ஸ்டாலின் குணசேகரன்
கோத்தா கினபாலு, மலேசியா

விண்ணில் பறந்துவந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் இங்குள்ள ஸ்ரீபசுபதிநாதர் ஆலயத்தின்மீது பூமாரி பொழிந்து பக்தர்களைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின.
பக்தர்கள் கோயில் வளாகத்தில் புடைசூழ்ந்து இந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டுகளித்தனர்.
கடந்த ஞாயிறன்று இக்கோயிலில் மூன்றாம் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.
சுமார் 100 கிலோ பூக்கள் ஹெலிகாப்டரிலிருந்து தூவிவிட, அவை பூமரியாகப் பொழிய, பக்தர்கள் அப்பூக்களைப் பிடித்து மகிழ்ச்சி அலையில் மூழ்கினர்.
விண்ணிலிருந்து தேவர்கள் பூமாரிப் பொழிவதுபோல் அக்காட்சி பிரம்மிக்கவைத்தது.
இதற்கு முன்னர் ஸ்ரீமுத்துக்குமார சிவாச்சரியார் அந்த ஆலயத்தின் உச்சிக் கலசத்தில் திருக்குட நன்னீராட்டி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.
சுமார் எண்ணூறு பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஸ்ரீ பசுபதினாதரின் அபிஷேக நீரில் நனைந்து அருளைப்பெற்றனர்.
சாபா மாநிலத்தின் சண்டாகான், தாவாவ் நகரங்களிலிருந்தும், லாபுவான் தீவு, தீபகற்ப மலேசியாவிலிருந்தும் பக்தர்கள் இந்நன்னீராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுமார் எட்டு லட்சம் ரிங்கிட் செலவில் புனரமைக்கப்பட்ட இக்கோயிலுக்கு சாபா மாநில அரசு இரண்டு லட்சம் ரிங்கிட் மான்யம் வழங்கியது. இத்தொகையை முதலமைச்சர் சார்பில் சாபா சிறப்புப்பணி அமைச்சர் டத்தோ தியோ ச்சி காங் நேரில் வழங்கினார்.
மேலும், சாபா மாநில மஇகா தலைவர் டத்தோ வி. ஜோதி ஐம்பதினாயிரம் ரிங்கிட்டை இக்கோயிலுக்கு முதலமைச்சர் நிதியிலிருந்து கூடுதலாகப் பெற்றுத் தந்தார்.
ஸ்ரீபசுபதிநாதர் ஆலயத்தலைவர் டத்தோ டாக்டர் க. மாதவன் மாநில அரசுக்கு கோயில் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, பிறசமய இயக்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
முனைவர் மு. இளங்கோவன்
தமிழிசை மீட்புப் போராளியாக இருந்து தமிழகம் முழுவதும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணம் செய்து தமிழிசை பரப்பிய இசைமேதை பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப் பணி தமிழுலகம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பணியாகும். இந்த இசையறிஞரின் வாழ்க்கையையும், பாடலையும் பொதிகை தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.
அன்புகூர்ந்து தாங்கள் பார்ப்பதுடன் தமிழர்கள் அனைவரும் பார்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடவும் வேண்டுகின்றேன். அயலகத்தில் வாழ்பவர்கள் இணையம் வழியாக நேரலையாகப் பார்க்கமுடியும்.
http://tamiltv.tv/dd-podhigai-live/
இந்த இணைப்பில் நேரலையாகப் பார்க்கமுடியும்
பொதிகை தொலைக்காட்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் தமிழிசைப் பணி அறிமுகம் ஆகும் நாளும் நேரமும்
நாள்: 24.05. 2014 சனிக்கிழமை இந்திய நேரம் : முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை
நம் பண்படு மீட்க போராடியவரை நாம் இதயத்தில் வைத்துப் போற்றுவோம்
அன்புள்ள மு.இளங்கோவன் புதுச்சேரி
குறிப்பு: ப. சுந்தரேசனார் குறித்த ஆவணப்படம் தயாராகிக்கொண்டுள்ளது. முழுமை பெற்றதும் தமிழர்களின் அரிய செல்வப்புதையல் பெற்ற மனநிறைவு அனைவருக்கும் உண்டாகும்.
மேலும் விவரங்கள் அறிய
http://muelangovan.blogspot.in/
முனைவர் மு.இளங்கோவன் Dr.Mu.Elangovan Assistant Professor of Tamil K. M. Centre for Postgraduate Studies, Government of Puducherry, Puducherry-605 008, India
Dear TLCS Members, Friends and Well Wishers,
1. We wish to inform that Mr N Ramakrishnan, a life member of the Tamil Language and Cultural Society passed away peacefully on Thursday 15 May 2014 at about 6.30pm.
2. MrRamakrishnan was working full time with Little India Shopkeepers & Heritage Association?s Secretariat (LISHA) and was closely associated with the Indian Restaurant Association, Singapore (IRAS).
3. His wake will be held at Blk 148, Tampines Ave 5, #06-268, Singapore 521148 on Saturday, 17 May 2014 from 5 pm onwards.
4. The cortege will leave his home on Sunday 18 May 2014 at 4 pm. It will proceed first to Little India Arcade and thereafter to Hall 2, Mandai Crematorium. Cremation will be at 6 pm.
5. On behalf of the Tamil Language and Cultural Society and its members,
I wish to express our sympathy and heartfelt condolences to the family of the late Mr N Ramakrishnan.
6. May his soul rest in peace.
With deepest regards,
M Harikrishnan
President
Tamil Language and Cultural Society
J. Chandrasekaran
Please visit
http://socialventurechallenge.
Help us to get maximum votes, to make us be one of the finalists, then able to provide drinking water to millions of poor Indians.
How to vote
Step 1: Click on video – water for all
Step 2: Scroll to the bottom and sign in via Facebook or Email.
Step 3: Click on the vote button next to the comments bar to vote.
(An orange icon indicates ready to vote, grey indicates that you have already voted for that video.)
Step 4: Share or tweet the entry to garner more votes!
https://twitter.com/
Thanks in advance.
Chandrasekaran J
—
J. Chandrasekaran
Give the world clean water & Sanitation
Visit www.terafilwater.in to provide clean drinking water to Rural India
Visit www.toiletforall.org to provide clean toilets for all Indians!
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.
http://reachhistory.blogspot.
join http://groups/yahoo.com/
முனைவர் மு.இளங்கோவன்
மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கங்கள் அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அடுத்த (13வது) தமிழ் இணைய மாநாட்டைப் புதுச்சேரியில் 2014, செப்டம்பர் மாதம் 19-21 தேதிகளில் நடத்த உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றது. உத்தமம் தமிழ் இணைய மாநாட்டைப் புதுச்சேரியில் புதுவை பல்கலைக்கழகம், புதுவை தமிழ்ச் சங்கம், புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம், பல்லவன் கல்வி நிறுவனங்கள், இந்திய மொழிகளுக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடத்த உள்ளது.
மாநாடு நடைபெறுவதற்கான செயற்குழுக்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றான “மாநாட்டு நிகழ்ச்சிக் குழு”விற்கு மாநாட்டின் தொழில்நுட்ப அரங்குகளில் படைக்க உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஒன்றுசேர்த்து, பரிசீலனை செய்து, தக்க கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கொடுக்கப் பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மைத் தலைப்பாகக் கொடுக்கப்படும்.
இவ்வகையில் 2014 மாநாட்டிற்குத் “தமிழ் மொழியில் இயல்மொழிப் பகுப்பாய்வு” முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்-பட்டுள்ளது.
மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.
• இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச் சொல்லாளர்(சொற்பிழை திருத்தி,
சந்திப்பிழை திருத்தி…) ஒளியெழுத்துணரி, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துரு பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, தேடுபொறிகள், தமிழ்த்திறனாய்வு நிரல்கள், இலக்கணத் திருத்திகள், மின்னகராதி அமைத்தல்…
• கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்தல், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க் கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ்)
• திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
• கணினி மற்றும் இணையவழி தமிழ்க் கல்வி கற்றல், கற்பித்தல்.
• தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள்
• தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ் நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள்….• தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்-பட்ட
கணினி மென்பொருள்கள்.
மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை A4 தாள் அளவில் 1-2 பக்கங்களில் ஜூன் 30ஆம் தேதிக்குள் cpc2014@infitt.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரை தமிழ் ஒருங்குறியில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கம் ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும் கலந்தோ நீங்கள் படைக்கலாம்.
மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை மிகக் கவனமாக ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம் கொண்ட கட்டுரைச் சுருக்கங்களைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு ஜூலை 31ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும். கட்டுரை பரிசீலனைக்கு தேவையெனில் ஆய்வுக்குழு கட்டுரை ஆசிரியர்களிடம் முழுக்கட்டுரையை அனுப்பிக்க கேட்கலாம்.
தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் முழுக்கட்டுரைகள் 4-6 பக்கங்களுக்கு மிகாமல் எங்களுக்கு உரிய தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வகையில் கட்டுரைச் சுருக்கம் மற்றும் முழுக்கட்டுரை பற்றிய நிகழ்ச்சிகள் குழுவின் கருத்தே கடைசி முடிவாக இருக்கும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரிடையாகப் படைக்க வேண்டும். மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறொம்.
மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட-வுள்ளது. இம்முறை மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர் திரவு(ISSN) எண்ணுடன் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறான எண்ணுடன் வெளியிடப்படும் புத்தகங்கள் உலகின் முக்கிய/பெரிய நூலகங்களில் தக்க முறையில் நூல்கள் பட்டியலில் உள்ளிடப்பட்டு ஆய்வுக் கட்டுரைகளில் தரமான முறையில் கூர்வு செய்யப் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ் இணைய மாநாடு 2014இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2014@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முனைவர் கு. கல்யாண சுந்தரம்
தலைவர், மாநாட்டு நிகழ்ச்சிகள் குழு
13 ஆவது உலகத் தமிழிணைய மாநாட்டிற்கான முக்கியமான இறுதி நாட்கள்:
கட்டுரையின் ஆய்வுச்சுருக்கம் அனுப்ப : 30 ஜூன் 2014
தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்கள் பற்றிய அறிவுப்பு : 31 ஜூலை 2014
முழுக்கட்டுரை அனுப்ப : 30 ஆகஸ்ட் 2014
மாநாடு நடைபெறும் நாட்கள் : 19-20 செப்டம்பர் 2014
மாநாட்டு நிகழ்ச்சிகள் குழுவின் உறுப்பினர்கள்
முனைவர் கு. கல்யாணசுந்தரம் (லுசான்),
பேராசிரியர் ஆ. க. இராமகிருட்டினன் (பெங்களூர் ),
திரு. சிவ பிள்ளை (இலண்டன்),
முனைவர் (திருமதி) சீதா லட்சுமி (சிங்கப்பூர்),
முனைவர் அ. சிவகுமாரன் (சிங்கப்பூர்),
முனைவர் (திருமதி) மாலா நேரு (சென்னை),
முனைவர் (திருமதி) வி. தனலட்சுமி (சென்னை),
முனைவர் இல. சுந்தரம் (சென்னை),
திரு. அனுராஜ் (கொழும்பு),
திரு. முகுந்தராஜ் சுப்ரமணியன் (பிரிஸ்பேன்)
———
Tamil Internet 2014 (13th International Conference)
Puducherry, India – September 19- 21, 2014
CALL FOR PAPERS
The International Forum for Information Technology in Tamkl (INFITT) is
pleased to inform that arrangements are currently underway to hold
the next Tamil Internet Conference 2014 at Puducherry (aka Pondicherry),
India (Pondicherry University campus) during 19-21 September 2014.
The INFITT annual conference is being co-hosted by the following
institutions: Pondicherry University, Puduvai Tamil Sangam, Puducherry
Institute of Linguistics and Cultures (PILC), Puduvai Tamil Sangam,
Pallavan Group of Institutions and the Central Institute of Indian Languages (CIIL).
One of the committees formed to organize “Tamil Internet 2014, the
“Conference Program Committee” (CPC)* has been given the task to
collect, review and select papers for presentation in various technical
sessions of the conference. “Natural Language Processing (NLP) as applied
to Tamil” has been chosen as the principal theme for the Tamil Internet
Conference 2014.
The CPC is pleased to release the following “Call-for-Papers for presentation
at the Tamil Internet 2014″. We welcome research papers on the following
topics to be addressed at various technical sessions of the Conference.
• NLP applications in Tamil: Spellchecker, OCR, Voice recognition,
speech synthesis, Search engines, Machine Translation, Data-mining, etc.
• Tamil “enabling” in mobile platforms (smartphones, tablets,..) with
particular emphasis for Tamil Apps for use on iOS, Android and Windows 8 platforms
• Open Source Tamil softwares and Tamil Localization
• Computer- and online-assisted Teaching, Learning of Tamil
• Tamil content and delivery via Internet: Blogging, microblogging,
Wikipedia, Podcasting, social networks,…
• Tamil Digital Library and e-content delivery across various handheld
devices (ebooks, ezines,..)
• Tamil Databases and e-commerce
• Any other hardware, software development related to Tamil computing technology
All those interested to make an oral presentation at the conference are
requested to submit a 1-2 page (A4) summary/abstract of their planned
presentation to the CPC (email ID: cpc2014@infitt.org) on or before 30 June 2014.
