Tag: அண்ணாகண்ணன்

  • கணினித் தொழில்நுட்பக் கலைச்சொற்கள் – அண்ணாகண்ணன் கருத்துரை

    கணினித் தொழில்நுட்பக் கலைச்சொற்கள் – அண்ணாகண்ணன் கருத்துரை

    தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசாணையின்படி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில், துறைதோறும் வல்லுனர் குழுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. அதில், தெரிவிக்கும் கலைச்சொற்களை, சொற்குவை இணையத்தளத்தில் ஏற்றி வருகின்றனர். அந்த வரிசையில், 19.08.2021 அன்று கணினித் தொழில்நுட்பத் துறை வல்லுனர் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வல்லமை மின்னிதழ் ஆசிரியர் முனைவர் அண்ணாகண்ணன், கணினித் தொழில்நுட்பக் கலைச்சொற்கள் குறித்து வழங்கிய கருத்துரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கணினித் தொழில்நுட்பத் துறை வல்லுனர் குழுக் கூட்டம்

    கணினித் தொழில்நுட்பத் துறை வல்லுனர் குழுக் கூட்டம்

    தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசாணையின்படி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில், துறைதோறும் வல்லுனர் குழுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. அதில், தெரிவிக்கும் கலைச்சொற்களை, சொற்குவை இணையத்தளத்தில் ஏற்றி வருகின்றனர். அந்த வரிசையில், 19.08.2021 அன்று கணினித் தொழில்நுட்பத் துறை வல்லுனர் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் வல்லமை மின்னிதழ் ஆசிரியர் முனைவர் அண்ணாகண்ணன், நீச்சல்காரன், முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் தமிழ்ப்பரிதி மாரி, இரா.நரசிம்மன் (சைபர்சிம்மன்), முனைவர் இல.சுந்தரம், முனைவர் வ.தனலட்சுமி, மீ.சோமசுந்தரம், முனைவர் ச.முத்துவிக்னேஷ், மு.சு.அருண்குமார். இர.கன்னியம்மாள், அ.கிருஷ்ணகுமார், ச.பார்த்தசாரதி, கி.முத்துராமலிங்கம், க.விஜயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் தங்க.காமராசு, நோக்கவுரை நிகழ்த்துகிறார். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார்.

    சொற்குவை (sorkuvai) யூடியூப் தளத்தில் இது நேரலையாக ஒளிபரப்பாகிறது.

     

    Share
  • இந்தியத்தாய் திருப்பள்ளியெழுச்சி

    இந்தியத்தாய் திருப்பள்ளியெழுச்சி

    அண்ணாகண்ணன்

    இந்தியத்தாய்க்கு நான் பாடிய திருப்பள்ளியெழுச்சி இதோ. ‘பூபாளம்’ என்ற தலைப்பில், 1996இல் வெளியான என் முதல் கவிதைத் தொகுப்பில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது.

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இல்லறத்தில் இன்பம் சூழ – 1 | நிர்மலா ராகவன்

    இல்லறத்தில் இன்பம் சூழ – 1 | நிர்மலா ராகவன்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    நம் யூடியூப் அலைவரிசையில் ஒரு புதிய பகுதியைத் தொடங்கியுள்ளோம். இல்லறத்தில் இன்பம் சூழ, செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து, எழுத்தாளர் நிர்மலா ராகவன் ஆலோசனை வழங்குகிறார். குடும்பத்தில் எப்படியெல்லாம் சிக்கல்கள் உருவாகின்றன, அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்று கனிவுடன் எடுத்துரைக்கிறார். உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை யூடியூபில் இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகட்டும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாடகர் ஆனந்த ராவ் உடன் நேர்காணல்

    பாடகர் ஆனந்த ராவ் உடன் நேர்காணல்

    சந்திப்பு – அண்ணாகண்ணன்

    தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஆனந்த ராவ், இந்த 79 வயதிலும், தமிழில் பாடல்கள் இயற்றி இனிமையாகப் பாடுகிறார். பழைய திரைப்படப் பாடல்களின் மெட்டுகளில் இவர் தமிழிலும் தெலுங்கிலும் பாடல்கள் இயற்றியுள்ளார். இவற்றை டி.எம்.எஸ்., கே.பி.சுந்தராம்பாள், ஜேசுதாஸ், எம்.எஸ்.வி., டி.ஆர்.மகாலிங்கம், கண்டசாலா… உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் முன்னிலையில் பாடிப் பாராட்டுப் பெற்றுள்ளார்.

