Category: செய்திகள்
-

Kalaignar Award to Aaroor Dass
Baskar Seshadri
Renowned Dialogue and Screen Writer Aaroor Dass is to be given a Purse of Rs, Ten Lakhs (கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது) tomorrow for His contribution to Tamil cinema.
He started His career with Sandow Chinnappa Thevar in 1959 but came to lime light with the Powerful Dialogues in Paasa Malar, A sivaji Ganesan Starrer and a Box office Hit. This was in 1961 and there was no turn back.
He worked with Sivaji, MGR and Gemini Ganesan for Long Years and also was an assistant Director with Bhimsingh and A C Thiruokchander and Thirumugam of Devar Films. He was very active even in Eighties with The Block Buster Vidhi of Sujatha Films.
The Person who introduced Aaroor Dass to Nadigar Thilakam was The Veteran Gemini Ganesan. Aaroor Dass is 91 now and Lives In T.Nagar, Chennai.
-

ஈழப் போராளிகளுக்காக நீத்தார் கடன்
மறவன்புலவு சச்சிதானந்தன்
சிவ சேனைவைகாசி தேய்பிறை நாள்கள் இலங்கையில் சைவத் தமிழருக்குத் துன்பியல் நாள்கள்.
403 ஆண்டுகளுக்கு முன்பு, வைகாசி தேய்பிறை எட்டாம் நாளில், கத்தோலிக்கப் போத்துக்கேயர் சைவத்தமிழ் மன்னனான சங்கிலியனைப் போரில் தோற்கடித்தனர்.
13 ஆண்டுகளுக்கு முன்பு வைகாசி தேய்பிறை ஆறாம் ஏழாம் எட்டாம் நாள்களில் சிவபூமியான வன்னியில் நடைபெற்ற சிங்கள – தமிழ்ப் போரில் இலட்சக்கணக்கான சைவத் தமிழ் மக்களைக் கொன்று குவித்தனர் புத்த சிங்கள அரசினர்.
சைவத் தமிழர் மரபுக்கு அமைய வைகாசி தேய்பிறை ஆறாம் ஏழாம் எட்டாம் நாள்களில் அன்றைய சங்கிலியனையும் இன்றைய போராளிகளையும் தோற்கடித்த போரில் உயிரிழந்த சைவத்தமிழர்களுக்காக
ஆண்டுதோறும் இலங்கையிலும் இந்தியாவிலும் நீத்தார் கடன் பிதிர்க் கடன் ஆற்றி வருகிறோம்.
வடக்கே காசியின் கங்கைக் கரை தொடக்கம் தெற்கே தாமிரபரணி வரை பரந்த நிலப் பகுதி எங்கும் நீர்நிலைகள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு அர்ஜுன் சம்பத் தலைமையில் நீத்தார் பிதிர்க் கடன் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீச்சரர் கோயில் திருக்குளத்தில் நடைபெற்ற பிதிர்க்கடன் நிகழ்ச்சியின் படங்களை இணைத்துள்ளேன். பிதிர்க் கடனாற்றும் பேறும் நீத்தாருக்காக வழிபடும் பேறும் மறவன்புலவு சச்சிதானந்தனுக்கு உரியதாயிற்று.
-

பொதுநபர் நால்வரை முதன்முதல் விண்வெளி நிலையத்தில் இறக்கிய ஸ்பேஸ் X
சி. ஜெயபாரதன், கனடா
NASA’s SpaceX Crew-4 Astronauts Launch to International Space Station
SpaceX lifts off on historic space mission to ISS l GMA
The Crew-4 mission includes 33-year-old NASA astronaut Jessica Watkins, who will be the first Black woman to live on the International Space Station for a long-term mission.
முதன்முதல் ஸ்பேஸ் X உள்ளூக்கி -4 விண்சிமிழ் நான்கு பொது ஆய்வாளரை அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கியது.
2022 ஏப்ரல் 27 இல் அமெரிக்கா பிளாரிடா நாசா கென்னடி ஏவு தளத்திலிருந்து ஸ்பேஸ் X மீள்பயன்பாடு ஃபால்கன் [REUSABLE] ராக்கெட் நான்கு பொதுநபரை உள்ளூக்கி-4 [INSPIRATION -4] விண்சிமிழ் தூக்கிச் சென்று, முதன்முதலாக அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் இறக்கியது. விண்வெளி நிலையம் பூமிக்கு 250 மைல் உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. விண்சிமிழ் 350 மைல் உயரத்தில் பூமியை மூன்று நாட்கள் சுற்றி முதன்முதல் சுற்றுலாப் பயணம் செய்து, கீழிறங்கி நிலையத்துடன் இணைந்தது. அந்த மூன்று நாட்கள் பயணம் செய்த நான்கு விஞ்ஞானிகள் உடல்நிலை சோதிப்பு செய்வார். அந்த பொது விஞ்ஞானிகள் 38 வயது ஜார்டு ஐஸாக்மன், 29 வயது ஹேலி ஆர்செனா, 41 வயது கிரிஸ் செம்பிராக்ஸி, டாக்டர் சியான் பிராக்டர். அவர்கள் யாவரும் விண்வெளிப் பயிற்சி பெற்றவர். ஒவ்வொரும் இதற்கு 55 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தியுள்ளார். .
தகவல்
- https://www.nasa.gov/press-release/nasa-s-spacex-crew-4-astronauts-launch-to-international-space-station
- https://www.space.com/spacex-crew-4-nasa-astronaut-launch-webcast
-
SpaceX takes 4 astronauts to the International Space Station | CBC News
- https://youtu.be/okzFagWtW64
- https://youtu.be/21X5lGlDOfg
-

மு. இளங்கோவனின் மணல்மேட்டு மழலைகள் – ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா
குழந்தைகளுக்கு விருப்பமானவை பாட்டும் கதையும் ஆகும். இன்றைய விரைவு உலகத்தில் நம் குழந்தைகளுக்கு இவை கிடைப்பதில்லை. இக்குறையை உணர்ந்து, முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டுச் சுவைக்கும் வகையில் மணல்மேட்டு மழலைகள் என்ற தலைப்பில் எழுதிய பாடல்களை நூல்வடிவில் வெளியிட்டுள்ளார். புதுவை இசையறிஞர் கலைமாமணி கா. இராசமாணிக்கனார் அவர்களின் மேற்பார்வையில் இசைத்தென்றல் இராஜ்குமார் இராசமாணிக்கம் அவர்கள் இப்பாடல்களுக்கு இசையமைத்து ஒலிவட்டாக உருவம் கொடுத்துள்ளார். இந்த ஒலிவட்டினையும் நூலினையும் மாண்புமிகு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் அரங்க. செல்வம் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி வெளியிட உள்ளார்கள். அறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அழைப்பின் மகிழ்வில்
வயல்வெளித் திரைக்களம்
புதுச்சேரி – 605 003நாள்: 25. 04. 2022 / நேரம்: மாலை 6.30 மணி
இடம்: செயராம் உணவகம் (Hotel Jayaram), புதுச்சேரி
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி கா. இராசமாணிக்கம் அவர்கள்
தலைமை,
ஒலிவட்டு மற்றும் நூல் வெளியீடு
மாண்புமிகு பேரவைத் தலைவர் ஏம்பலம் அரங்க. செல்வம் அவர்கள்
புதுச்சேரி சட்டப்பேரவைஒலிவட்டு முதல்படி பெறுதல்
திரு. கே.பி. கே. செல்வராஜ் அவர்கள்
தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்நூல் முதல்படி பெறுதல்
புரவலர் திரு. ந. க. குணத்தொகையன் அவர்கள், புதுச்சேரிஅருளாசியுரை
தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்
இருபதாம் பட்டம், பொம்மபுர ஆதீனம்ஒலிவட்டுச் சிறப்புப் படிகளைப் பெறுதல்
முனைவர் வி. முத்து அவர்கள்
தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம்
பேராசிரியர் சு. பழனியாண்டி அவர்கள்
தாளாளர், சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி, மோகனூர்மருத்துவர் ச. முத்துராமன்
பொறியாளர் ச. பார்த்தசாரதி, ஆசிரியர் – வலைத்தமிழ்
சிங்கைக் கவிஞர் அ. இளங்கோவன் அவர்கள்
வாழ்த்துரை
பேராசிரியர் ப. சிவராசி,
இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடிஒலிவட்டு அறிமுகவுரை
பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன்வரவேற்புரை
திரு. தூ. சடகோபன் அவர்கள்நன்றியுரை
திரு. கோ. முருகன் அவர்கள்
புதுச்சேரி இலக்கிய வட்டம். -

வீட்டுக் கடனுக்குக் காப்பீடு எடுக்கிறீர்களா? உஷார்! உஷார்!
எம் எஸ் லட்சுமணன்,
காரைக்குடிவீட்டுக் கடன் வங்கியில் வாங்கப் போகிறீர்களா? மக்களே உஷார் ! உஷார்!
