Blog

  • மொழிப் பயிற்சி | கெங்கவல்லி ஆ.மணவழகன் பேச்சு

    மொழிப் பயிற்சி | கெங்கவல்லி ஆ.மணவழகன் பேச்சு

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மொழிப் பயிற்சி என்ற தலைப்பில் கெங்கவல்லி ஆ.மணவழகன் ஆற்றிய உரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கலைஞர் செம்மொழிச் செயற்பாடுகள் | நெல்லை ஜெயந்தா பேச்சு

    கலைஞர் செம்மொழிச் செயற்பாடுகள் | நெல்லை ஜெயந்தா பேச்சு

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலைஞரின் செம்மொழிச் செயற்பாடுகள் என்ற தலைப்பில் நெல்லை ஜெயந்தா ஆற்றிய உரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கணினித் தமிழ் | அண்ணாகண்ணன் உரை | கலைஞர் 100

    கணினித் தமிழ் | அண்ணாகண்ணன் உரை | கலைஞர் 100

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கணினித் தமிழ் என்ற தலைப்பில் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(459)

    குறளின் கதிர்களாய்…(459)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(459)

    அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
    செல்வச் செவிலியா லுண்டு.

    – திருக்குறள் -757 (பொருள் செயல்வகை)

    புதுக் கவிதையில்…

    அகிலத்தில்
    அன்பு ஈன்றெடுத்த
    அருள் என்னும் குழந்தை,
    பொருளென்று பலராலும்
    போற்றப்படுகின்ற
    செல்வத்தை உடைய
    செவிலித் தாயால்
    வளர்க்கப்படுகிறது…!

    குறும்பாவில்…

    அருள் என்று அழைக்கப்படும்
    அன்பு பெற்றெடுத்த பிள்ளை, பொருளென்னும்
    செல்வச் செவிலியால் வளர்க்கப்படும்…!

    மரபுக் கவிதையில்…

    அன்பெனும் தாயவள் பெற்றெடுத்த
    அருளெனப் பேர்பெறும் பிள்ளையது,
    மன்பதை தன்னிலே என்றென்றும்
    மாபெரும் மகிமையைக் கொண்டதுவாம்
    குன்றிடா வளமுடைப் பொருளென்றே
    குவலய மனைத்துமே போற்றியேதான்
    என்றுமே மதித்திடும் செல்வமுடை
    எழில்மிகு செவிலியால் வளர்ந்திடுமே…!

    லிமரைக்கூ…

    அருள் என்னும் சேய்
    அன்பாம் அன்னை பெற்றது, வளர்ப்பததனை
    பொருளெனும் செவிலித் தாய்…!

    கிராமிய பாணியில்…

    பெருசு பெருசு
    பொருளே பெருசு,
    ஒலக வாழக்கயில
    ஒசத்தியானது பொருளே..

    அருளுங்கிற புள்ளய
    அன்புங்கிற தாயவ பெத்தாலும்
    அத
    ஆரட்டி சீராட்டி வளக்கிறது
    ஓலகத்தில ஒசத்தியான
    பொருளுங்கிற
    செவுலித் தாயார்தான்..

    அதால
    பெருசு பெருசு
    பொருளே பெருசு,
    ஒலக வாழக்கயில
    ஒசத்தியானது பொருளே…!

    Share
  • கலைஞர் நூற்றாண்டு விழா – ஆட்சிமொழிக் கருத்தரங்கம்

    கலைஞர் நூற்றாண்டு விழா – ஆட்சிமொழிக் கருத்தரங்கம்

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெறும் ஆட்சிமொழிக் கருத்தரங்கில், கணினித் தமிழ் என்ற தலைப்பில் நான் உரையாற்றுகிறேன்.

    Share
  • காதல் சுகுமார் நகைச்சுவை உரை

    காதல் சுகுமார் நகைச்சுவை உரை

    திரைப்பட நடிகர், இயக்குநர் காதல் சுகுமார், அம்பத்தூர் சிரிப்பரங்கத்தின் 2023 ஜூலை மாதக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தன் சொந்த வாழ்விலும் திரைத் துறையிலும் நிகழ்ந்த நகைச்சுவை அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்க வழங்கினார். உலக நாயகன் கமல்ஹாசன் தனக்கு வழங்கிய முக்கிய அறிவுரையைத் தெரிவித்தார். கலகலப்பும் விறுவிறுப்பும் மிக்க காதல் சுகுமாரின் சிறப்புரை, சிரிப்புரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆயிரம் ரூபாய் யாருக்கு? | நெல்லிக்குப்பம் புகழேந்தி பேச்சு

    ஆயிரம் ரூபாய் யாருக்கு? | நெல்லிக்குப்பம் புகழேந்தி பேச்சு

    மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் யாருக்குக் கிடைக்கும்? யாருக்குக் கிடைக்காது? திமுக பேச்சாளர் நெல்லிக்குப்பம் எஸ்.புகழேந்தி தாம்பரத்தில் பேச்சு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆணழகன் போட்டி 2023 – ஆடவர் பிரிவு

    ஆணழகன் போட்டி 2023 – ஆடவர் பிரிவு

    ஆடவர் பிரிவில் 172 சென்டி மீட்டர் வரை உயரம் உள்ளவர்களுக்கான கட்டுடல் ஆணழகன் போட்டி 2023

    ஆடவர் பிரிவில் 172 சென்டி மீட்டருக்கு மேல் உயரம் உள்ளவர்களுக்கான கட்டுடல் ஆணழகன் போட்டி 2023

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆணழகன் போட்டி 2023 – இளையோர் பிரிவு

    ஆணழகன் போட்டி 2023 – இளையோர் பிரிவு

    ஆணழகன் போட்டி, சென்னையில் 2023 ஜூலை 9 அன்று நடைபெற்றது. இளையோர் (ஜூனியர்) பிரிவில் ஆஹா என ஆர்ப்பரித்து நின்ற அடலேறுகள், வீறு நடை இட்ட வேங்கைகள், கட்டுடல் காளையர்கள், நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் நெஞ்சை அள்ளும் காட்சி இதோ. இளைய பாரதத்தினாய் வா வா வா! எதிரிலா வலத்தினாய் வா வா வா!

    ‘தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே’ எனக் கம்ப ராமாயணத்தில் ராமனைப் பாடுகிறார், கம்பர். இதோ இந்த இளம் சிங்கங்களின் வசீகர மேனியைக் காண்பவர்களும் பார்வையை விலக்க முடியாமல் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். செதுக்கிய சிலை போன்ற இவர்களின் கட்டுடலைக் காண்பவர்களும் சிலையாகி நிற்பார்கள். இதோ புதிய இந்தியா, பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 15

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 15

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 3

    முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 3

    சி. ஜெயபாரதன், கனடா

    கண்காணிப்பு  மகளிர் காப்பு வேலிக்குள்  அடைப்பு
    முதுமை ஊசல் ஆடுது இரவில் !
    புதுமைச் சிறையில், புதிய உறவில் !

    When will it be Dawn to fly ?
    I will see the Swan in the sky.

    இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் கணவனும் மனைவியும் ஒரு குடும்பத்தில் சம்பாதித்து வாழ நேர்கிறது.  அதனால் பெற்ற பிள்ளைகள் வளர்ப்பில் தாய் தந்தையர் நேரடிக் கண்காணிப்பு குறைகிறது.  நோயில் போராடும் வயதான முதியோரை வீட்டில் வைத்து மருத்துவப் பணி செய்ய நேரமும், வசதியுமின்றித் தம்பதிகளைப் புறக்கணிக்கவோ, முதியோர் இல்லத்தில் தள்ளவோ நேரிடுகிறது. இது சரியா, தவறா என்னும் தர்க்க வாதம் செய்வது இக்கட்டுரையின் நோக்கமில்லை.   முதியோரைக் காப்பு இல்லங்களில் சேர்க்க வேண்டிய தருணம் வந்து, அவருக்கு என்னென்ன வசதிகள் பெற ஏற்பாடு செய்வது என்பதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

    முதியோரில் மாதருக்கு என்ன வசதிகள்  தேவை, ஆடவருக்கு என்ன தேவை, தம்பதியர் இருவரும் ஒரே இல்லத்தில் வசிக்க அறைகள் அமைக்கத் திட்டமிட வேண்டும்.  முதியோர் இல்லத்தில் உணவு, மருத்துவம்,  குளிப்பு, உடுப்பு, களிப்பு, பயிற்சி, படுக்கை, காற்றோட்டம், மூன்று சமையல், அழுக்கணி துவைப்பு, அபாய நிலை சிகிச்சை, மருத்துவர், உதவி, பணி மாதர், கனிவு மகளிர் 24/7 கண்காணிப்பு வசதிகள் அமைக்க வேண்டும்.

