ஆணழகன் போட்டி 2023 – இளையோர் பிரிவு

ஆணழகன் போட்டி, சென்னையில் 2023 ஜூலை 9 அன்று நடைபெற்றது. இளையோர் (ஜூனியர்) பிரிவில் ஆஹா என ஆர்ப்பரித்து நின்ற அடலேறுகள், வீறு நடை இட்ட வேங்கைகள், கட்டுடல் காளையர்கள், நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் நெஞ்சை அள்ளும் காட்சி இதோ. இளைய பாரதத்தினாய் வா வா வா! எதிரிலா வலத்தினாய் வா வா வா!
‘தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே’ எனக் கம்ப ராமாயணத்தில் ராமனைப் பாடுகிறார், கம்பர். இதோ இந்த இளம் சிங்கங்களின் வசீகர மேனியைக் காண்பவர்களும் பார்வையை விலக்க முடியாமல் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். செதுக்கிய சிலை போன்ற இவர்களின் கட்டுடலைக் காண்பவர்களும் சிலையாகி நிற்பார்கள். இதோ புதிய இந்தியா, பார்த்து மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)