பிராப்பர்டி இன்சூரன்ஸ் எடுக்கப் போகும் முன் கவனமாக இருங்கள் மக்களே !
10 வருஷ லோனுக்கு 20 வருடம் பிரீமியம் கட்டும் அவலம் !
விழிப்புணர்வுப் பதிவு
நண்பர்களே சமீபத்தில் தேசிய மயமாக்கப்பட்ட மிகப் பெரிய வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுள்ளேன். வீட்டுக்கடன் எனக்கு வட்டி அதிகமாக வருகிறது என்கிற காரணத்தினால் மற்றொரு தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கியில் லோன் மாற்றலாம் என்று முயற்சி செய்தேன். அங்குள்ள மேலாளர் என்னிடம் வீட்டுக் கடனுக்கான லோனை மாற்றும் பொழுது பிராப்பர்டி இன்சூரன்சையும் மாற்றித் தர வேண்டும் என்று கூறினார். பிராப்பர்டி இன்ஷூரன்ஸ் தொடர்பான தகவல்களை எஸ்பிஐ வங்கியில் சென்று கேட்டேன்.
முன்பே உங்களின் வீட்டிற்கு நகல் வந்திருக்கும் என்று தெரிவித்தார்கள். ஆனால் எனக்கு நகல் வரவில்லை என்று கூறினேன். ஒரு வாரம் என்னை அலைய விட்டு இரண்டு பக்க நகல்கள் தந்தனர். அதனில் இன்சூரன்ஸ் அலுவலக இடத்தில் முகவரி மட்டுமே இருந்தது. தொடர்பு எண் எதுவுமே இல்லை. மீண்டும் இரண்டு பக்கங்களையும் நன்றாகப் படித்துவிட்டு அதில் உள்ள டோல் பிரீ எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். இன்சூரன்ஸில் உள்ள, எனது முன்பு குடியிருந்த வீட்டின் முகவரியை மாற்றுவதற்கு முயற்சி செய்தேன்.
கஸ்டமர் கேரில் 30 நிமிடங்கள் கழித்துத் தான் தொடர்பு கிடைத்தது. அவர்களுக்கு என்னுடைய மெயில் ஐடி மெயில் பண்ணச் சொன்னார்கள். தகவலை ஏன் எனக்குக் காப்பி அனுப்பவில்லை என்று கேட்டேன். அதற்கு உங்களுடைய மெயில் ஐடி அப்டேட் செய்யப்படவில்லை, மெயில் ஐடி அப்டேட் செய்திருந்தால் அனுப்பி இருப்போம். கொரோனா காரணமாகத் தபாலில் அனுப்பவில்லை என்றும் தெரிவித்தார்கள் .அதன் தொடர்ச்சியாக பல மெயில்கள் அனுப்பிய பிறகு எனது முகவரி மாற்றப்பட்டது. மீண்டும் எனது பிராப்பர்ட்டி முகவரியும் தவறாக இருந்தது. அதனையும் மாற்ற, பல மெயில்கள் கொடுத்தோம். டோல் பிரீயில் 10 முறை தொடர்பு கொண்டு, விடா முயற்சி செய்து முகவரி மாற்றம் செய்துகொண்டேன்.
இதற்காக எனக்கு எஸ்பிஐ கடன் பெற்ற வங்கியிலிருந்து எந்த விதமான உதவியும் இல்லாமல் இருந்தது. ஆனால் பிராப்பர்டி இன்சுரன்ஸ் முழுவதுமே அந்த வங்கியின் வழியாகத்தான் செய்யப்பட்டிருந்தது. எனக்கு இன்சூரன்ஸ் தொடர்பான எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மீண்டும் நான் அறிந்துகொள்ள முயற்சி செய்தபோது வங்கியிலிருந்து எனக்குச் சரியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. மிகப்பெரிய எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவரி மட்டுமே உள்ளது. தொடர்பு எண்கள் (டோல் பிரீ எண்கள் தவிர) எதுவுமே இல்லாதது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வங்கியைத் தொடர்பு கொண்டால் மேலாளர் அவர்களோ, இன்சூரன்ஸ் நிறுவனத்தினரை டோல் பிரீ எண் வழியாகத்தான் தொடர்பு கொள்வோம் என்று தெரிவிக்கிறார்கள். என்ன செய்வது மக்களை ஏமாற்றுவதற்குப் பல்வேறு வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். எனது இன்ஷூரன்ஸ் எடுத்துப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சி. நான் 10 ஆண்டுகள் மட்டுமே லோன் போட்டு உள்ளேன். ஆனால் 20 ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார்கள். இதுகுறித்து மேலாளரிடம் கேட்ட போது, மீண்டும் சரியான தகவல் இல்லை.
இது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக கஸ்டமர் கேருக்கு மெயில் வழியாகவும், டோல் பிரீ எண் வழியாகவும் பலமுறை பேசிவிட்டேன். மெயில், டோல் பிரீ எனப் பல போராட்டங்களுக்கு பிறகு வங்கியில் ஒருவர் இதற்கெனத் தனியாக ஏஜென்ட் போல் செயல்படுகிறார் என்ற தகவல் தெரிந்தது. அவர்களுக்கு குழு மேலாளர் இருப்பதாகவும் அறிந்தேன். அவர்களுக்கு நோடல் மேலாளர் திருச்சியில் இருப்பதாகவும் அறிந்தேன். இவர்கள் அனைவருக்கும் பலமுறை நான் மெயில் போட்டு, என்னுடைய தகவலை நானே பலமுறை டோல் பிரீ எண்ணில் கேட்ட பிறகுதான் தொடர்பிலேயே வருகிறார்கள். அதன் பிறகும் எனக்குச் சரியான தகவல் வழங்கப்படவில்லை.
10 வருடம் லோன் போட்டு உள்ள எனக்கு 20 ஆண்டுகளுக்கு அவர்களது இன்சூரன்ஸ் செய்துள்ளார்கள். இது தவறு. 20 ஆண்டுகள் உள்ளதைப் பத்தாண்டுகளாக மாற்றிக் கொடுங்கள் என்றால், இல்லை அது முடியாது. நீங்கள் போட்ட பொழுது ஒரு ஸ்கீம் இருந்தது. இப்பொழுது ஒரு ஸ்கீம் இருக்கின்றது. எனவே மாற்ற முடியாது என்று தெரிவித்தார்கள். உங்கள் செயல்பாடு தவறானது, மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டேன். அப்பொழுது நீங்கள் இந்த பாலிசியை குளோஸ் செய்து கொள்ளுங்கள். மீண்டும் புதிதாக ஒரு பாலிசி எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்கள்.
நானும் இது உங்களின் தவறு. நீங்கள் மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டேன். இதற்காக என்னிடம் பலமுறை நான் ஈ மெயில் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொண்ட பிறகு தோராயமாக ஒரு பதில் தருகிறார்கள். நீங்கள் தற்போது குளோஸ் செய்தால் 11,000 மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கிறார்கள். நான் அப்படி கேட்கவில்லை. 20 ஆண்டுகளை 10 ஆண்டுகளாக மாற்றிக்கொடுங்கள் என்றுதான். ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து முறையான பதில் இல்லை.
எனவே நான் தற்போது 20 ஆண்டுகள் போட்டுள்ளதால், 23 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி உள்ளேன். இது 10 ஆண்டுகள் என்றால் எனக்கு 11,000 அல்லது 12,000 தான் வரும். ஆனால் அவர்கள் இதனை அதிகப்படியாக அவர்களாகவே முடிவு செய்து போட்டுள்ளார்கள். இது குறித்துப் பலமுறை கஸ்டமர் கேரில் தொடர்பு கொண்டோம். எனக்கு இதுவரை சரியான தகவல் கிடைக்கப் பெறவில்லை. எனவே வீட்டுக் கடனுக்கு இன்சூரன்ஸ் செலுத்தும் போது மிக கவனமாக இருங்கள். வீட்டுக் கடன் பெறும் பொழுது பணம் கொடுக்கும் நிலையில் அவர்களை – மேலாளர்களை நாம் கடவுளாக நினைக்கின்றோம். எனவே அவர்கள் அதனை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இஷ்டப்பட்ட இடத்தில் நம்மிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு அவர்களாக முடிவுகளை எடுத்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் நமது தலையில் மிளகாய் அரைப்பதற்குத் தயாராக இருக்கின்றனர்.
எனவே நண்பர்களே, டோல் ப்ரீ என்னை நான் தொடர்பு கொள்ளும்பொழுது 30 நிமிடத்திற்கு மேலாக ஆகின்றது. ஆனால் அவர்களோ ஒரு நிமிடத்தில் நம்மைத் தொடர்பு கொண்டு விடுகிறார்கள். இதுவும் வருத்தமான விஷயம்தான். எனவே நண்பர்களே வீட்டுக் கடன் வாங்கும்போது பிராப்பர்டி இன்சூரன்ஸ் தொடர்பாகத் தெளிவான தகவல்களைக் கேட்டு கொள்ளுங்கள். எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் அவர்கள் உங்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துத் தர உள்ளார்கள்? அது எத்தனை ஆண்டுகளுக்கு எடுக்கின்றார்கள்? எவ்வளவு பிரீமியம்?
