பெருமாள் திருப்புகழ்

 

-கிரேசி மோகன்

(நாதவிந்து கலாதீ நமோநம மெட்டு)

 

nadavindu

 

 

 

ஏழு கொண்டல வாடா நமோ நம
ஏளும் நஞ்சணை சேடா நமோ நம
ஏறும் அன்பர்கள் தோழா நமோ நமகுருபீஷ்மர் 
ஆயி ரம்புகழ் நாமா நமோ நாம 
தேச மெங்கிலும் ஆழ்வார் கள்பாடிய 
ஆயி ரம்தொழு மாலே நமோ நமகலிலேறி

வாழும் பண்டரி நாதா நமோ நம
ஏழை சங்கட தீர்வே நமோ நம
ஏழ்சு ரங்களின் ராகா நமோமஹனீயர்

ராயர் கும்பிடு மூலா நமோ நம
வாயு அஞ்சனை சேயார் சிநேகித 
ராம சந்திர ராஜா நமோ நமகலிதோறும் 

ஊழில் உண்டுமிழ் சேயே நமோ நம
ஆதி யந்தமி லாதோய் நமோ நம
கேர ளம்குரு வாயூர் துலாபளுசமனாகி 
தீர அன்பர்கள் பாடா னபாடது
ஏறும் அம்பல கோபா லகோகுல 
கேளி சம்பவ லீலா நமோ நமஇரணீயன் 

வீழ கம்பமு லாநா ரகேசரி 
மீன மந்தர மாமே ருகூர்மவ
ராக அந்தண மூணா னராமமுரளியூதி

பூமி மங்கையின் தாளா தபாரமும் 
பாத கம்புரி கீழோர் கள்மேலுற 
நேமி சங்குவில் வாளோ டுகோலணிபெருமாளே

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *