Encounter With A Difference – வேறுபாட்டுடன் ஓர் சந்திப்பு

 

 

கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
ஆங்கில மூலம் : கிம் ஜின் – மன்
தமிழாக்கம் : பவள சங்கரி

1 (1)

எனக்காகக் காத்திருக்கிறாய் நீ,
உனக்காகக் காத்திருக்கிறேன் நான்.

ஒரே மனமுள்ள நீயும் நானும் காத்திருக்கிறோம்.

நீ என்னிடம் வருவதில்லை,
நான் உன்னிடம் வருவதில்லை.

ஒரே மனமுள்ள நீயும் நானும் வருவதில்லை.

ஒருநாள் நான் உன்னிடம் வருவேன்
ஆனால் நீ என்னிடம் வராமலே போகலாம்.

ஒரே மனமுள்ள நீயும் நானும் காத்திருந்தாலும்
ஒரே மனமென்பதால் என்றுமே வருவதில்லை.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *