Category: கிரேசி மொழிகள்

கிரேசி மொழிகள்

  • வைகாசி விசாகம்….

    PAZANI....1111....

     

    தைபூச நாயகன், கைபேசும் வேலோடு,
    மைபூசும் வள்ளி மணவாளன், -வைகாசி
    நன்நாள் விசாகத்தில் நீலமயில் ஏறியுலா,
    தென்பழனி விஞ்ச்சில் தவழ்ந்து ….கிரேசி மோகன்….

    Share
  • சந்திர கிரகணம்….

    கிரேசி மோகன்
    ”சிவன்தலை சூடிய சந்திரனை பாம்பு
    கவர்ந்திடு மோவாயால் கவ்வி!, -சிவந்ததுமூன்(BLOOD MOON)
    போக்கில் தடம்மாற, பூமி புகுந்ததால்
    காக்காஊஷ் ஆச்சு கலை’’….

    (அல்லது)

    ‘சிவன்தலை சூடிய சந்திரனை பாம்பு
    கவர்ந்திடு மோவாயால் கவ்வி!,-உவந்திடும்,
    அஞ்ஞானக் கேள்விக்(கு) அட!பதில் என்னவோ!,
    விஞ்ஞானம் விட்ட வழி’’….
    ’’அகந்தை கிரகணம் ஆன்ம நிலவுள்
    புகுந்து பிடிக்கும் பளிச்சை, -உகந்துன்னுள்,
    நானார் விசாரிக்க நம்மைவிட்(டு) ஓடும்:
    சோணா சலரமணன் சொல்’’….கிரேசி மோகன்….

    Share
  • அன்னை அந்தாதி

    கிரேசி மோகன்
    ———————-

    காப்பு
    ——–

    images

    துலங்குவெண் நீறு துனிப்பிறை கோடு துணைக்கரங்கள்annapoorna-204x300
    இலங்கரன் பாகம் இடப்புறம் ஏகும் இமையவளின்
    வளம்புகழ் வீரம் வணங்கியந் தாதி யினிலுரைக்க
    களம்புகுந் தானை முகத்தனைக் கொன்றோன் பதமரணே….(1)….

    அரனும் அரியும் அயனும் அளிக்க இயன்றிடாத
    வரம்தரும் கற்பக வல்லியின் பாதம் வழுத்திடுவோர்
    நரனாய்ப் பிறந்து நடைபிண வாழ்வில் நலிந்திடாது
    பரணப் பரத்துப் பதவியால் வெல்வர் பிறப்பிறப்பே….(2)….

     
    பிறவா வரம்தரும் மாறிப் பிறந்தால் எமன்கரத்தால்
    இறவா திருந்திடச் செய்யும் இதய குகைதனிலே
    மறவா தெழுந்தரு ளும்பார், மகனே எனவழைத்து
    உறவாம் அபிராமி மாதா உறவிந் துலகினிலே….(3)….

     
    உலகவள் நெற்றி விழிவந்து காய்ந்த ஒளித்துகளே
    திலகமாய் அங்கு திகழும் பரிதியும் திங்களுமே
    உலவிடும் செவ்வாய் புதன்வ்யாழன் வெள்ளி கிரகமெலாம்
    கலகங்கள் செய்யா கதியென் றவள்பாதம் கொள்ளுமினே….(4)….

     
    கொள்பவள் கற்பகம், வெல்பவள் காளி, கவிபுனையச்durga_face
    சொல்பவள் பாரதி, செல்வமகள் லஷ்மி, சேர்த்தணைத்து
    செல்கையில் தாயார், சினந்திட தோப்பனார், நேசமதை
    நல்கிட நண்பன் நலம்தரு தோழியின் நானிலத்தே

    (OR)தோழி எனஅவளே….(5)….

     
    அவளை நினைத்து அவலை இடித்தால் அவளசையாள்
    அவளைத் துதித்தல் அவளை ஸ்மரித்தல் அவளருளே
    அவளே நமக்குள் அவளாய்த் திளைத்தால் அதுயிகமே
    அவளில் கலந்து அவளாய் முடிந்தால் அதுபரமே….(6)….

     
    பரசிவ வெள்ளம் பராசக்தி உள்ளம் புரிந்துணர்தல்
    பெறுதவம் ஆகும் பிரபஞ்சம் வந்து பிறந்திறக்கும்
    உறுமவம் நீங்கும் உலகிதன் மாய உருவொழிந்து
    சருவமும் சக்தி உருவெனும் உண்மை வசப்படுமே….(7)….

     

    வசமான சித்தி விஷமாம்அதனைவிரும்பிடாதே
    நிசமான கூலி யசமானி அம்மா நிழல்துணையே
    அசலான தெய்வம் அவளுண்டு வேறே அணுக்கமெலாம்
    பசையாகக் கம்பளிப் போர்வையில் ஒட்டும் பிசுபிசுப்பே….(8)….

    Goddess Parvati

    பிசுபிசுத் தோடும் பிறவிப் பிணிகள் கொசுக்கடியாய்
    தசகத் தலைகள் துணித்தவன் தங்கை திருவடிமுன்
    திசையெட்டு தீவளி அப்புமண் எங்கும் திகழ்பவளை
    வசனித்த பட்டர் அபிராமி அந்தாதி வாழ்த்துமினே….(9)….

     
    வாழ்த்த வயதுண்டு வல்லாள் அவளென்றும் வாலையடா
    பாழ்தவம் பூணும் விரதங்கள், பக்தியே போதுமடா
    நாழ்பட நாழ்பட நம்பிக்கை சேர்த்திடும் நாயகிமுன்
    தாழ்வு உயர்வெலாம் தாயவள் கண்முன் தளசமமே….(10)….

     

     

     

     

     

    சமமவள் நோக்கு சரியோ தவறோ சரணடைய477339
    இமையெனக் காத்து இருகரம் நீட்டி இகபரத்தை
    அமைவுறச் செய்வாள் அபிராமி அன்னை அவளிருக்க
    சமயமாய் வீணே சடங்குகள் செய்தல் சிரிசிரிப்பே….(11)….

     
    சிரித்திட மாதுளை, சம்புமுன் கொவ்வை, சினமடைந்து
    முறைத்திட பாகல், முறுவலில் முல்லை, முனிகணங்கள்
    சிரத்தினில் காய்ந்து சிவப்பழம் ஆகிடும் செவ்விதழை
    தரித்திடும் தாய்முன் தலைவணங் கித்தாள் தொழல்தவமே….(12)….

     
    தவமறியேன் தான தர்ம மறியேன் திருமுறைகள்
    விவரமாய் கூறும் வழிய றியேன்தாள் வணங்கிடுவோர்
    சிவமறியேன் சக்தி வழிபா டறியேன் சலித்திடும்
    அவமறிந்தேன் அம்மா அதனால் வந்தேன் அருள்பெறவே….(13)….

     
    பெறவந்தேன் பேரின்பம் பிச்சி யுனைப்போற்றி பாசுரங்கள்
    அரவிந்த தாதுவை அள்ளும் அளிபோலே அம்பிகையே
    குறவன்தன் பெண்வள்ளி கொண்டவன் கையில்வேல் கொள்ளவன்றுimages (1)
    தரவந்த துள்ளலில் தந்தருள இங்கு வாவுமையே….(14)….

     
    (உமையாளை ஈசன் சுமையாளை பக்தர் படுந்துயர்க்கு
    குமைவாளை கண்கள் இமையாளை கஷ்டம் களையபக்கம்
    அமைவாளை சொல்லில் சமையாளை இல்லா உவமையாளை)

    வாயுண்ட தாம்பூலம் சிந்த வரதன் வரகவியாம்
    வாயென்றும் பேசாத மூகனோ வாக்கிற்(கு) அதிபதியாம்
    வாயென்ற பட்டர்க்கு வானத்தில் வந்த வளர்பிறையே
    தாயென்ற போர்வையில் தந்தைக்(கு) இணையான தத்துவமே….(15)….

     
    தத்துவக் கோலுக்குத் தேறா தருகற் பகமவளாம்
    சத்தியம் தர்மங்கள் சார்ந்தோர் சிந்தையிலும் சிக்கவொணா
    பத்தினி பக்தர்தம் பித்துக்(கு) அடிமையாம் பிச்சியவள்
    உத்தமி ஈசர்தம் உடலி டபாகம் உற்றவளே….(16)….கிரேசி மோகன்….

