Author: செய்தியாளர்-2

  • புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பின்னும் தாய்மை

    இந்தியாவிலேயே முதல் முறையாக வாடகைத்தாய் முறையில் இடமாற்று அறுவை சிகிச்சை செய்த கருவகத்தில் இருந்து கருமுட்டையை வயிற்றுப் புறதோலின் வழியே உறிஞ்சி எடுத்துப் பெண் குழந்தை பிறப்பு.

    27 வயதுடைய, திருமணமாகி 3 வருடங்கள்  2014 வருடம் (21/7/2014) கர்ப்பப்பை மற்றும் ஒரு கருவகத்தை நீக்கிவிட்டனர். குழந்தை பிறப்பு மற்றும் மகளிர் நலத்தினை கருத்தில் கொண்டு ,பிறகு அதற்கு ரத்தஓட்டம் சீராக உள்ளதா என்பதையும் தக்க பரிசோதனை செய்து உறுதி செய்ததுக்கொண்டனர்.

    இந்த பெண்மணிக்கு எங்கள் மருத்துவமனையில் கருவகத்தை ஊக்குவிக்கும் ஊசிபோட்டு கருமுட்டையை வளரசெய்து, உறிஞ்சி எடுத்து கணவரின் விந்தணுவுடன் இணைய செய்து, சோதனைக்குழாய் குழந்தை சிகிச்சை முறையில் வாடகை தாய்கருப்பையில் செலுத்தி, அதன்மூலம் 16/2/2019 அன்று மாலை 5:26 மணிக்கு, பெண்குழந்தை பிறந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பதிவுசெய்வதில் ஜிஜி மருத்துவமனை மிகுந்த பெருமை அடைகிறது. குழந்தை நலமாக 2.62 kg எடையுடன்உள்ளது.

    இந்த மாதிரி கருவக இடமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு “லாப்ராஸ்கோப்பி” முறையில் வயிற்றுப் புறத்தின் வழியாக மட்டுமே கருமுட்டையை உறிஞ்சி எடுத்து இருப்பதாக மருத்துவ இதழ்களில் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

    ஆனால் இந்தப் பெண்மணிக்குக் கருமுட்டையை வலதுபுற வயிற்றுப் பகுதியின் தோல் வழியே ஒலியதிர்வுக் கருவி (ஸ்கேன்) உதவியுடன் கருமுட்டையை உறிஞ்சி எடுத்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    புற்றுநோய் ஆரம்ப நிலை மற்றும் பாதித்தவர்கள் அந்த சிகிச்சைக்குச் செல்வதற்கு முன்பு அவர்களுடைய

    1. கருமுட்டை,
    2. இணைந்த கரு மற்றும்
    3. விந்தணுக்களை

    பல வருடங்கள் உறைய வைத்து சேமிக்கலாம். இவை மட்டுமே பல வருடங்களாக சிகிச்சை முறையில் இருந்து வருகின்றன. இதன் மூலமாக ஆரோக்கியமான குழந்தைகள் உலகம் முழுவதும் பல பிறந்துள்ளன.

    ஆனால் இப்போது

    1. கருவகத்தை வயிற்றுப் புறத்தின் உட்பகுதியில் ரேடியேஷன் பாதிக்காத அல்லது குறைந்த அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய இடத்தில் இடமாற்று சிகிச்சை முறையில் வைத்துக்கொள்ளலாம்.
    2. கருவகத் திசுவினைப் பதப்படுத்தி அதனை மீண்டும் புற்றுநோய் சிகிச்சைக்கு பின்மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்திக்கொள்ளலாம். இந்தக் கருவகத் திசு உறைய வைத்த முறை மூலம் 2004 ஆம் ஆண்டு டாக்டர் ஜாக்கஸ்டோன்னஸ் (Dr Jacques Donnez from Saint-Luc in Brussels) குழந்தை பிறக்கச் செய்துள்ளார்.

    சவால்கள்:

    1. இந்தக் கருவக மாற்று அறுவை சிகிச்சையினால் ஒரு சில நேரத்தில் ரத்த ஓட்டம் சரியாக செயல்படாமல் போவதுண்டு.
    2. கருவக இடமாற்று அறுவை சிகிச்சையினால் ஒரு சில சமயத்தில் முதிர்ந்த கருமுட்டையை உறிஞ்சி எடுப்பது சவாலாகவே இருக்கும்.

    நன்மைகள்:

    கருவக இடமாற்று அறுவை சிகிச்சையினால் சொந்த மரபியல் குழந்தையைப் பெற்றெடுக்க இயலும். இந்த முறை புற்றுநோய் ஆரம்ப நிலை மற்றும் பாதித்தவர்களுக்கு ஒரு வர பிரசாதமாகவே இருக்கும். ஜிஜி மருத்துவமனை இப்போது கருவக திசு பதப்படுத்துதல் முறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

    Share
  • நவராத்திரியை முன்னிட்டு சகல தேவதா ஹோமத்துடன் சீரடி சாயிபாபாவின் 100 ஆம் அண்டு சிறப்பு ஆராதனை விழா

    ஸ்ரீரீ தன்வந்திரி பீடத்தில்

    நவராத்திரியை முன்னிட்டு சகல தேவதா ஹோமத்துடன்

    சீரடி சாயிபாபாவின் 100 ஆம் அண்டு சிறப்பு ஆராதனை விழா

    நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நவராத்திரியை முன்னிட்டு சூலினி துர்கா ஹோமம், குபேர சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம், மஹா சரஸ்வதி ஹோமம், ருத்ர ஹோமம், அஷ்ட பைரவர் சகித காலபைரவர் ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், காயத்ரீ ஹோமம், அன்னபூரணி ஹோமம், போன்ற பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று உரிய தெய்வங்களுக்கு மஹா அபிஷேகத்துடன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    மேலும் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாச பூஜையும் சரஸ்வதி தேவிக்கு பாலபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சீரடி சாயிபாபாவின் 100 ஆம் ஆண்டு சமாதி தினத்தை முன்னிட்டு சீரடி சாயிபாபா மூலமந்திர ஹோமமும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. மேலும் நாளை ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • சோதனைகள் விலக சுதர்சன ஹோமம் நடைபெற்றது

    தன்வந்திரி பீடத்தில்

    சோதனைகள் விலக

    சுதர்சன ஹோமம் நடைபெற்றது

     

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், இன்று 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை த்ருஷ்டி உபாதைகள், சத்ரு உபாதைகள் விலகவும், வியாபார அபிவிருத்திக்கும் சுபிட்சங்கள் பலபெற்று வளமுடன் வாழவும், ஸ்ரீ சுதர்சன மஹா யாகம் நடைபெற்றது.

    ஸ்ரீ சுதர்ஸன மஹாவிஷ்ணுவை வேண்டி இந்த யாகத்தில் நாயுருவி, வெள்ளை எள்ளு, வெண் கடுகு, சர்க்கரைப்பொங்கல், நெய், குங்குமப்பூ, கருநொச்சி, இருமுள், நீலஊமத்தம்பூ, வெள்ளைப் பூக்கள், பலாசு, அருகம்புல், தேன், குங்கிலியம், பலவகையான மூலிகைகள், பட்டு வஸ்திரங்கள், முதலிய த்ரவியங்கள் சேர்கப்பட்டது. மேலும் யாகத்தில் வைத்து பூஜித்த வெண்ணையை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட்டது.

    மேற்கண்ட யாகத்தில் தொழில், வியாபாரம், உத்யோகத்தில் உயர்வு, சத்ருபாதை விலக நம்மை சூழ்ந்துள்ள தீய சக்திகள் அகல வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவதற்கும், பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்களில் இருந்து விடுபடவும், நற்சம்பத்துக்கள் பெறவும், சுக பிரசவம் நடைபெறவும், தடைகள் விலகவும், பசுக்கள் விருத்தி அடையவும், மன நலம் குணமாகவும், தீராத நோய்கள் தீரவும், கோபங்கள் தனியவும், சாபங்கள் விலகவும், பிறரிடம் அன்பு ஏற்படவும் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த யாகத்தில் சென்னை மெட் இந்தியா மருத்துவமனை பிரபல மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் T.S. சந்திரசேகர் அவர்கள் குடும்பத்தினர்களுடன் பங்கேற்று, ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று சென்றனர். இதனை தொடர்ந்து ஸ்ரீ சுதர்சனாழ்வாருக்கு நவகலச திருமஞ்சனமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • மக்கள் சிந்தனைப் பேரவையின் ‘ அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது ’

    மக்கள் சிந்தனைப் பேரவையின்

    ‘ அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது ’

    ஈரோடு புத்தகத்திருவிழாவில் வழங்கப்படுகிறது.

    ————————————————————————————————————————————–

     

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இளம் அறிவியலாளர் ஒருவருக்கு ‘ அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது ’ வழங்கப்படுகிறது. இவ்விருது பாரட்டு மடல் , தகுதிப்பட்டயம் ஆகியவற்றோடு ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையையும் உள்ளடக்கியதாகும்.

    விருதாளர் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு முயற்சிகளில் வெற்றிபெற்றவராக விளங்க வேண்டும்.

    தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலுள்ள ஆய்வுக் கூடங்களிலோ அல்லது அங்கிகரிக்கப்பட்ட வேறு ஆய்வுக் கூடங்களிலோ ஆய்வுகள் மேற்கொண்டவராகத் திகழ்வதோடு பெயர் பெற்ற அறிவியல் இதழ்களில் இதுவரை இவரது 10 ஆய்வுக்கட்டுரைகளாவது வெளிவந்திருக்க வேண்டும் .

    இத்தகைய அடிப்படைத் தகுதிகள் உள்ளவர்கள் தனது ஆய்வுகள் குறித்த அனைத்துக் குறிப்புகளையும் அனுப்பி வைப்பதோடு எந்தக் கண்டுபிடிப்புக்கு அவர் விருதுக்குரியவராக விளங்குகிறார் என்பதையும் தனியாகக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

    அறிவியல் துறையில் மிகமுக்கிய ஆளுமைகளாக விளங்குகிற ஐந்து மூத்த அறிவியலாளர்களடங்கிய தேர்வுக்குழுவே விருதாளரைத் தேர்வு செய்யவுள்ளது. இது தமிழகம் தழுவிய விருது என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்களில். எவரும் தங்களது குறிப்புகளை அனுப்பிப் பங்கேற்கலாம்.

    ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுக் குறிப்புகளையும் ஆய்வு தொடர்புள்ள அனைத்து ஆவணங்களையும் 20.07.2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள ஈரோடு புத்தகத் திருவிழா மேடையில் இவ்விருதளிப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்பு முகவரி : மக்கள் சிந்தனைப் பேரவை , A 47 – சம்பத் நகர் , ஈரோடு – 638 011. மின்னஞ்சல் : info@makkalsinthanaiperavai.org

    தொடர்பு எண் : 0424 – 2269186 , 94891 23850

    ————————————————————————–

    Share
  • வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து ஹோமம், சத்ரு சம்ஹார ஆறுமுகஹோமம் நடைபெற்றது

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞனகுரு” டாக்டர் ஸ்ரீ முரளித ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 04.06.2018 திங்கட்க் கிழமை காலை 10.00 மணியளவில் வாஸ்து நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் ஷஷ்டி திதியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஆறுமுக ஹோமமும் நடைபெற்றது. மேலும் இதில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பஞ்சபூதங்களுக்கும், அஷ்டதிக்பாலகர்களுக்கும், வாஸ்து பகவானுக்கும், கார்த்திகை குமரனுக்கும் மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    இந்த யாகங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருட் பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார். இதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. மேலும் நாளை 05.06.2018, 06.06.2018 நடைபெற உள்ள மங்கள சண்டி யாகத்தின் பூர்வாங்க பூஜைகள் இன்று நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • ஆதிசங்கரர் அவதார தினத்தில் தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமங்கள்

     

     

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 20.04.2018 வெள்ளிக் கிழமை சித்திரை மாதம் மிருகசீர்ஷ நக்ஷத்திரம், சதுர்த்தி திதியில் அவதரித்த ஸ்ரீமத் ஆதிசங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை 21.04.2018 சனிக்கிழமை சித்திரை திருவாதிர நக்ஷத்திரத்தை ஸ்ரீமத் இராமானுஜருடைய 1001 வது ஆண்டு ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    மகான் ஆதிசங்கரர்!

    எளிய விளக்கங்களாலும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகளாலும் இந்து மதத்தை எழுச்சியுறச் செய்த மகான் ஆதிசங்கரர்! சிவபெருமானின் அம்சமாகப் போற்றப்படும் ஆதிசங்கரரின் அவதார தினம் இன்று! கேரளாவின் காலடி என்ற ஊரில் சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதிக்கு, திருச்சிவபேரூர் என்னும் திருச்சூர் வடக்குநாதப் பெருமானின் அருளால் பிறந்தவர் ஆதிசங்கரர். மகாலட்சுமியை ஸ்தோத்திரங்களால் துதித்து, தங்க நெல்லிக்கனிகளைப் பொழியச் செய்தவர். அந்த ஸ்தோத்திரம்தான் ‘கனகதாரா ஸ்தோத்திரம்.

    இவர் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம், பகவத் கீதை ஆகியவற்றுக்கு விளக்கம் எழுதிய மகா ஞானி. மாத்ருகா பஞ்சகம், கோவிந்தாஷ்டகம், ஆத்மபோதம், பஜகோவிந்தம், சுப்ரமண்ய புஜங்கம், மனிஷா பஞ்சக ஸ்தோத்திரம், சிவானந்த லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், சித்தாந்த சாங்கியம், விவேக சூடாமணி ஆகிய ஸ்தோத்திரம் மற்றும் சாஸ்திர நூல்களை இயற்றினார்.

    ஸ்ரீஆதிசங்கரர் உருவாக்கியதுதான் ஸ்ரீசக்கர வழிபாடு. அம்பிகையை ஸ்ரீசக்கர வடிவில் வழிபடுவது இன்றும் தொடர்கிறது. இதில் விஞ்ஞானமும், துல்லியமான கணிதமும் இருப்பதைக் கண்டு இன்றைய விஞ்ஞானிகளும் வியக்கின்றனர்.

    `காலடி’-யில் அவதரித்து, தம் காலடித் தடங்களை புண்ணிய பாரதம் முழுவதும் பதித்த மகான் ஆதிசங்கரர். தம்முடைய 32-வது வயதில் தாம் எங்கிருந்து வந்தாரோ அந்தப் பரம்பொருளிடமே ஐக்கியமாகிவிட்டார். இந்து தர்மத்துக்கு இணையற்ற அரும் பணிகள் ஆற்றிய மகான் ஆதிசங்கரரின் அவதார தினத்தில், அவருடைய திருவடிகளைப் பணிந்து புனிதமடைவோம்!

    Share
  • தன்வந்திரி பீடத்தில் அள்ள, அள்ள குறையாத அக்ஷய திரிதியையில் ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹா யாகம்

     

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 18.04.2018 புதன் கிழமை அக்ஷய திரிதியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹா யாகம் நடைபெறுகிறது.

    சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, “அக்ஷய திருதியை” எனப்படுகிறது. ‘அக்ஷயம்’ என்றால் வளர்வது என்று பொருள். அக்ஷய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அதனால் அக்ஷய திருதியை அள்ள, அள்ள குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது.

    வனவாச காலத்தில், சூரியப் பகவானை வேண்டி தர்மர் அக்ஷய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அக்ஷய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அக்ஷய திருதியை தினத்தில் தான் என்று புராணங்கள் எடுத் துரைக்கின்றன. அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று, பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான்.

    தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும், பூமிபூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும். அக்ஷய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான அக்ஷய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை  நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால் நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் நல்லன எல்லாம் தரும் நாள்.

    அட்சய திருதியையன்று செய்யக்குடிய சுபகாரியங்கள் அனைத்தும் மென்மேலும் வளர்ச்சியடையும். தகுதியான நபர்களுக்கு தான, தர்மம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. பசுமாட்டுக்குக் கைப்பிடி அளவு புல், வாழைப்பழம் கொடுப்பது மகாலட்சுமியின் திருவருளைப் பெற வழி வகுக்கும். வற்றாத கடலில் இருந்து பெறப்படுகிற, எப்போதும் வீட்டில் இருப்பு வைத்திருக்கக்கூடிய உப்பைத் தானம் செய்வது எல்லோராலும் சாத்தியப்படக்கூடியது அல்ல. காரணம் உப்பை யாரும் தானமாகத் தர விரும்ப மாட்டார்கள். அதனால் உப்பு பயன்படுத்தப்பட்ட உணவை தானமாகக் கொடுத்துவிட்டு, லஷ்மி பூஜை செய்ய வேண்டும். ஏழையாகப் பிறந்த குசேலன், தன் நண்பன் கிருஷ்ண பரமாத்மாவைக் கண்டு செல்வம் பெற்றது இந்த நாளில்தான். பாஞ்சாலி துகிலுரியப்படும் நேரத்தில், குறையாத புடவையைக் கொடுத்து அவள் மானம் காத்தது இதே நாளில் தான். இன்றைய தினத்தில் கிருஷ்ண பரமாத்மாவுக்கு அவல் படைத்து பூஜை செய்தால் அஷ்டலக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும். வாழ்வு அமையும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான அக்ஷய திதியை முன்னிட்டு வருகிற 18.04.2018 புதன் கிழமை தன்வந்திரி பீடத்தில் ப்ரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் சன்னதி முன்பாக யாக குண்டம் அமைத்து 16 கலசங்கள் வைத்து தாமரை மணிகள், தாமரை புஷ்பங்கள், தேன், நெய் மற்றும் பலவிதமான விஷேச புஷ்பங்கள், திரவியங்கள் கொண்டு மாபெரும் ஸ்ரீ குபேர லஷ்மி யாகம் நடைபெற உள்ளது. நிறைவாக ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு 16 விதமான திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகமும் 1008 சொர்ண பைரவர் காசுகளை கொண்டு மகா அர்ச்சனையும் ஸ்ரீ குபேர யந்திர பூஜையும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

    Web: www.danvantritemple.org, www.danvantripeedam.blogspot.in

    Email: danvantripeedam@gmail.com

    Share
  • 100 நாட்களாக ஸ்ரீ மஹா கணபதி யாகம், ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், ஸ்ரீ மஹா தன்வந்திரி யாகம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி யாகம், ஸ்ரீ சுவர்ணகால பைரவர் யாகம் ஆகிய ஐந்து ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெற்றது

     

     

    வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில்கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நோய் தீர்க்கும் கடவுளும், ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஆவதாரமான ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு இன்று 19-03-2018 முதல் 26-03-2018 வரை தன்வந்திரி பீடத்தின் 14ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள சகல ஐஸ்வர்யம் தரும் சகல தேவதா ஹோமத்துடன், சஹஸ்ர கலசாபிஷேகம் முன்னிட்டு சென்ற 06.12.2017 புதன்கிழமை, புனர்பூசம் நட்சத்திரம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி ஆன்று தொடங்கி இன்று 19.03.2018 திங்கட்கிழமை வரை உலக நலன் கருதி 100 நாட்கள் ஸ்ரீ மஹா கணபதி யாகம், ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், ஸ்ரீ மஹா தன்வந்திரி யாகம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி யாகம், ஸ்ரீ சுவர்ணகால பைரவர் யாகம் ஆகிய ஐந்து ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெற்றது. 100 நாட்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இன்று மேற்கண்ட தெய்வங்களுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. மேற்காணும் ஐந்து யாகங்களிலும் வைத்து பூஜித்த தன்வந்திரி டாலருடன் ஹோம மஹா பிரசாதம் பெற விரும்புவோர் தன்வந்திரி பீடத்தை தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • தன்வந்திரி பீடத்தில் அமாவாசையில் சூலினி துர்கா ஹோமம்

     

    வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 17.03.2018 சனிக்கிழமை அமாவாசை திதியை முன்னிட்டு காலை 10.30 மணிளவில், பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி சூலினி துர்கா ஹோமம் நடைபெற உள்ளது.

    ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.

    அமாவாசையில் நடைபெறும் பூஜைகள் மற்றும் ஹோமத்தில் பங்கு கொள்வதால் சந்ததியினர் தோஷமில்லாமல் நலமுடன் வாழ வழி செய்கிறது. பித்ருக்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால்,அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும். துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைக்கப் பெறுவர்கள்.

    உலகத்தில் இன்றைக்கு இருக்கிற மோசமான வியாதிகளுள் ‘திருஷ்டி’ எனப்படும் வியாதி மிக கொடூரமான ஒன்று. இந்த திருஷ்டியினால் தனிப்பட்ட நபரின் முன்னேற்றம் பாதித்தல், குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல், தாம்பத்திய உறவில் விரிசல், நல்ல வேலையை இழத்தல், ஓரடி எடுத்து வைத்தால் இரண்டடி சறுக்குதல் உட்பட ஏராளமான பாதிப்புகள் விளைகின்றன. எனவே, ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள திருஷ்டியை அமாவாசையில், தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் சூலினி துர்கா ஹோமம், ஸ்ரீ ப்ரித்யங்கிரா ஹோமம், சரப ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம் போன்ற ஹோமங்களில் கலந்துகொண்டு ஏற்படும் திருஷ்டிகளை அவ்வப்போது கழித்துக் கட்டுவது நல்லது.

    ஒரே வீட்டில் இருவருக்கு இராகு தசை அல்லது கேது தசை நடப்பவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் தீரவும், நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும்,அகால மரணம் நிகழாமல் இருக்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் மேற்கண்ட ஹோமங்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடக்கவிருக்கிறது. இதில் அனைவரும் பங்கு கொண்டு பித்ருக்களின் ஆசிகளையும், ஸ்ரீ துர்கா தே

    வியின் அருளையும் பெற்று, பெரு வாழ்வு வாழலாம் என்று ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவிக்கிறார்.

    Share
  • தன்வந்திரி பீடத்தில் தீமைகள் நீங்கி நன்மைகள் தரும் திருஷ்டி துர்கா ஹோமம் நடைபெற்றது.

    IMG_20180116_083514

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி 9அடி உயரத்தில் பிரதிஷ்டை செய்துள்ள யக்ஞ ஸ்வரூபிணி ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரித்யங்கிரா மற்றும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி சன்னதி முன்பு 13 ஆண்டுகளாக அணயா ஹோமகுண்டமாக 12 அடி ஆழமுள்ள பிரமாண்டமான யாக குண்டத்தில் இன்று 16.01.2018 செவ்வாய்க் கிழமை அமாவாசை தினத்தை முன்னிட்டு ‘திருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது.

    IMG_20180116_115934

    இதில் பூசணிக்காய்கள் தவிர கொப்பரைத் தேங்காய், முறம், எலுமிச்சம்பழம், மிளகாய் வற்றல் பொட்டலம், மஞ்சள், குங்குமம், பழங்கள், மூலிகைகள், சிகப்பு வஸ்திரம், வேப்ப எண்ணெய், நெய், புஷ்பங்கள், பட்சணங்கள், வாசனாதி திரவியங்கள், மேலும் பல விசேஷ திரவியங்கள், குங்கிலியம், சௌபாக்கியப் பொருட்கள் அக்னியில் ஆஹுதியாகச் சமர்ப்பிக்கப்பட்டது.

    IMG_20180116_120153

    இந்த யாகம் மூலம் பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை ஜாதக ரீதியிலான தோஷங்கள், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்கள், மாத்ரு – பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • தன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்

    தன்வந்திரி பீடத்தில்

    சிவலிங்க ரூபமாக உள்ள

    468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும்

    ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 28.12.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக நலன் கருதியும் புனித மாதமான மார்கழி மாதத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு நடைபெறும் புனர்பிரதிஷ்டையை முன்னிட்டு ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது.

    ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம் சிறப்பு :

    சிவனின் அம்சம் ருத்ரன். யஜுர் வேதத்தில் ஆஹுதிகள் சமர்ப்பித்து, ஸ்ரீ ருத்ரரை வேண்டிக்கொள்ளும் ஒரு புனிதமான ஆற்றல் வாய்ந்த பிரார்த்தனை முறைதான் ருத்ர ஹோமம் என்பதாகும். ஸ்ரீ ருத்ர மந்திரங்களை ஜபித்துகொண்டே சிவனுக்கு பல்வேறுவிதமான புனிதப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வது ருத்ராபிஷேகம்.

