Blog

  • உலகளந்தார் பெருமாள் கோவில் பஜனை

    உலகளந்தார் பெருமாள் கோவில் பஜனை

    காஞ்சிபுரம் உலகளந்தார் பெருமாள் கோவிலில் நடைபெற்ற பஜனை. ‘ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் ஆடிப் பாடுவதைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவையில் இரு பயணங்கள்

    கோவையில் இரு பயணங்கள்

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை உக்கடம் பெரியகுளம் ஏரி புதுப்பிக்கப்பட்டுள்ளது. கண்கவர் வடிவமைப்பு, நேர்த்தியான கட்டமைப்பு, பளிச்சிடும் ஒளி விளக்குகள் என அழகுற அமைந்துள்ளது. அதை இரவு நேரத்தில் அண்மையில் பேருந்தில் கடந்தோம். இந்த ஏரியை ஒட்டியுள்ள சாலை எந்தத் தரத்தில் உள்ளது என்பதை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம்.

    நண்பர் சித்ரன் ரகுநாத், கோவைச் சாலைகள் குறித்து எழுதிய சிறுவர் பாடல் இப்படித் தொடங்குகிறது

    கோவை என்றொரு நகருண்டு.
    நகரில் சாலைகள் பலவுண்டு.
    சாலைகள் முழுக்கக் குழியுண்டு.
    அரசுக்கு அதனால் பழியுண்டு.

    கோவையில் குஞ்சம் வைத்த ஆட்டோவில் ஒரு பயணம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வல்லாரைத் துவையல் செய்வது எப்படி?

    வல்லாரைத் துவையல் செய்வது எப்படி?

    நினைவாற்றலை வளர்க்கும் வல்லாரைத் துவையல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.

    படத்துக்கு நன்றி: விக்கிப்பீடியா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழநி மலைக் குரங்குகள்

    பழநி மலைக் குரங்குகள்

    பழநி மலை உச்சியில் ஏராளமான குரங்குகளைக் கண்டோம். அவை, பக்தர்களின் தண்ணீர்ப் புட்டியையும் குளிர்பானப் புட்டியையும் பறிக்கின்றன. பக்தர் தரும் உணவைப் பெற, குறுக்கும் நெடுக்கும் நடக்கின்றன. இங்கும் அங்கும் தாவுகின்றன. பக்தர்களின் மிக அருகில் இயல்பாக நடக்கின்றன. கூட்டத்தில் புகுந்து செல்கின்றன. புத்திசாலிக் குரங்குகள், புட்டியின் மூடியைத் திறந்து தண்ணீரைக் குடிக்க, எந்த உத்தியைப் பயன்படுத்துகின்றன என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அரச மரக் காற்று

    அரச மரக் காற்று

    சிட்லபாக்கம் ஏரிக் கரையின் மீது ஆட்சி செலுத்தும் அரச மரத்தின் சிலுசிலு காற்றில் சிறிது நேரம் நின்றபோது.

    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா (wikimedia.org)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பென்ஷன்

    பென்ஷன்

    பாஸ்கர்

    என் அப்பா காலமாவதற்கு முன் அவருக்கு எப்படியாவது பென்ஷன் வாங்க கடும் முயற்சி செய்தேன். கலெக்டர் முதல் கடை ஊழியன் வரை எல்லாரிடம் சொல்லியாகிவிட்டது. அவர் பணத்தை அவர் காண வேண்டும் என்ற ஆசை. ஏகப்பட்ட கடிதம், தனி கோப்பு என்று எல்லாம் செய்தாகி பலன் இல்லை.

    “கட் ஆப் எண்பத்தி ரெண்டு. ஒரு வருஷம் கூட.. சாரி” என்றார்கள்.

    “சார், நாற்பது வருஷ சர்வீஸ் என்றேன்”

    “…. கேஸ் போடு …. ஜட்ஜு கிட்ட கூட்டி போ..”

    “தப்பில்லையா சார்…?”

    “பணம் வேணும்னா எதை வேணா செய்யலாம்..”

    “சண்டை போட்டு பணமா… வேணாம். அடுத்த பஸ்ல போயிடலாம்.”

    “இல்ல. நாளைக்கு அம்மாவுக்கும் உபயோகமாக இருக்கும்” என்றேன்.

    அவர் பார்த்த பார்வையின் அர்த்தம் அப்போது விளங்கவில்லை.

