ஸ்டாலின் குணசேகரன்
’கரிகாலன் விருது’ பெற்றுள்ள சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழத்தில் அமைத்துள்ள தமிழ்வேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ”கரிகாலன் விருது” இவ்வாண்டு சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கருக்குக் கிடைத்துள்ளது.
2012ஆம் ஆணடு முதல் பதிப்பாக வெளியான நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து மொத்தம் 15 நூல்கள் வந்ததாகவும் அவற்றில் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய “திரிந்தலையும் திணைகள்” எனும் நாவல் விருதுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் உதயசூரியன் தெரிவித்தார்.
அதேபோல் மலேசியாவில் 2012ஆம் ஆண்டுக்கான விருது திருவாட்டி சுந்தராம்பாள் எழுதிய “பொன்கூண்டு” சிறுகதைத் தொகுப்புக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அடங்கிய குழு விருதுக்குரிய நூல்களைத் தெரிவு செய்தது. அவர்களின் பரிந்துரை அடங்கிய அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.
விருதுகளை வழங்கும் விழா டிசம்பர் மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெறவிருக்கிறது. அதனை ஒட்டி கருத்தரங்கு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைகளை முனைவர் சீதாலட்சுமி, முனைவர் சு. கௌசல்யா, திருவாட்டி வீர. விஜயபாரதி ஆகியோர் படைப்பார்கள். கருத்தரங்கிலும் விருது வழங்கு விழாவிலும் கலந்துகொள்ள விரும்புவோர் கலந்து கொள்ளலாம்.
நா. ஆண்டியப்பன்
தலைவர்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
தேர்வுக்குழு அறிக்கை
மக்களை உயர்திணை என்று சுட்டியும் இலக்கிய வாழ்வியலை அக, புறத் திணைகளாகப் பகுத்தும் திணை மரபு கண்ட தமிழினம் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளால் உயர்திணை, அஃறிணை கடந்து உணர்ச்சிகளோடு போராடும் எந்திர மயமாகி முதல், கரு, உரிப்பொருள்களும் விரவிக் கலந்து மயங்குமாறு புலம்பெயர்ந்து அகத்தும், புறத்தும் அலைவுறுதலை இரு தமிழ்ப்பெண்களின் ஊடாக ஜெயந்தி சங்கர் தம் புதினத்தில் நுட்பமாகச் சித்திரித்துள்ளார் இப்புதினத்திற்குத் “திரிந்தலையும் திணைகள்” என்று பெயரிட்டிருப்பது ஒன்றே ஆசிரியரின் வாழ்வியல் நோக்கத்திற்கு மொழித்திற நுட்பத்திற்கும் போதிய சான்றாகும். 21-ஆம் நூற்றாண்டின் தலைவாயிலில் தோன்றிய இப்புதினம் ஒரு கால கட்டத் தமிழர் வாழ்வின் உயிர்ப்புள்ள பதிவாக காலத்தை விஞ்சி இலக்கிய வரலாற்றில் நிலை பெறும். எனவே இவர் “கரிகாலன் விருதுக்கு” மிகவும் ஏற்றவர் எனத் தேர்வுக்குழு பரிந்துரைக்கிறது.
திவாகர்
பழந்தமிழர் உணவுகளில் கிழங்கு வகைகள் அதிகம் உண்டு. அப்படிப்பட்ட கிழங்குவகைகளில் பனங்கிழங்கு வகைகள் சிறப்பு வாய்ந்ததாகும். அதிலும் முற்றிய பனங்கிழங்கு என்பது வாய்பிளந்து வரும்போது அதன் சுவை மிக அருமையாக இருக்குமாம். அப்படிப்பட்ட முற்றிய வாய் பிளந்த பனங்கிழங்குகளை விவசாயி ஒருவன் தன் அரசனுக்குக்கொடுப்பதற்காக அரச சபைக்கு வருகிறான். சரி, ஏதோ சுவையாக பனங்கிழங்கு வருகிறது.. வாங்கிப் போட்டுக்கொண்டு நேரம் கிடைக்கும்போது சாப்பிட்டுப் போகவேண்டியதுதானே..ஆனால் இந்த ராஜாதான் தமிழ் விரும்பும் ராஜா ஆயிற்றே.. விட்டு விடுவானா அப்படியே.. உடனே தன் கவிஞர் பெருமக்களைக் கூப்பிட்டு அந்த வாய் பிளந்த பனங்கிழங்குக்கு உவமையாக ஒரு தமிழ்க் கவிதை பாடச் சொல்லிக் கேட்டுள்ளான்.
இந்த புலவர் பெருமக்களே ஒரு மாதிரியானவர்கள் போலும். நக்கீரன் வழி வந்தவர்கள்.. அதுவும் தமிழ்ப் புலவர்களல்லவா. இவர்களுக்கென கற்பனை வந்து. இவர்களாக பாடினால்தான் உண்டு. ஒருவேளை சந்திரனை, சூரியனை, அரசிளங்குமரியின் கண்களை உவமையாகப் பாடு என்றால் சபை களை கட்டியிருக்குமோ என்னவோ.. . போயும் போயும் ஒரு விவசாயி கொண்டு வந்த வாயைப் பிளந்த பனங்கிழங்குக்கு உவமை வேண்டுமாம்…தம்மால் முடியாது என்பதை சொல்லாமல் சொல்லி அந்த சபையில் மௌனம் காத்தனர். மன்னனுக்கும் கோபம் வந்தது.. தனக்கென ஒரு கவிதை கேட்டால் பாடமாட்டாத இவர்களெல்லாம் என்ன புலவர்களோ.
சத்திமுத்திப் புலவர் என்பவர் சோழநாட்டைச் சேர்ந்தவர். பாவம் வறுமையில் வாழும் இந்த புலவர் தன் புலமைக்கு யாராவது பரிசு தரமாட்டார்களாவென ஊர் ஊராக திரிந்து களைப்பால் இந்த அரசன் ஆளும் நாட்டுக்கு வருகிறார். இரவு வேளை.. ஒரு வீட்டின் முற்றத்தில் படுக்க இடம் கிடைக்க அங்கே படுத்துக்கொண்டு இரவைக் கழிக்க நினைப்பவர் கண்களுக்குப் பக்கத்தில் ஒரு நாரைப் பறவையும் இவருக்கு துணையாக அந்த முற்றத்தில் இருப்பது தெரிகிறது. அந்த பறவையை தன் மனைவிக்கு தூது செல்லப் பணிக்கிறார். தன் வீட்டில் தனக்காகவும் தான் கொண்டுவருவதாக சொல்லியிருக்கும் செல்வத்துக்காகவும் காத்துக் கொண்டிருக்கும் மனைவியிடம் தன் நிலையை எடுத்துச் சொல்லச் சொல்லிப் பாடுகிறார்.
’நாராய் நாராய் செங்கால் நாராய்;
பழம்படுபனையின் கிழங்கு பிளந்தென்னப்
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்’ என்று ஆரம்பித்து கவிதை படிக்கிறார்.
அவரது அதிர்ஷ்டம் அன்று இரவு சோதனைக்காக மாறு வேடத்தில் வந்திருந்த அந்த நாட்டு அரசனின் காதுகளிலேயே இந்தப் பாடல் ஒலிக்க.. (இனிமேல் கதை புரிந்திருக்குமே)
அது சரிதான், இந்தக் கதையை ஏன் சொல்லுகிறேன் என்றால் இந்த வார வல்லமையில் ஒரு அழகான நாரையைப் பற்றிய பாடல் கண்டேன். திரு சச்சிதானந்தம் அவர்கள் தன் குறவன் பாட்டுப் பகுதியில் இந்தப் பாடலை வேறு விதமாக எழுதியிருந்ததும் அந்தப் பழைய நாரைப்பாடல் நினைவுக்கு வந்தது, குறவன் பாட்டு நான் ரசித்துப் படித்து வரும் பாடல்.
வேகவைத்துத் தோலுரித்து, நுனிதொடங்கிப் பாதிவரை
பிளந்தபின்பு, நடுத்தண்டை நீட்டி நிற்கும்,
பேரலகைப் பிளந்து நாநீட்டி நிற்கும்!
இந்தப் பாடல்கள் முழுவதையும் படித்த பிறகு அவரைப் பாராட்டுவது நல்லது என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் நடுவில் இந்த நாரை வந்து ‘காலத்தை ஏன் வீணடிக்கிறாய் என்று கேட்பது போல பட்டது. அதுவும் மிகவும் பிடித்த சத்திமுத்திப் புலவர் பாடிய பாடல் போல பட்டதால் அவரை மிகவும் பாராட்டி இந்த வார வல்லமையாளர் விருது வழங்குகிறோம். திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு வாழ்த்துகள்.
கடைசி பாரா: திரு வெ. கோபாலனின் பட்டினத்தார் பாடல்களிலிருந்து
மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே – நாதா
இருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா.
