Blog

  • முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 2

    முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 2

    சி. ஜெயபாரதன், கனடா

    படிப்பினை-2 முதியோர் இல்லப் புலப்பெயர்ச்சி – தவிர்க்க முடியாத ஒரு சிறை அடைப்பு

    ரிவெல்லா முதியோர் இல்லத்தில் 50 பேர் தனித்தனி அறைகளில் ஐந்தாறு மாதங்களோ, ஓரிரு வருடங்களோ வசித்து வருகிறார். தம்பதிகள் ஒரு பெரும் அறையிலே தங்கி இருக்கிறார்.  சேர்ந்த முதல் நாள் காலை  உணவு தின்னக் கூடியிருந்த குழுவுக்கு ஹாலில் நான் அறிமுகம் செய்யப்பட்டேன். சேர்ந்த சில தினங்கள் யாரும் என்னைப் பாராதவர் போல் நடந்துகொண்டார். நான் செவ்வாய்க் கோளில் முதன்முதல் தடம் வைத்தது போல் ரிவெல்லா இல்லத்தில் உணர்ந்தேன்.  சில நாட்களில் சில மாதர், வயோதிகர் என்னைப் பேர் சொல்லி அழைத்தார்கள்.

    உணவு, உறவு, ஓய்வு இம்மூன்றும் முதியோர் இல்லத்தில் ஒருவர் வசிக்க முணுமுணுக்கும் தாரக மந்திரம். இம்மூன்றில் எது ஒன்று முதியோர் இல்லத்தில் ஒருவருக்கு நீண்ட காலம் குன்றி விடுகிறதோ அப்போது  அவரது மனம் மீளாதபடி  உடைகிறது! படாத பாடு படுகிறது.  பழமொழி: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. எந்த உணவு?   ஒருவருக்குப் பிடித்த உணவு.  தினமும்  மூன்று வேளை காலை 8 மணி, பகல் 12 மணி, மாலை 5 மணிக்கு உணவு தயாராகி அனைத்து முதியோரும் ஒருங்கே அமர்ந்து ஹாலில் உண்கிறார்.

    வட அமெரிக்க மாமிச உணவுகள் பலவகை, இந்தியருக்குப் பிடிப்பதில்லை. யாராவது வீட்டில் இந்திய உணவு [அரிசி சாதம், சாம்பார் சப்பாத்தி, குருமா] சமைத்து ஒரு சில தினங்கள் உண்ணலாம். ஆனால் அந்த வசதி நீடிப்பதில்லை. இட்லி, தோசை, உப்புமா, அரிசி சாதம், சாம்பார், புலாவ், தயிர் சாதம் சுவையாக உண்ட தமிழருக்கு உணவு ஒன்றே தீராத முதல் பிரச்சினையாகி விடுகிறது.

    அடுத்தது உறவு. அதாவது ஆண்-பெண் நெருக்க உறவு. [intimate mates] ரிவெல்லா முதியோர் இல்லத்தில் சேர்ந்தது முதல் என்னைக் கொல்லாமல் கொன்றது தனிமை உணர்வு.  மனைவி இறந்த பிறகு, மூன்று தனிப்பட்ட மாதரை அணுகி உடன்வாழ நேராகவே கேட்டேன், துணையாக வாழ்வதற்கு.  அவரை மணந்து கொள்ளவும் தயார் என்றும் சொன்னேன்.. ஒரு மாது, கணவனை இழந்தவர், மும்பையில் வாழ்ந்த [1959-2009] போது நன்கு பழக்கமான தமிழ் மாது. 65 அல்லது 70 வயது இருக்கலாம். அந்த வயதிலும் அழகிய கவர்ச்சி மாது. இனிய குரல். கணவர் சகோதரன் போல் என்னை நடத்திய நண்பர்.  கனடாவில் வாழ்பவர். ஆனால் நான்  எவ்வளவோ முயன்றும் என்னை மணக்க மறுத்துவிட்டார். ஒருத்திக்கு ஒரு கணவன் தான் ஒரு திருமணம் தான், என்ற கொள்கை உடையவர்.

    அடுத்த மாது, பஞ்சாபிப் பெண் 60 அல்லது 65 வயதிருக்கலாம்.  மிகவும் பழக்கமான பஞ்சாபி நண்பர் மனைவியின் தங்கை. திருமணம் ஆகாத மாது.  கனடாவில் தமையனுடன் வசிப்பவர்.  நேராக நான் மணந்துகொள்ள முயன்றும் நண்பரின் மனைவி அதற்கு உடன்படவில்லை.

    எழுபது, எண்பது வயதில ஆணுக்குப் பெண்ணுறவு, பெண்ணுக்கு ஆண் உறவு, மிகவும் தேவைப்படுகிறது.  Reach out & love someone, touch someone. Body heat, intimate relations.  உடல் உறவல்ல, உடல் நெருக்கம் முதியோர் இருபாலாருக்கும் அவசியம் கிடைக்க வாய்ப்புகள் அமைய வேண்டும்.  வயிற்றுப் பசி, அடுத்தது உடற்பசி இந்த இரண்டு மனித இச்சைகள் முதியோருக்குப் பூர்த்தியாக வேண்டும்.  தனிமையில் தவித்து இறக்கும் முதியவர் அநேகம். மகாத்மா காந்தி, ஈவேரா பெரியார், டாக்டர் அம்பேத்கார், போன்றோர் ஒருசில உதாரணங்கள்.

    [தொடரும்]   

    Share
  • மொரீசியஸ் நாட்டில் ஒரு கைலாசம்

    லண்டன்வாழ் தமிழ்க் கவிஞர் சக்தி சக்திதாசன், அண்மையில் மொரீசியஸ் நாட்டுக்குச் சென்று வந்தார். இதன் தலைநகரான போர்ட் லூயிஸ் பெருநகரில் கயிலாயம் (கைலாசம்) என்ற பெயரில் சிவன் கோவில் உள்ளது. சொக்கலிங்கம் மீனாட்சி அம்மன் கோவில் என்றும் இதனை அழைப்பர். இந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கிய சக்திதாசன், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற அடிப்படையில் நாமும் இதைக் காண, பதிவு செய்து அனுப்பியுள்ளார். இந்த அழகிய கோவிலுக்குள் இதோ ஓர் உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வேலைன்னு வந்துட்டா ஜப்பான்காரன்

    வேலைன்னு வந்துட்டா ஜப்பான்காரன்

    வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என மோனைக்காகச் சொல்வது உண்டு. உண்மையில் அதை வேலைன்னு வந்துட்டா ஜப்பான்காரன் என்று தான் சொல்ல வேண்டும். ஜப்பானியர் வேலை அணுகுமுறை எத்தகையது? மற்றவர்களிடமிருந்து எப்படி வேறுபட்டது? அமெரிக்கர்கள், ஜப்பானியரைப் பார்த்து வியந்த பண்பு எது? ஜப்பானியர்களின் அதிவேக வளர்ச்சிக்கான அடிப்படை என்ன? ஜப்பானிய நிறுவனத்தில் பணியாற்றிய தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னியோங்கு 3 & 4 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    சென்னியோங்கு 3 & 4 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். இதன் மூன்றாம், நான்காம் பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 1

    முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 1

    RVilla Senior Home

    விக்கலோ கக்கலோ வேதனைச் சிக்கலோ
    பொக்கெனப் போகும் உயிர்.