    “இல்ல பா … ரங்கா விலாஸ்ல காபி சாப்ட்டுட்டு போலாம்.”

    ரெண்டு வாரம் கழித்து ஒரு கடுதாசி வந்தது.

    கலெக்டரின் பச்சை கையெழுத்து.

    “என் எழுத்துக்கு அவ்வளவு பலமா?”

    அப்பாவை எழுப்பினேன். “பத்து மணிக்கு பட்டணம் போகணும்” என்றேன்.

    “என்னத்துக்கு?” என்றார்.

    “பெரிய இடம், கொஞ்சம் நல்லா போனும்… மணியை கூப்பிடவா…?”

    “பிளேடு என்கிட்டே இருக்கு ..தாடியை எடுத்துடு…”

    “உன் இஷ்டம்” என்றார்.

    “அங்கவஸ்திரம் போட்டுப்ப இல்ல …”

    “இப்படி அலங்காரமா போனா எனக்கு வர பணமும் வராது.”

    “அப்படி இல்ல பா … ஒரு மாநேர்ஸ் என்றேன் ..”

    நிறைய பேர் இருந்தார்கள்.

    கலெக்டர் பேசினார். எல்லோரிடம் மன்னிப்பு கேட்டார். பொருளாதார சூழ்நிலை சரியில்லை என்றார். கூட்டம் கலைந்தது.

    “ஆட்டோ” எனக் குரல் கொடுத்தேன்.

    “பஸ்லயே போலாம்” என்றார். அவரை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அந்த கனமான மனம் அவர் இறந்த போது கூட வரவில்லை.

    Share
  • காஞ்சிபுரீசனைக் காண வாருங்கள்

    காஞ்சிபுரீசனைக் காண வாருங்கள்

    ‘காஞ்சிபுரீசனைக் காண வாருங்கள்’ என்ற இனிய பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடுவதைக் கண்டும் கேட்டும் மகிழுங்கள். காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவில் பிரமோற்சவத்தில் நடைபெற்ற பஜனை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கனடாவில் வேலை & தொழில் வாய்ப்புகள்

    கனடாவில் வேலை & தொழில் வாய்ப்புகள்

    ஊறுகாய் போடத் தெரிந்தால் கூடப் போதும். கனடாவில் பிழைத்துக்கொள்ளலாம். கனடாவில் எப்படிப்பட்ட திறன்கள் தேவைப்படுகின்றன? என்ன வகையான வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்? எத்தகைய தொழில் வாய்ப்புகள் உள்ளன? கள நிலவரத்தை நம்முடன் பகிர்கிறார், கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்

    ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்

    காஞ்சிபுரம் அருள்மிகு வைகுந்தப் பெருமாள் திருதேர் நிகழ்ச்சியில் நடைபெற்ற பஜனை. ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம், ஒருத்தி மகனாய் வளா்ந்தவனாம்’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இலங்கை நெருக்கடிக்கு என்ன தீர்வு? | மறவன்புலவு சச்சிதானந்தன்

    இலங்கை நெருக்கடிக்கு என்ன தீர்வு? | மறவன்புலவு சச்சிதானந்தன்

    இலங்கையில் அபாய அளவுக்குக் கடன், பணவீக்கம், அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு… எனக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களின் இன்னல்களோ பெருகி வருகின்றன. இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீள்வது எப்படி? இதற்குத் தீர்வுதான் என்ன? மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறிவியல் கடிதம் – 1 (பென்சீனைக் கவரும் பொருள்)

    அறிவியல் கடிதம் – 1 (பென்சீனைக் கவரும் பொருள்)

    1. பென்சீனைக் கவரும் பொருள்

    அன்பிற்குரிய அறிவியல் ஆர்வலனுக்கு,

    வணக்கம்

    சென்ற வாரம் நிகழ்ந்த நமது சந்திப்பின் போது, ‘சமகால அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திக் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ளும்படி’ நீங்கள் என்னைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இக்கடிதத்தை எழுதுகிறேன்.

