Tag: ஓவியர் ஸ்யாம்

  • ஓவியர் மாருதி நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம்

    ஓவியர் மாருதி நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம்

    காலத்தால் அழியாத, அழகிய ஓவியங்களைப் படைத்தவர். இயல்பான முகங்களையும் கைவண்ணத்தால் கலைவண்ணத்தால் காவிய நாயகிகளாய் வடித்தவர். வண்ணங்களுக்குள் புகுந்து வாழ்க்கையை எழுதியவர். தூரிகை பிடித்து, தனக்கென ஒரு பாதையை, பாணியைக் கட்டமைத்தவர், ஓவியர் மாருதி. இவர் குறித்த நினைவலைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், ஓவியர் ஸ்யாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • பாமா கோபாலன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம் உரை

    பாமா கோபாலன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம் உரை

    சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஓவியர் ஸ்யாம் ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாமா கோபாலன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம்

    பாமா கோபாலன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம்

    குமுதம் இதழில் பணியாற்றிய மூத்த எழுத்தாளர், இதழாளர் பாமா கோபாலன், அண்மையில் அமெரிக்கா சென்றபோது காலமானார். அவருடன் நெருங்கிப் பழகிய ஓவியர் ஸ்யாம், தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ப்ரியா கல்யாணராமன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம்

    ப்ரியா கல்யாணராமன் நினைவலைகள் | ஓவியர் ஸ்யாம்

    குமுதம் ஆசிரியராக, புகழ் பெற்ற எழுத்தாளராக விளங்கிய ப்ரியா கல்யாணராமன், அண்மையில் தமது 56ஆவது வயதில் மாரடைப்பால் மறைந்தார். அவருடன் நெருங்கிப் பழகிய ஓவியர் ஸ்யாம், தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருமலை நாயக்கர் மஹால் | 4K

    திருமலை நாயக்கர் மஹால் | 4K

    ஓவியர் ஸ்யாம் அண்மையில் மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்குச் சென்றபோது எடுத்த படங்கள், 4K தரத்தில். பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மதுரை மீனாட்சி திருக்கோவில்

    மதுரை மீனாட்சி திருக்கோவில்

    மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் – 2022 ஜனவரியில்.

    படங்கள் – ஓவியர் ஸ்யாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் – 3

    ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் – 3

    கலையை விற்கலாமா? கலை என்ன வியாபாரப் பொருளா? என்று கேட்டால், ஆமாம், கலை வியாபாரம்தான் என அடித்துச் சொல்கிறார் ஓவியர் ஜெயராஜ். அவருடன் ஓவியர் ஸ்யாம் நிகழ்த்திய உரையாடலின் மூன்றாவது பகுதி, இதோ. பத்திரிகை உலகின் இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் அதிரடி நேர்காணலைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உங்க வீட்டுப் பெண்களை இப்படி வரைவீர்களா?

    உங்க வீட்டுப் பெண்களை இப்படி வரைவீர்களா?

    சந்திப்பு – ஓவியர் ஸ்யாம், அண்ணாகண்ணன்

    ஓவியர் ஜெயராஜ் நேர்காணலின் இரண்டாவது பகுதி. பனியன் வாசகங்கள் முதல் பெண்களின் அனாடமி வரை பல்வேறு கேள்விகளுக்கு இதில் பதில் அளித்துள்ளார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் – 1

    ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் – 1

    சந்திப்பு: ஓவியர் ஸ்யாம்

    ஓவியர் ஜெயராஜ், தமிழ் இதழுலகில் தடம் பதித்த சித்திரக்காரர். சிறுகதைகள், தொடர்கதைகள், படக்கதைகள், புத்தகங்கள், பாடநூல்கள்… என 64 ஆண்டுகளாகப் பல்லாயிரம் ஓவியங்களைப் படைத்து அளித்து வருகிறார். தமக்கெனத் தனிப் பாணி, முத்திரையுடன் எழில் குலுங்கும், இளமை ததும்பும் ஓவியங்களைத் தீட்டி வருகிறார். சுஜாதாவின் கணேஷ் – வசந்த், பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி – சீதாப்பாட்டி எனப் பல பாத்திரங்களை வாசகர்கள் மனத்தில் பளிச்சென அமர வைத்தவர். 84 வயதுடைய மூத்த ஓவியர் ஜெயராஜ் அவர்களை இளம் ஓவியர் ஸ்யாம் சந்தித்து உரையாடுகிறார். இந்தக் கலகலப்பான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குட்டி குட்டி பசி எடுத்தால் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 15

    குட்டி குட்டி பசி எடுத்தால் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 15