சுபாஷிணி ட்ரெம்மல்
டான் ப்ரவுனின் ‘டாவின்சி கோட்’ படம் பார்த்த பலருக்கு ரோபர்ட் லேங்க்டன் பாரிஸுக்கு வந்து முதலில் செல்லும் அந்த மாபெரும் அருங்காட்சியகக் கட்டிடம் ஞாபகம் இருக்கலாம். இப்படத்தில் ஏறக்குறை இறுதிக் காட்சிகளில் வருகின்ற ஒரு கட்டிடத்தின் முன்புறத்தில் கண்ணாடியால் ஆன ஒரு பிரமிட் முன்புறத்தில் அமைந்திருப்பது போல இருக்க, அதனை வியப்புடன் பார்த்து தான் தேடிக் கொண்டிருக்கும் பொருள் அங்குதான் இருக்கின்றது என நினைத்துக் கொண்டு லேங்டன் மலைத்துப் போய் நிற்கும் காட்சியையும் பலர் இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கலாம். உங்கள் அனைவரையும் இந்த மாபெரும் அருங்காட்சியகத்துக்குத்தான் அழைத்துச் செல்லவிருக்கின்றேன்.
லூவ்ரெ அருங்காட்சியக வளாகம் (2010)
652,300 அடிப்பரப்பில் ஒரு கட்டிடம். அப்படியென்றால் எவ்வளவு விரிவான ஒரு கட்டிடம் இது என்பதை கற்பனை செய்து பாருங்கள். உலகின் மிகப் பிரசித்தி பெற்ற, அதிகம் வருகையாளர்களைச் சந்திக்கும் ஒரு அருங்காட்சியகம் லூவ்ர என்பதும் ஒரு சிறப்புச் செய்தி. http://en.wikipedia.org/wiki/List_of_the_most_visited_museums_in_the_world விக்கிபீடியாவின் இப்பக்கத்தின் நிலவரப்படி, உலகின் மிக அதிகமாக வருகையாளர்கள் வந்து செல்லும் அருங்காட்சியகத்தில் முதலிடம் பெறும் அருங்காட்சியகமாக இது திகழ்கின்றது. வருகையாளர் பட்டியல் குறிப்புப்படி வருடத்திற்கு 8 மில்லியன் வருகையாளர்களைச் சந்திக்கும் ஒரு கட்டிடம் இது என்றால் இதன் பெருமையை ஓரளவு ஊகித்து அறிந்து கொள்ளலாம் அல்லவா?.
லூவ்ரெ அருங்காட்சியகத்துக்கு 2010ம் ஆண்டில் முதன் முதல் செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. ஆனால் சென்ற போது மதியமாகியிருந்ததால் முழுமையாக இந்த அருங்காட்சியகத்தை நான் பார்க்க முடியவில்லை. இரண்டறை மணி நேரங்கள் மட்டுமே இந்த மாபெரும் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தில் செலவிட முடிந்தது. முழுமையாக மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும். அதற்கு ஒரு முழு நாள் நிச்சயமாக ஒதுக்கத்தான் வேண்டும். காலையிலிருந்து மாலை வரை இங்கு இருந்தால் தான் அனைத்தையும் பார்க்க முடியும். அது கூட போதாதோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
நுழைவாயிற்பகுதி (2010)
லூவ்ரெ கட்டிடத்தைப் பற்றிய ஒரு அறிமுகம்.
இவ்வருங்காட்சியகம் செவ்வாய்க்கிழமை தவிர்த்து ஏனைய நாட்கள் காலை 9:30 லிருந்து பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கமாகிய http://www.louvre.fr/en சென்று எந்த நாட்களில் எத்தனை மணி வரை திறந்திருக்கும் என்ற விபரங்களை அறிந்து கொண்டு உங்கள் பயணத்தை முடிவு செய்துகொள்ளலாம். இதே வலைப்பக்கத்தில் அவ்வப்போது நடைபெறும் கண்காட்சிகள் பற்றிய விபரங்களும் இந்த அருங்காட்சியகம் பற்றிய தகவல்களும் நிறைந்திருக்கின்றன.
லூவ்ர அருங்காட்சியகத்தின் உள்ளே உள்ள கலைப்பொருட்களை காண்பதற்கு முன்னர் இந்தக் கட்டிடத்தைப் பற்றி ஓரளவு அறிமுகம் தருவதும் தேவை என்று நினைக்கின்றேன். இன்று அருங்காட்சியகமாக இருக்கும் இக்கட்டிடம் அடிப்படையில் 2ம் பிலிப்ஸ் 12ம் நூற்றாண்டில் கட்டிய ஒரு அரண்மனையாகும். தற்போது இருக்கும் முழு கட்டிடமாக அது ஆரம்பத்தில் இல்லை. 17ம் நூற்றாண்டில் பல புதிய பகுதிகளை மன்னர் 14ம் லூய்ஸ் இணைத்து விரிவாக்கினார். இவரது காலத்தில் தான் இந்தக் கட்டிடம் அரச குடும்பத்தின் அரும்பொருட்களைக் காட்சிக்கு வைக்கும் ஒரு அருங்காட்சியகமாக உருவெடுத்தது. பின்னர் ப்ரெஞ்ச் புரட்சியின் போது இக்கட்டிடம் பொதுமக்களுக்கான அருங்காட்சியகமாக உருவாக வேண்டும் என்று முடிவாகியது.
அருங்காட்சியகமாக 1793ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் திகதி 537 ஓவியங்களுடன் இக்கட்டிடம் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது. நெப்போலியனின் காலத்தில் மேலும் பல அரிய பொருட்கள் இங்கே சேர்க்கப்பட்டன. ஆகையினால் அக்காலகட்டத்தில் இந்த அருங்காட்சியகம் நெப்போலியன் அருங்காட்சியகம் என்ற பெயருடனேயே விளங்கியது. நெப்போலியன் பிற நாடுகளிலிருந்து கொண்டு வந்த பொருட்களை இந்தக் கூடத்தில் வைத்து தனது நாட்டிற்குப் பெறுமை தேடிக்கொண்டார். மட்ரிட்டில் உள்ள அரச மாளிகையின் அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் வெள்ளிப் பாத்திரங்களின் தனிக்காட்சிப்பகுதி உள்ளது. அங்கு சென்று வந்த போது நான் வாசித்து அறிந்து கொண்ட ஒரு வாசகம் தான் இப்போது எனக்கு ஞாபகம் வருகின்றது. போர்காலத்தில் ஸ்பெயினில் நெப்போலியனும் அவன் படைகளும் ஸ்பெயின் அரச மாளிகையிலிருந்து பல வெள்ளிப் பொருட்களை சூரையாடிச் சென்றனராம். அந்த வெள்ளிப் பாத்திரங்களை உருக்கி போருக்குத் தேவையான பொருளாதாரத்தை பலப்படுத்தினராம். இப்படி போரினால் இழந்த பல அரும் பொருட்கள் பற்றிய கதைகள் அவ்வப்போது நாம் அறிவது தானே!
அருங்காட்சியகத்தின் உட்பகுதி வளாகம் (2010)
பேரரசர்கள் 18ம் லூய்ஸ், 10ம் சார்ல்ஸ் காலத்திலும் தொடர்ந்து பல விலைமதிப்பற்ற பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இணைந்தன.
தற்போதைய நிலவரப்படி ஏறக்குறைய 35,000 காட்சிப் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்திருக்கின்றன. இக்காட்சிப் பொருட்கள் பலதரப் பட்டவை. எகிப்திய நாகரிகத்தின் சான்றுகளின் காட்சிப் பொருட்களுக்காக ஒரு தனிப்பகுதி உள்ளது. கிரேக்க நாகரிகத்தின் காட்சிப் பொருட்களுக்காக ஒரு தனிப்பகுதி; இஸ்லாமிய காட்சிப் பொருட்களுக்காக ஒரு தனிப் பகுதி; சிற்பங்களுக்காக ஒரு பகுதி; ஓவியங்களுக்காக ஒரு பகுதி இப்படி பலப் பல பகுதிகள். அனைத்து பகுதிகளுக்கும் நான் செல்லவில்லை. சென்று வந்த பகுதிகளில் என் மனதில் ஆழப்பதிந்த பகுதிகளில் உள்ள அருங்காட்சிப் பொருட்களைப் பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது. அத்தகவல்களில் சில பற்றிய பதிவாக அடுத்த பதிவு அமையும்.
முதலில் நாம் அறை எண் 6க்குச் செல்வோமா? அங்கு தான் டாவின்சியின் மோனா லிஸா இருக்கின்றாள்.
தொடரும்…!
தஞ்சை வெ. கோபாலன்
இந்தப் பகுதியில் மனித இனத்தில் பிரஜோற்பத்தி தொடங்கி, மதலையாகி வளர்ந்து முதிர்ந்து இறுதியில் மூச்சடங்கி தீக்கிரையாகும் வரையிலான நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக யாக்கை நிலையாமை பற்றிச் சொல்லியிருக்கிறார். இந்தப் பகுதியில் அடிகளாரின் சொற்கள் படிக்கச் சற்று அருவருப்பாகத் தோன்றினாலும், அதுதான் முற்றிலும் உண்மை என்பதால் அந்த கசப்பான உண்மையை நம் மனம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
உடற்கூற்று வண்ணம்.
ஒருமட மாதும் ஒருவனுமாகி இன்ப சுகந்தரும்
அன்பு பொருந்தி உணர்வு கலங்க ஒழுகிய விந்து
ஊறுசுரோணித மீது கலந்து 1.
பனியிலொர்பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்துபுகுந்து
திரண்டு பதுமவரும்பு கமடமிதென்று
பார்வை மெய்வாய் செவி கால்கைகளென்ற 2.
உருவமுமாகி உயிர்வளர் மாதம் ஒன்பதுமொன்றி
நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து 3.