The conference program committee will send an acknowledgement mail
on the receipt of the abstract.
The abstracts can be in Tamil, English or bilingual (Tamil and English) but
all abstracts must be based on Unicode encoding. The abstract submission
can be in the form of plain text (.txt), Microsoft Word (.doc or .docx),
Open office and html formats (formats where the content can be extracted).
Please try to be as precise on what you want to present.
Submission of an abstract implies that at least one author of the paper
attends the conference to present the work in person. Proxy or remote
presentation is not permitted. In cases where the message from the abstract
is not clear, CPC may request more details in the form of an expanded
abstract (4-6 pages) to judge adequately the submission.
Authors of papers accepted for oral presentation will be informed on or
before 31 July 2014. As with the abstracts, the full paper of the presentation
(4-6 A4 size pages inclusive of all graphics and tables) is to be submitted
in the form of Plain Text, HTML, Microsoft Word or Open Office format file.
To ensure proper formatting, full paper may be submitted “additionally” in
the form of PDF (with font embedding). Only the quality of the final paper
will determine the participation in the conference and the decision of the
Conference Program Committee will be final in all respects.
The Conference Proceedings will be published in printed paper format
and as an e-book. Arrangements are being made to have the Conference
Proceedings of the annual Tamil Internet Conferences published with an
ISSN (International Standard Serial Number). ISSN will permit routine
indexation of the Conf. Proceedings in bibliographic databases of all
leading libraries across the globe and proper referencing of the content
of the Proceedings in academic journal publications.
We look forward to your active participation in the Tamil Internet 2014 conference.
If you have any questions or need further clarifications, feel free to
send us a note to <cpc@infitt.org>.
(sd.). K. Kalyanasundaram
Chair, CPC, Tamil Internet 2014
http://www.infitt.org/ti2014/ (cpc2014@infitt.org)
Some Key Deadlines to observe:
• Paper abstract: 30th June 2014
• Paper acceptance notification : 31st July 2014
• Camera ready copy submission : 31st August 2014
• Conference Dates : 19-21 Sept. 2014
*Members of the Conference Program Committee (2014):
Dr. K. Kalyanasundaram (Lausanne, CH, Chair),
Prof. A.G. Ramakrishnan (Bangalore, India),
Mr. Siva Pillai (London, UK),
Dr. S. Seetha Lakshmi (Singapore),
Dr. A. Sivakumaran (Singapore),
Dr. Ila Sundaram (Chennai, India),
Dr. Mala Nehru (Chennai, India),
Dr. V. Dhanalakshmi (Chennai, India),
Mr. Anuraj (Colombo, Sri Lanka)
Mr. S. Muguntharaj (Brisbane, Australia)
முனைவர் மு.இளங்கோவன்
Dr.Mu.Elangovan
Assistant Professor of Tamil
K. M. Centre for Postgraduate Studies,
Government of Puducherry,
Puducherry-605 008, India
E.Mail : muelangovan@gmail.com
blog: http://muelangovan.blogspot.
cell: +91 9442029053
ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு
தேதி: 23 மார்ச் 2014
நேரம்: மாலை 5.00 – 8.30
இடம்: விக்டோரியா ஸ்திரீட் நூலகம், தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்
வரவேற்புரை
முனைவர் சீதாலட்சுமி – முழுமையான ஒரு பார்வை
இராம கண்ணபிரான் – குறுநாவல்கள் ஒரு பார்வை
காயத்ரி – ஓர் இளம் வாசகியின் பார்வையில்
திரு சுப்ரமணியம் நடேசன் – தேர்ந்தெடுத்த சில சிறுகதைகள் பற்றி
மாதரசி கண்ணன் – காட்சிகளும் கதாப்பாத்திரங்களும் உரையாடல்களும்
நடராஜன் – மொழியாடல், கதை சொல்லல்
ஜெயசுதா சமுத்திரன் – ஒரு மாணவியின் வாசிப்பில்
M.K.குமார் – எனது பார்வையில்
பாரதி மூர்த்தியப்பன் – கதைகளாகும் உள்ளுர் சமூகப் பிரச்சினைகள், கருக்கள், களன்கள்
கலந்துரையாடல்/கேள்வி பதில் அங்கம்
ஏற்புரை/நன்றியுரை
நிறைவு
முனைவர் மு.பழனியப்பன்
சிவகங்கை
——————————————————————-
உலகத் தமிழ் ஆய்வுக் கருத்தரங்கின் அழைப்பும் கம்பன் திருநாள் அழைப்பும் இதனுடன் வருகின்றன. அன்புடன் அனைவரும் வருக.
சுப்ரபாரதி மணியன்
கடந்த 3 ஆண்டுகளில் வந்த சிறந்த நூல்களை அனுப்பலாம். கவிதை, சிறுகதை நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு,ஆய்வு, நாடகம் அன்று அனைத்துப்பிரிவு ( பெண் எழுத்தாளர்களின் சிறந்த )
நூல்களையும் அனுப்பலாம்.
ரூ50,000 பரிசு வழங்கப்படும்.
3 பிரதிகள் அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி : 15-4-2014
முகவரி:
அரிமா மு ஜீவானந்தம் இலக்கியப்பரிசு
பாலாஜி ரோடுலைன்ஸ்,
51/38, சரவணா தெரு,
அவினாசி சாலை,
திருப்பூர் 641 602
காரியமாற்றுபவர் ஒருவர் உண்டு.எத்தனை பேர் அறிவோம்?
வீண் பெருமைக்கும் வெட்டியாகவும் விரயம் செய்யும் பணத்தில் ஒரே ஒரு சிறிய கூறு செலவிட்டு உங்கள் எதிர்கால சந்ததிக்கு வழி காட்டலாமே!
வாங்கிப்படியுங்கள். ஆசிரியர்க்கொரு வணக்கம் சொல்லுங்கள் வாழ்த்துக் கூறுங்கள்.
To buy: mail to vaiyavan.mspm@gmail.com
SEVALAYA
(Registered Charitable Trust)
F-B1, First Floor,old no 10 ,new no 24, Kesava Perumal west Street, Mylapore, Chennai 600004.
Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.
Vadanallur Village, Uthiramerur, Kanchipuram Dt., TamilNadu, India
Phone: 044-24950204, 9444620289, 9444620286, 044-64611488.
E-mail: Sevalayamurali@gmail.com, Sevalayaprm@sevalaya.org, Visit us at: www.Sevalaya.org.
———————————————————————————————————-
PRESS REPORT
சேவாலயாவில் புதிய மாணவர் விடுதியின் திறப்பு விழா
சேவாலயாவில் புதிய மாணவர் விடுதி, Foundation Page Pierre யின் உதவியுடன் 27 ஜனவரி 2014 அன்று திருநின்றவூர் அடுத்து உள்ள கசுவா கிராமத்தில் நிகழ்ந்தது.
Page Pierre Foundation யைச் சேர்ந்த திரு. பேஜ் பியர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்தார். அவர்களுடன் Prof. Oyon பங்கு கொண்டனர்.
இந்த மாணவர் விடுதியில் 100 மாணவர்கள் தங்கும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் விடுதியில் 14 அறைகளும் ஒரு வழிப்பாட்டுக் கூடமும் உள்ளது.
Page Pierre Foundation பல வருடங்களாக சேவாலயாவில் பல கட்டிடங்கள் நிறுவ உதவி செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினர் தன்னுடைய உரையில் சேவாலயா பல வருடங்களாக சேவைகள அனைதையும் மிகவும் திறம் பட செய்து வருவதாகவும் தான் ஒவ்வொரு முறை இங்கு வரும் பொழுதும் சேவாலயா பல் முன்னேறங்களை நிகழ்த்தி வருவதைக் கண்டு மிகவும் பெருமைக் கொள்வதாகவும் கூறினார்.
மேலும் அவருடையத் தொடர்பு சேவாலயாவுடன் இருந்துக்கொண்டிருக்கும் என்றும் கூறினார்.
முன்னதாக பேசிய திரு. முரளிதரன் அவர்கள் சேவாலயாவில் Page Pierre Foundation மூலம் சேவாலயாவில் பல் நல்ல நிகழ்வுகள் நடந்துள்ளது என்றும் அவர்களுக்கு அதற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது.
சேவாலயாவுக்காக,
(வி.முரளிதரன்)
நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்
—————————————————————————————————————————————————–
Board of Trustees
Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)
Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Mr.Sarath Chandra Divella, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,
Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.Thilak Iyer
Advisory Committee: Dr.D.K.Oza IAS,(Retd) Mr.R.Nataraj IPS (Retd), Mr. Amarchand Jain, Dr. Malavika Vinothkumar, Mr.David Appaswamy, Prof. Dr.S.V.Mani, Mr.Thomas Abraham, Mr.R.Sreenivasan
Hony, Co-Ordinator: Hony.Correspondent:
Mr.T.S.Venkataramani Mrs. Bhuvaneshwari Muralidharan