சந்தைப் பொருள்களில் பல அடுக்குகள் உண்டு. உயர்வகைப் பொருள்களுக்கும் இரண்டாம்கைப் பொருள்களுக்கும் இடையில் எவ்வளவு விலை வேறுபாடு இருக்கிறது? இவற்றுக்குப் பின்னால் உள்ள வாய்ப்புகள், கணக்கீடுகள், அணுகுமுறைகள், மனநிலைகள் என்னென்ன? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார்.
மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே நிகழும் சண்டைகள் குறித்து நிறையப் படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். எப்படிச் சண்டை ஆரம்பிக்கிறது? இதில் கணவன் என்ன செய்ய வேண்டும்? சண்டையைத் தீர்ப்பது எப்படி? தவிர்ப்பது எப்படி? ஆலோசனை வழங்குகிறார் எழுத்தாளர் நிர்மலா ராகவன்.
உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
நாம் வாங்க விரும்பும் ஒரு பொருளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது? பிராண்டு, விலை, சலுகை, வழக்கம், தரம், அழகு, சந்தைப்படுத்தல்… எனப் பல காரணங்கள் இருக்கையில் நுகர்வோர் இவற்றில் எதை முக்கியமாகக் கொள்ள வேண்டும்? இதே போன்று அந்தப் பொருளை வீட்டுக்கு அருகில் உள்ள சிறிய கடையில் வாங்குவதா? பேரங்காடிகளில் வாங்குவதா? அல்லது இணையத்தில் வாங்குவதா? உள்நாட்டுப் பொருளா? வெளிநாட்டுப் பொருளா? எது நுகர்வோரின் முன்னுரிமையாக இருக்கலாம்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் தமது கருத்தை முன்வைக்கிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.
நம்ம ஊர்க் கடைகளில் அடிக்கடி தென்படும் டிராகன் புரூட், கண்ணைக் கவர்ந்தது. இன்று அதை வாங்கி வந்தோம். உள்ளே எப்படி இருக்கு, இதன் சுவை எப்படி இருக்கு எனப் பார்க்கலாமா?
தமிழர் பலரும் மறந்துவிட்ட தவலை வடையைச் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். படப்பதிவு, சகஸ்ரா அஜய்.
மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டில் அவர் இயற்றிய பாடல்களைத் தொடர்ந்து இசைப்பாடலாக வலையேற்றி வருகிறோம். இதோ, அவரது அழியாப் புகழ்பெற்ற அமர கீதம், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’. மாயக் கண்ணனின் லீலா விநோதங்களை அனுபவித்துக் கொண்டாடுகிறார் பாரதியார். வண்ணமயமான இந்தப் பாடலைக் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.
பிளேடு விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் கில்லெட் இப்படிச் செய்யலாமா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் அவர்களுடன் ஓர் உரையாடல். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.
இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அமைத்துள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தின் உள்ளே ஒரு வலம் வரலாம் வாருங்கள். இது, கலை மற்றும் தொல்லியல் துறைக்கான சிறப்பு அருங்காட்சியகம் ஆகும். ஏராளமான அரும்பொருள்களைச் சிறப்பாகப் பேணிக் காத்து வருகிறது. ‘இதில் இருக்கும் திருமங்கை ஆழ்வார் சிலை, தமிழ்நாட்டில் ஒரு கோவிலிலிருந்து திருடப்பட்டது. எனவே அதைத் திருப்பித் தர வேண்டும்’ என்று கடந்த ஆண்டு இந்திய அரசு இந்த அருங்காட்சியத்தைக் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
The Ashmolean Museum of Art and Archaeology, Oxford, England, is the world’s second university museum (after the establishment of the Kunstmuseum Basel by the University of Basel, Switzerland, in 1661) and Britain’s first public museum.
ஓவியர் ஜெயராஜ், தமிழ் இதழுலகில் தடம் பதித்த சித்திரக்காரர். சிறுகதைகள், தொடர்கதைகள், படக்கதைகள், புத்தகங்கள், பாடநூல்கள்… என 64 ஆண்டுகளாகப் பல்லாயிரம் ஓவியங்களைப் படைத்து அளித்து வருகிறார். தமக்கெனத் தனிப் பாணி, முத்திரையுடன் எழில் குலுங்கும், இளமை ததும்பும் ஓவியங்களைத் தீட்டி வருகிறார். சுஜாதாவின் கணேஷ் – வசந்த், பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி – சீதாப்பாட்டி எனப் பல பாத்திரங்களை வாசகர்கள் மனத்தில் பளிச்சென அமர வைத்தவர். 84 வயதுடைய மூத்த ஓவியர் ஜெயராஜ் அவர்களை இளம் ஓவியர் ஸ்யாம் சந்தித்து உரையாடுகிறார். இந்தக் கலகலப்பான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.