மகளிர்கள் சேனை தரவணையாடை மண்பட வுந்தி
உதைந்து கவிழ்ந்து மடமயில் கொங்கை அமுதமருந்தி
ஓரறிவு ஈரறிவாகி வளர்ந்து 4.
பேதைகள் இருவர் ஆணும் பெண்ணுமாய் இனிமை தரும் சுகானுபவத்தில் திளைத்திருக்க, அன்பு பெருக, உணர்வு மயங்கி, கலவியின் பயனாய் ஆண்மகன் சுக்கிலம் தலைவியின் சுரோணிததில் கலந்ததும்;
இவ்விரு கலப்பில் சுக்கிலம் பனித்துளியின் பாதியளவில் சுரோணிதச் சேர்க்கையால், தாமரை மொட்டைப் போலவும் பின் ஆமை வடிவம் கொண்டும் வளர்ந்து பெரிதாகி கண், காது, மூக்கு, கால், கைகள் இவைகளெல்லாம் சிறிது சிறிதாகப் பிரிந்து வளர்ந்து;
சிசுவின் உருவம் வளர்ந்து ஒன்பதும் ஒன்றுமாய் மாதங்கள் முடிந்ததும், தலைவி வேதனையுற, வருந்தியந்த சிசுவும் மண்ணில் விழ, கூடியிருந்த சுற்றம் அந்த சிசுவிற்கு நாள், நட்சத்திரம் கோள்களைக் கணித்திட;
கூடியிருந்த மாதரார் கூட்டம் குழந்தையை எடுத்துச் சீராட்டி தூளியிலிட்டுத் தாலாட்ட, சிறுகச் சிறுக அந்தச் சிசு கால் கைகளை உந்தி விளையாடிப் புரண்டு படுத்து தவழ்ந்து, தாயின் அரவணைப்பில் தாய்ப்பால் அருந்தி ஓரறிவு, ஈரறிவு என வளர்ந்து வரும் காலத்தில்;
ஒளிநகையூற இதழ் மடவாரும் உவந்து முகந்திட
வந்து தவழ்ந்து மடியிலிருந்து மழலை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப; 5.
உடை மணியாடை அரைவடமாட உண்பவர்
தின்பவர் தங்களொடு உண்டு தெருவிலிருந்து புழுதியளைந்து
தேடிய பாலரொடோடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே 6.
உயர்தரு ஞான குரு உபதேசமும் தமிழின் கலையும்
கரைகண்டு, வளர் பிறையென்று பலரும் விளம்ப
வாழ் பதினாறு பிராயமும் வந்து 7.
மயிர்முடி கோதி அறுபத நீல வண்டிமிர் தண்தொடை
கொண்டை புனைந்து, மணி பொனிலங்கு பணிகளணிந்து
மாகதர் போகதர் கூடி வணங்க 8.
சின்னஞ் சிறியதாய் மல்லிகை மொட்டாய் பற்கள் வெளிவர, மெல்லிய இதழில் மடவார் முகர்ந்து முத்தமிட, குழந்தையும் மகிழ்ந்து அவர்பால் செல்ல, தாய்மடியேறி மழலைகள் மொழிய, ‘வா’ எனவும் ‘போ’ எனவும் சொற்களைப் பேசித் தொடர்ந்து ‘அப்பா’ என்றும் ‘அம்மா’ என்றும் கொஞ்சி அழைக்க;
பட்டாடைகளும், பன்மணி மாலையும், தங்கத்தில் அரைஞாண் இடையினில் ஆட, உண்பவர், தின்பவர் செயலைப் பார்த்துத் தானும் உண்டும், பருகியும், தெருவில் ஓடி, புழுதியில் அளைந்து, தன்வயதொத்த பாலரைத் தேடி ஓடி விளையாடி, ஐந்து வயதாக ஆன பிறகு;
தகுதியுள்ள குருவிடம் சேர்ந்து, ஞானோபதேசமும் நல்ல தமிழ்க் கல்வியும், சாத்திர நீதியும் கசடறக் கற்று, நூல் பல தேர்ந்து நன்கு பயின்று, வளர்பிறை போலவே நாளும் வளர்ந்து, பதினாறு வயதினை அடையும் போதினில்:
நீண்ட கூந்தலைச் சீவி முடிந்து கொண்டைகள் இட்டு, ஆறு கால் கொண்ட நீலநிற வண்டுகள் மொய்க்கும் நல்ல மலரில் மாலைகள் கட்டி அணிந்து, மணிகள் பொதிந்த பொன் அணிகளை அணிந்து பார்ப்பவர் அனைவரும் கூடிநின்று பாராட்டி நிற்க;
மதன சொரூபன் இவன் என மோக மங்கையர் கண்டு மருண்டு
திரண்டு, வரிவிழி கொண்டு சுழிய எறிந்து
மாமயில் போல் அவர் போவது கண்டு; 9.
மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல
சந்திகழ் கொங்கை மருவ மயங்கி இதழமுதுண்டு
தேடிய மாமுதல் சேரவழங்கி; 10.
ஒருமுதலாகி முதுபொருளாய் இருந்த தனங்களும்
வம்பில் இழந்து,மதன சுகந்த விதனமிது என்று
வாலிப கோலமும் வேறு பிரிந்து; 11.
வளமையும் மாறி இளமையும் மாறி வன்பல் விழுந்திரு
கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரை திரை வந்து
வாத விரோத குரோதம் அடைந்து
செங்கையினில் ஓர் தடியுமாகியே 12.
மன்மதனையொத்த அழகுடையவனாக இவன் இருக்கிறானே என மோகங் கொண்ட மங்கையர்கள் மனம் மயங்கி, செவ்வரி படர்ந்த கண்களால் பார்த்து மருண்டு அழகிய மயில்கள் பவனி செல்வது போல போகும் அவர்கள் செல்லும் காட்சியும்;
தன்னைப் பார்த்து மயம் மயங்கிச் செல்லும் அந்த மாதைப் பின்பற்றிச் சென்று, அவளது கொங்கைகள் தன் மார்போடு இழைய மருவிக் கொண்டு, இதழோடு இதழ் வைத்து இன்பம் தேடி, அவள் விரும்பியவாறு இன்பமளித்து;
முன்னோர்கள் தேடிவைத்த செல்வங்களையெல்லாம் திரட்டி, தான் சேர்த்தவற்றையும் இப்படி இன்ப நாட்டத்தில் கொண்டு செலுத்தி, மதன சுகங்களின் மிகையால் செல்வம் கரைந்து, உடலும் மெலிந்து வாலிபத் தோற்றம் மாறி கிழத்தனம் எய்தி, மிகுந்த சுகத்தின் பலன் இது என பிறர் பரிகசிக்க;
செல்வம் அழிந்து, இளமை ஒழிந்து, பற்கள் விழுந்து, கண்கள் இருண்டு, வயதின் முதிர்ச்சியால் தலை நரை படர்ந்து, தோல் சுருங்கி, ஆத்திரமும், பொறாமை குணங்களும் பெற்று நடுங்கும் கரங்களில் ஒரு தடியையும் ஊன்றிக் கொண்டு;
வருவது போவது ஒரு முதுகூனுமந்தி யெனும்படி
குந்தி நடந்து, மதியும் அழிந்து, செவி திமிர் வந்து
வாயறியாமல் விடாமல் மொழிந்து; 13.
துயில் வரு நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சும்
உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு; 14
கலியுக மீதில் இவர் மரியாதை கண்டிடு மென்பவர்
சஞ்சலம் மிஞ்ச, கலகலவென்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து; 15
தெளிவுமிரா உரைதடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்து மருண்டு, தடமும் உலனிது மிகவும் மலைந்து
தேறி நல்லாதர வேதென நொந்து; 16
கிழக்குரங்கொன்று தன் கூன் முதுகைச் சாய்த்துக் கொண்டு அங்கும் இங்குமாய் திரிகின்ற காட்சிபோலவும், அறிவு கெட்டு, காதும் செவிடாகி அடைத்துக் கொண்டும், அடுத்தவர் சொல்வதைக் கேட்க முடியாமலும், வாயில் வந்ததையெல்லாம் விடாமல் உளறிக் கொட்டிக் கொண்டு;
இரவு ஆனதும் தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வருகின்ற நேரம்; அந்த நேரம் பார்த்து விடாமல் இருமல் வந்து தூக்கத்தைக் கெடுக்கும்; தொண்டையும், நெஞ்சும் இருமியதால் வறண்டு போகும், தூக்கத்தில் துகில் போன இடம் தெரியாமல் விலகிக் கிடக்கும்; இவற்றைக் கண்டு பெண்டிர் வருந்துவர், இளையோர் ஏகடியம் பேசுவர்;
இது கலியுகம். யுகதர்மங்கள் மாறுபடும். இந்த யுகத்தில் இதுபோன்ற நிலைமையை அடைந்தவர்களைக் கண்டு பரிதாபப் படமாட்டார்கள், பெரிசு படும் பாட்டைப் பாருங்கள் என்பர், மனது வருத்தப்படும், நம்மை அறியாமலே நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் மலமும், சலமும் தானே கழிந்து பார்ப்பவர் முகம் சுளிக்க வைத்துவிடும்’
மனத்தில் தெளிவு இல்லாமையால் பேசும் சொற்களிலும் தெளிவு இருக்காமல் வார்த்தை தடுமாறும்; சிந்தை வரண்டு விடும், நெஞ்சம் உரைந்துவிடும், மனோதிடமும் குலைந்துவிடும், நமக்கு இனி உறுதுணை யார் என்பதை மனம் எண்ணத் துவங்கிவிடும்.
மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்
என்று தெளிந்து இனியென கண்டம் இனியென தொந்தம்
ஏதினி வாழ்வு நில்லாது இனி நின்ற; 17.
கடன்முறை பேசும் என உரை நாவு முழங்கி விழுந்து
கைகொண்டு மொழிந்து கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து
பூதமு நாலு சுவாசமும் நின்று –
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே. 18.
வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு
குஞ்சியும் விஞ்ச, மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போய் யம தூதர்கள் வந்து; 19
வலைகொடு வீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து
குனிந்து அழ நொந்து, மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலமறிந்து 20
படைப்புக் கடவுளாம் பிரம்ம தேவன் எழுதிய பிரம்ம லிபியின் படி வாழ்க்கையில் எத்தனை கண்டங்களொ அத்தனையும் நினைந்து, இனியும் கண்டங்கள் உண்டோ, விதியின் நியதிப்படி என்னென்ன நேருமோ, இனி வாழ்வு என்ன வாகுமோ, நிலைக்குமோ என்றெல்லாம் சிந்தித்து;
வாழ்க்கை லட்சியங்கள், கடமைகள் என்றெல்லாம் வாழும் முறைகளை வக்கணையாய்ப் பேசுகின்ற நாவு சோர்ந்து வீழ்ந்து பேசமுடியாமல் போய்; கைகளால் சைகை செய்து பிறருக்கு உணர்த்தி, கடின சோறு உண்ண முடியாமையால் கஞ்சி குடித்து, குடித்த கஞ்சியும் கடைவாய் வழியே தவறிச் சிந்தி வழிய, உள்செல்லும் பிராணவாயு குறைய, சப்த நாடிகளும் ஒடுங்கிக் கிடக்க, பேசமுடியாமல், மூச்சு விடவும் முடியாமல் மனம் கலங்கிடும் காலத்தில்;
வளர்பிறைச் சந்திரனையொத்த கடைவாய்க் கோரைப் பற்களோடும், தீப்பற்றி எரிவதைப் குத்திட்டு நிற்கும் செம்பட்டைத் தலைமுடியும், அதில் சடைகள் நிரம்பியிருக்கவும், கடுத்த மனமும், இருள் போல விளங்கும் கருத்த மேனியும், பெரிய மலைபோன்ற சரீரமும் கொண்ட எம தூதர்கள் வந்து;
பாசக் கயிற்றை வீசி உயிரைக் கட்டி இழுத்துக் கொண்டு போகும்போது, பிள்ளைகள் வந்து ஐயோ போயினரே என்று கதறி அழுது வருந்த, மடியில் விழுந்து மனைவி புலம்ப, ஏனையோர் அந்த துக்க சூழ்நிலைக்கேற்ப வருந்தி நிற்கின்ற நேரத்தில்;
பழையவர் காணும் எனும் அயலார்கள் பஞ்சு பறந்திட
நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்தவே
பிணம் வேக விசாரியும் என்று; 21.
பலரையும் ஏவி முதியவர் தாம் இருந்த சவம் கழுவும்
சிலரென்று, பணி துகில் தொங்கல் களபம் அணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை; 22.
வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர்
குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வு எ(ன்)ன வாழ்வென நொந்து; 23.
விறகிடமூடி அழல்கொடுபோட வெந்து விழுந்து
முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறுமிலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே. 24.
நெடுநாளைய மனிதன் இவன் என்று பேசிக் கொண்டு அண்டை அயலார் ஓடிவந்து பார்த்து, அருகில் இருந்தவர்களைப் பார்த்து வருபவர்கள் உட்கார பந்தல் போடுங்கள், பறை ஓசை எழுப்ப ஆட்களைக் கூப்பிடுங்கள், பிணத்தைக் கொண்டுபோய் எரித்திட ஆவன செய்யுங்கள் என்று சொல்லி;
பலபேருக்குச் சொல்லி அனுப்பி, பெரியவர்கள் பிணத்துக்கு எண்ணெயி இட்டுக் காப்புச் செய்து, தண்ணீர் விட்டுக் கழுவுங்கள் என்று சொல்லி, பொன்னால் ஆன அணிகலன், புதிய துணி, பூமாலை, வாசனைப் பொடி அத்தனையும் போட்டுத் தங்கள் பாசத்தை வெளிப்படுத்தி, நாற்றமெடுக்கக் கூடிய இந்த சரீரத்தை;
செய்ய வேண்டிய முறைப்படி காரியங்களைச் செய்து பிணத்தை எடுங்கள் என்று பெரியவர்கள் சொல்ல, நல்ல உடல்வாகு கொண்ட நால்வர் வந்து எடுத்துத் தங்கள் தோள் மீது சுமந்து, வேகமாய் நடந்து, சுடுகாட்டை அடைந்து, “என்னடா மனித வாழ்க்கை’ என்று அப்போது தோன்றிய சுடுகாட்டு வைராக்கியம் எனும் ஞானத்தால் மனம் நொந்து கூறி;
நல்ல காய்ந்த விறகு, மாட்டுச் சாணத்தால் ஆன விராட்டி இவைகளைக் கொண்டு வந்து அடுக்கி, அதன் மீதில் பிணத்தைக் கிடத்தி, அதன் நெஞ்சில் தீமூட்டி, பிணம் எரிந்து வெந்திடும் போது அதன் தசைகளும் கொழுப்பும் சரிந்து விழுந்ததை பிணம் எரிப்போன் மீண்டுமெடுத்து எரித்தும், எலும்புகள் கருகிப் பின் சுட்ட சாம்பலாய்ப் போய் ஒருப்டிக்குள் அடங்கிடும் வண்ணம் அமைந்த இந்த அரிய சரீரத்தை மாண்புடையது என்று பெரும் பொருட்டாக எண்ணி இறுமாந்திருந்த இந்த அடிமையை இப்போதாவது கனிவு கொண்டு ஆண்டு அருளவேண்டும் ஐயனே!!
(இன்னும் வரும்)
மலர் சபா
புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை
வயல்களில் களை பறிப்பவர்கள்
குவளை மலர்ச்செடிகளைக்
களைகளெனப் பறித்து
வரப்பு வழிகளில் போட்டிருப்பர்.
அப்பூகளின் தேனை உண்டு
சோர்வுற்று மயங்கி
அப்பூகளுக்குள்ளேயே கிடக்கும் வண்டுகள்
நாம் நடக்கையில் நம் பாதங்களில் மிதிபட்டு
இறக்கவும் நேரிடும்.
ஓங்கி அலை வீசும்
வாய்க்கால் வழியாகச் செல்லலாம் என்றாலோ
ஆங்கே
அழகாய் மேனியில் புள்ளிகள் உடைய
நண்டுகளும் நத்தைகளும்
சிக்கிச் சிதைய நேரிடும்.
நாம் கால்களில் மிதிபட்டு இறக்கவும் நேரிடும்.
அதனால் நமக்குக் கொலைப்பாவம் நேரிடும்.
அப்பாவத்தைத் தாங்குவது
நமக்கு மிகவும் அரிதாகும்.
வயல்வழி, சோலைவழி தவிர
மதுரை செல்வதற்கு வேறு வழியே இல்லை.
நெளிந்த கரிய தலைமுடியை உடைய கோவலனே!
நீ உன்னை விரும்பிய அன்பு மனைவியுடன்
செல்லும் போது
எதிர்ப்படும் இடர்களைக்
குறிப்பால் உணர்ந்து
அக்குற்றங்கள் நேராத வண்ணம்
அவளைப் பாதுகாப்பாயாக!
என்று கவுந்தியடிகள் கூறினார்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 86- 97
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html
‘வியர்வையூர்’ எனும் தொடர் கவிதை நடையில் அமைந்த காவியம்.. சிங்கப்பூரில் வாழ்ந்த பட்டறிவைச் சொல்லும் பெட்டகம். எதுவுமே கற்பனையில்லை. மொழிவேண்டுமானால்அழகைக் கூட்டியிருக்கலாம். எங்கேயும் எதையும் கூட்டிச் சொல்லவில்லை. ஓரு தமிழ்க் குடிமகனின் சிங்கப்பூர் வாழ்க்கை இது. அனைத்தும் அவனுடையதல்ல. அவனைச் சேர்ந்தவர்களின் பட்டறிவும் இதில் வலம் வருகின்றன. ஒட்டுமொத்த பட்டறிவின் பெட்டகம்..
அன்புடன் பிச்சினிக்காடு இளங்கோ
அந்த வீடுகளில்
இப்போது
இரவிலும் வெளிச்சம்
ஒவ்வொருவர்
முகத்திலும் வெளிச்சம்
ஒவ்வொருவர் முகத்திலும்
குதித்து விளையடும்
குதூகலம்
அதாவது இப்போது
அங்கே
இல்லத்திலும் வெளிச்சம்
உள்ளத்திலும் வெளிச்சம்
ஒவ்வொரு வீட்டிலும்
ஒலிக்கிறது தொலைபேசி
இது
பழையசெய்தி
இப்போது
ஒவ்வொருவர் கையிலும்
கைப்பேசி
தீர்க்கப்படாத தேவைகள்
குறைந்து
கவலைப்படாத ஒரு காலம்
கைக்குவந்திருக்கிறது
கீற்றுக்குடிசைகள்
மண்சுவர் வீடுகள்
பனைஓலைக்கூரைகள்
சாணத்தில் மெழுகி
தீத்துக்கல்கொண்டு தீட்டி
தீட்டி
சலவைக்கல்போல்
முகம்பார்க்கும் தரைகள்
எல்லாம் இப்போது
பளிங்குகளாக பரிணாமம்
மலையில் கிடைத்த
கிரானைட்களாக அலங்காரம்
மாட்டுத்தொழுவமும்
வீடும்
என்றிருந்த நிலைமாறி
ஒவ்வொருவரும்
வீடுபேறு பெற்றநிலை
தெருவில் எங்கும்
குடிசைகள் இல்லை
என்பிள்ளைப்பிராயத்தில்
ஊருக்குள்ளே
ஒழுங்கை இருந்தது
இப்போது எல்லாம்
தார்சாலைகள்
சிமெண்ட் சாலைகள்
கரிபிடித்த
வறுமைப்பானைகளை
உடைத்துவிட்டு
வெள்ளிப்பாத்திரங்கள்
குடியேறிவிட்டன
எப்போதும் (ever silver)
வெள்ளிகளுக்குத்தான்
இப்போது
வீட்டில் இடம்
கொஞ்சம்
பொன்நகைகளும் வந்து
கழுத்தில் கனத்தன
காய்ந்த முகங்களிலும்
புன்னகைக்கூடின
ஆடைகளிலும் தெரிந்தன
அந்த அந்நியநாட்டு
அடையாளங்கள்
காலணி
சோப்பு
சீப்பு
கண்ணாடி எல்லாம்
இப்போது
வெளிநாட்டினுடையது
குறிப்பாக
அந்த நாட்டினுடையது
இந்தியாவில்
இல்லாததில்லைதான்
ஆனால்
இந்தியா
வீட்டில் இல்லைதான்
இந்தியாவில்
அவன்
வீடு இருந்தது
அவன் வீட்டில்
இந்தியா இல்லை
வாசனை திரவியங்கள்
வானொலிகள்
ஒலிப்பதிவுப்பெட்டிகள்
தொலைக்காட்சிப்பெட்டி
கடிகாரம்
பேனா
மூக்குக்கண்ணாடி
படுக்கும் பாய்
கோடரி மார்க்
டைகர் பாம் மருந்துகள்
ஒடிகோலன்
கிளிதைலம்
மீசைக்காரத்தைலம் போன்ற
முன்னெச்சரிக்கை மருந்துகள்
கைலிகள்(லுங்கிகள்)
கைவிளக்குகள்
கைக்குடைகள்
கைக்குட்டைகள்
ரொட்டிகள்
படுக்கை விரிப்புகள்
துண்டுகள்
மான்மார்க் குடைகள்
வெந்நீர் குடுவைகள்
சவரப்பெட்டிகள்
முகப்பூச்சுத்தூள்கள்
தொடரும்

மேஷம்: வியாபார வட்டத்தில் புழங்குபவர்கள் சொல்லோடு தங்கள் செயலும் இணைந்தி ருக்குமாறு பார்த்துக் கொண்டால், நல்ல பெயர் நிலைத்திருக்கும். நீங்கள் நல்லது சொன்னா லும் அது மற்றவர்க்கு தப்பாய்த் தோன்றும் என்பதால், பெண்கள் இயன்ற வரை மௌனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் பணிவாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வது புத்திசாலித்தனம். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளை சுருக்குங்கள். மன அளைச்சலும், கடன் தொல்லையும் கணிசமாகக் குறையும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் நேரம் தவறாமை யைக் கடைபிடித்தால், பல சலுகைகள் வந்து சேரும். பணியில் உள்ளவர்கள், கொடுக்க கணக்கு வழக்குகளை கவனமாய் சரிபார்த்தல் அவசியம்.
ரிஷபம்: கலை நயத்துடன் செய்யும் காரியங்களால், அலுவலக விழா ஆகியவற்றில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொள்வீர்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் பிரச்னைக் குரிய விஷயங்களில் இருக்கும் சட்ட சிக்கல்களை உணர்ந்து முடிவெடுப்பது நல்லது. பெண்கள் வரவு, செலவு இரண்டிலும் கவனமாக இருந்தால், பொருளாதாரம் சறுக்கா மல் இருக்கும். மாணவர்கள் கூட்டாக செயல்படும் போது அடுத்தவரின் கருத்துக் களுக்கு மதிப்பு கொடுத்து செயல்பட்டால், கருத்து வேறுபாடு தோன்றாது. கலைஞர் கள் உடனிருப்பவர்கள் நடுவே வீண் போட்டி மனப் பான்மை, கருத்து பேதம் ஆகி யவை வளர இடம் கொடாதீர்கள். கட்டுக்கோப்பாய் வேலைகளை முடிக்கலாம்.
மிதுனம்: சரக்குகள் தேங்காதவாறு வியாபாரத்தை முடுக்கிவிடும் வியாபாரிகளுக்கு லாபத்தோடு புதிய ஒப்பந்தங்களும் உடன் வந்து சேரும்.பிறர் செய்யும் தவறுக்கு, நீங்கள் பதில் சொல்லும் சூழல் உருவாகும் நிலை இருப்பதால், மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தை-மகள் உறவு நெருக்கமாகும். இதுவரை இருந்த மனத் தாங்கல் நீங்கி, ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வீர்கள். பெண்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்னைகளை, தெளிவுடனும், திறமையுடனும் கையாண்டால் உறவுகளின் ஆதரவு உங்கள் பலமாய் மாறும். ஆன்மீகப் பயணங்களுக்கான அழைப்பு உங்களைத் தேடி வரும்!
கடகம்: இதுநாள் வரை மந்த கதியில் சென்று கொண்டிருந்த வேலை, புதிய வேகத்துடன் நடைபெறுவதால், சுய தொழில் புரிபவர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். கல்விப் பணியில் இருப்பவர்க்கு இது ஏற்ற வாரமாகும். அனுசரித்து நடந்து கொள்ளும் கொள்கை உடையவரின் கூட்டு முயற்சி வெற்றியாய்
முடியும். வியாபாரிகள் எதிரிகளின் செயல்களை கண்காணிப்பது அவசியம். இது வரை தன் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்க்கு பாராட்டு வந்து சேரும். முக்கியமான முடிவு எடுக்கும் தருணங்களில் அவசரப்பட வேண்டாம். சிலர் பழைய நண்பர்களை சந்தித்து பேசி மகிழலாம்.
சிம்மம்: நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் . இளம் வயதினர் புதிய சூழலில் கவனமாகப் பழகுவதோடு யோசித்து செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் தங்கள் நாவன்மையால் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்ற வாரம். வீடு,மனை விற்பனை அவ்வளவு லாபகரமாய் இராது. எனவே பணத்தை அதில் முடக்க வேண்டாம்.
இல்லச்சூழலோடு பணிச்சுமை மோதாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம், பயணம் என்று மகிழ்ச்சியாய் இருப்பார்கள். பணியில் இருப்போர் தன் திறமைக்குரிய வாய்ப்பு வரும் வரை பொறுமை காப்பது அவசியம்.
கன்னி: பெண்கள் பேச்சில், படபடப்பைக் குறைத்து இனிமையைக் கூட்டுங்கள். இல்லறம் நல்லறமாய் திகழும். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடன் பணம் கொடுப்பதை விட, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் இடம், பொருள், ஏவல் தெரிந்து உங்கள் கோரிக்கைகளை முன் வைப்பது அவசியம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமிருக்கும். எனவே செலவுப் பட்டியலை குறைவாக்குங்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் ,சிரமங்களுக்கிடையே வெற்றி காண்பர். சில நேரங்களில் நண்பர்கள் உங்களை முழுமையாய் புரிந்து கொள்ளாமல் செயல்படலாம்.
துலாம்: மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள். கணவன் வழி உறவுகளுக்காக பெண்கள் தங்கள் சேமிப்பை கரைப்பர். கலைஞர்களுக்கு வெளிவட்டாரம் மூலம் மகிழ்ச்சி வரும். கூடவே சுற்றியிருப்பவர் களால் வீண் செலவுகளும் வந்து வந்து போகும். சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், வியாபாரிகள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள்.நிலைமை மீண்டும் சகஜமாகிவிடும். வேலை நிமித்தம் அங்கும் இங்கும் அலைபவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், உங்களின் அன்றாட அலுவல்கள் சீராக நடைபெறும். பொருளாதார வரவால்,நீங்கள் மன உற்சாகத்துடன்
செயல்படலாம்.
விருச்சிகம்: பெண்கள் தங்கள் துணைவரின் உடல்நலத்தில் விசேஷ கவனம் செலுத்தி வந்தால், இல்லப் பணிகள் தடையின்றி தொடரும். மாணவர்கள் சோர்வை விரட்டியடி க்கும் சத்தான பானங்களை குடித்து வந்தால், சிந்தனை வளம் மேலும் பெருகும். வியாபார விஷயங்களில் வெளுத்ததெல்லாம் பால் என்றிருப்பதை தவிர்த்தல் நலம். பணியில் இருப்போர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும்
துடிப்புடன் செயலாற்றுவார்கள். பிள்ளைகளிடம் உங்கள் கருத்துக்களை இதமான முறையில் எடுத்துச் சொன்னால்,அவர்களின் ஒத்துழைப்பையும் பெறலாம். பழைய கடன்கள் அடைவதால், பொருளாதார இறுக்கம் குறையும்.
