இந்தப் பறவையின் பெயர், செந்தலைப் பூங்குருவி (Orange-headed thrush). பாசெரின் (Passerine) என்ற குடும்பத்தைச் சார்ந்தது. இப்பறவையின் இறகு ஈப்பிடிப்பான் பறவையைப்போல் குட்டையாகக் காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்தப் பறவை காணப்படும் என விக்கிப்பீடியாவில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நான் இதைத் தாம்பரத்தில் படம் பிடித்தேன்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.