Tag: ஆண்டாள்

  • திருப்பாவை – 5 | மாயனை மன்னு

    திருப்பாவை – 5 | மாயனை மன்னு

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’ எனத் தொடங்கும் ஐந்தாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 4 | ஆழி மழைக்கண்ணா

    திருப்பாவை – 4 | ஆழி மழைக்கண்ணா

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘ஆழி மழைக்கண்ணா’ எனத் தொடங்கும் நான்காம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 3 | ஓங்கி உலகளந்த

    திருப்பாவை – 3 | ஓங்கி உலகளந்த

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘ஓங்கி உலகளந்த’ எனத் தொடங்கும் மூன்றாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள்

    திருப்பாவை – 2 | வையத்து வாழ்வீர்காள்

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘வையத்து வாழ்வீர்காள்’ எனத் தொடங்கும் இரண்டாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    திருப்பாவைக்கு என ஒரு மெட்டு உருவாகிவிட்டது. பெரும்பாலோர் அந்த மெட்டிலேயே பாடுகிறார்கள். ஆனால், இப்படியும் பாடலாம் எனக் காட்டுகிறார், பாலாஜி இராமானுஜ தாசர். இவரது குரலில் வையத்து வாழ்வீர்காள் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 1 | மார்கழித் திங்கள் | கிருஷ்ணகுமார் குரலில்

    திருப்பாவை – 1 | மார்கழித் திங்கள் | கிருஷ்ணகுமார் குரலில்

    மார்கழிக்கு அழகு சேர்க்கிறது, ஆண்டாளின் திருப்பாவை. இதோ முதல் பாடலாம் மார்கழித் திங்களை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆடிப்பூரம்: ஆண்டாள் அருளிய திருப்பாவை

    ஆடிப்பூரம்: ஆண்டாள் அருளிய திருப்பாவை

    அருட்செல்வி ஆண்டாள் அவதரித்த நாள், ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாள். இத்திருநாளில் ஆண்டாள் அருளிய திருப்பாவையின் முதலிரண்டு பாடல்களை ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரும் அவர் மகள் ஷ்ரேயா கிருஷ்ணகுமாரும் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை | கறவைகள் பின்சென்று

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
    பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
    சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
    இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

    ஆண்டாள் அருளிய திருப்பாவையின் ‘கறவைகள் பின்சென்று’ என்ற பாடலைப் புதிய மெட்டில் பாடி ஆடுகிறார், முகுந்த இராமானுஜ தாசர். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். சென்னை, திருநீர்மலையில், நவநீதகிருஷ்ணன் பஜனைக் குழுவின் இசைத் தொண்டு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஸ்ரீவள்ளி

    ஸ்ரீவள்ளி

    நடிகை அஷேரா, ஸ்ரீவள்ளியாக.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கருப்பூரம் நாறுமோ | ஆண்டாள்

    கருப்பூரம் நாறுமோ | ஆண்டாள்

    ஆண்டாள் இயற்றிய ‘கருப்பூரம் நாறுமோ’ பாடலைத் தமது 72 வயதில் திருமதி விஜயலட்சுமி பாடுகிறார், கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிற்றஞ் சிறுகாலே | ஆண்டாள் | நாகி நாராயணன்

    சிற்றஞ் சிறுகாலே | ஆண்டாள் | நாகி நாராயணன்

    திறமைக்கு வயது ஒரு தடையில்லை. இதோ, ஆண்டாளின் சிற்றஞ் சிறுகாலே பாடலை, தமது 67ஆவது வயதில் கணீரென்று பாடுகிறார், நாகி நாராயணன். கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிற்றஞ் சிறுகாலே | வி.ஸ்ரீநிகா

    சிற்றஞ் சிறுகாலே | வி.ஸ்ரீநிகா

    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நாம் கொண்டாடும் ஆண்டாள் அருளிய ‘சிற்றஞ் சிறுகாலே’ பாசுரத்தைச் செல்வி வி.ஸ்ரீநிகாவின் மழலைக் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 30 பாசுரங்கள்

    திருப்பாவை – 30 பாசுரங்கள்

    தனித்துவம் மிக்க தமிழ்க்கவி, அமுதெனத் தமிழ்செய்த அருட்கவி, எண்ணமும் வண்ணமும் புதுக்கிய ஏரார்ந்த செல்வி, தமிழ்நிலத்தின் தவப்பயன், ஆயிரம் ஆண்டுகளின் பெருமிதம், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவை இதோ. 30 பாசுரங்களும் ஒரே பதிவாக. செல்வி ஸ்வேதா பாடுகிறார். பார்த்து மகிழுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். கோதையின் தமிழைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 30 | வங்கக் கடல்கடைந்த

    திருப்பாவை – 30 | வங்கக் கடல்கடைந்த

    திருப்பாவை – 30

    வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
    சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
    செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

    திருப்பாவை – 30 | வங்கக் கடல்கடைந்த | ஸ்வேதா குரலில்

    பாற்கடலைக் கடைந்த பரந்தாமனுக்காகத் தமிழ்ப் பாக்கடலைக் கடைந்து, திருப்பாவை எனும் அமுதம் தந்தவர் ஆண்டாள். தாமரைப் பூவிதழ்களால் பூமாலை தொடுத்து, அரங்கனுக்குச் சாற்றியவர் பட்டர்பிரான். இன்னமுதச் சொற்களால், பாசுரப் பாமாலை தொடுத்து, அரங்கன் உள்ளத்தில் இடம்பெற்றவர் கோதை.

    இந்தச் சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே பாடுவோர் எங்கும் என்றும் இன்புறுவர். செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால், நம்மை என்றும் காக்கட்டும்.

    இந்த முப்பது பாடல்களையும் தம் இனிய குரலால் பாடிய செல்வி ஸ்வேதா அவர்களுக்கு என் சார்பிலும் வல்லமை வளர்தமிழ் மையத்தின் சார்பிலும் நன்றிகள், வாழ்த்துகள். தமிழ்கூறு நல்லுலகம், இவரைத் தக்க வகையில் பயன்படுத்த வேண்டும். திருப்பாவையின் இந்த நிறைவுப் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 29 | சிற்றஞ் சிறுகாலே

    திருப்பாவை – 29 | சிற்றஞ் சிறுகாலே

    திருப்பாவை – 29

    சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
    பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
    பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
    இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
    மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 29 | சிற்றஞ் சிறுகாலே | ஸ்வேதா குரலில்

    கோவிந்தா, சிற்றஞ்சிறு காலையிலே வந்து உன்னைச் சேவிக்கின்றோம். உன் பொற்றாமரை அடியைப் போற்றுகின்றோம். உனக்குச் சேவகம் செய்யும் வாய்ப்பை வழங்கு. இந்தப் பிறவியில் மட்டுமின்றி என்றைக்கும், எழுகின்ற ஒவ்வொரு பிறப்பிலும் உன்னுடனே இருக்க வேண்டும். உனக்கு உரியவராய் இருக்க வேண்டும். நீயே எங்களை ஆட்கொள்ள வேண்டும். இதைத் தவிர வேறு விஷயங்களில் கவனம் செல்லாதவாறு நீயே எம்மைக் காத்தருள வேண்டும் எனப் பாவையர்கள் வேண்டுகிறார்கள்.

    விடியலைச் சிற்றஞ்சிறு காலே என அழைக்கும்போதே செல்லம் கொஞ்சும் தொனி வந்துவிடுகிறது. குற்றேவல் எனச் சொல்லும்போது அதில் ஒரு குறும்பும் வெளிப்படுகிறது. எங்கள் கவனம் உன் மீதன்றி, வேறு பக்கம் போகக் கூடாது, அதற்கும் நீயே பொறுப்பு என உரிமையுடன் கேட்கும்போது இன்னும் நெருக்கம் அதிகமாகிறது.

