ்ஞானப் பதிப்பை எழுதி யுள்ளார்.  பிரான்சில் எழுத்தாள ஞானிகள், வால்டேர் [Voltaire] 1752 இல் சனி மண்டலப்  பிராணிகளைப் பற்றியும், ஜூல்ஸ் வெர்ன் [Jules Verne] 1865 இல் ‘பூமியை விட்டு நிலவுக்கு’ [From the Earth to the Moon] என்னும் பெயர் பெற்ற நாவலில் விண்வெளிப் பயணத்தைப் பற்றியும் எழுதியுள்ளார்கள். பிரிட்டிஷ் எழுத்தாள மேதை ஹெச்.ஜி. வெல்ஸ் [H.G. Wells], 1898- 1901 இல் ‘அகிலக் கோளங்களின் யுத்தம்’ [War of the Worlds], ‘சந்திரனில் முதல் மானிடர்’ [The First Men in the Moon] என்னும் இரண்டு விண்வெளிப் பயண நாவல்களைப் படைத்துள்ளார்.

    பிரிட்டிஷ் விஞ்ஞானக் கணித மேதை ஐஸக் நியூட்டனின் [Isaac Newton] பெயர் பெற்ற, மூன்றாம் ‘நகர்ச்சி நியதியின்’ [Newton’s Third Law of Motion] கூற்றுப்படி ‘முன்னுந்தல் ஒவ்வொன்றும் அதற்குச் சமமான எதிர்ப் பின்னுந்தலை உண்டாக்கும்’ [For every action, there is an equal & opposite reaction]. நியூட்டனின் மூன்றாம் நியதியே ராக்கெட் நகர்ச்சிக்கு  அடிப்படையான கோட்பாடு. ஒரு பலூனை முழுதாக ஊதி மேலே ஏவினால், காற்று பின்புறம் உதைக்க, பலூன் எதிர்த் திசையில் அதாவது முன்புறம் உந்துகிறது. அதே முறையில்தான் அதிவேக அனல் வாயுக்கள் பின்னே வெளியேற, ராக்கெட் முன்னோக்கி உந்திப் பயணம் செல்கிறது.

    பண்டை காலத்தில் பயன்பட்ட ஏவுபாணங்கள்

    ராக்கெட் வீச்சு [Rocket Propulsion] பண்டைக் காலம் தொட்டே பழக்கப் பட்ட ஓர் ஏவுகணை ஆயுத நுணுக்கம். முதன்முதலில் சைனாவில்தான் 13 ஆம் நூற்றாண்டில் ‘திடப்பொறி ஏவுபாணம்’ [Solid Propellant Rocket] கண்டு பிடிக்கப் பட்டது. கி.பி.1232 இல் சைனாவில் கைஃபெங் [Kaifeng] நகரைக் காப்பாற்ற, மங்கோலிய மிலேச்சர்களை எதிர்த்து விரட்டத், ‘தீக்கவண்  ஏவுபாணங்கள்’ [Rocket Torches] எறியப் பட்டன. ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டுகளில் ராக்கெட்கள் வானவெடிகளில் பயன்பட்டன.

    இந்தியாவில் மைசூரை ஆண்ட ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் 4000 அடி பாய்ந்து தாக்கும், மூங்கில் குழல்களில் செய்த ஏவுபாணங்களை எறியும் 5000 தரைப் படை ஆட்களைக் கொண்டு 1792 -1799 இல் பிரிட்டீஷ் படையினரைத் தாக்கி, சீரங்க பட்டணத்தில் இரண்டு முறை வெற்றி யடைந்ததாக இந்திய‌ச் சரித்திரம் கூறுகிறது.

    1805 ஆண்டு நெப்போலியன் போர்களில் [Nepoleanic Wars], பிரிட்டன் முதன் முதலாகக் ‘காங்கிரீவ் ஏவு பாணங்களைப்’ [Congreve Rockets] பயன் படுத்தி பிரான்ஸில் பொலோன் துறைமுகத்தைத் தாக்கியது. வில்லியம் காங்கிரீவ் [William Congreve] முதலில் விருத்தி செய்த ஏவுபாணங்கள் 9000 அடி தூரம் தாக்கும் வல்லமை உடையன. இரும்புத் தகடுக் குழல்களில் செய்யப் பட்டு, 7 பவுண்டு வெடி மருந்துடன் நிலை தடுமாறாமல் பாய, 15 அடி நீள வாலுடன் அமைக்கப் பட்டவை. காங்கிரீவ் இந்திய வீரர் திப்பு சுல்தான் ஏவுகணைகளை எடுத்துச் சென்று விருத்தி செய்ததாகத் தெரிகிறது. அமெரிக்க மெக்ஸிகன் போரிலும் [Mexican  War 1846-48], அமெரிக்க உள்நாட்டுப் போரிலும் [American Civil War 1861-65] 16 பவுண்டு பளுவில் 1.25 மைல்கள் பாயும் காங்கிரீவ் ஏவுபாணங்கள் உபயோகிக்கப் பட்டன.

    1920 ஆண்டில் மகாகவி பாரதியார் பாரத தேசத்தைப் பற்றிப் பாடும்போது ‘வானை  அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்று எழுதி யிருக்கிறார். 19-20 ஆம் நூற்றாண்டுகளில் விண்வெளிக் கோள் பயணங்களுக்கு ராக்கெட்டுகள் பயன் படலாம் என்று குறிப்பிட்ட இரு விஞ்ஞான எஞ்சினியர்கள், ரஷ்யாவின் ஸியால்கோவ்ஸ்கி [1857-1935]  [Tsiolkovsky], அமெரிக்காவின் ராபர்ட் கோடார்ட் [1882-1945] [Goddard]. அவர்கள்தான் நவீன ராக்கெட் பொறி நுணுக்கத்தின் மூல கர்த்தாக்கள். கோடார்டு திடஎரிப்பண்ட ராக்கெட்களை  [Solid Propellant Rockets] ஆய்வு செய்தவர். முதல் உலக யுத்தத்தின் போது, கோடார்டு தன் ராக்கெட் பணியை அமெரிக்க யுத்தப் படைக்கு அளிக்க முன்வந்தார். 1918 நவம்பரில் முறை யாக அமைக்கப் பட்ட ‘கூம்பி விரியும் புனல்’ [Convergent Divergent Nozzle] ஒன்றைக் கோடார்டு முதன் முதலாகத் தயாரித்து அதிவேக ராக்கெட் முன்னடிப் பயிற்சிச் [Preliminary  Trials] சோதனைகளை நிகழ்த்தினார். 1926 இல் முதன் முதல் எரித்திரவம் [Liquid Fuel] பயன்படுத்தி ஏவுபாணத்தை இயக்கிக் காட்டியவர், கோடார்டு. வெர்னர் ஃபான் பிரெளனின் முதல் ராக்கெட் குரு, அமெரிக்காவின் ராபர்ட் கோடார்டு என்பது பலருக்குத் தெரியாது !

    விண்வெளி ராக்கெட் வேட்கையாளர்வெர்னர் பிரெளன்

    வெர்னர் ஃபான் பிரெளன் ஜெர்மனியில் இருந்த விர்ஸிட்ஸ் [Wirsitz, Now Wyrzysk, Poland] என்னும் நகரில் 1912 மார்ச் 23 ஆம் தேதி ஓர் பரம்பரைச் செல்வந்த‌க் குடும்பத்தில் பிறந்தார்.  சிறுவனை லூதரன் கிறிஸ்துவ ஆலயம் ஒப்பியவுடன், மகன் வெர்னரின் ஆர்வத்தைக்  கிளப்ப அவனது தாய் ஒரு தொலைநோக்கியைக் [Telescope] கொடுத்தார். எட்டு வயதுக்கு  முன்பே எழுந்த வானவியல் [Astronomy] காட்சி இச்சையும், விண்வெளிப் பயண  வேட்கையும், வெர்னரை விட்டு இறுதிவரை விலகவே இல்லை! 1920 இல் அரசு பதவியை ஏற்கும் பொருட்டு அவரது குடும்பம், பெர்லினுக்கு ஏக வேண்டியதாயிற்று.  பெர்லின் உயர்நிலைப் பள்ளியில் வெர்னர் ஃபான் பிரௌன் பெளதிகத்திலும், கணிதத்திலும் முதலில் கவனமாகக் கற்க வில்லை. அவரது 13 ஆவது வயதில் ஒரு பெரிய திருப்பம் நிகழ்ந்தது.  ஜெர்மன் ராக்கெட் மூலகர்த்தா [Rocket Pioneer] ஹெர்மன் ஓபெர்த் [Hermann Oberth] எழுதிய ‘அகில வெளிக் கோள் ராக்கெட்கள்’ [The Rocket into Interplanetary Space] என்னும் புத்தகம் அவர் கையில் அகப்பட்டது. அதிலுள்ள உயர்க் கணிதம் எதுவும் புரியாது, திணறித் தவிப்படைந்து பள்ளியில் மறுபடியும் மனம் ஊன்றிக் கற்று வகுப்பில் கணிதத்திலும்,  பெளதிகத்திலும் முதலாவதாகத் தேர்ச்சி பெற்றார்.

    1930 இல் பெர்லின் பொறியியல் கூடத்தில் [Berlin Institute of Technology] நுழைந்ததும், ஜெர்மன் அண்டவெளிப் பயணக் குழுவகத்தில் [German Society for Space Travel] சேர்ந்தார்.  வெர்னர் ஓய்வு நேரங்களில் எரி திரவத்தில் [Liquid Fuel] ஓடும் ராக்கெட் மோட்டார் [Rocket Motor]  சோதனையில் ஓபெர்த்துக்கு உதவி செய்து வந்தார். 1932 இல் யந்திரவியல் எஞ்சினியரிங் துறையில் B.S. பட்டம் பெற்று, பெர்லின் பல்கலைக் கழகத்தில் மேற் கல்வி பயிலச் சென்றார். ராக்கெட் குழுவில் இருந்த காப்டன், வால்டர் டோர்ன்பெர்கர் [Walter Dornberger, Later Major General] பிரெளனின் திறமையை வியந்து, ஜெர்மன் யுத்த சாதன அலுவலகத்தின் மூலம் ஓர் ஆய்வுக் கொடையை [Research Grant] ஏற்பாடு செய்து, வெர்னர் பிரெளன்  ராக்கெட் வளர்ச்சிக்குப் பணி புரிய வசதி செய்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து, வெர்னர் ‘ராக்கெட் எஞ்சின் எரி வெப்பம்’ [Combustion in Rocket Engines] ஆய்வுக்குப் பெளதிக Ph.D. பெற்றார். அந்த ராக்கெட் எஞ்சின்கள் 300-660 பவுண்டு ‘உதைப்புத்’ [Thrust] திறன் கொண்டவை.

    வெர்னர் பிரெளனுக்கு அமெரிக்காவின் ராக்கெட் மூல வல்லுநர், ராபர்ட் கோடார்டு [Rocket  Pioneer, Robert Goddard] மீது அளவிலாத மதிப்பு உண்டு. 1934 டிசம்பரில் வெர்னர் ஆக்கிய முதல் இரு ராக்கெட்டுகள் வெற்றிகரமாய் விண்வெளியில் செங்குத்தாக ஏறி 1.5 மைல் பயணம் செய்தன. அடுத்து ராக்கெட் வளர்ச்சித் தளம் ஜெர்மனியில் பால்டிக் கடல் அருகே, வடகிழக்குத் திசையில் பீனேமுண்டி [Peenemunde] கிராமத்தில் நிறுவனம் ஆனது. அங்கே  மேஜர் ஜெனரல் டோர்ன்பெர்கரின் கீழ் பிரெளன் பொறி ஆணையாளராய் [Technical Director] நியமிக்கப் பட்டார். எரித் திரவம் ஓட்டும் ராக்கெட் ஊர்தி [Liquid Fuelled Rocket Aircraft], ஜெட்  இயக்க‌ எழுச்சி முறைகள் [Jet-assisted Takeoffs] யாவும் வெற்றிகரமாய் எடுத்துக் காட்டப்  பட்டன.  இரண்டாம் உலக யுத்தத்தில் ஒலி மீறிய‌ [Supersonic] வேகத்தில் பாய்ந்து இங்கிலாந்தில் வெடி குண்டுகள் போட்டு இடித்துத் தகர்த்திய V-2 ராக்கெட் யுத்த ஆயுதங்கள், அங்குதான் 1942 அக்டோபர் 3 ஆம் தேதி முதல் வெர்னரின் நேர் கண்காணிப்பில் தயாராகின. அந்த யுத்தக் கட்டளை ஏவுபாணம் [Guided Missile] 46 அடி உயரம், 12 டன் எடையுடன், வெடிமருந்து நிரம்பி 60 மைல் உயரத்தில் ஏறிச் சென்றது.  1930-1945 ஆண்டுகளில் ஜெர்மனியில் ராக்கெட்கள், கட்டளை ஏவுபாணங்கள் வளர்ச்சி யடைந்தது போல், உலகில் வேறு எந்த நாட்டிலும் விருத்தி யடைய வில்லை.

    போருக்கு முன்பு ஒரு ஜெர்மன்போருக்குப் பின்பு ஓர் அமெரிக்கன்!

    உலக யுத்தம் முடியும் தறுவாயில் ஒருபுறம் நேச நாடுகளும், மறுபுறம் ரஷ்யாவும் வெர்னர் பிரெளன் ரகசிய ராக்கெட் குழுவினரைக் கைப்பற்ற அரும்பாடு பட்டனர்.  அப்போதுதான் அமெரிக்கா, ரஷ்யா இரண்டு நாடுகளுக் குள்ளும் ‘ஊமைப்போர்’ [Cold War] ஆரம்பமாகி ஒன்றை ஒன்று வெறுத்து ரகசிய அணுகுண்டு ஆயுத உற்பத்தியில் அச்சமும், ஐயப்பாடும் கொண்டி ருந்தன. அணு ஆயுதங்களைத் தூக்கிச் செல்லக் கட்டளை ஏவுபாணங்கள் [Guided  Missiles] தேவைப் பட்டதால், ஜெர்மன் ராக்கெட் குழுவை எப்படி யாவது பிடித்துத் தமக்கு ஏவுபாணம் செய்ய வைக்க‌ வேண்டும் என்று முந்திக் கொண்டு இரு நாட்டுப் படையினரும்  தேடினர்.

    வெர்னர், அவரது தம்பி மாக்னஸ் [Magnus] மேஜர் ஜெனரல், டோர்ன்பெர்கர் மற்றும் ராக்கெட் விருத்தி செய்யும் நிபுணர்கள் பலர், அமெரிக்க யுத்தப் படையினர் வசம் சரண் புகுந்தது, அமெரிக்காவின் பெரும் பாரத்தை இறக்கியது. அதே போல் மற்றும் சில ராக்கெட் நிபுணர்கள் ரஷ்யாவின் படையினரிடம் மாட்டிக் கொண்டார்கள்.  அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் யுத்ததிற்குப் பின்பு 15 ஆண்டுகளில் நிகழ்த்திய‌ விண்வெளிப் பயணப் போட்டிகள், மெய்யாக ஜெர்மனியின் பிரிவுபட்ட இருதரப்பு ராக்கெட்  நிபுணர்களுக்கும் இடையே நடந்த மெய்யான போட்டிகளே! பிடிபட்ட சில மாதங்களுக்குள், வெர்னர் ஃபான் பிரௌனும் மற்றும் 100 ராக்கெட் குழுவினர் நியூ மெக்ஸிகோவின் ஒயிட் சான்ட்ஸ் [White Sands] ஆய்வுதளத்திற்கு கொண்டு வரப் பட்டார்கள். அங்கே யுத்தத்தில் கைப்பற்றிய V-2 ராக்கெட்  அங்கங்கள் ஒருங்கே அடுக்கப்பட்டு, வெர்னர் ஆணையில் கட்டளை ஏவுமுறை [Guided Launching] ஆராய்ச்சிகள் நடத்தப் பட்டன.


    1955 இல் வெர்னர் ஃபான் பிரௌன் பைபிளை ஒரு கையிலும், அமெரிக்கக் கொடியை அடுத்த கையிலும் ஏந்தி, அமெரிக்கத் தேசீய கீதம் பாடி அமெரிக்கக் குடிமகன் ஆனார். 1954 இல் பூகோளச் சிமிழ் [Earth  Satellite] ஏவுதற்கு ஓர் ரகசிய கடற்படைத் திட்டம் உருவாகி ஏனோ அமைக்கப் படாமல்  தடங்க லானது. திடீரென அக்டோபர் 4, 1957 இல் முதன்முதல் ரஷ்யா, அண்ட வெளியில் ஸ்புட்னிக் 1 விண்கோளை ஏவிப் பூமியைச் சுற்ற வைத்ததும், உலக நாடுகள் ஆச்சரியப் பட, அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது! அடுத்து நவம்பர் 3 இல் ஸ்புட்னிக் 2, ஒரு நாயை ஏற்றிக் கொண்டு பூமியை வலம் வந்தது! விண்வெளிப் படையெடுப்பில் ரஷ்யா தனது கைப்பல உயர்ச்சியைக் காட்டியதும், அமெரிக்காவின் நெஞ்சம் கொதித்து, ஊமைப்போர் [Cold  War] அழுத்தம் ஏறியது! பச்சைக் கொடி காட்ட, வெர்னர் ராக்கெட் குழுவினர், 1958 ஜனவரி 31 இல் அமெரிக்காவின் முதல் செயற்கைக் கிரகம், தேர்வுக்கோள் 1 [Explorer 1] சிமிழை ஏவி விண்வெளிப் போட்டியைத் தொடந்தது!


    அமெரிக்க அண்டவெளித் திட்டங்களைச் செம்மையாய் நிறைவேற்ற ஜனாதிபதி ஐஸன்ஹோவர் [Eisenhover] ‘தேசீய விண்வெளிப் பயண ஆணையகம்’ [National Aeronautics &  Space Administration] நாசாவை [NASA] 1958 இல் ஏற்படுத்திய பின், ராக்கெட் குழுவினர், அலபாமா ஹன்ட்ஸ்வில் விண்வெளிப் பயண மையகத்திற்கு [Space Flight Center,  Huntsville Alabama] இடம் மாற்றப் பட்டு வெர்னர் ஃபான் பிரெளன் அதன் ஆணையாளராகப் [Director] பணி ஏற்றுக் கொண்டார். அப்போதுதான் சரித்திரப் புகழ் பெற்ற சந்திர மண்டல யாத்திரைக்கு சனி ராக்கெட்கள் [Saturn I, IB, V] கட்டப் பட்டு, பழுதின்றி குறிப்பிட்ட கால‌ நேரத்தில் சுடப்பட்டு, நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் சந்திர மண்ணில் முதன் முதல் தடம்வைத்து அண்ட கோளப் பயண வரலாற்றில் ஒரு புரட்சி ஏற்படுத்தினார்.

    கரி நிலாவில் அமெரிக்கக் கழுகு வந்து இறங்கியது!

    1961 மே மாதம் 24 ஆம் தேதி ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி சந்திர மண்டல பயணத்துக்கு அழுத்தமாக அடிகோலி ‘1970 ஆம் ஆண்டு முடிவுக்குள் மனிதன் ஒருவ‌னைச் சந்திர மண்டலத்தில் இறக்கி அவன் பாதுகாப்பாய் பூமிக்குத் திரும்ப வைக்கும் ஒரு குறிக்கோளைச் சாதிக்க, இந்த தேசம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அமெரிக்காவுக்கு நாள் குறிப்பிட்டுக் கடிகாரத்தை முடுக்கி விட்டார். பாய்ந்து சென்ற பழைய பல்லடுக்கு [Multi-Stage] ராக்கெட்களை விட, 10 மடங்கு திறமுடைய ஓர் அசுர  ராக்கெட் 50 டன் சாதனங்களைத் தூக்கிக் கொண்டு, சந்திரனை நோக்கி ஏவத் தேவைப்  பட்டது. அந்த இமாலயப் பணியைச் செய்தவர், வெர்னர் ஃபான் பிரெளன். யுத்த ஆயுதமாக அவர் விருத்தி செய்த மாபெரும் ராக்கெட் சனி I [Saturn I] கூட அப்பணிக்குப் போதவில்லை.

    ராக்கெட் சரித்திரத்தில் ஈடு இணை இல்லாத 363 அடி உயரம், 744 டன் உதைப்புத் [Thrust] திறமுடைய மகத்தான பூத ராக்கெட் சனி 5 [Saturn V] சந்திர மண்டலப் பயணத்திற்குத் தயாரானது. கென்னடியின் ஆணை 1969 ஜூலை மாதம் 20 ஆம் தேதி நிறைவேறியது.  அபெல்லோ 11 [Apollo 11] ஜூலை 16 ஆம் தேதி ஏவப்பட்டு, ‘கட்டளைச் சிமிழில்’ [Command  Module] மைகேல் காலின்ஸ் [Michael Collins] சந்திரனைச் சுற்றி வர, ‘நிலாச் சிமிழ்’ [Lunar  Module] என்னும் ‘அமெரிக்கக் கழுகு’ சந்திர ஈர்ப்பில் மெதுவாய் இறங்கித் தளத்தைத் தொட்டது [The Eagle has landed]. கரி நிலவில் கால்வைத்த சரித்திர விண் விமானிகள் [Astronauts] முதலில் நீல் ஆர்ம்ஸ்டிராங் [Neil Armstrong], இரண்டாவது எட்வின் அல்டிரின்  [Ediwin Aldrin].

    ஜெர்மனியில் யுத்த சமயத்தில் ஏவுபாண மரண ஆயுதங்களைத் தயாரித்த வெர்னரைச் சிலர் இகழ்ந்த போது, அவர் பதில் அளித்தார்: ‘விஞ்ஞானத்துக்கு என ஒரு தனித் தர்ம அளவுகோல் கிடையாது. குணமாக்கும் மருந்தும் அளவுக்கு மிஞ்சின் நஞ்சாகிறது.  திறமையுள்ள அறுவை நிபுணர் கையில் கொண்ட கத்தி மனித உயிரைக் காக்கும். அதே கத்தியை சிறிது ஆழமாய் நுழைத்தால் மனித உயிர் போய்விடும். அணு உலையில் அணுசக்தி மூலம்  மலிவான மின்சக்தியை உண்டாக்கலாம். அதே அணுசக்தி கட்டுமீறி எழுந்தால் அணு குண்டாகி மக்களைக் கொல்கிறது. ஆகவே ஒரு விஞ்ஞானியைப் பார்த்து அவன் பயன்படுத்தும் மருந்து, கத்தி, அணுசக்தி மனித இனத்துக்கு நலம் தருபவையா அன்றித் தீமை செய்பவையா என்று கேட்பது அறிவற்ற கேள்வி’.

    வெர்னருக்குப் பல அமெரிக்கப் பரிசுகளும், இருபது கெளரவப் பட்டங்களும் பல நாடுகளில் கிடைத்தன. அசுர ராக்கெட்களைப் படைத்து, அண்ட கோளங்கள் அருகே சென்று ஆராய உதவிய, சரித்திரப் புகழ் பெற்ற வெர்னர் ஃபான் பிரெளன் தனது 65 ஆம் வயதில் பான்கிரியா புற்று நோயில் துன்புற்று வெர்ஜீனியா அலெக்ஸாண்டி ரியாவில் 1977 ஆம்  ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி காலமானார்.

    ++++++++++++++

    Images : NASA, Wikipedea

    Information :

    1.  Wikipedea -Werner Von Braun (February 11, 2011)

    2.  http://inventors.about.com/od/bstartinventors/a/Von_Braun.htm  (Rockets of Werner Von Braun)

    3.  http://jayabarathan.wordpress.com/2011/02/04/robert-goddard/ (Robert Goddard)

    ++++++++++

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) February 11, 2011

    www.jayabarathan.wordpress.com/

     

    Share
  • இந்தியாவின்​ முதல் பௌதிக விஞ்ஞான மேதை​ ​ ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்

    — சி. ஜெயபாரதன்.

     

     இந்தியாவின்

    ​ முதல் பௌதிக விஞ்ஞான மேதை​

    ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்

    Jagadish Chandra Bose -1

    ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng (Nuclear),  கனடா

    பாரத தேசத்தின் விண்ணலை முன்னோடி ஆராய்ச்சி விஞ்ஞானி

     

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நான்கு சிறப்பான நிபுணர்கள் கம்பியில்லாத் தொடர்பை உலகில் ஏற்படுத்த இராப் பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள்! இத்தாலியில் பொறியியல் வல்லுநர், மார்கோனி [Marconi Guglielmo (1874-1937)]. ஜெர்மனியில் பெளதிக விஞ்ஞானி கார்ல் பிரெளன் [Karl Braun(1850-1918)]. ரஷ்யாவில் ​ரஷ்ய ​விஞ்ஞானி அலெக்ஸாண்டர் போபாவ் [Alexander Popov (1859-1905)]. இந்தியாவில் பெளதிக விஞ்ஞானி ஜகதிஷ் சந்திர போஸ் [Jagadis Chandra Bose].  மெய்யாக போஸ்தான் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அனைவருக்கும் முன்பாக அமைத்துக் காட்டியவர். அதிர்ஷ்ட தேவதை அருட்கண் திறந்து ஆசீர்வதிக்கா விட்டாலும், இந்தியாவின் விஞ்ஞான நிபுணர் ஜகதிஷ் சந்திர போஸ்தான் வானொலித் தொடர்பு ஆய்வில் முதலில் வெற்றி பெற்றவர் என்பது விஞ்ஞான வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சியாகும்!

    நோபெல் பரிசு பெற்ற ஸர் சி.வி. ராமனுக்கும் முன்பாகவே விஞ்ஞான ஆய்வுகளில் மூழ்கிக் கம்பியில்லாத் தொலைத் தொடர்பை உலகில் உண்டாக்கிய நான்கு முன்னோடி வல்லுநர்களில் ஒருவராகப் பெயர் எடுத்தவர் ஜகதிஷ் சந்திர போஸ். அத்துடன் பொது வினை புரியும் அநேக நுண்ணலைச் சிறு சாதனங்களைப் [Microwave Components] படைத்தவர். அவர் மில்லி மீட்டர் நீளலைகளில் [Millimeter Wavelengths] ஆய்வு செய்து பிறரை விட 50 ஆண்டுகள் முன்னதாக இருந்தார்! ரஷ்ய விஞ்ஞானி போபாவுக்கும் முதலாக, இங்கிலாந்தில் மார்க்கோனி [மே மாதம் 1897] படைப்பதற்கு முன்பாக, போஸ் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அமைத்துக் காட்டினாலும், இறுதியில் நோபெல் பரிசு பெற முடியாது சரியான சமயத்தில் இந்தியாவின் முதல் பௌதிக விஞ்ஞானி, ஜகதீஸ் சந்திர போஸின் உன்னத விஞ்ஞான ஆக்கம் உலகின் கண்களுக்குத் தென்படாமலே போனது!

    இந்தியாவின் முதல் பௌதிக விஞ்ஞான மேதை

    இந்தியாவில் நவீன விஞ்ஞான ஆராய்ச்சியின் தந்தை என்று சிலரால் போற்றப்படுவர் ஜகதிஷ் சந்திர போஸ்! 1930 இல் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்ற ஸர்.சி.வி. ராமன் (1888-1970) காலத்துக்கும் சிறிது முற்பட்டு விஞ்ஞான வளர்ச்சிக்கு பாரதத்தில் விதை யிட்டவர், J.C. போஸ். செடி, கொடி, மரம், புல், பூண்டுக்கும் மனிதர், விலங்குகளைப் போல் உணர்ச்சிகள் உண்டு என்று முதலில் அறிவித்தவர் போஸ்! தாவரவியல் விஞ்ஞானத்தில் ஆழ்ந்து பயிர் இனங்களின் நுண்ணிய​உணர்ச்சியைக் கருவிகள் மூலம் பதிவு செய்து மனிதர், விலங்குகளைப் போன்ற உயிர் இனங்களை ஒத்துள்ளது என்று கண்டு பிடித்தவர் போஸ்! விலங்குகளின் தசைகளுக்கு இணையாக தாவரவியல் தசைகளும் [Plant Tissues] உள்ளன என்று எடுத்துக் காட்டியர், போஸ்! ரேடியோ மார்கோனியைத் தெரிந்த அளவுக்கு, ஸர் சி.வி. ராமனை அறிந்த அளவுக்கு, தேசீய வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் புரிந்த கொண்ட அளவுக்கு இந்தியருக்கும், உலகினருக்கும் பாரதத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி, ஸர் ஜகதிஷ் சந்திர போஸைப் பற்றிப் பூர்வமாகத் தெரியாது!

    பதினெட்டாம் நூற்றாண்டில் மின்சக்தி யுகம் [Electricity Age] தோகை விரித்ததும் கம்பியில்லாத் தொடர்பைப் [Wireless Communication] பற்றி வேட்கை உண்டாகி அடுத்து நூறாண்டுகள் விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணர்களும் முயன்று வந்திருக்கிறார்கள்! 1795 டிசம்பர் 16 ஆம் தேதி ஸ்பெயின் தேசத்து விஞ்ஞானி, ஸால்வா [Salva] ஸ்பெயின் விஞ்ஞானக் கழகத்தில் [Spanish Academy of Sciences] தொலை வரைவுக்கு மின்சக்தி உபயோகம் [On the Application of Electricity to Telegraphy] என்னும் புதிய கருத்து வெளியீட்டைச் சமர்ப்பித்து ரேடியோ சாதனத்திற்கு முதலில் விதை ஊன்றினார். ஆனால் தீவிர முயற்சிகள் 1830 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ஆரம்பமாயின! விஞ்ஞான வல்லுநர்கள் பலர் அத்துறையில் மூழ்கி 1895 ஆம் ஆண்டில் ஓரளவு வெற்றி பெற்று முதலில் சிறிதளவு தூரத்துக்கு ரேடியோ வானலையை அனுப்பிக் காட்டினர்!

    Marconi-1

    இத்தாலிய விஞ்ஞானி மார்கோனி

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நான்கு சிறப்பான நிபுணர்கள் கம்பியில்லாத் தொடர்பை உலகில் ஏற்படுத்த இராப் பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள்! இத்தாலியில் பொறியியல் வல்லுநர், மார்கோனி [Marconi Guglielmo (1874-1937)]. ஜெர்மனியில் பெளதிக விஞ்ஞானி கார்ல் பிரெளன் [Karl Braun(1850-1918)]. ரஷ்யாவில் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் போபாவ் [Alexander Popov (1859-1905)]. இந்தியாவில் பெளதிக விஞ்ஞானி ஜகதிஷ் சந்திர போஸ் [Jagadis Chandra Bose]. போட்டியில் எல்லோரையும் முந்திக் கொண்டதாகக் கருதப்பட்டு மார்க்கோனியும், கார்ல் பிரெளனும் 1909 இல் நோபெல் பரிசைத் தட்டிக் கொண்டு போய்ப் பகிர்ந்து கொண்டார்கள்! மெய்யாக போஸ்தான் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அனைவருக்கும் முன்பாக அமைத்துக் காட்டியவர். அதிர்ஷ்ட தேவதை அருட்கண் திறந்து ஆசீர்வதிக்கா விட்டாலும், இந்தியாவின் விஞ்ஞான நிபுணர் ஜகதிஷ் சந்திர போஸ்தான் வானொலித் தொடர்பு ஆய்வில் முதலில் வெற்றி பெற்றவர் என்பது விஞ்ஞான வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சியாகும்! அமெரிக்காவின் மின்துறை மின்னியல் பேரவை IEEE [The Institute of Electrical & Electronics Engineers] J.C. போஸ் ரேடியோ சாதனத்தைக் கண்டு பிடித்த முன்னோடிகளில் [Pioneers of Radio] ஒருவர் என்று மட்டுமே சமீபத்தில் சான்றிதழ் கொடுத்துள்ளது!

     Popov Radio Equipment

    அலெக்ஸாண்டர் போபாவ் [Alexander Popov (1859-1905)]

    இந்தியாவில் நவீன விஞ்ஞான ஆராய்ச்சியின் தந்தை என்று சிலரால் போற்றப்படுவர் ஜகதிஷ் சந்திர போஸ்! 1930 இல் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்ற ஸர்.சி.வி. ராமன் (1888-1970) காலத்துக்கும் சிறிது முற்பட்டு விஞ்ஞான வளர்ச்சிக்கு பாரதத்தில் விதை யிட்டவர், J.C. போஸ். செடி, கொடி, மரம், புல், பூண்டுக்கும் மனிதர், விலங்குகளைப் போல் உணர்ச்சிகள் உண்டு என்று முதலில் அறிவித்தவர் போஸ்! தாவரவியல் விஞ்ஞானத்தில் ஆழ்ந்து பயிர் இனங்களின் நுண்ணிய ​உணர்ச்சியைக் கருவிகள் மூலம் பதிவு செய்து மனிதர், விலங்குகளைப் போன்ற உயிர் இனங்களை ஒத்துள்ளது என்று கண்டு பிடித்தவர் போஸ்! விலங்குகளின் தசைகளுக்கு இணையாக தாவரவியல் தசைகளும் [Plant Tissues] உள்ளன என்று எடுத்துக் காட்டியர், போஸ்! ரேடியோ மார்கோனியைத் தெரிந்த அளவுக்கு, ஸர் சி.வி. ராமனை அறிந்த அளவுக்கு, தேசீய வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் புரிந்த கொண்ட அளவுக்கு இந்தியருக்கும், உலகினருக்கும் பாரதத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி, ஸர் ஜகதிஷ் சந்திர போஸைப் பற்றிப் பூர்வமாகத் தெரியாது!

    Radio Inventers

    ஹெர்ட்ஸ், போபாவ் & மாக்ஸ்வெல்

    ஜகதிஷ் சந்திர போஸின் ஆரம்ப வாழ்க்கை வரலாறு

    1858 நவம்பர் 30 ஆம் தேதி வங்காளத்தில் மைமென்சிங் [Mymensigh, Bengal] என்னும் ஊரில் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்தார். இருபத்திரண்டு வருடங்கள் இந்தியாவின் பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பாகக் கல்வி கற்று மேற்கொண்டு லண்டன் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயில, 1880 இல் இங்கிலாந்துக்குச் சென்றார். ஓராண்டுக்குள் போஸ் இயற்கைவியல் விஞ்ஞானத்திற்கு [Natural Science] உபகாரச் சம்பளம் பெற்றுக் கிறித்துவக் கல்லூரியில் படிக்கக் கேம்பிரிடிஜ் பல்கலைக் கழகத்திற்குத் தாவினார். அங்குள்ள அவரது ஆசிரியர்களில் குறிப்பிடத் தக்கவர், பேராசிரியர் ஜான் ராலே [John W.S. Rayleigh (1842-1919)]. அவரிடம் கற்ற கல்விப் பயிற்சி போஸின் பிற்கால விஞ்ஞானப் படைப்புகளுக்கு மிகவும் பேராதரவாய் இருந்தது. போஸ் 1884 இல் கேம்பிரிட்ஜில் B.A. பட்டத்தையும், லண்டன் பல்கலை கழகத்தில் B.Sc. பட்டத்தையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு மீண்டார். கல்கத்தாவில் பிரசிடென்ஸிக் கல்லூரியில் பெளதிகத்தில் நுழைவுப் பேராசிரியர் பதவியை 1885 இல் ஒப்புக் கொண்டு வேலையில் சேர்ந்தார். அப்பணியில் இருந்த போது, அவரது முன்னாள் பிரிட்டிஷ் பேராசிரியர் ஜான் ராலேயின் சீரிய கல்வி முறைகளைக் கையாண்டு, விஞ்ஞானக் காட்சிச் சாதனங்களை மாணவர்களுக்கு இயக்கிக் காட்டி, கைதேர்ந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றார். அவரிடம் மாணவராகப் படித்தவர்களில் பலர் பின்னால் பெரும் பெளதிக மேதையாக பெயர் பெற்றனர்.

    Popov & Marconi Receivers

    ஸர் ஆலிவர் லாட்ஜ் [Sir Oliver Lodge] எழுதிய ஹையன்ரிச் ஹெர்ட்ஸ் & பின்வந்தவர்கள் [Heinrich Hertz & His Successors] என்னும் நூலை ஆழ்ந்து படித்து, மின்காந்தக் கதிர்வீச்சின் [Electromagnetic Radiation] தன்மைகளைப் படித்து, ஹெர்ட்சியன் அலைகளைப் [Hertzian Waves] பற்றி விபரமாக அறிந்து கொண்டார். அதன் பிறகு 1894 இல் கல்லூரியில் ஒர் ஒதுக்குப் புறத்தை அறையாக மாற்றிக் கதிரலை ஆய்வுச் சோதனைகள் [Refraction, diffraction, & Polarization] பலவற்றைத் தனியாகச் செய்ய ஆரம்பித்தார். ரேடியோ சிற்றலைச் சோதனைகளுக்கு அலையீர்ப்பியை [Receiver] உண்டாக்க காலினாப் படிகத்தை [Galena Crystal] விருத்தி செய்து முதன் முதலில் பயன்படுத்தினார். கல்கத்தாவில் 1898 இல் ஜெ.சி. போஸ் தான் முதலில் மில்லி மீட்டர் நீளலைகளை [Millimeter Wavelengths] உண்டாக்கிப் புரிந்த ஆராய்ச்சியை லண்டன் ராஜீய விஞ்ஞானக் கூடத்திற்கு [Royal Institution, London] எழுதி அனுப்பினார். 1904 ஆம் ஆண்டு அவரது, முதல் ‘மின்காந்தக் கதிரலை உளவிப் [Detection of Electromagnetic Radiation] படைப்புக்குக் காப்புரிமை [Patent Rights] வழங்கப் பட்டது!

    கல்லூரியில் 1915 வரைப் பேராசிரியராகப் பணி புரிந்து விலகி, 1917 இல் கல்கத்தாவில் போஸ் ஆய்வுக் கூடத்தை ஆரம்பித்து, அவர் இறக்கும் வரை [1937] அதன் ஆணையாளராக இருந்தார். 1920 இல் இங்கிலாந்து ஸர் பட்டத்தையும், F.R.S. [Fellow of Royal Society] கெளரவ அங்கீகாரத்தையும் J.C. போஸூக்கு அளித்தது.

    Bose microwave apparatus

    ஜகதிஷ் சந்திர போஸ் புரிந்த விஞ்ஞானச் சாதனைகள்

    (1894-1899) உலகின் பல்வழித் தொடர்பு [Multimedia Communication] முறையைத் துவக்கிய முன்னோடிகளில் ஒருவர் ஜகதிஷ் சந்திர போஸ். முதலில் இந்தியாவில் ஹெர்ட்ஸியன் அலைகளைப் [Hertzion Waves] பற்றிய சோதனை ஆராய்ச்சிகளை ஆரம்பித்து, மிகச் சிறிய 5 மில்லி மீட்டர் ரேடியோ அலைகளை [Radio Waves] உண்டாக்கிக் காட்டியவர், போஸ். தொடர்புக் கம்பமுடன் தூக்கிச் செல்லும் சாதனத்தைச் [Portable Apparatus with Antenna] செய்து, 5 mm அலைகளின் ஒளிக்காட்சித் [Optical Properties] தன்மைகளைக் கண்டு ஆராய்ந்தவர். தற்கால நுண்ணலைப் பொறியல் துறைக்கு [Microwave Engineering] அது அடிகோலியது. முதல் கம்பியில்லாத் தொலைத் தொடர்பைப் போஸ் 1895 ஜனவரியில் கல்கத்தாவில் செய்து காட்டினார். மின்காந்த அலைகளைப் பயன்படுத்தித் தூரத்திலிருந்து தூண்டி, கம்பி யில்லாமல் ஒரு மின்சார மணியை அடிக்கச் செய்தார்! அடுத்து அம்முறையில் வெடி மருந்தை வெடிக்கச் செய்தார்! 1896 இல் இங்கிலாந்தின் தினச் செய்தித்தாள் [Daily Chronicle], ‘ஆக்க நிபுணர் J.C. போஸ் ஏறக்குறைய ஒரு மைல் தூரம் கம்பி யில்லாமல் மின்னலைச் சமிக்கைகளை அனுப்பித் தொலைத்தொடர்பு செய்துள்ளார்! இது முதலில் செய்த ஓர் ஒப்பற்ற உயர்ந்த சாதனை! ‘ என்று பறை சாற்றியது! அரைக்கடத்தியைப் [Semiconductor] பயன்படுத்தி முதலில் அமைக்கப் பட்ட அவரது காலினா உளவியும் [Galena Detector] ஒளி மின்னழுத்தச் சிமிழும் [Photovoltaic Cell] 1904 இல் அமெரிக்கக் காப்புரிமை [U.S. Patent No.755840] பெற்றன.

    (1899-1907) கோஹெரர் உளவி [Coherer Detector] பற்றி முதற்படி ஆய்வு செய்து விலங்கினம், தாவர இனம், தாதுக் கலப்புத் திரவங்கள் [Inorganic Compounds] ஆகிய வற்றில் எழும் எல்லா விதத் தூண்டலையும் நுகர்ந்து அவை மின்சாரப் பதிவு [Electric Response to Stimulation] செய்வதைக் கண்டு பிடித்தார். உயிரினப் பெளதிக [Biophysical Phenomena] நிகழ்ச்சிகளின் தாது மாதிரிகளைத் [Inorganic Models] தயாரித்துத், தாவர இனம், விலங்கினத்தின் சதைகள் [Tissues] அனுப்பும் தூண்டலை மின்சார, யந்திரவியல் முறைகளில் பதிவு செய்தார். அம்முறையில் மனிதரின் கண்ணொளி, மூளையின் நினைவுச் சரங்கள் [Vision & Memory Units of Brain] ஆகியவற்றில் எழும் அதிர்வு அலைகளையும் ஆராய்ந்தார்.

    Microwave Spectrometer

    (1907-1933) தாவர இனங்களின் உணர்ச்சி முறைகளை ஆராய்ந்து, தாதுப் பண்டம், விலங்கினம் ஆகிய இரண்டின் உணர்ச்சிகளுக்கும் அவை இடைப்பட்டது என்று கண்டு பிடித்தார். போஸ் தனது ஆராய்ச்சிகளைச் செய்ய பலவிதக் கருவிகளை ஆக்கினார். மிக நுணுக்கமான நகர்ச்சி

    ​ ​

    களைப் பதிவு செய்யும் சுய இயக்கக் கருவிகள் காயம் பட்டத் தாவரப் பயிர்கள் உண்டாக்கும் மென்மையான உணர்ச்சியை வரைந்து காட்டின. J.C. போஸ் 1917 நவம்பர் 30 ஆம் தேதியில் தனது போஸ் ஆய்வுக் கூடத்தை [Bose Institute] ஆரம்பித்து வைத்தார். அன்று ‘உயிரினத்தின் கூக்குரல் ‘ [The Voice of Life] என்னும் சொற்பொழிவை நிகழ்த்தி, போஸ் ஆய்வுக் கூடத்தை பாரத நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்.

    நூறாண்டுகளுக்கு முன்பே கல்கத்தாவில் J.C. போஸ் மில்லி மீட்டர் மின்னலையை உண்டாக்கி, அவற்றை உளவிக் காணும் [Generation & Detection of Millimeter Waves] ஆய்வுகளைச் செய்து, அவ்வலைகளின் மூலம் பொருள்களின் குணாதிசயங் களையும் குறிப்பிட்டு எழுதினார். இக்காலத்தில் பயன்படும் நமக்குப் பழக்கமான நுண்ணலைச் சிறு கலன்கள் [Microwave Components], அலை வழிகாட்டி [Waveguide], கொம்பு மின்கம்பம் [Horn Antenna], போலரைஸர் [Polarizers], மின்தடுக்கி லென்ஸ் [Dielectric Lenses], முப்பட்டை [Prisms], மின்காந்த அலைவீச்சை உளவும் அரை மின்கடத்திகள் [Semconductor Detectors of Electromagnetic Radiation] ஆகிய யாவற்றையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் போஸ் தன் ஆராய்ச்சிகளுக்குப் பயன் படுத்தி யிருக்கிறார். அவை யாவும் இப்போது அவர் அமைத்த போஸ் ஆய்வுக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

    Bose lecturing

    போஸ் அமைத்த ரேடியோ சாதனங்களின் கண்காட்சி மாளிகை

    போஸ் தான் அமைத்த கருவிகளைக் கல்கத்தாவின் காட்சி மாளிகையில் [Bose Museum] பலர் காண வைத்துள்ளார். 1986 இல் காட்சி மாளிகை புதிய இடத்திற்கு மாறியது. அங்கே அடிக்கடி நுண்ணலைப் பொறியியல் [Microwave Technology] பற்றிப் பேரவைச் சொற்பொழிவுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்திய அரசின் மின்னியல் துறையின் [Dept of Electronics] ஆதரவில் இயங்கும், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் மின்னியல் பொறியியல் கூடத்தின் வானலைப் பெளதிக மாணவர்கள் செய்முறைப் பயிற்சிக்காக போஸ் காட்சி மாளிகைக்குப் போய் வருகிறார்கள்.

    போஸ் எழுதிய விஞ்ஞான நூல்கள்: உயிருள்ள, உயிரில்லாப் பிறவிகளின் உணர்வெழுச்சி [Response in the Living & Non-Living (1902)], தாவரங்களின் நரம்பு இயக்க முறைகள் [The Nervous Mechanism of Plants (1926)].

    அவரிடம் மாணவராக இருந்தவர்களில் சிலர் பின்னால் பெரும் பெளதிக மேதைகளாக உலகப் புகழ் அடைந்தனர். சிறப்பாக போஸான் [Boson] என்னும் அடிப்படைத் துகளைக் கண்டு பிடித்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களுடன் இணைந்து புகழ் பெற்ற ‘போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் ‘ [Bose-Einstein Statistics] கோட்பாடை உண்டாக்கிய சத்யேந்திர நாத் போஸ் [Satyendra Nath Bose (1894-1974)] அவரிடம் கற்ற விஞ்ஞானி. போஸான் போஸ் [Boson Bose] என்றும் உலகில் அழைக்கப்படும் எஸ். என். போஸ், பேராசிரியர் ஜகதிஷ் சந்திர போஸின் ஒப்பற்ற மாணவர்!

    Bose Statue

    குடத்து விளக்காய் ஒளிவீசிய ஆசீய தீபம் அணைந்தது!

    1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஜகதிஷ் சந்திர போஸ் தனது 79 ஆவது வயதில் பீஹாரில் கிரிடி [Giridih, Bihar] என்னும் ஊரில் காலமானார். அவர்தான் ரேடியோ அலைகளைத் தேட முதன் முதலில் மின்னியல் அரைக்கடத்தி இணைப்பைப் [Electronic Semiconductor Junction] பயன் படுத்தியவர். 1977 இல் திடப் படிக மின்னியல் [Solid-state Electronics] துறைக்கு நோபெல் பரிசு பெற்ற ஸர் நெவில் மாட் [Sir Neville Mott], ‘ஜகதிஷ் சந்திர போஸ் P-type, N-type அரை மின்கடத்திகள் [P-type, N-type Semiconductors] தோன்றப் போவதை எதிர்நோக்கி, அவரது காலத்திற்கும் முன்பாக அறுபது ஆண்டுகள் முன்னேறி இருந்தார் ‘ என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.

    நோபெல் பரிசு பெற்ற ஸர் சி.வி. ராமனுக்கும் முன்பாகவே விஞ்ஞான ஆய்வுகளில் மூழ்கிக் கம்பியில்லாத் தொலைத் தொடர்பை உலகில் உண்டாக்கிய நான்கு முன்னோடி வல்லுநர்களில் ஒருவராகப் பெயர் எடுத்தவர் ஜகதிஷ் சந்திர போஸ். அத்துடன் பொது வினை புரியும் அநேக நுண்ணலைச் சிறு சாதனங்களைப் [Microwave Components] படைத்தவர். அவர் மில்லி மீட்டர் நீளலைகளில் [Millimeter Wavelengths] ஆய்வு செய்து பிறரை விட 50 ஆண்டுகள் முன்னதாக இருந்தார்! ரஷ்ய விஞ்ஞானி போபாவுக்கும் முதலாக, இங்கிலாந்தில் மார்க்கோனி [மே மாதம் 1897] படைப்பதற்கு முன்பாக, போஸ் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அமைத்துக் காட்டினாலும், இறுதியில் நோபெல் பரிசு பெற முடியாது சரியான சமயத்தில் J.C. போஸின் உன்னத விஞ்ஞான ஆக்கம் உலகின் கண்களுக்குத் தென்படாமலே போனது!

    *****************************

    1.  http://en.wikipedia.org/wiki/Jagadish_Chandra_Bose

    2.  http://www.conferencecallsunlimited.com/history-calling/

    3.  http://www.iloveindia.com/indian-heroes/jagadish-chandra-bose.html

    4.  http://www.ieeeghn.org/wiki/index.php/Jagadish_Chandra_Bose

    5.   http://en.wikipedia.org/wiki/Invention_of_radio

    +++++++++++++++++++++

    S. Jayabarathan  [jayabarathans@gmail.com]  October ​5, 2014.

     

     

    Share
  • காதல் நாற்பது (21)

    — சி. ஜெயபாரதன்.

    திரும்பத் திரும்பச் சொல் நேசிப்பதாய் !

     

    Elizabeth Browing

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    என்னை நீ நேசிப்பதாய் திரும்பச் சொல்
    இன்னு மொருதரம் சொல்,
    கூக்கூக் கீதம் போல் அச்சொல்
    நீ புரிவது போல்
    மென்மேலும் கேட்கட்டும் !
    நினைவில் வை, மலையோ,
    சமவெளியோ  வேண்டாம்!
    வனாந் தரமோ, பள்ளத் தாக்கோ இல்லை
    கூக்கூக்குச் சிரமம் கூடாது !

    பசுமை முழுதாய்ப் பரவி
    வசந்த காலம் புதிதாய் வருகுது !
    என்னிய நேசனே!
    பாராட்டும்,
    காரிருளில் என்னை
    ஐயமுள்ள ஆன்மீகக் குரல் ஒன்று !
    அந்த சந்தேகத் துயரில்
    அவலக் குரல் எழும், என்னிட மிருந்து:
    “இன்னொரு முறை சொல் நீ நேசிப்பதை.”
    எவருக்கு  நாணம் வரும் ?

    விண்ணுலகம் ஒவ்வொன்றிலும்
    எண்ணிலா விண்மீன்கள் சுற்றினாலும்
    ஆண்டு தோறும்
    அளவிலா மலர்கள் பூத்தாலும், என்னை நீ
    நேசிப்பதாய்ச் சொல் என்னிடம்,
    நேசிப்பாய், நேசிப்பாய் முழுதாய் !
    வயதான தாம்பத் தியத்தில்
    எனக்குக் கலக்கம் மட்டும் உள்ளது ,
    என்னவரே !
    உன் ஆத்மாவால்
    என்னை நீ
    மௌன மாகவும் நேசிப்பது !

    ********************

    Poem -21

    Sonnets from the Portuguese
    By: Elizabeth Browning

    Say over again, and yet once over again,
    That thou dost love me. Though the word repeated
    Should seem “a cuckoo-song,” as thou dost treat it,
    Remember, never to the hill or plain,
    Valley and wood, without her cuckoo-strain
    Comes the fresh Spring in all her green completed.
    Beloved, I, amid the darkness greeted
    By a doubtful spirit-voice, in that doubt’s pain
    Cry, “Speak once more–thou lovest!” Who can fear
    Too many stars, though each in heaven shall roll,
    Too many flowers, though each shall crown the year?
    Say thou dost love me, love me, love me–toll
    The silver iterance!–only minding, dear,
    To love me also in silence with thy soul.

    **********

    Share
  • முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை)

    படக்கதை – 23

    முடிவுக் காட்சி

    ++++++++

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா

    வசனம், வடிவமைப்பு : வையவன்

    ஓவியர் : தமிழ்

      ++++++++

    Mukkonakkilikal - 89Mukkonakkilikal - 90Mukkonakkilikal - 91Mukkonakkilikal - 92

    முற்றும்

    Share
  • முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 22

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா

    வசனம், வடிவமைப்பு : வையவன்

    ஓவியர் : தமிழ்

    Mukkonakkilikal - 85Mukkonakkilikal - 86Mukkonakkilikal - 87Mukkonakkilikal - 88

    தொடரும்…

    Share
  • காதல் நாற்பது (20)

    உன்னைத் தெரியாது ஓராண்டுக்கு முன்பு

    jay1

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    நேசனே! என்னரும் நேசனே!
    நினைத்துப் பார்க்கும் போது,
    ஓராண்டுக்கு முன்பு நான்
    பனித் தளத்தில்
    தனித்தமர்ந்த சமயத்தில் நீ
    இத்தரணி மீது இருந்தாய், ஆயினும்
    எத்தடமும் காணேன்!
    அமைதி மூழ்கிக் கிடந்தது!

    உந்தன் குரல் செவியில் விழும் நேரம்
    வந்திட வில்லை,
    என் தொடர்புச் சம்பந் தங்களை
    எண்ணிப் பார்த்தேன்,
    ஒவ்வோர் சங்கிலிக் கோப்பாக!

    உன்கரம் புரியப் போகும்
    எவ்வித உடைப்பும்
    முறிக்காது
    அந்தப் பிணைப்பை!
    ஏனென்று வாழ்விலே ஆச்சரியம்
    எழுவதும் விந்தைதான்!
    இரவோ, பகலோ எதுவாயினும்
    உன் உரையோ,
    அல்லது உன்னரும் பணியோ
    புல்லரிப் பளிப்ப தில்லை
    உனக்கு!

    ஏதோ உனக்குள்ள முன்னறிவால்
    வெள்ளைப் பூ மலர்வதைக் கண்டாய்!
    நாத்திகர் மந்த புத்திக் காரர்!
    ஊகிக்க முடியாது
    அவரால்
    ஊனக்கண் காணா கடவுளின்
    இருப்பை !

    ********************

    Poem -20

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    Beloved, my Beloved, when I think
    That thou wast in the world a year ago,
    What time I sat alone here in the snow
    And saw no footprint, heard the silence sink
    No moment at thy voice, but, link by link,
    Went counting all my chains as if that so
    They never could fall off at any blow
    Struck by thy possible hand,–why, thus I drink
    Of life’s great cup of wonder! Wonderful,
    Never to feel thee thrill the day or night
    With personal act or speech,–nor ever cull
    Some prescience of thee with the blossoms white
    Thou sawest growing! Atheists are as dull,
    Who cannot guess God’s presence out of sight.

    *********

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 21

    –சி. ஜெயபாரதன்.

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 21

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 81Mukkonakkilikal - 82Mukkonakkilikal - 83Mukkonakkilikal - 84

     

     

    தொடரும்…

    ***********************************************************************************************************************

    வசன கர்த்தா திரு. வையவன்:

    mukonakkiligal 1வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு  அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் புகழ்பெற்ற யுராலாஜி  மருத்துவரான டாக்டர் எம்.ஜீவகன் என்ற தம் மகனுடன் அடையாரில் வசித்து வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10 நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.
    http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html ,  http://innaiyaveli.blogspot.in/

    ஓவியக் கலைஞர் தமிழ்:

    tamizhselvanஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

    ***********************************************************************************************************************

     

     

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 20

    –சி. ஜெயபாரதன்.

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 20

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 77Mukkonakkilikal - 78Mukkonakkilikal - 79Mukkonakkilikal - 80

     

    தொடரும்…

    ***********************************************************************************************************************

    வசன கர்த்தா திரு. வையவன்:

    mukonakkiligal 1வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு  அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் புகழ்பெற்ற யுராலாஜி  மருத்துவரான டாக்டர் எம்.ஜீவகன் என்ற தம் மகனுடன் அடையாரில் வசித்து வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10 நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.
    http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html ,  http://innaiyaveli.blogspot.in/

    ஓவியக் கலைஞர் தமிழ்:

    tamizhselvanஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

    ***********************************************************************************************************************

     

     

     

    Share
  • அகிலவியல் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த ஆங்கில மேதை ஐஸக் நியூட்டன்

    சி. ஜெயபாரதன்.

     

    cover-image-isaac-newton

    (1642-1727)

    சி. ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா

     


    “உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது ! கடல் கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது! ஆனால் கண்டுபிடிக்க முடியாதபடி மாபெரும் மெய்ப்பாட்டுக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது !”

    ஐஸக் நியூட்டன்

    “எந்த ஓர் உயிரினமும் விண்வெளியை ஏதோ ஓர் முறையில் சார்ந்திருக்க முடியாமல் தனித்திருக்க இயலாது.  கடவுள் எங்கும் உள்ளது.  படைக்கப் பட்ட மனித உள்ளங்கள் எங்கோ இருக்கின்றன.  அதை ஆட்கொண்ட உடல் விண்வெளியில் உள்ளது.”

    “பேரெழில் கொண்ட இந்தப் (பிரபஞ்ச) ஏற்பாடு பேரறிவும், பேராற்றலும் உள்ள ஓர் உயிர்ப்பு அரங்கிலிருந்துதான் தோன்றி இருக்க முடியும்.”

    ஐஸக் நியூட்டன்

    “நாம் போதுமான பாலங்களைக் கட்டாமல், பல்வேறு மதில் சுவர்களைத்தான் எழுப்புகிறோம்.”

    ஐஸக் நியூட்டன்

    “இயற்கை ஒரு திறந்த புத்தகம் போன்றது. நியூட்டனுக்கு அதில் உள்ள மெய்ப்பாடுகள் சிரமமின்றி எளிதாகப் புரிந்தன,”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    “டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார்!  அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன!  நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார்!  அது இரு நூறாண்டுகள் நீடித்தன!  இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்!  அது எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது!”

    ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856-1950)

    கோபுரத்தில் நின்று கோள்களை நோக்கிய நியூட்டன் !

    ‘மற்றவரை விடத் தீர்க்கமாக நான் எதையும் காண முடிவதற்குப் பல மாமேதைகளின் தோள் மீது நின்று கொண்டு நான் நோக்குவதுதான் காரணம்’ என்று ஐஸக் நியூட்டன் ஒருமுறை கூறியிருக்கிறார்! அவருக்குத் தோள் கொடுத்துத் தூணைப்போல் தாங்கிக் கொண்டிருப்பவரில் தலையாய மேதைகள் இருவர்! முப்பெரும் அண்டக் கோள்களின் சுற்று விதிகளைப் படைத்த ஜொஹானஸ் கெப்ளர், ஒருவர்! அடுத்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘பெளதிக விஞ்ஞானத்தின் பிதா’ என்று போற்றிய காலிலியோ! பெளதிக விஞ்ஞானத்திற்கு விதையிட்டு நீர் ஊற்றிச் செடி யாக்கியவர் காலிலியோ என்று சொன்னால், அதை விருத்தி செய்துப் படரும் ஆல விழுதுகளாகப் பெருகச் செய்தவர், ஐஸக் நியூட்டன்!  முதன் முதல் விஞ்ஞானத் துறையில் நிறை [Mass], பளு [Weight], விசை [Force], முடத்துவம் [Inertia], வளர்வேகம் [Acceleration], தளர்வேகம் [Deceleration], ஈர்ப்பியல் [Gravity], அசைப்பியல் [Dynamics], ஓளிப்பட்டை [Light Spectrum], பகுப்பியல் கால்குலஸ் [Differential Calculus], தொகுப்பியல் கால்குலஸ் [Integral Calculus] ஆகிய கணித விஞ்ஞானப் பதங்களைத் தெளிவாக விளக்கி, அவற்றைக் கணிதச் சார்பியல் சமன்பாடுகளில் இணைத்தவர், ஐஸக் நியூட்டன் !

    பிரபஞ்சக் கோள் நகர்ச்சிக்குச் சீரான கணித அமைப்பாட்டை ஆக்கிய கெப்ளரின் ஒப்பற்ற விதிகளைப் பற்றிப் பரவசப் பட்டு, 1605 இல் நியூட்டன் கூறினார்: ‘பிரபஞ்சத்தின் அண்டகோள யந்திரம், வெறும் தெய்வீக ஆக்கம் என்று இல்லாது, ஒரு கடிகார வேலைப்பாடு என்று கெப்ளரால் அறியப்படுவது இனிமை தருகிறது ! கடவுள் சாவி கொடுத்துத் துவங்கிய பிரம்மாண்டமான கடிகார இரும்புச் சுருள் [Watch Spring] கொண்டது இந்தப் பிரபஞ்சம்’ என்று காண நியூட்டன் விரும்புகிறார்! பிரபஞ்ச அண்டங்களின் நகர்ச்சிகளில் [Celestial Mechanics of the Universe] மாறாத கணித விதிகளால் ஆளப் படுகின்றது என்று நியூட்டன் உறுதியாய் நம்பிடக் கெப்ளரின் அண்டகோள் விதிகள் உதவி செய்தன! புரியாத பிரபஞ்ச மர்மங்களைப் பூர்த்தி செய்ய இறுதியில், நியூட்டனே அண்டங்களின் இயக்கத்திற்குப் புதிய நியதிகள் ஆக்கவும், அவற்றின் நகர்ச்சிகளுக்கு ஓர் ‘கட்டமைப்பு அரங்கம்’ [Frame Work] அமைக்கவும் வேண்டிய தாயிற்று!

    காலிலியோ, கெப்ளர் பாதையைத் தொடர்ந்த கணித மேதை

    ஜெர்மன் வானியல் மேதை கெப்ளர் தனது முப்பெரும் அண்டக் கோள் விதிகளை ஆக்கிய பிறகு, அவை ஒன்றை ஒன்று ஓர் ஒழுங்கு நியதியில் ஏன் சுற்றி வருகின்றன என்ற வினா அவர் சிந்தையில் எழுந்தது! 1596 இல் கெப்ளர் எழுதிய ‘பிரபஞ்ச வரைவமைப்பின் மர்மம்’ [Cosmographic Mystery] என்னும் நூலில், சூரியன் பூத விசையைக் [Giant Force] கொண்டுள்ள தென்றும், அந்த விசையே மற்ற அண்ட கோளங்கள் தன்னைச் சுற்றி வர ஆளுகிற தென்றும் கூறுகிறார்! தூரம் அதிகமானால், பரிதியின் விசை எதிர் வீதத்தில் [Force inversely diminishes with distance] குறைகிறது என்றும் எடுத்துரைத்தார்!

    1600 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் கில்பர்ட் [William Gilbert (1544-1603)] பூமி ஒரு பிரமாண்டமான காந்தம் [Giant Magnet] என்று கண்டுபிடித்ததை எடுத்துக் கொண்டு, சூரியனிலிருந்து எழும் காந்த விசையே மற்ற அண்ட கோளங்களைத் தள்ளித் தன்னைச் சுற்றி வரச் செய்கிறது என்று கெப்ளர் அறிவித்தார்!  அதே போன்று அண்ட கோளங்களில் காந்த விசை உள்ளதென்றும், அவ்விசைகளே அவற்றை ஒருங்கே இணைத்துக் கொண்டு ஒழுங்கு முறையில் பரிதியைச் சுற்றிவர உதவுகின்றன என்றும் கூறினார். மேலும் நியூட்டன் கால்குலஸ் [Calculus] என்னும் கணிதத்தை ஆக்குவதற்கு முன்னோடியாக உதவியவர் கெப்ளரே! தொலைநோக்கிக் கருவி தோன்ற ஒளியியல் [Optics] விஞ்ஞானத்திற்கு விதை யிட்டவரும் கெப்ளரே!

    பைஸா கோபுரத்தின் மேலிருந்து வேறுபட்ட பளுக் குண்டுகள் இரண்டை விழச் செய்து, ஒரே நேரத்தில் அவை தரையில் விழுந்ததைக் காட்டியவர், காலிலியோ! அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை’ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது’ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி! எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார்!

    ‘வெளிப்புற விசை பாதிக்காத ஓர் அண்டம் திசை மாறாமல், வேகம் திரியாமல் சீராகச் செல்கிறது’ என்று ஐஸக் நியூட்டனின் நகர்ச்சி விதிகளுக்கு [Newton ‘s Laws of Motion] அடியெடுத்துக் கொடுத்த பெளதிக விஞ்ஞானி, காலிலியோ! ஐஸக் நியூட்டன் கெப்ளரின் விதிகள், காலிலியோவின் சோதனைகள், கண்ணோக்குகள் [Observations] ஆகியவற்றை முழுமையாகப் பின்பற்றித் தனது உன்னத ‘ஈர்ப்பியல் நியதியை’ [Theory of Gravitation] உருவாக்கினார்!

    பெளதிகத்தில் ஐஸக் நியூட்டனின் அற்புதப் படைப்புகள்

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒருவரைத் தவிர, உலக மாந்தர் கருதி யிருந்த பிரபஞ்சத்தின் அமைப்பாடை மாபெரும் அளவில் மாற்றிக் காட்டியவர், ஐஸக் நியூட்டன்! கெப்ளரின் ஒப்பற்ற அண்டக்கோள் சுற்று விதிகளையும் [Laws of Planetary Motion], காலிலியோவின் யந்திரவியலையும் [Galileo ‘s Mechanics] ஒருங்கிணைத்து, பிரபஞ்ச கோளங்களின் ‘அகிலமய ஈர்ப்பியல் விதியை’ [Universal Law of Gravitation] ஆக்கினார். நியூட்டனின் எதிரிகளும் அவரது ஈர்ப்பியல் தத்துவத்தை மனதுக்குள் ஆதரித்து வரவேற்றனர்!

    மூன்று யந்திரவியல் விதிகளையும், ஒப்பற்ற ஈர்ப்பியல் நியதியையும் படைத்ததாக நியூட்டன் நினைவுக்கு வந்தாலும், அவர் அணுவியலைப் [Atomism] பற்றி எழுதி யிருப்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்! அவர் 1704 இல் ஆக்கிய ‘ஒளியியல்’ [Opticks] என்னும் நூலில் ‘அணுவியல் நியதிக்கு’ [Atomic Theory] வேண்டிய அரிய பல விஞ்ஞானக் கருத்துக்களை வழங்கி யுள்ளார்! ‘சோதனை அணுவியல் ரசாயனத்திற்கு’ [Experimental Atomic Chemistry] மூல கர்த்தாவான பிரிட்டிஷ் மேதை ஜான் டால்டன் [John Dalton (1766-1844)], நியூட்டனின் அணுவியல் கூற்றைப் பின்பற்றித் தனது புகழ் பெற்ற அணுவியல் நியதியை பிறப்பித்தார்!


    நியூட்டன் மனித இனத்துக்குப் பரிசாக அளித்த ‘இயற்கை வேதாந்தத்தின் கணிதக் கோட்பாடுகள்’ [‘Principia’ The Mathematical Principles of Natural Philosophy (1687)] விஞ்ஞான உலகில் புரட்சி செய்த முதல் கணிதப் படைப்பு. பதினெட்டு மாதங்களில் உதயமாகி வடிவம் பெற்ற அந்நூல், நியூட்டனின் தனித்துவ ஆராய்ச்சிகளில்தான் உருவானது. அது சிறப்பாக அண்ட கோளங்களின் நகர்ச்சி, அவற்றிடையே ஒன்றை ஒன்று கவர்ந்து ஆட்சி புரியும் ஈர்ப்பியல்பு ஆகியவற்றைக் கணித வடிவில் விளக்குகிறது. வெளிவந்த உடனே விஞ்ஞான வரலாற்றில் உலகின் மாபெரும் மகத்தான கணிதக் காவியமாக அது இடம் பெற்றது! அந்நூல் பிரபஞ்சத்தில் நிகழும் மர்மமான, புதிரான, மாயமான பல நிகழ்ச்சிகளுக்கு ‘அகிலமய ஈர்ப்பியல்பு’ [Universal Gravitation] மூலக் காரணம் என்று காட்டுகிறது! கடல் அலைகளின் உச்ச, நீச்ச எழுச்சிகள் [High, Low Tides] எழுவதற்குக் காரணம் காட்டியது! நிலவின் ஒழுங்கற்ற நகர்ச்சி [Irregular Motion] எவ்வாறு உண்டகிறது என்பதை விளக்குகிறது. ஆட்டமிடும் பிரபஞ்ச அரங்கை, அந்நூல் கணிதக் கோட்பாடுகள் மூலம் அறிவிக்கிறது!

    நியூட்டனின் அற்புதப் படைப்பு ‘கோட்பாடுகள்’ [Principia] என்னும் நூலின் கணிதச் சிறப்பை ஒப்பிட்டால், அது கணித மேதை யூக்ளிட் [Euclid] ஆக்கிய ‘அடிப்படைகள்’ [Elements] என்னும் நூலுக்கு இணையாகும்! அதன் பெளதிக நுணுக்கத்தையும், விளைவுகளையும் ஒப்பிட்டால், சார்லஸ் டார்வின் படைத்த ‘உயிர்ப்பிறவிகளின் மூல அடிப்படைகள்’ [Darwin ‘s Origins of Species] என்னும் நூலுக்குச் சமமாகும் !