    சி. ஜெயபாரதன், கனடா

    ரிப்லி முதியோர் காப்பில்லத்தில் என்னைச் சேர்த்து நாலு வாரம் ஆகிறது. சொல்லப் போனால் அது ஒரு முதுமைச் சிறை வாசம் தான்.  அங்குப் போக மாட்டேன் என்று சின்னப் பிள்ளை போல் மகளிடம் பன்முறை தர்க்கம் புரிந்தேன்.  மனைவி இறந்த பின் என் இல்லத்தில் இதுவரை தனியாக, சுதந்திரமாக, இனிதாக வாழ்ந்த நாட்கள், இனிமேல் திரும்பி வருமோ?  பார்க்கின்சன் முடக்குவாத நோய் பத்து ஆண்டுக்கு மேல்  என்னை ஆக்கிரமித்துக்கொண்டு வேதனை தாங்க முடியாமல் தவித்து வருகிறேன்.  அத்துடன் அடுத்து மாரடைப்பு வேறு என்னை எதிர்பாராத நேரத்தில் தாக்கிவிட்டது.  எனக்கு 911 எண்ணை அடித்து அவசர வாகன ஆம்புலன்சைக் கூப்பிட கையில் வலுவில்லை.  தடுமாறி எப்படியோ எதிர்த்த வீட்டு நண்பரை போனில் அழைத்ததும், அவர் பக்கத்து வீட்டு நண்பருடன் ஓடிவந்தார். இருவரும் என் நிலையை நன்கு அறிந்தவர்கள்.  ஒருவர் 911 எண்ணை அடித்து  டெலிபோன் மாதுக்கு என் நிலையை விளக்கினார். ஐந்து நிமிடத்தில், ஒரு வாகனம் வந்து நின்றது. நான் மூச்செடுப்பு குன்றி பேஸ்ட், பிரஸ், சேவர், மெடிகல் கார்டு, மருந்து பில்ஸ் லிஸ்ட் மற்றும் தேவையான உடைகளை மெதுவாய் பையில் எடுத்துக்கொண்டு ஆம்புலன்சில் நானே ஏறினேன்.  மீண்டும் இந்த வீட்டுக்கு வருவேனா என்பது கேள்விக்குறியானதால்,  திரும்பவும் ஒருமுறை என்னில்லத்தைப் பார்த்துக்கொண்டேன்.  எனக்கு மாரடைப்பு வந்துள்ளதை அப்போது நான்  அறியவில்லை.

    படிப்பினை – 1: முதுமையில் நலமாக உள்ள போதே அவசர உடல் நிலைக்குத் தயாராக இரு

    மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் பறந்தது. நண்பர் என் சின்ன மகளுக்குத் தகவல் கொடுத்தார் போனில். சுதந்திர வீட்டு வாழ்வு தடையாகி, மருத்துவமனைச் சிறையில் ஒரு வாரமோ பல வாரமோ, சிக்கிக்கொள்ள இடர்களை இடையூறுகளை தாங்கிக்கொண்டேன்.  தினமும் இரத்த சோதனை. 15 பவுண்டு எடை எப்படியோ போய், எடுக்க இரத்தமில்லை. கைகளில் குத்த இடமில்லை. 24 மணி நேரம் நிரந்தர இரத்தம் திணிவு குறைய,  மருந்து வீல் கம்பத்தை இழுத்துக் கொண்டு கழிப்பறை, குளிப்பறை, நடைபாதையில் போவது கண்கொள்ளாக் காட்சி. இருதய மென் தகடு பம்புக்கு இரத்தம் அனுப்பும் குழலில் அடைப்பு.

    அருகில் காற்றுப் பைகள் பழுதாகி, ஆக்சிஜன் சிலிண்டரை இழுத்துக்கொண்டு ஒருவரைப் படுக்கையில் கிடத்தினார்கள். அவர் போட்ட இருமலில் காங்கிரீட் மனையே ஆடியது.  அவரை வேறு பெரிய மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றார்கள், ஒரு வாரத்தில் அவர் இறந்து போனார்.

    ஆராவாரம், அலறல், இருமல் சத்தங்கள் உள்ள மருத்துவ மனையில் 21 நாட்கள் இரவு சரிவரத் தூங்காமல் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்து எப்போது விடியும் என்று விழித்திருந்தேன். அங்கிருந்து ஓரளவு சுகமாகி, ரிப்லி முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிறது.  புது சுற்றுப்புறம்.  45 முதியோர் [ஆடவர், மாதர்]-தங்கி வருகிறார். நான்தான் முதல் தங்கும் தமிழன்.  ஆனாலும்  முதல் சில நாட்கள் தனிமை உணர்ச்சி கொன்றது. பார்க்கின்சன் நோயில் துன்புற்று வரும் நான் இப்போது மாரடைப்பு வந்து, வலுவில்லாமல், கைத்தடி ஊன்றி பெங்குயின் போல் ஊர்ந்து வருகிறேன்.  மருத்துவமனைச் சிறையிலிருந்து இப்போது முதியோர் காப்பு இல்லத்தில் சிக்கிக்கொண்டு உண்டு, உறங்கி, எழுந்து ஊர்ந்து வருகிறேன்.  அது பெரிய சிறை.  நிமிர்ந்து நாலு சக்கர நடப்பு சாதனத்துடன் ஊர்ந்திடும் மனிதன் நான் ஒருவன் தான்  பலர் முதுகு வளைந்து தள்ளாடும் வயோதிகர். அவர்கள் நிலை என்னை விட இரங்கத் தக்கது.

