Tag Archives: ஜெயஸ்ரீ ஷங்கர்

காதல் கீதை …!

ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம் வீட்டை விட்டு இறங்கி பாதி வழி வந்ததும் காற்றும் கூடவே துரத்த மழை வருமோ என்று வானம் பார்க்கிறார் கல்யாண ராமன். எதற்கும் இருக்கட்டும் என்று கையோடு  கொண்டு வந்த குடை….”நானிருக்கேன் …கவலைப் படாதே .! என்றது. இந்தக் காற்றையெல்லாம் உன்னால தாக்குப் பிடிக்க முடியாது …..நீ பேருக்குத் தான் குடை…உன்னை  அது  இழுக்கும் ஒரே இழுப்பிலே  நீ என்னை விட்டு பறந்து போய்டுவே…உன்னை பற்றி நேக்குத் தெரியாதா..? எத்தனை குடைகள் உன்ன மாதிரி என்கிட்டே சொல்லிட்டு காற்றோடு விடை ...

Read More »

ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 1

தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர்,  சிதம்பரம். எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் : குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா, சொந்த ஊர் : வத்தலக்குண்டு . பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது. எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 ...

Read More »

நவராத்திரி….முப்பெரும் சக்தியில் புவனபுரி..!

ஜெயஸ்ரீ ஷங்கர் பொதுவாக நவராத்திரி  தீபாவாளிக்கு முன்னம்  கொண்டாடப்படும் இந்துப் பண்டிகை. நவராத்திரம் என்னும் வடமொழிச்  சொல் , தமிழில் நவராத்திரி என்று மருவி வழங்குகிறது. இது ஒன்பது இரவைக் குறிக்கும். துன்பத்தைத் துடைத்து, அச்சத்தைப் போக்கி, இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நல்ல வாழ்வையும் அருளச்  செய்த தேவியை வழிபடும் காலமாக நவராத்திரியின் ஒன்பது இரவுகளும் இருக்கிறது. நவராத்திரி வந்தாலே போதும்…பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஏக குஷியும்  கொண்டாட்டமும்  தான். வித விதமாக  பட்டுப் பாவாடை உடுத்திக் கொண்டு பூத் தைத்து , கழுத்து ...

Read More »

ஆண்மீக இச்சை..! (இது எழுத்துப் பிழை அல்ல….மனத்துப் பிழை…)

    ஜெயஸ்ரீ ஷங்கர், தில்லை.   வாசல் தெளித்துக் கோலம் போட வாளியில் தண்ணீரோடு சென்ற சந்திராவுக்கு நிலைப்படி தடுக்கி த்ண்ணீர் தளும்பி விழவும் … மேலும் அதிலேயே அவளது காலடி தடுக்கி வழுக்க……  சுதாரித்தவள், என்னாச்சு இன்னைக்கு காலங்கார்த்தாலே இப்படி ஒரு தடைச்சகுனம்  இன்றைய நாள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாப் போகணுமே”   சகுனமே சரியில்லையே….என்று எண்ணிக் கொண்டே புள்ளி வைத்துக் கோடு இழுக்க…கோலம் வராமல், கோடுகள் எங்கேயோ போய் நின்று வரமாட்டேன் என்று அடம் பிடித்தது. அழித்து…அழித்து மனதில் ...

Read More »

ஆத்மாவின் கோலங்கள்

ஜெயஸ்ரீ ஷங்கர்   அதிகாலை நேரம்…சூரியன் சோம்பல் முறித்து எழுந்து நிமிர்ந்து மூடிய கண்களைத் திறக்கிறான். மெல்ல மெல்ல ஒளிக்கீற்றுகள் கதவைத் தட்ட பூமியும் கண் விழிக்கிறது. நித்யா…நித்யா…. நித்யா !  எத்தனை தடவை கேட்கிறேன்…..சரின்னு ஒரு வார்த்தை  சொல்லேன்….ப்ளீஸ்… படுக்கையை விட்டு எழுந்திருக்காமலே…நேற்று ராத்திரி தான் விட்ட இடத்திலிருந்து மறுபடியும் ஆரம்பித்து தேன்மொழி கெஞ்சிக் கொண்டிருந்தாள். இப்பவே ஆரம்பிச்சுட்டியா…..சும்மா நை…நை…ன்னு என்னை தொல்லை பண்ணாதே…!  கொஞ்ச நேரம் அமைதியா இரேன்..நான் முக்கிய வேலையா இருக்கேன்…இப்போ.. புரிஞ்சுக்கோ. தங்கையை கெஞ்ச விட்டுக் கொண்டே  கவனம் ...

Read More »

நல்லதோர் வீணை…!

  ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம்  மயில்கழுத்து நீலப்பட்டுப் புடவையில் அன்னப்பட்சி ஜரிகை ஜொலிக்க மெல்லிய கொலுசொலி பார்கவியின்  நடைக்கு ஜதிபோட, தலையில் சூட்டிய  பிச்சிப்பூவின் மணம் அவள் கடந்து சென்ற பாதை முழுதும்  மலரின் புகழைப்  பரப்பியது.  “பார்கவி இன்னும் கொஞ்சம் மெல்ல நடவேன்” என்று காதில் அசைந்தாடிய ஜிமிக்கிகள் ரகசியமாய் எச்சரிக்க, மனதைப் பிடுங்கித் தின்ற வெட்கத்தையும் பயத்தையும் ஒதுக்கிவிட்டு பிரார்த்தனையோடு மேடையில் அமர்கிறாள். விரித்திருந்த ஜமுக்காளத்தில் காத்திருந்து, அமர்ந்தவளின் மடியில் தலை வைத்தது  அவளது அருமை தெரிந்த சரஸ்வதி வீணை. அரங்கம் நிறைந்து ...

Read More »

உயிர்

   ஜெயஸ்ரீ ஷங்கர் ஒரு இருமல் போதுமேபாசக்கயிறாக அரவணைக்கும்ஸ்டெதாஸ்கோப்..! இதயத்தை விட்டு இரும்புப் பெட்டியைத் துழாவும் இயந்திரம்..! உயிருக்குப் பின்னால்பூஜ்யத்தைச் சேர்க்கும்அறுவை சிகிச்சை..! நோயாளிகள் கழிவுகள்தாங்கும் மேடுகளாய்வானம் பார்த்தபடி.. மருத்துவரோ பணம் கொத்தும் பறவையாய் வட்டமடித்தபடி..! சின்ன இருமலுக்குஎழுதப் படுவது மருந்தா..? மரண சாசனமா? பிணக் கிடங்கின் முன்பும்போராட்டம்…மறியல்இறப்பு..மருந்தாலா?மருத்துவராலா?! ஜெயஸ்ரீ ஷங்கர் படத்துக்கு நன்றி  http://www.dreamstime.com/stock-photo-stethoscope-medicines-to-cure-image7409520

Read More »

ஊன்றுகோல்…..

  ஜெயஸ்ரீ ஷங்கர் பட்டாம்பூச்சி மனசோடு நீ….என் மனம் நிறைக்க ..நித்தம் நீ வரும் வழியில் விழிக்கணை எறிந்து காத்திருந்தேன்.. என்றாவது….கனியுமென…! காலங்கள் கழிய ..உந்தன்மோகன மனம் காத்திருந்த எனைஏற்ற தருணம்..!புதிதாய்ப் பிறந்ததாய்ப்பூரித்துப் போனேனே..! ஆசைகள் ஏதுமின்றி நினைவால் நீயே உலகமாய்ச் சுற்றியது என் மனது…! ஆதவன் கரம் தீண்டும்தாமரையாய்…நெஞ்சினில்ஏற்றி வைத்தாய் என் வரவை…! உன் வெள்ளை மனந்தனில்முதல்வனாய் அமர்ந்த தருணம் அது..!நின் சேயாக்கி எனை ரசித்தவேளையெல்லாம்..நெகிழ்ந்து போனேன்..நான்..! துன்பமெலாம் தூரம் போனதுதேவதை உன் உறவால்..!மனையாள் எனும் ஒற்றை சொல்செல்லாது உன்னிடத்தில்…!மங்கையவள் மாசற்ற அன்போடுயாம் ...

Read More »

மழை வருது…மழை வருது…

ஜெயஸ்ரீ ஷங்கர் ஜன்னல்  நுழைந்து தூதாகத்  தென்றல்வேப்பமரம் அழைத்த சேதியை வாசனயாய்ச் சொல்லிப் போகமூச்சிழுத்து சுவாசித்து மரத்தைஅணைக்கிறேன் மனதோடு..! குயிலே…நீயும் துரத்துநமை மறந்த அவளுக்குகணினி மீது என்ன மோகம்?கண்கள் கணினிக்கும்  காதுமட்டும் உனக்கோ? குயிலிடம் கோள் சொல்ல.. ஆசைக் குயிலும் கூவிக் கூவி கணினியை மொய்த்த கண்களை மெல்ல ஜன்னல்வழி கொய்ய..கண்கள் பட்ட இடம் யாவும் பச்சையாய் சிரிக்க மனமெல்லாம் வாசம்..! மின்வாசத்தை ருசிக்கும்  கணினிமண்  வாசனை ரசிக்குமா?நிலை கண்ட வானம்…ஊர்கோல மேகங்களாய்..எட்டிப் பார்க்குதே…! வண்ணமயிலாய் மனமும்எண்ணத் தோகை விரித்து மழை வருது…மழை வருது..ஆடும் போதே..சட சட…மின்னலும் ...

Read More »