Tag: காஞ்சி

  • அறிஞர் அண்ணா உரை | வேகவதியும் பாலாறும்

    அறிஞர் அண்ணா உரை | வேகவதியும் பாலாறும்

    1968ஆம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரைக் காஞ்சிக்கு மாற்றியமைக்கான விழாவில், அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி. காஞ்சியில் பாயும் வேகவதியும் பாலாறும் செழிக்க வேண்டும் எனக் காஞ்சியில் பிறந்து வளர்ந்த அண்ணா, தம் கனவுத் திட்டத்தை விவரிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காஞ்சி காமகோடி பீட ஜகத்குரு

    காஞ்சி காமகோடி பீட ஜகத்குரு

    இன்று மஹா அனுஷம். காஞ்சி மஹா பெரியவா அவர்களின் 129ஆவது பிறந்த நாள். இத்திருநாளில், ‘காஞ்சி காமகோடி பீட ஜகத்குரு’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள். இதில் மஹா பெரியவா அவர்களின் கூர்மையும் தெளிவும் செறிவும் கொண்ட அரிய படங்களை மஹாபெரியவா தளத்திலிருந்து நன்றியுடன் பயன்படுத்தியுள்ளோம். 4K தரத்தில் அவரைக் கண்டு மகிழுங்கள். அன்பே சிவம்! அறமே தவம்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காஞ்சிபுரீசனைக் காண வாருங்கள்

    காஞ்சிபுரீசனைக் காண வாருங்கள்

    ‘காஞ்சிபுரீசனைக் காண வாருங்கள்’ என்ற இனிய பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடுவதைக் கண்டும் கேட்டும் மகிழுங்கள். காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவில் பிரமோற்சவத்தில் நடைபெற்ற பஜனை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வரதனைத் தானே! காஞ்சி வரதனைத் தானே!

    வரதனைத் தானே! காஞ்சி வரதனைத் தானே!

    காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற பஜனை. ‘செந்தாமரைக் கண்ணனோடு வரதனைத் தானே காஞ்சி வரதனைத் தானே’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதை, ஆடிப் பாடுவதைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முகுந்த இராமானுஜ தாசர் பஜனைகள்

    முகுந்த இராமானுஜ தாசர் பஜனைகள்

    முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர், பல்வேறு இடங்களில் நடத்திய ஆறு பஜனைகளின் தொகுப்பு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ராம ஹரே ஹரே! கிருஷ்ண ஹரே ஹரே!

    ராம ஹரே ஹரே! கிருஷ்ண ஹரே ஹரே!

    காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலில், முகுந்த இராமானுஜ தாசன் குழுவினர் நடத்திய பஜனையிலிருந்து ஒரு பாடல். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வெள்ளித் தேரில் ஏகாம்பரநாதர்

    வெள்ளித் தேரில் ஏகாம்பரநாதர்

    ஏலவார்குழலி உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர், காஞ்சி மாநகர வீதிகளில் வெள்ளித் தேரில் உலா வரும் ஒய்யாரக் காட்சி. பங்குனி உத்திரத் திருவிழாவின் 6ஆம் நாள் உற்சவம். இதில் வாத்தியக் கலைஞர்களின் விறுவிறு மேளதாளம், பார்ப்போரை நிமிரச் செய்யும். நிமிர்ந்தோரை அசையச் செய்யும். அசைந்தோரை ஆடச் செய்யும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வாண வேடிக்கையில் ஒரு புதுமை

    வாண வேடிக்கையில் ஒரு புதுமை

    காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வாண வேடிக்கை இதோ. நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை நினைவூட்டும் வகையில் ஐந்து வாணங்கள் விண்ணில் பாய்ந்து மத்தாப்பாய்ச் சொரிவது இனிய புதுமை. கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரத் திருத்தேர் விழா

    ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரத் திருத்தேர் விழா

    காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவின் 7ஆம் நாளான இன்று, தேரோட்டம் நடைபெற்றது. 24 அடி உயர தேர் பிரம்மாண்டத் தேரில் அம்பாள் ஏலவார்குழலியும் ஸ்ரீ ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். ஆடல், பாடலுடன், அதிர வைக்கும் வாத்திய இசையுடன் காஞ்சி நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

    Image courtesy: Wikimedia.org

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில்

    காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில்

    108 திவ்ய தேசங்களுள் முப்பதோராவது திவ்ய தேசம், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் பாடப்பெற்று மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலம், அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்தி வரதர் பள்ளிகொண்டிருக்கும் அற்புதத் தலம், எப்படிச் செய்தனரோ என நாம் வியக்கும் கல் சங்கிலியைக் கொண்ட கச்சி மாநகரத்துக் கலாமண்டபம்… எனப் பல பெருமைகள் கொண்ட அருள்மிகு காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளே ஓர் உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வேடல் சிவன் கோவில் | காஞ்சிபுரம்

    வேடல் சிவன் கோவில் | காஞ்சிபுரம்

    ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரத்தின் வேடல் என்ற பகுதியில் நிர்மாணித்துள்ள சிவன் கோவிலுக்கு இந்த வாரம் சென்றோம். பிரமாண்டமான சிவனையும் நந்தியையும் தரிசித்தோம். அந்த அற்புதக் காட்சிகள், இதோ உங்களுக்காக.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கணீர் காஞ்சி பஜனை – 2

    கணீர் காஞ்சி பஜனை – 2

    இது, காஞ்சிபுரம் ஸ்ரீ பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவிலுக்குள் நாங்கள் கண்ட இரண்டாவது பஜனைக் குழு. இவர்களின் கணீர் என்ற பஜனைக்கு எங்கள் மகன் ஹரி நாராயணனின் எதிர்வினையைப் பாருங்கள். அத்துடன் திருக்கோவில் அமைப்பையும் அதில் கிளிகளும் புறாக்களும் பறக்கும் அழகையும் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பஜனையில் ஒரு பாய்ச்சல்

    பஜனையில் ஒரு பாய்ச்சல்

    நேற்று காஞ்சிபுரம் சென்றிருந்தோம். அங்கே ஸ்ரீ பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவிலுக்குள் நுழைந்தபோது ஓர் இனிய ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு குழுவினரின் புதுமையான பஜனையைக் கண்டோம். ஆடல் பாடலுடன், தெருக்கூத்தின் கூறுகளுடன் அந்தப் பஜனை அமைந்திருந்தது. அதில் நடனம் ஆடியவர் சுழன்றும் குதித்தும் பாய்ந்தும் பலவிதமாக அபிநயித்தும் ஆடியது, கண்ணைக் கவர்ந்தது. வழக்கமான பஜனையிலிருந்து மாறுபட்டு, அது ஒரு பாய்ச்சலாக இருந்தது. அந்தப் பஜனையிலிருந்து சில காட்சிகள் இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மஹா பெரியவா அனுஷ பூஜை

    மஹா பெரியவா அனுஷ பூஜை

    கணேசன் கண்ணன் இல்லத்தில் நடைபெற்ற மஹா பெரியவா அனுஷ பூஜையின் ஒரு பகுதி. அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கலவை தெய்வமடி | காஞ்சி மஹா பெரியவர் மீதான இசைப்பாடல்

    கலவை தெய்வமடி | காஞ்சி மஹா பெரியவர் மீதான இசைப்பாடல்

    தன் வீட்டில் எங்கு நோக்கிலும் மஹா பெரியவர் திருவுருவங்களாக வைத்துள்ளார், கணேசன் கண்ணன். மஹா பெரியவர் விக்கிரகத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வீட்டையே கோவிலாகச் செய்துள்ளார். இத்தகைய பக்தரான கணேசன் கண்ணன் இயற்றிய ‘கலவை தெய்வமடி’ என்ற பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார் ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share