தனுசு:குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். பிரச்னைகள் சுமுகமாக முடியும். வெளி இடங்களில் தங்கி படிக்கும் மாணவ ர்கள் அவசியமற்ற இரவு நேரப் பயணங்களை தவிர்த்து விடுதல் நலம். கலைஞர்கள் கவனமாக இல்லை என்றால், சிலரின் சூழ்ச்சியால், வரும் வாய்ப்புகள் திசை
மாறலாம். குழந்தைகள் பெறக் கூடிய பெருமையால், உங்களின் பெருமையும் உயரும். அலுவலக கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால், மன இறுக்கமின்றி வேலையில் ஈடுபட முடியும். மற்றவருக்கு ஜாமீன் போடுவதை தவிர்த்துவிடவும்.
மகரம்: குடும்ப உறுப்பினர் உங்களின் திட்டங்களுக்கு, வலிமை சேர்க்க முன் வருவார்கள். பங்குச்சந்தை விஷயங்களில் ஏற்றம், ஏமாற்றம் இரண்டும் கலந்திருக்கும். எனவே பணத்தை முதலீடு செய்யும் முன் யோசனை செய்வது நல்லது. பெண்கள் பேச்சில் கடுமை கலவாதவாறு பார்த்துக் கொண்டால், குடும்ப
உறவுகள் சுமூகமாக இருக்கும்.வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் உள்ள குளறுபடிகளை கவனமாக சரிசெய்தால், அபராதம் செலுத்தவதை தவிர்த்துவிடலாம். வெளியூர் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது. பொறுப்புக்களில் உள்ளவர்கள் கோப்பு களை நன்கு படித்தபின்,கையெழுத்திடுவது அவசியம்.
கும்பம்: சில நேரங்களில் கண் மற்றும் பல்சம்பந்தமான உபாதைகள் உங்கள் இயல்பு வாழ்வை பாதிக்கக் கூடும். எனவே சிறு தொந்தரவுகளை உடன் கவனித்து விடுங்கள். கலைஞர்கள் விழா விருந்து போன்றவற்றில், உங்கள் எல்லையை அறிந்து, நடந்து கொள்வது அவசியம். வியாபாரிகள் எழுத்துப் பூர்வமாகவே ஒப்பந்தங்களை முடிப்பது நல்லது. பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வேலையாட்களை நம்பி முழு பொறுப்பை அளிக்காமல், உங்கள் கவனமும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.பணியில் இருப்போர் வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதால், வாழ்க்கையில் உயரும் வாய்ப்பு உங்களை நாடி வரும்.
மீனம்: நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் . இளம் வயதினர் புதிய சூழலில் கவனமாகப் பழகுவதோடு யோசித்து செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் தங்கள் நாவன்மையால் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்ற வாரம். வீடு,மனை விற்பனை அவ்வளவு லாபகரமாய் இராது. எனவே பணத்தை அதில் முடக்க வேண்டாம்.
இல்லச்சூழலோடு பணிச்சுமை மோதாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம், பயணம் என்று மகிழ்ச்சியாய் இருப்பார்கள். பணியில் இருப்போர் தன் திறமைக்குரிய வாய்ப்பு வரும் வரை பொறுமை காப்பது அவசியம்.
படக்கதை -9
சி. ஜெயபாரதன், கனடா
[சென்ற வாரத் தொடர்ச்சி]
சீதாயணம் படக்கதை
நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா
வடிவமைப்பு : வையவன்
ஓவியம் : ஓவித்தமிழ்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பரிதியைச் சுற்றி உரசி வந்த
பெரிய வால்மீன் ஐசான்
தீக்குளித்துச்
சின்னா பின்ன மானதா ?
செத்துப் போனதா ?
சிதைந்து சிறிதாய் மீண்டதா ?
எரிந்து ஆவியாகிப்
பொன்னொளி வீசிப் புத்துயிர்
பெற்றதா ?
இன்னும் ஓர் நாளில் தெரியும் !
பூதக்கோள் வியாழனைச் சுற்றுவது
ஒற்றை வளையம் !
வியாழக் கோள் ஈர்ப்புத் தளத்தில்
விழுந்த
வால்மீன் சூமேக்கர்-லெவி
தூள், தூளாகி
நீர்க் களஞ்சியம் சிதறிப் போய்
வேர்வை ஆவியானது !
வெடிப்பு முறித்தது
வியாழக் கோள் வளையத்தை !
++++++++
2013 டிசம்பர் முதல் தேதி அண்மைக் கால அறிவிப்பு:
2013 நவம்பர் 28 இல் சூரியத் தணலில் தீக்குளித்த வால்மீன் ஐசான் உயிரோடு மீளவே வில்லை ! வால்மீனின் முக்கால் மைல் வடிவத் தலை முழுதும், முறிந்து, எரிந்து ஆவியாகிப் போய், முடிவில் முகில் மூட்டம் மட்டும் வெளிவருவது நாசாவின் ஸோஹா [SOHO]] விண்ணுளவிக் காமிராவில் தெரிகிறது. வால்மீன் ஐசான் மீண்டெழுந்து புத்துயிர் பெற்று வரும் என்ற உலக விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு பெருத்த ஏமாற்றத்தில் முடிந்தது !
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
https://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
[The Fate of Comet Ison, passing close to the Sun]
http://www.youtube.com/watch?
[What to expect on November 28, 2013 for the Comet Ison -C/2012 S1]
http://spaceinvideos.esa.int/
[Comet Shoemaker Levy colliding with Jupiter]
நாசாவின் பரிதி இயக்க ஆய்வகம் [SDO (Solar Dynamics Laboratory)] நோக்கி வந்த வால்மீன் ஐசான்
2013 ஆண்டு நவம்பர் 28 இல் சூரியனை நெருங்கிச் சுற்றிவரும் வால்மீன் ஐசானைப் பரிதித் தீப்பிழம்புகள் தாக்கிச் சிதைத்து விட்டதா, அல்லது வால்மீன் பிழைத்துக் கொண்டதா என்பது இதுவரை தெரிந்தும், தெரியாமல் உள்ளது. வால்மீன் ஓரளவு சிதைந்து, பேரளவு தப்பிக் கொண்டதாய் நாசாவின் ஒரு செய்தி மூலம் தெரிய வருகிறது. அது உறுதி செய்யப்பட இன்னும் ஒரு நாள் ஆகலாம் என்று அந்த அறிவிப்பு மூலம் அறிய முடிகிறது. வால்மீன் ஐசானைத் தொடர்ந்து நாசாவின் [SDO – Solar Dynamic Observatory)] பரிதி இயக்க ஆய்வகமும், ஈசாவின் [ESA – (European Space Agency) SOHO -(Solar Heliospheric Observatory)] பரிதிக் கோள ஆய்வகமும் கண்காணித்து வருகின்றன. தப்பித் தணலிலிருந்து வெளி வந்த ஐசான் வால்மீன் முன்னை விட ஒளி மிக்கதாய்க் காணப் பட்டது என்று ஒரு தகவல் கூறுகிறது. அதற்குக் காரணம், வால்மீனில் போதிய பிராண வாயும், இரும்பும் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது. ஆயினும் தீக்குளித்த வால்மீன் ஐசானின் வடிவம் சிதையாமல் முழுதாய் உள்ளதா அல்லது சிதறித் துண்டங்களாகிச் சின்னஞ் சிறு வால்மீன் குஞ்சுகளாக மாறி விட்டனவா என்பது இன்னும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.
ஓராண்டுக்கு முன் கண்டு பிடிக்கப் பட்ட வால்மீன் ஐசான் “சூரியனை உரசும் வால்மீன்” [Sun-Grazing Comet] என்று முத்திரை இடப் பட்டது. அதாவது பரிதிக்கு 850,000 மைல் தூரத்தில் சுற்றி நகரும் வால்மீன்கள் இவ்விதம் அழைக்கப் படும். வால்மீன் ஐசான் 730,000 மைல் [1170000 கி.மீ.] தூரக் குற்று ஆரத்தில் [Perihelion] சூரியனைச் சுற்றிப் போய்க் கொண்டிருந்தது. இந்த வால்மீன் தப்பிப் பிழைத்தாலும் மீண்டும் சூரியனைச் சுற்றத் திரும்பாது விரிந்த சுற்றியக்கத்தில் விண்வெளியில் வெகு தூரம் சென்று விடும். இவ்விதம் சூரியனுக்கு வெகு நெருக்கத்தில் உரசிச் செல்லும் வால்மீன்கள் தீப்பிழம்பில் வெந்து முற்றிலும் தகர்ந்து ஆவியாகப் போகலாம். அல்லது ஓரளவு சிதையலாம். அல்லது துண்டு துண்டாகிச் சிறு வால்மீன்களாய் மீளலாம்.
சூரியனை உரசும் வால்மீன்கள் பின்பற்றும் சுற்றுவீதிக்கு “கிரியூட்ஸ் சுற்றுவீதி” [Kreutz Path] என்று பெயரிடப் பட்டுள்ளது. சோஹோ [SOHO] விண்ணுளவி 85% சூரியனை உரசும் வால்மீன்களையே பெரும்பாலும் கண்காணித்து வருகிறது.
2013 நவம்பர் 28 இல் வால்மீன் ஐசான் பரிதிக்கு அருகில் 730,000 மைல் குற்று ஆரத் தூரத்தில் [Perihelion] சுற்றிச் சென்றது. அது சூரியனைச் சுற்றித் திசை மாறும்போது அதன் பளு நெம்பு வேகம் [Momentum MV (Mass X Velocity)] பரிதி ஈர்ப்பு விசையால் உந்தப் பட்டு மிகையாகிச் சூரிய மண்டலத்தை விட்டே நழுவிச் செல்லும். அப்போது வால்மீன் பூமியிலிருந்து 40 மில்லியன் மைல் தூரத்தில் இருந்து விரைந்து செல்லும். அந்த நாள் டிசம்பர் 26, 2013 என்று கணிக்கப் படுகிறது.
வால்மீன் ஐசான் சாதாரண வால்மீன் பளுவுக்குச் சுமார் பாதி வடிவே. அதைக் கண்டுபிடித்தது : ரஷ்யக் குழுவினர். வால்மீன் ஐசானின் பெரு விட்டம் : சுமார் 0.75 மைல் [1.2 கி.மீ.]. கண்டு பிடித்த காலம் : 2012 செப்டம்பர். வால்மீனின் உடம்பில் உள்ள பெரும்பான்மைப் பண்டம் அடிப்படை மூலக்கூறான உறைந்த கார்பன் டையாக்சைடு.
பூதக்கோள் வியாழனின் சூழ்வெளி மண்டலத்தில் சுமார் 10 மைல் உயரத்தில் உள்ள ஸ்டிராடஸ்ஃபியரில் [Stratosphere] தற்போது தெரியும் நீர் மூட்டம், 1994 இல் வியாழன் அருகில் முறிந்து மோதிய வால்மீன் “சூமேக்கர்-லெவி 9” [Shoemaker-Levi 9] சுமந்து கொட்டிய நீர்தான் என்பது இப்போது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.
கோரான் பில்பிராட் [Herschel Project Scientist, ESA]
தாக்கிய பளு மிக்க வால்மீன் சூமேக்கர்-லெவியின் குப்பைகள் வியாழக் கோள் வளையத்தைச் சிதைத்ததையும், அதன் முறிவுத் தூசிகளையும், நீரையும் விஞ்ஞானிகள் விண்ணோக்கியில் முதன்முறை காண முடிந்தது.
ஜோ பேர்ன்ஸ், கார்நெல் பல்கலைக் கழகம்
சூரிய மண்டலத்தில் அப்பால் இருக்கும் நான்கு பூதப் புறக்கோள்களின் [வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்] சூழ்வெளியில் நீர்மை ஆவி காணப் படுகிறது. அவற்றுக்கு நான்கு வித விளக்கங்கள் இருக்கலாம். பூதக் கோள் வியாழனில் 1994 இல் தோன்றிய நீரின் மூலம், வால்மீன் சூமேக்கர்-லெவியே. மற்ற முறைகளிலும் சிறிதளவு நீர் வியாழன் பெற்றிருக்கலாம்.
டாக்டர் காவலி [Astronomy & Astrophysics Scholar]
ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கியே, வியாழக்கோளின் சூழ்வெளியில் உள்ள நீர்த் தோரணப் புதிரை, நமது நேரடிப் பார்வையில் 1994 இல் விழுந்த வால்மீன் சூமேக்கர்-லெவியால் நேர்ந்தது என்பதை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தெளிவாகத் தீர்வு செய்துள்ளது.
கோரன் பில்பிராட் [ ESA Herschel Project Scientist]
ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கி வியாழச் சூழ்வெளியில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.
2013 ஏப்ரல் மாதத்தில் ஈரோப்பியன் விண்வெளிப் பேரவை [European Space Agency] அனுப்பிய ஹெர்ச்செல் விண்ணோக்கி ஆய்வகம் [ESA Herschel Space Observatory] தற்போது பூதக்கோள் வியாழனின் சூழ்வெளி மேற்தளத்தில் நீர் இருப்புக் காரணம் பற்றிய நீண்ட காலப் புதிர் ஒன்றை விடுவித்ததாக அறிவித்துள்ளது. அதாவது 1994 ஜூலை மாதம் வியாழனில் மோதிய சூமேக்கர்-லெவி வால்மீனே காரணம் என்பதை இப்போது உறுதிப் படுத்தியுள்ளது. வியாழனின் தென் கோளப் பகுதியில் ஒரு வாரமாய் நேர்ந்த ஒளிமயமான வெடிப்பு முறிவில் 21 எண்ணிக்கை யுள்ள துண்டுகள் சங்கிலித் தொடர்போல் வால்மீனி லிருந்து வெளியேறி விழுந்தன ! முடிவில் இந்த வெடிப்பு வான வேடிக்கை பல வாரங்கள் நீடித்தன ! விண்ணோக்கி மூலமாக இதுவே விஞ்ஞானிகள் நேராகக் கண்ட முதல் சூரிய மண்டல வால்மீன் மோதல் நிகழ்ச்சி ! வால்மீன் வீழ்ச்சியால் தென் கோள வியாழனில் நீர்மைத் தோரணம் தெரிந்தது என்பதும் முதன்முதல் நிரூபிக்கப் பட்டது.
இவற்றுக்குப் பேருதவி செய்த விண்ணோக்கிகள் இரண்டு, விண் வெளியில் சுற்றி வரும் நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி, அடுத்து ஈசாவின் இசா ஆய்வகம் [ESA Infrared Space Observatory] [ISA]. ஈசாவின் இசா ஆய்வகம் 1995 இல் பூதக்கோள் வியாழனின் மேற்தளச் சூழ்வெளியை ஆராய்வதற்கு ஏவப் பட்டது. வால்மீன் சூமேக்கர்-லெவி மோதியதால் வியாழச் சூழ்வெளியில் நீர் வெள்ளம் கொட்டி இருக்கலாம் என்றோர் ஊகிப்பு இருந்தாலும், 1995 இல் அது உறுதியாக நிரூபிக்கப் படவில்லை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு உறுதிப் படுத்த ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கி உதவி செய்தது.
வியாழக் கோள் சூழ்வெளியில் தோன்றிய நீர்த் தோரணம் எதனால் எழுந்தது ?
1. முதலில் பூதக்கோள் வியாழனின் ஆழ்ந்த உட்தளத்திலிருந்து நீர்த் தோரணம் எழுதிருக்க முடியும் என்னும் ஊகிப்பு தவிர்க்கப் பட்டது. ஏனெனில் அவ்வித உட்தள ஊற்று நீர் “குளிர் அடைப்பு” [Cold Trap] அரணிலிருந்து மீறி மேற்தளத்துக்கு வர முடியாது. ஆகவே வெளிப்புறத்தி லிருந்துதான் நீர் விழுந்திருக்க வேண்டும். மோதல் நேர்ந்து 15 ஆண்டுகள் கடந்தும், அந்தப் புதிர் விடிவிக்கப் படாமலே நீடித்தது. 2009 இல் ஈசா ஏவிய ஹெர்ச்செல் உட்சிவப்பு நுணுக்கக் கண்ணே [Herschel Space Infrared Observatory Eye] வியாழனின் சூழ்வெளியின் செங்குத்து, மட்ட நிலை நீர் ரசாயன அமைப்பைத் தெளிவாகக் காட்டி நிரூபித்தது.
2. ஹெர்ச்செல் உட்சிவப்பு நோக்கத்தின் கணிப்புப்படி பூதக்கோள் வியாழனின் தென்பகுதியில், வடபகுதியை விட 2 அல்லது 3 மடங்கு நீரளவு காணப் பட்டது. அதுவும் அந்த நீர்த் தோரணம் வால்மீன் சூமேக்கர்-லெவி 1994 இல் விழுந்த இடத்துக்கு அருகிலே தெரிந்தது.
3. மூன்றாவது யூகிப்பு, வியாழக் கோளில் காணப்படும் நீர்த் தோரணம், அங்கே படிந்த விட்ட அகில வெளித் தூசிகளாய் இருக்கலாம் என்பது. அப்படி யானால் அந்தத் தூசிகள் வியாழக் கோள் பூராவும் சூழ்வெளியில் ஒரே சீராகப் பரவி இருக்க வேண்டும். தணிந்த மட்ட உயரங்களில் வடிகட்டப் பட்டிருக்க வேண்டும். அதனால் அந்த யூகிப்பும் தவிர்க்கப் படுகிறது.
4. வியாழக் கோளின் பனிமூட்டம் உள்ள ஒரு துணைக்கோளிலிருந்து “பூத நீர்மை வளையம்” [Giant Vapour Torus] போல் விழுந்து பரவி இருக்கலாம். இது போல் சனிக்கோளில் அதன் துணைக்கோள் என்ஸிலாடஸிலிருந்து பனிநீர் வளையம் விழுந்துள்ளதை ஹெர்ச்செல் விண்ணோக்கி காட்டியுள்ளது. அந்தக் கோட்பாடும் தவிர்க்கப் படுகிறது . காரணம் அவ்விதம் நேர வெகு அருகில் வியாழனக்குத் துணைகோள் எதுவும் கிடையாது.
5. முடிவாக 2009 – 2010 ஆண்டுகளில் நேர்ந்த சிறு மோதல்கள், அவற்றின் விளைவுகளும், உஷ்ண மாற்ற விளைவுகளும் நீக்கப் படுகின்றன.
6. ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கியே, வியாழக்கோளின் சூழ்வெளி நீர்த் தோரணப் புதிரை, வால்மீன் சூமேக்கர்-லெவியால் நேர்ந்தது என்பதை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வு செய்துள்ளது.