ஏனென்றால் எனது நண்பர்கள் இருவர் இதே எஸ்பிஐயில் லோன் வாங்கி, கட்டி முடிக்கும் பொழுது பிராப்பர்டி இன்சூரன்ஸ்க்குப் பல ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார்கள் என்று தெரிவித்தார்கள். எனவே உங்களது பணம் உங்களது கையில்தான் இருக்க வேண்டும். இதில் கொஞ்சம் ஆர்வம் எடுத்து உங்களைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். இதுவரை நீங்கள் இன்சூரன்ஸ் என்ன போடப்பட்டு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளவில்லை என்றால் வங்கிக்குச் சென்று உங்களது இன்சூரன்சுக்கான சரியான நகலைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது தொடர்பான தகவலைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தப் பதிவை நான் தரும் நிலையிலும் எனக்கு இதுவரை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து முழுமையான பதில் இல்லை. நான் அடுத்த கட்டத்துக்கு இதனைக் கொண்டு சென்று முழுமையான பதில் பெறுவேன் என்பதில் உறுதியாக உள்ளேன். இந்தப் பதிவு முழுவதுமாக விழிப்புணர்வுக்கான பதிவு.
-

Every Child a Scientist Program at MSSRF
PRESS RELEASE
Corporation school students benefit from Every Child a Scientist program at MSSRF
Today March 23, 2022, thirty school students completed the 15-day science course at M S Swaminathan Research Foundation, Taramani, Chennai. Each of them was awarded a certificate by the Executive Director – Dr G N Hariharan, and the other scientists from MSSRF. The children (both girls and boys) are from Class VIII, and study in the English and Tamil medium Corporation Higher Secondary school, Taramani.
“Every Child A Scientist” (ECAS) program at the M.S. Swaminathan Research Foundation (MSSRF) was initiated in the year 2002 with an aim to kindle scientific curiosity among students in the age group of 12- 15 years. These students lack access to recent developments in science and to use modern scientific and learning tools, but are eager and have a tremendous capacity to learn. The ECAS programme focuses on triggering the ability to question, in the students of classes VI to VIII studying in Corporation schools, that are overseen by the Education Department, Corporation of Chennai, Tamil Nadu. Every year about 300 students from Government schools from specific zones of Chennai Corporation utilize the facility.
“Children’s scientific temperament directly contributes to a country’s progress,” says Prof. M.S. Swaminathan, who donated an initial endowment grant of Rs. 25.00 Lakhs associated with the Indira Gandhi Prize for Peace, Development, and Disarmament. Prof. Swaminathan was the recipient of the prize in 1999.
Learning materials and Facilities at the Centre
• The centre is equipped with modern learning tools specifically to bridge the digital divide. Individual desktop systems will provide for personalised educational platform, sharpen their computer skills to make them “Future Ready” in the era of digitization.
• About fifty specially tailored multimedia learning modules have been prepared, and the 15-day course will be flexibly tailored using these modules.
• The developed course content is based on topics prescribed in their school curriculum with additional relevant information to make learning easier and interesting.
• Conducting basic laboratory experiments to promote “learning by doing” in physics, chemistry and biology
• Field activities to nurture a connect with nature in all its diversity, specifically soil, water, flora and fauna and their inter- connectedness of all life formsThis program continues with generous CSR funding by the Larsen and Toubro group as well as administrative support by the Education Department, Corporation of Chennai, Tamil Nadu.
The inauguration program Hon’ble Minister for School Education, Government of Tamil Nadu, Shri Anbil Mahesh Poyyamozhi, is here https://www.mssrf.org/small-press/need-of-more-science-based-education-to-counter-misinformation-2/
-

Demise of Mrs Mina Swaminathan
PRESS RELEASE
Mina Swaminathan
Mina Swaminathan (née Bhoothalingam), school teacher, educator, educationist, and child care expert, who chaired the committee that recommended what became the Integrated Child Development Scheme (ICDS), died on March 14 at her home in Chennai. She was 89. She was one of the founders of the Mobile Creches, a former chair of the Delhi Social Welfare Board, an Emeritus Trustee of the M. S. Swaminathan Research Foundation, a founding member of the Centre for Women’s Development Studies, and an international consultant with UNESCO and UNICEF on Early Childhood Care and Education. She also worked in the field of theatre as a means of social and women’s empowerment.
She is survived by her husband, M. S. Swaminathan, three daughters, Soumya Swaminathan, Madhura Swaminathan, Nitya Rao, five grandchildren, and her brother, Ravi Bhoothalingam.
As Chair of the Central Advisory Board of Education (CABE) Committee on The Preschool Child she steered the development of the Report on the Preschool Child (1972) which led to the setting up of ICDS, the largest and most comprehensive child care service in the developing world. Her contribution to ICDS, particularly in Tamil Nadu, is notable after she moved to Chennai in 1989, setting up mobile training teams – a unique innovation, travelling widely across the state, working with ICDS frontline workers and providing practical guidance and encouragement.
At a time when it was not publicly recognized she played a significant role in getting professional, political and national attention focussed on the rights and needs of the young child and women of the underprivileged and marginalized sections of the population. A fiery advocate and practitioner, she devoted with passion and conviction, five long decades to childcare and education and gender equality. Communication, especially the innovative use of creative and educational drama was critical to her work.
She was the national President of the Indian Association for Preschool Education and the editor of its journal, BALAK. She spearheaded the introduction of early childhood care and education (ECCE) into the National Policy on Education 1986 as well as its Plan of Action, 1989 and was chair of the Focus Group on Early Childhood of NCERT, which prepared the National Curriculum Framework in 2005. She was a founder and leader of the Alliance for Early Childhood Care and Development (ECCD).
She consolidated her life-long experience into the project Action for Child Care and Education Strategies and Services (ACCESS), a programme for networking of stakeholders to support training, research and advocacy on ECCE at the MS Swaminathan Research Foundation (MSSRF). Her work in this field, prescient at the time, brought to focus the need for all-round development of the young child, in particular attention to underweight, malnutrition and low birth-weight, all of which has adverse impact on the cognitive abilities in later life. The results of this unique project were summarized in the book titled As the Salt in the Seas, compiled by her and L.S Saraswathi.
An activist with strong political commitment, she acted fearlessly, speaking out on behalf of the marginalized. She never cared for personal power or positions. In her early years, soon after returning from Cambridge, she resigned from her Planning Commission job to take up her passion for teaching children.
A writer and planner as well, her high levels of innovation, the ability to think pragmatically and most importantly, learning from her own and others’ mistakes spoke of her versatility. Through her ability to bridge different disciplines, she inspired and converted professionals, non-governmental organizations, child care workers, policy and decision makers to become champions for child rights and early childhood development.
Among her numerous books, articles and papers, are three popular teachers’ manuals in ECCE entitled Play Activities For Young Children published (1984), The First Three Years (1989) and Play Activities For Child Development (2008). These were based on her experiences with the youngest age-group, first at the Nehru Experimental Centre at the Indian Agricultural Research Institute, in Mobile Creches and in Asian countries. She also authored Who Cares? (1985) a study of day care services for low-income working women and The First Five Years (1998) a state-of-the-art review of child care services in India. Some of these publications have been widely translated into other Indian languages and went into many editions.
-

Indian Knowledge Systems 2022: Precolonial India’s Treasure House of Literatures (Lectures)
Dear Friends!
Vanakkam.
I will be speaking on Tamil literature in English at IIT, Gandhi Nagar, Gujarat on Feb 22, 24 and 25. Interesting and challenging.
You can hear them live. In the meantime, here is some info: https://iks.iitgn.ac.in/isaikkavi-ramanan-2022/
Love,
Ramanan -

காலங்களில் அவன் வசந்தம் – 74 ஆவது நிகழ்ச்சி
வணக்கம்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னை, பாரதிய வித்யா பவன், புதுயுகம் தொலைக்காட்சி இணைந்து வழங்கும் “காலங்களில் அவன் வசந்தம்” தொடரின் 74 ஆவது நிகழ்ச்சி….
பிப்ரவரி 5 ஆம் தேதி, மாலை 7.00 மணி (IST) காலை 8.30 மணி (EST)
யூடியூப் நேரலை: https://youtu.be/HOBgSLasaPk
சிறப்பு விருந்தினர்: திருமதி சுபா (நியூ ஜெர்சி)
வாருங்கள்! கவியரசரைக் கொண்டாடுவோம்!
அன்புடன்,
ரமணன்









