Tag: மகாசிவராத்திரி

  • சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?

    சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?

    கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய, மிகுபுகழ் பெற்ற, ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?’ இந்த இனிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். தில்லைக் கூத்தனை வணங்கி, எல்லை இல்லா அருளைப் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மந்திரமாவது நீறு | திருஞானசம்பந்தர்

    மந்திரமாவது நீறு | திருஞானசம்பந்தர்

    தீராத நோயெல்லாம் தீர்க்கும், நீங்காத இடரெல்லாம் நீக்கும். திருநீற்றின் அருமை, பெருமைகளைத் திருஞானசம்பந்தர் உரைக்கக் கேளுங்கள். இரண்டாம் திருமுறையிலிருந்து ‘மந்திரமாவது நீறு’ இதோ. ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். சிவபெருமானை வணங்கி, மஹா சிவராத்திரியைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொன்னார் மேனியனே | சுந்தரர் தேவாரம்

    பொன்னார் மேனியனே | சுந்தரர் தேவாரம்

    தித்திக்கும் தேவாரப் பாடல், ஏழாம் திருமுறையின் எழுச்சிக் கீதம், சுந்தரர் இயற்றிய ‘பொன்னார் மேனியனே’ இதோ. ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். மஹா சிவராத்திரியைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நம்பிக் கெட்டவர் எவர் ஐயா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    மகாசிவராத்திரியை முன்னிட்டு, பாபநாசம் சிவனின் சிறப்புப் பாடல், ‘நம்பிக் கெட்டவர் எவர் ஐயா’, கிருஷ்ணகுமார் குரலில். கேட்டு மகிழுங்கள். சிவ நாமம் சொல்லிப் பழகுவோம்.

    பல்லவி

    நம்பிக் கெட்டவர் எவர் ஐயா-உமை
    நாயகனைத் திருமயிலையின் இறைவனை (நம்பிக்)

    அனுபல்லவி

    அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
    அன்பர் மனம் கவர் சம்பு கபாலியை (நம்பிக்)

    சரணம்

    ஒன்றுமே பயன் இல்லையென்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்
    ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
    அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே
    ஆதலினால் மனமே இன்றே சிவ நாமம் சொல்லிப் பழகு அன்புடன் (நம்பிக்)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சம்போ மகாதேவ | நீலகண்ட சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    சம்போ மகாதேவ | நீலகண்ட சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    மகாசிவராத்திரியை முன்னிட்டு, நீலகண்ட சிவனின் சிறப்புப் பாடல், சம்போ மகாதேவ சரணம் ஸ்ரீ காளத்தீசா, கிருஷ்ணகுமார் குரலில். செவியுறுங்கள், சிவனருள் பெறுங்கள்.

    பல்லவி

    சம்போ மஹாதேவ சரணம் ஸ்ரீ காள ஹஸ்தீச

    அனுபல்லவி

    அம்போஜ சம்பவனும் அன்பான மாயவனும்
    அடி முடி காணா நெடுமலை வாணா
    அகில புவன பரிபால சகல வரகுண விஸாலா (சம்போ)

    சரணம்

    அறியேன், சின்னஞ் சிறியேன் உனக்கனந்தம் தண்டனிட்டேன்
    அபராதங்கள் முழுதும் க்ஷமித்தருள்வாய் கை கும்பிட்டேன்
    பரிவாய் உன் சொல் கனவில் கண்டு பிழைக்கும் வழி தொட்டேன்
    பேதையாகிலும் உன் பாதம் பணியும் என் பெருகிய
    பவவினை தீரும், குரு பரனே கருணைக் கண்பாரும் (சம்போ)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share