சுப்ரபாரதிமணியனின் “அந்நியர்கள்“ நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு

மதுராந்தகன் 

(கனவு இலக்கிய வட்டத்திற்காக)

திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக அவரின் “அந்நியர்கள்“ என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார். விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில்  திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு  இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது .

எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து, மூதறிஞர் அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா  ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர் (044 28270 937).

எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் இலக்கியப் பொறுப்பாளராக எழுத்தாளர் இலக்கியா நடராஜன் விளங்கி வருகிறார்.

ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு எழுத்து இலக்கிய அறக்கட்டளை  ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கி வருகிறது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க