    ஸ்ரீ ருத்ரம் – சமகம், வேத இலக்கியத்திலும் வைதீக பாரம்பரியத்திலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது. வித்யைகளில் மேலானது வேதங்கள். வேத மந்திரங்களிலேயே மேலானது ருத்ரஏகாதசி; ருத்ர மந்திரங்களிலேயே மேலானது பஞ்சாக்ஷரீ (நமசிவாய).

    நமசிவாய என்ற மந்திரத்திலேயே சிவா என்ற இரண்டெழுத்து மேலானது. மரத்தின் வேரில் ஊற்றப்படும் நீரானது, எல்லாக் கிளைகளுக்கும் பரவி அம்மரத்தையே செழிக்கச் செய்வது போல், ருத்ர ஜபத்தின் மூலம் ஸ்ரீ ருத்ர தேவனை வழிபடும்போது அனைத்து தேவர்களும் திருப்தியடைகிறார்கள். இது அனைத்து பாவங்களிலிருந்து விடுவிக்கும் சிறந்த பிராயச்சித்த ஹோமமாகவும், மேலான விருப்பங்களை அடைவதற்காகச் செய்யப்படும் ஆன்மீக சாதனையாகவும் இருக்கிறது.

    ருத்ர ஜபத்தால் எல்லாத் தேவதைகளுமே திருப்தியடைகிறார்கள் என்றும், நம்முடைய நேர்மையான பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன என்றும் உறுதியாக நம்பப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ருத்ர ஹோமம் நடைபெற்று 468 சித்தர்களுக்கு ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்திலும் அபிஷேகத்திலும் பக்தர்கள் கலந்துகொண்டு சித்தர்கள் அருள்பெற பிரார்த்திக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • தமிழ் ஹைக்கூ – 100 – அன்பின் அழைப்பு

     

    ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா’

     

    Haiku 100 copy

    Share
  • மொழிபெயர்ப்பாளர் மாநில மாநாடு!

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் மொழிபெயர்ப்பாளர் மாநில மாநாடு!  பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு

    மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் ஈரோடு யு.ஆர்.சி பள்ளி அரங்கில் 12.11.2017 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பேரவையின் மாநிலத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமையேற்றதோடு பேரவையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து உறுப்பினர்களிடையே விளக்கிப் பேசினார்.

    காலை 10 மணிக்குத்  தொடங்கி மாலை 7 மணிவரை நடைபெற்ற இக்கூட்டத்தில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

    • மக்கள் சிந்தனைப் பேரவையின் 20-ஆம் ஆண்டு நிகழ்வுகளை வருகிற 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஓராண்டு முழுக்க பல வடிவங்களில் தமிழகமெங்கும் நடத்துவது
    • பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் மொழிபெயர்த்து புதிய நூலாக்கப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மொழிபெயர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து மாநில அளவில் மொழிபெயர்ப்பாளர் மாநாட்டை திருச்சியில் 2018-இல் முழுமையான தயாரிப்புகளுடன் நடத்துவது எனவும் இதில் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களையும் பங்கேற்கச் செய்வது
    • தமிழகமெங்குமுள்ள இளம் பேச்சாளர்களை ஒருங்கிணைத்து தமிழக இளம் பேச்சாளர் மாநாடு ஒன்றினை ஈரோட்டில் நடத்துவது, இதில் தமிழ் மாநிலத்திலுள்ள ஏற்கனவே பேச்சுத் துறையில் ஈடுபாடும் ஓரளவு பயிற்சியும் கொண்ட முப்பது வயதிற்கு உட்பட்ட இளம் பேச்சாளர்களை இம்மாநாட்டின் பிரதிநிதிகளாகப் பங்கேற்க வைப்பது.
    • வருகிற டிசம்பர் 11-ஆம் தேதி ஈரோட்டில் பாரதி விழாவை சிறப்பாக நடத்துவது, இந்நிகழ்வில் தமிழறிஞர் சிலம்பொலி    சு. செல்லப்பன் அவர்களுக்கு பாரதி விருது வழங்குவது, கவிஞர் தமிழ்ஒளியின்  திருவுருவப் படத்தைத் திறந்து வைப்பது
    • மக்கள் சிந்தனைப் பேரவையை மாநில அமைப்பாக விரிவடையச் செய்வது,  ஏற்கனவே அமைப்புக்கள் உருவாகியுள்ள மாவட்டங்களில் பேரவையின் நடவடிக்கைகளை மேம்படுத்தவது, இதுவரை பேரவை உருவாகாத மாவட்டங்களில் உடனடியாக பேரவையின் மாவட்ட அமைப்பை உருவாக்க நடவடிக்கைகள் எடுப்பது. எதிர்வரும் காலங்களில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தை அடுத்தடுத்த மாவட்டங்களில் நடத்தி பேரவையின் மாநிலத் தன்மையை மேம்படுத்துவது. உள்ளிட்ட பல தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக மாநிலச் செயலாளர் ந.அன்பரசு வேலையறிக்கை வாசித்தார்.  பொருளாளர் க.அழகன்  வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார். துணைத்தலைவர் பேராசிரியர்                கோ.விஜயராமலிங்கம், துணைச் செயலாளர் ஜா. தினகரன் உள்ளிட்ட மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

