வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து ஹோமம், சத்ரு சம்ஹார ஆறுமுகஹோமம் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞனகுரு” டாக்டர் ஸ்ரீ முரளித ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 04.06.2018 திங்கட்க் கிழமை காலை 10.00 மணியளவில் வாஸ்து நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் ஷஷ்டி திதியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஆறுமுக ஹோமமும் நடைபெற்றது. மேலும் இதில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பஞ்சபூதங்களுக்கும், அஷ்டதிக்பாலகர்களுக்கும், வாஸ்து பகவானுக்கும், கார்த்திகை குமரனுக்கும் மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இந்த யாகங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருட் பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார். இதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. மேலும் நாளை 05.06.2018, 06.06.2018 நடைபெற உள்ள மங்கள சண்டி யாகத்தின் பூர்வாங்க பூஜைகள் இன்று நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.