    ஐஸக் நியூட்டனின் அரிய வாழ்க்கை வரலாறு

    இத்தாலிய மேதை காலிலியோ காலமான அதே ஆண்டு [1642], ஏசு மகான் பிறந்த நாள் டிசம்பர் 25 இல் உலக மெல்லாம் கொண்டாட, மாமேதை ஐஸக் நியூட்டன் இங்கிலாந்து லிங்கன்ஷயர், உல்ஸ்தோர்ப்பில் [Woolsthorpe, Lincolnshire] ஒரே பிள்ளையாகப் பிறந்தார். வானியல் மேதை கெப்ளர் பிறந்தது போல், குழந்தை முழு முதிர்ச்சிக்கு முன்னே [Premature Baby] வெளிவந்து, உயிரோடு வாழுமா என்று ஐயுறும்படி நலிந்து, மெலிந்து சிறிய வடிவில் இருந்தது! ஆனால் நியூட்டன் 84 வயது வரை வாழ்ந்து, வரலாற்றில் இதுவரை யாரும் சாதிக்க முடியாத மகத்தான விஞ்ஞான மெய்ப்பாடுகளை ஆக்கினார்! வேளாண்மையில் ஈடுபட்ட அவரது தந்தை, பிள்ளை பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார். இரண்டு வருடங்களில் மறு முறைத் திருமணம் செய்து கொண்ட தாயும், புதுத் தந்தையும், ஐஸக் நியூட்டனைப் பாட்டியிடம் விட்டுவிட்டு, அருகில் இருந்த கிராமத்தில் வாழச் சென்றனர்! இரண்டு வயது பச்சிளம் குழந்தை நியூட்டன், தாய் தந்தையரின் அன்பும், அணைப்பும், ஆதரவும் இன்றி ஒன்பது ஆண்டுகள் தனித்து வாழ வேண்டிய தாயிற்று! சிறுவன் நியூட்டன் தந்தையை வெறுத்துத் தாயோடு அவரையும் எரித்து, வீட்டைக் கொளுத்தி அவர்கள் மீது தள்ளப் போவதாய் ஒரு சமயம் பயமுறுத்தினான்! பிற்கால மனநோயில் அவர் பாதிக்கப் பட்டதற்குப் பால்ய வயதில் இல்லறப் பாதுகாப்பு இல்லாது, பயங்கரத் தனி வாழ்வில் அவதி யுற்றதே காரணம், என்று பின்னால் கூறினார் நியூட்டன்!


    இரண்டாம் முறையாக விதவை ஆனதும், தாய் பத்து வயது நியூட்டனை அழைத்துக் கொண்டு போய் விவசாயத்தில் நுழைக்க முயன்றாள். அது தவறு என்று உணரப் பட்டு, பாட்டி நியூட்டனைக் கிரந்தம் இலக்கணப் பள்ளியில் [Grammar School in Grantham] சேர்த்தாள்! அங்கே அமைதியாக நடந்து கொண்ட நியூட்டன் படு மோசமாய்ப் படித்தான்! பிறகு பிரமிக்கத் தக்க அளவில் நியூட்டனின் அறிவு வெள்ளம் மடை திறந்தது! அவர் தங்கி யிருந்த இல்லம் ஒரு மருந்தியல் பட்டதாரிக்குச் [Pharmacist] சொந்த மானது. நியூட்டனின் பிற்கால ரசாயன வேட்கைக்கு, அவரே அடிகோலியவர்! சிறு வயதிலே சூரிய கடிகாரம் [Sun Dials], காற்றாடி மாடல் யந்திரம் [Model Windmill], நீர்க் கடிகாரம் [Water Clock], யந்திர வாகனம் [Mechanical Carriage], விளக்குக் கட்டிய பட்டம் [Kite with Lanterns at the Tail] ஆகியவற்றை சிறுவன் நியூட்டன் செய்தான். கிரந்தப் பள்ளி ஆசிரியர் ஒருவர், நியூட்டனின் அபார அறிவை வியந்து, நியூட்டன் கல்லூரிக்குப் போகத் தாயை உடன்பட வைத்தார்!

    1661 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிடி கல்லூரியில், நியூட்டன் சேர்ந்தார். அங்கே கணிதம், ஜியாமெட்ரி, டிரிகொனாமெட்ரி [Trignometry], வானியல் [Astronomy], ஒளியியல் [Optics] ஆகியவற்றைப் படித்தார். அவரது 23 ஆவது வயதில் அங்கே B.A. பட்டம் வாங்கினார். 1665 ஆம் ஆண்டு நியூட்டனின் பொற்காலம் என்று கூறலாம்! அப்போது பிளேக் நோய் பரவி, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இரண்டு ஆண்டுகள் தற்காலியமாக மூடப் பட்டது! அந்த சமயத்தில் ஈரிலக்கக் கூட்டின் nth அடுக்கு எனப்படும் ‘பைனாமியல் நியதி’ [Binomial Theorem (X + Y) to power n], பகுப்பியல் கால்குலஸ், தொகுப்பியல் கால்குலஸ் [Differential Calculus & Integral Calculus] ஆகியவற்றின் அடிப்படைகள், ஈர்ப்பியல்பின் [Gravitation] துவக்கக் கருத்துக்கள் நியூட்டனுக்கு உதயம் ஆகின!


    கால்குலஸ் என்று இப்போது அழைக்கப் படுவதை, நியூட்டன் ·பிளக்ஸியான்ஸ் [Fluxions] என்று அப்போது பெயரிட்டி ருந்தார். அடுத்து முப்பட்டைப் பளிங்கில் [Prism] சூரிய ஒளியைச் செலுத்தி நிறப்பட்டை [Light Spectrum] விரியும் விந்தையைக் கண்டு பிடித்தார்!  இதுவரை யாரும் ஓராண்டுக்குள் இவ்வாறு அரிய புதிய விஞ்ஞானக் கணிதப் படைப்புக்களை ஆக்கிய தில்லை!

    1668 இல் M.A. பட்டத்தைப் பெற்று, டிரினிடியில் சிறப்புநராகி [Fellow of Trinity], தனது 26 ஆம் வயதில் புகழ்மிக்க லுகாஸியன் கணிதப் பேராசிரியர் [Lucasian Professor of Mathematics] உயர் பதவி கிடைத்தது! முப்பது ஆண்டுகள் நியூட்டன் கேம்பிரிட்ஜிலே தங்கி, ஏறக் குறைய முழு நேரமும் தனியாகப் படித்துக் கொண்டும், மற்ற விஞ்ஞானிகளுக்குக் கடிதம் எழுதிக் கொண்டும் காலம் தள்ளினார்! 1672 இல் நியூட்டன் 30 வயதாகும் போது லண்டன் ராயல் குழுவினரின் சிறப்புநர் [Fellow of Royal Society, London] விருதைப் பெற்றார்!

    1687 இல் நியூட்டனின் முதல் பதிப்பு ‘பிரின்ஸிபியா’ வானியல் வல்லுநர், செல்வந்த நண்பர் எட்மண்டு ஹாலியின் [Edmund Halley (1656-1742)] நிதி உதவியில் அச்சாகி வெளிவந்தது. அப்போது லண்டனுக்கு வருகை தந்த உன்னத டச் விஞ்ஞானி கிரிஸ்டியன் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens (1629-1695)] நியூட்டனைக் கண்டு பேசினார். ‘பிரின்ஸிபியா’ 1713 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு முறை திருத்தப் பெற்றது.  ஓய்வின்றி இரவும் பகலும் உழைத்ததால், நியூட்டன் மிகவும் சோர்வுற்று, 1692 இல் தீவிர மனமுடக்கம் [Severe Mental Depression] அடைந்து, அவரது சீரான சிந்தனா சக்தி சிதைந்தது! அதற்குப் பிறகு நியூட்டனின் விஞ்ஞானப் படைப்புகள் பெருமளவில் குறைந்தன!

    நியூட்டன் கண்டுபிடித்த நகர்ச்சி விதிகள்

    1665 இல் பிளேக் நோய் பரவி அடைபட்டுப் போன அந்த இரண்டு ஆண்டுகளில் நியூட்டனின் ‘அசைப்பியல்’ [Dynamics] பெளதிகச் சிந்தனை ஆரம்ப மானது. அதற்கு முன்பே அவர் ‘வட்ட நகர்ச்சி’ [Circular Motion], ‘மோதும் அண்டங்கள்’ [Colliding Bodies] ஆகியவற்றைப் பற்றி சிந்தித்திருந்தார். விசை [Force], முடத்துவம் [Inertia], நகர்ச்சி [Motion], சுழல்வீச்சு விசை [Centrifugal Force] ஆகியவை அண்டங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்றும் அவர் அறிந்திருந்தார். அவற்றைப் பயன் படுத்தி அவர் புதிய நகர்ச்சி விதிகளை [Laws of Motion] ஆக்கினார்!

    முதல் விதி: ஓர் அண்டத்தைப் புற விசை எதுவும் தள்ளாத போது, அது நிற்கும்; அல்லது நேர் கோட்டில் சீரான வேகத்தில் செல்லும். இவ்விதியே இப்போது ‘முடத்துவக் கோட்பாடு’ [Principle of Inertia] என்று அழைக்கப்படுவது.  எந்த ஒரு பண்டத்தையும் நகர்த்த, ஒரு விசை தேவைப்படும் என்பது அரிஸ்டாடில் காலம் முதலே கூறப் பட்டது! இவ்விதி விசைக்குத் தெளிவான விளக்கத்தைத் தருகிறது.

    இரண்டாம் விதி: ஓர் அண்டத்தின் நகர்ச்சி வேக மாறுபாடு அதன் நிறைக்கு எதிர் விகிதத்திலும், தள்ளும் விசைக்கு, செல்லும் திசைக்கு நேர் விகிதத்திலும் உள்ளது. இவ்விதி வளர்வேகக் கோட்பாடு [Principle of Acceleration] என்று குறிப்பிடப் படுகிறது. [விசை = நிறை x வளர்வேகம்], [Force = Mass x Acceleration]. அதாவது விசை ஓர் அண்டத்தின் நிறைக்கு [Mass] ஏற்றபடி நேர் விகிதத்தில் வேக வளர்ச்சியை அதனில் உண்டாக்குகிறது.

    மூன்றாம் விதி: ஒவ்வொரு நேர் உந்தலுக்கும் எதிரே அதற்குச் சமமான எதிர் உந்தல் உண்டாகுகிறது. நியூட்டன் ஆறு உபரி விதிகளை [Corollaries], மூன்றாவது விதிக்கு எழுதினார். எப்படி ஓர் அண்டம் நகர்த்தப் படுகிறது என்பதை, மூன்றாம் விதி விளக்குகிறது.

    ஆப்பிள் பழ வீழ்ச்சி, ஈர்ப்பியல் நியதிக்கு அடிகோலியது!

    நியூட்டன் தனது ஈர்ப்பியல் நியதியை 23 ஆவது வயதில் யூகித்தார்! ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் பூமியை நோக்கி விழுந்து சிந்தனையைக் கிளரியது,  ஐஸக் நியூட்டனின் கூற்றுப்படி மெய்யாக நடந்த ஒரு நிகழ்ச்சி! ஆப்பிளைத் தன்னகத்தே இழுக்கும் பூமி, மாபெரும் நிலவையும் அதே போன்று தன்வசம் இழுத்துப் பாதையில் சுற்ற வைக்க வேண்டும் என்று நியூட்டன் அனுமானித்தார்! ஆனால் அந்தக் கருத்து முழுமை பெறும் வரைத் தாமதம் செய்துக் கவனமோடுப் பல்லாண்டுகள் கழித்தே அதை வெளியிட்டார்! அவரது ஈர்ப்பியல் நியதி அண்டக் கோள்கள் நீள்வட்ட வீதியில் சுற்றுவதற்குக் காரணத்தை விளக்கியது. பூமியை நோக்கி அண்டங்கள் விழுவதை எடுத்துக் காட்டியது. கை தவறிக் கீழே விழுந்துடையும் பண்டத்துக்கும் காரணி ஈர்ப்பியல் விசையே! அண்ட கோளங்களைச் சீராகப் பரிதியைச் சுற்றி வரச் செய்வதும் ஈர்ப்பியல் விசையே என்று நியூட்டன் கருதினார்.

    அவர் ஆக்கிய ‘அகிலமய ஈர்ப்பியல் நியதி’ [Universal Gravitational Theory] இதுதான்: ‘இரு அண்டங்களுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பு எனப்படும் கவர்ச்சி விசை அவற்றின் நிறைகளின் பெருக்கலுக்கு [Product of two Masses] நேர் விகிதத்திலும், இடைத் தூரத்தின் ஈரடுக்கிற்குத் தலைகீழ் விகிதத்திலும் [Inversely Proportional] உள்ளது’.  பூமியின் மேலே எறியப்படும், அல்லது கீழே விழும் ஓர் அண்டத்தின் பளு [Weight], அந்த அண்டத்தின் ஈர்ப்பியல் விசையின் அளவைக் காட்டுகிறது. ஆனால் ஐன்ஸ்டைனின் ‘ஒப்பியல் நியதி’ [Theory of Relativity] ஈர்ப்பியலை, வரைவடிவில் [Geometrically] காண்கிறது. அதாவது ‘ஓர் அண்டத்தின் பிண்டம் [Matter] அதன் அருகே உள்ள பிரதேசத்தில், நாற்புற அங்களவு கொண்ட கால-வெளித் தொடர்ச்சி வளைவை [Curvature of the Four Dimensional Space-Time Continuum] உண்டாக்குகிறது’. அவ்வாறு ஐன்ஸ்டைன் ஈர்ப்பியலை இருபதாம் நூற்றாண்டில் விளக்கினார்!

    நியூட்டன் ஆக்கிய ஒளியியல் (Optics) நியதி

    நியூட்டனின் படைப்புப் பொற்காலம் எனப்படும் [1665-1666] இரண்டு ஆண்டுகளில் ஒருசமயம், சூரிய ஒளியை முப்பட்டைப் பளிங்கில் [Prism] கடந்து செல்ல விட்டு, ஒளி பல்நிறப் பட்டையாய்ப் [Light Spectrum] பிரிவு படுவதைக் காட்டினார். அந்நிறங்கள் ஏழு: [(VIBGYOR) Violet, Indigo, Blue, Green, Yellow, Orange & Red]. அச்சோதனை மூலம் நிறப் பிரிவுகள் ஒளியின் உடன்பிறந்த குணாதிசயம் என்றும், நிறங்கள் முப்பட்டைப் பளிங்கின் தன்மைகள் இல்லை என்றும் விளக்கம் தந்தார்! அந்தச் சோதனையின் துணை விளைவு நியூட்டன் எதிரொளி தொலை நோக்கியை [Reflecting Telescope] மேம்படுத்தி விருத்தி செய்தது!

    1704 ஆம் ஆண்டில் நியூட்டன் எழுதிய ஒளியியல் [Optics] நியதி என்ன கூறுகிறது ? ‘கதிர் வீசும் அண்டங்களின் ஒளியானது நுண்ணிய துகள்களைக் [Particles] கொண்டது’. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அக்கோட்பாடு நீடித்தது. அதன் பின்பு ‘ஒளியின் அலைக் கோட்பாடு’ [Wave Theory of Light] ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.  பிறகு 20 ஆம் நூற்றாண்டில் மைகேல்ஸன் ஐன்ஸ்டைன் [Michelson, Einstein] ‘ஒளியின் மின்காந்தக் கோட்பாடு’ [Electro-magnetic Theory of Light] மற்ற கோட்பாடுகளைக் கீழே தள்ளி, அதன் கை ஓங்கியது!

    நியூட்டன், லைப்னிஸ் படைத்த கால்குலஸ் கணிதம்

    நியூட்டன் விஞ்ஞான ஆராய்ச்சிகளை செய்து கொண்டு வந்த போது, 1665 இல் அவர் கண்டு பிடித்து விருத்தி செய்தது, சிற்றிலக்கங்களைக் கையாளும் ‘பகுப்பியல் கால்குலஸ்’ [Differential Calculus].  பலவித யந்திரவியல், நீரழுத்த அசைப்பியல் பிரச்சனைகளைத் [Mechanical, Hydrodynamic Problems] தீர்வு செய்ய கால்குலஸ் கணித முறையை உபயோகிக்கலாம். விஞ்ஞானப் பொறியியல் பிரச்சனைகளையும் தீர்வு செய்யப் பயன்படுத்தலாம். ‘ஃபிளக்ஸியான் கோட்பாடு’ [Theory of Fluxions] என்று பகுப்பியல் கால்குலஸ் கணிதத்திற்குப் பெயர் கொடுத்த நியூட்டன், அதை 38 வருடங்கள் தாண்டி 1704 ஆம் ஆண்டில்தான் அவர் எழுதிய ‘பிரின்ஸிபியா’ [Principia] என்னும் நூலில் வெளியிட்டார்! ஆனால் அந்நூலில் கூறப்படும் கோட்பாடுகளுக்குக் கால்குலஸை நியூட்டன் பயன் படுத்தவில்லை!

    கால்குலஸை முதலில் கண்டு பிடித்தது யாரென்று ஒரு முரண்பாடுக் கேள்வி நியூட்டன் காலத்திலே வாய்ப் போராய் மூண்டது! சிலர் நியூட்டன் என்று எண்ணுகிறார்! வேறு சிலர் ஜெர்மன் கணித மேதை லைப்னிஸ் [Leibniz] என்று கருதுகிறார்! நியூட்டன்தான் முதலில் கண்டு பிடித்தாலும், அவர் முப்பத்தி யெட்டு ஆண்டுகள் வரை அதை வெளியிடவே யில்லை! ஒரே சமயத்தில் தனியாகச் சற்றுத் தாமதமாக விருத்தி செய்த லைப்னிஸ் முதலாகக் கால்குலஸை வெளி உலகுக்கு அறிவித்தார்! அத்துடன் லைப்னிஸியன் கால்குலஸ் நியூட்டனின் ஃபிளக்ஸியான்ஸை விடச் சீரானதாகவும், செம்மைப்பாடு உள்ளதாகவும், முழுமைப்பாடு பெற்றதாலும் அதுவே இப்போது யாவராலும் கையாளப் படுகிறது.

    நியூட்டன் கால்குலஸைப் பயன்படுத்தி, சூரியன், பூமி உள்படச் சூரிய குடும்பத்தின் ஒவ்வோர் அண்டத்தின் நிறையைக் கணித்தார்! பூமியின் திணிவு [Density] நீரின் திணிவைப் போல் ஐந்து, ஆறு மடங்குகளுக்கு இடைப்பட்ட தென்று [மெய்யாக 5.5] மதிப்பீடு செய்தார். வாழையடி வாழையாய் வாழ்ந்து மறைந்த பல்வேறு மேதைகள், நியூட்டனின் விஞ்ஞான சாதனைகளைக் கண்டு பிரமித்து, ‘அவை மானிட ஆற்றலுக்கும், அனுபவத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு மாமேதையின் ஆக்கமென்று’ வியந்தனர்!

    கடவுளைப் பற்றி ஐஸக் நியூட்டன் கருத்துக்கள்.

    நியூட்டனுக்கு ரசவாதம் [Alchemy], மதவியல் [Theology], சரித்திரம் [History], மாய விஞ்ஞானம் [Occult Science] ஆகியவற்றில் ஆர்வமும் மிக்க நம்பிக்கையும் உண்டாயினும், அவர் வெளியே அதைக் காட்டிக் கொள்வதில்லை! தனது ஆழ்ந்த கருத்துக்கள், சிந்தனைகள், கண்டு பிடிப்புகள், நம்பிக்கைகள் எதையும் மற்ற மாந்தரிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம் இன்றித், தனிமையின் இனிமையில் எப்போதும் ஆராய்ச்சியில் காலம் தள்ளுவதே, நியூட்டனுக்குப் பிடித்தமானது! தான் செய்யும் ஆராய்ச்சியில் மனம் ஊன்றி நியூட்டன் ஆழமாய் மூழ்கிப் போவதுண்டு! அல்லாவிடில் அவரது மூளை மதச் சிந்தனையில் சிதறிப் போய்விடும்!

    நியூட்டன் ஒரு மூர்த்தியை நம்புபவர், மும்மூர்த்தி அன்று [Unitarian not a Trinitarian] ! அதாவது கடவுள் ஒன்றே !  அது மூவடிவம் அற்றது! [Trinity means Father, Son & Holy Spirit]. நியூட்டனுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு!  ஆனால் அவருக்கு ஏசுக் கிறிஸ்து மீதும், புனித ஆவி [Holy Spirit] மீதும் நம்பிக்கை இல்லை! நியூட்டன் காலத்தில் அவரைப்போல் மத நம்பிக்கை கொண்டவர், பிரிட்டனில் தண்டிக்கப் பட்டனர்! 1696 ஆம் ஆண்டில் மும்மூர்த்தி மீது நம்பிக்கையற்ற ஒருவர் தூக்கிலிடப் பட்டார்!  மூவடிவத்தில் நம்பிக்கையற்ற ஐஸக் நியூட்டன் தண்டனையிலிருந்து எப்படியோ தப்பிக் கொண்டார்!  1689, 1701 ஆண்டுகளில் பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில், நியூட்டன் பணி செய்தார். 1696 முதல் 1727 வரை பண அச்சகத்தில் அதிபதியாகப் [Master of Mint] பணி யாற்றினார். ராயல் சொஸடியின் [Royal Society] அதிபதியாக 1703 இல் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1705 ஆம் ஆண்டு அன்னி ராணியால் [Queen Anne] பிரிட்டிஷ் தீரராக [Knight] ஆக்கப் பட்டார்!

    நியூட்டனின் குண மாறுபாடு, இறுதிக் கால வாழ்வு

    முப்பது வயதிலே தலை நரைத்துப் போனாலும், 84 வயது வரைக் கிழவராய் வாழ்ந்த நியூட்டன், கடைசிவரை கண்ணாடி போட்டுக் கொள்ள வில்லை! அத்தோடு திடகாத்திரமாயும் இருந்தார்! எல்லாப் பற்களும் ஒருவிதப் பழுதின்றி அத்தனையும் சீராக இருந்தன வென்று அறியப் படுகிறது!  நியூட்டனுக்கு ஞாபக மறதி மிகுதி! பெளதிகச் சிந்தனையில் ஆய்வுக் கடலில் மூழ்கி யிருக்கும் போதெல்லாம், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, தன்னைச் சுற்றி யாருள்ளார் என்பது நியூட்டனுக்குத் தெரியாது! ஒன்றையே ஆழ்ந்து எண்ணிக் கொண்டு உலகையே மறந்து விடுபவர், நியூட்டன்! படுக்கை மெத்தை மேல் அரை நிர்வாணத்தில் மணிக் கணக்காக அமர்ந்திருப்பார் என்று சொல்லப் படுகிறது! அடிக்கடி தான் உணவு அருந்தி விட்டோமா, இல்லையா என்பது கூட அவருக்கு நினைவிருக்காது!

    நியூட்டன் ஒரு பேராசைக்காரர்! புகழ்ச்சிகள் மீது அவருக்கு வேட்கை மிகுதி! எதையும் சந்தேகப்பட்டு, அவரது கோட்பாடுகளை எதிர்ப்போரிடம் போரிடத் தாவும் சண்டைக்காரர்! கால்குலஸை யார் முதலில் படைத்தவர் என்ற வாதப் போரில், தனியாகப் படைத்த ஜெர்மன் கணித மேதை லைப்னிஸ் [Leibniz] கூட நியூட்டன் போட்ட சண்டை ஓர் உதாரணம்! கால்குலஸை முதலில் கண்டு பிடித்த நியூட்டன், வெளி யிடாமலே பல்லாண்டுகள் வைத்திருந்தவர்! ஆனால் லைப்னிஸ் அவருக்குப் பின்னால் கண்டு பிடித்து, உலகுக்கு முதலாக அறிவித்தவர்!


    நியூட்டன் பதினேழாம் நூற்றாண்டில் ஆக்கிய ‘பிரின்ஸிபியா’ கணித நூல், ஐன்ஸ்டைன் ஒப்பியல் நியதி [Relativity Theory], குவாண்டம் யந்திரவியல் [Quantum Mechanics] தோன்றிய இருபதாம் நூற்றாண்டின் புதிய விஞ்ஞான முற்போக்கு நிலைக்கு மாற்றப்பட வேண்டிய தாகிறது! ஆயினும் ஒளிவேகத்திற்கு நிகரற்ற வேகமுடைய அண்டங்கள், நாமறிந்த முப்புற அமைப்பாடுகளில் [X,Y,Z Three Dimensional Systems] நகரும் அண்டங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே நியூட்டனின் நியதிகள் ஏற்றவை.

    லண்டன் மாநகரில் இனிதாக வாழ்ந்து, தன் அழகிய மருமாள் [Niece] இல்லத்தைக் கண்காணித்துக் கொள்ள, நியூட்டன் இறுதி ஆண்டுகளில் படிப்புகளைத் தொடர்ந்தார்! இல்லத்தில் அவரது ஆராய்ச்சிகளுக்குத் தேவையான எல்லாக் கருவிகளும், சாதனங்களும் வசதியாக எப்போதும் அமைக்கப் பட்டிருந்தன. 1725 ஆம் ஆண்டு நியூட்டனுடைய புப்புசங்களில் பழுதேற்பட்டு, தூய காற்றுள்ள இடத்திற்குக் கொண்டு செல்லப் பட்டார்! அதன் பின்பு படிப்படியாக வலுவிழந்து, ஐஸக் நியூட்டன் தனது 84 ஆவது வயதில் 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி காலமானார். பிரிட்டனின் மகா மேதைகள் புதைக்கப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் ஆபேயில் [Westminster Abbey], அரச மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது!

    நியூட்டன் திருமணம் செய்து கொள்ளவில்லை! வாலிப வயதில் அண்டை வீட்டுப் பெண்ணொருத்தி மீது லிங்கன்ஷயரில் [Lincolnshire] அவருக்கு அன்பு உண்டானது! ஆனால் தனது விஞ்ஞானப் பணிக்கு தடையாக இருக்கும் என்று நியூட்டன் அந்த உறவைத் தொடரவில்லை! அதற்குப் பிறகு எந்தப் பெண்ணின் மீதும் அவருக்குக் காதல் மலராமலே போனது! நியூட்டனின் காம இச்சையைப் பற்றி அவரது சரிதையில் எதுவும் அறிய முடிவதற்கு இல்லை!

    “இயற்கை ஒரு திறந்த புத்தகம் போன்றது. நியூட்டனுக்கு அதில் உள்ள மெய்ப்பாடுகள் சிரமமின்றி எளிதாகப் புரிந்தன,” என்று ஐஸக் நியூட்டனைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியிருக்கிறார்!

    *****************************
    தகவல்:

    1.  Men of The Stars -Sir Isaac Newton By Patrick Moore (1986)

    2  Isaac Newton’s Life By Alfred Rupert Hall (Microsoft Encarta) (1998)

    3.  Philosophy 100 Essential Thinkers -Sir Isaac Newton By Philips Stokes (2002)

    4.  The Story of Astronomy “The Clockwork Universe” By Peter Auguston (2008)

    5.  Wikipedia – Sir Isaac Newton (December 15, 2010)

    **************

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 17, 2010

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 19

    –சி. ஜெயபாரதன்.

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 19

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 73

    Mukkonakkilikal - 74

    Mukkonakkilikal - 75

    Mukkonakkilikal - 76

     

    தொடரும்…

    ***********************************************************************************************************************

    வசன கர்த்தா திரு. வையவன்:

    mukonakkiligal 1வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு  அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் புகழ்பெற்ற யுராலாஜி  மருத்துவரான டாக்டர் எம்.ஜீவகன் என்ற தம் மகனுடன் அடையாரில் வசித்து வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10 நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.
    http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html ,  http://innaiyaveli.blogspot.in/

    ஓவியக் கலைஞர் தமிழ்:

    tamizhselvanஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

    ***********************************************************************************************************************

     

     

     

     

     
    Share
  • சாக்ரடிஸ் (2)

    –சி. ஜெயபாரதன்.

    cover-image-socrates-4

    (கி. மு. 469–399)

    சாக்ரடிஸின் மரணம்

    நாலங்க நாடகம்
    அங்கம் : 3

    ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,”

    பெர்டிராண்டு ரஸ்ஸல். (1872 – 1970)

    “ஒரு நேர்மையான மனிதன் சிறு குழந்தையைப் போன்றவன்.”

    “அனைத்து மனிதரின் ஆத்மாக்களும் அழியாத் தன்மை (Immortal) படைத்தவை. ஆனால் அவற்றில் நன்னெறியோடு வாழும் ஆத்மாக்கள் தெய்வீகத்தனம் பெற்றவை.”

    “என்னைப் பொருத்த வரை எனக்குத் தெரிந்தது இதுதான் : ‘எனக்கு ஒன்றும் தெரியாது.’ என்பது.”

    “அழகு என்பது அற்ப ஆயுளுடைய ஒரு கொடுங்கோல் ஆட்சி.”

    “எப்படி முயன்றாயினும் திருமணத்தைச் செய்து கொள் ! நற்குண மனைவி ஒருத்தி அமைந்தால் நீ மகிழ்ச்சி அடைவாய் ! துர்க்குண மனைவி கிடைத்தால் நீ வேதாந்தி ஆவாய் !”

    சாக்ரடிஸ்

    முன்னுரை:

    உன்னத சித்தாந்த மேதை சாக்ரடிஸை வழக்கு மன்றத்தில் கி. மு 399 இல் விசாரணை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அவருக்கு வயது எழுபது ! அந்த கிரேக்க ஞானி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பக் கலைஞர். அப்போது நிகழ்ந்த 25 ஆண்டு காலப் போரில் ஸ்பார்டா ஏதென்ஸை கி. மு. 404 இல் தோற்கடித்தது ! அதைத் தொடர்ந்த புரட்சியில் பின்னர் குடியரசு நிலைநாட்டப் பட்டது. சாக்ரடிஸ் மேற்திசை நாடுகளின் முதற் சித்தாந்த ஞானியாக மதிக்கப் படுகிறார். அவர் வேதாந்தச் சிந்தனையாளர். உரையாடல் மூலம் மெய்யான ஞானத்தை அறிந்திட வினாக்களைக் கேட்பவர். மேற்திசை வேதாந்த அடிப்படைக்கு வித்திட்டு விருத்தி செய்தவர் இருவர். சாக்ரடிசும் அவரது சீடர் பிளாடோவும் மெய்ப்பாடுகளைத் தேடும் சிந்தனா முறைகளுக்கு வழிகாட்டியவர். சாக்ரடிஸ் போரில் பங்கெடுத்த ஒரு தீரர். போருக்குப் பின் நேர்ந்த அரசாங்கத் கொந்தளிப்பில் ஏதென்ஸ் நகரத்தில் இடையூறுகள் நிரம்பின. சாக்ரடிஸ் ஓய்வெடுத்துக் கல் கொத்தனாராய் உழைத்துத் தன் குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றி வந்தார். மனைவியின் பெயர் : ஷான்திப்பி (Xanthippe).

    சாக்ரடிஸ் வாலிப மாணவரிடம் வினாக்களைக் கேட்பதைத் தவிர தன் கைப்பட வேறெந்த நூலையும் எழுதவில்லை. அவரது பிரதானச் சீடர் பிளாடோவின் உரையாடல்கள் மூலம் குருவின் பண்பாடுகளும் கோட்பாடுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. சாக்ரடிஸ் தன் பிற்கால வாழ்வை ஏதென்ஸ் நகர இளைஞருடன் வேதாந்த நெறிப்பாடுகளை உரையாடிக் கழித்தார். உலோகாயுதச் செல்வீக வெற்றி (Material Success) பெற்ற அந்த இளைஞர் அனைவரும் சாக்ரடிஸிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார். இளைஞர் பலரைக் கவர்ந்த சாக்ரடிஸ் மீது இளைஞரின் பெற்றோருக்குப் பெரு வெறுப்பு உண்டானது ! இறுதியில் சாக்ரடிஸ் குற்றம் சாற்றப்பட்டு விசாரணைக்கு இழுத்து வரப்பட்டு ஏதென்ஸ் இளைஞர் மனதைக் கெடுத்தார் என்று கிரேக்க ஜூரர்களால் பழி சுமத்தப்பட்டார். அதன் பயங்கர விளைவு : அவருக்கு மரண தண்டனை ! சாக்ரடிஸ் குற்றத்தை ஏற்றுக் கொண்டு இறுதியாகச் சிறையில் ஹெம்லாக் நஞ்சைக் (Hemlock Poison Plant) குடித்துத் தன்னுயிரைப் போக்கிக் கொண்டார்.

    சாக்ரடிஸ் கி. மு. 470 இல் கிரேக்க நாட்டின் கூட்டாட்சி (Greek Confideracy) பெர்ஸியன் படையெடுப்பைத் தடுத்து விரட்டிய பிறகு ஏதென்ஸ் நகரில் பிறந்தார். அவரது தந்தையார் ஒரு சிற்பக்கலை வல்லுநர். தாயார் கர்ப்பவதிகளுக்குப் பேறு காலம் பார்க்கும் மருத்துவச்சி. சாக்ரடிஸ் காலத்தில் கிரேக்க நகரங்களுக்குள் குறிப்பாக ஏதென்சுக்கும் ஸ்பார்டாவுக்கும் பல சமயங்கள் கசப்பான போர்கள் நிகழ்ந்தன. சாக்ரடிஸ் இராணுவத்தில் சேர்ந்து மூன்று போர் அரங்குகளில் தீவிரமாகப் போராடித் தனது அபார உடலின் சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டினார்.

    சாக்ரடிஸ் தன்னைப் பற்றி நூல் எதுவும் எழுதாததால் நான்கு முறைகளில் அவரைப் பற்றி அறிய முடிகிறது. முதலாவது சாக்ரடிஸ் காலத்தில் வெளியான பிற நூல்களிலிருந்து தெரிந்தவை. இரண்டாவது சாக்ரடிஸ் மரணத்துக்குப் பிறகு அவரைப் பற்றி அறிந்தோர் வெளியிட்ட நூல்கள் மூலம் அறிந்தது. மூன்றாவது பற்பல பதிவுகளில் பரம்பரையாய்க் காணப்படுபவை. நான்காவது சாக்ரடிஸின் தனிப்பட்ட மனிதத் தூண்டல்கள் (Personal Influence). இந்த நான்கு மூலங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதால் அவற்றில் கூறப்படுபவை எல்லாம் ஒருவரைக் குறிப்பிடுவனவா என்னும் பெருத்த ஐயப்பாடு உண்டாகிறது ! ஆயினும் சாக்ரடிஸின் வரலாறுக் கூற்றுக்களை இரண்டு மூலாதார நூல்கள் அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றன. அவை இரண்டும் சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரைப் பற்றி நன்கு அறிந்தோர் எழுதிய நூல்கள். 1. பிளாடோவின் உரையாடல்கள் (The Dialogues of Plato) 2. “ஸெனோஃபன் என்பவரின் நினைவுப் பதிவு” (The Memorabilia of Xenophon). எழுபது வயது சாக்ரடிசுக்கு ஏதென்ஸ் விசாரணையில் தீர்வு கூறப்படும் போது பிளாடோவுக்கு வயது இருபத்தியெட்டு ! குருவுக்கு விசாரணை நடக்கும் போது பிளாடோ அதை நேரடியாகக் கண்டிருக்கிறார். மேலும் சாக்ரடிஸிடம் பிளாடோ எட்டு வருடமாகப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார்.

    பற்பல பதிவாகியுள்ளன. ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான். இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது ! பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம். நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர். சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார். பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார். ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர். இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ். இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ். அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் ! சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் ! பிளாடோ தன் உரையாடல்களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.

    சாக்ரடிஸ் விசாரணை, மரண நாடகம்

    இந்த மூவங்க நாடகம் சாக்ரடிஸின் முழு வாழ்கை வரலாறைக் கூறுவதில்லை. அவரைப் பற்றிய கால நிகழ்ச்சிக் குறிப்புக்களும் அல்ல. அவரது இறுதிக்காலத்தில் நிகழ்ந்த துன்பியல் சம்பவம். நிகழ்ச்சிகள் பற்பல சுருக்கப்பட்டு நாடகப் படைப்பு சாக்ரடிஸ் மரணக் காரணத்தை ஓரளவு எடுத்துக்காட்டுகிறது. சாக்ரடிஸ் மரணச் சம்பவம் முடிவில் ஒன்றாய் இருந்தாலும் அந்த நாடகத்தை எழுதிய பல்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வித வசனங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் எழுதப்படும் கனடா நாடக மேதை, லிஸ்டர் ஸின்கிளேர் நாடகம்தான் மெய்யானது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குறிப்பாக நாம் அறிந்து கொள்ளக் கூடியது இதுதான் : ஏதென்ஸ் நகரவாதிகள் பலர் சாக்ரடிஸின் பகைவர். தனித்துவ முறையில் வினாக்களை எழுப்பி மெய்ப்பாடுகளை வாலிப மாணவருக்கு ஞானமாகக் காட்டினார். அதனால் ஏதென்ஸ் மக்களின் வெறுப்பைப் பெற்றார். அவரைப் பழிக்குற்றம் சாற்றிச் சிறைசெய்து நஞ்சு கொடுத்துக் கொன்றனர் என்னும் வரலாற்றை வலியுறுத்திக் கூறுவதே இந்த நாடகத்தின் குறிக்கோள் ! அவரது வாசகம் இது: “நேர்மை என்பது ஒரு வகை ஞானம்.” (Virtue is a kind of Wisdom). கவிஞர் கதைகளில் அழுத்தமாய்க் கூறிவரும் காட்டுமிராண்டிகளின் தெய்வத்திலிருந்து வேறுபடாதது கடவுள்களின் பிதா ஜீயஸ் (Zeus – The Father of the Gods) என்று சாக்ரடிஸ் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

    பெர்டிராண்டு ரஸ்ஸல் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

    ஏதென்ஸ் நகரில் ஆரஞ்சுப் பழங்கள் ஆப்பிள் பழங்களாய் இருப்பினும் அவற்றைப் பெரும்பாலும் கிரேக்கர் அந்தக் காலத்தில் தின்பதில்லை. ஆனால் ஆக்டபஸ் எட்டுவால் கடல்மீனை (Octopus) ஏதென்ஸ் மக்கள் அதிகம் தின்றதாகத் தெரிகிறது !

    பிளாடோவின் உரையாடல்களில் (The Dialogues of Plato) சாக்ரடிஸ்

    பிளாடோவின் உரையாடல் நூல்கள் பற்பல பதிவாகியுள்ளன. ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான். இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது ! பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம். நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர். சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார். பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார். ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர். இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ். இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ். அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் ! சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் ! பிளாடோ தன் உரையாடல் களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.

    அங்கம் -3

    காலம் : கி. மு. 399

    இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம்.

    நேரம் : பகல் நேரம்.

    பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

    காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

    முதல் காவலன்: எழுந்து நிற்பீர். வருகிறார் ! வருகிறார் ! நீதி மன்ற மாஜிஸ்டிரெட்டுகள் வருகிறார். வழியை மறைக்காதீர் !

    [ஃபிளிப் (Philip), ஸைரஸ் (Cyrus), டிரிப்டாலிமஸ் (Triptolemus) மூன்று மாஜிஸ்டிரேட்டுகள் நுழைகிறார். அவரவர் ஆசனத்தில் அமர்கிறார். அவையோர் மூவரையும் கைதட்டி வரவேற்கிறார்.]

    ஃபிலிப்: (மேஜையைத் தட்டி) அமைதி ! அமைதி ! நீதி மன்றம் துவங்குகிறது. கொண்டு வாரீர் குற்றவாளியை ! குற்றம் சாட்டியோர் இங்குள்ளாரா ?

    லைகான், மெலிடஸ், ஆனிடஸ்: (மூவரும் எழுந்து) ஆமாம் மேன்மை தங்கிய நீதிபதி அவர்களே !

    (சாக்ரடீஸை இரண்டு காவலர் சங்கிலில் இழுத்து வருகிறார்)

    ஃபிலிப்:: (காவலரைப் பார்த்து) கைச் சங்கிலி கால் சங்கிலியை அகற்றுவீர் !

    (சாக்ரடிஸ் சங்கிலியை அவிழ்த்ததும் பீடத்தில் ஏறி நிற்கிறார். )

    மெலிடஸ்: (சட்டென எழுந்து) கால் சங்கிலியை நீக்காதீர் ! கிழவர் ஓடி விடுவார் ! அவரைக் கண்டுபிடிக்கவே ஏழு நாட்கள் ஆகி விட்டனளெமக்கு ?

    சாக்ரடிஸ்: கனம் நீதிபதி அவர்களே ! என் பருத்த உடம்பைப் பாருங்கள் ! என்னால் ஓட முடியாது. என்னால் நடக்கத்தான் முடியும். நான் தப்பி ஓடி ஏதென்ஸில் எங்கே ஒளிவது ?

    மெலிடஸ்: நீவீர் ஓடா விட்டாலும் உமது தோழர் உம்மைத் தூக்கிச் சென்று ஒளித்து வைப்பார்.

    ஃபிலிப்:: மெலிடஸ் ! கூறுவாய் ! சாக்ரடிஸ் செய்த குற்றங்கள் என்ன ?

    மெலிடஸ்: ஏதென்ஸ் வாலிபர் கெடுப்பு ! தெய்வத் துவேசம் ! தேசத் துரோகம் !

    ஃபிலிப்: சாக்ரடிஸ் ! இந்த மூன்று குற்றங்களை நீவீர் ஒப்புக் கொள்கிறீரா ?

    சாக்ரடிஸ்: எப்படி ஒப்புக் கொள்வது எனக்குப் புரியாத போது ? என் மீது சாட்டிய குற்றங்கள் என்ன என்பது புரிய வில்லை கனம் நீதிபதி அவர்களே ! குற்றம் சாட்டியவர் ஒவ்வொன்றாய் எனக்கு விளக்க வேண்டும் ! நான் அறிவில்லாதவன் ! ஆனால் அறிவைத் தேடுபவன் ! இந்த அறிவில்லாதவனுக்கு அறிவாளிகள் அறிவைப் புகட்ட வேண்டும் !

    பிலிப்: சாக்ரடிஸ் ! எங்கே உமது வழக்கறிஞர் ? உமது சார்பில் வாதாட வழக்கறிஞர் இல்லையா ?
    சாக்ரடிஸ்: இல்லை, எனக்கு வழக்கறிஞர் இல்லை ! நான் ஏழை கனம் நீதிபதி அவர்களே ! என்னை நான்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் !

    மெலிடஸ்: முதலில் பெரிய குற்றம் : ஏதென்ஸ் நகர வாலிபரைக் கவர்ந்தது கெடுத்தது !

    சாக்ரடிஸ்: கனம் நீதிபதி அவர்களே ! என் தோற்றத்தைப் பாருங்கள் ! என் பூத வடிவம் யாரையாவது கவர முடியுமா ? ஏதென்ஸ் நகர வாலிபர் என்னைத் தேடி வருகிறார் ! என்னிடம் கேள்வி கேட்கிறார் ! பதில் தெரியாமல் நான் அவருக்கு வினாக்களைத் தொடுக்கிறேன். அவர் தரும் விடைகளே எனக்கு அறிவைக் கொடுக்கிறது. நானவரைக் கெடுத்தேன் என்பதற்குச் சான்றுகள் கொடுப்பீரா ? எனக்கு அறிவைப் புகட்டியவர் ஏதென்ஸ் வாலிபர் !

    மெலிடஸ்: இந்தக் கிழவர் இப்படித்தான் குற்றத்தைக் கூடக் குணப்பாடு போல் மாற்றுவார் ! உண்மையத் திரிப்பார் ! இவர் சொல்வது புளுகு !

    சாக்ரடிஸ்: இதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளனவா ? புள்ளி விபரம் உண்டா ?

    பிளிப்: மெலிடஸ் ! சாக்ரடிஸ் யார் யாரைக் கெடுத்தார் ? எத்தனை பேரைக் கெடுத்தார் ? எப்போது கெடுத்தார் ? இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளனவா ?
    மெலிடஸ்: கனம் நீதிபதி அவர்களே ! இப்போது அந்தப் பெயர் நிரல் என் கைவசம் இல்லை ! என் வீட்டில் மறந்து வைத்து விட்டேன் ! கொண்டு வரவில்லை. மன்னிக்க வேண்டும் என்னை.

    பிளிப்: ஆதாரமில்லாமல் முதல் குற்றம் நீக்கப் படலாமா ?
    மெலிடஸ்: நான் அடுத்த வழக்காடல் தினத்தில் கொண்டு வருகிறேன்.

    சாக்ரடிஸ்: அப்படியால் இன்று மூன்று குற்றத்தில் ஒன்று நிரூபிக்கப் படவில்லை ! வாலிபரை நான் கெடுத்ததாய்ச் சொன்னது ஆதார மற்றது !

    ***************************

    “கவிஞர் தமது கவிதையைப் படைக்க ஏதுவாக்குவது அவரது தனித்துவ ஞானமன்று. ஆழ்ந்த போதனைகள் என்ன பொருளைக் கூறுகின்றன என்று சொல்லாமல் சொல்லும் தீர்க்கதரிசிகள் அல்லது தேவ தூதரிடம் காணப்படும் ஒருவகை உள்ளுணர்வு அல்லது உட்கிளர்ச்சி (Instinct or Inspiration) என்பது எனது தீர்மான முடிவு.”

    “அரசியல்வாதியாக ஆகத் தகுதியற்று வாழுகின்ற ஓர் நேர்மைவாதி நான்.”

    “காயப் பட்டவன் ஒருவன் பதிலுக்குக் காயம் உண்டாக்க மீளக் கூடாது. காரணம் அநியாயமாகத் தீமை செய்வது ஒருபோதும் நேர்மையாகாது. என்ன கெடுதிக்குள்ளாகி நாம் இடர் உற்றாலும் ஒருவனுக்குக் காயத்தை திருப்பி ஏற்படுத்துவது அல்லது பதிலுக்குத் தீங்கு அளிப்பது ஒருபோதும் நியாயமாகாது.”

    சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

    ******************************

    காலம் : கி. மு. 399

    இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

    நேரம் : பகல் நேரம்.

    பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

    காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

    சாக்ரடிஸ்: அப்படியால் இன்று மூன்று குற்றத்தில் ஒன்று நிரூபிக்கப் படவில்லை ! வாலிபரை நான் கெடுத்ததாய்ச் சொன்னது ஆதாரமற்றது ! இதுவரை யாரும் அதற்குச் சான்றுகள் தர வில்லை.

    ஆனிடஸ்: கனம் மாஜிஸ்டிரேட் அவர்களே ! இந்தக் கிழவர் கூறுவது பொய். என் வாலிப மகனைக் கெடுத்தவர் இந்தக் கிழவர். நான் நிரூபித்துக் காட்டுகிறேன்.

    மாஜிஸ்டிரேட் ஃபிலிப்: சாக்ரடிஸ் ! உங்களுக்கு ஆனிடஸ் மகனைத் தெரியுமா ?

    சாக்ரடிஸ்: ஆமாம் தெரியும் எனக்கு. ஒரு சிலநாட்கள் என்னுடன் பழகினான்.

    ஆனிடஸ்: அத்துடன் என் மகன் சில நாட்கள் சாக்ரடிஸ் இல்லத்தில் தங்கினான். என் மகனை மயக்கி என்னிடமிருந்து அபகரித்துக் கொண்டவர் இந்தக் கிழவர். எங்கள் இல்லத்தை மறக்கும்படி மகன் மீது தனது அறிவுக் கவர்ச்சியை வீசியவர் இந்தக் கிழவர்.

    ஃபிலிப்: சாக்ரடிஸ் ! ஆனிடஸ் மகனை ஏன் அவனது வீட்டுக்கு அனுப்பவில்லை ?

    சாக்ரடிஸ்: அவன்தான் தன் வீட்டுக்குப் போவதை விரும்பவில்லை ! நான் போகச் சொன்னாலும் அவன் போக மறுத்தான்.

    ஆனிடஸ்: என் மகனைக் கிழவர் ஏன் தன் வீட்டில் தங்க வைத்தார் என்று கேளுங்கள்.

    சாக்ரடிஸ்: கனம் நீதிபதி அவர்களே ! போக மறுக்கும் வாலிபன் கழுத்தைப் பிடித்து என்னால் தள்ள முடியாது. அவன்தான் விரும்பி என்னோடு இல்லத்தில் தங்கினான்.

    ஆனிடஸ்: கனம் மாஜிஸ்டிரேட் அவர்களே ! (தயங்கிக் கொண்டு) சாக்ரடிஸ் இருபால் (Bisexual) இச்சை உள்ளவர் !

    ஃபிலிப்: சாக்ரடிஸ் ! இது உண்மையா ? நீவீர் இருபால் இச்சை உள்ளவரா ?

    சாக்ரடிஸ்: (தயங்கிய வண்ணம்) ஆமாம் நீதிபதி அவர்களே !

    ஃபிலிப்: சாக்ரடிஸ் ! உமக்கும் ஆனிடஸ் மகனுக்கும் முரணான உடற் தொடர்புண்டா ?

    சாக்ரடிஸ்: இல்லை நீதிபதி அவர்களே !

    ஃபிலிப்: நீவீர் உண்மையைச் சொல்கிறீரா ?

    சாக்ரடிஸ்: உண்மை ! நான் சொல்வது முற்றிலும் உண்மை ! உண்மை தவிர வேறில்லை ! எனக்கும் ஆனிடஸ் மகனுக்கும் உடற் தொடர்பில்லை !

    ஆனிடஸ்: கனம் நீதிபதி அவர்களே ! இந்தக் கிழவரை நான் நம்பமாட்டேன் ! இவர் சொல்து அனைத்தும் பொய். என் மகனைக் கெடுத்தவர் இவர் ! இவனை நீங்கள் தண்டிக்க வேண்டும் !

    இந்தக் கிழவர் மற்ற ஆடவரிடம் உடலுறவு வைத்திருந்ததை நான் அறிவேன்.

    ஃபிலிப்: சாக்ரடிஸ் ! நீவீர் வேறு சில ஆடவரோடு உடற் தொடர்பு கொண்டது உண்மையா ?

    சாக்ரடிஸ்: உண்மை. ஆனால் ஆனிடஸ் மகனோடு நான் உடற் தொடர்பு கொள்ளவில்லை !

    ஆனிடஸ்: கிழவர் பொய் சொல்லித் தப்பிக் கொள்ள முனைகிறார். நீதிபதி அவர்களே ! நம்பாதீர் இவரை ! என் தொழிலில் ஈடுபடாமல் என் மகனைத் தடுத்தவர் இந்தக் கிழவர் !

    ஃபிலிப்: ஆனிடஸ் ! உன் தொழில் என்ன வென்று சொல் முதலில் !

    ஆனிடஸ்: தோல் பதனிடுவது எனது தொழில் கனம் நீதிபதி அவர்களே ! இவரைச் சந்தித்த பிறகு என் மகன் தோலைத் தொடுவதில்லை ! தோல் செப்பணிடும் தொழிலில் ஈடுபடுவதில்லை.

    ஃபிலிப்: சாக்ரடிஸ் ! தந்தை செய்யும் தோல் பதனிடும் தொழிலில் மகன் ஈடுபடக் கூடாது என்று நீவீர் தடுத்தீரா ?

    சாக்ரடிஸ்: நான் தடுக்க வில்லை கனம் நீதிபதி அவர்களே ! ஆனிடஸ் மகன் மேற்படிப்புக்கு போக விரும்பினான். நான் அதை ஊக்கிவித்தது உண்மை ! ஆனால் அதற்குத் தந்தையுடன் செய்யும் தொழில் இடையூறாக இருக்குமே என்று எச்சரித்தேன். ஆனால் நான் தோல் பதனிடும் தொழிலை விட்டுவிடச் சொல்லி வற்புறுத்த வில்லை ! மேற்படிப்பு முக்கியமா குடும்பத் தொழில் முக்கியமா என்று முடிவு செய்தவன் ஆனிடஸ் மகன் ! நான் அதற்குப் பொறுப்பாளி அல்லன். தந்தையின் தொழில் முக்கிய மென்றால் மகனைத் திருப்பும் பொறுப்பு தகப்பனைச் சார்ந்தது. தகப்பனால் மகனைத் தன் தொழிலுக்குத் திருப்ப முடியவில்லை என்பது உண்மை.

    ***************************

    “மனிதனுக்குச் சமமாக மாதருக்குச் சம உரிமை அளித்தால், மனிதனுக்கு மேலதிகாரியாக மாதர் ஆகி விடுவார்.”

    “திருமண இல்வாழ்வோ அல்லது பிரமச்சரியத் தனி வாழ்வோ ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்த ஒரு மனிதன் பின்னால் அதற்கு நிச்சயமாக வருத்தம் அடைவான் !”

    “ஒப்பிடும் வகையில் உணர்ச்சி வசப்பட்ட ஒழுக்க முறைப்பாடு அர்த்தமற்ற வெறும் போலித்தனமே. அது உண்மை யில்லாத நியாய மில்லாத ஓர் ஆபாச மனக் கருத்தே.”

    “சாதாரண மாந்தருக்குப் பேரளவு இன்னல் தரச் சாமர்த்தியம் உள்ளது போல், பெருமளவில் நல்வினை புரியவும் அவருக்குத் திறனிருக்கலாம் என்பதை எண்ணத்தான் முடியும் என்னால்.”

    சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

    ******************************

    காலம் : கி. மு. 399

    இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக் கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

    நேரம் : பகல் நேரம்.

    பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

    காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

    நீதிபதி ஃபிலிப்: சாக்ரடிஸ் ! உன் இரண்டாவது குற்றச் சாட்டுக்கு என்ன சொல்கிறாய் ? தெய்வ அவமதிப்பு ! அரசாங்க எதிர்ப்பு ! (Blasphemy & Sedition) செய்திருக்கிறாய் நீ. அவற்றைப் பற்றி நாம் காலை முழுவதும் பேசி இருக்கிறோம்.

    சாக்ரடிஸ்: காலை முழுவதுமா ? நான் என் வாழ்வு முழுவதும் அவற்றைப் பற்றித்தான் பேசிக் கொண்டு வந்திருக்கிறேன்.

    லைகான்: பார்த்தீரா ? வாழ்க்கை முழுவதும் பயங்கர மனிதனாக வாழ்ந்து வந்ததை ஒப்புக் கொள்கிறார் சாக்ரடிஸ் !

    நீதிபதி ஃபிலிப்: குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா ?

    சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! நான் அவற்றைப் பேசினேன் என்பது உண்மை. ஆனால் நான் அவற்றில் ஈடுபட வில்லை. நாட்டுக்காகப் போரிட்டவன் நான் ! நாட்டை எதிர்த்து எதுவும் செய்ய வில்லை நான் ! கடவுளை மதிப்பவன் நான் ! அதன் மீது நம்பிக்கை கொண்டவன் நான் ! கடவுளை அவமதிப்பவன் நான் அல்லன் !

    சைரஸ்: புகை உள்ள இடத்தில் தீ இருக்கும் ! கடவுளை மதிப்பவன் தான் ஏதென்ஸின் நாட்டுத் தெய்வங்களை அவமதிக்கிறான்.

    சாக்ரடிஸ்: ஆமாம் புகை எங்கிருக்கிறதோ அங்கு தீ இருக்கும் ! உலகத்தின் உன்னத ஞானி என்று புகழப் பட்டவன் இப்போது மூடனாய் இகழப் படுகிறான். ஆனிடஸ் ! தெய்வ அவமதிப்பு என்றால் என்ன என்று விளக்குவாயா ?

    ஆனிடஸ்: நான் விளக்க மாட்டேன் ! உமக்கு விளக்க மறுக்கிறேன் !

    சாக்ரடிஸ்: ஏன் மறுக்கிறாய் ?

    ஆனிடஸ்: சாக்ரடிஸ் ! உன்னை நான் நன்றாக அறிவேன் ! நீ சாமர்த்தியசாலி ! நான் சொல்வதை மடக்கி என் மீதே அதைக் கணையாக ஏவி விடுவாய் நீ ! உன்னிடம் மன்றத்தில் வாதாடினால் நான் தோற்று விடுவேன் ! எனக்குப் புரிந்ததைப் புரியாமல் செய்து விடுவாய் ! பிறகு மன்றத்தார் என்னை பரிதாபமாகப் பார்ப்பார் !

    சாக்ரடீஸ்: நீ என்ன பேசுகிறாய் என்று உனக்குத் தெரியாதா ?

    ஆனிடஸ்: எனக்குத் தெரியும் நான் பேசுவது. அதுபோல் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் உன்னைத் தவிர !

    சாக்ரடிஸ்: வேடிக்கையான குற்றச் சாட்டு ! தெய்வ அவமதிப்பு என்று குற்றம் சாட்டி விட்டு எதிர்வாதிக்கு அது என்ன வென்று சொல்லத் தெரியவில்லை.

    லைகான்: சாக்ரடிஸ் ! உனக்குத் தெரியும் ! நீ எப்போதும் கடவுளைப் பற்றிப் பேசுபவன்.

    டிரிப்தோலிமஸ்: நானும்தான் கடவுளைப் பற்றிப் பேசுகிறேன்.

    சாக்ரடிஸ்: நீ ஒரு வர்த்தகன் ! செல்வம் திரட்டும் வியாபாரி ! உன் உதடுகள் பணக் கடவுளை வழிபடும் ! நீ கடவுளை நினைப்பதன் காரணம் வேறு. நான் கடவுளை நினைப்பதின் காரணம் வேறு. பணத்தைக் குறி வைத்துத் தேடும் நீதான் கடவுளை அவமதிக்கிறாய் ! குணத்தைக் குறிவைத்து நான் கடவுளை நினைக்கிறேன். அது நான் வைத்துள்ள பேரருள் மதிப்பு.

    ஆனிடஸ்: சாக்ரடிஸ் ! உண்மையைச் சொல். நீவீர் ஏதென்ஸ் தெய்வங்களை வழிபடுவதில்லை ! பதிலாக இழிவு படுத்தினீர் ! இல்லையா ? தெய்வ அவமதிப்பு என்றால் ஏதென்ஸ் மக்கள் வணங்கும் தெய்வங்களை நீ முழுக்க முழுக்க நம்பாதது !

    சாக்ரடிஸ்: ஏதென்ஸில் அநேக தெய்வங்கள் உள்ளன ! அவற்றில் எந்த தெய்வங்களைக் குறிப்பிடுகிறீர் ?

    ஆனிடஸ்: ஏதென்ஸின் உள் நாட்டுத் தெய்வங்கள். வெளிநாட்டுத் தெய்வங்கள் அல்ல.

    சாக்ரடிஸ்: உள்நாட்டுத் தெய்வங்கள் எவை ? வெளிநாட்டுத் தெய்வங்களை எனக்குத் தெரியாது.

    ஆனிடஸ்: ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தெய்வ நம்பிக்கை உள்ளது !

    சாக்ரடிஸ்: உதாரணமாக நான் கேட்கிறேன், எகிப்தியர் நமது தெய்வங்களை நம்புகிறாரா ?

    ஆனிடஸ்: இல்லை சாக்ரடிஸ் !

    சாக்ரடிஸ்: எகிப்தியர் தெய்வங்கள் நமது தெய்வங்களை விட உயர்ந்தவையா ? அல்லது தாழ்ந்தவையா ? ஆழ்ந்து சிந்தித்த பிறகு பதில் சொல் ஆனிடஸ் !

    ஆனிடஸ்: நீதிபதி அவர்களே ! இப்போது விசாரணை என் மீதா ? அல்லது சாக்ரடீஸ் மீதா ? கேள்விகள் என் மீது ஏன் வீசப் படுகின்றன ? என்னை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும் பிரபு ! இந்தக் கிழவர் என்னை மடக்கிப் போடச் சுற்றி வளைத்து வருகிறார்.

    சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! நான் இரண்டு வேலை செய்கிறேன். ஒரு புறம் குற்றம் சுமத்தப் பட்டவன் ! மறுபுறம் குற்றவாளிக்காக வாதாடுபவன். என் தரப்பில் நான்தான் எதிராளியைக் கேள்வி கேட்க முடியும் ! சொல் ஆனிடஸ் ! ஏதென்ஸ் உள்நாட்டுத் தெய்வங்களை நான் நம்பா விட்டால் அது தெய்வ அவமதிப்பா ?

    லைகான்: பாருங்கள் சாக்ரடிஸே குற்றத்தை ஒப்புக் கொள்கிறார் ! உள்நாட்டுத் தெய்வங்களைத்தான் நம்ப வில்லை என்பதை அவரே அறிவிக்கிறார்.

    சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! நான் எதையும் ஒப்புக் கொள்ள வில்லை. லைகான் ! இதை மட்டும் நான் ஒப்புக் கொள்கிறேன் : ஒன்று எல்லாக் கடவுள்களும் உலகில் பொதுவானவை. நாம் உலகக் கடவுள்கள் அனைத்தையும் நம்ப வேண்டும். உள்நாட்டுக் கடவுளோ வெளி நாட்டுக் கடவுளோ எல்லாம் உலகக் கடவுள்கள்தான். ஏதென்ஸ் கடவுள்களும் அவற்றில் அடங்கும். இதை நம்பும் நான் தெய்வ இகழ்வாளியா ? ஏதென்ஸ் தெய்வங்களை மட்டும் நம்பாமல் உலகில் எல்லா தெய்வங்களையும் நம்பும் நான் ஒரு தெய்வ அவமதிப்பாளனா ?

    ***************************

    “அனைத்து மனிதரின் ஆத்மாக்களும் அழியாத் தன்மை (Immortal) பெற்றவை. ஆனால் அவற்றில் நன்னெறியோடு வாழும் ஆத்மாக்கள் தெய்வீகத்தனம் பெற்றவை.”

    “அழகு என்பது அற்ப ஆயுளுடைய ஒரு கொடுங்கோல் ஆட்சி.”

    “எப்படி முயன்றாயினும் திருமணத்தைச் செய்து கொள் ! நற்குண மனைவி ஒருத்தி அமைந்தால் நீ மகிழ்ச்சி அடைவாய் ! துர்க்குண மனைவி கிடைத்தால் நீ வேதாந்தி ஆவாய் !”

    “என்னைப் பொருத்த வரை எனக்குத் தெரிந்தது இதுதான் : ‘எனக்கு ஒன்றும் தெரியாது.’ என்பது.”

    “ஒரு நேர்மையான மனிதன் சிறு குழந்தையைப் போன்றவன்.”

    சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

    ******************************

    காலம் : கி. மு. 399

    இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

    நேரம் : பகல் நேரம்.

    பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

    காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

    டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! இப்போது தெளிவாகச் சொல்வீர் ! நீவீர் எவற்றின் மீது நம்பிக்கை வைத்துள்ளீர் ?

    மெலிடஸ்: (ஆவேசமாய் முந்திக் கொண்டு) நான் சொல்கிறேன் அவரைப் பற்றி ! பேய், பிசாசு, போலித் தெய்வம் ! பாதி மனிதனும் பாதித் தெய்வமான அரைத் தெய்வம் ! சாக்ரடிஸ் காதிலே எப்போதும் ஏதோ ஓர் அசரீரி ஆன்மா உரையாடுவதாகச் சொல்வார் ! அதுவே அவர் செய்வதை ஆணை இடுவதாகச் சொல்வார் ! அது உண்மையா இல்லையா ? சொல் சாக்ரடிஸ் !

    நீதிபதி ·பிளிப்: மெலிடஸ் ! ஏன் குறுக்கே பாய்கிறாய் ? சாக்ரடிஸ் சொல்லப் போவதை யூகித்து நீ கூறுவது வழக்காடல் ஆகாது ! வழக்கு நெறி தவறிய செயல் அது !

    மெலிடஸ்: (மீண்டும் குறுக்கிட்டு) நான் சொல்வது உண்மை தானே சாக்ரடிஸ் !

    சாக்ரடிஸ்: (மெதுவாக, பொறுமையாக) நீதிபதி அவர்களே ! நான் பேய், பிசாசு, போலித் தெய்வங்களை நம்பாதவன் ! அரைத் தெய்வம் என்றால் புரியவில்லை எனக்கு ! ஆனால் ஓர் அசரீரி ஆன்மா என் காதில் எனக்கு ஆணை இடுவது உண்மைதான் ! அதன்படி நடப்பவனும் நான்தான் ! அதன் ஆலோசனகளில் நன்னெறிகள் இருக்கும்.

    நீதிபதி ·பிளிப்: அதென்ன அசரீரி ஆன்மா ? எனக்குப் புரியவில்லை.

    சாக்ரடிஸ்: (சிரித்துக் கொண்டு) ஆத்மா சுத்தமாக இருப்பவர் காதில்தான் அந்த அசரீரி பேசும் ! அதை ஒரு குட்டிக் கடவுள் என்று வைத்துக் கொள்வீர். அல்லது ஒரு தெய்வத்தின் பிள்ளை என்றும் நினைத்துக் கொள்ளலாம். தப்பாகப் பிறந்த பிள்ளை !

    மெலிடஸ்: எமக்குத் தெரியும் அது ! தெய்வத்தின் பிள்ளையை இப்படித் தப்பான பிள்ளை என்று கேலி செய்யும் நீவீர் தந்தையான தெய்வத்தையும் அவமதிக்கிறீர் !

    சாக்ரடிஸ்: நான் இந்தப் போலி தெய்வத்தையே நம்பாத போது அதன் பிள்ளையை எப்படி நம்புவேன் ? நான் குதிரையை நம்புகிறேன் ! கோவேறு கழுதையை நம்புவதில்லை.

    மெலிடஸ்: தெய்வத்தைக் கோவேறு கழுதைக்கு இப்போது ஒப்பிட்டுக் காட்டுவது கண்டிக்கப் பட வேண்டும் !. கனம் நீதிபதி அவர்களே ! உடனே இவரைக் கண்டித்துத் தண்டிக்க வேண்டும் !

    நீதிபதி: நான்தான் இங்கே நீதிபதி ! குற்றதை ஏற்றுக் கொள்ள வைக்காமல் கண்டிப்பதோ தண்டிப்பதோ தவறு ! அதை நிர்ணயம் செய்வது நான் ! மெலிடஸ் ! வாயைத் திறக்காதே அழைக்கப் படாமல் !

    சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! இப்போது எனக்கு ஓர் விளக்கம் தேவை ! தெய்வம் என்பது என்ன ? யாராவது எனக்கு விளக்கம் தர வேண்டும். இதில் அரைத் தெய்வம் எது ? முழுத் தெய்வம் எது ? மனிதத் தெய்வம் எது ?

    ஆனிடஸ்: நீதிபதி அவர்களே ! இத்தகைய வினாக்களைத் தொடராமல் நிறுத்த வேண்டும் ! சாக்ரடிஸ் சாமர்தியசாலி ! இப்படி முதலில் விளக்கம் கேட்பார் ! பிறகு அதிலே பதில் அளிப்பவனை மூழ்க்கிவிடுவார் ! அவரைச் சொல்லாடி யாரும் வெல்ல முடியாது ! இதுவரை யாரும் அவரை வென்றதில்லை !

    சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! எனக்குப் புரியாத ஒரு கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. சொல்லுங்கள் ! கடவுள் என்பது என்ன ? நீங்கள் விளக்கம் தராவிட்டால் என் விளக்கத்தைக் கேட்கத் தயாராக இருப்பீரா ?

    டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! முதலில் இதற்குப் பதில் சொல் ! கடவுளைப் பற்றி நீ என்ன நம்பிக்கை கொண்டிருக்கிறாய் ?

    சாக்ரடிஸ்: கடவுள் என்பது ஒன்று ! நான் நம்புவது அந்த ஒற்றக் கடவுளைத்தான் ! பற்பல தெய்வங்களை நான் நம்புவதில்லை ! என் காதில் கேட்கும் பல தெய்வங்கள் புராண நூல்களில் எழுதப் பட்டவை ! இதிகாசக் கதைகளில் காணப்படுபவை ! சில தெய்வங்கள் சினம் கொண்டவை ! சில தெய்வங்கள் செந்நெறி யுடையவை ! சில தெய்வங்கள் மூர்க்கத்தனம் படைத்தவவை ! சில பயங்கரத் தெய்வங்கள் மக்களைக் கொல்கின்றன ! கதைகளில் வரும் அவை யாவும் கடவுள்கள் அல்ல ! அவைதான் பேய்கள், பிசாசுகள் ! நான் அவற்றை நம்புவதில்லை ! இதிகாசக் கதைகளில் நாம் தெரிந்து கொண்ட அந்தத் தெய்வங்கள் நம்மை மகிழ்விக்கவோ, பயமுறுத்தவோ அல்லது துயர்ப்படுத்தவோ சொல்லப் பட்டவை ! நான் அவற்றை நம்புவதில்லை ! நான் நம்புவது உலகம் அனைத்துக்கும் ஒன்றான கடவுளை ! ஒற்றைக் கடவுளை ! புராண நூல்களில் எழுதப்பட்ட அநேகத் தெய்வங்களை அல்ல ! ஆனால் புராண நூல்களில் அந்த ஒற்றைக் கடவுளின் ஒளிவீசலாம். அந்த ஒப்பற்ற கடவுள் இந்தப் பேருலகில் இருக்கிறது. அழகுமயம், சத்திய நெறி, நீதி நெறி (Beauty, Truth & Justice) என்பவை அந்தக் கடவுளுக்கு உள்ள சில பெயர்கள் ! அந்தக் கடவுளுக்கு உள்ள மற்ற பெயர்கள் எனக்குத் தெரியாது ! ஆனால் ஒன்று எனக்கு நன்றாகத் தெரியும். அந்தக் கடவுள் பிறரிடம் உள்ள நன்னெறிகளைக் காண எனக்குச் சொல்லிக் கொடுக்கிறது. அக்கடவுள் நன்னெறிகளை எனக்குப் புகட்டுகிறது. கடவுளை அறிவது என்று கூறுவது நேர்மை நெறி அதுவென்று அறியப்படுவது. அந்தக் கடவுளை அறியாமல் இருப்பது பாபம் என எண்ணப்படுவது. மனிதரின் பாபத் தவறுகள் மூன்று : வெறுப்பு, பழிவாங்கல், பொறாமை. இதுதான் என் கடவுள் நம்பிக்கை. இதைத்தான் நான் ஏதென்ஸ் நகர் வாலிபருக்குப் பல்லாண்டுகளாய்ச் சொல்லிக் கொடுக்கிறேன். இது உங்களுக்குத் தெய்வத் துரோகமாகத் தெரிகிறதா ? நான் ஏதென்ஸ் வாலிபரைக் கெடுத்தேன் என்பதில் நியாயம் உள்ளதா ?

    ***************************

    “ஒரு செல்வந்தன் தனது சொத்து சேமிப்பைப் பற்றிப் பெருமை அடைந்தால், எப்படி அவன் அந்தப் பணத்தைச் செலவழிக்கிறான் என்று அறிவதற்கு முன்னே அவனைப் பற்றி ஒருவர் புகழக் கூடாது.”

    “காயப் பட்டவன் ஒருவன் பதிலுக்குக் காயம் உண்டாக்க மீளக் கூடாது. காரணம் அநியாயத் தீமை செய்வது ஒருபோதும் நேர்மையாகாது. என்ன கெடுதிக்குள்ளாகி நாம் இடர் உற்றாலும் ஒருவனுக்குக் காயத்தை திருப்பி ஏற்படுத்துவது அல்லது பதிலுக்குத் தீங்கு அளிப்பது ஒருபோதும் நியாயமாகாது.”

    “கவிஞர் தமது கவிதையைப் படைக்க ஏதுவாக்குவது அவரது தனித்துவ அறிவன்று. ஆழ்ந்த போதனைகள் என்ன பொருளைக் கூறுகின்றன என்று சொல்லாமல் சொல்லும் மெய்ஞானிகள் அல்லது தீர்க்க தரிசிகளிடம் காணப்படும் ஒருவகைத் தன்னுணர்ச்சி அல்லது உட்கிளர்ச்சி (Instinct or Inspiration) என்பது எனது தீர்மான முடிவு.”

    “அரசியல்வாதியாக ஆகத் தகுதியற்று வாழுகின்ற ஓர் நேர்மைவாதி நான்.”

    சாக்ரடிஸ்

    ******************************

    காலம் : கி. மு. 399

    இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

    நேரம் : பகல் நேரம்.

    பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

    காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

    (தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

    சாக்ரடிஸ்: நான் நம்புவதை பிறருக்குச் சொல்லித் தருகிறேன். கடவுளைப் பற்றி அறிவதை உமது சேமிப்புச் செல்வத்துக்கு மேலாக, உயிர் வாழ்வுக்கும் மேலாக மதிக்க வேண்டும். ஏனெனில் சேமிப்புச் செல்வமும், சுகபோக வாழ்வும் நேர்மை நெறியைப் புகட்ட மாட்டா ! கடவுளைப் பற்றி அறியும் உயர்ந்த ஞானமே அவற்றைத் தர வல்லது. நேர்மை நெறியிலிருந்து பொது மனிதப் பண்பாடும் தனி மனிதப் பண்பாடும் உருவாகின்றன. நான் கடவுளைப் பற்றி வாலிபருக்குக் கூறியவை நாட்டுத் துரோகம் என்று கூறப்பட்டால், என்னைக் குற்றவாளி என்பவர் வெற்றி பெற்றவர் ஆவார். நான்தான் தீயவன் ஆவேன். நான் தண்டிக்கபட வேண்டியவன் ஆயினும் அந்தத் தண்டனை என் கருத்துகளை ஒருபோதும் மாற்ற முடியாது.

    நீதிபதி டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! நீவீர் கடவுளின் நியதியை முறிக்க வில்லை என்று வாதாடுகிறீர். மனிதர் உமது குற்றத்தை மறந்து விட வேண்டும் என்று பிழைத்துக் கொள்ள நினைக்கிறீர். மனிதரோடு கடவுளும் உம்மை மன்னித்து விட வேண்டும் என்று எதிபார்க்கிறீர். அவை ஒருபோதும் நிறைவேறா !

    சாக்ரடிஸ்: ஏன் அப்படிச் சொல்கிறீர் நீதிபதி அவர்களே ?

    டிரிப்தோலிமஸ்: இரண்டு கால் மனிதரை நீவீர் வேதாந்த முகில் படிந்த இரண்டு கால் பொதி மூட்டையாய் மாற்றப் பார்க்குகிறீர். ஏதென்ஸ் நகரக் கடவுளை நீவீர் எப்போதும் மதிப்பவதில்லை !

    சாக்ரடிஸ்: அது உண்மை நீதிபதி அவர்களே !. வெறுப்பும் பொறாமையும் நிரம்பிய ஏதென்ஸ் நகரத் தெய்வங்கள் எந்தப் புனித மனிதருக்கும் ஏற்றவை அல்ல ! அவற்றைப் புராணக் கதைகளில் ஓய்வெடுக்க விட்டு விடுவீர் !

    டிரிப்தோலிமஸ்: இந்த துணிச்சலான தெய்வ அவமதிப்பு சாக்ரடிஸின் தலைக் கர்வத்தைக் காட்டுகிறது. இது தெய்வத் துரோகம் ! தேசத் துரோகம் ! தண்டிக்கப் பட வேண்டிய துரோகம் ! நாங்கள் ஒரு கருவியாய் அதைக் காட்டித் தண்டனையைக் கண்டு களிக்க எமக்கோர் வாய்ப்பு கிடைத்துள்ளது !

    லைகான்: கேட்டீரா சாக்ரடிஸ் ? நீதிபதி ஒருவர் இப்போதே உமக்குத் தீர்ப்பளித்து விட்டார் !

    சாக்ரடிஸ்: நான் கேட்ட வினாவுக்கு இன்னும் எனக்குப் பதில் கிடைக்க வில்லையே ! உலகக் கடவுள் ஒன்றை நான் மதிப்பது தவறென்று யாரும் கூறவில்லையே ? அந்தக் கடவுள் ஏதென்ஸ் நாட்டுக்கும் தெய்வமே ! அதை நீவீர் நிராகரிக்க வில்லை ! ஆகவே என் போக்கில் தவறில்லை என்பதை நான் சொல்லலாமா ?

    லைகான்: பாருங்கள் இந்த வேடிக்கை மனிதரை ! எப்படியெல்லாம் தனது கருத்தைத் திரித்துத் தான் தப்பிக் கொள்ள முனைகிறார் என்று பாருங்கள். ஏதென்ஸ் சும்மா விடாது நம்மை இந்தக் கிழவரை நாமின்று அவிழ்த்து விட்டால் ! குற்றங்களைக் கூறி ஜூரரிடம் விட்டு ஓட்டெடுங்கள் !

    (ஒரே ஆரவாரம் ! கூக்குரல் ! “ஓட்டெடுப்பீர்” என்று ஒரே கூட்டொலி ! )

    நீதிபதி ·பிளிப்: பயப்படாதே சாக்ரடிஸ் ! உன் சார்பாக நீ வாதாடுவதைத் தொடர் ! உனக்கு ஒன்றும் தீங்கு நேராது இங்கு ! அஞ்சாதே சாக்ரடிஸ் !

    சாக்ரடிஸ்: அச்சம் என்றால் என்ன ? எனக்கு அச்சம் என்றால் என்ன வென்று தெரியாது ! என் எதிர்ப்பாளர் தண்டனையை நான் நீதி மன்றத்துக்கு வரும் முன்னே தீர்மானித்து விட்டார் ! நான் சொல்வது அவரது செவிகளில் நுழைவதில்லை ! அவருக்கு வாய்ப்புக் கிடைத்தால் என்னைக் காயப் படுத்தவும் அவர் தயாராக உள்ளார்.

    லைகான்: நாங்கள் ஏதென்ஸ் குடிமக்கள் ! எம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை !

    சாக்ரடிஸ்: (சாந்தமாக) நீதிபதி அவர்களே ! என்னை நாடு கடத்துவீர் ! சிறையில் தள்ளுவீர் ! அல்லது கொன்று விடுவீர் ! ஆனால் யாரும் காயப் படுத்த முடியாது என்னை ! காயப் படுத்துவது உடலையன்று, உள்ளிருக்கும் ஆத்மாவை ! தீய வினை செய்து நீவீர் காயப் படுத்துவது என் ஆத்மாவை இல்லை ! உமது ஆத்மாவை !

    லைகான்: ஏதென்ஸ் நகருக்கு எதிராகப் பாபங்களைச் செய்து நீவீர் எவரது ஆத்மாவைக் காயப் படுத்துகிறீர் ?

    சாக்ரடிஸ்: நீவீர் பாபங்கள் புரிவது கடவுளுக்கு எதிராக ! எனக்கு எதிராக இல்லை. எனது கடவுள் ஏதென்ஸ் நகரத்தில் இல்லை ! எனது கடவுள் எங்கும் பரவி இருக்கிறார்.

    லைகான்: சிந்தித்துப் பேசு சாக்ரடிஸ் ! ஏதென்ஸ் நீ பிறந்த பூமி ! உன் தந்தை நாடு ! மகன் தந்தைக்குச் செய்யும் கடமையைச் செய் ! ஏதென்ஸ் நீரைத் தினமும் நீ அருந்துகிறாய் ! அதில் விளைந்த தானியத்தை உணவாகத் தின்கிறாய் ! உன்னைப் பாதுகாக்கிறது ஏதென்ஸ் ! அதன் கலாச்சாரத்தில் மூழ்கியவன் நீ ! நீவீர் அங்கே உறங்குகிறீர் ! உலவுகிறீர் ! உபதேசம் செய்கிறீர் ! விழித்துப் பார் சாக்ரடிஸ் சாவதற்கு முன் ! பார் உன் நாட்டை ! எப்படி நீ அதைத் தூற்றுகிறாய் சீரழிக்கிறாய் என்று சிந்தித்துப் பார் ?

    சாக்ரடிஸ்: சிற்பச் சிலைகள் நிரம்பி யுள்ளது ஒரு நகரைக் காட்டாது ! மனித இதயங்களில் நாடும் வாழ்க்கையும் உள்ளன. சில்லிட்ட சிலைகள் வெறும் சின்னங்கள் மட்டுமே ஆகும் ! லைகான் ! நானும் பார்க்கிறேன் ! ஆனால் நான் ஏதெஸில் காண்பது என்ன ? வாழும் மனிதத் தசைகள் எலும்புக் கூட்டில் சீரழிந்து கொண்டிருக்கின்றன. நான் காணும் ஏதென்ஸ் உயிரிழந்து கொண்டிருக்கிறது. பளிங்குக் கூண்டு கற்பனைக் காட்சியாக ஏமாற்றிக் கொண்டுள்ளது. ஏதென்ஸ் ஒருபோதும் சீராய் இருந்ததில்லை. மனித மூளையில் ஒட்டடை மண்டி உளுத்துப் போயுள்ளது ! அதைத் துடைக்க முயன்றவன் நான் ! என்னை ஒழிப்பதால் அந்த ஓட்டடை நீங்கிப் போகாது ! சிந்தித்துச் செய்வீர் சீமான்களே !

    ***************************

    “நமக்கு ஞானம் உண்டாகிறது, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும், நமது அறிவு எத்தனை சிறியது என்று நாம் அறியும் போது.”

    “நமது வாழ்க்கையின் குறிக்கோள் கடவுளைப் போல் இருப்பதற்கே முற்பட வேண்டும். கடவுளைப் பின்பற்றும் நமது ஆத்மாவும் அவரைப் போல் இருப்பதற்கே முனைய வேண்டும்.”

    “உலகத்தை நகர்த்த முனையும் ஒருவன் முதலில் தன்னை நகர்த்த வேண்டும்.”

    சாக்ரடிஸ்

    ******************************

    காலம் : கி. மு. 399

    இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

    நேரம் : பகல் நேரம்.

    பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

    காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

    (தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

    நீதிபதி ·பிளிப்: ஏதென்ஸ் அரசாங்கத்தை இங்கே குறை கூறுவது சரியில்லை சாக்ரடிஸ் ! உன் மீதுள்ள குற்றச் சாட்டு ஏதென்ஸ் அரசாங்கத்தை எதிர்த்துப் புரட்சி செய்தாய் என்பதே ! அதை இப்போது ஒப்புக் கொள்கிறாயா ?

    சாக்ரடிஸ்: அரசாங்கத்தை எதிர்க்கும் புரட்சி என்றால் என்ன ? எனக்குப் புரியவில்லை நீதிபதி அவர்களே ! நேர்மை நெறியில் இருக்க வேண்டிய அரசாங்கத்தின் கீழான போக்கை எடுத்துக் காட்டுவது புரட்சியா ? சத்தியம் இகழப் படுவதா ? இப்போதைய ஏதென்ஸ் அரசாங்கம் நேரிய நெறியில் மக்களை ஆளுகிறதா ?

    நீதிபதி ·பிளிப்: அது உன் பொறுப்பில்லை. பெரும்பான்மை குடிமக்கள் தேர்ந்தெடுத்த ஒன்றை நீவீர் தூற்றக் கூடாது. அதை நீவீர் ஆதரிக்க வேண்டும் !

    சாக்ரடிஸ்: இல்லை நீதிபதி அவர்களே ! நான் அரசாங்க விதிகளுக்குக் கீழ்ப்படிகிறேன். ஆனால் நான் அதை ஆதரிக்க மாட்டேன் ! பெரும்பான்மைக் குடிமாந்தர் வடித்த அரசாங்கம் தன் வசதிக்கு விதிகளைப் புகுத்தி வைத்திருக்கிறது. இருபது பேரை ஒப்ப வைப்பதை விட ஒருவரை ஒப்ப வைப்பது எளிது. ஆனால் அது இருபது பேர் கூற்றை நியாயப் படுத்துமா ? பலர் நம்புவதால் ஒரு பொய் உண்மையாகி விடுமா ? எத்தனை ஓட்டுகள் இருந்தால் ஒரு பொய் உண்மையாகும் ? பெரும்பான்மை நபர் ஆதரித்தால் ஒரு பொய் உண்மையாகி விடுமா ? சொல்லுங்கள் அறிவுமிக்க நீதிபதிகளே ! நான் அறிவற்ற மனிதன், அதுவும் முதிய மனிதன் !

    நீதிபதி ஸைரஸ்: யோசித்துப் பார் சாக்ரடிஸ் ! குடிமக்கள் ஆள்வதற்கு உதவி செய்தால்தான் நாம் அரசாள முடியும். அல்லது அது கொடுங்கோல் ஆகும். மறக்காதே இதை. பொது மக்கள் போற்றும் அரசாங்கத்தின் கை, கால், கண் யாவும் கட்டப் பட்டுள்ளன. அதை இங்கும் அங்கும் இழுத்துச் செல்கின்றன பணிய வேண்டிய காட்டுக் கழுதைகள்.

    லைகான்: (எழுந்து நின்று கூச்சலுடன்) ஏதென்ஸ் நாட்டு அரசாங்கத்தை இழிவாகப் பேசுகிறார் சாக்ரடிஸ் ! அவர் இப்போது கண்டிக்கப்பட வேண்டும் !

    மெலிடஸ்: (எழுந்து நின்று கூச்சலுடன்) ஏதென்ஸ் நாட்டு ஆளுநரைத் தேர்ந்தெடுக்கும் ஓட்டார்களைத் தூற்றுகிறார் சாக்ரடிஸ். ஆம் அவர் இப்போது கண்டிக்கப்பட வேண்டும் !

    சாக்ரடிஸ்: தேச நேசர் லைகானைப் போற்றுகிறேன் நான்.

    மெலிடஸ்: சாக்ரடிஸ் போக்கை மறுபடியும் நான் கண்டிக்கிறேன்.

    சாக்ரடிஸ்: ஓட்டார்களைப் போற்றும் மெலிடஸை நான் பாராட்டுகிறேன்.

    மெலிடஸ்: எனது நாட்டுக் குடிமக்கள் மீது நான் கொண்டுள்ள நேசம் அளவில் அடங்காது.

    சாக்ரடிஸ்: மெலிடஸ் ! ஆனால் ஏதென்ஸ் நாட்டுக் குடிமக்கள் தவறு செய்த போது நீவீர் தடுத்தீரா ? அல்லது வெறும் எச்சரிக்கையாவது செய்தீரா ? ஆனால் நான் தடுத்தேன் ! அதற்குத் தண்டனை இட்டால் ஏற்றுக் கொள்கிறேன்.

    மெலிடஸ்: (எழுந்து நின்று கூக்குரலில்) ஒட்டார்கள் ஒருபோதும் தவறு இழைத்ததில்லை ! அவர் அமைத்த ஏதென்ஸ் அரசாங்கம் உயர்ந்தது ! உன்னத சேவை செய்கிறது !

    நீதிபதி சைரஸ்: (கோபமாக) உட்கார் மெலிடஸ் ! நீதிபதி வேலையை நீ செய்ய வேண்டாம். உன் நியாயங்களை நீயிங்கு பரப்பாதே ! வாயைத் திறக்காதே மெலிடஸ் ! (சாக்ரடிஸைப் பார்த்து) சாக்ரடிஸ் ! இப்போது குடிமக்கள் எமக்கிட்ட வேலையை நீவீர் நிறுத்த முயல்கிறீர் !

    ஒருவேளை அவர் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் வேண்டியதை யாம் செய்து முடிப்போம். ஆனால் நீவீர் அதைத் தாழ்வு படுத்திப் பெருமைப் படுகிறீர். அரசு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் உம்மை போன்ற வேதாந்திகள் உபதேசிக்கிறார். எமது பொறுப்பு என்ன செய்யலாம் என்பது. உம்மைப் போன்ற சீர்திருத்தவாதிகளுக்கு இரண்டும் வேறு என்பது தெரிவதில்லை !

    சாக்ரடிஸ்: சீர்திருத்தவாதிகளின் தொழில் நாட்டைச் சீர்திருத்த வேண்டும் என்பதே ! அதைத் தடுப்பவர் அரசாங்கவாதிகள். குடிமக்கள் மாற்றத்தை விரும்புகிறார். ஆனால் அதை அரசாங்கம் வெறுக்கிறது. புதிதாகப் பொதுநபர் எதைக் கொண்டு வந்தாலும் அதன் முதல் எதிரி அரசாங்கம் ! பெரும்பான்மயோர் தவறாக இருக்கலாம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர். அப்படிக் கருதினால் சிறுபான்மையோர் சொல்வதில் நியாயம் இருக்கலாம் ! எத்தனை பேர் எதிர்த்தாலும் சிறுபான்மையோர் பேச உரிமை அளிக்க வேண்டும். ஏனெனில் அவரது கூற்றில் உண்மைக் குரல் தொனிக்கிறது. அதுதான் கடவுளின் மெய்ப்பாடு ! நுழையாத உங்கள் செவியில் மெய்ப்பாட்டைத் திணிக்கக் கடவுள் என்னைத்தான் இங்கு அனுப்பியிருக்கிறார் ! என் பணி கடவுளின் பணி.

    நீதிபதி டிரிப்தோலிமஸ்: எச்சரிக்கை செய்கிறேன் ! கர்வத்துக்குத் தண்டனை மரணம் தெரியுமா ? நீ கடவுளின் தூதனா ? அப்படி நீ பெருமை அடித்துக் கொள்கிறாயா ? கடவுளுக்கு நீ என்ன உறவினனா ? உன்னையா கடவுள் ஏதென்ஸைத் தூயதாக்க அனுப்பியுள்ளார் ? இதை யாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். உன்னைத் தண்டிக்க நீயே தக்க ஒரு காரணத்தைக் கூறி விட்டாய் !

    சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! இதை நினைவில் வைத்துக் கொள்வீர் ! நான் இங்கிருக்கிறேன் இப்போது. நாளை இங்கு யார் இருப்பார் என்பது தெரியாது. கடவுள் இருதரம் உமக்கு எச்சரிக்கை செய்யாது ! வாழ்ந்திடு இன்றேல் மாய்ந்திடு என்பதே என் மனக் கோட்பாடு. நீவீர் உம்மை மூடராய் ஆக்கிக் கொண்டால் விடுதலை உணர்ச்சி கொண்ட ஒருவர் உமக்கதைச் சுட்டிக் காட்ட வேண்டும். எனக்கு அந்த சுதந்திரம் உள்ளது ! நான் மனிதத் தவறுகளைக் கண்டால் எடுத்துரைக்கத் தயங்க மாட்டேன் !

    ***************************

    “எங்கே மதிப்பு இருக்கிறதோ அங்கே அச்சமும் இருக்கும். ஆனால் அச்சமுள்ள எல்லா இடத்திலும் மதிப்பு இருப்பதில்லை ! ஏனென்றால் அச்சம் மதிப்பை விட அகண்ட தளத்தில் விரிந்திருக்கிறது என்று ஊகிக்கலாம்.”

    “ஏனென்று சிந்தித்து வியப்புறுவதில்தான் ஒருவனுக்கு ஞானம் பிறக்கிறது.”

    “பொறாமை என்பது ஆத்மாவின் குடற்புண் (Ulcer).”

    “பிறர் உனக்குச் சினமூட்டும் ஒன்றை நீ பிறருக்கு உண்டுபண்ணாதே !

    சாக்ரடிஸ்

    ******************************

    காலம் : கி. மு. 399

    இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

    நேரம் : பகல் நேரம்.

    பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

    காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (ஃபிலிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

    (தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

    ஆனிடஸ்: (எழுந்து நின்று) குற்றச் சாட்டை ஒப்புக் கொள்கிறார் சாக்ரடிஸ் ! மரண தண்டனையே அதற்குத் தகுந்த வெகுமதி !

    நீதிபதி ஃபிலிப்: தண்டனை விதிப்பது நீதிபதிகள் ! உட்கார் ஆனிடஸ் ! எமது வேலைக்கு இடையில் புகுந்து உமது தீர்ப்பை அளிக்காதீர் !

    சாக்ரடிஸ்: எதற்குத் தண்டனை எனக்கு ? உமது கொள்கைகளை நான் எதிர்ப்பதற்கா ? எந்தக் குற்றத்தையும் நான் இதுவரை ஏற்றுக் கொள்ள வில்லை ! என் மீது பழிசுமத்தியவரே இப்போது தண்டனையும் விதிக்கிறார் அல்லவா ? ஆனிடஸ் ! என்னிடமிருந்து நீ என்ன எதிர்பார்க்கிறாய் ? நான் சாதாரணக் குற்றவாளி போல் நிற்பதற்கு ஒரு காலின்றி முடமாய் உள்ளேனா ? நின்று பேசுவதற்கு நிலமின்றி நான் தடுமாறுகிறேனா ? சாதாராணக் குற்றவாளி போல் பெண்டு பிள்ளைகளைக் மன்றத்தில் அழைத்து வந்து நீதிபதிகள் என்மேல் பரிவு காட்ட அழ வைத்திருக்கிறேனா ?

    மெலிடஸ்: நாங்கள் ஒருவர் மதிப்பையோ மான நட்டத்தையோ எதிர்பார்ப்பது இல்லை.

    சாக்ரடிஸ்: நான் மண்டியிட்டு நியாயத்தை நாடுவேன் என்று நினைத்தீரா ? நியாயத்தை அளிப்பது கடவுள் ! நான் கடவுள் முன்பாகப் பேசுவது போல் கருதுகிறேன். என் மீது நீங்கள் இரக்கப் பட வேண்டாம் ! அனுதாபப் பட வேண்டாம் ! நியாயம் மட்டும் அளித்தால் போதும் ! நான் நியாயத்தை வெகுமதியாக் கேட்க வில்லை. நியாயத்தை எனது பிறப்பு உரிமையாகக் கேட்கிறேன் ! அதே போல்தான் உங்களுக்கும், கடவுளுக்கும் ! நீதிபதி அவர்களே ! ஓட்டெடுத்து எனக்கொரு தீர்ப்புக் கூறுவீர் !

    ஆனிடஸ்: உமக்கொரு தீர்ப்பு கிடைக்கும் ! நிச்சயமாகக் கிடைக்கும் ! நீவீர் ஏதென்ஸ் தெய்வங்களை எள்ளி நகையாடி ஏளனம் செய்தவர் அல்லவா ? வரம்பு மீறி நீவீர் உமது முறையில் விளக்கம் செய்து எமது தெய்வங்களைத் திட்டியவர் அல்லவா ?

    சாக்ரடிஸ்: உலக தெய்வத்தை மதிப்பவன் நான் ! ஏதென்ஸ் தெய்வங்கள் எல்லாம் உலகக் கடவுள் ஒன்றில் அடங்குபவை ! ஆதலால் நான் ஏதென்ஸ் தெய்வங்களை அவமதித்தவன் என்னும் குற்றச் சாட்டை ஏற்றுக் கொள்ள மாட்டேன் !

    நீதிபதி ஃபிலிப்: சாக்ரடிஸ் ! நீவீர் இப்போது பிரமிட் பீடத்திலிருந்து பேசுகிறீர் !

    ஆனிடஸ்: ஆம் சாக்ரடிஸ் எப்போதும் பீடத்தில் நின்றுதான் பேசுவார் ! சாக்ரடிஸ் ! நீவீர் சீர்திருத்தம் செய்ய விரும்புகிறீர் ! ஆனால் எமக்குச் சீர்திருத்தம் தேவையில்லை ! நாங்கள் தவறு செய்யும் போதெல்லாம் எங்களை நீவீர் முட்டாள் என்று திட்டுவதை யாம் வெறுக்கிறோம். இங்கே எல்லாருக்கும் முன்பு நீவீர் கூறிய உமது கொடும் வார்த்தைகளே உமக்குக் கடும் தண்டனை விதிக்கும். ஆகவே இந்த மன்றம் உம்மைக் கண்டிக்க ஓட்டெடுக்க வேண்டும் !

    நீதிபதி ஃபிலிப்: இரண்டு தரபினரும் ஓட்டெடுக்கச் சொல்லி மன்றத்தை வேண்டியுள்ளார். மன்ற அதிகாரிகளை விளிப்பீர் ஓட்டெடுக்கும் கூடையோடு வரும்படி ! கூட்டத்தில் புகுந்து அவரவர் விருப்பத்தை வாக்கெடுப்பில் அறிந்து வாரீர் !

    (இரண்டு இராணுவக் காவலர் வாக்குக் கூடையோடு கூட்டத்தில் நுழைகிறார். வாக்கெடுப்புப் பணி முடிந்த பிறகு காவலர் பெற்ற ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. நீதிபதி சைரஸ் எண்ணிக்கையைச் சோதிக்கிறார்.)

    சைரஸ்: காவலர் காப்டன் ஒரு தகவல் கொண்டு வந்துள்ளார். நாற்பது பேர் கையெழுத்திட்டு சாக்ரடிசுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

    நீதிபதி ஃபிலிப்: யார் அனுப்பியுள்ளார் ?

    சைரஸ்: கிரிடோ அனுப்பியுள்ளார் ஒரு தூதர் மூலமாக ! கிரிடோவும் சாக்ரடிசுடன் கைது செய்யப்பட வேண்டியவர் ! ஆனால் கிரிடோ மறைமுகமாக இருக்கிறார் !

    நீதிபதி ஃபிலிப்: அது எனது தவறில்லை.

    சைரஸ்: கிரிடோவும், ஆகாத்தானும் விடுதலையாய் ஒளிந்து உ:ள்ளது வரை சாக்ரடிஸ் மட்டும் சிறைக்குப் போவது சரியில்லை.

    ஃபிலிப்: சாக்ரடிஸ் இன்னும் தண்டிக்கப்பட வில்லை. முதலில் எத்தனை ஆதரவு ஒட்டுகள் எத்தனை எதிர்ப்பு ஓட்டுகள் என்று எண்ண வேண்டும்.

    (ஃபிலிப் ஆதரவு/எதிர்ப்பு ஓட்டுகளின் எண்ணிக்கையைப் பார்த்து மற்ற நீதிபதிகளுக்குக் காட்டுகிறார்.)

    நீதிபதி ·பிளிப்: சாக்ரடிஸ் ! எழுந்து நில் ! தீர்ப்பைக் கேள் ! (சாக்ரடிஸ் எழுந்து நிற்கிறார்) நீ நியாயம் வேண்டும் உனக்கென்று சில மணி நேரதிற்கு முன் வாதாடினாய் ! இந்த மன்றம் உனக்கு அதை அளித்துள்ளது !

    ***************************

    “நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது செல்வாக்குக்கோ ஒப்பாகச் சிந்திக்காது, ஆத்மாவின் உன்னதச் செம்மைபாட்டுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்தி உங்கள் எல்லோரையும் இணங்க வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. நான் சொல்கிறேன் நேர்மை நெறி (Virtue) செல்வத்தால் வருவதில்லை ! ஆனால் செல்வம் நேர்மை வழியில் வர வேண்டும். அதுபோல் பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் அடுத்தடுத்து நல்லவரும் தோன்ற வேண்டும். இதுதான் என் உபதேசம். எனது இந்தக் கோட்பாடு (ஏதென்ஸ்) வாலிபரை எல்லாம் கெடுக்கிறது என்றால் நான் ஒரு போக்கிரி மனிதனே.”

    “எவன் ஒருவன் ஓடிப் போகாமல் தன்னிலையில் நின்று எதிரியை எதிர்த்துப் போர் புரிவானோ அவனே ஊக்கமுள்ள மனிதன்.”

    சாக்ரடிஸ்

    ******************************

    காலம் : கி. மு. 399

    இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

    நேரம் : பகல் நேரம்.

    பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

    காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

    நீதிபதி ஃபிலிப்ஸ்: சாக்ரடிஸ் ! எழுந்து நில் ! தீர்ப்பைக் கேள் ! (சாக்ரடிஸ் எழுந்து நிற்கிறார்) நீ நியாயம் வேண்டும் உனக்கென்று சில மணி நேரத்திற்கு முன் வாதாடினாய் ! இந்த மன்றம் உனக்கு அதை இப்போது அளிக்கிறது ! உன் முதிய வயதை மன்றம் நினைவில் கொண்டுள்ளது. இளவயதில் நீ தைரியமாய் ஏதென்ஸ் நகருக்காக போர்ப்பணி புரிந்ததையும் நினவிலே வைத்துள்ளது ! இப்போது நீ வறுமையில் வாடுவதையும் மறக்க வில்லை ! வாழ்நாள் பூராவும் நீ மெய்ஞானத்தைத் தேடியே வறுமையில் வீழ்ந்தாய் என்பதும் தெரியாமல் இல்லை ! எப்போதும் நீ நேர்மையாக வாழ்ந்தாய், மிக்க நேர்மையாக வாழச் சொன்னாய் என்பதையும் யாம் அறிந்தோம். இங்கு உன்னைக் குற்றம் சாட்டியோர் கூட உன்னைப் பொய்யன் என்று சொன்னதில்லை. லஞ்சம் வாங்கி மனம் மாறுபட்டதாகக் குறை கூறவில்லை. ஐயமின்றி நீ ஓர் ஞானி. திருச்சபையினர் (Oracle) நீவீர் ஓர் உலக மேதை என்று உனக்குப் புகழாரம் சூட்டினார். உமது கணிப்புக்கு நீவீர் ஒரு பிழையும் செய்யாதவர் என்று எமது முன்பாகக் காட்டிக் கொள்கிறீர் ! நாங்கள் பொது நபர் என்ற முறையில் எங்களுக்கு நீவீர் குற்றவாளியாகத் தெரிய வில்லை ! ஆனால் நீதிபதிகள் என்னும் முத்திரையில் எங்கள் முன்பு நீவீர் ஒரு குற்றவாளியாகத்தான் நிற்கிறீர் ! உமது வழக்கில் எதிர்ப்பு வாதங்கள்தான் முடிவில் உம்மைக் காப்பாற்றப் போகின்றன ! உம் மீது தாக்கப் பட்டக் குற்றச் சாட்டுகளை நீவீர் மறுத்துள்ளீர் ! குற்றம் சாட்டியவரை முட்டாள்கள் என்று சுட்டிக் காட்டி நீவீர் உமது குற்றச் சாட்டுகளை நிராகரித்துள்ளீர் ! சாக்ரடிஸ் ! விதி உமது கண்களைக் குருடாக்கி விட்டது இவைதான் உமது குற்றத்துக்குக் காரணம் என்பதை உமக்குக் காட்டாது. நீவீர் எள்ளி நகையாடி இருப்பதை நோக்கும் போது ஓர் ஞான ஏதேட்சைவாதியாக ஆகியிருப்பதன் காரணம் தெரிகிறது ! உமது உள் நோக்கம் எதுவாக இருப்பினும் சரி இப்போது நீவீர் ஏதென்ஸ் நாட்டின் புரட்சித் தளபதி என்பது தெளிவாகிறது. பாதிக்கப்படப் போவது உமது வாழ்க்கையா அல்லது ஓராயிரம் ஏதென்ஸ் மக்கள் வாழ்க்கையா ? நியாயத்துக்குச் சார்பாக உனக்கு மரணத் தீர்ப்பா அல்லது ஏதென்ஸ் மாந்தர் இன்னல்களா என்று நீவீர் தராசில் நிறுத்துப் பார்ப்பதில்லை ! நியாயம் இருக்கலாம் உமது எதிர்ப்பு வாதங்களில் ! ஆனால் நீதிபதிகளான நாங்கள் பாரபட்சம், பரிவு, ஓரவஞ்சகம் காட்ட முடியாது ! பரிவோடிருந்தால் நாங்கள் உமக்காக ஓராயிரம் நபருக்குப் பாதகம் இழைக்க வேண்டும் ! உமக்குப் பாரபட்சமா ? ஏராளமான ஏதென்ஸ் மக்களுக்கு ஓரவஞ்சகமா ? இதுதான் எங்கள் மனப் போராட்டம் ! சாக்ரடிஸ் ! ஓட்டெடுப்பு விளைவை இப்போது வெளியிட விரும்புகிறேன் ! 242 பேர் உனக்கு எதிராகவும் 185 பேர் உனக்கு ஆதரவாகவும் ஓட்டளித்திருக்கிறார். மூன்றில் இருபங்கு ஜூரர் உம்மைக் குற்றவாளியாகக் கூறியுள்ளார். ஆதலால் நான் உனக்குத் தண்டனை விதிக்கிறேன் ! குற்றம் சாட்டியோர் என்ன தண்டனை தரலாம் என்று ஆலோசனை கூறலாம் !

    (மன்றத்தில் ஒரே கைதட்டல் ! ஆரவாரம் எழுகிறது.)

    மெலிடஸ்: (சட்டென எழுந்து) எங்கள் ஆலோசனை சாக்ரடிசுக்கு மரண தண்டனை !

    லைகான்: ஆம் நீதிபதி அவர்களே ! மரண தண்டனைதான் ஏற்றது !

    ஆனிடஸ்: சாக்ரடிஸ் குற்றங்களுக்குத் தண்டனை மரணமே !

    நீதிபதி டிரிப்தோலிமஸ்: அதற்கு நீவீர் கூறும் காரணங்கள் என்ன ?

    மெலிடஸ்: அதற்கு நாங்கள் கூற வேண்டுமா ?

    நீதிபதி டிரிப்தோலிமஸ்: காரணமின்றி ஒருவனைக் கொல்ல நீவீர் விரும்புகிறீரா ? அதற்குப் பதிலாக அவரை நாடு கடத்தலாம் அல்லவா ?