    T.Stalin Gunasekaran,

    President,
    Makkal Sinthanai Peravai,
    A – 47, Sampath Nagar,
    Erode – 638011.
    Ph No : 0424  – 2269186.
    Share
  • குபேர லக்ஷ்மி யாகத்துடன் ஆரோக்ய லஷ்மி ஹோமம்

    தன்வந்திரி பீடத்தில்
    தீபாவளியை முன்னிட்டு
    குபேர லக்ஷ்மி யாகத்துடன்
    ஆரோக்ய லஷ்மி ஹோமம் நடைபெற்றது.

    செல்வம் தரும் லட்சுமி குபேர வழிபாடு

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 18.10.2017 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு உலக நலன் கருதி தீபாவளியை முன்னிட்டு மக்கள் ஆரோக்யத்துடன் வாழ்வில் வளத்தையும், செல்வத்தையும் பெற வேண்டி குபேர லக்ஷ்மி யாகமும் ஆரோக்ய லஷ்மி ஹோமமும் நடைபெற்றது.

    லட்சுமி குபேரன்’

    IMG_20171018_170025

    திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார்.திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். இதனால் ‘வாழப் பிறந்தவனுக்கு வடக்கு’ என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் ‘லட்சுமி குபேரன்’ என்று அழைக்கப்படுகிறார்.

    தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது.

    ‘ஓம் ய க்ஷய குபேராய வைஸ்ரவணாய
    தந தா நியாதி பதயே தந்தாந்ய ஸம்ருத்திம்மே
    தேவி தாபய ஸ்வாஹா’

    என்ற குபேரனின் மந்திரத்தை தியானித்து அவனை வழிபட வேண்டும்.

    லட்சுமி குபேரரை வழிபட்டால் நீங்காத செல்வம் நிலைத்து இருக்கும்.

    IMG_20171018_172435

    வீட்டில் அமைதி நிலவும். செல்வம் நிலைக்கும். என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் தீராத நோய்கள் பசிப்பிணி அகலவும். தானியங்களின் விளைச்சல் அதிகம்பெறவும். காரியங்களில் வெற்றி, மனோதைரியம் குழந்தைப் பேறு, அனைத்து காரியங்களில் வெற்றி, தெய்வீக அருள் கிடைக்கவும், கல்வியும் செல்வமும் பெற்று வாழ்க்கையில் சௌபாக்கியங்களுடன் ஆரோக்யம்,ஆனந்தம் ஜஸ்வர்யத்துடன் வாழவும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 18.10.2017 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு உலக நலன் கருதி தீபாவளியை முன்னிட்டு மக்கள் ஆரோக்யத்துடன் வாழ்வில் வளத்தையும், செல்வத்தையும் பெற வேண்டி குபேர லக்ஷ்மி யாகமும் ஆரோக்ய லஷ்மி ஹோமமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மேற்கண்ட யாகத்திலும் இதனை தொடர்ந்து நடைபெற்ற அபிஷேகத்திலும் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share