வால்மீன் வியாழக் கோளில் விழுந்து வளையத்தைக் கலைத்தது !
1979 இல் ஏவப்பட்ட வாயேஜர் -1 [ Voyager -1 ] விண்கப்பல் முதன்முதலில் பூதக்கோள் வியாழனில் சனிக்கோள் போல் சில வளையங்கள் இருப்பதைப் படம் எடுத்தது. சனிக் கோள் வளையங்கள் போல் ஒளிவீச்சின்றி வியாழனின் வளையங்கள் மிகவும் மங்கியவை. எண்ணிக்கையில் குறைந்தவை. அவை எல்லாம் தூசிகளே. அந்த தூசிகள் பல்லாண்டுகள் கடந்து நாளடைவில் வளையம் முழுவதும் வியாழனில் மறைந்து விடும் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும் கோள்கள் தோன்றி 5 பில்லியன் ஆண்டுகள் கடந்துள்ள போது, புறக்கோள்களின் வளையங்கள் தோன்றி சில மில்லியன் ஆண்டு கள்தான் ஆகி யிருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். விண்கப்பல் வாயேஜர் -1 அனுப்பிய முதல் படத்தில் பூதக்கோளின் மங்கிய வளையம் 150,000 மைல் (250,000 கி.மீ) விட்டத்தில் இருப்ப தாகக் காட்டியது. வியாழன் வளையத்தின் தடிப்பு 20 மைலுக்கும் (30 கி.மீ) குன்றியதாக இருப்பதாய் அறிய முடிந்தது. வியாழக் கோளின் கோசமர் (Gosamer) வளையத் தூள்கள் கோளின் இரண்டு துணைக் கோளிலிருந்து [Thebe and Amalthea] விழுந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார். அடுத்த முக்கிய, மெலிந்த, ஒடுங்கிய வளையம் வேறிரண்டு துணைக் கோளிலிருந்து [Adrassstea, Metis] விழுந்தி ருக்க வேண்டும் என்று தெரிகிறது.
வால்மீன் சூமேக்கர்-லெவி 9 [Shoemaker-Levy 9] பூதக்கோள் மீது விழுந்தது.
புறக்கோளின் வளையங்களை பல்லாண்டுகள் ஆராய்ந்து வரும் வானியல் விஞ்ஞானி மார்க் ஷோவால்டர் [Mark Showalter] சனிக்கோளின் வளையங் களை ஏதோ ஒன்று பாதித்து வருவாய் அறிந்தார். சனிக்கோளின் ஈர்ப்பியல் விசை வளையங் களில் அலைகளை எழுப்புவதாய் கருதினார். 1996 இல் கலிலியோ விண்ணுளவி அனுப்பிய பூதக்கோள் வியாழனின் வளையங் களை நோக்கினார். அப்போது வளையங்களில் மர்மமான அதே மாதிரி அலைகள் எழுவதைக் கண்டார். அந்த அலைகளின் அசைவு நீளத்தைக் [Oscillation Length] கணக்கிட்டு இரண்டு நிகழ்ச்சிகள் அதைத் தூண்டியிருக்க வேண்டும் என்று யூகித்தார். அதாவது 1990 அடுத்து 1994 ஆகிய ஈராண்டு களில் ஏதோ ஒரு நிகழ்ச்சி பாதித்திருக்கிறது என்று தீர்மானித்தார். வியாழக் கோளை நெருங்கும் வால்மீன் சூமேக்கர்-லெவி [9] 1992 இல் கண்டு பிடிக்கப் பட்டது. 1994 இல் அந்த வால்மீன் வியாழக் கோளில் மோதி நொறுங்கித் தூள் தூளானது. அப்படி மோதி வியாழனில் பசிபிக்கடல் பரப்பளவில் ஒரு பெரிய கறையை உண்டாக்கியது. ஷோவால்டர் வால்மீன் முறிவே பூதக்கோள் வளையத்தில் அத்தகைய அலைகளை உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று அறிவித்தார். 1994 இல் வால்மீன் தூசிக் குப்பைகள் வியாழனைச் சுற்று வீதியில் சுற்றி, அதன் வளையத்தோடு சேர்ந்து கொண்டன.
(தொடரும்)
++++++++++++++++++++++++++
தகவல்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20. http://www.thinnai.com/?
21. BBC News – Milky Way’s Sweetness Throughout [Nov 25, 2008]
22 BBC News – Genesis Faulty Battery Probed
23. Sky & Telescope Magazine – Genesis Finding- Earth Has a Problem (Sep 8, 2004)
24. BBC News – (Genesis) Crashed Probe Yields Sun’s Secrets (Mar 15, 2006)
25 New Scientist – Crashed Genesis Probe Delivers Solar Wind Dust – Genesis Space Probe Mission (Mar 15, 2006).
26. Wikipedea – Genesis Spacecraft [Dec 2, 2008]
27 Science Magazine – Genesis Search for Origin -The Sun Under Lock & Key By : Bob Silberg [Updated Nov 14, 2008]
28. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
29 The Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Singnal Underground Water & Microbial Life [Nov 29, 2008]
30 The Daily Galaxy on Biological Universe – “Super Cells” that Eat Radiation, Generate Electricity & Cure Cancer -A Galaxy Classic [Nov 14, 2008]
31 BBC News – Earth Could Seed Titan with Life By : Paul Rincon 33 Wikipedia – Extra-terrestrial Life
34 Space Science Reference Guide : Europa & Titan : Oceans in the Outer Solar System By : Walter S. Kiefer Lunar & Planetary Institute, Houston, Texas. [2003]
35 The Daily Galaxy -Non-Carbon Species : Will We Fail to Detect Extra-terresstrial Life ? [Dec 3, 2008]
36.http://www.thinnai.com/
(Cassini-Huygens Space Probe Mission) (July 8, 2004)
41. http://www.nasa.gov/content/
42. http://www.cbc.ca/news/
43. http://thewatchers.adorraeli.
44. http://abcnews.go.com/
45. http://www.skyandtelescope.
46. http://en.wikipedia.org/wiki/
47.http://en.wikipedia.org/
http://waitingforison.

குறத்தி கானகத்தில் கண்டுகளித்த காட்சிகள்
நாரைகளும் வண்டுகளும் பலாக்கனிக்குக் கண்கள் வழங்குதல்
மாலை வானில் நாரைக் கூட்டம்,
மேலும் கீழும் சிறகை அசைத்து,
மேவிப் பரந்த கடலின் கரையில்,
மெல்லப் புரளும் அலைபோல் பறந்தன! 150
அலைபோல் பறந்த நாரைக் கூட்டம்,
ஆயிரக் கணக்கில் பலா மரத்தில்,
அழகுத் தோரணம் போல அமர்ந்து,
அசைத்துக் குலுக்கின உச்சிக் கிளைகளை! 151
கிளையில் அமர்ந்து தூளிகள் ஆடிக்,
காற்றில் சிறகினை நாரைகள் அடிக்க,
கணத்த கனிகளைச் சுமந்த மரமே,
குதித்துப் பறக்க முயல்வதாய்த் தெரியும்! 152
வேகவைத்துத் தோலுரித்து, நுனிதொடங்கிப் பாதிவரை
பிளந்தபின்பு, நடுத்தண்டை நீட்டி நிற்கும்,
பனைங் கிழங்காய் நாரை தன்,
பேரலகைப் பிளந்து நாநீட்டி நிற்கும்! 153
நீரில் மீன்களைப் பிடிக்கும் விசையுடன்,
நீண்ட அலகினை நொடியினில் செலுத்தி,
நறுமணக் கனிகளைக் குத்திக் குத்தி,
நாரைகள் நீண்ட துளைகள் இட்டன! 154
யானைத் தந்த நுனிநுழை விட்டத்,
துளையைச் செய்து அலகைச் செலுத்தி,
சுளையைக் கவ்வி வெளியே எடுத்து,
மீனை விழுங்கும் நினைவில் விழுங்கின! 155
கொக்குகள் இட்ட மஞ்சள் துளையில்,
கருவண்டுகள் அமர்ந்து கனியை உண்ண,
மஞ்சள்விழிப் படலத்தின் மீது உருண்ட,
கருவிழிப் படலம் உள்ளதாய்த் தோன்றும்! 156
துளைகளின் வழியே சென்றிட அஞ்சித்,
தயங்கித் தயங்கி வண்டுகள் நகர,
தேன்சிந்தும் கண்களை மெதுவாய் உருட்டி,
தீஞ்சுவைக் கணிகான் காண்பதாய்த் தோன்றும்! 157
மூட்டை போன்ற பசும்பலா, மேனியின்
ஓட்டை மஞ்சள் வண்டுக் கண்களால்,
காட்டைக் கண்டு கவினில் இலயித்து,
வாட்டம் கொடுக்கும் வலியை மறந்தது! 158
வேடன் விரித்த வலையில் சிக்கி,
வாடும் பறவைகள் கூட்டம் போல,
வெளிறிய மஞ்சள் சடையின் பிடியில்,
வண்டுகள் நுண்கால் சிக்கித் தவித்தன! 159
சிக்கித் தவித்த வண்டுகள் சிறகை,
அச்சத்தோடு படபடத் தடிக்க, அவ்வொலிகேட்ட
மந்திகள் வந்து, மானுடன் போலச்
சிந்தனைகொணடு, வண்டுகளை விடுவித் தனவே! 160