    [தொடரும்]

    Share
  • பாமா கோபாலன் நினைவலைகள் | பட்டுக்கோட்டை பிரபாகர் உரை

    பாமா கோபாலன் நினைவலைகள் | பட்டுக்கோட்டை பிரபாகர் உரை

    சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாமா கோபாலன் நினைவலைகள் | திருப்பூர் கிருஷ்ணன் உரை

    பாமா கோபாலன் நினைவலைகள் | திருப்பூர் கிருஷ்ணன் உரை

    சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் திருப்பூர் கிருஷ்ணன் ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாமா கோபாலன் நினைவலைகள் | லேனா தமிழ்வாணன் உரை

    பாமா கோபாலன் நினைவலைகள் | லேனா தமிழ்வாணன் உரை

    சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் லேனா தமிழ்வாணன் ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாமா கோபாலன் நினைவலைகள் | ராணிமைந்தன் உரை

    பாமா கோபாலன் நினைவலைகள் | ராணிமைந்தன் உரை

    சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் எழுத்தாளர் ராணிமைந்தன் ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாமா கோபாலன் நினைவலைகள் | கலைமாமணி யோகா உரை

    பாமா கோபாலன் நினைவலைகள் | கலைமாமணி யோகா உரை

    சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் நிழற்படக் கலைஞர், கலைமாமணி யோகா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாமா கோபாலன் நினைவலைகள் | மணியம் செல்வன் உரை

    பாமா கோபாலன் நினைவலைகள் | மணியம் செல்வன் உரை

    சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஓவியர் மணியம் செல்வன் ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாமா கோபாலன் நினைவலைகள் | எழுத்தாளர்கள் சுபா உரை

    பாமா கோபாலன் நினைவலைகள் | எழுத்தாளர்கள் சுபா உரை

    சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ் & பாலா) அடுத்தடுத்து ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(456)

    குறளின் கதிர்களாய்…(456)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(456)

    ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டி
    னாறென்ப ராய்ந்தவர் கோள்.

    -திருக்குறள் – 662 (வினைத் திட்பம்)

    புதுக் கவிதையில்…

    தடைபடும் செயல்களைத்
    தவிர்த்துச் செய்யாமலிருப்பதும்,
    தடைபட்டுவிட்டால் மனம்
    தளர்ந்துவிடாமல்
    தாங்கிக்கொள்வதும் ஆகிய
    இரண்டின் வழியே கடமையாற்றுதல்,
    என்பது
    நீதிநூல் ஆராய்ந்தறிந்த
    நல்லமைச்சரின் கொள்கையாகும்…!

    குறும்பாவில்…

    தடைபடும் செயல்களைத் தவிர்த்தல்,
    தடைபடின் தளராதிருத்தல் எனுமிருவழி செயலாற்றல்
    நீதிநூலறிந்த அமைச்சரின் கொள்கையே…!

    மரபுக் கவிதையில்…

    செய்யும் செயல்கள் தடைபட்டால்
    செயாம லவற்றைத் தவிர்த்திடுதல்,
    தெய்வச் செயலால் தடைவரினும்
    தேங்கி நின்றே தளர்வுறாமல்
    உய்யும் வகையில் மனதினிலே
    உறுதி யுடனே தாங்கலென
    மெய்யா மிரண்டை ஆய்ந்தறிந்த
    மேலாம் அமைச்சர் கொள்கையாமே…!

    லிமரைக்கூ…

    தடைபடும் செயல்களைக் கண்டே
    தவிர்த்து, தடைவரின் தளர்வுறார் அமைச்சர்
    இவற்றைக் கொள்கையாய்க் கொண்டே…!

    கிராமிய பாணியில்…

    செய்யாத செய்யாத
    தடங்கலு வருற
    செயலுகளச் செய்யாத,
    தளராத தளராத
    தடங்கலு வந்தாத் தளராத..

    தடபடுற செயலுகள
    செய்யாம உடுறது,
    தடங்கலு வந்தா
    தளந்து போவாம
    தைரியமா இருக்கிறது,
    இந்த ரெண்டுந்தான்
    வௌரந் தெரிஞ்ச
    மந்திரியோட கொள்க..

    அதால
    செய்யாத செய்யாத
    தடங்கலு வருற
    செயலுகளச் செய்யாத,
    தளராத தளராத
    தடங்கலு வந்தாத் தளராத…!

    Share
  • பாமா கோபாலன் நினைவலைகள் | என்.சி.மோகன்தாஸ் உரை

    பாமா கோபாலன் நினைவலைகள் | என்.சி.மோகன்தாஸ் உரை

    சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேர்வெல் (சிறுகதை)

    பேர்வெல் (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி

    ஸோ.. யு ஆர் கெட்டிங் ரிலிவ்ட் திஸ் நூன் என்றார் ஜீஎம்

    எஸ் சார். வார்த்தை வெளி வரவில்லை. எனக்கு மட்டும் தான் கேட்டிருக்கும்.

    யு சி. தேர் இஸ் எ பார்மாலிட்டி. நீங்க மீட்டிங் முடிஞ்ச உடனே பேசலாம்

    இட் வில் பி அகைன்ஸ்ட் யு என்றேன்

    உதட்டை பிதுக்கி இட்ஸ் ஆல் யூர்ஸ் என்றார்

    ஆறு பேர் மாலை போட்டார்கள். மல்லிகா பொன்னாடை போர்த்தி விட்டு ஐ மிஸ் யு என்றாள்.

    கொஞ்சம் கலக்கமான தெம்பு வந்தது

    அக்கௌன்டஸ் அய்யர் திருநீறு பூசி விட்டார். கை கொடுத்து நான் சொன்னது ஞாபகம் இருக்கா எனக் கேட்டார். தலையை ஆட்டினேன்

    இன்னும் ஜீஎம் வரவில்லை

    அவர் நடுங்கியிருப்பார் என உள்ளுக்குள் சந்தோஷம்.

    எதிராளியின் பயமும் அதன் விளைவாய் எழும் நிலை சாடிசம். எனக்குத் தெரியும். ஆனால் மனம் சந்தோஷம்  என்கிறது. போன மாதம் சேர்ந்த ஸ்டெனோ என் வீட்டு நம்பரைக் கேட்டாள். அவளிடம் இரண்டு பாலிசி, போன மாதம் போட்டேன்.

    சார் உங்க கையால் ஸ்நாக்ஸ் கொடுங்க என்றாள் ஹவுஸ் கீப்பிங் பெண்மணி.

    முதல்ல எனக்குக் கொடு மேன் எனக் குரல் கேட்டு திரும்பினால் ஜி எம்.

    கொஞ்சம் ஜெர்க்.

    சுதாரித்துக் கொண்டு  இஸ் யுவர் சுகர் அண்டர் கண்ட்ரோல் எனக் கேட்டேன்

    கத்தாதே என்றார்.

    சுதர்சன். நான் இந்த மீட்டிங்கை வீடியோ கான்பாரன்ஸ்ல போடப் போறேன்.

    யு கேன் டேர் மீ இண்டு பீசெஸ் என்றார்.

    இல்லை சார்.

    ஒய் மேன் ..

    நீங்க வராம இருந்தா பயம்னு சொல்லலாம். வந்து லைவ் ரிலே பண்ண முயற்சி பண்றதைப் பார்த்தா ஐ திங் ஐ மே பைல் இன் மை எண்டவர் என்றேன் .

    ரைட். லேட் மீ மூவ் எனக் கை கொடுத்தார்.

    பத்து நிமிஷம் கழித்து மணி அய்யரைக் கூப்பிட்டார்

    போனில்

    சார் என்றார் மணி அய்யர் . அந்த கான்பாரன்ஸ் கிட் எங்கே எனக் கேட்டார்.

    இங்கே தான் இருக்கு சார்.

    ஒய். அது ரிப்பேர். போய் அதை கோடவுன்ல போட்டுட்டு, கஸ்டம்ஸ் போற வழிய பாரும்

    சரி சார்.

    அடுத்த போன் மல்லிகாவுக்கு.

    ஹாய் , ஐ அம் ப்ரீ நௌ. யு கேன் கம்

    Share