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    நம்மில் பலருக்கும் அவ்வப்போது குட்டி குட்டி பசி எடுக்கும். சிலருக்குக் காலையில் எழுந்தவுடனே பசி, வயிற்றைக் கிள்ளும். சிலருக்குக் குளித்தவுடன் வயிறு பரபரக்கும். சிலருக்குச் சாப்பிட்ட உடனே மீண்டும் பசிக்கும். சிலருக்கு வேலை செய்தால் கபகபவெனப் பசிக்கும். சிலருக்கு ஓய்வெடுத்தாலே பசிக்கும். இந்த ஊரடங்கில் இஷ்டத்திற்கு வெளியில் சென்று, வாங்கிச் சாப்பிட முடியாது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் பண்டங்களைக் கொண்டே சுவையான, ஆரோக்கியமான உணவை எளிதில் தயாரிப்பது எப்படி? இதோ ஏராளமான குறிப்புகளை அள்ளித் தருகிறார், ஓவியர் ஸ்யாம். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என் அம்மா சத்தியபாமா – ஓவியர் ஸ்யாம் உருக்கமான உரையாடல் – 14

    என் அம்மா சத்தியபாமா – ஓவியர் ஸ்யாம் உருக்கமான உரையாடல் – 14

    அன்னையர் தினத்து அன்று ஓவியர் ஸ்யாம் அவர்களுடன் அவர் அம்மாவைப் பற்றி உரையாடினோம். ஸ்யாம், தம் அம்மாவைப் பற்றிய நினைவுகளையும் அவரைக் காப்பாற்ற நிகழ்த்திய போராட்டங்களையும் நம்முடன் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். உடல்நலம் பெற ஜெபிக்க வந்த கிறித்தவர்களால், அவர் அம்மா கிறித்தவராக மாறியது, ஞானஸ்நானம் செய்துகொண்டது, தம் நகைகளை எல்லாம் கழற்றி உண்டியலில் இட்டது, கர்த்தர் காப்பாற்றுவார் என்று மருத்துவத்தை மறுத்தது… எனப் பலவும் நம்மை அதிர வைக்கக்கூடியவை. மனத்தை உலுக்கக்கூடிய இந்தச் சம்பவங்களை ஸ்யாம் சொல்லக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மலையாளக் கரையோரம் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 13

    மலையாளக் கரையோரம் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 13

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    திருச்சூர் பூரம் திருவிழா அனுபவங்களில் தொடங்கி, ஒட்டுமொத்தக் கேரள அனுபவங்களையும் சுவையாக விவரிக்கிறார், ஓவியர் ஸ்யாம். இதில் யானை பவனி, வெடிகட்டு, தொலைக்காட்சியில் பூரம் திருவிழாவைப் பார்த்தபடி நடனமாடும் மலையாளி எனப் பலவற்றின் காணொலிக் காட்சிகளையும் இடையிடையே நீங்கள் கண்டு களிக்கலாம். சுவையான இந்த உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இராமருக்குத் தாடி, மீசை ஏன்? – ஓவியர் ஸ்யாம் – 12

    இராமருக்குத் தாடி, மீசை ஏன்? – ஓவியர் ஸ்யாம் – 12

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    இராமரைத் தாடி, மீசையுடன் வரைந்தது ஏன்? இராமர் 30 அடி உயரமும் சீதை 25 அடி உயரமும் இருந்தார்களா? ஓவியத்தில் இராமரையும் கிருஷ்ணரையும் எப்படி வேறுபடுத்தி வரைகிறீர்கள்? அவதார் படத்தின் பாத்திரத்துக்கு இராமர் தூண்டுதலாக இருந்தாரா? சில ஓவியங்களை அல்லது சிற்பங்களை எங்கிருந்து பார்த்தாலும் நம்மையே பார்ப்பது போல் இருப்பது எப்படி? இத்தகைய கேள்விகள் பலவற்றுக்கும் ஓவியர் ஸ்யாம், ஸ்ரீ ராம நவமி அன்று பதில் அளித்தார். அவருடைய சுவையான பதில்களைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நடிகர் விவேக்கிற்குச் சிலை வைக்கணும் – ஓவியர் ஸ்யாம்

    நடிகர் விவேக்கிற்குச் சிலை வைக்கணும் – ஓவியர் ஸ்யாம்

    மறைந்த நடிகர் விவேக்கிற்கு ஓவியர் ஸ்யாம், தன் ஓவியத்தின் மூலம் அஞ்சலி செலுத்துகிறார். விவேக் உடனான தம் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். விவேக்கிற்குச் சிலை வைக்கணும் என்று அவர் சொல்வது ஏன்? பதிவைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆரோக்கியத்தின் ரகசிய சாவி – ஓவியர் ஸ்யாம்

    ஆரோக்கியத்தின் ரகசிய சாவி – ஓவியர் ஸ்யாம்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஓவியர் ஸ்யாம் தமது ஆரோக்கியத்தின் ரகசியங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மார்க்கண்டேயராக, என்றும் இளைஞராக விளங்கும் அவரது வாழ்க்கை முறை, உணவு முறை, மருத்துவ முறை ஆகியவை, பிறருக்கு வழிகாட்டக் கூடியவை. அனுபவம் சார்ந்த இந்தக் குறிப்புகள், உங்கள் அன்றாடச் சிக்கல்கள் பலவற்றைத் தீர்க்கக் கூடியவை. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share