நைஜீரியாவில் படிக்கும் ஷ்ரவந்தி பிரசன்னா, என் தம்பி மகள். விடுமுறைக்காகச் சென்னைக்கு வந்திருந்தார். அவருடன், கடந்த வாரம் கணுப் பொங்கல் அன்று ஒர் உற்சாக உரையாடல்.
ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இரண்டாவது ஸ்லோகம். ஓர் அற்புதமான காட்சி, நம் முன் விரிகிறது. சக்தியின் ஆற்றல், எங்கும் விகசித்து நிற்கிறது. இதை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.
ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரி, பக்தி இலக்கியத்தில் ஒரு மாணிக்கம். காலங்களைக் கடந்து நிற்கும் கவிதைப் பெட்டகம். சிந்தையைச் சிலிர்க்க வைக்கும் செவ்வியல் சித்திரம். சௌந்தர்ய லஹரி என்பதற்கு அழகின் அலைகள் எனப் பொருள். அன்னையின் அழகை விதந்தோதும் இந்த அலைகளின் ஒவ்வொரு துளியும் அமுதம். இந்த மதுரகவியைத் தமிழில் விளக்குகிறார், கவிஞர் மதுமிதா. பருக வாருங்கள்.
தக்காளிக் காய் மசியல், சுவையும் சத்தும் நிறைந்தது. இதைக் கலந்து சாப்பிட்டால், சாப்பாடே களை கட்டும். இதை எப்படிச் செய்வது தெரியுமா? இதோ சுதா மாதவன் செய்து காட்டுகிறார். நீங்களும் செய்து பாருங்கள்.
பொங்கல் அன்று தாம்பரத்தில் இந்தச் சாய்பாபா ரதத்தைப் பார்த்தேன். ரதம் முழுக்க ஷிர்டி சாய்பாபா படங்களும் சிலைகளும் இருந்தன. கூடவே திருமால், இலட்சுமி, விநாயகர்… என இந்து தெய்வங்களின் படங்களும் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் இந்த ரதத்துக்குச் சிறிய காணிக்கைகள் கிடைத்தவண்ணம் இருந்தன. இந்த ரதத்தை இயக்குபவருக்கு இதுவே முழு நேரத் தொழில். அவருடன் ஒரு சிறிய உரையாடலும் இந்தப் பதிவில் உள்ளது.
ரதத்துடன் ஒலித்த இந்திப் பாடலுக்குக் காப்புரிமை இருப்பதால், ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரை வேண்டினேன். சாயி பக்தரான அவர், உடனே ஒரு பாடலை இயற்றி இசையமைத்துப் பாடிக் கொடுத்துவிட்டார். இதைக் கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.
பெரியசாமித் தூரன் இயற்றிய ‘பழனி நின்ற பரமன் தந்த பழமதான தெய்வம்’ என்ற பாடல் மிக இனியது. அழகு தெய்வம் அருளில் தெய்வம், குழந்தை தெய்வம் குமர தெய்வம் என முருகனைக் கொஞ்சிக் கொண்டாடுகிறார். இதை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் இன்னும் உயரே எடுத்துச் செல்கிறார். கேட்டு மகிழுங்கள்.
‘முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்’ என்ற பாடல், பெரியசாமித் தூரன் இயற்றியது. இதை, கேட்போர் உருகும் வண்ணம் பாடுகிறார், ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார். இந்தத் தைப்பூசத் திருநாளில் இதைக் கேட்டு மகிழுங்கள். முருகப் பெருமான் அருள் பெறுங்கள்.
சென்னைப் புறவழிச் சாலையில் அண்மையில் 100 கி.மீ. வேகத்தில் ஒரு சோதனைப் பயணம் மேற்கொண்டோம். சென்னையில் வேறு எங்கும் இவ்வாறு செல்ல இயலாது. புறவழிச் சாலையிலும் போக்குவரத்து குறைவாக இருக்கும் சில இடங்களில் மட்டுமே இவ்வாறு செல்ல இயலும். அந்த வேகத்தில் மாருதி டிசயர் வாகனத்தின் அதிர்வையும் இரைச்சலையும் நிலைத்தன்மையையும் இதில் நாம் கவனிக்கலாம்.