நம் வீட்டுத் தோட்டத்தில் கொய்யா அறுவடை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

நம் வீட்டுத் தோட்டத்தில் கொய்யா அறுவடை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

‘ஓம்சக்தி பராசக்தி’ முழக்கத்துடன், பக்தர்கள் கைகளில் செல்லக் குழந்தையாக, நெற்குன்றம் துர்க்கையம்மன் ஆடி அசைந்து வரும் அழகிய காட்சி. கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

இவர் குரலை இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நீங்கள் அவசியம் வந்து கேளுங்கள் என அழைத்தார் நண்பர். அதிகாலை ஐந்து மணிக்குச் சென்று பரிடாலா சுவாமி இராமதாசர் குரலைப் பதிவு செய்தபோது, நானும் அப்படியே உணர்ந்தேன். ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகில் உள்ள பரிடாலா என்ற ஊரில், ஆசியாவின் மிக உயரமான (135 அடி) திவ்ய சுந்தர அபய வீர ஹனுமான் சிலையை நிறுவியவர் இவர் என்பது பிறகுதான் தெரிந்தது. பக்தியில் தோய்ந்து, லயித்து, தென்றலைப் போல வருடிச் செல்லும் இவரது குரலைக் கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கண்ணதாசன் இயற்றிய ‘கோதையின் திருப்பாவை’ என்ற புகழ்பெற்ற பாடலை, ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள் இன்னிசையுடன் பாடுகிறார்கள். குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற பஜனை. கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பாஸ்கர்
சம்பவம் ஒன்று – இரண்டு வருடங்களுக்கு முன் நான், கொரோனா காலத்தில் சில இடங்களுக்கு உணவு கொடுக்கச் சென்றேன். அப்போது. ஒரு நண்பகல் கபாலி கோவிலில் வாயிலில் ஒருவரிடம் உணவைக் கொடுத்து, பின்னர் புகைப்படம் எடுக்க முனைந்தேன். அவர் உடனேயே என்னிடம் உணவைக் கொடுத்துவிட்டு, இந்தப் புகைப்படம் எல்லாம் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார். அவரிடம் நான் எனக்கு வந்த நிதியை உபயோகப்படுத்தியதற்கு நிரூபணம் செய்வதற்கு இது தேவை என்பதைக் கடைசி வரை புரிய வைக்க முடியவில்லை. அவரின் தன்மானம் இதில் பழுதுபட்டு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அவரிடம் வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன். அவர் மேல் எனக்குக் கோபம் இல்லை. அவரின் உயரிய தன்மானம் எனக்கு நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை. அவரின் செய்கை எனக்கு அவரைப் பெரிய மனிதராக காட்டியது.
சம்பவம் இரண்டு – அதே நாளில் வடக்கு மாட வீதியில் ஒருவரைப் பார்த்து உணவைக் கொடுக்க முற்பட்டபோது அவர், நான் இப்போது தான் சாப்பிட்டு முடித்தேன் எனச் சொல்லிவிட்டு இதை வேறு யாருக்காவது கொடுக்க முடியுமா எனக் கேட்டார். அவரிடம் இதனை இரவுக்கு வைத்துக்கொள்ளலாம் எனச் சொன்ன போது அவர் சொன்னார்.
“இப்படிச் சேர்த்து வைக்க ஆரம்பித்தால், நாளை யார் வருவார் என இங்கேயே உட்கார்ந்து விடுவேன். தினமும் நீ வருவியா என எதிர்பார்ப்பேன். எனக்குத்தான் இதனால் கஷ்டம். இப்ப பசியில்லை, எனக்கு வேண்டாம். பசியோடு இருப்பவனிடம் கொடு” எனச் சொல்லி விட்டார்.
தர்மம் என்ற விஷயம் சுலபம் என்றாலும் இது போல நிகழ்வுகள் எல்லாம் பாடங்கள்.
அவருக்கு அப்போது பசியில்லை என்ற ஒரு வரியே அவரை ஒரு சிங்கம் போலக் காட்டியது. தர்மம் கேட்பவர்கள் நம்மைப் போன்றவர்கள். அவர்களைத் தரம் பிரிக்கக் கூடாது. அவர்களின் உயரிய குணங்கள் பெருமையான விஷயம்.
அன்று அந்த இருவரும் எனக்கு ஞான தர்மம் செய்தனர். பொருளற்று இடமற்று எங்கோ தூங்கி, எங்கோ உண்டு உறங்கும் இவர்கள் மேன்மையானவர்கள். தர்மம் கேட்பவரின் கண்களைப் பாருங்கள். உங்கள் கைகள் தன்னிச்சையாய் தர்மம் செய்யும். செய்ய வேண்டும்.
யாசிப்பவர்கள் வாழ்க. அவர்களுக்கு உதவுவோரும் வாழ்க.

திருநீர்மலையை மாமலை ஆவது நீர்மலையே எனத் திருமங்கை ஆழ்வார் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து காண்டாவனம் என்பதோர் காடு எனத் தொடங்கும் பாசுரத்தை நீலமேகம் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

தாம்பரம் ரெயில்வே மேம்பாலத்தில் நின்றிருந்த விளக்குக் கம்பம், இன்று மதியம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இந்தச் சிக்கலைச் சமயோஜிதமாக மக்கள் எப்படிச் சமாளித்தார்கள் என்று பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு, பக்தர்களின் மனத்துக்கு இனிய மதுர கீதம். இதன் தொடக்கப் பாடலை ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள், குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் திருக்கோவிலில் ஆடலுடன் பாடுவதைப் பாருங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சென்னை, குன்றத்தூரில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் திரு ஊரகப் பெருமாள், சர்வ அலங்காரத்துடன் நேற்று மாலை திருவீதி உலா வந்த திருக்காட்சி இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பல்வேறு பொருள்களும் இன்று உறைகளில் கட்டப்பட்டு, சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. இவற்றை விரைவாக மூடி முத்திரையிட வேண்டிய தேவை உள்ளது. இந்தப் பணிகளுக்கு என்று தனியாக எந்திரங்கள் வந்துள்ளன. இந்தப் பதிவில், காப்பிப் பொடி உறைகளை மூடி முத்திரையிடும் காட்சியைப் பார்க்கலாம். சென்னையில் உள்ள நியூ இந்தியன் காஃபி ஹவுஸ் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டது.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி’யிலிருந்து இரண்டு பாடல்களை இராமதாச இராமானுஜ தாசர் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

ஆமை ஒன்று, சாலையைக் கடக்கிறது.
இடம் – சென்னை, தாம்பரம்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழத் தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத் தயாரிப்பு நிர்வாகத்தில் தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் தங்க பிரபா ஆகியோர் உறுதுணையாகப் பணிபுரிந்துள்ளார்கள்.
சிங்களப் பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்குச் சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளைச் சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படித் துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இதில் தமிழீழத் தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.
குறிப்பாக, தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த ஒருவரைக் களை எடுப்பதாகவும் அவர்களை சிங்கள அரசு தேட ஆரம்பிக்க, அவர்கள் காட்டுக்குள் தலைமறைவு ஆவதாகவும் முதல் பாகம் முடிவடைந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருடக் காலக்கட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து, தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் அதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகள், அவர்களுக்கு ஏற்படும் உணர்வு மிக்க சம்பவங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், தியாகங்கள் என இந்த இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.
1983ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் இலங்கை முழுவதும் நாடளாவிய பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை நடைபெற்ற கருப்பு ஜூலை கலவரத்தையும், அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் அகதிகளாகப் புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் இதில் காட்டுவதுடன் அதற்கு காரணம் என்ன, அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
அதே போன்று 1981ஆம் ஆண்டு தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு யாழ் நூலகத்தைத் தீக்கிரையாக்கிய துயரமான சம்பவம் நடைபெற்றது. பெரிய அளவில் வெளியே தெரியாத இந்தச் சம்பவத்தின் பின்னணியையும் இதன் மூலம் தெரியப்படுத்தி உள்ளனராம்.
கதாநாயகனாக, தமிழீழத் தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர் நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார்.
இரா.கோ யோகேந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை மற்றும் வரலாற்று ஆய்வில் மேதகு திரைக்களக் குழுவினருடன் சுபன் முன்னின்று உதவி புரிந்துள்ளார்.
இசையமைப்பாளர் பிரவின் குமார், ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், படத்தொகுப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) கலை இயக்குனர் இன்ப தினேஷ், சண்டைப் பயிற்சி ஜாக்குவார் தங்கம் மற்றும் அவரது மகன் விஜய் ஜாக்குவார் தங்கம், பாடகர்கள் சைந்தவி, புதுவை சித்தன் ஜெயமூர்த்தி என இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தப் படத்திற்காக வழங்கியுள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்தப் படம், வெளிநாட்டுத் திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்போதே ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகியவற்றில் முன்பதிவு தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே மேதகு படத்தின் முதல் பாகத்திற்கு இந்தியாவில் சென்சார் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதால் இந்த இரண்டாம் பாகத்திற்கும் சென்சார் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து, அனைத்து மக்களுக்கும் இந்தப் படம் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை வெளியிடுவதற்காகவே தமிழ்ஸ் ஓடிடி (tamils OTT) என்கிற புதிய ஓடிடி தளத்தையும் தொடங்கியுள்ளனர்.
தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தைத் திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப் படத்தை பார்க்க முடியும்.
முன்னதாக இதற்குப் பழ. நெடுமாறன், பெ. மணியரசன், அரசியல் தலைவர்கள் – திருமாவளவன், ராமதாஸ், வேல்முருகன், தனியரசு, நடிகர்கள் – சத்யராஜ், சசிகுமார், விஷால், ஜி.வி பிரகாஷ் ஆகியோர் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.