    ரிப்லி முதியோர் காப்பகத்தில் 20 அல்லது 25 எண்ணிக்கையில் சிஃப்டு முறையில் நால்வகைப் பெண்டிர் வேலை செய்து வருகிறார்கள்.  அனுதினம் மருத்துவப் பணிக்கு, குளிப்பு, உடுப்பு, துணி துவைப்பு, தரை சுத்திகரிப்பு, சமையல், பாத்திரம் கழுவல், காய்கறி, கோதுமை, அரிசி, பருப்பு வாங்கல், அஞ்சல் அனுப்பல், எடுத்தல் போன்ற வேலைக்கு ஆடவர், பெண்டிர்,  ஷிஃட் முறையில் வேலை செய்து வருகிறார். பகல் வேளையில் பணி புரியும் மகளிர் பலர். இரவில் பணி புரியும் பெண்டிர் ஒருவர் அல்லது இருவரே.

    ஐம்பது முதியோர் வசிக்கும் ரிவில்லா ரிப்லி இல்லத்தில் ஆடவர் எட்டு, மாதர் எண்ணிக்கை அதிகம்.  ஐம்பது பேரைக் கண்காணிக்கும் மகளிர், குளிப்பு, துடைப்பு, ஆடை அணிவிப்பு சமயங்களில் ஆடவர், பெண்டிருடன் நெருக்கமாகப் பழகவோ, பணி செய்யவோ நேர்கிறது.  அப்போது இரு பாலாருக்கும் கவர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க  இயலாது.

    ஆஷா மேல் ஏற்பட்ட கவர்ச்சி

    நடாஷா என்பது அவள் பெயர்.  பதிவுப் பணி மாது. [Registered Nurse]  கனேடிய மாது. புன்னகையுடன் காலை ஏழு மணிக்கு எனக்கு மருந்து கொண்டு வருவாள்.  நடுத்தர வயது.  முகம் முழுவதும் தெரியாது, முகமூடி போட்டிருப்பதால். கண்கள் மட்டும் தெரியும்.  காலை உணவு, பகல் உணவு எனக்கு மேஜையில் மற்றவருடன் பரிமாறுவாள்.  நல்ல உயரம்.  அவள் ஒரு சமயம் அறைக்கு மருந்து தர வந்த போது,

    “நான் உன்னை ஆஷா என்று அழைக்கலாமா,” என்று கேட்டேன்.

    “அழைக்கலாம்” என்று சொல்லிச் சிரித்தாள்

    “நடாஷா, என்ற பெயர் நீளமாய் இருக்கு !  இந்தியாவில் ஆஷா என்பது பழக்கமான பெயர்.   சுருக்கமான பேர்.  கூப்பிட  நல்லா இருக்கு.

    “ உனக்குப் பிள்ளைகள் இருக்கா ? “ என்று கேட்டேன்.

    “எனக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை” என்று சிரித்தாள்.

    “ கைவிரலில் வைர மோதிரம் மினுக்குதே.”

    “எங்கேஜ்மெட் மோதிரம் அது. அடுத்த வருடம் திருமணம்.”

    “எங்கே வேலை காதலர்க்கு ?

    “ எஞ்சினியர். அணுப் பவர் கம்பெனியில். ஜூனியர் எஞ்சினியர்.

    “உன்னை காமிராவில் படம் எடுக்கலாமா ?

    “ ஓ எடுக்கலாமே” ஆடையைச் சரிப்படுத்திக்கொண்டாள்.

    “முகமூடியை எடுக்க வேண்டுமே”

    முகமூடியை நீக்கினாள். நாலைந்து படங்கள் ஐபோனில் எடுத்தேன்.  சிரித்த முகத்தில் அழகு பொங்கியது.

    “டீனேஜர் போல் இருக்கிறாய்”  என்றேன்.  கொல்லெனச் சிரித்தாள்.

    “அப்படியா ?  நன்றி.  எனக்கு வயது 28.” என்று புன்னகை புரிந்தாள்.

    என்னிடம் இருந்த லட்டு காஜூ தின்பண்டங்களைக் காட்டி, எது வேணுமோ அதை எடுத்துக்கொள்.  காஜூ ஒன்றை எடுத்து,  அதன் பெயர் என்ன?  காஜூ என்றேன்.   முந்திரிப் பருப்பில் செய்தது.

    “நல்லா இருக்கு.   இன்னொன்று எடுத்துக்கொள்”

    அடுத்தொன்று எடுத்துக்கொண்டு பை, பை சொல்லிப் போனாள்.

    மறுநாள் காலை 7:30 மணிக்கு சீரியஸ் முகத்துடன் வந்தாள் ஆஷா.

    “எடுத்த  என்  படங்களை அழித்து விடுங்கள்.  நான் மாட்டிக்கொள்வேன்.  உடனே எல்லா படத்தையும் நீக்கிவிடுங்கள்.  என் படம் ஒன்று கூட உங்கள் ஐபோனில் இருக்கக் கூடாது.  என் வேலை போய்விடும்.”

    Share
  • ஆன்மீக அறிவியலும் கவியரசர் கண்ணதாசன் பாடல்களும் . . . . . . . (4)

    ஆன்மீக அறிவியலும் கவியரசர் கண்ணதாசன் பாடல்களும் . . . . . . . (4)

    சக்தி சக்திதாசன்

    கடந்த மாதம் ஜூன் 24ம் தேதி சிறுகூடல்பட்டியில் 97 அகவைகளுக்கு முன்னால் மலையரசித் தாயின் மடியான மண்ணில் கலையரசி அருள் பெற்ற குழந்தையாகத் தவழ்ந்தவரே எம் கவியரசர்.

    தமிழுலகின் முத்தாகத் திகழப் போகிறேன் என்பதை அறிவிக்கும் முகமாகவே முத்தையா எனும் பெயர் கொண்டு முகிழ்த்தவர் கவியரசர்.

    நாத்திகம் எனும் ஆழியில் நீந்தி ஆத்திகம் எனும் கரையேறியவர் கண்ணதாசன்.

    அரசியல் எனும் வனத்திலே வாசம் செய்ததினால் பெற்ற அனுபவங்களின் வழியேகி ஆன்மீகக் காற்றை சுவாசித்து மனதினில் வாசம் செய்தவரே கவியரசர்.

    தன்னைத்தானே புடம் போட்டு தனக்குள் சத்திய யுத்தம் நடத்தித் தன் சுயதரிசனம் கண்டவர்.

    ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வதற்கு வாழ்க்கையில் இருந்து அந்நியமாகி காட்டுக்குள் ஓடத்தேவையில்லை, லெளகீக வாழ்க்கையில் இருந்து கொண்டே பெளதீக வாழ்க்கையின் அங்கமாக ஆன்மீகத்தை எப்படி இணைத்துக் கொள்ளலாம் என்பதை எளிமையாக விளக்கியவர் கவியரசர்.

    தான் ஒரு நல்ல இந்துவாக வாழ்வதற்கு மற்றைய மதங்களுடன் பேதமையை வளர்க்கத் தேவையில்லை என்று வாழ்ந்து காட்டியவர்.

    ஆன்மீகம் என்றால் வெறும் இறைபக்திதான் ஆன்மீகமா ?

    இல்லை

    மதம் கடந்த தன்னிலை அறிதல் ஆன்மீகமா?

    இரண்டையும் நன்கு அலசிப்பார்த்து இரண்டின் முக்கியவத்தினையும், வேறுபாட்டையும் எளிமையான தமிழில் விளக்கியவர் கவியரசர்.

    இதோ இந்தப் பதிவில் ஆனந்தஜோதி எனும் திரைப்படத்தில் மக்கள் திலகம் பாடுவதாக இடம்பெற்ற ஒரு காட்சியின் பாடல்.

    அற்புதப் பாடகர் அமரர் டி.எம்.எஸ் அவர்களின் குரலில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ஐயா – இராமமூர்த்தி ஐயா அவர்களின் இசையில் கவியரசர் யாத்த வரிகளைப் பார்ப்போம் வாருங்கள்.

    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    கடவுள் இருக்கின்றான்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

    அருமையான ஒரு கேள்வியை எம்முன்னெ தூக்கி வீசுகிறார் கவியரசர்.

    கவியரசரின் பாடல்களின் தனித்தன்மைகளில் ஒன்று கேள்வியாக வரிகளை வீசிவிட்டு அதை விளக்கும் விடையையும் தொடர்ந்து வீசுவதாகும்.

    காற்றில் தவழுகிறாய்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    காற்றில் தவழுகிறாய்
    அது உன் கண்ணுக்கு தெரிகின்றாதா?

    திரும்பவும் கேள்வி வடிவில் பதிலையும் போடுகிறார்.

    பதிலென்று குறிப்பிடும்போது வெளிப்படையாகச் சொல்லாமல் எமக்கு ஒரு கேள்வியைப் போட்டு அதனை எமக்குள் நாமே சுய அலசல் மூலம் அறியக்கூடியதாக அமைத்திருக்கின்றார்.

    அறிவியல் ஆன்மீகத்தின் அடிப்படையே தன்னைத் தானே விசாரிப்பதே ! அதற்கு இங்கே அத்திவாரமிடுகிறார் இல்லையா ?

    இருளில் விழிக்கின்றாய்
    எதிரே இருப்பது புரிகின்றதா ?
    இருளில் விழிக்கின்றாய்
    எதிரே இருப்பது புரிகின்றதா ?
    இசையை ரசிக்கின்றாய்
    இசையின் உருவம் வருகின்றதா?

    கேள்விகள் ! கேள்விகள் ! அவை ஒவ்வொன்றினுள்ளும் ஆன்மீக அறிவியல் ஆழமாக புதைக்கப்பட்டுள்ளன.

    ஆமாம் இங்கேதான் இறைவன் என்பதன் ஆன்மீக விளக்கத்தை அறிவிக்க முயல்கிறாரோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

    இருள் அது கருமையாகத்தானே இருக்கிறது.

    இங்கேதான் கவியரசரின் அறிவியலின் ஆழம் புரிகிறது.

    இருளில் “இருக்கின்றாய்” எதிரே இருப்பது தெரிகின்றதா ? என்றுகூட கூறியிருக்கலாம். ஆனால் அதிலென்ன பெரிய ஆன்மீகம் இருக்கிறது என்று எண்ணலாம்.

    இரவில் ” விழிக்கின்றாய் ” என்று கூறுகிறார். தூங்குபவர் இரவில் விழித்தால் எதிரே இருப்பது தெரியாமல் இருப்பது அனைவருக்கும் நிகழக்கூடிய ஒன்றே !

    அதையே மனதை தூக்கத்தில் வைத்திருப்பவர் உள்ளத்துக்குள் இறைவன் இருப்பதை அவர்களால் உணர முடியாது அவர்களின் மனம் இருளில் இருப்பது போலத்தானே என்கிறாரோ ?

    அடுத்துப் பார்த்தால்

    இசையை ரசிக்கின்றாய்
    இசையின் உருவம் வருகின்றதா? என்கிறார் . இறைவனின் வடிவில் ஆன்மாவைல் காண்கிறோம் அதற்கு உருவம் இல்லை ,இசையை ரசிக்கிறோம் அதற்கும் உருவம் இல்லை ஆனால் அதைக் கேள்விக்குள்ளாக்குகிறோமா?

    இங்கேயும் எம்மை ஆன்மீக வழியில் சிந்திக்கத் தூண்டுகிறார் இல்லையா ?

    மீண்டும் ஒரு கேள்வி பாருங்களேன் ,

    உள்ளதில் இருக்கும் உண்மையின் வடிவம்
    வெளியே தெரிகின்றதா ?

    உண்மை பேசு என்கிறோம் அந்த உண்மையைக் கண்களால் உருவமாகப் பார்க்கிறோமா ?

    ஆனால் அதே உண்மையை இறைவனாகக் கருதும்போது அதற்கு மட்டும் ஏன் சாட்சி தேடுகிறாய் என்கிறார் கவியரசர் என்பது எனது பார்வை.

    புத்தன் மறைந்து விட்டான்
    அவன் தன் போதனை மறைகின்றதா?
    சத்தியம் தோற்றதுண்டா
    உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
    இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும்
    சஞ்சலம் வருகின்றதா?

    புத்த பகவானைக் குறிப்பிட்டதுமே கவியரசரின்  ஆன்மீக அறிவியலின் ஆழம் புரிந்து விடுகிறது.

    உள்ளத்தில் எழும் எண்ணங்களின் வடிவே எமது வாழ்க்கையாகிறது என்று போதித்த புத்த பகவானின் போதனைகளின் வீரியத்தை குறிப்பிட்டதின் மூலம் ஆன்மீக அறிவியலின் அடிப்படையையே அலசி விடுகிறார் எம்முடைய கவியரசர்.

    சத்தியத்தின் பாதையே தர்மத்தின் வெற்றிக்கு இட்டுச் செல்கிறது இதுவே கீதை, பைபிள், குர்ஆன் ஆகிய மாத நூல்களின் அடிப்படையகிறது.

    இத்தோடு மத நல்லிணக்கத்தினையும் அவையனைத்தும் அறிவியல் ஆன்மீகத்தை முதன்மைப்படுத்துகின்றன என்பதையும் எளிமையாகவும், தெளிவாகாவும் யாராலும் விளக்கிடக் கூடுமா ?

    காலத்தால் அழிக்க முடியாத சரித்திரங்களில் கூறப்பட்டுள்ள உண்மை. அவைகளை பொருளுணர்ந்து படிப்பவர்களுக்கு சஞ்சலம் வருவதற்கு வாய்ப்பே இல்லையென்கிறார் கவியரசர்.

    இதோ அடுத்து கொண்டு வருகிறார் பாருங்களேன் !

    தேடியும் கிடைக்காது
    நீதி தெருவினில் இருக்காது!
    தேடியும் கிடைக்காது
    நீதி தெருவினில் இருக்காது!
    சாட்டைக்கு அடங்காது
    நீதி சட்டத்தில் மயங்காது!
    காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
    காக்கவும் தயங்காது!
    காக்கவும் தயங்காது!

    நீதிதேவன் என்கிறோம். அப்படியானால் நீதி கூட இறைத்தன்மை பெற்று விடுகிறது  இல்லையா ?

    அத்தகைய நீதியை சாட்டை கொண்டு வளைத்திட முடியுமா ?

    சிலவேளைகளில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து நீதியை மழுங்கடிக்கலாம். ஆனால் நீதி நிச்சயம் விழித்துக் கொள்ளும் மாயத்திரையை விலக்கிக் கொண்டு வெளிவரும் என்கிறார்.

    அதேபோலத்தான் மனமெனும் மேடையை மறைத்திருக்கும் மாயத்திரையை அறிவியல் ஆன்மீகத்தின் மூலம் விலக்கினால் நம்முள் உறையும் ஆன்மாவே இறைவன் என்பதைச் சொல்லாமல் சொல்கிறாரோ கவியரசர்?

    என் எழுத்துகளின் மானசீகக்குரு கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளினுள் இலைமறைகாயாக ஒளிந்திருக்கும் ஆன்மீகத்தை அறிவியல் அடிப்படையில் அலசிப் பார்த்து ஆனந்திக்கிறேன்.

    பாடலைப் பார்த்து ரசிப்பதற்கு:https://youtu.be/jiFxjK4BAv8

    மீண்டும் வருகிறேன்

    Share
  • சென்னையின் பிரமாண்டக் கால்வாய்கள்

    சென்னையின் பிரமாண்டக் கால்வாய்கள்

    சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை, சிட்லப்பாக்கம் பகுதியில் நடைபெறும் பிரமாண்டக் கால்வாய் அமைக்கும் பணிகள் – ஒரு பார்வை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புற்றுநோய்க்கு இதோ மருந்து | இரண்டே மாதத்தில் குணம் தெரியும்

    புற்றுநோய்க்கு இதோ மருந்து | இரண்டே மாதத்தில் குணம் தெரியும்

    சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் சங்கர நாராயணன், தம் அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவக் குறிப்புகளை வழங்கி வருகிறார். இன்றைய நம் உரையாடலில், புற்றுநோயைத் தீர்க்கும் வீரியம் உள்ள மருந்தினைப் பரிந்துரைத்துள்ளார். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தம் மனைவிக்கு இந்த மருந்தினைக் கொடுத்துள்ளார். இரண்டே மாதத்தில் மனைவியின் புற்றுநோய்க் கட்டி கரைந்து மறைந்துள்ளது. தமது அனுபவங்களை பலரும் பயன் பெறுவதற்காக, நம்முடன் பகிர்ந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் போராடுகின்ற ஒவ்வொருவரும் இதை முயன்று பாருங்கள். உங்களுக்கு எத்தகைய குணம் கிடைத்தது என்று எழுதுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சூடான சாக்லேட் பானம் | உலக சாக்லேட் தினம்

    சூடான சாக்லேட் பானம் | உலக சாக்லேட் தினம்

    இன்று உலக சாக்லேட் தினம். அண்மையில் கொடைக்கானல் சென்றபோது, அங்கே லிஸ்க் சாக்லேட்டல் என்ற சாக்லேட் தொழிற்சாலைக்குச் சென்றோம். அங்கே சூடான சாக்லேட் பானத்தை அருந்தினோம். இதை அவர்கள் தயாரிப்பது எப்படி? இந்த சாக்லேட் தினத்தில் இதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share