Tag: கொரோனா

  • மிளகுக் குழம்பு செய்முறை

    மிளகுக் குழம்பு செய்முறை

    பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் கை நனைக்கலாம் என்பர். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிளகுக் குழம்பு வைத்துக் கொடுப்பது வழக்கம். இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பலரும் இருமல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் மிளகை உட்கொண்டால், உடன் பலன் கிடைக்கும். உடலுக்கு வலிமை சேர்ப்பது மிளகு. ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது. மேன்மைகள் மிகுந்த இந்த மிளகைக் கொண்டு மிளகுக் குழம்பு செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வெறுங்கையால் பிளீச்சிங் பவுடர் தூவும் பணியாளர்

    வெறுங்கையால் பிளீச்சிங் பவுடர் தூவும் பணியாளர்

    முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு, இன்று காலை தாம்பரத்தில் நம் தெருவுக்கு வந்த தூய்மைப் பணியாளர், கொரோனா தடுப்புப் பணிக்காக, வெறும் கையால் பிளீச்சிங் பவுடர் தூவுவதைப் பார்த்தேன். இதைக் கருவிகள் வழியாக அல்லது ஒரு டப்பாவில் எடுத்து, பவுடர் டப்பா மாதிரி அமுக்கித் தூவலாமே. கை படாமலே தூவ, வேறு நிறைய வழிகள் உண்டே. கையுறைகள் அணியலாமே. அரசு உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். இதன்வழியே பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா?

    கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா?

    கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகியவை குறித்துப் பல வகையான வதந்திகள் பரவி வருகின்றன. அதைப் போட்டுக்கொண்டவர்களுக்கு பல விதமான பாதிப்புகள் ஏற்பட்டன, பக்க விளைவுகள் ஏற்பட்டன எனச் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். உண்மை என்ன? கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடமே நேரடியாகக் கேட்டோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • கொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்

    கொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்

    வ.ஐ.ச. ஜெயபாலன்

    மலர்கிறது முல்லை
    கமகமவெனச் சுவர்க்கமாய் உயர்கிறதே
    என் மாடித் தோட்டம்.
    கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின்
    மரண அமைதி அதிர
    கருவண்டுகள் இசைக்கின்றன
    ”அஞ்சாதே தோழா” என்னும் பாடல்.

    அமேசான் காட்டுத் தீயையும் மிஞ்சி
    உலகை வேட்டையாடுதே கொரோனா.
    அடாது கொட்டும் வெண்பனியையும்
    விழாவாய்க் கொண்டாடும்
    ஒஸ்லோ நகரும் முடங்கியதே.
    கூதிரில் தனித்த என் மனைவிக்குப்
    பூக்களும் இல்லை.
    எனினும் எனினும்
    இடுக்கண் வருங்கால் நகைக்கும்
    புதல்வர்களை விட்டு வந்தேனே..

    வெற்றியெனக் கொரோனோ கிருமிகள் துள்ளும்
    பெசன்ட் நகர் கடற்கரையில்
    கைவிடப்பட்ட படகுகளில் அஞ்சாமல்
    நண்டுகள் தொற்றும் இரவில்
    குடிசைகளுள்
    படகெனத் துயிலும் பெண்டிர் மார்பில்
    வலிய விரல்கள் ஊர்கின்றன.

    சாத்தானே அப்பாலே போ.
    மனிதர்கள் கைவிடப்படுவதில்லை.
    ஒருபோதும் வெல்லப்படுவதுமில்லை.

    ————————————————————

    Pic courtesy: https://www.maxpixels.net

    Share
  • இணையவழியில் மது விற்க முடியும்!

    இணையவழியில் மது விற்க முடியும்!

    அண்ணாகண்ணன்

    டாஸ்மாக் மதுக் கடைகளில் மக்கள் குவிந்து வருவதால், கொரோனா தொற்று ஆபத்து மிகுந்துள்ளது. இதை இணையம் வழியே விற்றால், குறைந்தபட்சம், கொரோனா பரவலையாவது தடுக்கலாம். இணையம் வழியே மது விற்க முடியாது என்று அரசு, அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், நினைத்தால் முடியும் என்பதே உண்மை. இதற்குச் செய்ய வேண்டியவை குறித்து இந்தப் பதிவில் சிறிது விளக்கியுள்ளேன்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் 40 – கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

    அண்ணாகண்ணன் யோசனைகள் 40 – கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

    கொரோனா தொற்று பரவும் இந்த ஊரடங்கு காலத்தில், கடைகளிலும் பொது இடங்களிலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? இதோ எனது யோசனை.

     

    படப் பதிவு: ஹேமமாலினி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கவிவருத்தம் தந்த கலிவிருத்தம்

    கவிவருத்தம் தந்த கலிவிருத்தம்

    கொடியேறி குடையாகி அடியேற்றி மகமாயி
    கொடிதான கொரானா மகிடனாய் வதமேவ
    படியேறி மருந்தாகி பரவாத படியாக
    குடியேறி வந்தாளே குவலயம் காக்கும்படி

    ஓங்கார ஒளிசோதி ரீங்கார ஒலியாகி
    ஆங்கார அரக்கரை அடங்கா பிணியோட
    தேங்காது வேம்பிடை தெரியாத படியாக
    தூங்காது நீக்கினளே நிமிர்ந்தெழு மானிடமே

    திரிசூலக் கூராகும் திகம்பர நேராகும்
    அடிகூட செம்மையா குங்கும நிறமேறி
    அதான மருந்தாய் அன்னை ஆகிவிட
    கலிகால நேராகும் காளியடி பணிவோமே

    கோதையைப் பழித்தனர் கீதையைக் கடிந்தனர்
    பாதையைப் பிரித்தனர் பகைமையை வளர்த்தனர்
    போதையில் அந்தணர் மறையினைைக் கிழித்தனர்
    வேதையும் வேண்டுமோ வேள்வியின் சுவாலையே

    சதிகார வஞ்சகரின் சல்லாபப் பிதற்றுகளை
    அதிகாரத் தனத்தோடு அடக்கவே அவசரமாய்
    மதுராகக் காளியவள் சிங்கம் ஏறிவர
    இதிகாசச் சண்டியிதோ இனிமேல் வருந்தாதே

    அறநெறி தவிர்த்துமே அதர்மமாய் மாற்றினால்
    மறநெறி காக்கவே வெகுண்டுநீ காட்டினாய்
    பிறநெறி போற்றுவார் பிழைகளைக் கூட்டினார்
    சரிநெறி காட்டுமே தண்டனை போதுமே

    இருமிகள் சேர்க்கின்ற எச்சிற் சாரல்களால்
    கிருமிகள் சேர்க்கின்ற பரவல் தூறல்களால்
    ஒருமித்த கொரானாவை உலகில் அழித்தருள்
    வருமந்த திருக்கண்ண புரவாசி உமையே

    அட்டமா திக்கெலாம் அட்டகாசம் ஆருயிரின்
    கெட்டமா வினையாவும் கேளிக்கை ஆக்காமல்
    இட்டமாய் வந்திடுமுன் இன்னருளே காப்பாகு
    கட்டமாய்க் காண்பதுன் கால்பட்டு துரும்பாக

    துளிவருத்தம் கூடாது துயரெமக்கு ஆகாது
    பலியனைத்தும் ஏறாது பக்தருமென் சேராது
    கலிவிருத்தம் பாடாது கலங்குமெனை பாராது
    ஒலிஎடுத்து வாராயோ ஓங்காரி மாயவளே!!

    Share