    Share
  • பண்டரி தரிசனம்!

    கிரேசி மோகன்

    ஸ்ரீமத் பாண்டுரங்க பக்த விஜயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்….வெண்பாவில் எழுத வழக்கம் போல் ஆசை வந்தது….காப்புச் செய்யுள் எழுதி கணபதியிடம் முடித்துத் தரும் பொறுப்பை விட்டு விட்டேன்….பார்க்கலாம் என்ன ஆகிறதென்று….

    images

    காப்புச் செய்யுள்
    ———————

    “பண்டரி நாதரின் பக்த விஜயத்தை,
    சுண்டெலி தாங்கும் சிவக்கொழுந்தே -விண்டுரைக்க
    வாராய் விநாயகா வாக்கில் அமர்ந்தெனக்கு
    தாராயுன் தம்பியின் தமிழ்”…..கிரேசி மோகன்…

    “வனிதை பதுமா வதியை வரித்து
    புனிதமண வாழ்வில் புகுந்தார்;-இனிதான
    பாரியா ளோடு பிணைந்தாலும், போக்கினார்
    பூரியானில் பூரித்து போது”

    “விரகதா பத்தால் வெயிலாய் தலையில்,
    கரகமாடும் சூட்டைக் குறைக்க, -உருகுமுந்தன்,
    பாதப் பனிமலரை ராதேவை” என்பதாய்
    கீதகோ விந்தக் கவி”

    “பதிவிரதா தர்மம் பழகிடும் பத்மா
    வதிவழி பாடு ,விரதம் -துதியென்று
    கஷ்டப் படாமலே கண்டாள் கணவனாய்,
    அஷ்டபதி நாயகனை அன்று”….

    —————————————————————————

    images (1)
    நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
    நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
    வளிசொல்லி பண்டரி விட்டலனை வாழ்த்தி
    களிகொள் அடியார்தம் கூட்டு….

    இல்லா ததைத்துரத்தி செல்லா ததைச்சேர்த்து
    பொல்லா தவனென்ற பேர்வாங்கி -நில்லாது
    விட்டிலென மாயா வெளிச்சத்தில் வீழாது
    விட்டலிருள் வண்ணன்தாள் வீழ்.

    தொட்டால் சுடுவான் தொடாமல் இருப்போரை
    கொட்டோகொட் டென்று குளிர்விப்பான் -விட்டலன்
    சுட்டபழம் ஏற்பான் சுடாத பழங்களை
    பட்டறையில் வைப்பான் புதைத்து

    வாழை யடிவாழை வந்தோர் வளத்துடன்
    வாழ அடிவைப்பாய் வீட்டுக்குள் -ஏழை
    சகாயா ஏபாண்டு ரங்கா என்னுள்
    புகாயோ புகல்வாய் பதில்.

    வண்டரி யென்றரி யாமலே வந்திரு
    புண்டரி காட்ஷத்தைப் பார்க்கின்ற -பண்டரி
    விட்டலா செங்கலை விட்டுவா வெவ்வினை
    கொட்டுதே தேளாய்க் கடுத்து.

    சேணம் பிடித்தைவர் சேனை ஜெயித்திட
    வானத்து வைகுண்டம் விட்டகன்ற -ஓணத்தன்
    வாத புரீசன் வடமதுரா மன்னவன்
    கீதகோ விந்தந்தாள் காப்பு.

    “விட்டலை(விட்டு அலை) பாற்கடல், வீர மராத்தியர்
    கட்டளைக்கு கல்லேறி காத்திருக்கும்- விட்டலை,
    பாண்டுரங்க நாதனை, பண்டரி தேவனை
    வேண்டுவோர்க்கு வாழ்விலென்றும் WIT”….

    Share
  • ’’காரடையான் நோன்பு’’….

    கிரேசி மோகன்
    —————————————————-

    maxresdefault

    ”ஆயிரம் பேருடையான் ,ஆண்டாளின் தாருடையான்
    பாயிரம் நாலா யிரமுடையான் -ஆயினன்
    சீரடைவு கொண்டு சுமங்கலியாய் வாழ்ந்திட
    காரடையான் நோன்பில்கால் கட்டு”….

