கிரேசி மோகன் 

இன்று ஸ்ரீ பகவான் ரமண மஹரிஷியின் ‘’ஆராதனை’’ தினம்….

images (3)

மாயநான் ஆணவம் மாற்றிடும் கோவணம்
தூயநான் நிர்வாண தெய்வீகம் -நாயனார்
யோகி ரமணரின் யோசனையைக் கேட்டுணர்வோர்
சாகிறதை வென்ற சவம்….(1)

கண்டேன் திருடனைக் கையும் களவுமாய்
கொண்டேன் மனச்சிறையில் கைதியாய் -அண்டேன்
இனியவன் பக்கம் தனிமையே சொர்கம்
கனிநான் அவன்கள்ளக் காய்….(2)

ஒப்புக்கு சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை
சொப்புக்(கு) ஆடும் சிறுவனெனும் -இப்பக்
குவம்வந்தால் ஈரேழு கண்டங்கள் ஆண்டும்
தவம்செய்து வாழ்வோம் தனித்து….(3)

சமத்துவ வேந்தன் சமர்த்தனுன் ஆன்மா
அமர்த்தவனை சிந்தையில் ஆள -விமர்சனம்
செய்யும் மனசாட்சி பொய்யின் அரசாட்சி
நெய்யெதற்கு வெண்ணை நமக்கு….(4)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *