நம்பிக் கெட்டவர் எவர் ஐயா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

மகாசிவராத்திரியை முன்னிட்டு, பாபநாசம் சிவனின் சிறப்புப் பாடல், ‘நம்பிக் கெட்டவர் எவர் ஐயா’, கிருஷ்ணகுமார் குரலில். கேட்டு மகிழுங்கள். சிவ நாமம் சொல்லிப் பழகுவோம்.
பல்லவி
நம்பிக் கெட்டவர் எவர் ஐயா-உமை
நாயகனைத் திருமயிலையின் இறைவனை (நம்பிக்)
அனுபல்லவி
அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
அன்பர் மனம் கவர் சம்பு கபாலியை (நம்பிக்)
சரணம்
ஒன்றுமே பயன் இல்லையென்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்
ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே
ஆதலினால் மனமே இன்றே சிவ நாமம் சொல்லிப் பழகு அன்புடன் (நம்பிக்)
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)