    சுவாகத் ஓட்டலிலும் உட்லண்ட்ஸ் ஓட்டலிலும் உணவு பரிமாறுபவராகப் பணியாற்றிய இவர், அங்கு உணவருந்த வந்த அண்ணா, கலைஞர், சி.என்.ஏ.பரிமளம், ம.பொ.சி. உள்ளிட்ட பிரமுகர்களுக்கு உணவு பரிமாறியுள்ளார். ஜேசுதாஸ், பித்துக்குளி முருகதாஸ், ஹரிதாஸ் கிரி ஆகியோருடன் இணைந்து கோரஸ் பாடியுள்ளார்.

    சமையல் கலைஞர்கள் நலவாரியம், கட்டடத் தொழிலாளர் நலவாரியம், கோவில் பணியாளர் நலவாரியம், தையல் தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட பலவற்றில், அவர்களின் விழாக்களில் அந்தத் தொழிலாளர்களைப் பற்றிய பாடல்களைப் பாடி, உழைக்கும் வர்க்கப் பாடகர் எனப் பாராட்டுப் பெற்றுள்ளார்.

    மேலும் தனக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், மருந்துக் கடைக்காரர்கள், செவிலியர்கள் எனப் பலர் மீதும் பாடல்கள் இயற்றி அவர்களை மகிழ்வித்துள்ளார். இதனால் மருத்துவத்திற்குக் கட்டணம் இல்லாமல், அவர்கள் இவருக்கு பரிசுத் தொகையும் கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த வகையில் இவர், மன்னர்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடிய சங்க காலப் புலவர் மரபில் வருகிறார்.

    தொலைபேசி வழியிலான இந்த நேர்காணலில் இவரது இனிய பாடல்களையும் அனுபவங்களையும் கேட்டு மகிழுங்கள்.

    இவரை எனக்கு அறிமுகம் செய்வித்த நண்பர் குமரி எஸ்.நீலகண்டனுக்கு நன்றி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜெயந்தி சங்கர் பிறந்து வளர்ந்த கதை

    ஜெயந்தி சங்கர் பிறந்து வளர்ந்த கதை

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    சிங்கப்பூரில் வாழும் தமிழ் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், இந்தியாவில் பிறந்து வளர்ந்து, 22 வயது வரை தான் பெற்ற அனுபவங்களை, கற்ற கலைகளை, பயணித்த ஊர்களை, சந்தித்த மனிதர்களைப் பற்றி இந்த அமர்வில் பகிர்ந்துகொண்டுள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 40 புத்தகங்களை எழுதியவர், எனக்குப் பிடித்த மொழி மலையாளம் எனக் கூறுகிறார். இந்தச் சுவையான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நல்ல கூந்தல் பெற – நிர்மலா ராகவன் உடன் ஒரு நேர்காணல்

    நல்ல கூந்தல் பெற – நிர்மலா ராகவன் உடன் ஒரு நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    நல்ல கூந்தல் பெற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைத் தன் நேரடி அனுபவங்கள் வாயிலாக நகைச்சுவையுடன் எடுத்துரைக்கிறார் நிர்மலா ராகவன். முடி வளர, முடி உதிர்வது நிற்க, வழுக்கையிலிருந்து முடி வளர, முடி கெட்டியாக இருக்க, பொடுகு நீங்க… பற்பல குறிப்புகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அமாவாசையன்று இப்படிச் செய்தால் முழங்காலைத் தொடும் அளவுக்கு முடி வளரும் என அவர் சொல்வது ஓர் ஆச்சரியத் தகவல். இந்தப் பயனுள்ள உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இணையத்தில் நேர மேலாண்மை – அண்ணாகண்ணன் உரை

    இணையத்தில் நேர மேலாண்மை – அண்ணாகண்ணன் உரை

    இணையத்தில் நேர மேலாண்மை என்ற பொருண்மையில் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.04.2020 அன்று ஜூம் வழியே அண்ணாகண்ணன் வழங்கிய உரையின் பதிவு இங்கே. இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த பேராசிரியர் நறுமுகை இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பூர் கிருஷ்ணன் மகன் அரவிந்த் கிருஷ்ணன் மறைவு

    திருப்பூர் கிருஷ்ணன் மகன் அரவிந்த் கிருஷ்ணன் மறைவு

    அண்ணாகண்ணன்

    அரவிந்தத் தத்துவத்தில் தோய்ந்து, அரவிந்த அமுதம் என்ற நூலை எழுதிய திருப்பூர் கிருஷ்ணன், தன் ஒரே மகனுக்கு அரவிந்தன் என்று பெயர் சூட்டினார். நா.பார்த்தசாரதியின் புனைபெயர்களுள் ஒன்று, அரவிந்தன். நா.பா.வின் குறிஞ்சி மலர் புதினத்தின் நாயகன் பெயரும் அரவிந்தன். நா.பா.வின் சீடரான திருப்பூர் கிருஷ்ணன். அந்த வகையிலும் தன் மகனுக்கு இப்பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்தார்.

    சமூக சேவையில் (MSW – Master of Social Work) முதுகலைப் பட்டம் பெற்ற அரவிந்த் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகத்தில் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வந்தார். ஏராளமான இலக்கிய நிகழ்ச்சிகளுக்குத் தம் தந்தையாருடன் கூடவே வந்து, அவருக்கு உதவியாக இருந்தார். எப்போதும் சிரித்த முகத்துடன் நட்பும் பணிவும் உதவும் குணமும் ஒருசேர அமைந்தவர். திருப்பூர் கிருஷ்ணன், எப்போதும் நண்பராகவே பழகுபவர். என்னிடமும் தோளில் கைபோட்டு, காதைத் திருகி அன்பு பாராட்டுபவர். மகனை எப்படிச் சீராட்டி, பாராட்டுவார் எனச் சொல்லவே வேண்டாம்.

    அரவிந்த் கிருஷ்ணன் பெருந்தொற்றால் மறைந்தார் என்ற செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் திருப்பூர் கிருஷ்ணன் – ஜானகி தம்பதியருக்கு ஆழ்ந்த இரங்கல். காலம்தான் இந்தத் துயரத்தை ஆற்ற வேண்டும்.

    (இந்தப் படம், 1998இல் சென்னை மயிலையில் ஓர் இலக்கிய நிகழ்வில் எடுத்தது. உடன் நண்பர் ஹாஜா கனி)

    Share
  • உடல்மொழி சொல்லும் உண்மைகள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    உடல்மொழி சொல்லும் உண்மைகள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    நம் உடல்மொழி வெளிப்படுத்துவது என்ன? பிறரின் உடல்மொழியை நாம் புரிந்துகொள்வது எப்படி? பெண், வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தமா? பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு என்ன பொருள்? காதலை வெளிப்படுத்துவது எப்படி? மேடையில் பேசும்போது எத்தகைய உடல்மொழி தேவை? பார்வையாலேயே வல்லுறவு கொள்பவரை என்ன செய்வது? போலிப் பணிவையும் குழைவையும் கண்டுகொள்வது எப்படி? உடல்மொழியின் உண்மைகள், ரகசியங்கள் பலவற்றையும் நிர்மலா ராகவன் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். இந்த ரகளையான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • போற்றுவேன் போற்றுவேன் | அண்ணாகண்ணன் பாடல்

    போற்றுவேன் போற்றுவேன் | அண்ணாகண்ணன் பாடல்

    எந்தச் சுப நிகழ்ச்சியிலும் பாடத்தக்க வகையில் நான் இயற்றிய ‘போற்றுவேன் போற்றுவேன்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார், ராகமாலிகையாக இசையமைத்துப் பாடியுள்ளார். கண்டும் கேட்டும் மகிழுங்கள்.

    This is my first ‘lyric video’.

    போற்றுவேன் போற்றுவேன்

    போற்றுவேன் போற்றுவேன் பூவென, பொன்னென
    போற்றுவேன் போற்றுவேன் பொலிவென, வலிவென
    போற்றுவேன் போற்றுவேன் தேனென, மின்னென
    போற்றுவேன் போற்றுவேன் வானென, மீனென

    போற்றுவேன் போற்றுவேன் அழகென, சுடரென
    போற்றுவேன் போற்றுவேன் அமுதென, வடிவென
    போற்றுவேன் போற்றுவேன் விடிவென, விடையென
    போற்றுவேன் போற்றுவேன் உலகென, உயிரென

    போற்றுவேன் போற்றுவேன் நீரென, நிலமென
    போற்றுவேன் போற்றுவேன் சீரென, சாறென
    போற்றுவேன் போற்றுவேன் வேரென, வீறென
    போற்றுவேன் போற்றுவேன் ஆறென, நூறென