    ஆனிடஸ்: ஏதென்ஸ் மாந்தர் நன்மைக்கு மரணம் ஒன்றுதான் இந்த மனிதனை ஒழிக்க முடியும். தீர்த்துக் கட்டுங்கள் சாக்ரடிஸை ! இனிமேல் இந்தக் கீழ்நிலை எமக்கு நேராது ! எமது செவிகளில் இனிமேல் அவரது வரட்டு உபதேசம் ஒலிக்காது ! நாடு கடத்தப் பட்டவன் மீண்டும் நாட்டுக்குள் நுழையலாம். ஆனால் செத்தவன் மீள மாட்டான் !

    நீதிபதி ஃபிலிப்ஸ்: சாக்ரடிஸ் ! உன்னைக் குற்றம் சாடியவர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! மாறாக நீ என்ன தேர்ந்தெடுக்கிறாய் ? உனக்கு அவ்வுரிமை தரச் சட்டம் அனுமதிக் கிறது. இரண்டுக்கும் இடைப்பட்டதை யாம் முடிவு செய்வோம். உனக்கு மூன்றில் ஒருபங்கு ஆதரவாளர்தான் இருக்கிறார். நீவீர் தேர்ந்தெடுக்கும் விதிக்குட்பட்ட தண்டனையைப் பொது மக்களும் ஏற்றுக் கொள்வார்.

    ***************************

    “புறப்படும் வேளை வந்து விட்டது எனக்கு ! நாம் அவரவர் பாதைகளில் போகிறோம், நான் சாவதற்கு, நீவீர் வாழ்வதற்கு ! கடவுளுக்கு மட்டும் தெரியும் எந்தப் பாதை மிகச் சிறந்தது என்று. ஆழ்ந்து சிந்திக்காத ஒரு வாழ்க்கை வாழத் தகுதியற்றது.”

    “நான் கிரேக்கனோ அல்லது ஏதென்ஸ் நகரத்து மனிதனோ அல்லன். ஆனால் நானோர் உலகக் குடிமகன்.”

    “எனது தேவைகளை நான் சிறுத்துக் கொள்வதால் கடவுளுக்கு மிக்க அருகில் என்னால் இருக்க முடிகிறது.”

    சாக்ரடிஸ்

    ******************************

    காலம் : கி. மு. 399

    இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

    நேரம் : பகல் நேரம்.

    பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

    காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

    நீதிபதி ·பிளிப்ஸ்: சாக்ரடிஸ் ! உன்னைக் குற்றம் சாட்டியவர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! மாறாக நீ என்ன தண்டனைத் தேர்ந்தெடுக்கிறாய் ? உனக்கு அவ்வுரிமை தரச் சட்டம் அனுமதிக்கிறது. இரண்டுக்கும் இடைப்பட்டதை யாம் முடிவு செய்வோம். உனக்கு மூன்றில் ஒருபங்கு ஆதரவாளர்தான் இருக்கிறார். நீவீர் தேர்ந்தெடுக்கும் சட்ட விதிக்குட்பட்ட தண்டனையைப் பொது மக்களும் ஏற்றுக் கொள்வார்.

    சாக்ரடிஸ்: எனக்கு நானே தண்டனை இட்டுக் கொள்ள என்ன இருக்கிறது ? எந்தக் குற்றமும் இழைத்ததாக எனக்குத் தெரியவில்லை. நீவீர் சாட்டிய எந்தக் குற்றதையும் நான் ஏற்றுக் கொண்டதும் இல்லை. இங்கு ஜூரர்களில் பெரும்பான்மையோர் என்ன முடிவு செய்தார் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

    நீதிபதி சைரஸ்: சாக்ரடிஸ் ! உமக்கு விழுந்த ஓட்டுக்களின் எண்ணிக்கை பற்றி உளவிக் கருத்தாட எமக்கு அங்கீகாரம் உள்ளது.

    நீதிபதி டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! நீயே சொல் உன் குற்றத்துக்கு உகந்த தண்டனையை !

    சாக்ரடிஸ்: அப்படியானால் சொல்கிறேன். நான் இதுவரைச் செய்தவை என்ன என்று முதலில் பார்க்கலாம். குணம் நாடிக் குற்றமும் நாடித் தீர்ப்பு அளிப்பீர் ! நான் நாட்டு விடுதலைக்குப் பகைவரை எதிர்த்துப் போராடினேன் ! உமது வாழ்வுக்கு நீங்கள்தான் பொறுப்பாளிகள் என்று மனிதக் கடமையைச் சுட்டிக் காட்டினேன். தேசத்தின் செல்வாக்குக்கும் சீரழிவுக்கும் நீங்கள்தான் காரணம் என்று நீண்ட காலமாய்ச் சொல்லி வருகிறேன். நான் வறுமையில் உழன்றாலும் உம்மை விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்திருக்கிறேன். நானிப்படிச் சமூகத்தின் நலனுக்காக மெய்வருந்தக் கூடாது என்று என் மனைவி தினமும் என் கன்னத்தில் இடிக்கிறாள். இவற்றை எல்லாம் தீர்ப்புக்கு எடுத்துக் கொண்டால், தண்டனையாக என்னை ஏதென்ஸ் நாட்டிலிருந்து நாடு கடத்தலாம். நீதிபதி அவர்களே ! என்னை நாடு கடத்தினால் என் வயதான மனைவிக்கு ஆயுள் பூராவும் ஓய்வு ஊதியம் (பென்சன்) அளிக்கும்படி வேண்டுகிறேன். அல்லது நீங்கள் எனக்குப் பண அபராதம் விதிக்கலாம். நான் செல்வந்தனாக இல்லாததால் பெரிய தொகை தர இயலாது. என்னால் சிறிதளவுத் தொகை தர முடியும். என் ஆலோசனை ஒரு மினா (Mina means Ancient Greek Money about 5 dollar) அபராதம் ! அது மிகச் சிறு தொகை என்று எனக்குத் தெரியும். அதுதான் உமக்குக் கிடைக்கும் ! அதுதான் என்னிடம் இருப்பது ! நாடு கடத்தலா இல்லை பண அபராதமா ? நீதிபதி அவர்களே ! அது உங்கள் முடிவு !

    நீதிபதி ·பிளிப்: சாக்ரடிஸ் ! உமக்குத் தெரிகிறதா ? உமது ஆலோசனைத் தண்டனைக்கும் வழக்கிட்டோர் விதித்துள்ள தண்டனைக்கும் இடைப்பட்ட ஒரு முடிவை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் என்பது எங்கள் மீது திணிக்கப் பட்டுள்ளது. சட்டம் வேறெதைத் தேர்ந்திடவும் வழி காட்டவில்லை. ஆனால் உமது ஆலோசனைத் தண்டனை வேடிக்கையாக உள்ளது, மூன்று பெரும் தேசத் துரோகங்களுக்கு ஒரு மினா அபராதமா ? எங்களுக்குக் கெட்ட பெயர் கிடைக்க வழி செய்கிறீர். நாடு கடத்தினால் மீண்டும் ஏதென்ஸ் நாட்டுக்குள் புகுவாய் என்னும் புகார் எழுந்துள்ளது.

    சாக்ரடிஸ்: அபராதத் தண்டனைக்கு ஓர் ஏழை எளியன் தன் உடைமை அனைத்தையும் சமர்ப்பிப்பான் என்பது உங்கள் நினைப்பா ? நீங்கள் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஓப்புக் கொள்ளாத குற்றங்களுக்கு எப்படி நீங்கள் தண்டனை இடலாம் நீதிபதி அவர்களே ? ஒன்றும் இல்லாதவன் என்று நினைத்துத்தானே என்னை நீங்கள் அவமானப் படுத்துகிறீர் ! என்னுடைய அபராத தண்டனை ஆலோசனையை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

    நீதிபதி ·பிளிப்: போதும் நிறுத்து சாக்ரடிஸ் ! முப்பெரும் தேசத் துரோகங்களுக்கு உம்மைக் குற்றம் சாட்டியோர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! சாக்ரடிஸ் நாடு கடத்தலை ஏற்றுக் கொள்கிறார். அல்லது ஒரு மினா பணத்தை அபராதம் கட்ட ஒப்புக் கொள்கிறார். நாங்கள் எமது தீர்ப்புக் தண்டனையைத் தீர்மானித்து விட்டோம். (நீதிபதிகள் சைரஸ், டிரிப்தோலிமஸ் ஆகியோர் இருவரையும் ஓரக் கண்ணில் பார்த்துப் பேசிய பிறகு) நீதிபதிகள் உமக்கிடும் தண்டனை இதுதான் ! மரண தண்டனை ! சாக்ரடிஸ் ! நீ கெம்லாக் நஞ்சைக் குடித்து மடிய வேண்டும் ! அந்த நாளை நாங்கள் பின்னொரு சமயம் குறிப்பிடுவோம்.

    (லைகான், மெலிடஸ், ஆனிடஸ் மூவரும் எழுந்து கைகுலுக்கிக் கொண்டு கைதட்டுகிறார். நீதி மன்றத்தில் கைதட்டல்களும் ஆரவாரக் கூச்சல்களும் செவியைப் பிளக்கின்றன. சாக்ரடிஸ் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை.)

    The Final Verdict to Socrates

    “நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது சொத்துக்கோ ஒப்பாகச் சிந்திக்காது, ஆத்மாவின் உன்னதச் செம்மைபாட்டுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்தி உங்கள் எல்லோரையும் இணங்க வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. நான் சொல்கிறேன் நேர்மை நெறி (Virtue) செல்வத்தால் வருவதில்லை ! ஆனால் செல்வம் நேர்மை வழியில் வர வேண்டும். அதுபோல் பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் அடுத்தடுத்து நல்லவரும் தோன்ற வேண்டும். இதுதான் என் உபதேசம். எனது இந்தக் கோட்பாடு (ஏதென்ஸ்) வாலிபரை எல்லாம் கெடுக்கிறது என்றால் நான் ஒரு போக்கிரி மனிதனே.”

    சாக்ரடிஸ்

    ******************************

    காலம் : கி. மு. 399

    இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

    நேரம் : பகல் நேரம்.

    பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

    காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

    (தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

    நீதிபதி ·பிளிப்: போதும் நிறுத்து சாக்ரடிஸ் ! முப்பெரும் தேசத் துரோகங்களுக்கு உம்மைக் குற்றம் சாட்டியோர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! சாக்ரடிஸ் நாடு கடத்தலை ஏற்றுக் கொள்கிறார். அல்லது ஒரு மினா பணத்தை அபராதம் கட்ட ஒப்புக் கொள்கிறார். நாங்கள் எமது தீர்ப்புக் தண்டனையைத் தீர்மானித்து விட்டோம். (நீதிபதிகள் சைரஸ், டிரிப்தோலிமஸ் ஆகியோர் இருவரையும் ஓரக் கண்ணில் பார்த்துப் பேசிய பிறகு) நீதிபதிகள் உமக்கிடும் தண்டனை இதுதான் ! மரண தண்டனை ! ஆம் மரண தண்டனை ! சாக்ரடிஸ் ! நீ கெம்லாக் நஞ்சைக் குடித்து மடிய வேண்டும் ! அந்த நாளை நாங்கள் பின்னொரு சமயம் குறிப்பிடுவோம்.

    (லைகான், மெலிடஸ், ஆனிடஸ் மூவரும் எழுந்து கைகுலுக்கிக் கொண்டு கைதட்டுகிறார். நீதி மன்றத்தில் கைதட்டல்களும் ஆரவாரக் கூச்சல்களும் செவியைப் பிளக்கின்றன. சாக்ரடிஸ் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை.)

    சாக்ரடிஸ்: (எல்லோரையும் சுற்றி நோக்கி கைநீட்டி) உங்கள் எல்லோருக்கும் தெரியும், நான் மரண தண்டனையை எதிர்பார்த்தேன் என்று. மன்றத்தின் வழக்கு விசாரணை எனக்கு மரண தண்டனை விதிப்பதில் வென்று விட்டது ! முதலில் என் நற்குண நண்பருக்கு நன்றி கூற வேண்டும். என்னை விடுவிக்க ஓட்டளித்தமைக்கு ! என்னைக் காப்பாற்றி விடலாம் என்று கனவு கண்டதற்கு ! என்னைத் தப்புவிக்க அனுதினம் ஆர்வமோடு இருந்ததற்கு ! ஆனால் நாமொன்று நினைக்க விதி ஒன்றைச் செய்யும் ! மரண தேவன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறான். மரண தேவனுக்கு அழைப்பு விடுத்த பிறகு யாரும் அவனை நிறுத்த இயலாது ! நேர்மை நெறிக்கு மதிப்புக் குறைவு ! உண்மை காலெடுத்து வெளியே எட்டு வைப்பதற்குள் பொய்மை ஊரை மூன்று முறை சுற்றி விடுகிறது ! மரணம் முழங்கை தூரத்தில் இருக்கும் எனது நண்பன் ! முடிவில் எல்லாம் மரணத்தில்தான் சங்கமம் அடையும் ! தப்பிக் கொள்ள நான் ஓடிப் போய் விடலாம் ! எங்கே ஓடுவது ? எந்த நாட்டுக்குள் ஒளிந்து கொள்வது ? எந்த நகரில் பாதுகாப்புக் கிடைக்கும் ? மரணப் பாதையில் யார் நம்முடன் கூட வருவது ? மறைந்து கொள்ளத் தூண்டுவது மரண மில்லை, தீய எண்ணம். முதிய இந்த வயதில் மெதுவாய் நடக்கிறேன். நான் சாவதற்கு முன் எனக்குத் தண்டிப்பு மரணமா ? மரணம் இப்போது என்னைக் கைவிடாது ! வயதாயினும் மரணம் என்னை விடாது. இளைஞாயினும் மரணத்திலிருந்து தப்ப முடியாது. பழி சுமத்தியோர் பரவசம் அடைய எனக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. செத்தவன் கடன் அடைக்க மாட்டான் ! வாழ்வது மரணம் அடைவதற்கு ! பிறப்பதின் விதி முறை முடிவில் இறப்பது ! அப்படி எண்ணினால் மரணம் ஒன்றுமில்லை ! கனவற்ற உறக்கம் மரணம் ! உறங்குவது போல்வது இறப்பு ! உறங்கி விழிப்பது போல்வது பிறப்பு ! ஒரு நாணயத்தின் ஒரு முகம் பிறப்பு ! மறு முகம் இறப்பு ! இறப்பதற்கு அஞ்ச வில்லை நான் ! பிறந்ததற்கு வருந்த வில்லை நான். நித்திய உறக்கம் இறப்பு ! உதய சூரியன் எழுப்பாத உறக்கம். சுடுகாட்டுப் பீடத்தில் அமர்ந்து நீதிபதிகள் தீர்ப்பளித்தார். தீர்ப்பைக் கையில் வைத்துக் கொண்டு என்மீது வழக்காடல் செய்தார். ஞான மேதைகள் நீதிபதிகளாய் இருந்தால் என் வார்த்தைகளுக்கு மதிப்புக் கிடைத்திருக்கும். மன்றத்தில் என் மனத்தைக் காயப் படுத்தினார் ! என் சிந்தனகளைக் கேலி செய்தார். கால தேவன் எனக்குக் கை விலங்கு போட்டிருக் கிறான். உமது வேலை முடிந்தது ! என் பணியும் முடிந்தது ! நீவீர் வாழச் செல்கிறீர் ! நான் சாகச் செல்கிறேன். கடவுள் ஒருவர்தான் அறிவார் எது நெறி, எது வெறி என்று. புனித தேவதை இறுதியில் என்னைப் பார்த்து உன் இனிய இச்சை என்ன வென்று கேட்டால், ‘மீண்டும் நானிந்த ஏதென்ஸ் நகரில் பிறக்க வேண்டும்,’ என்று நான் சொல்வேன் ! நீதிபதி அவர்களே ! உங்கள் ஏகோபித்த தீர்ப்புக்கு என் மறுப்பு எதுவும் இல்லை !

    Hemlok Poison given to Socrates

    நீதிபதி ·பிளிப்: சாக்ரடிஸ் ! மீண்டும் ஒருமுறைச் சொல்கிறேன் ! உன் தண்டனையில் எந்த மாற்றமும் இல்லை. நீ கெம்லாக் நஞ்சைக் குடிக்க வேண்டும் நாங்கள் குறிப்பிடும் நாளில் ! (காவலரை பார்த்து) அவரைச் சிறைக்குக் கொண்டு செல்வீர் ! நீதி மன்ற வழக்காடல் இத்துடன் முடிந்தது !

    (காவலர் விலங்கிட்ட சாக்ரடிஸை அழைத்துச் செல்கிறார். நீதிபதி ·பிளிப் மனக் குழப்பம் அடைந்து விரைவாக எழுந்து செல்கிறார்)

    நீதிபதி சைரஸ்: (காவலன் ஒருவனைப் பார்த்து) யார் அரசாங்கக் கைதிகளை மேற்பார்வை செய்கிறார் என்று தெரிந்து என்னைக் காணும்படி உடனே அழைத்து வா. (மெதுவாக) யாரும் அறியக் கூடாது எந்தச் சிறையில் சாக்ரடிஸ் அடைபட்டுள்ளார் என்று ! யாரும் அவரைக் காணக் கூடாது ! யாரும் சாக்ரடிஸை மீட்க வந்தால் அவரை உடனே கொன்று விட வேண்டும் ! அவரை நான் நாட்டு துரோகிகள் என்று பழி சுமத்துவேன் !

    நீதிபதி டிரிப்தோலிமஸ்: சைரஸ் ! இந்த வெறியும், வெறுப்பும் நம்மை வெறியர் என்று காட்டும். இந்தக் கடும்போக்கு நமக்குத் தேவையில்லை. யாரும் சாக்ரடிஸைக் காப்பாற்றத் துணிய மாட்டார் ! அப்படி நடந்தாலும் தண்டித்த பிறகு சாக்ரடிஸ் தப்பிச் செல்ல உடன்பட மாட்டார் !

    சைரஸ்: என்னருமை டிரிப்தோலிமஸ் ! தெரிந்துகொள், மிக நெருங்கிய ஓட்டு எண்ணிக்கையில் தோல்வி அடைந்தவர் சாக்ரடிஸ் ! அவரைக் காப்பாற்றப் பல நண்பர் காத்திருக்கிறார். நாம் தாமதம் செய்யக் கூடாது ! நாள் கடத்தாமல் நாளைப் பொழுதிலே தண்டிப்பு நாளைக் குறித்திடுவோம் ! நமது முதல் வேலை அதுதான் நாளைக் காலையில் !

    (சைரஸ் எழுந்து வெளியேறுகிறார். டிரிப்தோலிமஸ் தலையில் கை வைத்துச் சிந்தனையில் ஆழ்கின்றார். பொது மக்களும், ஜூரர்களும் கலைந்து மன்றத்தை விட்டு வெளியேறுகிறார்)

    ***************************

    “புன்னகை புரி மெக்கில்லஸ் ! சூரியன் மீண்டும் உதிப்பான் ! ஆனால் நானதைக் காண வாழ மாட்டேன் ! எனக்கு விலங்கெதற்கு ? அவிழ்த்து விட்டாலும் இந்தக் கிழட்டு மாடு ஓடிச் செல்லாது ! சிறைக்கதவு திறந்திருந்தாலும் இந்தப் பறவை பறந்து போகாது !”

    சாக்ரடிஸ்

    “ஓர் ஆத்மா தன்னை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அது ஆத்ம நன்னெறி, ஞானம் போன்ற துறைகளைத் தேடும் மற்றோர் ஆத்மாவோடு ஈடுபட வேண்டும். யாராவது கூற முடியுமா புரிதலும், அறிதலும் மேவிய ஆத்மாவை விடத் தெய்வீகம் பெற்றது ஒன்று உள்ளதா என்று ? அப்போது அந்த முறையே எல்லாவற்றையும் புரிந்து, அறிந்து கொண்ட தெய்வீக உணர்வு பெற்றுத் தன்னையும் உணர்ந்திடும் பண்பாடைப் பெறுகிறது.”

    “ஞானமும், திறமையும் கொண்டுள்ள ஒருவரை நாம் உடனே தெரிந்து கொள்கிறோம். அவை அவருடைய உடல் தோற்றத்தையோ, செல்வத்தையோ, அதிகார ஆற்றலையோ சார்ந்தவை அல்ல.”

    சாக்ரடிஸ்

    ******************************

    அங்கம் -4

    காலம் : கி. மு. 399

    இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைச்சாலை. காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

    நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

    பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito).

    காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான்.

    மெக்கில்லஸ்: (சாக்ரடிஸை மெதுவாகத் தட்டி) சாக்ரடிஸ் ! சாக்ரடிஸ் !

    சாக்ரடிஸ்: (கண் விழித்தும் கண் மூடியும் எழுந்து) ஓ மெக்கில்லஸ் ! விடிந்து விட்டதா ?

    மெக்கில்லஸ்: வணக்கம் சாக்ரடிஸ் ! இன்னும் பொழுது விடிய வில்லை ! கீழ்வானம் மட்டும் சிவந்துள்ளது ! சிவந்த கண்ணுடன் கதிரவனின் கதிர்கள் அக்ரபோலிஸ் மலைச் சிகரத்தை எட்டி விட்டன ! பொழுது புலர்வதற்கு முன்னே நீங்கள்தான் என்னை எழுப்பச் சொன்னீர்.

    சாக்ரடிஸ்: (எழுந்து உட்கார்ந்து) நன்றி மெக்கில்லஸ் ! நல்ல தூக்கம் எனக்கு ! நன்றாகத் தூங்கி விட்டேன் ! மீளாத உறக்கத்துக்கும் முன் மேலான தூக்கம் ! சுகப் பொழுதாய் விடியப் போகிறது.

    மெக்கில்லஸ்: (மனம் வருந்தி) என்ன சுகப் பொழுதா ? எப்படி நிம்மதியாகத் தூங்க முடிந்தது ? எனக்குத் தூக்கம் வரவில்லை சாக்ரடிஸ் ! இன்று இறுதிக் காலை அல்லவா ? (சங்கிலியைக் கழற்றி) நான் இப்போது சங்கிலியை நீக்குகிறேன். சட்டப்படிக் கடைசி நேரத்தில் கட்டிய சங்கிலியை நீக்கலாம் என்று விதி உள்ளது !

    Socrates in Prison

    சாக்ரடிஸ்: புன்னகை புரி மெக்கில்லஸ் ! மீண்டும் சூரியன் உதிப்பான் ! ஆனால் நானதைக் காண வாழ மாட்டேன் ! எனக்கு விலங்கெதற்கு ? அவிழ்த்து விட்டாலும் இந்தக் கிழட்டு மாடு ஓடிச் செல்லாது ! சிறைக்கதவு திறந்திருந்தாலும் இந்தப் பறவை பறந்து போகாது !

    மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! உமது விடுதலை பறிபோனதற்கு நான்தான் பழிக்கப்பட வேண்டியவன்.

    சாக்ரடிஸ்: ஒரு திசையில் பார்த்தால் அது சரியாகத் தோன்றுகிறது. ஆனால் வீணாய்க் கலங்காதே நீ ! யாருக்குக் கேடு நேர்ந்தாலும் பழிக்கு ஒருவர் மட்டும் காரணமாக இருக்காது ! நானும் அதற்கோர் காரண கர்த்தா ! நீதிபதிகள் என்னை மன்றத்தில் குற்றவாளியாக முத்திரை அடித்துள்ளார் !

    மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! நீவீர் அரசாங்க ஆணைக்கு அடி பணிந்து போகிறீர். நானோ சிறைக் கதவைப் பூட்டும் சாவியைக் கையில் வைத்திருப்பவன் ! மனித இனத்துக்கு விடுதலை வாழ்வுதான் முதல் மூச்சு ! முடிவான மூச்சு ! விடுதலை இல்லாத மனிதன் பாதி செத்தவன் !

    சாக்ரடிஸ்: விடுதலை தேடுவது அடிமைகளின் வழிபாடு ! ஆனால் நான் அடிமை அல்லன் ! உரிமை பறிபோன அரை மனிதன் ! உயிர் போன பின் அரை வாழ்வும் பூஜியமாகிறது !

    மெக்கில்லஸ்: அடிமை இனத்தார் பரம்பரையாய் முடங்கிக் கிடக்கும் நடைப் பிறவிகள் ! அடிமைத் தனத்தை விட்டு வெளியேறப் பலர் விருப்பம் அடையார் !

    சாக்ரடிஸ்: நம்மைப் போல் அடிமைகளாய் இல்லாதவரும் ஏதாவது ஒரு விதிமுறைக்கு அடிமை யாகத்தான் வாழ்கிறார் !

    மெக்கில்லஸ்: நாம் அடிமைகள் அல்லர் ! நாம் விடுதலை மனிதர் !

    சாக்ரடிஸ்: நாம் விடுதலை மனிதரா ? உறக்கமற்ற ஒருநாள் இரவு ! உணவில்லாத ஒருநாள் பகல் ! உடல் மறைக்கும் ஆடையில்லாத வறுமை ! தங்குமிட மில்லாத தரித்திர நிலை ! அவை அனைத்தும் நம் அடிமை ஆத்மாவைச் சுட்டெரிக்கின்றன ! ஒரு சில நாட்களிலோ ஒரு சில மாதங்களிலோ ஒரு சில ஆண்டுகளிலோ நாம் மரித்து விடுவோம் ! நாமிந்த உடம்பில் முடங்கி உயிரோடு வாழும் வரை நாமெல்லாம் உடம்புக்கு அடிமையாக வாழ்கிறோம் ! வயிற்றுக்குப் பசி, வாயிக்குத் தாகம், உடலுக்கு உறவு – இப்படி உடல் இச்சைகள் நம்மை விலங்கிட்ட அடிமைகள் நாம் ! முற்றிலும் விடுதலை அடைவது முடிவில் மரணத்தில்தான் ! உயிர் வாழ்க்கையே மனிதருக்கு அடிமை வாழ்வுதான் ! மரணமே மனிதனுக்குப் பூரண விடுதலை அளிப்பது ! உயிர்ப் பிறவிகளுக்குப் பூமியில் பூரண விடுதலை கிடைப்பதில்லை மெக்கில்லஸ் ! நீயொரு விடுதலைத் தீரனாக வாழ நினைத்தால், முதலில் அடிமையாய் வாழும் மனிதர் இடர்களை நீக்கு ! அவரது குறைகளைத் தவிர் ! மன வேதனையைப் போக்கு ! கெம்லாக் நஞ்சுக்கு மாற்று மருந்து ஒன்றைக் கண்டுபிடி ! நாளைக்கு உனக்கும் ஆளும் அரசு கெம்லாக் நஞ்சை ஊட்டலாம் !

    மெக்கில்லஸ்: அது என் வேலை இல்லை சாக்ரடிஸ் ! நாட்டை விட்டே நான் ஓடி விடுவேன் கெம்லாக் நஞ்சைக் குடிக்க நேரிட்டால் ! (சிறிது தயங்கி) நடைச் சத்தம் கேட்கிறதா ? யாரோ வருகிறார் உம்மைக் கடத்திச் செல்ல !

    சாக்ரடிஸ்: ஆமாம் யாரோ வரும் அரவம் கேட்கிறது ! அடுத்தோர் சிறைக் காவலனாக இருக்கலாம் !

    (கையில் கத்தியுடன் மெக்கில்லஸ் கதவுக்குப் பின்புறம் ஒளிகிறான்.)

    ***************************

    “மரணமே மனிதனுக்குப் பூரண விடுதலை அளிப்பது ! உயிர் வாழும் பிறவிகளுக்குப் பூமியில் பூரண விடுதலை கிடைப்பதில்லை மெக்கில்லஸ் ! நீயொரு விடுதலைத் தீரனாக வாழ நினைத்தால், முதலில் அடிமையாய் வாழும் மனிதர் இடர்களை நீக்கு ! அவரது குறைகளைத் தவிர் ! மன வேதனையைப் போக்கு ! கெம்லாக் நஞ்சுக்கு மாற்று மருந்து ஒன்றைக் கண்டுபிடி ! நாளைக்கு உனக்கும் நாட்டை ஆளும் அரசு கெம்லாக் நஞ்சை ஊட்டலாம் !”

    சாக்ரடிஸ்

    ******************************

    காலம் : கி. மு. 399

    இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைச்சாலை. காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

    நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

    பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito).

    காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான். சில நிமிடங்கள் கழிந்து கிரிடோ (Crito) வருகிறான்.

    மெக்கில்லஸ்: (கதவுக்குப் பின் மறைந்து கொண்டு) யாரும் என்னைத் தவிர சிறைச்சாலைக் காப்புக்கு ஏற்பாடு செய்யப் படவில்லை ! வருவது யார் ?

    (கிரிடோ உள்ளே நுழைகிறான். உடனே மெக்கில்லஸ் பின்னால் பாய்ந்து சென்று கிரிடோவின் கழுத்தைப் பிடித்துக் கத்தியை நீட்டுகிறான்.)

    கிரிடோ: (பதட்டமுடன்) சிறைக்காவலனே பொறு ! நான் பகைவன் அல்லன் !

    சாக்ரடிஸ்: அடப் பாவி ! கிரிடோ நீயா ? எதற்கு நீ தனியாக வந்தாய் ? அரசாங்கப் பாதுகாப்புகளை எப்படி மீறி வந்தாய் ? நானிருக்கும் இடம் எனக்கே தெரிய வில்லை; உனக்கு எப்படித் தெரிந்தது ?

    (மெக்கில்லஸ் கிரிடோவின் பிடியைத் தளர்த்திக் கத்தியை உறைக்குள் சொருகுகிறான்)

    கிரிடோ: என் கழுத்தை அறுத்திருப்பாய் ! நீ என் முகத்தைப் பார்க்காமல் முதுகைப் பார்த்ததால் வந்த பயங்கரச் செயல் இது ! நான் யாரென்று நீ அறிவாயா ?

    மெக்கில்லஸ்: நீ யாராய் இருந்தால் என்ன ? சிறைக்குள் புகுவோரைச் சிரச்சேதம் செய்யென்று எனக்கு உத்தரவு ! உன் தலை தப்பியது சாக்ரடிஸ் வரவேற்பால்தான் !

    சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! கிரிடோ என் பழைய தோழன். நானும் அவனும் பல தடவைக் குடித்து ஒன்றாய்த் திரிந்திருக்கிறோம். அவனை விட்டு விடு. அவன் அப்பாவி.

    கிரிடோ: என்னைப் பாதுகாப்பதற்கு நன்றி சாக்ரடிஸ் ! உம்மைப் பாதுகாக்க இப்போது யாருமில்லை ! அதுதான் என் கவலை.

    மெக்கில்லஸ்: உண்மையைச் சொல் ! உனக்கு எப்படித் தெரியும், சாக்ரடிஸ் இங்கு அடை பட்டிருப்பது ? எனக்குத் தெரிய வேண்டும் அது !

    கிரிடோ: (கவலையற்று) இதெல்லாம் ரகசியம் ! எமக்குத் தெரியும் இந்த ரகசியச் சிறை !

    மெக்கில்லஸ்: உமக்கு யார் சொன்னது ? எனக்குத் தெரியம் உமது ரகசியம் ! நான்தான் ஒரு ரகசியத் தகவலை உங்கள் வேலைக்காரன் ஒருவன் மூலம் அனுப்பினேன். அப்படித்தான் உமக்குத் தெரிந்தது ! அந்தத் தகவலை அனுப்பியன் நான்தான் !

    கிரிடோ: (நன்றி ஆர்வமோடு) ஓ ! நீதான் அந்தத் தகவலை அனுப்பியவனா ? அது எனக்குத் தெரியாது.

    மெக்கில்லஸ்: (குரலைத் தாழ்த்தி) மெதுவாகப் பேசு ! ரகசியம் வெளியே தெரிந்தால் என் வேலை போய்விடும் ! ஏன் என் தலையே தரையில் உருண்டோடும் !

    கிரிடோ: (அன்புடன் நெருங்கி மெக்கில்லஸ் கையைக் குலுக்கி) நன்றி நண்பனே ! நாங்கள் இந்த நன்றியை மறக்க முடியாது ! கடைசி தினத்தில் சாக்ரடிஸை இப்படி நேராகக் கண்டது என் அதிர்ஷ்டமே !

    மெக்கில்லஸ்: (மெதுவாக) கிரிடோ இது ரகசியமாய் இருக்கட்டும் ! மறந்துவிடு இச்சம்பவத்தை. என் பெயர் வெளியே தெரியக் கூடாது ! என் தோலை உரித்து விடுவார் !

    கிரிடோ: (சாக்ரடிஸைப் பார்த்து) உமது மனைவி பிள்ளைகள் உம்மைப் பார்க்க வந்தாரா ?

    சாக்ரடிஸ்: பார்க்க அனுமதி தந்தார். நான்தான் பார்க்க மறுத்தேன். நேராகப் பார்ப்பது எனக்கும் மன வேதனை, அவருக்கும் மன வேதனை ! ஆனால் உனக்கொரு தனி அனுமதி வாங்க மறந்து போனேன். நீயே நேராக இப்போது வந்து விட்டாய்.

    கிரிடோ: எமது உடை வாட்கள்தான் எங்களுக்கு அனுமதி தர வல்லது. ஆறு பேர் இப்போது உருவிய வாளுடன் வெளியே ஒளிந்து கொண்டு நிற்கிறார். நான்தான் முதலில் இங்கு தலையை நீட்டியவன் !

    சாக்ரடிஸ்: எப்படிக் காவலர் கண்காணிப்பைக் கடந்து வர முடிந்தது ?

    மெக்கில்லஸ்: நான்தான் சொன்னேனே, என்னைத் தவிர வேறு யாரும் நியமிக்கப் பட வில்லை. யாரும் சாக்ரடிஸைப் பார்க்க வரக் கூடாது என்பது எனக்கிட்ட விதி ! அப்படி வந்தால் அவரைக் கொன்று விடும்படி எனக்கு உத்தரவு !

    கிரிடோ: எங்களைக் காவலர் தேடிக் கொண்டிருக்கிறார். நாங்களும் காவலர் கண்ணில் படாது ரகசியச் சிறைக்கு அருகே வந்து விட்டோம். எங்களை ஆபத்து விரட்டிக் கொண்டு வருகிறது. எந்த நிமிடத்திலும் நாங்கள் சிக்கிக் கொள்ளலாம் !

    சாக்ரடிஸ்: அப்படியானால் ஓடிப்போ கிரிடோ ! என்னால் உன்னுயிருக்கு ஒன்றும் நேரக் கூடாது ! உங்கள் ஆட்களுக்கும் ஆபத்து நேரக் கூடாது. போ கிரிடோ போ ! சீக்கிரம் போய்விடு !

    கிரிடோ: கவலைப் பாடாதீர் சாக்ரடிஸ் ! (மெதுவாக) வெளியே வாகனங்கள் தயாராக உள்ளன. பிரைவ்ஸ் (Piraievs) துறைமுகத்தில் ஒரு கப்பலே தயாராக நிறுத்தப் பட்டுள்ளது. நாங்கள் உம்மைக் கடத்திச் செல்ல வந்திருக்கிறோம். உம்மைத் தனியே விட்டுச் செல்லப் போவதில்லை.

    மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! இதுதான் என் திட்டமும். ஆனால் நான் நேராக அவ்விதம் என் தகவலில் எழுத வில்லை ! ஒருவேளை என் தகவல் அரசாங்கக் காவலர் கையில் கிடைத்தால் கடத்திச் செல்லும் திட்டம் கைகூடாமல் போகும்.

    சாக்ரடிஸ்: ஆனால் கிரிடோ ! இங்கு எனக்கு எந்தக் குறையும் இல்லை. நன்றி கூறுவேன் தோழர் மெக்கில்லஸ் காவலருக்கு ! அரசாங்கக் கைதி மரியாதை அல்லவா எனக்குக் கிடைத்துள்ளது.

    என்னைக் காப்பாற்ற நீ முயல வேண்டாம்.

    மெக்கில்லஸ்: (சினத்துடன்) அப்படிப் பேச வேண்டாம் சாக்ரடிஸ் ! கெம்லாக் நஞ்சை நீங்கள் குடிப்பதை நான் தாங்கிக் கொள்ள முடியாது. என் கண்முன் நீங்கள் மரிப்பதை நான் சகித்துக் கொள்ள முடியாது ! ஓடி விடுங்கள் கிரிடோவுடன் ! நான் எப்படியாவது தப்பிக் கொள்வேன் !

    சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! எனக்கு வியப்பாக உள்ளது ! நீ இப்படி அரசாங்கத்தை ஏமாற்றுவாய் என்று நீதிபதிகள் அறிய மாட்டார். காவல் அதிகாரியே என்னைக் கடத்திச் செல்ல விடுவதா ?

    மெக்கில்லஸ்: கிரிடோ ! இந்தச் சதி வேலையைச் செய்வதற்கு நீ ஒன்று செய்ய வேண்டும். முதலில் என்னை அடித்துக் காயப்படுத்த வேண்டும் ! நான் சண்டையில் காயப்பட்டு மயக்கம் அடைந்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அப்படியானால் எனக்குச் சிரச்சேதம் கிடைக்காது. என் வேலையும் பறி போகாது. சாக்ரடிசும் தப்பிக் கொள்வார். நானும் தப்பிக் கொள்வேன்.

    சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! நீ கொஞ்ச நேரம் வெளியே நிற்பாயா ! நானும் கிரிடோவும் தனியாக இதைப் பற்றிப் பேச வேண்டும்.

    கிரிடோ: இல்லை நாம் பிறகு பேசிக் கொள்வோம். இப்போது விவாதிக்க நேரமில்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில் விடிந்து விடும். இருள் முடிவதற்கு முன்னே நம் கடத்தல் வேலை முடிய வேண்டும் !

    மெக்கிலஸ்: சரி நான் வாசலில் நிற்கிறேன். நீங்கள் தனியாகப் பேசுங்கள்.

    (மெக்கில்லஸ் வெளியே சென்று மறைவில் நிற்கிறான்)

    ***************************

    Last Days of Socrates

    “ஞானம் நமக்கு உண்டாகிறது, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும், நமது அறிவு எத்தனை சிறியது என்று நாம் அறியும் போது.”

    “நமது வாழ்க்கையின் குறிக்கோள் கடவுளைப் போல் இருப்பதற்கே முற்பட வேண்டும். கடவுளைப் பின்பற்றும் நமது ஆத்மாவும் அவரைப் போல் இருப்பதற்கே முனைய வேண்டும்.”

    “உலகத்தை நகர்த்த முனையும் ஒருவன் முதலில் தன்னை நகர்த்த வேண்டும்.”

    சாக்ரடிஸ்

    ******************************

    காலம் : கி. மு. 399

    இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைச்சாலை. காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

    நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

    பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito).

    காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான். சில நிமிடங்கள் கழிந்து கிரிடோ (Crito) வருகிறான்.

    கிரிடோ: (ஆத்திரமாக) சாக்ரடிஸ் ! நாமிப்போது வெளியேற வேண்டும். இன்னும் அரை மணி நேரத்தில் நகர மக்கள் விழித்துக் கொள்வார். வழியில் போகும் போது செய்வது சரியா தப்பா வென்று தர்க்கம் இடலாம். இப்போது கிளம்பினால் வழிக் காவலர் கண்களிலிருந்து நாம் தப்பி விடலாம் ! கப்பல் தயாராக நிற்கிறது. வெளியேறாமல் நாமிரும் பிடிபட்டால் நமது தலைகள் வாளால் சீவப்படும் !

    சாக்ரடிஸ்: (படுக்கையிலிருந்து எழாமல்) உயிருக்குப் பயந்து நான் ஓட வேண்டுமா ? ஊருக்குப் பயந்து எங்கே ஓடுவது ? எங்கே போய் வசிப்பது ? மனைவியும் பிள்ளைகளும் தனியே இங்கு அனாதைகளாகத் தவிக்கும் போது நான் அவரை விட்டுவிட்டு அன்னிய நகரில் அகதியாக வாழ்வதா ? முயலை விரட்டும் ஓநாய்கள் ஒருபோதும் ஓயா ! தினம் தினம் சாவதை விட ஒரே சமயத்தில் மரிப்பது நிம்மதி அளிப்பது.

    கிரிடோ: நீங்கள் பிழைத்துக் கொள்ளக் கடவுள் ஒரு சந்தர்ப்பம் தருகிறார். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உயிரோடிருந்தால் ஏதென்ஸ் வாலிபருக்கு நீங்கள் இன்னும் நெடுங்காலம் உபதேசம் செய்யலாம் !

    சாக்ரடிஸ்: ஏதென்ஸில் நானினி வாழ முடியாது. நான் விடைபெறும் தருணம் வந்து விட்டது கிரிடோ ! ஏதென்ஸ் நகரில் வாலிபரோடு நான் கருத்தாடல் புரியும் காலம் கழிந்து விட்டது. நீதி மன்றத்தில் கடவுள் என் ஆயுட் கால முடிவை எழுதி விட்டார் ! அதை நான் அழிக்க இயலாது ! ஐம்பது ஆண்டுகளாக நீடித்த என் உபதேச வாழ்க்கை ஓடிப் போனது. இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் நான் உயிரோடு இருக்கலாம். நான் இன்று மாண்டாலும் சரி அல்லது நாளை மரித்தாலும் சரி என்ன மாறுபாடு உண்டாகப் போகுது !

    கிரிடோ: நீங்கள் உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு மகிழ்ச்சி தரும் !

    சாக்ரடிஸ்: நான் நஞ்சு குடித்துச் சாக வேண்டும் என்று விதி உள்ளது ! நான் அவ்விதம் சாவதே எனக்குப் பெருமை தர வல்லது. அஞ்சி ஓடினால் நான் நேர்மையற்றவன் என்பது உறுதியாகும். நேர்மை இல்லாதாவன் என்று ஓடி ஒளிவதை விடைச் சீர்மை உள்ளவன் என்று நஞ்சுண்டு செத்து மடிவதே மேல் !

    கிரிடோ: இது தற்கொலை சாக்ரெடிஸ் ! இதைத் தியாகம் என்று நினைக்காதீர் ! நீங்கள் தியாகியாக வரலாற்றில் பேரெடுக்க விழைகிறீரா ?

    சாக்ரடிஸ்: தியாகள் தமது கொள்கைக்காக வேதனைகளைச் சகித்துக் கொள்வார். என் கொள்கைகள் எனக்குத் தொல்லைகள் தருவதில்லை ! நான் எந்த சொந்தக் கொள்கையையும் பரப்ப வில்லை ! அவற்றை நிலைநாட்ட நான் எனது உயிரைக் கொடுக்க வில்லை. கெம்லாக் நஞ்சு எனக்கு வேதனை தராது ! நான் மரித்த பிறகு எனது கொள்கை எதையும் நீவீர் பரப்ப நான் எதிர்பார்க்க வில்லை !

    கிரிடோ: என்ன பேச்சு இது சாக்ரடிஸ் ? எனக்குப் புரிய வில்லை !

    சாக்ரடிஸ்: நான் வாழ்ந்தாலும் சரி அல்லது செத்தாலும் சரி என் கொள்கையை மாற்ற நான் விரும்பவில்லை. சத்தியத்தைத் தேடும் ஒருவனுக்குத் தன்னுயிர் ஒன்றும் பெரிதில்லை.

    கிரிடோ: என்ன மாதிரி சத்தியம் உமது உயிருக்கு ஒரு மதிப்பும் தருவதில்லை ?

    சாக்ரடிஸ்: நான் என் உயிருக்கு மதிப்பு அளிக்க வில்லை. ஆனால் நேர்மை நெறி வாழ்வை மிகவும் மதிக்கிறேன். எனது இறுதிப் போராட்டமான மரணம் என்னை எதிர்நோக்கி வரும் போது என் வாழ்க்கை சிறப்பாக இல்லாவிடில் நான் என் வழிமுறையை மாற்ற முனைவேன்.

    கிரிடோ: வாழ்க்கையில் எதிர்த்துப் போராடாது உயிரைப் போக்கிக் கொள்ள விரும்புவது கோழைகளின் பலவீனம் அல்லவா ?

    சாக்ரடிஸ்: உயிருக்குப் பயந்தவன் கோழை ! பணிவு இல்லாதவன் பலவீனன் ! உனக்குத் தெரியும் ஒரு சில மணிகளில் சாகப் போகும் மனிதனின் மனோ நிலை ! சாவதற்கு எனக்கு வல்லமை உள்ளது. தப்பிச் செல்ல எனது மனம் பலவீனப் படுகிறது. உயிரை விட அச்சம் கொண்டவன் நானில்லை. எனக்குரியது என் உடம்பு ஒன்றுதான். உயிரெனக்குச் சொந்தம் இல்லை ! உயிர் எங்கிருந்து வந்ததோ அங்கு போவதை நான் எப்படித் தடுக்க முடியும் ?

    கிரிடோ: (மன வேதனையுடன்) சாக்ரடிஸ் ! உமது பாதை புதைகுழி நோக்கி உம்மை இழுத்துச் செல்கிறது ! கடவுள் அளித்த பொன்னுயிரை மடையர் கையில் கொடுத்துவிடத் துடிக்கிறீர். என்னால் பொறுக்க முடியவில்லை அன்பரே ! எப்படி நான் உம்மை இந்த சிறையில் சாகும்படி விட்டுவிட்டுச் செல்வேன் ? தப்பிக் கொள்ள வழி உள்ளது சாக்ரடிஸ் ! வாருங்கள் போகலாம் (கண்ணீர் விட்டுக் கதறி அழுகிறான்)

    ***************************

    “எனக்கு முடிவும் இது ! துவக்கமும் இது ! முடிவாக நினைப்பது நீவீர் ! துவக்கமாக நினைப்பது நான் ! என்னுயிர் போகப் போகுது இன்று ! ஆனால் என் ஆத்மா ஏதென்ஸ் நகரை விட்டு நீங்காது என்றும் ! உடல் அழிந்து போவது. ஆனால் யாரும் என் ஆத்மாவை அழிக்க முடியாது.”

    சாக்ரடிஸ்

    ******************************

    காலம் : கி. மு. 399

    இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைக் கொட்டம். காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

    நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

    பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito). மற்றும் ·பையிதோ (Phaedo), ஆகாத்தான் (Agathon), அல்சிபியாடஸ் (Alicibiades)

    காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான். சில நிமிடங்கள் கழிந்து கிரிடோ (Crito) வருகிறான். சிறைக் கொட்டத்திலிருந்து சாக்ரடிஸ் தப்பிச் செல்ல கிரிடோ முயல்கிறான். அப்போது ·பையிதோ, ஆகாத்தான், அல்சிபியாடஸ் மூவரும் சாக்ரடிஸைக் காப்பாற்ற வருகிறார்.

    சாக்ரடிஸ்: எல்லாப் பாதைகளும் மரணத்தை நோக்கித்தான் செல்கின்றன கிரிடோ ! அதுதான் நீதியிலிருந்தும் நாட்டு நியதியிலிருந்தும் என்னை விடுவிக்க ஒரு காரணமா ?

    கிரிடோ: இந்தக் கேடு கெட்ட விதிகளுக்கு நீங்கள்தான் பெரு மதிப்பு அளிக்கிறீர்.

    சாக்ரடிஸ்: என்னைக் கொல்லப் போவதாக இருந்தாலும் நான் விதிகளை மீற மாட்டேன். நாட்டில் சட்ட திட்ட விதிகளை எழுதி வைத்திருப்பது ஒரு புனித ஏற்பாடு ! நாம் அந்த விதி முறைகளைப் போற்ற வேண்டும். எழுதிய சட்ட திட்டங்கள் கேடு கெட்டவை என்றால் அவற்றை அறிஞர் மாற்ற வேண்டும். அதனால் நாட்டு விதிகள் மீதுள்ள நமது மதிப்புக் குறையக் கூடாது.

    கிரிடோ: இப்போது கால தாமதம் ஆகிவிட்டது. விதியைச் சீர்திருத்த முன்வருவார் யாருமில்லை ! விதியைத் திருத்த வேண்டும் என்றால் முதியவர் எல்லாம் கோபப்படுகிறார் ! விதிகள் மாறுவதில்லை !

    சாக்ரடிஸ்: என் ஆயுட் காலம் குறுகிக் கொண்டு வருகிறது. இப்போது நான் விதிகளை ஒதுக்கினால் விதிகள் என்னைப் பார்த்துக் கேட்கும் : “ஏன் நீ பாசாங்கு செய்கிறாய் எம்மை மதிப்பதாக ? எம்மால் பலா பலன்கள் இருக்கும் போது ஏன் எம்மைத் தள்ளுகிறீர் ? நீவீர் நீதி தவறி நாட்டு விதியை நிராகரிக்கலாமா ?” என்று.

    கிரிடோ: ஒருவர் சாகப் போகும் தருவாயில் சட்டங்களை மதித்தால் என்ன ? இல்லை மிதித்தால் என்ன ?

    சாக்ரடிஸ்: சாகும் போது கூடச் சட்ட விதிகளை மதிக்காது மீறினால் மக்கள் என்னைத்தான் தூற்றுவார். சட்டத்தால் நான் சாகும் போது அவற்றை மதிப்பதால், என் மீது மக்களுக்கு உண்டாகும் மதிப்பு இரட்டிப்பாகிறது.

    கிரிடோ: எங்கள் உயிருக்கு ஏற்படும் ஆபத்துக்கு அஞ்சாமல் உங்கள் உயிரைக் காக்க நாங்கள் ஒளிந்து வந்திருக்கிறோம். அதுபோல் சிறைக் காவலர் மெக்கில்லஸ் உயிர் ஆபத்துக்கு அஞ்சாமல் உங்களைக் காப்பாற்றவும் துணிந்து விட்டார். இப்போது உங்கள் உயிர் போவ தோடு எங்கள் உயிருக்கும் ஆபத்து வரப் போகிறது. அதுதான் எங்கள் பணிக்குக் கிடைக்கும் வெகுமதி !

    சாக்ரடிஸ்: இத்தனை உயிர்கள் ஆபத்தில் சிக்கி என்னுயிர் பாதுகாக்கப் பட வேண்டுமா ?

    கிரிடோ: எதுவுமே உம்முயிரை மீட்க உமது மனதை மாற்றாதா ? எங்களைத் துடிக்க வைப்பது உங்களை ஓர் அசைவும் செய்வதில்லையே !

    சாக்ரடிஸ்: கிரிடோ ! உன் ஆர்வமும், துணிச்சலும் என்னை திகைக்கச் செய்கின்றன ! ஆனால் தனி மனிதன் வாழ்வு, குடும்பம், சொத்து சுகம் எல்லாம் நாட்டுக்குப் பிறகுதான் எனக்கு !

    கிரிடோ: நீவீர் தியாகம் செய்ய நினைக்கிறீர். நீவீர் சட்டத்துக்கு ஓர் அடிமைப் பிறவி !

    சாக்ரடிஸ்: உன்னோடு நான் ஓடிப் போனால், என் குற்றம் இரட்டிப்பாகிறது ! சட்டத்தின் கண்களைக் குத்தினால் குற்றத்தைக் குற்றத்தால் தாக்குவதாகிறது ! என் உள்ளத்தின் உட்குரல் எனக்குச் சொல்வதைத்தான் நான் கேட்பேன். இப்போது உன்னோடு ஓடிப் போவது தவறு என்று அது எனக்குச் சொல்கிறது.

    கிரிடோ: எனக்கு இதற்கு மேல் எதுவும் சொல்லத் தெரியவில்லை. நான் போகிறேன் சாக்ரடிஸ் ! (கிரிடோ வெளியே சென்று மெதுவாய்க் கூப்பிடுகிறான்) ·பையிதோ (Phaedo) ! ஆகாத்தான் (Agathon) ! அல்சிபியாடஸ் (Alicibiades) ! நீங்கள் வந்து சாக்ரடிசிடம் பேசுங்கள். என்னால் அவர் மனதை மாற்ற முடியவில்லை !

    சாக்ரடிஸ்: நான் மெக்கில்லஸைக் கூப்பிடுகிறேன் ! கிரிடோ ! இதற்கு மேல் நானும் சொல்ல எதுவுமில்லை ! (திரும்பி) மெக்கில்லஸ் ! நீ உள்ளே வரலாம்.

    (மெக்கில்லஸ் மீண்டும் நுழைகிறான்)

    மெக்கில்லஸ்: என்ன முடிவு செய்தீர் சாக்ரடிஸ் ! தப்பி ஓடப் போகிறீரா ? பயணம் எப்போது துவங்கும் ?

    சாக்ரடிஸ்: ஹெம்லாக் தேனைக் குடித்ததும் என் புதிய பயணம் துவங்கும் மெக்கில்லஸ் ! உன்னைப் போன்ற உத்தம சீலன் கரங்கள் ஈந்து நானதைக் குடிப்பதில் ஆனந்தம் அடைகிறேன். நாட்டுத் துரோகிகள் எனக்கு நஞ்சு ஊட்டுவதை நான் வெறுக்கிறேன்.

    மெக்கில்லஸ்: (மன வேதனையோடு) என்ன ? நீங்கள் தப்பி ஓட வில்லையா ? என் கையால் ஓர் உலக ஞானிக்கு நஞ்சைக் கொடுப்பதா ? படு பாதகச் செயல் அது சாக்ரடிஸ் ! என்னால் அந்தக் கொலை ஒருபோதும் நேராது !

    சாக்ரடிஸ்: எப்போதும் நான் தப்ப முடியாது என்பதால் நான் ஓடிப் போக முயலவில்லை !

    மெக்கில்லஸ்: அப்படியானால் சரி நான் என் வேலையைச் செய்கிறேன்.

    (வெளியே போகும் போது அவன் கிரிடோ, ·பையிதோ, ஆகாத்தான், அல்சிபயாடஸ் நால்வரையும் சந்திக்கிறான். நால்வரும் சிறைக் கொட்டத்தில் நுழைகிறார்)

    சாக்ரடிஸ்: (மகிழ்ச்சியோடு) உங்கள் யாவரிடமும் கடைசி நேரத்தில் விடை பெற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது எனக்கு !

    ஆகாத்தான்: என்ன ? உமக்குக் கடைசி நேரம் என்றா சொல்கிறீர் ?

    சாக்ரடிஸ்: எனக்கு முடிவும் இது ! துவக்கமும் இது ! முடிவாக நினைப்பது நீவீர் ! துவக்கமாக நினைப்பது நான் ! என்னுயிர் போகப் போகுது இன்று ! ஆனால் என் ஆத்மா ஏதென்ஸ் நகரை விட்டு நீங்காது என்றும் ! உடல் அழிந்து போவது. ஆனால் யாரும் என் ஆத்மாவை அழிக்க முடியாது.

    ***************************

    Hemloc is given to Socrates

    “நீதி மன்றத்தில் மரண தண்டனை பெற்ற குற்றவாளி நான் ! அதனால் மரணத்தை நான் வரவேற்கிறேன். வாழ்வதற்குத் தண்டனை கொடுத்தல் நான் வாழத்தான் விரும்புவேன். மரணத்தில் உடலை விட்டுப் பிரிவது ஆத்மா ! ஆத்மா அழியாது ! ஆத்மா நித்தியமானது ! படுக்கையில் தினம் விரும்பித் தூங்குவதுபோல் நல்லோர் மரணத்தில் ஆழ்ந்து உறங்குகிறார். மெக்கில்லஸ் ! கொடு அந்த ஹெம்லாக் மருந்தை !

    நீ ஹெம்லாக் மருந்தைக் கொடுக்க மறுப்பது அநியாயத்தை நியாய மாக்காது. கொடுப்பது உன் கடமை ! குடிப்பது என் கடமை ! கொடு அந்த கெம்லாக் மருந்தை !

    சாக்ரடிஸ்

    ******************************

    காலம் : கி. மு. 399

    இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைக் கொட்டம். காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

    நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

    பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito). மற்றும் ·பையிதோ (Phaedo), ஆகாத்தான் (Agathon), அல்சிபியாடஸ் (Alicibiades)

    காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான். சில நிமிடங்கள் கழிந்து கிரிடோ (Crito) வருகிறான். சிறைக் கொட்டத்திலிருந்து சாக்ரடிஸ் தப்பிச் செல்ல கிரிடோ முயல்கிறான். அப்போது ·பையிதோ, ஆகாத்தான், அல்சிபியாடஸ் மூவரும் சாக்ரடிஸைக் காப்பாற்ற வருகிறார்.

    மெக்கில்லஸ்: (கண்ணீர் வடித்து வேதனையோடு): ஏதென்ஸ் ஞானிக்கு நான் நஞ்சைக் கொடுக்க வேண்டும் என்று எனக்கிட்ட உத்தரவு ! நான் அதைச் செய்ய நடுங்குகிறேன் ! கடவுளே ! நான் அந்தக் கொடுமைச் செய்ய வேண்டுமா ? அந்தப் பாபத்திலிருந்து விடுபட சாக்ரடிஸ் ஓடிப் போக வாய்ப்பு அளித்தாலும் அவர் தப்பிச் செல்ல மறுத்து விட்டாரே ! என் கடமையிலிருந்து நான் தப்ப நினைத்தேன் ! சாக்ரடிசுக்கு நான் நஞ்சைக் கொடுத்தேன் என்று ஏதென்ஸ் சரித்திரம் என்னை நெடுங்காலம் தூற்றும் ! என் மீது சாபம் போடும் ! நான் என்ன செய்வது ? சாக்ரடிஸ் தப்பி ஓடிப் போகமாட்டார் ! நான்தான் இந்தக் கடமையை நிறைவேற்றாது இப்போது ஓடிப் போக வேண்டும் ! என்ன செய்வது சாக்ரடிஸ் நீங்களே சொல்லுங்கள் ?

    சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! நீ சிறைக் காவலன் ! நான் சிறைக் கைதி ! தண்டிக்கப் பட்ட ஒரு கைதி ! தப்பிச் சென்றாலும் நான் விடுதலை அடைய முடியாத ஓர் அரசாங்கக் கைதி ! பலி ஆடு எப்படி வாள் வைத்திருப்பவனுக்கு ஆணையிட முடியும் ! ஏதென்ஸ் நீதி மன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவது உன் கடமை ! பலி ஆடு தன் தலையை நீட்டுவது அதன் கடமை !

    அல்ஸிபயாடஸ்: போதும் உங்கள் தர்க்கம். தப்பிப் போய் விடுங்கள் சாக்ரடிஸ் !

    பயிதோ: ஆம் ! விடிவதற்குள் ஓடிப் போய் விடுங்கள் சாக்ரடிஸ் !
    ஆகாத்தான்: குதிரையும் வாகனமும் தயாராகக் காத்திருக்கின்றன சாக்ரடிஸ் !

    கிரிடோ: கடவுளே நீங்கள் தப்பிச் செல்ல வேண்டும் என்று ஒரு சந்தர்ப்பம் தருகிறார் சாக்ரடிஸ் !

    சாக்ரடிஸ்: கிரிடோ ! நான் ஒரு குற்றவாளி ! ஆனால் கள்ளம், கபடு, சூது கொலை ஏதும் செய்யாதவன் ! நான் தப்பிச் செல்லக் கடவுள் வழி செய்கிறார் என்று தவறாக விளக்கம் தராதே ! நான் ஒரு கயவன் அல்லன் ஓடிப் போக ! நீதி நெறிகளுக்குத் தலை வணங்குபவன் ! நான் நண்பரிடம் விடை பெறத்தான் கடவுள் உம்மை எல்லாம் இங்கு அனுப்பி வைத்திருக்கிறார் ! நான் போகிறேன் என்னினிய நண்பர்களே ! கண்ணீர் சிந்தாமல் விடை கொடுங்கள் எனக்கு !

    மெக்கில்லஸ்: (கண்ணீருடன்) நான் என் கடமையை முடிக்கா விட்டால் என் தலை சீவப்படும் ! நானொரு கொலைகாரன். தெரிந்தே செய்கிறேன் ஒரு கொலையை ! என்னை மன்னித்து விடுவீரா சாக்ரடிஸ் ! நான் போகிறேன் ஐயா, ஹெம்லாக் கொண்டுவர !

    (மெக்கில்லஸ் உள்ளே போகிறான்.)

    சாக்ரடிஸ்: கொண்டு வா அந்த நஞ்சு மருந்தை மெக்கில்லஸ் ! என்னால் உன் தலை உருளக் கூடாது ! நிம்மதியான தூக்கத்திற்கு நிரந்தர மருந்து ஹெம்லாக் ! கொண்டு வா மெக்கில்லஸ் ! கொண்டு வந்து என் அருகில் வை !

    (மெக்கில்லஸ் கையில் ஒரு கிண்ணத்தையும் குவளையையும் கொண்டு வருகிறான்)

    மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! தயவு செய்து இந்த நஞ்சின் கோரத்தைப் பற்றி எதுவும் அதிகமாகப் பேசாதீர் ! எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    சாக்ரடிஸ்: அதிகம் பேசத்தானே நான் ஏதென்ஸில் பிறந்திருக்கிறேன்.

    மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! உணர்ச்சி வசப்பட்டால் அது ஹெம்லாக் மருந்துக்கு இடையூறு செய்யும் ! அப்புறம் இரண்டாவது கிண்ணம் நீவீர் அருந்த வேண்டி வரும்.

    சாக்ரடிஸ்: அப்படியானால் நான் பத்துத் தடவை குடிக்க வேண்டி வரும் நிச்சயமாய் நான் மடிவதற்கு !

    பயிதோ: நான் ஒன்று கேட்க வேண்டும் சொல்வீரா சாக்ரடிஸ் ? உண்மையாகச் சொல்வீர்.
    துணிந்து உயிரைப் போக்கிக் கொள்வது எளிதாக இருக்குமா ? நெஞ்சுறுதியோடு மரணத்துடன் போராடுவது இலகுவானதா ? மரணம் அடைவதில் உமக்கு இச்சை உள்ளதா ? அச்சம் ஒன்றும் இல்லையா ?

    சாக்ரடிஸ்: நாம் பிறக்கும் போது தனியாக வந்தோம். இறக்கும் போது தனியாக மரிப்போம். இறப்புக்குப் பயமில்லை எனக்கு. மரணம் கசப்பானது. ஆனால் நீதி மன்றத்தில் மரண தண்டனை பெற்ற குற்றவாளி நான் ! அதனால் மரணத்தை நான் வரவேற்கிறேன். வாழ்வதற்குத் தண்டனை கொடுத்தல் நான் வாழத்தான் விரும்புவேன். மரணத்தில் உடலை விட்டுப் பிரிவது ஆத்மா ! ஆத்மா அழியாது ! ஆத்மா நித்தியமானது ! படுக்கையில் விரும்பித் தூங்குவதுபோல் நல்லோர் மரணத்தில் ஆழ்ந்து உறங்கிறார். (மெக்கில்லஸை நோக்கி) மெக்கில்லஸ் ! கொடு அந்த ஹெம்லாக் மருந்தை !

    மெக்கில்லஸ்: (கண்கலங்கி) நான் எப்படி இந்த நஞ்சைக் கொடுப்பேன் சாக்ரடிஸ் ? நானே அதைக் குடித்துச் சாகலாம் உமக்குக் கொடுப்பதற்குப் பதிலாக ! நானொருவன் சாவதால் ஏதென்சுக்கு எந்த இழப்பும் நேராது ! ஆனால் நீவீர் மரிப்பதால் நேரும் பாதகங்கள் அநேகம் !

    சாக்ரடிஸ்: நீ சாவதால் ஏதென்ஸ் நீதிபதிகளின் கோபத்துக்கு நீ ஆளாவாய் ! நான் மரிப்பதால் ஏதென்ஸ் மக்களில் பலர் மகிழ்ச்சி அடைந்து குதூகலிப்பார் ! நீ சாவதை விட நான் போவதே நியாயமானது. கொடு அந்த ஹெம்லாக் திரவத்தை !

    மெக்கில்லஸ்: உலக ஞானிக்கு நான் ஹெம்லாக்கைக் கொடுப்பதா ? உமக்கு நீதிபதிகள் கொடுத்த மரண தண்டனை நியாயமற்றது ! அது அநியாயம் !

    சாக்ரடிஸ்: நீ ஹெம்லாக் மருந்தைக் கொடுக்க மறுப்பது அநியாயத்தை நியாய மாக்காது. கொடுப்பது உன் கடமை ! குடிப்பது என் கடமை ! கொடு அந்த கெம்லாக் மருந்தை !

    மெக்கில்லஸ்: (அழுது கொண்டே) ஹெம்லாக் மருந்தைக் கொடுப்பது கொடுமை. அதை வாங்கி நீவீர் குடிப்பது மடமை சாக்ரடிஸ் !

    சாக்ரடிஸ்: நமக்குள் ஏனிந்த போராட்டம் ? என் காலம் முடிந்து விட்டது மெக்கில்லஸ் ! நீ என் ஆயுளை நீடிக்க முயற்சி செய்யாதே ! விதியைச் சதியால் நிமிர்த்தத் துணியாதே ! கொடு அந்த ஹெம்லாக் திரவத்தை !

    ***************************

    [முற்றும்]

    தகவல் :

    Based on The Plays :

    (A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube

    Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

    (B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,

    The Book Society of Canada (July 1966)

    (C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

    ++++++++++++++

    ஆதாரங்கள் :

    1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

    2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

    3. Encyclopaedia Britannica (1973 Edition)

    4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

    5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

    6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

    7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

    8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

    9. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

    10. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

    11. The Trial of Socrates By : Douglas Linder (2002)

    ********************

    Share
  • வால்மீனின் போக்கை வகுத்த வானியல் விஞ்ஞானி எட்மண்ட் ஹாலி

    jay

    [Edmond Halley] 
    (1656-1742)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    வால்மீன்கள் தென்படா யாசிப்போர் மாண்டால் !
    வானகமே தீப்பற்றி முழக்கும் இளவரசன் சாவை !

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

     

    மீண்டும் மீண்டும் வரும் வால்மீனைக் கண்ட விஞ்ஞானி

    கி.மு.86 இல் ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸர் [Julius Caesar] 14 வயதுச் சிறுவனாக  இருந்த போது, ஒளிமய வால்மீன் ஒன்றைக் கண்டிருப்பதாக வரலாறு கூறுகிறது!  சீஸருக்கும் முன்பு அந்த வால்மீனைக் கி.மு.240 இல் கண்டிருப்பதாக சைன  வானோக்காளர் தம் ஏடுகளில் எழுதி வைத்துள்ளனர்! சைனர்கள் அதை ‘வாரியல் மீன் ‘  [Broom Star] என்று குறிப்பிட்டுள்ளார்கள்! பாபிலோனியர் கி.மு.164 இல் அந்த வால்மீனைக்  கண்டு தம் கல்வெட்டுகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்! கி.பி.530 இல், பிறகு 684 இல்  அது வந்த போது ஐரோப்பாவில் பிளேக் நோய் தாக்கி பலர் மாண்டதாகத் தெரிகிறது!  கி.பி.1066 இல் திரும்பிய போது, நார்மன் போர் வீரர்கள் இங்கிலாந்து அரசர் ஹெரால்டைப்  போரில் வென்றதாக வரலாறு கூறுகிறது! அடுத்து 1222 ஆம் ஆண்டில் அந்த வால்மீன்  மீண்ட போது, மொங்கல் போர்வீரன் செங்கிஸ் கான் [Ghengis Khan] ஆசியா யுத்தத்தில்  ஆயிரக் கணக்கான மனிதர்களைக் கொன்றதாகச் சரித்திரத்தில் உள்ளது! நீண்ட வால்  கொண்டு திடீரெனத் தோன்றும், புதிரான வால்மீன் வருகையைக் கண்டு, அபாயம்  நிகழ்வதற்கு முன் கடவுள் அனுப்பிய முன்னறிவிப்போ என்று பழைய மாந்தர் பல  நூற்றாண்டுகளாக அஞ்சி வந்துள்ளார்கள்!

    1700 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி எட்மண்ட் ஹாலி 1531, 1607, 1682 ஆகிய மூன்று  வருடங்களில் பூமியின் அருகே மாந்தரால் காணப் பட்ட வால்மீன்கள் மூன்றும்  வேறானவை அல்ல! மூன்றும் ஒரே வால்மீன் தான் என்று ஆணித்தரமாகக் கூறினார்!  மேலும் அதே வால்மீன் மீண்டும் 1758 ஆம் ஆண்டில் பூமிக்கு விஜயம் செய்யும் என்றும்  முன்னறிவித்தார்! அது பரிதியைச் சுற்றுக் காலம் [Period] சுமார் 76 ஆண்டுகள்! அதன்  சுற்றுக் காலங்கள் 15 மாதங்கள் கூடியோ அன்றிக் குறைந்தோ குறிக்கப் பட்டுள்ளன!  இதுவரை 30 முறை கண்டு பதிவான அதே வாரியல் மீனை, இப்போது ஹாலியின்  பெயரைச் சூட்டி, ‘ஹாலியின் வால்மீன் ‘ [Halley ‘s Comet] என்று உலகம் என்மண்ட் ஹாலியைக் கெளரவித்தது! இருபதாம் நூற்றாண்டில் இருமுறை அது வருகை தந்தது!  ஹாலி வால்மீனின் ஒளிமிக்க உருவையும், கவினுள்ள வாலையும் 1910 ஆண்டில் பலர் கண்டு வியந்துள்ளார்!  சமீபத்தில் 1986 இல் ஹாலி வால்மீன் வந்து போனது! அடுத்து  அது பூமிக்கு அருகே 2061 ஆம் ஆண்டில்தான் மீண்டும் வரும்!

    1682 இல் அந்த வால்மீனைக் கண்ட ஹாலி, ஐஸக் நியூட்டனுடன் பலமுறை விவாதித்து  அவருடன் கணித்து, அடுத்து 1758 இல் அது மீண்டும் வரும் என்று முன்னறிவித்தார்!  அவர் கூறியபடி வால்மீன் பூமிக்கு விஜயம் செய்தது! ஆனால் ஹாலி அதைக் காணாது,  16 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி விட்டார்!