    முன்னதாக, நான் அறிந்துகொண்ட அறிவியல் கண்டுபிடிப்புச் செய்தியினை அலைபேசி உரையாடலின் மூலமாக உங்களுக்குத் தெரிவிக்கலாம் என்றே கருதினேன். ஆனால், செவிவழியாகக் கேட்கும் அறிவியல் தகவல்கள் நாளடைவில் மறந்து போகலாம். இதுவே, கடிதமாக எழுதி மின்னஞ்சல் செய்வதன் நிமித்தம், வேண்டிய பொழுது தகவல்களை வாசித்து அறிந்துகொள்ளலாம். இப்பொழுது தான் திறன்பேசி இருக்கிறதே. எங்கு வேண்டுமானாலும், நேரம் கிடைக்கும்போது மின்னஞ்சல் கடிதத்தை வாசிக்கலாம். அந்த வகையில் இந்த முதல் கடிதத்தை உங்களுக்கு எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    செய்தி, ‘காற்று மாசினைக் குறைப்பதற்காக, புதிதாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் பரப்புகவர் பொருள் (அதிக மேற்பரப்பளவுக் கொண்ட வேதிப் பொருள். உதாரணம் – குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களால் எழும் வாசனையை நீக்கப் பயன்படுத்தப்படும் “கரி”)’ பற்றியது தான்.

    இன்றைய நவீன வாழ்க்கை முறையின் காரணமாக, எளிதில் ஆவியாகும் பல்வேறு கரிமச் சேர்மங்கள் காற்றில் கலந்து, காற்று மண்டலத்தை மாசுபடுத்துகின்றன. அக்கரிமச் சேர்மங்களில் ஒன்று தான் பென்சீன் (Benzene).

    பென்சீன், அறைவெப்ப நிலையில் நிறமற்ற திரவமாக இருக்கிறது. எனினும் இதன் கொதிநிலை குறைவு என்பதால், எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது. இது கரைப்பானாகவும் (solvent), பிற கரிமச் சேர்மங்களின் தயாரிப்புகளில் பகுதிப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    அதே சமயத்தில் பென்சீனால் மனிதர்களுக்குத் தீங்குகளும் ஏற்படலாம். அதிகச் செறிவில் பென்சீனைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் போது, புற்றுநோய் உள்ளிட்ட பல கடுமையான நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

    இந்நிலையில், மதிலக (indoor) மற்றும் வெளியகக் (outdoor) காற்றில் பென்சீன் வளிமம், பலதரப்பட்ட மூலங்களின் வழியாகச் சேர்க்கப்படுகிறது. கட்டுமானப் பொருட்கள், வீட்டு வசதிப் பொருள்கள், பொறிவண்டிக் கொட்டில், வெப்பமூட்டும் மற்றும் சமையல் அமைப்புகள் மூலம் பென்சீன் வளிமம், காற்றில் கலக்கிறது. நிலக்கரி, மரம், எரிவாயு, மண்ணெண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்துதல், புகையிலை புகைத்தல் மற்றும் பல்வேறு மனித நடவடிக்கைகள் மூலமாகக் காற்றில் பென்சீனின் செறிவு அதிகரிக்கிறது.

    பென்சீனால் ஏற்படும் தீங்கினைத் தவிர்க்க, காற்றில் கலந்திருக்கும் வளிமத்தைத் தனியாகப் பிரிக்க வேண்டியது அவசியம். இதற்கெனப் பரப்புகவர் பொருட்கள் (adsorbents) தயாரிக்கப்பட்டுள்ளன. பரப்புக்கவர் பொருட்கள் காற்றில் கலந்திருக்கும்  பென்சீன் வளிமத்தைக் கவர்ந்து வைத்துக்கொள்ளும், இதன் மூலம், காற்று தூய்மை அடையும்.

    துரதிர்ஷ்டவசமாக, பல பரப்புகவர் பொருட்களின் காற்று மாசுகளைக் கவர்ந்து இழுக்கும் திறன் போதுமானதாக இல்லை. அதுவும் காற்றில் சிறிதளவு செறிவுகளில் இருக்கும் கரிமச் சேர்ம வளிமங்களை உறிஞ்சுவதில் இப்பொருட்களின் திறன் மிகவும் குறைவே. அத்தோடு சில பரப்புகவர் பொருட்கள் தேர்திறம் (குறிப்பிட்ட சேர்மங்களை கவரும் திறன்) பண்பற்று இருக்கின்றன. எனவே காற்றில் சிறிதளவு செறிவுகளில் இருக்கும் பென்சீனை நீக்குவதற்கான முறையினைக் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தியே உருவாக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வகையில் அயர்லாந்தின் லிமெரிக் பல்கலைக்கழகத்தைச் (University of Limerick) சேர்ந்த பேராசிரியர் மைக்கேல் ஜாவோரோட்கோவின் (Michael Zaworotko) தலைமையிலான ஆய்வுக் குழு, காற்றில் இருந்து பென்சீன் வளிமத்தைக் கவர்ந்திழுக்கும் திறன் கொண்ட ஒரு புதிய பஞ்சுப் போன்ற நுண்துளைகள் கொண்ட பரப்புகவர் பொருளை உருவாக்கியுள்ளது.

    இந்தப் புதிய பரப்புகவர் பொருள் உலோக-டிபிராசோலேட் (metal–dipyrazolate) கட்டமைப்புச் சேர்மம் ஆகும். முக்கியமாக தற்போதுள்ள கவரும் பொருட்களை விட இந்தப் புதிய பரப்புகவர் பொருள் செயல்படுவதற்குக் குறைவான ஆற்றலே போதுமானது. கிட்டத்தட்ட பென்சீன் வளிமத்தின் செறிவு 100,000இல் ஒரு பங்காக இருந்தாலும் கூட அதனை அதிகத் திறனோடு கவரும் தன்மை கொண்டது, இந்தப் புதிய பரப்புகவர் பொருள்.

    பிற பரப்புகவர் பொருட்களை விட உணர்திறன் (sensitivity), தேர்திறம் (selectivity) மற்றும் வேலை நேரம் முதலியனவற்றில் இந்தப் புதிய பரப்புகவர் பொருள் சிறப்பாகச் செயல்படுகிறது. மேலும், லேசான வெப்பத்தைக் கொடுப்பதன் மூலம் இந்தப் பொருளை எளிதாக மீளுருவாக்கம் செய்ய முடியும்.

    நண்பரே, மேற்சொன்ன செய்தி உங்களுக்கப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அத்தோடு, இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், அவசியம் என்னிடம் தெரிவிக்கவும். சந்தேகத்தைத் தீர்க்க முயல்கிறேன்.

    இப்படிக்கு
    கனிமவாசன்

    நாள்: ஜீன் 06, 2022

    Reference

    Trace removal of benzene vapour using double-walled metal–dipyrazolate frameworks, T. He, X.J. Kong, Z.X. Bian, Y.Z. Zhang, G.R. Si, L.H. Xie, X.Q Wu, H Huang, Z. Chang, X.H. Bu, M.J. Zaworotko, Z.R. Nie, J.R. Li, Nature Materials, 21, 2022, 689–695.

    Share
  • வரதனைத் தானே! காஞ்சி வரதனைத் தானே!

    வரதனைத் தானே! காஞ்சி வரதனைத் தானே!

    காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற பஜனை. ‘செந்தாமரைக் கண்ணனோடு வரதனைத் தானே காஞ்சி வரதனைத் தானே’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதை, ஆடிப் பாடுவதைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழநி முருகன் தீர்த்தக்காவடிகள்

    பழநி முருகன் தீர்த்தக்காவடிகள்

    பழநிக்குச் சென்றபோது, பழநி முருகனுக்காகத் தீர்த்தக்காவடி எடுத்து, பாத யாத்திரையாக வரும் பக்தர்களை முதல் முறையாகக் கண்டேன். கலசத்தில் இருப்பதை நான் தண்ணீர் என்றபோது, தீர்த்தம்னு சொல்லணும் எனத் திருத்தினார்கள். தீர்த்தக்காவடிகளுடன் இதோ ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கும்மி ஆட்டம் கொண்டாட்டம்

    ‘இப்படிப்பட்டவனை யசோதா எப்படிப் பெற்றாளோ!’ என்ற பாடலுக்கு முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் மிக இயல்பாகக் கும்மி ஆடுகிறார்கள். விழுப்புரம் மாவட்டம், குமுளம் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற இந்த அழகிய நடனத்தைக் கண்டு களியுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கனடாவில் குடியேறுவது எப்படி?

    கனடாவில் குடியேறுவது எப்படி?

    கனடாவில் குடியேறுவது எப்படி? அங்குள்ள வளம், வளர்ச்சி, வாய்ப்புகள் எத்தகையவை? உண்மை நிலவரத்தை நம்முடன் பகிர்கிறார், கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share