    ”பாம்பில் படுத்தவனைப், பத்த வதாரனை,
    சாம்பலான் பத்தினி சோதரனை, -நோம்பன்று,
    கண்ணனை நெஞ்சில் கருதி மணிக்கட்டில்
    கண்ணிநுண் தாம்பாகக் கட்டு’’….கிரேசி மோகன்…..

    Share
  • வெண்பாக்கள்

    VSP (வெத்திலை ,சீவல் ,புகையிலை) வெண்பா….

    Image0720

    “வெற்றிலை பச்சைமால் , வெள்ளைசுண் ணாம்புசிவம்
    முற்றியபாக் கேநான் முகனாராம் -உற்றிட
    தாம்பூ லவாய்சிவக்கும் தாயம்பாள் வண்ணத்தில்;
    பான்முலம் பேரின்பம் பார் “….

    “மாலே டிகாக்ஷனாம் மையிருள் வண்ணத்தில் ,
    பாலோ அரனின் பளிச்வெண்மை, -நாலும்
    படவுலகைப் பார்ப்போன் பிரவுன் சுகராம்;
    கடவுளைக் காப்பியில் காண்”….கிரேசி மோகன்….

    Share
  • ஸ்ரீ ரமண பகவான்….

    images (1)

    பகவான் ஸ்ரீரமண மஹரிஷியின் ஆராதனையை முன்னிட்டு…..
    பகவான் உவாச
    ——————————
    ’’சித்தப்பா வீட்டில்நான், செத்தப்பா ஆனதும்,
    முத்தாய்ப்பாய் கேட்டேனோர் சத்தத்தை, -வத்தாத,
    ஜீவநதி ‘’நான்ஆன்ம” சாகர சங்கமிப்பை,
    சாவதனில் கண்டேன் சுகம்’’….

    ’’வந்தது சாவு, வரட்டுமே சாவென்றால்,
    எந்தஎது சாகிறது என்றவினா, -தந்த,
    பலத்தால் மரண பயத்தை எதிர்த்தேன்
    களத்தில் இறந்தது கூற்று’’….

    ’’வந்த இறப்பை, வரவேற்று வாசியின்றி,
    அந்தநிலையில் ஆழ்ந்து அடுத்ததாய், -இந்த,
    உடலை எடுத்து, சுடலை நெருப்பில்,
    விடுவதைப் பார்த்தேன் வியந்து’’….
    ’’உடல்போன பின்பும், உயிர்போன பின்பும்,
    கடல்போல என்னிருப்பைக் கண்டேன், -மட’நான்’போய்,
    தான்குவித்த குப்பையை, தானே களைந்தது,
    நான்கவஸ்த்தை தாண்டிய ‘’ நான் ‘’….கிரேசி மோகன்….
    ————————————————————-
    ’’சொக்கப்ப நாய்க்கர், மதுரைச் சந்தில்இ,
    லக்கம் பதிணொன்னில் லீலையாய், -மிக்கதோர்,
    அச்சமாம் காலனை, துச்ச மெனவுதைத்த,
    அச்சிறுவன் தாளே அரண்’’….கிரேசி மோகன்….
    ———————————————————————————————————————–

    Share
  • பெண்கள் தினம்

    maxresdefault
    ”பெண்கள் தினத்தில்” பகவான் ஸ்ரீரமணர் பசி தீர்த்த
    பெண்கள்….எச்சம்மா பாட்டி, முதலியார் பாட்டி, கீரைப்பாட்டி
    இவர்களை நினைப்போம்….

    ”போட்டி இடுவார்கள் பிட்ஷை இடுவதற்கு
    பாட்டிகள் சேர்ந்து பகவானுக்கு -ஏட்டில்
    எழுத இயலாது ஏழைக் கிழங்கள்
    தொழுத விதம்தான் தவம்”….

    ”முதலாக எச்சம்மா, மூன்றில் நடுவே
    முதலியார் பாட்டி, முடிவில் -உதவியாய்
    சோறை ரமணருக்(கு) சேகரித்து வந்தவள்
    கீரைக் கிழவியாம் காண்”….கிரேசி மோகன்….

     

    Share