Tag: நவராத்திரி

  • அருளான இலக்குமியே அடிபணிந்தேன் அம்மா!

    அருளான இலக்குமியே அடிபணிந்தேன் அம்மா!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சங்கநிதி பதுமநிதி தந்திடு தாயே
    சஞ்சலம் அணுகாமல் காத்திடுவாய் நீயே
    பஞ்சமெனும் இருள்சூழா பார்த்திடுவாய் தாயே
    பாதமலர் சரணடைந்தோம் பராபரமே உன்னை

    உணவோடுஉடையுறைள் உவந்தளிப்பாய் தாயே
    உலகோர்கள் இகழாமல் வாழ்வளிப்பாய் தாயே
    அளவோடு செல்வமதை அளித்திடுவாய் தாயே
    ஆசையது பெருகாமல் பார்த்துவிடு அம்மா

    பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லையாம் அம்மா
    பொருளீந்து எந்தனைக் காத்திடுவாய் அம்மா
    பொருளோடு ஈகையையும் மனமமரச் செய்வாய்
    அருளான இலக்குமியே அடிபணிந்தேன் அம்மா

    இருப்பாரும் இல்லாரும் தேடுகிறார் தாயே
    எவரெவர்க்கு எதுவேண்டும் என்பதை நீயறிவாய்
    கொடுக்கின்ற தருணமதில் கொடுத்துமே உயர்வாய்
    கோணாத குணமதனைத் தந்திடுவாய் அம்மா

    பொருளும் அருளும் ஒன்றாய் இணைய
    கருணை புரிவாய் இலக்குமித் தாயே
    தருமம் உலகில் தழைக்க அருள்வாய்
    தனமாய் ஒளிரும் இலக்குமித் தாயே

    Share
  • துணையாக இருப்பாய் துர்க்கையம்மா நீயும்!

    துணையாக இருப்பாய் துர்க்கையம்மா நீயும்!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    இன்பகலா வாழ்க்கை எனக்கருள வேண்டும்
    ஈரமொடு வீரம் மனமமர வேண்டும்
    துன்பது என்னைத் தொற்றாமல் இருக்கத்
    துணையாக இருப்பாய் துர்க்கையம்மா நீயும்

    வாதமிடு குணத்தை வதைத்திடுவாய் அம்மா
    மோதவரும் பகையை விலக்கிடுவாய் அம்மா
    சோதனைகள் அனைத்தும் சாதனையாய் ஆக்க,
    துணையாக இருப்பாய் துர்க்கையம்மா நீயும்

    வார்த்தையிலே இனிமை சேர்த்திடுவாய் தாயே
    வம்பர்தமை வாழ்வில் அகற்றிவிடுவாய் அம்மா
    காப்பாக இருப்பாய் கண்டிப்பாய் இருப்பாய்
    கண்ணுக்குள் மணியாக இருக்கின்றாய் நீயும்

    வாழ்வாக இருப்பாய் வளமாக இருப்பாய்
    தாழ்வாக இருப்பாரைத் தாங்கியே நிற்பாய்
    ஆழமாய் இருக்கும் அருட்கடலும் ஆவாய்
    அன்னையே துர்க்கையே அரவணைப்பாய் தாயே

    Share
  • கொலுப்படியை அலமாரி ஆக்குவது எப்படி?

    கொலுப்படியை அலமாரி ஆக்குவது எப்படி?

    கொலுப்படியை அலமாரி ஆக்குவது எப்படி? இதோ ஒரு செய்முறை விளக்கம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஹேமமாலினி அண்ணாகண்ணன் வீட்டுக் கொலு

    ஹேமமாலினி அண்ணாகண்ணன் வீட்டுக் கொலு

    சென்னை, தாம்பரத்தில் வசிக்கும் ஹேமமாலினி அண்ணாகண்ணன் வீட்டுக் கொலு இதோ. நித்திலா, அபிநயா, காயத்ரி, ஹரி நாராயணன், தங்கம் மாமி ஆகியோரின் பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோல எழில் கொஞ்சும் கொலு

    கோல எழில் கொஞ்சும் கொலு

    சென்னையில் காணக் கிடைத்த கோல எழில் கொஞ்சும் கொலு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கணாம்பாள் | அருணா ஸ்ரீதர் வீட்டுக் கொலு

