Month: November 2021

  • நீ இப்படிச் செய்யலாமா?

    நீ இப்படிச் செய்யலாமா?

    இந்த அநியாயத்தைப் பாருங்க! ஆண்குயிலுக்குக் கொடுக்காமல் தானே மொத்தக் கோவைப் பழத்தையும் ஒரே வாயில் காலி செய்துவிட்டது இந்தப் பெண்குயில். ஐயோ பாவம் ஆண்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சின்ன வெங்காயம் முளைத்துவிட்டால்?

    கடையில் வாங்கிய சின்ன வெங்காயம் முளைத்துவிட்டால்… இப்படி செஞ்சிடுங்க!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • PediaSure விளம்பரம் – சில கேள்விகள்

    PediaSure விளம்பரம் – சில கேள்விகள்

    இப்போது தொலைக்காட்சிகளில் அடிக்கடி காண்பிக்கப்படும் PediaSure விளம்பரம் தொடர்பாகச் சில கேள்விகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேரழகுப் பெண்குயில்

    பேரழகுப் பெண்குயில்

    பெண்குயில், அவ்வளவு எளிதில் காட்சி கொடுக்காது. நம்மைக் கண்டாலே பறந்து ஓடிவிடும். அதிர்ஷ்டவசமாக, என் ஜன்னலை ஒட்டியுள்ள கருவேப்பிலை மரக்கிளையில் மிக அருகில் வந்தமர்ந்தது. ஓசைப்படாமல் ரகசியமாக இதைப் படம் பிடித்தேன். இதன் பேரழகை நுணுக்கமாக நீங்கள் ரசிக்கலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என் பயணத்தின் முடிவு

    என் பயணத்தின் முடிவு

    சி. ஜெயபாரதன், கனடா

    முடக்கு வாத நோய் வதைத்து
    மடக்கும் போது,
    நடக்க முடியாது கால்கள்
    பின்னித்
    தடுமாறும் போது,
    படுக்கை மெத்தை முள்ளாய்
    குத்தும் போது,
    படுத்தவன் மீண்டும்
    எழுந்து நிற்க இயலாத போது,
    வாழ நினைத்த போதும்
    வாழ முடியாத போது,
    எழுத முனையும் கவிதை தனைக் கை
    நழுவ விட்ட போது,
    வரைய வந்த வானவில் கண்ணீர்
    மறைத்த போது,
    இறுதி இயலாமை
    உறுதி.
    தனித்துப் போய் தவிக்கும்
    மனத்துக்குத்
    தெரிவது, மீளாத
    ஒரே பாதை !
    பயணத்தின் முடிவு
    ஒன்றே !
    Share
  • இந்தியாவில் உள்ள உலக மரபுச் சின்னங்கள்

    இந்தியாவில் உள்ள உலக மரபுச் சின்னங்கள்

    நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வாரம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ‘இந்தியாவில் உள்ள உலக மரபுச் சின்னங்கள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள திரு பரமேஸ்வர விண்ணகரம் என்கிற வைகுந்தப் பெருமாள் கோவிலில் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. உலக மரபுச் சின்னங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காண்பது, ஓர் அரிய வாய்ப்பு. இதோ இந்தக் கண்காட்சியின் உள்ளே ஓர் உலா.

    படப்பதிவு – மது என்கிற ரங்காச்சாரி சேஷாத்ரி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவைப் பழத்தை உண்ணும் குயில்கள்

    கோவைப் பழத்தை உண்ணும் குயில்கள்

    நம் ஜன்னலை ஒட்டியுள்ள வேப்ப மரத்தில், கோவைக் கொடி ஒன்று அண்மையில் தானாகவே வளரத் தொடங்கியது. திரும்பிப் பார்ப்பதற்குள் எல்லாப் பக்கமும் படர்ந்து நிற்கிறது. அதில் கோவைப் பூக்களும் காய்களும் பழங்களும் பெருகியுள்ளன. இந்த மரத்தில் வசித்து வருகின்ற குயில்களுக்கும் இதர பறவைகளுக்கும் இப்போது கொண்டாட்டம்தான். இந்தப் பதிவில் கோவைப் பழம் ஒன்றை ஆண்குயில்களும் பெண்குயிலும் அடுத்தடுத்து பற்றி இழுத்து உண்பதை மிக நெருக்கத்தில் நீங்கள் பார்க்கலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பார்கின்சன்

    பார்கின்சன்

    பாஸ்கர்

    இப்போது இடுக்கு நினைவுகளைத் தேடவேண்டி உள்ளது
    மனமெங்கோ நிலை குத்திக்கொண்டிருக்கிறது
    யாரைப் பார்த்தாலும் சிரிக்க மட்டும் தெரிகிறது
    அந்த ஆரம்பமே சட்டென முடிவாகப் போகிறது
    எப்போதோ மெல்ல எழுந்து நிற்கிறேன்
    உடன் முடியாமல் உட்கார்ந்து கொள்கிறேன்
    பேசவே முனைப்பில்லை, எவரிடமும்
    ஏதோ வாசம் மட்டும் அவ்வப்போது வருகிறது
    மூளைக்கு வேலை கொடுக்க முனைவதில்லை
    விலகும் வேட்டி பிரக்ஞை மட்டும் போகவில்லை
    என்னைத் தாண்டி என் உலகம் எவருக்குமில்லை
    கயிறு கட்டிய காலைப் பார்த்துக்கொள்கிறேன்
    இன்னொரு காலில் பிணைக்கும் கயிறில்லை
    எதற்கும் எதிர்ப்பின்றி இருந்தபடி இருக்கிறேன்
    விழிகளில் எட்டிப் பார்க்கும் கண்ணீர் இதமாய் இருக்கிறது
    அந்த வெப்பத்தை வைத்துக் கண்களை மூடிக்கொள்கிறேன்
    எனக்கு இரவும் பகலும் ஒன்றே.

