பேர்வெல் (சிறுகதை)
பாஸ்கர் சேஷாத்ரி
ஸோ.. யு ஆர் கெட்டிங் ரிலிவ்ட் திஸ் நூன் என்றார் ஜீஎம்
எஸ் சார். வார்த்தை வெளி வரவில்லை. எனக்கு மட்டும் தான் கேட்டிருக்கும்.
யு சி. தேர் இஸ் எ பார்மாலிட்டி. நீங்க மீட்டிங் முடிஞ்ச உடனே பேசலாம்
இட் வில் பி அகைன்ஸ்ட் யு என்றேன்
உதட்டை பிதுக்கி இட்ஸ் ஆல் யூர்ஸ் என்றார்
ஆறு பேர் மாலை போட்டார்கள். மல்லிகா பொன்னாடை போர்த்தி விட்டு ஐ மிஸ் யு என்றாள்.
கொஞ்சம் கலக்கமான தெம்பு வந்தது
அக்கௌன்டஸ் அய்யர் திருநீறு பூசி விட்டார். கை கொடுத்து நான் சொன்னது ஞாபகம் இருக்கா எனக் கேட்டார். தலையை ஆட்டினேன்
இன்னும் ஜீஎம் வரவில்லை
அவர் நடுங்கியிருப்பார் என உள்ளுக்குள் சந்தோஷம்.
எதிராளியின் பயமும் அதன் விளைவாய் எழும் நிலை சாடிசம். எனக்குத் தெரியும். ஆனால் மனம் சந்தோஷம் என்கிறது. போன மாதம் சேர்ந்த ஸ்டெனோ என் வீட்டு நம்பரைக் கேட்டாள். அவளிடம் இரண்டு பாலிசி, போன மாதம் போட்டேன்.
சார் உங்க கையால் ஸ்நாக்ஸ் கொடுங்க என்றாள் ஹவுஸ் கீப்பிங் பெண்மணி.
முதல்ல எனக்குக் கொடு மேன் எனக் குரல் கேட்டு திரும்பினால் ஜி எம்.
கொஞ்சம் ஜெர்க்.
சுதாரித்துக் கொண்டு இஸ் யுவர் சுகர் அண்டர் கண்ட்ரோல் எனக் கேட்டேன்
கத்தாதே என்றார்.
சுதர்சன். நான் இந்த மீட்டிங்கை வீடியோ கான்பாரன்ஸ்ல போடப் போறேன்.
யு கேன் டேர் மீ இண்டு பீசெஸ் என்றார்.
இல்லை சார்.
ஒய் மேன் ..
நீங்க வராம இருந்தா பயம்னு சொல்லலாம். வந்து லைவ் ரிலே பண்ண முயற்சி பண்றதைப் பார்த்தா ஐ திங் ஐ மே பைல் இன் மை எண்டவர் என்றேன் .
ரைட். லேட் மீ மூவ் எனக் கை கொடுத்தார்.
பத்து நிமிஷம் கழித்து மணி அய்யரைக் கூப்பிட்டார்
போனில்
சார் என்றார் மணி அய்யர் . அந்த கான்பாரன்ஸ் கிட் எங்கே எனக் கேட்டார்.
இங்கே தான் இருக்கு சார்.
ஒய். அது ரிப்பேர். போய் அதை கோடவுன்ல போட்டுட்டு, கஸ்டம்ஸ் போற வழிய பாரும்
சரி சார்.
அடுத்த போன் மல்லிகாவுக்கு.
ஹாய் , ஐ அம் ப்ரீ நௌ. யு கேன் கம்