    கணாம்பாள் | அருணா ஸ்ரீதர் வீட்டுக் கொலு

    குத்துவிளக்கை அம்பிகையாக அலங்கரிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், குத்துவிளக்கைக் கணபதியாக, கணபதி அம்பாளாக, கணாம்பாளாக அலங்கரித்துள்ளதைப் பார்த்துள்ளீர்களா? இதோ அருணா ஸ்ரீதர் வீட்டுக் கொலுவில் இந்தப் புதுமையைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எனை நீ மறவாதே | கிருஷ்ணகுமார்

    எனை நீ மறவாதே | கிருஷ்ணகுமார்

    எம்.‌எம். தண்டபாணி தேசிகர் இயற்றிய ‘எனை நீ மறவாதே அங்கயற்கண்ணி எனை நீ மறவாதே’ என்ற புகழ் பெற்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியம்: ஜெயந்தி சங்கர்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தீப ஜோதியாய் வருவாய்!

    தீப ஜோதியாய் வருவாய்!

    திருமகளைப் போற்றும் ‘தீப ஜோதியாய் வருவாய்’ என்ற இந்தப் பாடலை, தபோவனத்தில் தினசரி அதிகாலை பாடுகிறார்கள். கன்னிப் பெண் ஒருவர் கையில் விளக்கேந்தி நடக்க, ஆசிரமத்தில் உள்ள அனைவரும் அவரைச் சூழ்ந்து பாடியபடி செல்வது வழக்கம். இந்த இனிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரும் அவர் மகள் ஷ்ரேயா கிருஷ்ணகுமாரும் பாடக் கேளுங்கள். இந்த நவராத்திரியில் திருமகளின் அருள், எங்கும் நிறைவதாக!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கற்பக விநாயகர் கோவில் கொலு

    கற்பக விநாயகர் கோவில் கொலு

    சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தை அலங்கரிக்கும் நவராத்திரி கொலுவைக் கண்டு களியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

    அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

    சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு, நவராத்திரியை முன்னிட்டு, ரூபாய் நோட்டு அலங்காரம். வளம் தரும் வரலட்சுமியாக அருள் பாலிக்கும் அன்னையின் திருக்கோலத்தைக் கண்டு களியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எங்கும் உன் ஆடலடி தாயே

    எங்கும் உன் ஆடலடி தாயே

    நவராத்திரியில் அன்னைக்கு இசை ஆராதனை. ‘எங்கும் உன் ஆடலடி தாயே’ என்ற இனிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நீயே கதி ஈஸ்வரி

    நீயே கதி ஈஸ்வரி

    1958ஆம் ஆண்டு வெளியான ‘அன்னையின் ஆணை’ திரைப்படத்தில், மருதகாசி இயற்றிய ‘நீயே கதி ஈஸ்வரி’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்

    ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்

    கொலு என்பது கலைகளின் சங்கமம். இசைக்கும் அதில் முக்கியப் பங்கு உண்டு. இதோ, கொலுவின் முன்னால் குழந்தைகள் பாடுகிறார்கள். ‘ஜெய கணேச ஜெய கணேச பாஹிமாம்’ என்ற புகழ் பெற்ற பாடலை, மூவரசம்பட்டுச் சகோதரிகள் (மாதங்கி & மனஸ்வினி) இனிமையாகப் பாடுவதைக் கேளுங்கள். நவராத்திரி நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் சுரேஷ்

    நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் சுரேஷ்

    பொம்மைக் கலைக்குக் கைநேர்த்தியும் செய்நேர்த்தியும் பொருந்தி வர வேண்டும். இவை ஒருங்கே கைவரப் பெற்றவர், பொம்மைக் கலைஞர் சுரேஷ். காஞ்சிபுரம், பொம்மைக்காரத் தெருவில் உள்ள இவரது வீட்டில் அணிவகுத்து நிற்கும் அழகிய பொம்மைகளைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் ராஜேஷ்

    நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் ராஜேஷ்

    ஒவ்வொரு பொம்மைக்குப் பின்னும் கலைஞர் ஒருவரின் உழைக்கும் கைகளும் படைப்பூக்கமும் கற்பனை வளமும் இருக்கின்றன. காஞ்சிபுரம் பொம்மைக் கலைஞர் ராஜேஷ் கைவண்ணத்தில் உருப்பெற்றுள்ள பொம்மைகளைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share