    Share
  • பழைய சீவரம் ஜி.காளிதாஸ் குழுவினர் மங்கல இசை

    பழைய சீவரம் ஜி.காளிதாஸ் குழுவினர் மங்கல இசை

    காஞ்சிபுரத்தில் 2021 நவம்பர் 21 அன்று சுதர்சன் – ஐஷ்வர்யா திருமணம் விமரிசையாக நடைபெற்றது. 2021 நவம்பர் 20 அன்று இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், பழைய சீவரம் ஜி.காளிதாஸ் குழுவினர் வழங்கிய மங்கல இசை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(377)

    குறளின் கதிர்களாய்…(377)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(377)

    நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
    யொல்லும்வா யூன்றும் நிலை.

    – திருக்குறள் – 789 (நட்பு)

    புதுக் கவிதையில்…

    நட்புக்குச் சிறப்புமிகு
    நிலையான அரியணை
    எதுவெனில்,
    மாறுபடாமல் அது
    எப்போதும்
    முடிந்தவரை ஒருவருக்கொருவர்
    உதவி செய்யும்
    உயர்ந்த நிலையாகும்…!

    குறும்பாவில்…

    நட்புக்குச் சிறப்பான இருக்கை,
    மாறுபாடு ஏதுமின்றி எப்போதும் ஒருவருக்கொருவர்
    முடிந்தவரை உதவிடும் உயர்நிலையே…!

    மரபுக் கவிதையில்…

    சிறப்புற நட்பது வீற்றிருக்கும்
    செம்மையாம் அரியணை எதுவென்றால்,
    உறவது மேம்பட மற்றவர்க்கே
    உதவிடும் வகையினில் எப்போதும்
    அறம்பொருள் தளர்ந்திடா நிலையினிலே
    அன்புடன் ஒருவருக் கொருவராக
    முறைப்படி தமக்குளே மாறிடாமல்
    முடிந்திடும் மட்டிலும் உதவுதலே…!

    லிமரைக்கூ…

    அரியணையாம் நட்புக்குயர் பதவி
    மாறுபாடின்றி எப்போதும் சேர்ந்திருக்கும் உயர்நிலையே,
    ஒருவருக்கொருவர் தமக்குள் உதவி…!

    கிராமிய பாணியில்…

    நட்புவேணும் நட்புவேணும்
    ஒசந்த நட்புவேணும்,
    ஒருவருக்கொருவர் ஒதவுற
    ஒசந்த நட்புவேணும்..

    நல்ல நட்புக்கு இருப்பிடமா
    ஒசந்த சிம்மாசனம்
    வேற எதுவுமில்ல,
    மாறுபாடு இல்லாம எப்பவுமே
    மொறப்படி தங்களுக்குள்ள
    ஒருத்தருக்கொருத்தர்
    ஒதவி வாழுறதுதான்..

    அதால
    நட்புவேணும் நட்புவேணும்
    ஒசந்த நட்புவேணும்,
    ஒருவருக்கொருவர் ஒதவுற
    ஒசந்த நட்புவேணும்…!

    Share
  • பாலாறு – வாலாஜாபாத் நிலவரம்

    பாலாறு – வாலாஜாபாத் நிலவரம்

    பாலாறு வெள்ளம், வாலாஜாபாத்தில் எந்த அளவு உள்ளது? களத்திலிருந்து இதோ சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சச்சி 80

    செயற்கரிய செய்யும் பெரியோர்!எம் சச்சி
    சொலற்கரிய செய்கைத் திரு.

    மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கு இன்று 80ஆவது பிறந்தநாள். கார்த்திகை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த அவர், தமிழ் முறைப்படி இந்த நட்சத்திர நாளையே பிறந்தநாள் என ஏற்றுக்கொள்வார். பல துறைகளில் பெரும்பணி ஆற்றி வருகிறார். சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் என்ற திருக்குறள், அவருக்கு மிகப் பொருத்தம். உலகெங்கும் 60 நாடுகளுக்கும் மேல் பயணித்த அவர், இப்போது ஈழத்தில் தாம் பிறந்த மறவன்புலவுச் சிற்றூரைக் களமாகக் கொண்டு இயங்குகிறார்.

    சச்சி ஐயாவின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கிய வலைப்பூ.
    https://sachi70.blogspot.com

    சச்சி ஐயா நீடூழி வாழ்க!

    Share
  • பாலாற்றில் வெள்ளம்

    பாலாற்றில் வெள்ளம்

    பாலாற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்.

    படப்பதிவு: வாலாஜாபாத்திலிருந்து அண்ணாகண்ணன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவைப் பழத்தை உண்ணும் குயில் – 2

    கோவைப் பழத்தை உண்ணும் குயில் – 2

    கோவைப் பழம் நீயானால்
    கொஞ்சும் குயில் நானாவேன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாயின் பரிவு

    தாயின் பரிவு

    தாயின் பரிவும் அதில் கண்செருகும் கன்றும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share