    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்னுடனே இருக்க வேண்டும் என்றதால், மீண்டும் மீண்டும் பிறந்து இதேபோன்று இன்புற்று இருக்க வேண்டும் என்ற குறிப்பும் வெளிப்படுகிறது. கோதைப் பிராட்டி மீண்டும் தமிழ் மண்ணில் பிறந்து, இனிய கவிதைகள் யாக்க வேண்டும். உலகம் அதில் தோய வேண்டும். இதோ, இந்த 29ஆம் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 28 | கறவைகள் பின்சென்று

    திருப்பாவை – 28 | கறவைகள் பின்சென்று

    திருப்பாவை – 28

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
    பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
    குறையொன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னைச்
    சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
    இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 28 | கறவைகள் பின்சென்று | ஸ்வேதா குரலில்

    மாலே, நெடுமாலே, மணிவண்ணா, ஆழி மழைக்கண்ணா, பூவைப் பூவண்ணா, மலர்மார்பா, கோவிந்தா… எனத் திருப்பாவை முழுவதும் கண்ணனை ஏக வசனத்தில் ஆண்டாள் அழைக்கிறார். அது, உரிமை தந்த நெருக்கம். அதேபோன்று ஆயர்பாடியில் உள்ள பாவையர்களும் அழைக்கிறார்கள். அவளைப் போல் நாங்களும் உரிமையுடன் அழைக்கிறோம் என மகிழ்ச்சி இருந்தாலும், சிறு தயக்கம் அவர்களுக்கு. அப்பா, குறையொன்றும் இல்லாத கோவிந்தா, சிறுபேர் இட்டு அழைத்ததற்காகக் கோபிக்காதே என்கிறார்கள். Nick name என்பதைச் சுருக்கப் பெயர், செல்லப் பெயர் என இன்று அழைக்கிறோம். இதைச் சிறுபேர் என ஆண்டாள் வழங்குகிறார். நல்லதொரு சொல்லாக்கம். சிறுச்சிறிதே என முன்பே மொழிந்ததையும் இங்கே நினைவுகூரலாம்.

    சீறாதே எனச் சொல்லாமல் சீறி அருளாதே என்கிறார். ஏனெனில், அவன் சீறினால், கோபித்தால், அதுவும் அவனது அருளே. நடப்பது அனைத்தும் அவனது ஆசீர்வாதம் என ஏற்கும் பக்குவம் பெற்ற உள்ளம், அது.

    இந்தப் பாடலில் அறிவொன்றும் இல்லாத என்றும் அறியாத பிள்ளைகள் என்றும் சிறுபேர் அழைத்தனம் என மூன்று விதமாகச் சொல்கிறார். அறிவொன்றும் இல்லாத என்பதற்கு, உன்னைப் புரிந்துகொள்ளும் அறிவொன்றும் இல்லாத எனப் பொருள்கொள்ளலாம். கறவைகள் மேய்ப்போம், அவற்றின் பின்னே காட்டுக்குள் செல்வோம், எல்லோரும் சேர்ந்து உண்போம். இவற்றைத் தவிர வேறொன்றும் தெரியாது எனச் சொல்வதாகவும் கொள்ளலாம். இது ஒருவகை அவையடக்கம்.

    அறிவொன்றும் இல்லாத எங்கள் குலத்தில் நீ பிறப்பதற்கு என்ன புண்ணியம் செய்துவிட்டோம் எனக் கண்ணனை நோக்கி ஆண்டாள் பாடுகிறார். அதையே ஆண்டாளை நோக்கி நாமும் பாடலாம். எங்கள் தமிழ்க்குலத்தில் நீ பிறப்பதற்கு என்ன புண்ணியம் செய்தோமோ. கோதை நாச்சியாரைக் கொண்டாடி, அவர் பின்செல்வோம். கறவைகள் பின்சென்று கானத்தைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share