    வால்மீன்களின் வானியலை வகுத்த மேதைகள்

    2300 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க மேதை அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)]  வால்மீன்களைப் பற்றித் தெளிவாகத் தனது அரிய கருத்துக்களைக் கூறி யிருக்கிறார்!  வால்மீன்கள் விண்வெளி நிற வீச்சு [Aurora, Northern Lights] எரிமீன் [Shooting Star] போன்றவை  என்று அரிஸ்டாடில் விளக்கினார்! ‘பித்தகோரியர் [Pythagoreans] எனப்படும் சில இத்தாலியர்  வால்மீனை அண்டக் கோள் எனக் கருதியது சரியல்ல! வால்மீன்கள் நீண்ட கால  இடைவெளியில் தோன்றி மறைபவை. அவை தொடுவானுக்குச் சற்று மேலே மட்டும்  தென்படு பவை. வால்மீன்கள் வாயுக் கற்களும், ஆவிகளும் [Airy Meteors & Vapours]  கொண்டவை ‘ என்றும் அரிஸ்டாடில் கூறினார்! புதிரான வால்மீன்களைப் பற்றிய அரிய  கருத்துக்கள் பண்டைக் காலம் தொட்டே கிரேக்கர்களிடம் இருப்பினும், பிற்காலத்தில்  மகத்தான அதன் விஞ்ஞானம் தொடரப் படாமல் புறக்கணிக்கப் பட்டு விட்டது என்று  கவலைப் படுகிறார், வானியல் வல்லுநர் எட்மண்ட் ஹாலி!

    1540 இல் முதன் முதலாக வால்மீன் நகர்ச்சியைத் தொடர்ந்து கண்களால் நோக்கிப் படங்கள்  வரைந்தவர், ஜெர்மன் விஞ்ஞானி பீட்டர் அப்பையன் [Peter Appian (1501-52)]. வால்மீனின்  வால் எப்போதும் பரிதிக்கு எதிராகவே நீண்டிருக்கும் என்பதை முதலில் எடுத்துக்  காட்டியவரும் அப்பையனே!

    1577 இல் டென்மார்க் விஞ்ஞானி டைசோ பிராஹே [Tycho Brahe] ஒளி மிக்க ஓர்  வால்மீனைக் கண்டு, ஒரு நாள் தொடர்ந்து நோக்கியதில் இடத்திரிபு [Diural Parallax]  இல்லாமல் இருப்பதைப் பார்த்து, அது பூமிக்கு நிலவை விட வெகு தூரத்தில்  இருப்பதாகவும், அது சூரிய மண்டலத்தின் ஓரண்டம் என்றும் கூறினார்! நூறாண்டுகள்  கழித்து நியூட்டனின் ஆப்த நண்பர், எட்மண்ட் ஹாலி வால்மீன்கள் யாவும் சூரிய  குடும்பத்தின் கோள்கள் என்பதை முதன் முதல் நிலைநாட்டினார்! வான வீதியில் சென்ற  24 வால்மீன்களின் நகர்ச்சி வீதிகளை [Orbits] 1705 இல் நியூட்டன் நியதிப்படிக் கணக்கிட்டு  எட்மண்ட் ஹாலி, அவற்றின் சுற்று வீதிகளைக் கணித்து, ‘வால்மீன்களின் வானியல்  சுருக்க வரலாறு ‘ [A Synopsis of the Astronomy of Comets] என்னும் அரிய விஞ்ஞான நூலைப்  படைத்தார்!

    நியூட்டனின் ஒப்பற்ற நியதியை முதலில் வெளியிட்ட விஞ்ஞானி!

    பிரிட்டனில் எட்மண்ட் ஹாலி ஐஸக் நியூட்டன் வாழ்ந்த அதே சமயத்தில் வானியல்  துறையில் ஆராய்ச்சி செய்து வந்த விஞ்ஞான வல்லுநர்! ஹாலி நியூட்டனை விடப்  பதினான்கு ஆண்டுகள் இளையவர்! நியூட்டனிடம் வானியல் பற்றி அடிக்கடி விவாதித்து,  அவரிடம் தொடர்பு கொண்டிருந்தவர்! ஹாலி ஒரு செல்வந்த குடும்பத்தைச்  சேர்ந்தவர்.  1684 ஆம் ஆண்டு முதன் முதலில் ஹாலி நியூட்டனைக் கேம்பிரிட்ஜில் சந்தித்தார்.  அவ்வரிய சந்திப்பு நியூட்டனின் ‘ஈர்ப்பியல் நியதி ‘ [Theory of Gravitation] விருத்திக்கும்  மேம்பாட்டுக்கும் வழி வகுத்து, விஞ்ஞான வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாக இடம்  பெற்றது! கீழ்க் காணும் ராஜீயக் குழு உறுப்பினர் [Royal Society Members] மூவரில் ஹாலியே  இளையவர்! மற்ற இருவர் ராபர்ட் ஹூக், கிரிஸ்டொஃபர் ரென் [Robert Hooke, Christopher  Wren] ஆகியோர். ராபர்ட் ஹூக் ஒரு படைப்பாளி, கணித நிபுணர், நுண்துகள் நோக்காளர்  [Inventor, Microscopist]. கிரிஸ்டொஃபர் ரென் புகழ் பெற்ற ஓர் கட்டடக் கலைஞர் [Architect].

    மூவரும் நியூட்டனின் அண்டக் கோள் நகர்ச்சிக்கு ஒருவித யந்திரவியல் விளக்கம் தர  முயன்றார்கள்! அண்டக் கோள்கள் சூரியனை நோக்கி விழாமலும், அப்பால் விலகி  விண்வெளியில் செல்லாமலும், சூரியனைச் சுற்றி வரும் அவற்றை, முன்னே உந்தச்  செய்யும் விசை எது, என்பதே அவர்கள் மூவரது தீராப் பிரச்சனை! யார் முதலில் அந்தப்  பிரச்சனைக்குத் தீர்வு கண்டு புகழ் அடைவது, என்ற வேட்கையில் மூவரும் மும்மரமாகப்  போட்டியில் மூழ்கினார்கள்!

    எட்மண்ட் ஹாலியும், ராபர்ட் ஹூக்கும் அண்டக் கோள்களை வீதியில் தள்ளிச் சுற்ற  வைக்கும் விசை, அவற்றின் இடைவெளித் தூரங்களின் ஈரடுக்கிற்குத் தலைகீழ்  விகிதத்தில் [Inversely proportional to the square of the distances] உள்ள தென்று  அறிந்திருந்தாலும், ஏற்கனவே உள்ள சுழல்வீதியைப் போல, ஒரு புதியக் கோட்பாடு  வீதியைத் [New Theoretical Orbit] தமது விதிகள் மூலம் கணிக்க முடியாது களைத்துப்  போயினர்! அவ்வாறு ஓர் கோட்பாடு வீதியை ஆக்குவோருக்கு வெகுமதி அளிப்பதாக,  கிரிஸ்டொஃபர் ரென் பறைசாற்றி யிருந்தும் பலனில்லாமல் போனது!

    ஹாலி நியூட்டனை நெருங்கிக் கேட்டதும், தான் முன்பே அப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டு  விட்டதாகவும், அந்த வீதி ஓர் நீள்வட்டம் [Ellipse] என்றும் பதில் அளித்தார்! அதற்குப்  பின்பு எட்மண்ட் ஹாலி அளித்த ஊக்கத்தில், நியூட்டன் தனது அண்டக்கோள்  யந்திரவியலை [Celestial Mechanics] விரிவு படுத்தி, அதுவரை மனித மனம் படைத்திராத  ‘பிரின்ஸிபியா ‘ [Principia] என்னும் மகத்தான நூலை ஆக்கினார்! ராபர்ட் ஹூக் நியூட்டன்  தனது ஈர்ப்பியல் கோட்பாடுகளைக் களவாடி எழுதி விட்டார் என்று வாய்ப் போரிட்டார்!  ஹாலி இருவரையும் சமாதானப் படுத்திய பின், நியூட்டன் ராபர்ட் ஹூக்கின்  கருத்துகளைத் தன் ‘பிரின்ஸிபியா ‘ நூலிலிருந்து நீக்கினார்! பிறகு ராஜீயக் குழுவினர்  [Royal Society] தீர்மானப்படிச் செல்வந்தரான ஹாலியே நிதி உதவி செய்து, நியூட்டனின்  நூல், ‘பிரின்ஸிபியா ‘ அச்சிடப் பட்டு 1687 இல் வெளியானது!

    எட்மண்ட் ஹாலியின் வாழ்க்கை வரலாறு

    எட்மண்ட் ஹாலி 1656 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் லண்டன் மாநகரின் அருகில்  மிடில்ஸெக்ஸ் ஹாகர்ஸ்டன் [Hagerston, Middlesex] என்னும் ஊரில் பிறந்தார். அவரது  ஆரம்பக் கல்வி லண்டன் புனிதர் பால் [St Paul] பள்ளியில் ஆரம்ப மானது. ஹாலியின்  அதிர்ஷ்டம், அவர் வாழ்ந்த காலத்தில்தான் ஐரோப்பாவில் விஞ்ஞானப் புரட்சி தோன்றி,  நவீன சிந்தனா வளர்ச்சி வேரூன்றி விழுதுகள் விட்டது! ஐஸக் நியூட்டன், காட்ஃபிரைடு  லைப்னிட்ஸ் [Leibnitz], ராபட் ஹூக்ஸ் [Hookes], கிரிஸ்டியன் ஹியூஜென்ஸ் [Huygens], ஜான்  ஃபிளாம்ஸ்டாடு [Flamsteed] போன்ற மேதைகள், விஞ்ஞானக் கணிதத் துறைகளை விருத்தி  செய்து செம்மைப் படுத்தினர்! ஹாலி நியூட்டனை விட பதினான்கு ஆண்டுகள்  இளையவர்! தந்தையார் உப்பு, சோப்பு உற்பத்தி செய்யும் ஒரு பெரும் வணிகர். மற்றும்  செல்வந்தர்!

    ஹாலி ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ராணி கல்லூரியில் 1673 இல் சேர்ந்தார்.  கூர்மையான அறிவு கொண்ட ஹாலி கல்லூரிக்குப் போகும் போது, தனது 24 அடி நீள  தொலை நோக்கியையும் மற்ற வானியல் கருவிகளையும் எடுத்துச் சென்றார்! அங்கே  கணிதம், பெளதிகம், வானியல் ஆகிய வற்றைக் கற்றார். ஹாலி ராஜீய கிரீன்விச்  நோக்ககத் திற்கு [Royal Greewich Observatory] அடிக்கடிச் சென்று, வானியல் நிபுணர் ஜான்  ஃபிளாம்ஸ்டாடு செய்யும் ஆய்வுகளில் ஆர்வ முற்று அவற்றில் பங்கெடுத்தார். பதினெட்டு  வயதாகும் ஹாலி தைரியமாக, ஃபிளாம்ஸ்டாடு தயாரித்த வியாழன், சனிக்கோளின் இட  அட்டவணை பிழையானது என்று மரியாதையுடன் கடிதம் எழுதினார்! வானியல் நிபுணர்  ஃபிளாம்ஸ்டாடு கோபப் படாது ஒப்புக் கொண்டு, மற்றபடி ஹாலியின் விஞ்ஞானக்  கட்டுரைகள் வெளிவர உதவியும் செய்தார்! ஃபிளாம்ஸ்டாடு அங்குள்ள தொலை  நோக்கியைப் பயன்படுத்தி வடபுற வானில் இருந்த விண்மீன்களின் இடத்தைத்  துல்லியமாகக் குறித்து, ஓர் அட்டவணை தயாரித்தார். ஹாலி அவரது திட்டத்தில் ஆர்வம்  கொண்டு, தொலை நோக்கியைப் பயன்படுத்தி, அவரது அனுமதியில் தென்புற வானில்  இருந்த விண்மீன்களின் இடத்தைக் குறித்தார்.

    1676 இல் இருவது வயதாகும் போது, கல்லூரிப் பட்டம் வாங்காமல் தந்தையின் நிதி  உதவி பெற்று, அரசாங்க ஆதரவில், கிழக்கிந்தியக் கம்பெனியின் [East India Company]  கப்பலில் பயணம் செய்து, ஆஃப்ரிக்காவுக்கு மேற்கே உள்ள, பிரிட்டிஷ் பேரரசுக்குச்  சொந்தமான செயின்ட் ஹெலினா தீவில் [St Helena Island] உள்ள நோக்ககத்திற்கு அண்ட  கோளங்களை ஆராய வந்து சேர்ந்தார். அங்கே பல நாட்கள் தங்கி 341 விண்மீன்களின்  வான்வெளி நெடுரேகை, மட்டரேகை [Celestial Longitudes & Latitudes] ஆகியவற்றைக்  குறித்தார். அப்போது ஹாலி முதலாக புதன் கோள் சூரியத் தட்டைக் கடந்து செல்வதைப்  [Transit of Mercury] கண்டு பதிவு செய்தார்! ஹாலியின் விண்மீன்களின் அட்டவணை நூல்  1678 இல் வெளியானது. அந்நூலில் நிலவின் தனித்துவ வளர்வேகம் [Secular Acceleration of  Moon], விண்மீன் களின் நகர்ச்சி உறுதிப்பாடு [Establishment of Stellar Motion], வெள்ளியின்  கடப்புகள் [Transits of Venus] மூலம் வானியல் அளப்பு [Measuring Astronomical Unit]  ஆகிய வற்றைக் காணலாம். அதுவே தொலை நோக்கியில் கண்டு குறித்து, முதன் முதல்  வெளிவந்த தென்புற விண்மீன்களின் அமைப்பு நூல்! அந்த நிகழ்ச்சி ஹாலியை ஓர்  வானியல் வல்லுநர் ஆக்கியது! அதே ஆண்டு அவர் ராஜீயக் குழுவினரின் சிறப்புநர் ஆகி  [Fellow of Royal Society] ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் M.A. பட்டமும் அளிக்கப்  பெற்றார்!  ஹாலி இங்கிலாந்துக்கு மீண்டதும், மேரி டூக் [Mary Tooke] என்னும் மாதை  மணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு பெண், ஓர் ஆண் பிள்ளைகளும் பிறந்தனர்.

    1684 இல் நியூட்டன் எழுதிய ‘சுற்று வீதி அண்டங்களின் நகர்ச்சி ‘ [On the Motion of Bodies in  Orbit] என்னும் கட்டுரை ஹாலியின் கையில் கிடைத்தது! ஒன்பது பக்கங்கள் உள்ள அந்தக்  கட்டுரையில் கெப்ளரின் மூன்று விதிகளைப் பிரதிபலிக்கும் ‘தலைகீழ் ஈரடுக்கு விதிக்கு ‘  [Inverse Square Law] நிரூபணம் இருந்தது! அத்துடன் ‘அசைப்பியல் ‘ [Dynamics] என்னும் புது  அகண்ட விஞ்ஞானத்திற்கு வித்துக்களும் கட்டுரையில் இருந்தன! ஹாலி அதன் உன்னதக்  கருத்துக்களை வியந்து, நியூட்டனைக் கேம்பிரிட்ஜில் காண விரைந்தார்! அங்கே அந்தக்  கட்டுரையை விரிவு படுத்தி அதை ஓர் நூலாக எழுத வேண்டு மென்றும், உடனே  அப்பணியைத் துவங்க வேண்டு மென்றும், நியூட்டனிடம் ஹாலி வாக்குறுதி வாங்கிக்  கொண்டார்! பார்க்கப் போனால், நியூட்டன் படைப்புகள் பலவற்றின் வெளியீட்டுக்கு,  எட்மன்ட் ஹாலியே காரண கர்த்தாவாக இருந்திருக்கிறார்!

    ஹாலி முதலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஜியாமெட்ரிப் பேராசிரியாகப் பணி  யாற்றிப் பிறகு ராயல் கிரீன்விச் நோக்ககத்தில் வானியல் நபராக வேலை செய்தார்.  ஹாலி தன் வாழ்க்கை முழுவதும் அண்டக் கோள்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யவே  தன்னை அர்ப்பணித்தார். அதற்காக அரேபிய மொழியைக் கற்று இஸ்லாமிய வானியல்  நூல்களைப் படித்து அறிந்தார்! அடுத்து வேதாந்த வெளியீடுகளில் ‘கோட்பாடு வானியல் ‘  [Theoretical Astronomy] என்னும் கட்டுரையை வெளியிட்டார்! ஹாலி வால்மீன்களின்  போக்குகளை ஆராய்ந்து 1705 இல் எழுதிய [A Synopsis of the Astronomy of Comets] என்னும்  நூலே, அவருக்குப் பேரும் புகழும் உலகில் பெற்றுத் தந்தது! அறுபத்து நான்கு வயதில்  ஆரம்பித்து, 1720 முதல் பதினெட்டு ஆண்டுகள் நிலவைப் பற்றி ஆய்வுகள் செய்தார்!

    வால்மீன்களின் போக்கை ஆராய்ந்த விஞ்ஞானி

    முதலில் நியூட்டன்தான் வால்மீன்கள், அண்டக் கோள்களைப் போல் நீள்வட்ட வீதியில்  செல்கின்றன என்று கணித்துக் காட்டியவர்! சில வால்மீன்களின் பாதை வளைநீட்சி  [Ellipticity] நீண்டு பிறைவளைவு வீதியை [Parabolic Orbit] நெருங்குகிறது என்று கூறினார்!  வால்மீனின் மூன்று நகர்ச்சி இடங்களை நோக்கிக் குறித்து, அதன் சுற்று வீதியைக்  கணித்திட நியூட்டனே முதலில் வழி வகுத்தார்!

    ஆனால் எட்மண்ட் ஹாலியே வால்மீன்களின் போக்கை வரையறுத்து, விபரங்களைச்  சேமித்து நூல் எழுதி வெற்றி பெற்றவர்! ஹாலி நியூட்டனின் தத்துவங்களைப்  பயன்படுத்தி, மெய்வருந்தி உழைத்து 24 வால்மீன்களின் நகர்ச்சிகளை ஒப்பிட்டுக் கணித்து  சுற்று வீதிகளைத் தீர்மானித்தார்! அவற்றில் மூன்று வால்மீன்கள் ஒரே மாதிரியானவை  எனக் கண்டு மூன்றும் ஒன்றே என்று முடிவு செய்தார்! மூன்றில் முதலான வால்மீனை  1531 இல் ஜெர்மன் விஞ்ஞானி பீட்டர் அப்பையன் நோக்கினார்! இரண்டாவது ஒன்றை 1607  இல் ஜொஹான் கெப்ளர் [Kepler] கண்டார்! மூன்றாவது ஒன்றை ஹாலியே 1682 ஆம்  ஆண்டில் கண்டார்! அதுவே ஹாலின் பெயரைப் பெற்றது! ஹாலி கண்டு பிடித்ததால்  அந்த வால்மீன், அவரது பெயரை அடைய வில்லை! மீண்டும் 1758 இல் அது வரும்  என்று ஹாலி உறுதியாகக் கூறி, அது மெய்யாக 1758 இல் திரும்பியதால், அந்த  வால்மீனுக்கு ஹாலியின் பெயர் இடப் பட்டது! 1758 ஆண்டில் ஐந்து மாதங்களுக்கு  வால்மீன் பலரது கண்ணில் தென்பட்டது!

    நீள்வட்ட வீதியில் பரிதியை மையமாகக் கொண்டு பெரும் பான்மையான வால்மீன்கள்,  குறிமையத்திலிருந்து [Focus] பல மில்லியன் மைல் தூர நீள் ஆரத்தில் [Aphelion] சுற்றி  மீண்டும் பூமியை நோக்கி வருகின்றன! ஆனால் அவை சுற்றி வரும் பாதைகள், பரிதிக்குச்  சீரான முறையில் இல்லாது, முரணாகவே அமைகின்றன! விண்வெளிச் [Interstellar] சேர்ந்த  வால்மீன்களாக இருந்தால், அவை இணையும் நீள்வட்டத்தில் [Closed Ellipse] சுற்றாமல்,  பிறைவளைவு [Parabola] அல்லது விரிவளைவு [Hyperbolic Orbits] வீதிகளில் பயணம் செய்து,  பரிதியை ஒரு முறை வலம் வந்த பின், மீண்டும் அவை வரமாட்டா! மேலும்  விண்வெளியைச் சேர்ந்த வால்மீன்கள், பரிதி நகரும் அதே திசையில்தான் அவையும்  பயணம் செய்து, சூரிய மண்டலத்தில் நுழைகின்றன! சூரியனின் சுழலீர்ப்பு விசையால்  [Centripetal Force] தூரத்தில் பயணம் செய்யும் அன்னிய வால்மீன்கள், பரிதியை நோக்கி  இழுக்கப் படுகின்றன! பூதக்கோள் வியாழன் மூட்டும் சனிக்கோளின் ஒழுங்கற்ற  நகர்ச்சியால், அருகே நீள்வட்டத்தில் செல்லும் ஓர் வால்மீனின் நகர்ச்சி தடுமாறி, வேகம்  மாறுபட்டு, பாதை வேறுபட்டு பிறைவளை வாகிறது.

     

    வால்மீன்களின் பிறப்பும், அவற்றின் அமைப்பும்!

    வானியல் வல்லுநர் ஃபிரெட் விப்பிள் [Fred Whipple], வால்மீன்கள் விண்கற்களும், தூசிப்  பனிக்கட்டிகளும் [Rocks & Dusty Ice] மண்டிய ‘குப்பைப் பனிப்பந்துகள் ‘ [Dirty Snowballs] என்று  கூறுகிறார்! புதிராகவும், மர்மமாகவும் காணப்படும் வால்மீன்கள் எப்படித் தோன்றுகின்றன  ? விண்வெளியில் புற்றீசல்கள் போலக் கிளம்பும் வால்மீன்கள் எங்கிருந்து எழும்புகின்றன  ? வால்மீன் உடம்பில் என்ன பொருட்கள் இருக்கின்றன ? கண்கவரும் ஒளி அதற்கு எப்படி  உண்டாகிறது ? வால்மீன்களை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் ஒரு பெரும் சேமிப்புக்  கோளம் பரிதிக்குப் பல பில்லியன் மைல்களுக்கு அப்பால், புளுடோவைத் [Pluto] தாண்டி  இருப்பதாக யூகிக்கப் படுகிறது! அந்த சேமிப்புக் கோளம் ‘ஓர்ட் மேகம் ‘ [Oort Cloud] என்று  அழைக்கப் படுகிறது! அதை யூகித்த ஜான் ஓர்ட் [Jan H. Oort] வானியல் வல்லுநரின்  பெயரில் அது குறிப்பிடப் பட்டது. தேனீக்களின் கூடு போன்ற அந்த கூண்டில் சுமார் 100  பில்லியன் வால்மீன்கள் அடங்கி இருக்கலாம் என்று ஓர்ட் கருதினார்! அடுத்து நெப்டியூன்  கோளைத் தாண்டி ‘கியூப்பர் வளையம் ‘ [Kuiper] ஒன்று இருப்பதாக யூகிக்கப் பட்டது!  சுற்றுக் காலம் [Period] 200 ஆண்டுகளுக்கு மேலான வால்மீன்கள் ஓர்ட் மேகத்திலிருந்து  வருவதாகவும், சுற்றுக் காலம் 200 ஆண்டுகளுக்குக் குறைந்தவை கியூப்பர்  வளையத்திலிருந்து கிளம்புவதாகவும் அனுமானிக்கப் படுகிறது!

    ஓர்ட் மேகக் கூண்டுக்கு அருகிலோ, அல்லது கியூப்பர் வளையத் திற்கு அண்டையிலோ  போகும் விண்மீன்கள் வால்மீன் ஒன்றை இழுத்து வீசி எறியும் போது, சூரிய  மண்டலத்துள் விழுந்தால், அதன் ஈர்ப்பியல் பிடியில் மாட்டிக் கொண்டு, அது நீள்வட்ட  வீதியில் சுற்ற ஆரம்பிக்கிறது! வீசி எறியும் வேகம் அதிகமானால், வால்மீனின் சுற்று வீதி  பிறைவளைவிலோ, அல்லது விரிவளை விலோ மாறிச் பரிதியைச் சுற்றிச் செல்கிறது!

    வால்மீன் தலையின் நடுவே திடவமான ‘உட்கரு ‘ [Nucleus] உள்ளது. ஹாலி வால்மீனின்  உட்கரு சுமார் 9 மைல் அகண்டது! அட்டக் கரியான உட்கருவில் கரி [Carbon] மிகுதியாக  உள்ளது! கரியை மூடிய பனித் தோல் மீது, கற்தூசிகள் படிந்துள்ளது போல் தோன்றுகிறது!  அதன் வாலின் நீளம் 1910 இல் வந்த போது 37 மில்லியன் மைல் நீண்டிருந்தது! ஹாலி  வால்மீனின் முழு நிறை 25 மில்லியன் டன் என்று அமெரிக்க வானியல் நிபுணர் ஹென்ரி  ரஸ்ஸெல் [Henry N. Russell (1877-1957)] விஞ்ஞானி மதிப்பீடு செய்தார்! வால்மீனின் தலைப்  பரிதியை நெருங்கும் போது, அதன் உஷ்ணம் 330 டிகிரி கெல்வின் [330 K] ஏறியதாக  அறியப்படு கிறது! பரியின் ஒளியை எதிர்ப்படுத்தியே வால்மீன் ஒளி வீசுகிறது! அதற்குச்  சுய ஒளி கிடையாது! 400 மைல் அகண்ட உட்கரு கொண்ட விண்மீன்களும்  விண்வெளியில் உள்ளன! துணைக் கோள் [Satellite] மூலம் நோக்கியதில் உட்கருவைச்  சுற்றிலும் ஹைடிரஜன் வாயுக் கோளம் பேரளவில் சூழ்ந்துள்ளது என்று அறியப் பட்டது!  உட்கருவைச் சுற்றியுள்ள வாயுக் கோமா [Gaseous Coma] 80,000 மைல் விட்டமுள்ளது!  வாயுக் கோமாவில் மீதேன் [CH4], கார்பன் மொனாக்ஸைடு [CO], சையனஜென் [C2N2  Cyanogen] போன்ற வாயுக்கள் அடங்கி யுள்ளன!

    வாலின் நீளம் 200 மில்லியன் மைல் கூட  விண்வெளியில் நீண்டிருக்கும்! பரிதியை நெருங்க நெருங்க வாலின் நீளம் அதிகமாகி,  அதை விட்டு விலக விலக வாலின் நீளம் குன்றிப் பரிதிக்கு வெகு தொலைவில்  வால்மீன் செல்லும் போது, வால் முழுவதும் இல்லாமல் போகிறது! அத்துடன் சூரிய ஒளி  மங்குவதால், வால்மீன் ஒளி யிழந்து சுற்றுகிறது. அப்போது மிகக் குளிர்ந்து போகும்  வால்மீன், தானாகச் சுய ஒளி வீசும் திறனற்றுப் போகிறது!

    சூரியன் அருகே வரும் போது சூரியக் காற்றும், கதிர்வீச்சு அழுத்தமும் [Radiation Pressure]  வால்மீனின் வாயுக்களைச் சூடாக்கி, அப்பால் தள்ளுகிறது. அதுவே எதிரே வாலாய்ச் சிறிது  சிறிதாய் நீள்கிறது! பரிதியின் ஒளிக் கதிர்கள், வால்மீனின் வாயுக்களையும், தூசியையும்  வெண்ணிற ஒளியாய் மாற்றுகின்றன! வாயுக்களும் மின் கொடை [Electrically charged]  பெற்று, தாமாய்ச் சுடரொளி வீசுகின்றன!


    மெதுவாய் ஊர்ந்து வரும் வால்மீன், பரிதிக்கு அருகே வருகையில் வேகம் அதிகரிக்கப்  பட்டு, உச்சமாகி பரிதிக்கு அப்பால் போகும் போது, வேகம் சிறிது சிறிதாய்க் குறைகிறது!  வால்மீன் வாலும் பரிதியை நெருங்க நெருங்க நீண்டும், பரிதியை விட்டு விலக விலகச்  சுருங்கியும் போகிறது! அதாவது பரிதியின் அருகே வாலின் நீட்சிக்கும், வால்மீனின்  வேகத்திற்கும் ஓர் தொடர்பு உள்ளது! சூரியக் கதிரழுத்தம் வாலை அப்பால் தள்ளுவதால்,  வால்மீனுக்கு முன்னோக்கி உந்து விசை உண்டாகி, ஏவுகணை [Rocket] போல் விரைவாகச்  செல்கிறது!

    ஹாலியின் பெருமை மிக்க இறுதிக் கால வாழ்வு

    ரஷ்யாவின் பேரரசர் இஸ்ஸார் [Czar of Russia] 26 வயது மகா பீட்டர் [Peter the Great (1672-1725)]  ரஷ்யாவை நாகரீக நாடாக்க, மேற்கத்திய நவீனங்களைக் காண்பதற்கு பிரிட்டனுக்கு 1698  இல் விஜயம் செய்தார்! பீட்டர் உன்னத மேதை ஐஸக் நியூட்டனைக் காண விழைந்தார்!  ஆனால் யாரையும் பார்க்க விரும்பாத நியூட்டன், எட்மண்ட் ஹாலியைப் பீட்டரிடம்  அனுப்பி வைத்தார்! 42 வயது ஆங்கில விஞ்ஞானி ஹாலியும், 26 வயது ரஷ்யப் பேரரசர்  பீட்டரும் நெருங்கிய நண்பர் ஆனார்கள்! பீட்டருக்கு விஞ்ஞான ஆலோசகராக ஹாலி பல  கருத்துக்களை அளித்ததாக அறியப் படுகிறது!

    1698 பிரிட்டிஷ் பேரரசர் வில்லியம் III ஹாலி கண்டு பிடித்த ‘காந்த ஊசி நியதியைப் ‘  [Theory of Magnetic Needle] பயன்படுத்தி கப்பல் போக்கு முறைக்கு [Navigation] உபயோகிக்க  வழி செய்தார்! அதே வருடம் ஆகஸ்டில் எட்மண்ட் ஹாலியைப் பேரரசர் ‘பாரமூர் ‘  [Paramoor] பெருங் கப்பலுக்கு தளபதி [Commander] ஆக்கினார்! ஹாலி முதல் பிரிட்டிஷ்  விஞ்ஞானக் கடல் திட்டத்தின் [Marine Scientific Expedition] தளபதியாக ஸ்பெயின், பிரேஸில்,  கனேரித் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளுக்கு கப்பல் பாரமூரை ஓட்டிச்  சென்றார்! 65 ஆவது வயதில் ஹாலி 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சூரிய  கிரகணத்தைப் [Solar Ecclipse] பற்றி ஆராயத் துவங்கி தனது 84 ஆவது வயதில்  அத்திட்டத்தை முடித்துக் காட்டினார்! இறுதியில் எட்மன்ட் ஹாலி தனது 86 ஆம் வயதில்  கிரீன்விச் நகரில் 1742 ஜனவரி 14 ஆம் தேதி காலமானார்.

    இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் [1986 February 9th] ஹாலி வால்மீன் கடைசியாகச்  சூரியனச் சுற்றிச் சென்றது. அதே ஆண்டு மார்ச் மாதம், இரண்டு ரஷ்ய விண்வெளி  ஆய்வுச்சிமிழ்கள் [Soviet Probes], வேகா-1, வேகா-2 [Vega-1, Vega-2], ஈரோப்பிய விண்வெளி  ஆணையகத்தின் [European Space Agency] ஆய்வுச்சிமிழ் கியாட்டோ [Giotto], இரண்டு  ஜப்பானியரின் விண்சிமிழ்கள் ஆகியவை யாவும், வெகு தூரத்தில் ஹாலி வால்மீன்  போவதைப் படம் எடுத்துள்ளன.

    *********************
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 28, 2011

    Information :

    [Picture Credits: NASA Space Center, USA]

    1. The Stardust Mission, Silicone Chip Online-NASA Mission, To Catch a Comet [Jan 15, 2006]  [www.siliconchip.com.au/cms]
    2. Stardust: How to Bring Home a Comet [http://stardust.jpl.nasa.gov/science/feature002.html] [Jan 15, 2006
    3. Public to Look for Dust Grains in Stardust Detectors By: Robert Sanders [Jan 10, 2006]  [www.berkeley.edu/news/media/releases/2006/01/10_dust.shtml]
    4. Stardust Comet Sample Program [www.astronautix.com/craft/stardust.htm]
    5. Genesis Capsule Crash, Space Capsule Slams into Desert [www.abc.net.au/egi-bin] [Sep 9, 2004]
    6. Space Capsule Carrying Comet Dust Returns to Earth [http://usatoday]
    7. NASA – The Fiery Return of NASA ‘s Space Dust Cargo [Nov 29, 2005]
    8. Deep Impact Prepares for Comet Crash By: Declan McCullagh [www.news.com] July 2, 2005
    9. NASA Probe Could Reveal Comet Life, By UK Team Cardiff University, U.K. [July 5, 2005]
    10 Photo Credits NASA, JPL-Caltech, California [July 5, 2005] & Toronto Star Daily [July 5, 2005]
    11 Watch Deep Impact ‘s Comet Collision Via Webcast By: Tariq Malik [www.space.com July 1, 2005]
    12 NASA to Study Comet Collision http://www.PhysOrg.com [200
    13 NASA Looks for Signs of Success from Celestial Broadsidehttp://www.PhysOrg.com [2005]
    14 Deep Impact Makes a Better Impact than Plannedhttp://english.people.com.cn/ [July 5, 2005]
    815 Deep Impact Slams into Comet By: Anthony Duignan-Cabrera Space.com Managing Editor {July 4,  2005]
    15 Thinnai Article on Deep Impact http://www.thinnai.com/sc0707051.html
    16 Thinnai Article on the Significance of Deep Impacthttp://www.thinnai.com/sc0715051.html
    17 A Comet Tale By Paul Weissman, Senior Research Scientist, NASA ‘s Jet Propulsion Lab. Sky &  Telescope Magazine [Feb. 2006]
    18. Wikipedia – Edmond Halley (Jan 22, 2011)
    19. Edmond Halley – Biography.
    20. http://jayabarathan.wordpress.com/2010/11/06/comet-hartley-2-flyby/(Comet Hartley) (Nov 6, 2010)

    +++++++++++++++++++

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 18

    –சி. ஜெயபாரதன்.

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 18

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 69

    Mukkonakkilikal - 70Mukkonakkilikal - 71

    Mukkonakkilikal - 72

     

     

     

    தொடரும்…

    ***********************************************************************************************************************

    வசன கர்த்தா திரு. வையவன்:

    mukonakkiligal 1வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு  அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் புகழ்பெற்ற யுராலாஜி  மருத்துவரான டாக்டர் எம்.ஜீவகன் என்ற தம் மகனுடன் அடையாரில் வசித்து வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10 நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.
    http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html ,  http://innaiyaveli.blogspot.in/

    ஓவியக் கலைஞர் தமிழ்:

    tamizhselvanஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

    ***********************************************************************************************************************

     

     

     

     

    Share