    போற்றுவேன் போற்றுவேன் தாயென, தந்தையென
    போற்றுவேன் போற்றுவேன் வாழ்வென, வண்ணமென
    போற்றுவேன் போற்றுவேன் விதையென, விளைவென
    போற்றுவேன் போற்றுவேன் வினையென, வெற்றியென

    போற்றுவேன் போற்றுவேன் தமிழென, செயலென
    போற்றுவேன் போற்றுவேன் கருவென, திருவென
    போற்றுவேன் போற்றுவேன் நுண்ணென, விரிவென
    போற்றுவேன் போற்றுவேன் கண்ணென, கருத்தென

    போற்றுவேன் போற்றுவேன் கதிரென, நிலவென
    போற்றுவேன் போற்றுவேன் கவியென, இசையென
    போற்றுவேன் போற்றுவேன் புதிதென, இனிதென
    போற்றுவேன் போற்றுவேன் மிகமிக மிகமிக.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மலையாளக் கரையோரம் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 13

    மலையாளக் கரையோரம் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 13

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    திருச்சூர் பூரம் திருவிழா அனுபவங்களில் தொடங்கி, ஒட்டுமொத்தக் கேரள அனுபவங்களையும் சுவையாக விவரிக்கிறார், ஓவியர் ஸ்யாம். இதில் யானை பவனி, வெடிகட்டு, தொலைக்காட்சியில் பூரம் திருவிழாவைப் பார்த்தபடி நடனமாடும் மலையாளி எனப் பலவற்றின் காணொலிக் காட்சிகளையும் இடையிடையே நீங்கள் கண்டு களிக்கலாம். சுவையான இந்த உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எதில் முதலீடு செய்யலாம்? – ஸ்ரீராம் நாராயணன் நேர்காணல் – 1

    எதில் முதலீடு செய்யலாம்? – ஸ்ரீராம் நாராயணன் நேர்காணல் – 1

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    பரவலாக வட்டி விகிதங்கள் குறைந்துவிட்ட நிலையில், இனி வட்டி வருவாயை மட்டும் நம்பி வாழ்க்கையை நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வட்டி வருவாயை மட்டுமே நம்பி இருந்த ஏழை, நடுத்தர மக்கள், சிறு முதலீட்டாளர்கள் பலரும் செய்வதறியாது நிற்கின்றார்கள். இந்தப் பின்னணியில் இப்போது நாம் என்ன செய்வது? நமக்கு முன்னுள்ள வாய்ப்புகள் என்னென்ன? அமெரிக்கவாழ் நண்பரும் இந்திய நிதிச் சந்தையைத் தொடர்ந்து கவனித்து எழுதி வருபவருமான ஸ்ரீராம் நாராயணன், நம் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார். பார்த்துப் பயன் பெறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இராமருக்குத் தாடி, மீசை ஏன்? – ஓவியர் ஸ்யாம் – 12

    இராமருக்குத் தாடி, மீசை ஏன்? – ஓவியர் ஸ்யாம் – 12

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    இராமரைத் தாடி, மீசையுடன் வரைந்தது ஏன்? இராமர் 30 அடி உயரமும் சீதை 25 அடி உயரமும் இருந்தார்களா? ஓவியத்தில் இராமரையும் கிருஷ்ணரையும் எப்படி வேறுபடுத்தி வரைகிறீர்கள்? அவதார் படத்தின் பாத்திரத்துக்கு இராமர் தூண்டுதலாக இருந்தாரா? சில ஓவியங்களை அல்லது சிற்பங்களை எங்கிருந்து பார்த்தாலும் நம்மையே பார்ப்பது போல் இருப்பது எப்படி? இத்தகைய கேள்விகள் பலவற்றுக்கும் ஓவியர் ஸ்யாம், ஸ்ரீ ராம நவமி அன்று பதில் அளித்தார். அவருடைய சுவையான பதில்களைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆரோக்கியத்தின் ரகசிய சாவி – ஓவியர் ஸ்யாம்

    ஆரோக்கியத்தின் ரகசிய சாவி – ஓவியர் ஸ்யாம்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஓவியர் ஸ்யாம் தமது ஆரோக்கியத்தின் ரகசியங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மார்க்கண்டேயராக, என்றும் இளைஞராக விளங்கும் அவரது வாழ்க்கை முறை, உணவு முறை, மருத்துவ முறை ஆகியவை, பிறருக்கு வழிகாட்டக் கூடியவை. அனுபவம் சார்ந்த இந்தக் குறிப்புகள், உங்கள் அன்றாடச் சிக்கல்கள் பலவற்றைத் தீர்க்கக் கூடியவை. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share