சம்போ மகாதேவ | நீலகண்ட சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்
மகாசிவராத்திரியை முன்னிட்டு, நீலகண்ட சிவனின் சிறப்புப் பாடல், சம்போ மகாதேவ சரணம் ஸ்ரீ காளத்தீசா, கிருஷ்ணகுமார் குரலில். செவியுறுங்கள், சிவனருள் பெறுங்கள்.
பல்லவி
சம்போ மஹாதேவ சரணம் ஸ்ரீ காள ஹஸ்தீச
அனுபல்லவி
அம்போஜ சம்பவனும் அன்பான மாயவனும்
அடி முடி காணா நெடுமலை வாணா
அகில புவன பரிபால சகல வரகுண விஸாலா (சம்போ)
சரணம்
அறியேன், சின்னஞ் சிறியேன் உனக்கனந்தம் தண்டனிட்டேன்
அபராதங்கள் முழுதும் க்ஷமித்தருள்வாய் கை கும்பிட்டேன்
பரிவாய் உன் சொல் கனவில் கண்டு பிழைக்கும் வழி தொட்டேன்
பேதையாகிலும் உன் பாதம் பணியும் என் பெருகிய
பவவினை தீரும், குரு பரனே கருணைக் கண்பாரும் (சம்போ)
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)